'தாய்லாந்து' - இளங்கோ:
ஆசிரியர் குறிப்பு:
யாழ்ப்பாணம் அம்பனையில் பிறந்தவர். பதினாறு வயதில் கனடாவிற்குப்
புலம்பெயர்ந்தவர். கவிதைகள், சிறுகதைகள், நாவல் தவிர, கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையும் எழுதி வருகிறார். இது இவரது ஏழாவது நூல்.
இயக்கத்தில் இருந்தவர்கள் போருக்குப்பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப சிரமப்படுவதை, ஒருவருக்கொருவர் உளவாளி என்று சந்தேகம் கொள்வதை, மழைவிட்டும் தூவானம் போல் பழைய சச்சரவுகள் வேறுவேறு நாடுகளிலும் தொடர்வதைச் சொல்வதுடன், ஒரு காதல்கதையையும் சொல்ல முயன்றிருக்கிறார் இளங்கோ.
காதலர் இருவருக்கும் பெயரில்லை, சொல்லப் போனால் இந்தக் கதையின் எந்தக் கதாபாத்திரத்திற்கும் பெயர் குறிப்பிடப்படவில்லை. நண்பன், மாமா, மகள் என்று கடக்கப்படுகிறது. வழமைக்கு மாறாக காதலி ஆளுமை மிக்கவளாகவும், காதலன் அதில் ஆழ்ந்து போகிறவனாகவும் வருகிறார்கள். நாவலின் Presentation யுத்தியும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ஒரு காதல் உடைவதில் ஆரம்பிக்கும் நாவல், அடுத்த காதலைப் பல பரிசோதனைகளுக்கு உள்ளாக்குகிறது.
Romance in different flavor.
பிரதிக்கு:
எதிர் வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜனவரி 2023
விலை ரூ. 180.
******************
நன்றி: சரவணன் மாணிக்கவாசகம்
0 comments:
Post a Comment