ப்யூகோவ்ஸ்கியின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தபோது 'தொலைந்த தலைமுறை' (Lost Generation) என்ற கவிதையில் கூறப்படுபவர்கள் யாரெனத் தேடத் தொடங்கினேன். 'தொலைந்த தலைமுறை' என்பது முதலாம் உலக யுத்தத்தின்போது தோன்றிய தலைமுறையைக் குறிப்பிடுவதாகும். அன்றைய கால எர்னெஸ்ட் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்கள் இந்தச் சொல்லை பிரபல்யபடுத்தியவர்கள்.
சார்ள்ஸ்
ப்யூகோவ்ஸ்கி இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவரல்ல. ஆனால் அந்தத்
தலைப்பிடப்பட்ட கவிதை அன்றைய காலத்தைய ஒரு தம்பதியினரைப் பற்றிப்
பேசுகின்றது.

அன்றைய 'தொலைந்த தலைமுறையை'ச் சேர்ந்த ஹெமிங்வே, ஸ்காட் பிட்ஸலாண்ட், ஹென்றி மில்லர் மட்டுமின்றி, டி.எச். லோரன்ஸ், அனாநிஸ் (மில்லரின் தோழி), ஜேம்ஸ் ஜாய்ஸ், வில்லியம் பாக்னர், குட்டி இளவரசன் எழுதிய 'அந்துவான் தூ செச் எக்சுபாரி உள்ளிட்ட பலரின் ஆரம்ப காலப் படைப்புக்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தையும் இந்தத் தம்பதியினர் அன்றைய காலத்தில் நடத்தியிருக்கின்றனர்.
இந்தத் தம்பதியினர் எந்தளவுக்கு பிரபல்யமானவர்களோ, அந்தளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கியவர்கள். செல்வந்தவர்கள் எந்தளவுக்கும் தமது வாழ்க்கையைச் சீரழித்துப் பார்க்க முடியும் என்பதற்கு இவர்கள் நல்லதொரு உதாரணம் எனவும் சொல்லலாம்.
***
ஹரி, கார்ஸி க்ரோஸ்பி என்பவர்கள்தான் இந்தத் தம்பதியினர்.
ஹரி முதலாம் உலக மகாயுத்ததில் ஹெமிங்வேயைப் போல பங்குபற்றியவர். ஹெமிங்வேயைப் போல ஹரியும் போர்க்களத்தில் மயிரிழையில் படுகாயங்களோடு தப்பி உயிர் பிழைத்தவர். அதன்பிறகு ஹரி தன் வாழ்வை 'ஒரு கட்டற்ற வாழ்க்கை'யாக வாழவேண்டும் என்று தீர்மானித்து பெருங்குடியிலும், போதைப் பொருட்களிலும், பெண்களிலும் தன் வாழ்வைத் தொலைத்தவர். 20களில் இருந்த ஹரி, ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு இருந்த கார்ஸியை மணம் முடிக்கின்றார்.
இதன்பின் கார்ஸியோடு பிரான்ஸுக்கு சென்று வாழ்கின்றபோது, அன்றைய எழுத்தாளர்களுக்குச் சொர்க்கபுரியாக இருந்த பாரிஸில் இவர்களின் மாளிகை ஆடம்பர விருந்தோம்பல்களை அறிமுகப்படுத்துகின்றது.
ஹரி கவிதைகளை எழுதியவர். ஆனால் கார்ஸியோடு வாழும்போது இன்னும் 20 வருடங்களில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்வது என்று திகதியையும் குறிப்பிட்டு வாழ்கின்றார்கள். அந்தத் தற்கொலை என்பது விமானத்தில் இருந்து குதிப்பது என்றும், தமது அஸ்தி எப்படி தூவப்படவேண்டும் என்றும் உயிலை எழுதும்வரை போயிருக்கின்றது.

ஹரிக்கு
கார்ஸியைத் தவிர்த்து பல உறவுகள் முகிழ்கின்றன. பலர் தன்னைத் திருமணம்
செய்ய விரும்புகின்றனர் எனவும் கார்ஸியிற்குச் சொல்கின்றார். பிரான்ஸின்
நோர்மாண்டி, வட ஆபிரிக்காவின் மொராக்கோ என்று இவர்கள் பயணம் செய்யும்போது
இளம்பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டு வந்து கூட்டுக்கலவி, தற்பால் உறவு,
சோடிகளை மாற்றி பாலியல் உறவு என்று நாம் நினைத்தே பார்க்க முடியாத ஒரு
வாழ்வை ஹரியும், கார்ஸியும் வாழ்ந்திருக்கின்றார்கள்.
ஹரியின் கட்டுக்கடங்கா பாலியல் உறவுகளின் நிமித்தம் கார்ஸி ஹரியை விட்டு விலகிப் போகின்றார். ஹரி பின்னர் ஜோஸப்பின் என்கின்ற பெண்ணோடு சேர்ந்து அவரது 31 வயதில் தற்கொலை செய்கின்றார். அந்தப் பெண்ணுக்கோ 20 வயது. முதலில் இதை இருவரின் தற்கொலை நிகழ்வு எனச் சொல்லப்பட்டாலும், பின்னர் அது கொலை (ஜோஸப்பின்)/தற்கொலை (ஹரி) நிகழ்வு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு கட்டற்ற வாழ்வை போரின் வடுக்களால் வாழ்ந்து முடித்த ஹரி, மிகப்பெரும் செல்வந்தரான ஜே.பி.மார்கனின் (J.P.Morgan) பெறாமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியின் தற்கொலையின் பின் அவரின் மனைவியாக இருந்த கார்ஸி அதே பதிப்பகத்தை 1920களைப் போல, 30களிலும் நடத்தியவர். பின்னர் கிட்டத்தட்ட இதே ஆடம்பர விருந்துகளையும், எழுத்தாளர் கொண்டாட்டங்களையும் அமெரிக்காவிலும் கார்ஸி செய்திருக்கின்றார். அப்படித்தான் சல்வடோர் டாலி இவரின் இருப்பிடத்தில் இருந்து தனது சுயசரிதையை எழுதியிருக்கின்றார். இந்த 1940களில்தான் கார்ஸி, ப்யூகோவ்ஸ்கியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பை தனது பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருக்கின்றார்.
கார்ஸிக்கு பல காதலர்களும், சில திருமணங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் அவரின் கலை மீதான ஈர்ப்பு ஓவியங்கள்/ஸ்டூடியோக்கள் என அவர் இருந்த நகரத்தில் தொடங்குவதற்கான முன்னேடுப்புக்களைச் செய்திருக்கின்றன. மேலும் கார்ஸிக்கு இன்னொரு அடையாளமும் இருக்கின்றன. அதுவரை மிக இறுக்கமாக, நடனம் ஆடும்போதுகூட இடைஞ்சல் கொடுக்கும் அன்றைய கால brassiere ஐ, நவீனமயமாக வடிவமைத்தவர் என்று பாராட்டப்படுகின்றார்.
கார்ஸி 70களில் மரணமுற்றபோது, அவர் 'தொலைந்த தலைமுறை'யின் அன்றையகால புலம்பெயர் எழுத்தாளர்களின் ஞானத்தாய்' எனவும் குறிப்பிடப்படுகின்றார்.

ப்யூகோவ்ஸ்கி
இந்தத் தம்பதியினரின் சீரழிந்த வாழ்வை பல கவிதைகளில் விமர்சிக்கின்றார்.
ப்யூகோவ்ஸ்கி முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிட கஷ்டப்பட்டபோது,
கார்ஸிதான் அதைத் தனது வெளியிட்டிருக்கின்றார். ஆனால் பின்னர் ப்யூகோவ்ஸ்கி
கார்ஸியின் சுயசரிதையை வாசித்துவிட்டு கார்ஸி-ஹரியை மட்டுமின்றி, அவர்கள்
ஆட்டுவிக்க ஆடுகின்ற பொம்மைகள் போல இருந்த அன்றைய கால எழுத்தாளர்களையும்
ப்யூகோவ்ஸ்கி மன்னிக்கத் தயாரில்லை என்கின்றார்.

எவ்வாறு இந்த எழுத்தாளர்கள் ஹாரி- கார்ஸி தம்பதியினரி விருந்தோம்பல் இடங்களிலும், கடற்கரைகளிலும் அவர்களோடு அறிவுஜீவித்தனமாக நின்றுகொண்டு, ஏதோ இது ஒரு கலையின் வெளிப்பாடு என்பது போல காட்சி கொடுக்கின்றார்களே, இவர்களில் ஆகக்குறைந்த ஒரு எழுத்தாளராவது, இந்த முட்டாள்தனங்களில் எங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்று நேர்மையாகச் சொல்லி வெளியேறுவார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்' என்று ப்யூகோவ்ஸ்கி கார்ஸியின் சுயசரிதையை வாசித்தபோது எழுதிய கவிதையில் சொல்கிறார்.
"..the lady published one of my first
short stories in the
40's and is now
dead, yet
I can't forgive either of them
for their rich dumb lives
and I can't forgive their precious toys
either
for being
that. "
ஓர் கவிதையின் (அல்லது படைப்பின் மூலம்) இங்கே கடந்த காலம் மீளக் கொண்டு வரப்படுகின்றது. ஹெமிங்வே, ஹென்றி மில்லர் போன்றவர்களை ஒரளவு ஆழமாக வாசித்தபோது, இந்தப் பதிப்பகம் குறித்து கேள்விப்பட்டபோதும் இநதத் தம்பதியினரின் வாழ்க்கையைப் பற்றி அவ்வளவாக நான் அறிந்ததில்லை. இவர்களுக்குத்தான் மில்லர் வேறொரு புனைபெயரில் ஒரு நாவலை பணத்தேவையின் நிமித்தம் எழுதிக் கொடுத்திருந்தார்,
ப்யுகோவ்ஸ்கியின் இந்தக் கவிதையே கார்ஸி/ஹரி வாழ்க்கையைத் தேடிப் பார்க்க என்னை வைத்திருந்தது. ஆக இந்தத் தம்பதியினரின் கட்டற்ற வாழ்க்கையாலும்/தற்கொலைகளாலும் காலத்தில் மறக்கடிக்கப்பட்ட இவர்களை அவர்களின் பெரும்பணம் கூட நினைவூட்டாததை, ஓர் எளிய கவிதை நமக்கு கிட்டத்தட்ட நூற்றாண்டுக்குப் பிறகு அந்த 1920களை நினைவுபடுத்துகின்றது என்பது எவ்வளவு வியப்பானது.
***
No comments:
Post a Comment