"நான் யன்னலுக்கருகில் வைத்திருந்த ஹேஸேயின் தட்டெழுத்து இயந்திரத்தில் கைவைத்தபடி, அதற்கப்பால் கிளைகள் விரித்துச் சடைத்திருந்த மேப்பிள் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன், இந்த வாழ்க்கை என்றால் என்னவென கேள்விகள் வந்து என்னைப் பதற்றமடையவைக்கும் ஒவ்வொருபொழுதிலும் ஏதோ ஒருவகையில் வெளிப்பட்டுவிடும் 'சித்தார்த்தா'வை, ஹேஸே இப்படித்தானே ஏதோ ஓரிடத்தில் இருந்து எழுதிக்கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கவே மிகக் கதகதப்பாக இருந்தது. எழுத்துக்கள் ஊர்ந்துகொண்டிருப்பது போலவும், தன் தியானம் தோல்வியடைந்து, கெளதம புத்தரிடமும் நிம்மதி காணாது, திரும்பி வந்துகொண்டிருந்த சித்தார்த்தா அதன் வழியே நடந்துகொண்டிருப்பதாகவும் தோன்றியது."
("ஹேஸேயின் சித்தார்த்தாவை மேப்பிள் மரத்தடியில் சந்தித்தல்" இலிருந்து..) பயணித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாயிற்று. பெரும்பாலும் வீட்டிற்குள் அடங்கி அகத்திற்குள் அலைந்து திரிவது விருப்பமெனினும், புறப்பயணங்கள் நிகழ்ந்தும் விந்தைகளின் எல்லை அளவற்றவை. காரோடிக்கொண்டிருக்கையில் சட்டென்று காலநிலை மாறி மழை பெய்ய, இன்னொருமுனையில் வெயில் பிரகாசமாக ஒளிர்வதைப் பார்க்கலாம். அன்றைய நாளில் அதிஷ்டம் இன்னும் மிச்சமிருப்பின் ஏரிக்குள் விழும் இரட்டை வானவில்லை கண்டு மயங்கலாம். பயணங்களின்போது புதிய மனிதர்களால் மட்டுமில்லை, காடுகளையும் சமதரைகளையும் கடந்துசெல்லும்போதும் மனது விரிந்து ஆழத்தினுள் செல்வதை அவதானிக்கையில் பேச்சற்ற மோனத்தில் நாம் தொலைந்தும் போகலாம். அவ்வப்போது ஒரு நாளுக்கான பயணத்தை கொரோனாவுக்குப் பின் செய்து கொண்டிருந்தாலும், வீட்டை விட்டு நீங்கி நீளும் பயணங்கள் சாத்தியமாகவில்லை. கோடை உலர்ந்து இலையுதிர்காலம் இன்னும் இரண்டு வாரங்களில் எட்டிப் பார்க்க இருக்கையில் இதைவிடப் பயணிப்பதற்கான சிறந்த காலம் இருக்கப்போவதுமில்லை. கொரோனாவின் நான்காவது அலை ஆர்முடுகலில் போவது ஒருபுறம், கனடாத் தேர்தல் இன்னொருபுறம் என்கின்ற ஆர்ப்பாட்டங்களின் இடையில், பயணிப்பது என்பது ஒரு ஊரடங்குக்கால அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.கனடாவின் வடக்கு நோக்கிய பயணம்
In பயணம்Thursday, December 30, 2021
உதிரியாக இருத்தல்!
In இன்னபிறநேற்று முழுதும் விளையாட்டு மைதானத்தில் இருந்தேன். இம்முறை இலையுதிர்காலத்தின் தொடக்கமே உடலை உருக்கும் குளிராக மாறிவிட்டிருக்கின்றது.
வேலைக்குச் செல்லுதல்
In அனுபவப்புனைவு, In இன்னபிறTuesday, December 28, 2021
நெடும் மாதங்களுக்குப் பிறகு, முழுநேரமாக வேலைத்தளத்துக்குப் போகத் தொடங்கியிருந்தேன். எல்லாமே ஒருவகை சர்ரியலிசம் போலத் தோற்றமளித்துக் கொண்டிருந்தன. சூரியனே வெளிவரத் தயங்கும் பனிக்காலத்தில் விடிகாலையில் எழுந்து பஸ், ரெயின் என எடுத்துப் போவதை நினைக்க ஒருவகை அயர்ச்சி வந்தது. போக வரவென கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் எடுக்கும் பயணம் அவ்வளவு மனதுக்கு உவப்பாவதில்லை.
Zen is right here
In தமிழாக்கம், In வாசிப்புSunday, December 26, 2021
Zen is right here என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இது Shunryu Suzuki Roshi என்ற ஜப்பானிய ஸென் ஆசிரியரிடம் கற்ற மாணவர்/கள் தொகுத்த நூல். அதில் சிலவற்றை இங்கே தமிழாக்கிப் பார்க்கவேண்டும் என்ற விருப்பு வந்தது. அவற்றில் சில...
புத்தகக் கண்காட்சி
In இன்னபிறசில காலத்துக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது நண்பரொருவர் எனது புத்தகம் ஏதாவது கிடைக்குமாவென வாங்கப்போயிருக்கின்றார். நடத்திக் கொண்டிருந்தவருக்கு எனது பெயரோ அல்லது நானெழுதிய புத்தகங்களைப் பற்றிய எந்த அறிமுகமோ இல்லை. அது அவரின் தவறும் இல்லை. எனக்குந்தான் அவரை யாரெனத் தெரியாது. நண்பரோ, 'எங்கட நாட்டில் இருக்கும் எல்லாப் புத்தகங்களும் இங்கை கிடைக்குமெண்டு சொல்கிறியள்? நான் தேடின புத்தகத்தைக் காணவில்லை' என்று இரண்டு வார்த்தைகளைச் சிதறவிட்டிருக்கின்றார்.
வேதனைகள் எழுத்தை உருவாக்குவதில்லை
In இன்னபிற, In பத்தி, In வாசிப்புFriday, November 19, 2021
'A Passage North'இல் கிரிஷான் என்கின்ற பாத்திரத்திற்கு ஒரு காதலி இந்தியாவில் இருப்பார். அவரைப் பிரிந்து வந்து நான்கு வருடங்களில் -நனவிடைதோய்தலாக- கிரிஷான் அவரது காதலியான அஞ்ஜமை நினைவுகூர்வார். இந்த நான்குவருடங்களில் நான் நன்கு முதிர்ச்சியடைந்துவிட்டேன், எனக்கு தசைகள் திரண்டு தோள்கள் விரிந்துவிட்டன, இந்த நிலையில் என்னைப் பார்த்தால் அஞ்ஜம் இப்போது என்னை அதிகம் நேசிப்பார் என்று கிரிஷான் நினைப்பார். அப்படி நினைக்கும்போது, அந்த நான்கு வருடங்களில் தன்னைப் போலவே அஞ்ஜமும் முதிர்ச்சியடைந்திருப்பார், ஒவ்வொரு மனிதரும் தாம் விட்டுவந்த காலத்தில் இருந்ததுபோல தமக்குத் தெரிந்த மனிதர்களும் இருப்பார்கள் என்று நம்புகின்றோம். ஆனால் நாம் இடைப்பட்ட காலத்தில் எப்படி மாறுகின்றோமோ அப்படித்தான் அவர்களும் மாறியிருப்பார்கள். அதை மறந்துவிடுகின்றோம் என்று கிரிஷான் பிறகு தனக்குள் இந்த நாவலில் நினைப்பார்.

