கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மூன்று படைப்பாளிகள்

Wednesday, February 22, 2006

-வலைப்பக்க அறிமுகங்கள்-

(1)சனாதனன்


ஈழத்து இளந்தலைமுறை ஓவியர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒருவர்.ஓவியத்துக்கான பட்டப்படிப்பை புது டெல்லியிலுள்ள ஓவியக்கல்லூரி ஒன்றிலும் கற்றவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். தற்சமயம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் விரிவுரையாளராக இருக்கின்றார். வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகர்கள் இவரது ஓவியங்கள் குறித்து விரிவாக கட்டுரைகளும் எழுதி உள்ளனர். சனாதனனின் ஓவியக் கண்காட்சிகள், ஈழம், இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் என்று பல இடங்களில் நடைபெற்றுள்ளன.. இவரது சில ஓவியங்களை இந்தக் தளத்திலும், கண்காட்சிப் படங்களை இங்கேயும் பார்க்கலாம்.

(2)சுஜித்(ஜி)


இந்த இளங்கலைஞர், தமிழ்ப்பாடல்களை Rap, R&B போன்ற தளங்களுக்கு நகர்த்த முயற்சித்துக்கொண்டிருக்கின்றார். முதலாவது ஆல்பம், Singles, இரண்டாவது ஆல்பமான சிலோன் (Ceylon) இந்த வருடம் நடுப்பகுதில் வர இருக்கிறது. தானே பாடல்கள எழுதி, பாடவும் செய்கின்ற சுஜித்தின் பாடல்கள், ராப் பாடல்களிலும், தமிழ் ரீமிக்ஸ்களிலும் கரைந்துபோகின்ற என்னைப் போன்றவர்களுக்கு பிடிக்காமற்போகாதுதானே. அநேக ராப் பாடல்களில் (கானாப் பாடல்களைப் போல) ஒருவித எள்ளல் தொனி இருக்கும் (specially Eminem's lyrics). அதையும் சுஜித் முயற்சித்துப் பார்த்திருப்பது நன்றாக இருக்கிறது. 'அன்புக் காதலி'யும், 'பயணமும்' மிகவும் பிடித்த பாடல்கள். 'ஒரு சில பெண்களின்...' பாடலில், ஒரு ஆணின் பார்வை வலிந்து தெரிந்தாலும் beatம் பாடல் வரிகளும் இணைந்து போகின்றதால், திரும்பத் திரும்பக் கேட்கமுடிகிறது.

உண்மையில் எத்தனையோ சீரழிவுகள் நிரம்பிக் கிடக்கும் நமது சமூகம் போன்ற ஒன்றில் தீவிரமாய் சில விசயங்களைப் பேசுவதை விட, நக்கலடித்து எழுதுவதுதான் நிரம்பப் பேரை சென்று அடையும் என்ற தனிப்பட்ட எண்ணம் என்னளவில் உண்டு. இந்த ஆல்பத்தில் (Singles) தான் வாழும் இலண்டன் தமிழ்ச் சமூகத்தையும், தன்னையும் நையாண்டி செய்து பாடப்பட்ட பாடல் ('கொஞ்சம் கொஞ்சம் நில்') இரசித்துக் கேட்கக்கூடியது. இரண்டாவது ஆல்பத்தில் சேர்க்கப்படவிருக்கும் Buyakka பாடலை (நட்பின் நிமிர்த்தம்) முழுதாய்க் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தபோது, மிகவும் பிடித்திருந்தது (அதற்கு தனிப்பட்ட ஒரு காரணமும் இருந்தது என்க :-)). இதன் Memo version ஐ இங்கே சென்றும் கேட்டுப் பார்க்கலாம்

இதுவரை ரீமிக்ஸ் செய்து பாடல்களை இசைத்தட்டுக்களாய் வெளியிட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் சுஜீத்தைப் போல அடுத்த கட்டங்களுக்கு நகர முயற்சிப்பது நமது தமிழ் அடையாளங்களை புலம்பெயர்ந்த தேசங்களில் நிலை நிறுத்த ஏதேனும் ஒருவகையில் உதவி புரியலாம் (I beleive it's the time to change these tamil guys from DJs (or MCs) to Rappers. Also If it is expensive to release whole album at the beginning, they may release single CDs like black guys releasing mix tapes. So they can know who are the audience for them and can get sponsors). இவ்வாறு தன்பாட்டில் பாடல்களை எழுதி, பாடவும் செய்கின்ற ஒருவரைக் கண்டபோது, இவர் வேறு துறைகளிலும் ஆர்வத்துடன் இருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. நினைத்ததைப் போல எழுத்து, விவாதங்கள் என்ற வேறு தளங்களிலும் சுஜீத் ஈடுபாடுடையவர் என்றறிய முடிந்தது. ஆனால் தனது இசை சம்பந்தமான விடயங்கள், பிற விடயங்களோடு கலந்து வாசிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னொரு புனைபெயரில் அவற்றில் இருக்கின்றார். எப்படி எனினும் அவர் பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பது நல்ல விடயந்தானே. நாமும் வாழ்த்துவோம்.

(3)திருமாவளவன்


புலம்பெயர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய ஒரு கவிஞர். அவருடனான அரசியற்புள்ளிகள், இலக்கியவாதிகள் பற்றிய பார்வை என்று பல புள்ளிகளில் எனக்கு முரண்பாடான கருத்துக்கள் இருந்தாலும் என்னை மிகவும் வசீகரிப்பது நறுக்குத் தெறித்தாற்போல வந்து விழும் அவரது கவிதை நடை. பனி வயல் உழவு, அஃதே இரவு அஃதே பகல் என்று இரண்டு கவிதைத் தொகுதிகளையும் மிகக் குறுகிய கால இடைவெளிகளில் வெளியிட்டவர். அவரது கவிதைகள் மட்டுமின்றி கதைகளையும், பிற முயற்சிகளையும் இந்தத் தளத்தில் காணலாம்.

19 comments:

சன்னாசி said...

அறிமுகங்களுக்கு நன்றி டிஜே. குறிப்பாய், போரில் அழிந்த இடங்களை map மூலமான ஓவியங்களால் சித்தரிப்பது மிக அழுத்தமான விஷயம். வரைபடங்களை இந்தச் சூழலில் உபயோகப்படுத்தி நான் அதிகம் கண்டதில்லை. சினிமாவுக்கென்று இந்த வலைப்பதிவு இருப்பதுபோல், இந்திய/ஈழப் படைப்பாளிகளின் ஓவியங்களையும் தொகுத்து வைக்க ஒரு வலைப்பதிவோ வலைத்தளமோ இருக்கவேண்டுமென்று வெகுநாளாகத் தோன்றிக்கொண்டிருக்கிறது. பார்க்கலாம்.

2/22/2006 03:37:00 PM
Venkat said...

நன்றி! டி.ஜே. சனாதனனின் ஓவியங்கள் தனித்துவம் வாய்ந்தனவாக இருக்கின்றன. வேலை நேரத்தைவிட்டு பிறகு மெதுவாகக் கூர்ந்து காணவேண்டும்.

சுஜித் - குறித்து நான் கேள்விப்பட்டதில்லை. இவரது சிங்கிள்ஸ் நம்மூரில் எந்தக் கடையில் கிடைக்கிறது? கேட்டுவிட்டு என்னால் இயன்ற அளவிற்கு நான் இசைபற்றி எழுதும் பிற தளங்களில் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன்.

திருமாவளவனை அடுத்த வாரம் வரவிருக்கும் ஆர்க்கிட் கண்காட்சிக்கு அழைக்க வேண்டும்.

அவ்வப்பொழுது இதுபோன்ற அறிமுகப்பதிவுகளை த் தொடர்ந்து எழுதுங்கள்.

2/22/2006 03:57:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி சன்னாசி.
......
சனாதனனின் ஓவியங்களை இந்த வலைத்தளத்தில் பார்த்தவுடன்,(வலைப்பதிவு நண்பர்கள் என்றவளவில்) எனக்கு உங்களதும், பெயரிலியினதும், அருள்செல்வனினதும் நினைவுதான் வந்தது, ஓவியங்கள் பற்றிய அதிக புரிதல் உடையவர்கள் என்ற எண்ணத்தில்.

சனாதனனின் ஓவியதை முதன்முதலில், பா.அகிலனின் 'பதுங்குழி நாட்கள்' கவிதைத் தொகுப்பில் பார்த்தபோது ஒரு சின்னத் திடுக்கிடலை அவை எனக்கு ஏற்படுத்தியது என்பது உண்மை.
.....
//இந்திய/ஈழப் படைப்பாளிகளின் ஓவியங்களையும் தொகுத்து வைக்க ஒரு வலைப்பதிவோ வலைத்தளமோ இருக்கவேண்டுமென்று வெகுநாளாகத் தோன்றிக்கொண்டிருக்கிறது. பார்க்கலாம்.//
நல்ல விடயமே!

2/22/2006 04:08:00 PM
இளங்கோ-டிசே said...

வெங்கட் பின்னூட்டத்துக்கு நன்றி. பின்னூட்டங்களை வடிகட்டி அனுப்பவேண்டி இருப்பதால் முன்னுக்குப் பின் என்று ஒரே குழப்பமாய் இருக்கின்றன :-(.
....
சுஜித்தின் ஆல்பம் எனது கைக்கும் இன்னும் கிடைக்கவில்லை பாடல்களை அவரது தளத்தில்தான் கேட்டிருக்கின்றேன். கனடாவில் விற்பனைக்கு இன்னும் வழங்கவில்லை என்றுதான் சுஜித் குறிப்பிட்டிருந்தார்.(கேட்டுப்பார்க்க என்று எனக்கு தனிப்பட அனுப்பப்பட்ட ஆல்பமும் கனடாவில் ஒரு வீட்டில் என் சோம்பறித்தனத்தால் தேங்கி நிற்கின்றது என்பது வேறுவிடயம் :-(. )

2/22/2006 04:19:00 PM
சயந்தன் said...

கடந்த வாரம் சுஜீத் ஜி யை இங்கே ஒஸ்ரேலியாவில் இயங்கும் தமிழ்வானொலி ஒன்றின் இளையோர் நிகழ்ச்சியொன்றிற்காக செவ்வி கண்டிருந்தேன்.. அந்ம ஒலிப்பதிவை வீடு சென்றதும் இணைக்கிறேன்.
டிசே.. வசந்தன் உங்களுக்காக பிரத்தியெகமாகச் செய்யப்பட்ட ஒரு படம் போட்டிருக்கிறார் பார்க்கவில்லையா..?

2/22/2006 04:38:00 PM
Thangamani said...

திருமாவளவனின் வலைப்பதிவை சிலநாட்களுக்கு முன் பார்த்தேன். கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது அவரது படைப்புகள்!

ஓவிய அறிமுகத்துக்கு நன்றி!

2/22/2006 06:31:00 PM
Anonymous said...

dj thanks for sujith's infor

2/22/2006 07:02:00 PM
arulselvan said...

டீசே சுட்டிகளுக்கும் அறிமுகத்திற்கும் நன்றி. சன்னாசி சொன்ன சேகரமும் விவாதமும் தேவையனவை. ஒருவாரம் கழித்து எழுதுகிறேன்.
அருள்

2/23/2006 03:02:00 AM
இளங்கோ-டிசே said...

சயந்தன், தங்கமணி, அனானிமஸ் மற்றும் அருள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
....
சய்ந்தன், சுஜித்தை நேர்காணல் கண்டது இங்கேஒலிப்பதிவு வடிவில்.

2/23/2006 08:46:00 AM
இளங்கோ-டிசே said...

//டிசே.. வசந்தன் உங்களுக்காக பிரத்தியெகமாகச் செய்யப்பட்ட ஒரு படம் போட்டிருக்கிறார் பார்க்கவில்லையா..? //
சயந்தன், அந்தப் படத்தைப் பார்த்து -இப்படி ஒரு தீவிரமான இரசிகை- எனக்கு இருக்கின்றாரே என்ற உற்சாகத்தில்தானே இந்தப்பதிவையே எழுதி முடித்தேன். விரைவில் வசந்தனின் படத்துக்கு நானும் அந்தத் தோழியும் எதிர்வினை செய்ய உள்ளோம். ஆனால் படம் போட்டு பதிலடி தருவதைவிட, Kung-Fu/Karate போன்ற actionsதான் நன்றாக இருக்கும் என்று அவர் ஆதங்கப்படுகின்றார். பார்ப்போம் :-).

2/23/2006 08:59:00 AM
SnackDragon said...

டீ சே,
சுஜித்- இன் பாடல்களை நேற்று மாலை கேட்டுக்கொண்டிருந்தேன். இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. அன்புக்காதலியும்,கொண்டாட்டமும். ஒரு விதத்தில், டீ சேக்கள் ராப்பர்கள் ஆகவேண்டும் என்பதைஎ எற்றுக்கொள்கிறேன். ராப் இசைக்கலாச்சாரத்தில் ஒரு முழுமையான கலத்தல் குழுக்களுக்கிடையே கிடைக்கிறது என்பது உண்மை. ராப்பர்களாகும் பட்சத்தி, தமிழிசை பல பிற குழுக்களிருந்தும் ரசிகர்களைப் பெறும் என்பது தவிர்க்கமுடியாத உண்மை. ஆப்ரிக்கன் இசையுடன் ஒப்பிட்டால், தமிழ் ராப் முயற்சிகள் மிகவும் சொற்பமே. இந்நிலை மாறுவது அவசியம்.

சுஜீத்தின் குரல் சில பாடல்களில் தவிர்த்திருக்கவேண்டும் என்று தோன்றியது. இசை இன்னும் அடர்த்தியாக இருந்திருக்கலாம். எப்படியாயினும் ஒரு நல்ல முயற்சி.

2/24/2006 04:57:00 PM
இளங்கோ-டிசே said...

// ராப் இசைக்கலாச்சாரத்தில் ஒரு முழுமையான கலத்தல் குழுக்களுக்கிடையே கிடைக்கிறது என்பது உண்மை. ராப்பர்களாகும் பட்சத்தி, தமிழிசை பல பிற குழுக்களிருந்தும் ரசிகர்களைப் பெறும் என்பது தவிர்க்கமுடியாத உண்மை. ஆப்ரிக்கன் இசையுடன் ஒப்பிட்டால், தமிழ் ராப் முயற்சிகள் மிகவும் சொற்பமே//

கார்த்திக், சரியான அவதானங்கள். தமிழ் இளைஞர்கள் ராப் பாடகர்களாக மாறுவது என்பது, அப்படியே கறுப்பினத்தவர்களின் அனைத்தையும் பிரதி எடுப்பதாய் இல்லாது, தமிழிசை, நாட்டார்பாடல் போன்றவற்றிலிருந்தும் முகிழ்ந்து ராப்புடன் கலப்பது இன்னும் நன்றாக இருக்கும். M.I.Aவின் பாடல்களில் வீணை போன்ற கீழைத்தேய இசைக்கருவிகள் எல்லாம் பாவிக்கப்பட்டிருக்கும். அவ்வாறான ஒரு கலப்பு (fusion?) வருகையில்தான் தனித்துவம் வரும் என்று நம்புகின்றேன். ஆனால் இன்னுமே ராப் இசையில் முதற்காலடியே எடுத்துவைக்காத நிலையில், சுஜித் போன்ற இளைஞர்களின் முயற்சிகள் பாராட்டப்படக்கூடியவையே.
....
//சுஜீத்தின் குரல் சில பாடல்களில் தவிர்த்திருக்கவேண்டும் என்று தோன்றியது.//
இது எனக்கும் தோன்றியது (வேறு சில விடயங்களும் கூட). முழுதாய் ஆல்பத்தைக் கேட்காமல் விமர்சனம் வைப்பதில் தயக்கமிருந்ததால் இவற்றைப்பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருந்தேன். சுஜித்தை பற்றி எழுதுகையில்தான் இன்னொரு திறமை வாய்ந்த ஒரு தமிழ் ராப்பரின் நினைவும் எழுகிறது. நேரம் கிடைத்தால் அவர் பற்றியும் சில குறிப்புக்களாவது எழுதவேண்டும். பார்ப்போம்.

2/24/2006 06:26:00 PM
கொழுவி said...

//சுஜித்தை பற்றி எழுதுகையில்தான் இன்னொரு திறமை வாய்ந்த ஒரு தமிழ் ராப்பரின் நினைவும் எழுகிறது. நேரம் கிடைத்தால் அவர் பற்றியும் சில குறிப்புக்களாவது எழுதவேண்டும். பார்ப்போம்.
//
ஐயோ.. என்னைப்பற்றி ஒண்டும் உழுத வேணாம்.. எனக்கு பெருமையெல்லாம் பிடிக்காது

2/24/2006 06:49:00 PM
இளங்கோ-டிசே said...

ஐயா கொழுவி, உம்மை எல்லாம் எழுதிக்கொல்லமாட்டேன். படம் போட்டுத்தான் கொல்லுவேன் :-). அவனவன் எல்லாம் பூதக்கவிதைகளை பிரதியெடுத்து 'மனித உரிமைவாதிகளாக' மாறி திடீர் திடீரென தொடுப்புக்கள் கொடுக்கின்ற அதிர்ச்சியில், நான் கூட சடுதியாய் ராப்பராகி மாறி, 'பாத்தியளோ நானும் பாடுகிறன்' என்று என்னைப்பற்றியே எழுதலாம் என யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.... நீர் என்னடா என்றால்.... :-).

2/24/2006 09:11:00 PM
இளங்கோ-டிசே said...

//உதைபந்தாட்டப் போட்டிகளில தகரந் தட்டினதை வைச்சுத்தான், தன்னை ஒரு "ராப்பர்" எண்டு கொழுவி நினைச்சுக் கொண்டிருக்கிறாரோ தெரியாது//
இருக்கலாம். ஆனால் தகரந்தட்டித்தட்டி பெண்களை chopping செய்ததால் 'chopper' கொழுவி என்று பெயர் கிடைத்தது எனத்தான் கேள்விப்பட்டனான். அந்தத் தோமையப்பருக்குத்தான் எல்லாம் வெளிச்சம்.

2/25/2006 02:06:00 AM
இளங்கோ-டிசே said...

//அதுசரி, தகரந்தட்டுறது ராப்புக்குள்ள வருமோ இல்லையோ எண்டு சொல்லேலயே? //
கொண்டோடி, உதை என்னிடம் கேட்கிறதைவிட, 'அவையடக்கம்' கொண்ட கொழுவியிடம் கேட்பதுதான் சரியாக இருக்கும் :-).
.....
சுஜித் தனது மேலும் சில பாடலகளை (மூன்று)தனது தளத்தில், சேர்த்துள்ளார்.விருப்பமானோர்கேட்டு இரசிக்கலாம்.

2/25/2006 09:30:00 AM
Unknown said...

சனாதனன் ஒவியங்கள் பிரமிக்க வைத்தன.

சுஜித்., கொஞ்சம், கொஞ்சம் நில்.... //கொஞ்சமும் சங்கீதம் தெரியாத்தப்பா??!!// //உன் வாழ்க்கை உன் கையில் உண்மையும் துலங்குது//.
பயணம் - மிக நன்றாக இருந்தது. வருவான் - குறிப்பா அந்த அம்மா கத்தலும்., அதற்குப் பின்னான வரிகளும்....ம்....

//முதலில் நாவைப் பிடுங்கி எறி
பின் கொம்பர்களை ஒவ்வொன்றாய் நறுக்கு
அடியை கோடரி கொண்டு தறி
வேரிலிருந்தும் முளைவிடக்கூடும்
தோண்டு
அகப்பட்டதை எல்லாம் அப்புறப்படுத்து
எங்காவது ஆழப் புதைந்தியிருக்கும் மீதி
உள்ளே விறகினைப்போட்டுத் தீமூட்டு//

//மிகமிக இயல்பாய்
மிகமிக எளிதாய் நிகழ்கிறது
மனிதனைப்
பிறிதொரு மனிதன் வீழ்த்தும் கலை//

//வேட்டையின் வெற்றியில்
களிப்புற்றிருக்கிறாயா?
வா
வட்டமாய் அமர்ந்துகொள்
பேசுவோம்

வேட்டை பற்றி
வேட்டையின் விருந்து பற்றி
களைப்பாற அருந்தும் மதுவின்
சுவை பற்றி
மகிழ்விக்க ஆடும் மங்கையின்
அழகு பற்றி
அமைதி பற்றி
சமாதானம்
மற்றும் நிவாரணம் பற்றி
உலக நிலவரம் பற்றி
பேசுவோம்
களைப்பாறும் வரை

எக்கணமும்
தூக்கம் மறந்திரு
மீளக் கிளம்பவேண்டும்//

திருமாவளவன் பதிவுகள் அனைத்தையும் படிப்பேன்.

நன்றியப்பு. நல்ல அறிமுகங்கள்.

2/25/2006 11:49:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி மரம். பாட்டுக்களை நன்கு இரசித்துக் கேட்டிருக்கின்றீர்கள் போலத் தெரிகிறது :-).

2/26/2006 08:44:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் அருள் மற்றும் சன்னாசி நண்பர்கள் இருவரிடமும் ஒரு வேண்டுகோள்.அப்பால் தமிழ் இணையத்தினர் ஈழத்தின் சிறப்பான ஓவியர்கள் சிலரின் படைப்புகளை ஓவியக் கூடமென்னும் பெயரில் காட்சிக்கு வைத்துள்ளனர் ஓவியங்களில் பரிச்சயமும் ஆர்வமும் உள்ள உங்களில் ஒருவர் அல்லது இருவருமே அதனைப் பற்றிய அறிமுகமொன்றை வலைப்பதிவில் எழுதவேண்டுமென்பது எனது வேண்டுகோள்

http://www.appaal-tamil.com/index.php?option=com_zoom&Itemid=70

2/27/2006 12:49:00 AM