கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

வவுனியாவிலுள்ள முகாங்களைப் பற்றிய நேரடி அனுபவம்

Sunday, February 22, 2009


வவுனியா 'உள்ளே இடம்பெயர்ந்த மக்கள்'
(IDP) நல்வாழ்வு மையங்களுக்கான எனது பயணம்

-வைத்தியர் தயா தங்கராஜா

தமிழில்: டிசே தமிழன்

வன்னியில் நடக்கும் போர் பற்றியும், அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அறிந்துகொண்டிருந்தாலும், நான் நேரே சென்று அறியும்வரை இவ்வளவு கொடூரமாய் அது இருக்குமென ஒருபோதும் நினைத்ததில்லை. எங்கள் வளர்ப்புப் பிள்ளையொருவர் போரில் கொல்லப்பட்டுவிட்டாரென்று ஒரு அழைப்பு தற்காலிக (அகதி)முகாமிலிருந்த சபை உறுப்பினரிடமிருந்து வந்திருந்தது. துயரத்தைப் பற்றி நான் எனது மாணவர்களிடம் பலமுறை விரிவுரை செய்திருந்தாலும், துயரத்தின் ஆழத்தை அறிவது இதுவே எனக்கு முதல்முறையாக இருந்தது. 'இல்லை, இல்லை, இப்படி (நடந்து) இருக்க முடியாது' என நான் அழுதேன். நான் நேராக அங்கிலிக்கன் ஆயரின் அலுவலகத்திற்குச் சென்றேன். மதிப்புக்குரிய நேசகுமாரை நான் சந்தித்தபோது என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர் (வளர்ப்புப் பிள்ளை) தப்பிவிட்டார் என்றும் இப்போது ஏதோ ஒரு முகாமில் இருக்கின்றார் எனவும் அவர்கள் சொன்னார்கள்.

அடுத்த நாள் ஒரு இருக்கையைப் பதிவுசெய்து வவுனியாவிற்கு புகைவண்டியில் போனேன்.அதிகாலையில் வெளிக்கிட்டு நான் வவுனியாவைப் பிற்பகலில் போய்ச்சேர்ந்தேன். எனது வளர்ப்புப் பெண் எனக்காக ஸ்ரேசனின் காத்துக்கொண்டிருந்தார். நான் நேராகவே முகாமுக்குச் சென்றேன். ஒருவரும் முகாமிற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

பாடசாலைகள் தற்காலிக முகாங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கொட்டகைகளாக அமைக்கப்பட்டிருந்தன; எப்படிச் சொல்வதென்றால் 5-6 மீற்றர் உள்ள கூடாரங்களைப் போன்று. இராணுவ முகாங்களைச் சுற்றி எப்படி முள்ளுக்கமபிகள் இருக்குமோ அப்படியே இந்த (அகதி) முகாங்களைச் சுற்றியும் முள்ளுக்கம்பிகள் இருந்தன. உள்ளேயிருப்பவர்களை வீதியின் மற்றப்பக்கத்தால் மட்டுமே பார்க்க முடியும். பாதுகாப்பு மிகவும் இறுக்கமாய் இருந்தது. 'கிட்ட வரத் துணியாதே, இங்கிருந்து போ, இங்கிருந்து போ' என்ற மற்ற இராணுவத்தினரின் வெருட்டல்களை அசட்டை செய்து, நான் முகாமுக்குப் பொறுப்பான இராணுவ வீரரை நோக்கிச் சென்றேன்.

நான் அவரை அணுகி, எனது சிங்களம் மிகவும் மோசமாக இருந்ததால் ஆங்கிலத்தில் பேசினேன். நான் இம்முகாமிலுள்ள மதகுருவாயுள்ள எனது மகனைப் பார்க்க விரும்புவதாய் அவரிடம் கூறினேன். அவர் எனது வார்த்தைகளை எனது மகனிடம் கொண்டுசெல்லக்கூடிய கனிவானவராய் இருந்தார், ஆனால் என்னை வீதியின் மறுமுனையில் நிற்கச் சொன்னதோடு, எனக்கு ஜந்து நிமிடங்கள் மட்டுமே தருவேன் என்றும் சொன்னார். பத்து நிமிடத்தில் டானி வெளியே வந்தார். அவர் மிகவும் களைப்பாகவும், மன உளைச்சலுக்குள்ளானவர் போலவும் இருந்தார்.

அவர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றுவதற்காய் ஒவ்வொரு இடங்களாய் ஓடியிருந்தனர். எறிகணைகள் மிகவும் கோரமாய் இருந்ததால் அவர்களால் பதுங்குகுழியை விட்டு வெளியே வருவதே மிகவும் கடினமாய் இருந்தது. ஒவ்வொரு கணமும் (விமானக்)குண்டு வீச்சாகவும் துப்பாக்கி வேட்டுக்களாகவும் இருந்தன. அவர் கருணா நிலையத்தின் பொறுப்பாளாராக இருந்தார். கருணா நிலையத்தில் உளநிலை குறைந்தவர்களோடு பாடசாலைக்குப் போகும் சிறுமிகளும் தங்கியிருந்தனர். ஒரு ஞாயிறு இரவு (பெப்ரவரி 15, 2009) சிறிய பிரார்த்தனையின் பின், மாலையில் (வன்னியை விட்டு)வெளியேறுவதாய் முடிவு செய்தனர். எனினும் விடிகாலை 1.30க்கே வெளியேறினர். எவ்வளவு கொடூரமாய் அது இருந்திருக்குமென்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

நாங்கள் வன்னிக்குள் வேலை செய்ததால், என்னால் மழையாகப் பொழியும் எறிகணைகளினதும், விமானக்குண்டுகளினதும் ஆபத்துக்களை எண்ணிப் பார்க்க முடிகிறது. அவர்கள் அடர்ந்த காடுகளிலுள்ள யானையிலிருந்து விசமுள்ள பாம்புகள் வரை சிறியதும் பெரியதுமான எல்லாப் பிராணிகள் மீதும் அவதானமாக இருக்கவேண்டியிருந்தது. இருட்டில் பல மணித்தியாலங்கள் நடந்து, கொல்லப்பட்ட உடலங்கள் மீதும், அங்குமிங்குமாய் பரவியிருந்த மனிதவுடலின் பகுதிகள் மீதும் சரிந்து விழாமல் வரவேண்டியிருந்தது. அவர்கள் இறுதியில் வவுனியாவுக்கு வருகின்ற பேருந்துகளைக் கண்டார்கள். அவர்கள் பேருந்து ஒன்றில் ஏறியபோது, எறிகணை ஒன்று வந்து இன்னொரு பேருந்தின் மீது வெடித்தது. தங்களோடு (கருணா நிலையத்தில்) தங்கிருந்த பதினான்கு பேரைக் காணவில்லை என்று அவர் சொன்னார். (பிறகு ஆறு பேர் கண்டுபிடிக்கப்பட்டார்கள்).

நாங்கள் (அகதிமுகாமில்) காத்திருந்தபோது, மதியவுணவுப் பொதிகள் வானிலிருந்து கொண்டுவரப்பட்டன. மதிய உணவுக்கான பொதி மிகவும் சிறியதாக இருந்ததை நாம் கவனித்தோம். ஒரு உணவுப்பொதி 650 கிராமாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பின்னர் நான் நம்பத்தகுந்த ஒரு நபரிடமிருந்து கேள்விப்பட்டேன். ஆனால் ஒவ்வொரு பொதியும் கிட்டத்தட்ட 300 கிராமாகவே இருந்தது.

அவ்வாறே நான் மற்ற முகாங்களுக்குச் சென்றபோது, வீதியின் மறுமுனையிலிருந்து பார்த்தபோது, நூற்றுக்கணக்கான ஆண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள், சிலவேளைகள் இதுவே நீண்ட நாட்களுக்குப் பிறகான முதல் குளியலாகவும் அவர்களுக்கு இருக்கலாம். திறந்த வெளியில் பத்து ஷவர்கள் இருக்கையில், எல்லோரும் தண்ணீருக்காய்த் தள்ளுப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு தண்ணீர் நிறுத்தப்பட்டுவிடும். ஆண்களும் இராணுவத்தினரும் இருக்கும் இவ்வாறான ஒரு திறந்தவெளியில் எப்படிப் பெண்களால் சமாளிக்க முடியுமென்று நான் யோசித்தேன்! என்ன கழிவறை வசதிகள் அவர்களுக்காய் செய்யப்பட்டிருக்கும்?

வைத்தியசாலைக்கான எனது பயணம் மனதை உலுக்கக்கூடியதாக இருந்தது. விபத்துப் பகுதியிலிருந்தவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே (ஏதோவொரு) உறுப்பை இழந்தவராக இருந்தார்கள். வெளியே இருந்தும் வேறு எவரும் உள்ளே வந்து இவர்களைப் பார்க்க அவ்வளவாய் அனுமதிக்கப்படவில்லை. நோயாளிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதும் தெரியாது. அவர்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளானவர்கள் போல இருந்தார்கள். தங்கள் வலியின் காரணமாகவும், கெட்ட கனவுகள் காரணமாகவும் இரவுகளில் அவர்கள் கத்துபவர்களாகவும் அழுபவர்களாகவும் இருந்தார்கள். நிறையப் பேர் தங்கள் இரண்டு கால்களை இழந்தவர்களாகவும், சிலர் தங்கள் கைகளை இழந்தவர்களாகவும் இருந்தார்கள்.

ஒரு கர்ப்பிணித் தாய் தனது இரண்டு கால்களையும் இரண்டு கைகளையும் இழந்ததோடு, தாதிப்பெண்கள் தான் சாவதற்கு உதவவேண்டுமென கதறிக்கொண்டிருந்தார். இன்னுஞ் சிலர், அவர்களின் முள்ளந்தண்டில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பின் காரணமாக முற்றுமுழுதாக செயலிழந்திருந்தனர். அங்கிருந்த சிறுவன்களில் ஒருவன் என்னை ஈர்த்தான். அவனது தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. நான் அவனை நோக்கிப் போனபோது அவனது கன்னத்தில் கண்ணீர் உருண்டோடியது.

அவனுக்கு மூளையில் ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அவன் என்னிடம் தனது தகப்பனும் இளைய சகோதரியையும் எங்கேயிருக்கின்றார்களென கண்டுபிடிக்கமுடியுமா எனக்கேட்டான். அவனது தாயும், இரண்டு சகோதரர்களும் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். அவனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதும் கடினமானது. கிண்ணியா, பொலனறுவை, மன்னார், இன்னும் வெவ்வேறு இடங்களுக்கு (வன்னிக்குள்ளிலிருந்து) வந்தவர்கள் அனுப்பப்பட்டபோது, குடும்பத்தினர் ஒன்று சேருவதற்கான சிறு சந்தர்ப்பம் என்பது கேள்விக்குரியதே.

ஒரு தாய் வெறுமையான பார்வையுடன் அமர்ந்திருந்தார். அவர்கள் ஓடத்தொடங்கியபோது, அவரின் ஒரு குழந்தை கொல்லப்பட்டுவிட்டது. அதற்கிடையிலும் ஒரு மண்வெட்டியை எடுத்து மண்ணைத் தோண்டி தனது குழந்தையைப் புதைக்கும் துணிவு அவருக்கு இருந்திருக்கிறது. அவர் தனது குழந்தையின் உடல், காட்டு விலங்குகளால் உண்ணப்படுவதை விரும்பவில்லை. அவர் அழவில்லை ஆனால் உளவியல் பிரச்சினைகளுக்குட்பட்டிருந்தார் என்பது உறுதி. எறிகணைகள் நேரே பதுங்குகுழிக்குள் வந்து விழுந்த பல சம்பவங்கள் இருக்கின்றன.. ஆயிரக்கணக்கானவர்கள் இதனால் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இன்னமும் வன்னிக்குள் தங்கியிருப்பவர்கள் பல்வேறு காரணங்களால் பயத்துடன் (வன்னிக்கு) வெளியே வராது இருக்கின்றார்கள். அவர்களுக்கு தாங்கள் கொல்லப்படுவது (வெளியே வந்து) சித்திரவதை செய்யப்படுவதை விட மேலானதாய் இருக்கிறது.

தீவின் எல்லாப் பக்கமும், முக்கியமாய் கொழும்பில், இராணுவத்தின் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நபரின் அடையாள அட்டையில் அவரின் பிறந்த இடம் வன்னியாகவோ, முல்லைத்தீவாகவோ, கிளிநொச்சியாகவோ, ஏன் யாழ்ப்பாணமாயிருந்தாலோ, அவனோ/அவளோ பிரச்சினைக்குரியவராகிவிடுவார். எங்கள் குடியிருப்பு சென்ற வாரம் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, எனது பதினாறு வயது மகளின் அலுமாரி, ஆடைகள் வைக்குமிடமெல்லாம் சோதிக்கப்பட்டு அவளும் விசாரிக்கப்பட்டாள். அவ்வண்ணமே மக்கள் வன்னியை விட்டு வெளியே வரவிரும்பினாலும், இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இப்போது இங்கே இனப்படுகொலை பல்வேறு நிலைகளில் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. தெரியாத பிரதேசங்களிலும், பழக்கப்படாத இடங்களிலும் சிதறடிக்கப்பட்ட மக்கள், இறுதியில் வலுவற்ற குடிமக்களாகி, அதன் விளைவால் எங்கள் கலாசாரம், கல்வி, உறவு முறைகளில் மிகப்பெரும் பாதிப்பு வரப்போகின்றது என்பதைச் சொல்லவேண்டிய அவசியமில்லை. வன்முறையால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சந்ததிக்கு இனி எதிர்காலத்தில் எந்த நம்பிக்கையும் இல்லை என்பதைத்தான் என்னால் உணர்ந்து சொல்லமுடியும். சர்வதேச சமுகங்களால் அறிக்கைகளை வெளியிடமுடியும், ஆனால் அவை எவையும் எந்தக் கவனத்தையும் பெறாது. எனக்கு எதிர்காலம் இருண்டதாகவும் பயங்கரமானதாகவும் தெரிகிறது.

Thanks: TransCurrents

சொர்க்கத்தின் விளிம்பு (The Edge of Heaven)

Saturday, February 07, 2009

அப‌த்த‌மான‌ வாழ்க்கையை அவ்வ‌ப்போது வ‌ன‌ப்பூட்டுவ‌த‌ற்கென‌ சில‌ அருமையான‌ த‌ருண‌ங்க‌ள் ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்விலும் வ‌ந்துபோகின்ற‌ன‌. ஆனால் அவ்வாறான‌ அற்புத‌ க‌ண‌ங்க‌ளைச் ச‌ந்திப்ப‌த‌ற்கும், த‌வ‌ற‌விடுவ‌த‌ற்குமான‌ இடைவெளி என்ப‌துகூட‌ சில‌நொடிப்பொழுதுக‌ளில் இருப்ப‌தாய் அமைந்துவிடுவ‌துண்டு. ந‌ம‌க்கு சுற்றியிருக்கும் ம‌னித‌ர்க‌ளால‌ ப‌ல்வேறு வித‌மான‌ பிர‌ச்சினைக‌ளும் சிக்க‌ல‌க‌ளும் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்ற‌ன‌ என்கின்ற‌போதும் ந‌ம் ஒவ்வொருவ‌ருக்கும் ந‌ம‌து த‌னிமையை, ம‌கிழ்ச்சியை, துன்ப‌த்தை, விரக்தியை ப‌கிர்வ‌த‌ற்கென‌ எப்போதும் ம‌னித‌ர்க‌ள‌ தேவையாக‌வும் இருக்கின்றார்க‌ள். 'சொர்க்க‌தின் விளிம்பு' (The Edge of Heaven) என்கின்ற‌ இப்ப‌ட‌த்தில் வ‌ரும் க‌தாபாத்திர‌ங்க‌ள் த‌ம்ம‌ள‌வில் த‌னித்துவ‌மாக‌ இருக்க‌ விரும்பினாலும், சுற்றியிருக்கும் ம‌னித‌ர்க‌ளையும் மிகவும் நேசிக்கச் செய்கின்ற‌ன‌ர். அவ்வாறு நிப‌ந்த‌னைய‌ற்று நேசிக்கும்போது ப‌ல‌வ‌ற்றை இழ‌க்கின்ற‌ன‌ர், சில‌ர் த‌ம‌து உயிரைக்கூட‌.

ஆறு முக்கிய‌ பாத்திர‌ங்க‌ளுள்ள‌ இத்திரைப்ப‌ட‌த்தில், எல்லாப் பாத்திர‌ங்க‌ளும் ஒருவ‌ரையொருவ‌ர் சந்திக்காவிட்டாலும், ஏதோ ஒருவித‌த்தில் ம‌றைமுக‌மாக‌வேனும் பிற‌ பாத்திர‌ங்க‌ளில் பாதிப்புக்க‌ளை ஏற்ப‌டுத்துப‌வ‌ர்க‌ளாயிருக்கின்றார்க‌ள். அலியும் (Ali) நெஜ‌ட்டும் (Nejet) துருக்கியைப் பூர்வீக‌மாய்க்கொண்ட‌, ஆனால் ஜேர்ம‌னியில் வ‌சிக்கின்ற‌ த‌ந்தையும் ம‌க‌னுமாவார்க‌ள். நெஜ‌ட் சிறுவ‌ய‌திலிருக்கும்போதே தாயை இழ‌ந்த‌வ‌ர், த‌ந்தை அலியின் ப‌ராம‌ரிப்பில் வள்ர்ந்து, ஜேர்ம‌னியப் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் ஒன்றில் பேராசிரிய‌ராக‌ இருக்கின்றார். அலி த‌ன‌து பாலிய‌ல் தேவையைப் பூர்த்திசெய்ய‌ப்போகும் ஜேர்ம‌னியிலுள்ள‌ பாலிய‌ல் தொழில் செய்ய‌ப்ப‌டும் ப‌குதியில், துருக்கியைச் சேர்ந்த‌ ஜெற்றர் (Jeter) என்னும் பாலிய‌ல் தொழிலாளியைச் ச‌ந்திக்கின்றார். நாட்க‌ள் சில‌ க‌ழிய‌, அலி தான் த‌ன் துணைவியை இழ‌ந்த‌வ‌ன், என்னிட‌ம் ஓய்வூதிய‌த்தால் வ‌ந்துகொண்டிருக்கும் ப‌ண‌மிருக்கிற‌து, நீ தொழில் செய்து ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தைத் த‌ருகின்றேன் என்னோடு நீ வ‌ந்து த‌ங்கலாம், ஆனால் என‌க்கு ம‌ட்டுமே உன‌து 'தொழிலை'ச் செய்ப‌வ‌ளாக‌ இருக்க‌வேண்டும் என்று ஜெற்றரிட‌ம் அலி கூறுகின்றார். இந்த‌க்கால‌ப்ப‌குதியில் துருக்கியைச் சேர்ந்த‌ வேறு இரு ஆண்க‌ள், ஜெற்றர் துருக்கியைச் சேர்ந்த‌ ஒருவர் என்ப‌தைக் க‌ண்டுபிடித்து, 'ஒரு முஸ்லிமாக‌ இருந்துகொண்டு இத்தொழிலை நீ செய்ய‌க்கூடாது, துருக்கிக்குத் திரும்பிப்போ' என்று ஜெற்றரைப் ப‌ய‌முறுத்துகின்றார்கள். இறுதியில் ஜெற்றர், அலியின் வீட்டில் வ‌ந்து த‌ங்குகின்றார். அலி ஜெற்றரை, த‌ன‌து ம‌க‌ன் நெஜ‌ட்டுக்கு அறிமுக‌ப்ப‌டுத்துகின்றார். இவ்வாறு ஜெற்றர் த‌ங்கிய‌ கால‌த்தில், அலிக்கு மார‌டைப்பு வ‌ந்து வைத்திய‌சாலையில் த‌ங்கிச் சில‌ நாட்க‌ள் சிகிச்சை எடுக்க‌வேண்டிவ‌ருகின்ற‌து. சிகிச்சை பெற்று வீடு திரும்பும் அலிக்கு, ஜெற்றருக்கும் த‌ன‌து ம‌க‌ன் நெஜ‌ட்டுக்கும் இடையில் புது உற‌வு முகிழ்ந்திருக்கலாம் என்று ச‌ந்தேகம் வருகின்றது. ஒருநாள், மிகுந்த‌ குடிபோதையில், த‌ன்னோடு உட‌லுற‌வு கொள்ளும்ப‌டி அலி ஜெற்றரை வ‌ற்புறுத்துகின்றார். ஜெற்றர் ம‌றுக்க‌, 'உன‌க்கான‌ இத்தொழிலுக்கு நான் ஏற்க‌ன‌வே ப‌ண‌த்தைச் செலுத்தியிருக்கின்றேன்' என்று அத‌ட்டி அடிக்கும்போது, ஜெற்றர் கூரான‌ ப‌குதியொன்றுப‌ட்டு இற‌ந்துவிடுகின்றார். அலிக்கு கொலைக்குற்ற‌த்திற்கான‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து.

அலி வைத்திய‌சாலையில் சிகிச்சை பெற்ற‌ கால‌த்தில் நெஜ‌ட்டிட‌ம், ஜெற்றர் த‌ன‌து சொந்தக்க‌தையைக் கூறுகின்றார். த‌ன‌க்கு ஒரு ம‌க‌ள் (Ayten) துருக்கியிலிருக்கின்றாள் என்றும், வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருக்கும் அவ‌ளுக்குத் தானே ப‌ண‌ம் அனுப்பிக்கொண்டிருக்கின்றேன் என்றும், ஆனால் த‌ன‌து ம‌க‌ளும், துருக்கியிலிருக்கும் உற‌வுகளும், தான் ஏதோ ஒரு கால‌ணிக் க‌டையொன்றில் வேலை செய்துகொண்டிருக்கின்றேன் என்று ந‌ம்பிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்றும் கூறுகின்றார். ஜெற்றரின் ம‌ர‌ண‌த்தின் பின், அவ‌ர‌து ம‌க‌ளான‌ அய்ட்ட‌னின் க‌ல்விக்கு உத‌வுவ‌த‌ற்காய் நெஜ‌ட் துருக்கிக்குப் ப‌ய‌ணிக்கின்றார். ப‌ல்வேறுவித‌மாய் முய‌ற்சிக‌ள் செய்தாலும் அவ‌ரால் ‍ -அய்ட்ட‌னின் ப‌டத்தை ம‌ட்டும் வைத்துக்கொண்டு- அய்ட்டனைக் ‍ க‌ண்டுபிடிக்க‌ முடிய‌வில்லை. இத்தேட‌லின் தொட‌ர்ச்சியில் துருக்கியிலுள்ள‌ டொச் மொழி புத்த‌க‌ங்க‌ள் விற்கும் ஒரு நூற்க‌டையை நெஜட் வாங்கி ந‌ட‌த்த‌த் தொட‌ங்குகின்றார்.

2.
ப‌ட‌த்தின் ஒரு ப‌குதி ஜெற்றரின் கொலையோடு முடிய‌, இர‌ண்டாவ‌து ப‌குதி துருக்கியிலிருக்கும் ஜெற்றரின் ம‌க‌ளான‌ அய்ட்ட‌னைப் பின் தொட‌ர‌த்தொட‌ங்குகின்ற‌து. ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் இருக்கும் அய்ட்ட‌ன் மார்க்சிய‌த்தின் மீது மிகுந்த‌ ஈர்ப்புக்கொண்ட‌ ஒரு க‌ல‌க்காரியாக‌ இருக்கின்றார். அர‌சின் அட‌க்குமுறைக‌ளுக்கு எதிராக‌ மாண‌வ‌ர்க‌ள் ந‌ட‌த்தும் ஆர்ப்பாட்ட‌ப் பேர‌ணியொன்றில் முன்ன‌ணியில் நிற்கின்றார். அப்பேர‌ணியில் காவ‌ற்துறையோடு ஏற்ப‌டும் ச‌ச்ச‌ரவில் மாண‌வ‌ர்க‌ள் ஒரு பொலிஸ்கார‌ரைக் கூட்டமாய்ச் சேர்ந்து அடிக்கும்போது அப்பொலிஸ்கார‌ரின் கைத்துப்பாக்கியை அய்ட்ட‌ன் எடுத்துகொண்டு ஓடிப்போய் ஒரு மொட்டை மாடியில் ம‌றைத்துவிடுகின்றார். அப்பேர‌ணியை முன்னின்று ந‌ட‌த்திய‌ மாண‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் தொடர்ந்து வரும் நாட்களில் கைதுசெய்ய‌ப்ப‌டுகின்றார்க‌ள். அய்ட்ட‌னையும் கைதுசெய்ய‌ காவ‌ல்துறை நெருங்கிவ‌ருகின்ற‌ கால‌ப்ப‌குதியில் மாண‌வ‌ர்க‌ள் அய்ட்ட‌னை துருக்கியிலிருந்து வெளியே த‌ப்ப‌வைக்கின்றார்க‌ள். ஜேர்ம‌னிக்கு வ‌ந்து தாயோடு த‌ங்கியிருக்க‌லாம் என்ற‌ ந‌ம்பிககையில் வ‌ரும் அய்ட்ட‌ன், தாய் முகவரி த‌ந்த‌ கால‌ணிக்க‌டையில் வேலை செய்ய‌வில்லை என்ப‌தை அறிகின்றார். ஆனால் முய‌ற்சியைத் த‌ள‌ர‌விடாது ந‌க‌ரிலுள்ள‌ எல்லாக் கால‌ணிக் க‌டைக‌ளையும் தொட‌ர்புகொள்கின்றார். இத‌ற்கிடையில் அவ‌ர் த‌ங்கிநிற்கும் துருக்கி மாண‌வ‌ர்க‌ளோடு முர‌ண்ப‌ட்டு வெளியே வ‌ருகின்றார், ஆனால் கையில் காசில்லாத‌தால் ப‌ட்டினியில் வாட‌த்தொட‌ங்குகின்றார்.

ஜேர்மனிய பல்கலைக்கழக வ‌ளாக‌ம் ஒன்றுக்குச் செல்லும்போது த‌ற்செய‌லாய் ஜேர்ம‌னியைப் பூர்விக‌மாய்க் கொண்ட‌ லொற்றைச் ச‌ந்திக்கின்றார்(உண்மையில் இப்பல்கலைக்கழகத்தில்தான் நெஜட் பேராசிரியராக இருக்கின்றார்; அவரது வகுப்புக்கு ஒன்றுக்குப்போய் அய்ட்டன் தூங்கிக்கொண்டுமிருக்கின்றார் என்று படத்தின் தொடக்கத்தில் காட்டப்படுகின்றது. ஆக ஒவ்வொருவரின் கதையும் பிரித்து பிரித்துக் காட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் தனது தாய் ஜெற்றர் உயிருடன் இருக்கும்போதே அய்ட்டன் ஜேர்மனிக்கு வந்துவிட்டார்). கையில் காசில்லாது தாயைத் தேடும் அய்ட்ட‌னின் மீது லொற்றுக்குப் ப‌ரிவு வ‌ந்து, த‌ங‌க‌ள் வீட்டில் அய்ட்ட‌ன்- த‌ன‌து தாயைக் க‌ண்டுபிடிக்கும்வ‌ரை- த‌ங்கியிருக்க‌லாம் என்று கூறுகின்றார். அய்ட்ட‌ன், லொற்றோடு த‌ங்கியிருக்கும் கால‌ப்ப‌குதியில் அவ‌ர்க‌ள் இருவ‌ருக்குமிடையில் ஒருபால் உற‌வு ஏற்ப‌டுகின்ற‌து. லொற்றின் தாயோடு அய்ட்ட‌ன் ஒருநாள் அர‌சிய‌ல் பேசுகின்றார். துருக்கியிலிருக்கும் அட‌க்குமுறை ஆட்சிப‌ற்றி அய்ட்ட‌ன் குறிப்பிடும்போது, நீங்க‌ள் அய்ரோப்பிய‌ ஒன்றியத்துடன் சேர்ந்தால் ப‌ல‌ ஒடுக்குமுறைக‌ள் குறைந்துவிடும் எனகின்றார். அய்ட்ட‌ன் இந்த‌ அய்ரோப்பிய‌ ஒன்றிய‌மே முழுச் சுத்துமாத்து, அவ‌ர்க‌ள் உல‌க‌மய‌மாத‌லை இன்னும் தீவிர‌மாய் செய்து வ‌றிய‌ நாடுக‌ளை இன்னும் ஒடுக்குகின்றார்க‌ள் என்று அய்ரோப்பிய‌ ஒன்றிய‌த்தை கெட்ட‌வார்த்தைக‌ள் க‌ல‌ந்து மிக‌க்க‌டுமையாக‌ விம‌ர்சிக்கின்றார். லொற்றின் தாயும் ஒருக‌ட்ட‌த்தில், நீ எங்க‌ள் வீட்டில் இருப்ப‌தாயிருப்பின் இப்ப‌டியெல்லாம் க‌தைக்க‌க்கூடாது என்று எச்ச‌ரிக்கின்றார். இனியும் இந்த‌ வீட்டிலிருக்க‌ முடியாது என்று வெளியேறி, லொற்றோவோடு காரில் வீதியில் போகும்போது, ஜேர்ம‌னிய‌ப் பொலிஸால் அய்ட்ட‌ன் ஜேர்ம‌னியில் ச‌ட்ட‌விரோத‌மாய் இருக்கின்றார் என்று கைதுசெய்ய‌ப்ப‌டுகின்றார். லொற்றும் அவ‌ர‌து தாயாரும், அய்ட்ட‌ன் துருக்கிக்கு அனுப்ப‌ப்ப‌ட்டால் அவ‌ரது உயிருக்கு உத்த‌ர‌வாத‌மில்லை என்று கூறி, த‌ங்க‌ள் ப‌ண‌த்தை அகதி வ‌ழ‌க்கிற்காய் நிறைய‌ச் செல‌வ‌ழித்தும் அய்ட்ட‌னைக் காப்பாற்ற‌முடிய‌வில்லை; அய்ட்ட‌ன் துருக்கிக்கு நாடு க‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார். துருக்கிச் சிறையில் அடைக்க‌ப்ப‌டும், அய்ட்ட‌னைக் காப்பாற்ற‌ லொற் துருக்கிக்கு ப‌ய‌ணிக்கின்றார். லொற்றோவின் தாய் சுசான் தான் நிறைய‌ச் செலவ‌ழித்துவிட்டேன் இனி அய்ட்ட‌னின் விட‌ய‌த்துக்கு த‌ன்னால் செல‌வ‌ழிக்க‌முடியாது என்கிறார். லொற்றோ தான் அய்ட்ட‌னைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கும்வ‌ரை துருக்கியிலிருந்து வெளியேற‌ப்போவ‌தில்லை என்று தாயிட‌ம் உறுதியாக‌க் கூறுகின்றார்.

இந்த‌க் கால‌ப்ப‌குதியிலேயே லொற், நெஜ‌ட்டை அவ‌ர‌து புத்த‌க‌க்க‌டையில் ச‌ந்திக்கின்றார். தான் ஒருவ‌ரின் வ‌ழ‌க்கிற்காய் இங்கு வ‌ந்திருக்கின்றேன், ஆனால் ப‌ண‌க்க‌ஷ்ட‌த்தில் இருக்கின்றேன் என்கின்ற‌போது, நெஜ‌ட் தான் த‌ங்கியிருக்கும் வீட்டில் ஒரு அறையை குறைந்த‌ வாட‌கையுட‌ன் லொற்றொவுக்குக் கொடுக்கின்றார். ப‌ல‌ வித‌ க‌ஷ்ட‌ங்களுக்கு ம‌த்தியில் லொற்றோ அய்ட்ட‌னைச் சிறையில் ச‌ந்திக்கின்றார். அப்போது அய்ட்ட‌ன் தான் ஒளித்துவைத்திருக்கும் துப்பாகியைப் பிற‌ர் எடுக்க‌ முன்ன‌ர், லொற்றை எடுத்து எங்கையாவ‌து பாதுகாப்பாய் வைக்கும்ப‌டிகூறி, அத‌ன் வ‌ரைப‌ட‌த்தை சிறைக்காவ‌ல‌ர்க‌ளின் க‌ண்ணில் தெரியாது கொடுக்கின்றார். அக்கைத்துப்பாக்கியை எடுத்து, த‌ன‌து கைப்பையில் ப‌த்திர‌மாக‌ வைத்துக்கொண்டு லொற் அறை திரும்புகையில் சேரிச் சிறுவ‌ர்க‌ள் சில‌ர் இவ‌ர‌து கைப்பையை திருடிக்கொண்டு ஓடுகின்றார்கள். அத‌ற்குள் லொற்றின் அடையாள‌ அட்டைக‌ள், பாஸ்போர்ட் உட்ப‌ட‌ துப்பாக்கியும் இருப்ப‌தால் அச்சிறுவ‌ர்க‌ளைத் துர‌த்திக்கொண்டு லொற்றும் ஓடுகின்றார். ஒரு ஒதுக்குப்புற‌த்தில் கைப்பையைத் தோண்டிக்கொண்டிருக்கும் சிறுவ‌ர்க‌ளிட‌ம் பையைத் த‌ரும்ப‌டி லொற் கேட்க‌, கிட்ட‌ வ‌ராதே சுட்டுவிடுவேன் என்று பையிலிருந்த‌ துப்பாக்கியைக் காட்டி ஒரு சிறுவ‌ன் ப‌ய‌முறுத்துகின்றான். கிட்ட‌ நெருங்கிவ‌ரும்போது அந்த‌ப்பைய‌ன் விசையை இழுத்துவிடுகின்றான். லொற் துப்பாகிக்குண்டுப‌ட்டு சாவ‌தை அதிர்ச்சியுட‌ன் அப்பைய‌ன்க‌ள் பார்த்துவிட்டு ஓடியொளிகிறார்க‌ள். முத‌லாம் ப‌குதி ஜெட்ட‌ரின் ம‌ர‌ண‌த்தை முடிந்த‌துபோல‌, இர‌ண்டாம் ப‌குதி லொற்றின் ம‌ர‌ண‌த்துட‌ன் முடிகின்ற‌து.

3.
மூன்றாம் பகுதியில், லொற்றின் தாயார், லொற் இறக்கமுன்னர் இருந்த இடத்தைப் பார்க்க துருக்கியிற்கு வருகின்றார். அங்கே லொற் தங்கியிருந்த வீட்டில் நெஜட்டைச் சந்தித்து, தான் சில காலம் லொற் தங்கியிருந்த அறையில் தங்கியிருக்கப் போவதாகக் கூறுகின்றார். தனது மகளின் தோழியான அய்ட்டனைச் சிறையிலிருந்து வெளியே எடுக்கும்வரை துருக்கியை விட்டுப்போவதில்லையென, அதாவது தனது மகள் எதற்கு துருக்கியிற்கு வந்து இறந்துபோனாரோ அந்தவேலையைச் செய்துமுடிக்கவேண்டுமென விரும்புகின்றார். அதேசமயம் லொற்றின் கொலை துருக்கி - ஜேர்மனி என்ற இரண்டு நாடுகள் சம்பந்தமான கொலையாகையால், துருக்கிப் பொலிஸ் நடந்த உண்மைகளை அறிய சிறையிலிருக்கும் அய்ட்டனின் உதவியை நாடுகின்றது. அய்ட்டன், லொற்றோ குறித்த நடந்த முழு உண்மைகளைச் சொன்னால், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்ற உறுதிமொழியைப் பொலிஸ் தரப்பு வழங்குகின்றது. அய்ட்டன் உண்மைகளைக் கூறி சிறையிலிருந்து விடுவிக்கப்படும்போது, சிறையிலிருக்கும் அவரது சகமாணவ நண்பர்கள், அய்ட்டன் தங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த துரோகி அய்ட்டன் என முத்திரை குத்துகின்றார்கள். இவ்வாறு அய்ட்டன் வெளியே வரும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது, நெஜட் அய்ட்டனைத் தேடும் முயற்சியில் நம்பிக்கையிழந்து, எல்லா முயற்சிகளையும் நிறுத்திவிடுகின்றார். அதேசமயம், நெஜட்டின் புத்தகக்கடைக்கு வரும் உறவினர் ஒருவர், நெஜட்டின் தந்தை ஜேர்மனியில் கொலைக்கான குற்றத்தை அனுபவித்துவிட்டு நாடு கடத்தப்பட்டு அவர்களின் கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் என்பதைச் சொல்கின்றார். தனது தந்தை அலி கொலை செய்தபோது கொலைகாரனோடு இனியிந்த உறவும் வேண்டாம் என்று ஒதுங்கி தனித்து வாழ்ந்த நெஜட், என்னவானாலும் தன்னை இப்படி வளர்த்து ஆளாக்கியவர் தந்தையென்று எண்ணி அவரைச் சந்திக்க தொலைவிலுள்ள ஊருக்குச் செல்வதுடன் படம் முடிகின்றது.

இப்படம் சாதாரணமாகப் பார்க்கும்போது எளிமையான கதையாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதமும், கதாபாத்திரங்களின் செதுக்கலும் மிக அழகாக இருக்கின்றன. இப்படத்திலுள்ள் பாத்திரங்கள் தம்மளவில் மிகுந்த தனிமையில் உழன்று கொண்டிருந்தாலும், சக மனிதர்களின் மீதான நேசிப்பில் ஒரு நதியைப் போல பரந்து பாய்கின்றவர்களாய் ஆகிவிடுகின்றனர். முக்கியமாய் நாம் ஒவ்வொரு மனிதர்களையும் பிரித்து அடையாளம் இடுதலை இப்படம் நிராகரிக்கின்றது. நம்மைப் போன்ற கீழைத்தேச நாடுகளிலிருந்து வருவோருக்கு மேலைத்தேய நாடுகளில் உள்ளோருக்கு உறவுகள் மீதும் மனிதாபிமானம் மீதும் அவ்வளவு மதிப்பிருப்பதில்லையென்ற ஒரு கருத்தாக்கம் இருக்கிறது. இங்கே முற்றுமுழுதாக ஜேர்மனிய கலாசாரத்திலிருக்கும் லொற் ஒரு அகதியாக வரும் அய்ட்டனைத் தன்னைப்போன்ற இன்னொரு சகமாணவியென்ற பரிவுடன் -பிற அடையாளங்கள் குறித்து எந்தப்பிரக்ஞையுமின்றி- அடைக்கலம் கொடுக்கின்றார். லொற்றுக்கும் அய்ட்டனுக்கும் வரும் ஒருபால் உறவு கூட நிறங்களை, கலாசாரங்களைத் தாண்டி, இயல்பானதே. அதேபோன்று லொற்றினது தாயாக வரும் சூசனுக்கும் முதலில் துருக்கியைச் சேர்ந்த அய்ட்டனை ஏற்றுக்கொள்வதில் தயக்கமிருப்பினும், பிறகு ஒரு சக மானுடஜீவியின் நேசிப்புடன் அய்ட்டனைச் சிறையிலிருந்து வெளியே எடுக்க முயற்சிக்கின்றார். பேராசிரியராய் நல்ல நிலையிலிருக்கும் நெஜட் கூட, எல்லாவற்றையும் உதறி அய்ட்டனைத் தேடி துருக்கிக்குப் பயணித்து மிக எளிமையான வாழ்வுக்குத் தன்னை தகவமைத்துக்கொள்கின்றார். அய்ட்டன் கூட ஒரு சாதாரண மாணவியாக வளாகத்தில் படித்து பிடித்த வேலையைச் செய்துகொண்டு வாழ்ந்துபோயிருக்கலமென்றாலும் அவர் வளாகத்திலிருந்து அதிகாரங்களின் அடக்குமுறைக்கு எதிராய் மிக உறுதியாகப் போராடுகின்றார்; படிப்பைத் தொலைக்கின்றார். ஆக லொற், நெஜட், சூசன், அய்ட்டன் ஆகியோருக்கு மிகப் பாதுகாப்பானதும் வசதியானதுமான வாழ்வு கிடைத்தும், சக மனிதர்களின் பொருட்டு தங்களுக்கு உரிய வாழ்வை இழந்து பிறருக்காய் போராடுகின்றார்கள். இப்பூமியில் இவ்வாறான மனிதர்களைக் காண்பது என்பது மிக அரிதாகவே இருக்கின்றது. ஆனால் நம் எல்லோரையும் விட அவர்களே உண்மையான வாழ்வை வாழ்வதால் நாம் அவர்களை வியந்து பார்த்தபடி தொடர்ந்து பேசியபடியிருக்கின்றோம்.

4.
இப்படத்தின் இயக்குநர் Fatih Akin இயக்கிய இன்னொரு படமான In July (காதலைத் தேடி ஜெர்மனியிலிருந்து துருக்கிக்கு போகும் ஒருவனின் அழகான பயணம்), மற்றும் துருக்கியிலுள்ள பலவேறுவிதமான இசை வகைகளைப் பற்றிய ஆவணப்படமான, Crossing the Bridge: The Sound of Istanbul பார்க்கும் சந்தர்ப்பம் இதே காலகட்டத்தில் கிடைத்திருந்தது. The Edge of Heavenனில் பின்னிணைப்பாக இருக்கும் இப்படத்தையெடுத்த பின்னணி பற்றிய குறிப்புகள் சுவாரசியம் தரக்கூடியன. தனது ஒவ்வொரு முழுநீளப்படத்துக்கும், படப்பிடிப்பிற்கான முதலிரு வாரங்களையும் முற்றாக நடிப்பவர்களின் ஒத்திகைக்காய் ஒதுக்குவதாகவும், அந்தக்காலப்பகுதியில் ஒவ்வொரு பாத்திரங்களையும் தாங்கள் இயல்புபடி நடிக்கச் செய்து அதிலிருந்து தனது பாத்திரங்களை இன்னும் செழுமைப்படுத்துவதாகவும் அகின் அதில் கூறுகின்றார். அத்துடன் இவ்வாறான வாரக்கணக்கான ஒத்திகையின்போது நடிப்பவர்கள் எல்லோரும் தங்களுக்குள்ளேயே அறிமுகமாகிவிடுவதால் ஒருவரையொருவர் விளங்கி நடிப்பது இலகுவாகவாகும், பாத்திரப்படைப்புகள் இயல்பாகவும் வரக்கூடியதாகவும் இருக்கிறதென்கிறார். 1973 பிறந்த அகில் திரைப்படங்களுக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றிருப்பதுடன், நடப்பு அரசியல் குறித்த பிரக்ஞையுமுடையவர். ஜோர்ஜ் புஷ்ஷின் நிர்வாகம் இன்னொரு ஹிட்லரின் ஆட்சி என்று நாஸி சுவாஸ்ரிக்காவுடன் (Nazi swastika) ரீசேர்ட் ஒன்றை அணிந்ததற்காய் ஜேர்மனிய பொலிஸால் விசாரிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அகினின் வார்த்தைகளில் சொல்வதனால், "Bush's policy is comparable with that of the Third Reich. I think that under Bush, Hollywood has been making certain films at the request of the Pentagon to normalise things like torture and Guantanamo. I'm convinced the Bush administration wants a third world war. I think they're fascists."



புகைப்படங்கள் 1,2, 3: The Edge of Heavenல் இருந்து

புகைப்படம் 4: Faith Akin
Faith Akin பற்றிய தகவலுக்கு: http://www.spiegel.de/international/0,1518,430542,00.html

மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்...

Friday, January 30, 2009

கடுங்குளிரிலும் ரொறோண்டோத் தெருக்களில் கூடிய கூட்டம்...

நடந்த நிகழ்வை காணொளியில் பார்க்க...

நிகழ்வு மனிதச்சங்கிலியாய் ஆரம்பித்து இறுதியில் ரொரண்டோ பெரும்பாகத்தின் முக்கிய போக்குவரத்துப்பாதையான yonge-bloor-university பாதை மக்கள் திரளால் முற்றாக மூடப்பட்டு, உள்ளூர் ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் - காலம் கடந்ததாயினும்- முக்கிய breaking news ஆகக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

As Many As 10,000 Protestors Create Commuter Chaos At Union Station During Afternoon Rush Hour

Friday January 30, 2009

CityNews.ca Staff

It has been an extraordinary day in the downtown core, a spectacle rarely if ever seen in this city. The cause: a day long downtown-wide massive protest by Canadian Sri Lankans, designed to attract attention to what they call acts of genocide in their homeland.
The human chain demonstration stretched from Bloor St. to University Ave. and Yonge St. and snaked all the way to Front.
But it was at that final destination that the crowds truly tried to make their point. As many 5-10,000 people wound up at Union Station, causing such an overwhelming sea of humanity that police were forced to close off the roadway for a time.
Mounted units, traffic cops and even the RIDE spotcheck command post were all called into action while chaos prevailed around the transit hub. The assembled multitude was peaceful, a remarkable achievement for such a large gathering, but it was inside the typical transit hubs where chaos reigned.
Police were able to finally open a small corridor to allow pedestrians and travellers to get through.
A man named George was one of those caught in the gridlock while attending a library convention downtown. He didn't seem to mind the inconvenience it caused. "I'll support the protesters, it's a good cause," he confirms. "But, you know what? There's thousands of people that have been affected."
But while police did their best to clear the way, when commuters finally did get down to Union Station it was hardly clear sailing. It was so crowded in the subway the line waiting to get in stretched all the way back to the area where passengers pay their fares.
And it was almost as bad uptown. Busy Bloor Station was so filled with passengers, the TTC was forced to stop all its trains before they entered the station to ensure safety.
It was a long day for authorities, who were hopping since the protest began earlier in the morning. Drivers were also affected, as the protestors kept to the sidewalk but provided an endless visual distraction for blocks.
It was an amazing sight, all the more so because it stayed so peaceful. "There are probably thousands, tens of thousands of Tamils here all trying to bring some attention to their cause," confirmed CityNews reporter Francis D'Souza at the height of the madness. "You can see them on the street corners here trying to hand out pamphlets just to let people know what they're actually talking about."
He believes they more than achieved their aims. "Their message is 'stop Tamil genocide in Sri Lanka.' If that's what they wanted, that's what they're getting right now. Because the hundreds of thousands of commuters who use Union Station every day are trying to get through and listening to their message."
How busy was it at the height of the protest? D'Souza reveals he was forced to get out of the CityNews vehicle and walk to the scene. His cameraman and all his equipment didn't get through the gridlock until 25 minutes later.
The protestors had promised their massive march would end at 6pm. True to their word, as the dinner hour struck, the crowds slowly began to disperse and left the area, creating yet more headaches for an already swollen public transit system.
Thanks: http://www.citynews.ca/news/news_31530.aspx



















இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில்

Wednesday, January 28, 2009

In English: எழுதிய‌வ‌ரின் பெய‌ர் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. இந்த‌க்குறிப்பு ம‌ட்டும் உள்ள‌து - The author is a photographer and aid worker who left the Vanni in September 2008
(தேவை க‌ருதி அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாய் மொழிபெய‌ர்த்த‌து. த‌மிழ் மொழிபெய‌ர்ப்பில் தெரிய‌க்கூடிய‌ த‌வ‌றுக‌ளுக்காய் ஆங்கில‌த்தில் எழுதிய‌வ‌ரிட‌ம் முன்கூட்டிய‌ ம‌ன்னிப்பு. ~டிசே)

கைவிட‌ப்ப‌ட்ட‌ வீடுக‌ள், சிதைக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வு, இட‌ம்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ள். இல‌ங்கை இராணுவ‌த்துக்கும், விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் ந‌டைபெறும் உக்கிர‌மான‌ போரின் கோர‌த்தை விப‌ரிக்கின்றார் உத‌விப்ப‌ணி செய்யும் ஒருவ‌ர்.

"வ‌ன்னியிலுள்ள‌ இலுப்பைக்க‌ட‌வையில் என‌து வீடு இருக்கிற‌து. தை இர‌ண்டாந்திக‌தி, 2007 காலை ஒன்ப‌து மணிக்கு கிபீர் (இல‌ங்கை விமான‌ப்ப‌டையின் ஜெட்ஸ்) வ‌ந்த‌ன‌. அவை எங்க‌ள் கிராம‌த்தில் குண்டுக‌ளை வீசின‌, நில‌ம் அதிர்ந்துகொண்டிருக்க‌, குண்டின் சித‌ற‌ல்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ற‌க்க‌த்தொட‌ங்கின‌. ப‌ல‌ ம‌க்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்ட‌து போல‌வே நானும் காய‌ப்ப‌ட்டேன். இவ்வாறே நான் என‌து காலை இழ‌ந்தேன்."

ஸ்ரெல்லா, செந்த‌ளிர்ப்பான‌ முக‌மும் வனப்புமுள்ள 13 வ‌ய‌துடைய‌வ‌ள். நான் அவ‌ளை ஆவ‌ணி 05, 2008ல் ம‌ணிய‌ங்குள‌த்தில் ச‌ந்தித்தேன்; இல‌ங்கை வ‌ட‌க்கிலுள்ள‌ வ‌ன்னியில் இருக்கும் ம‌ணிய‌ங்குள‌ம் கிராம‌ம், அவ்வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌ம் வ‌ரை த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலிருந்த‌து. ஸ்ரெல்லா அவ‌ள‌து வாழ்வின் முக்கிய‌ க‌ட்ட‌த்திலிருந்தாள், அவ‌ள‌து ம‌ன‌மும் உட‌லும் வ‌ள‌ர்ச்சிய‌டைந்துகொண்டிருந்த‌து. ஆனால் அவ‌ளுக்கும் அவ‌ள‌து வய‌திலிருந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குமிடையில் பாரிய‌ வித்தியாச‌மிருந்த‌து; அவ‌ள் சாதார‌ண‌ ப‌தின்ம‌ வ‌ய‌துடைய‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்ப‌த‌ற்கு அப்பால் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளைச் ச‌ந்தித்திருந்தாள்.

"ஆனி 20, 2008ல், எங்க‌ள் புதிய‌ வீட்டுக்கு அண்மையாக‌ எறிக‌ணைக‌ள் விழ‌த்தொட‌ங்க‌, நாங்க‌ள் ப‌ய‌த்தில் வீட்டை விட்டு ஓடவேண்டியிருந்த‌து. எங்க‌ளால் ப‌ல‌ பொருட்க‌ளை(உடைமைக‌ளை) எடுக்க‌முடிய‌வில்லை, என‌து குடும்ப‌த்தின‌ரின‌தும் உற‌வின‌ர்க‌ளின‌தும் உத‌வியுட‌ன்- என்னுடைய‌ ஊன்றுகோலோடு- எவ்வ‌ள‌வு வேக‌மாக‌ ஓட‌முடியுமோ அவ்வ‌ள‌வு வேக‌மாய் நான் ஓட‌வேண்டியிருந்த‌து. நாங்க‌ள் இங்கே ஒருவார‌மாய் இருக்கின்றோம், ஆறு குடும்ப‌ங்க‌ள் இருப்ப‌த‌ற்கு ஒரேயொரு த‌ங்குமிட‌ம் ம‌ட்டுமேயிருக்கிற‌து. கிட்ட‌த்த‌ட்ட‌ 23 பேர். ம‌ல‌ச‌ல‌கூட‌ங்க‌ள் வ‌ச‌தியாய் இல்லை, என‌து (ஒற்றைக்)காலால் என‌க்கு இன்னும் க‌ஷ்ட‌மாயிருக்கிற‌து."

"என‌க்குத் தெரிய‌வில்லை, நாங்க‌ள் இந்த‌ இட‌த்திலிருந்து இனியும் இட‌ம்பெய‌ர்ந்தால் என்னால் எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும் என்று. என்னிட‌ம் செய‌ற்கைக்கால் இருக்கிறது, சைக்கிள் ஓட‌வும் முடியும். என்னிட‌ம் ஒரு சைக்கிள் இருந்திருந்தால், வாழ்க்கை இன்னும் இல‌குவாய் இருக்கும்."

"நிம்ம‌தியாக‌ப் ப‌டுக்க‌ ஒழுங்கான‌ த‌ங்குமிட‌ங்க‌ளையும், வ‌ச‌தியான‌ ம‌ல‌ச‌ல‌கூட‌ங்க‌ளையும் நாங்க‌ள் பெற‌முடியுமென்றால் என்னால் ம‌கிழ்ச்சியாக‌ இருக்க‌ முடியும்; ஆனால் இவ‌ற்றுக்க‌ப்பால், என‌க்கு ஒரு சைக்கிளே முக்கிய‌ தேவையாக‌ இருக்கிற‌து."

நான் ஸ்ரெல்லாவை மீண்டும் ஆவ‌ணி 20, 2008ல் ச‌ந்தித்தேன். அவ‌ள் தாங்க‌ள் த‌ங்கியிருந்த‌ ம‌ணிய‌ங்குள‌ம் வீடு இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் எப்ப‌டி இல‌ங்கை இராணுவ‌த்தால் தாக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை விப‌ரித்தாள்.

"மாலை 7.30 ம‌ணிய‌வ‌ள‌வில் எறிக‌ணைக‌ள் விழ‌த்தொட‌ங்க நாங்க‌ள் அவ‌ச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாக‌ 5 கிலோமீற்ற‌ர்க‌ள் தொலைவிலுள்ள‌ கோணாவில் பாட‌சாலைக்கு ஒடினோம். என்னுடைய‌ செய‌ற்கைக்காலால் என்னால் தொட‌ர்ந்து போக‌ முடிய‌வில்லையென்ப‌தால் எங்க‌ள் குடும்ப‌ம் அவ்விர‌வை இப்பாட‌சாலையிலேயே க‌ழிக்க‌வேண்டியிருந்த‌து. எங்க‌ள் குடும்ப‌ம் த‌ங்க‌ள‌து உடைமைக‌ளைக் காவிக்கொண்டு வ‌ந்தால் அவ‌ர்க‌ளால் என‌க்கு உத‌வ‌வும் முடிய‌வில்லை. என‌து குடும்ப‌ம் ஓடுவ‌தை நான் மெதுவாக்கிக் கொண்டிருந்த‌தால் என‌க்குச் ச‌ரியாக‌க் க‌வலையாக‌ இருந்த‌து. அந்த‌ இர‌வு எறிக‌ணை‌கள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்த‌தால் பெரும் ச‌த்த‌ங்க‌ளுடைய‌தாக‌ இருந்த‌து. ம‌ற்ற‌க் குடும்ப‌ங்க‌ளால் இன்னும் தூர‌த்துக்கு ஓட‌ முடிந்திருந்த‌து, ஆனால் என்னுடைய‌ காய‌ங்க‌ளினால் நாங்க‌ள் இங்கேயே த‌ங்க‌வேண்டியதாக‌ப் போய்விட்ட‌து."

"நாங்க‌ள் இப்போது இந்த‌ப் பாட‌சாலையில்(கோணாவில்) இருக்கின்றோம், என‌க்குத் திருப்ப‌வும் க‌ஷ்ட‌மாக் இருக்கிற‌து. இந்த‌ப் பாட‌சாலை என‌து ப‌ழைய‌ பாட‌சாலை போல‌வே இருக்கிற‌து, ஆனால் நாங்க‌ள் இதை ஒரு வீடாய்ப் பாவித்துக்கொண்டிருக்க, இந்த‌ப் ப‌க்க‌த்திலுள்ள‌ சிறுவ‌ர்க‌ள் க‌ஷ்ட‌ப்ப‌ட‌ப்போகின்றார்க‌ள். திரும்ப‌வும் எறிக‌ணைக‌ள் ஏவ‌ப்ப‌ட்டு இந்த‌ இட‌த்தை விட்டும் திரும்ப‌வும் ஓட‌வேண்டியிருக்குமோ என்று என‌க்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌மாயிருக்கிற‌து. ஒரு இட‌த்திலிருந்து இன்னொரு இட‌த்துக்கு ஓடியோடி என‌க்குச் ச‌ரியாக‌க் க‌ளைப்பாக‌வும், எந்த‌ இட‌மும் பாதுகாப்பாய் இருக்காது போல‌வும் தோன்றுகிற‌து."

"இல‌ங்கை அர‌சும், புலிக‌ளும் எங்க‌ளை அனும‌தித்தார்க‌ள் என்றால், இந்த‌ இட‌த்திலிருந்து த‌ப்பியோட‌ என‌க்கு மிக‌ச் ச‌ந்தோச‌மாக‌ இருக்கும். என‌க்கும் எங்க‌ள் குடும்ப‌த்துக்கும் நிம்ம‌தி வேண்டும், என்னால் இனியும் ஓட‌முடியாது. என‌க்கு இன்னும் கிபீர் விமான‌த்தாக்குத‌ல் குறித்த‌ கெட்ட‌ க‌ன‌வுக‌ள் வ‌ருகின்ற‌ன‌. கிபீர் விமான‌ங்க‌ளின் ச‌த்த‌த்தைக் கேட்கும்போது, நான் மிக‌வும் ப‌ய‌ப்பிடுகின்றேன்."

ஸ்ரெல்லா அந்த நேர‌த்தில் என்ன‌த்தையெல்லாம் அனுபவித்தாள் என்ப‌தை நான‌றியேன். இல‌ங்கை அர‌சு. 2009ம் ஆண்டு முடிவ‌த‌ற்குள் விடுத‌லைப் புலிக‌ளை அக‌ற்றி, விடுவிக்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ளில் ச‌னநாய‌க‌த்தை வ‌ழ‌ங்க‌ப்போவ‌தாய் சூளுரைத்திருக்கிற‌து. தை 02ல் இல‌ங்கை இராணுவ‌ம் முக்கிய‌ ந‌க‌ரான‌ கிளிநொச்சிக்குள் நுழைய‌, புலிக‌ள் எல்லா விலையையும் கொடுத்து ச‌ண்டை பிடித்துக்கொண்டிருக்க‌ நிலைமை இன்னும் மோச‌ம‌டைந்திருக்கிற‌து. இந்தத் த‌ருண‌த்தில் கேள்வி இருக்கிற‌து: வ‌ன்னியிலுள்ள‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு என்ன‌ நிக‌ழ‌ப்போகின்ற‌து?

இல‌ங்கை இராணுவ‌த்துக்கும், விடுத‌லைப் புலிக‌ளுக்கும் இடையில் 2002-08 வ‌ரையிருந்த‌ யுத்த‌ நிறுத்த‌த்திற்கு ந‌ன்றி கூறிய‌ப‌டி, வ‌ன்னியிலிருந்த‌ ச‌மூக‌ங்க‌ள் ந‌டைபெற்றுக்கொண்டிருந்த‌ அபிவிருத்தியில் ம‌கிழ்ச்சிய‌டைந்திருந்த‌ன‌. ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளிலும் வாழ்க்கைத் தேவைக‌ளிலும் முத‌லீடுசெய்து, த‌மிழ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குமான‌ சமாதான‌த்தையும் சுபீட்ச‌த்தையும் எதிர்பார்க்க‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். இந்த‌க் க‌ன‌வுக‌ள், இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஆறு வ‌ருட‌ யுத்த‌நிறுத்த‌ ஒப்ப‌ந்தத்தை உத்தியோக‌பூர்வ‌மாக‌ முடிவுக்குக் கொண்டுவ‌ந்த‌போது நொறுங்கி, த‌மிழ‌ர்க‌ள் மீண்டும் இட‌ப்பெய‌ர்வு, அத‌ன் பாதிப்புக்க‌ள், நிச்ச‌ய‌மின்மைக‌ள், பாதுகாப்பின்மை என்ப‌வ‌ற்றோடு ம‌ல்லுக்க‌ட்ட‌வேண்டியிருந்த‌து.

உள்நாட்டிலேயே அதிக‌ம் இட‌ம்பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ளை கொண்ட‌ ஒரு நாடாக‌ உல‌கில் இல‌ங்கை இருக்கிற‌து. நிலைமை மோச‌மாக‌த் தொட‌ங்க‌த் தொட‌ங்க‌, கிட்ட‌த்த‌ட்ட‌ 400 000 ம‌க்க‌ள் த‌ம் வீடுக‌ளை இழ‌ந்திருக்க்கின்றார்க‌ள், 70, 000 பேர் -எண்ணிக்கையில்- கால் நூற்றாண்டு உள்ளூர்ப் போரால் இற‌ந்துள்ளார்க‌ள்.

2008 முழுதும், வ‌ன்னியின் தென்மேற்கு மூலையிலிருந்து இல‌ங்கை இராணுவ‌ம் குறிப்பிட‌த்த‌க்க‌ ந‌க‌ர்வுக‌ளை மேற்கொண்டிருந்த‌து. இராணுவ‌ம் முன்னேற‌ முன்னேற‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளையும், விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும், மீன்பிடிக் கிராம‌ங்க‌ளையும் விட்டு, வ‌ருகின்ற‌ எறிக‌ணைக‌ளிலிருந்து த‌ப்புவ‌த‌ற்காய் ஓட‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். ம‌க்க‌ள் த‌ம‌து உடைமைக‌ளைக் க‌ட்டி, டிராக்ட‌ர்க‌ள் மூல‌மாகவும் ந‌ட‌ந்தும் பாதுகாப்பான‌ வ‌ட‌க்கு நோக்கி ந‌க‌ர‌த்தொட‌ங்கியிருந்த‌ன‌ர். விவ‌சாயிக‌ளும் மீன‌வ‌ர்க‌ளும் அந்நியோன்னிய‌மாய் வாழ்கின்ற‌ வ‌ன்னி இல‌ங்கையுள்ள‌ மிக‌வும் செழிப்பான‌ பகுதிக‌ளாகும். அவ‌ர்க‌ளுடைய‌ மிக‌ச்சொற்பமான‌ சேக‌ரிப்பை பாதுகாப்பான் இட‌ங்க‌ளுக்கு ந‌க‌ர்வ‌த‌ற்காய் டிராக்ட‌ர்க‌ளை வாட‌கையெடுப்ப‌த‌ற்கு செல‌வ‌ழிக்கின்றார்க‌ள். "ம‌ர‌ங்க‌ளுக்கு கீழே வாழும் எங்க‌ளில் ப‌ல‌ர் உரிய‌ த‌ங்குமிட‌ங்க‌ளைத் தேடிக்கொண்டிருக்கின்றோம். இந்த‌ நிலைமைக்குள் எப்ப‌டி என்னால் என‌து மாண‌வ‌ர்க‌ளைக் க‌வ‌னிக்க‌ முடியும்? அவ‌ர்க‌ள் வ‌ந்து ப‌டிப்ப‌த‌ற்கான‌ எந்த‌ப் பாட‌சாலையும் என்னிட‌ம் இல்லை; அந்த‌ மாண‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ர் எங்கேயிருக்கின்றார்க‌ள் என்ப‌தே தெரியாது' என்கிறார் ‍ கிளிநொச்சியிலிருந்து வ‌ந்த‌ ஆசிரிய‌ர், பிள்ளை.

இல‌ங்கை இராணுவ‌ம் இன்னும் வ‌ன்னிக்குள் உள்ந‌க‌ர‌, ப‌ல‌ ம‌க்க‌ள் க‌ளைத்தும், பிற‌ரிட‌ம் இர‌ந்தும், இன்னுமின்னும் இட‌ம் பெய‌ரத்த‌ள்ள‌ப்ப‌டுகின்றார்க‌ள். "நான் க‌ட‌ந்த‌ மூன்று வ‌ருட‌ங்க‌ளில் என‌து வீட்டிலிருந்து ஏழு முறைக‌ள் இட‌ம்பெய‌ர‌ச் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்றேன்" என்கிறார் ஜெய‌புர‌த்தைச் சேர்ந்த‌ ச‌ந்திரா. "2005ல், இல‌ங்கை இராணுவ‌ம் எங்க‌ள் வீட்டுக்கு அண்மையிலுள்ள‌ ப‌குதிக‌ளை நோக்கி எறிகணைக‌ளை ஏவும்வ‌ரை வீரப‌ன் க‌ண்ட‌லில் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌தொரு வாழ்க்கையிருந்த‌து. என‌து க‌ண‌வ‌ன் ஒரு மீன‌வ‌ராக‌ இருந்தார்; நாங்க‌ள் ந‌ன்றாக‌வே வாழ்ந்தோம். "

"எறிக‌ணைக‌ள் வீச‌ப்ப‌ட்டிருந்த‌ கால‌ப்ப‌குதியில், க‌ர்ப்பிணியாயிருந்த‌ நான் இர‌வினுள் பாதுகாப்பின் நிமித்த‌ம் ஓட‌வேண்டியிருந்த‌து. அதிலிருந்து ஒவ்வொரு ஆறு மாத‌மும் எறிக‌ணை வீச்சினால் இட‌ம்பெய‌ர்ந்து கொண்டேயிருக்கின்றேன். நான் இப்போது இந்த‌ ம‌ர‌த்தின் கீழே இருக்கின்றேன், இது ஏழாவ‌து முறை. ஓடியோடி (இட‌ம்பெய‌ர்ந்து பெய‌ர்ந்து) என‌க்கு மிக‌வும் க‌ளைப்பாக‌ இருக்கிற‌து. "

ம‌ன்னாரிலிருந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை நான் புர‌ட்டாதி 2008ல் ச‌ந்தித்த‌போது, அவ‌ர்க‌ள் ப‌ட்டினியுட‌னும் க‌ளைப்புட‌னும் ப‌ய‌த்துட‌னும் இருந்தார்க‌ள். குழ‌ந்தைக‌ள் ப‌ல‌ மாத‌ங்க‌ளாய் பாட‌சாலைக்குப் போக‌வில்லை, த‌ந்தைமார்க‌ள் த‌ம‌து தொழில்க‌ளை இழ‌ந்திருந்த‌ன‌ர், தாய்மார்க‌ள் பாதுகாப்பு, உண‌வு, ப‌டிப்பு என்ப‌வ‌ற்றை உரிய‌முறையில் வ‌ழ‌ங்க‌முடியாத‌ ப‌ல‌வேறு உண‌ர்ச்சிக‌ளோடு அல்லாடிக்கொண்டிருந்த‌ன‌ர். மிக‌ப்பெரும் த‌த்த‌ளிப்பு எல்லா ம‌க்க‌ளிடையும் காண‌க்கூடிய‌தாக‌ இருந்த‌து; இது 25 வ‌ருட‌ப்போரினால் வ‌ந்த‌ க‌டைசி அழுத்த‌மாயிருந்த‌து.

மேரி யாழ்ப்பாண‌த்தைப் பூர்வீக‌மாக‌க் கொண்ட‌வ‌ர், ஆனால் 1995ல் வ‌ன்னிக்கு வ‌ந்த‌வ‌ர். இவ‌ருக்கு இர‌ண்டு பிள்ளைக‌ள், க‌ண‌வ‌ர் ஒரு விவசாயி. அன்பும் அர‌வ‌ணைப்பும் உடைய‌ தாயான‌ மேரி இல‌ங்கையை விட்டு வெளியேறி புதிய‌ ஒரு வாழ்வை த‌ன‌து குடும்ப‌த்துட‌ன் வாழ‌ அவ‌திப்ப‌டுகின்றார். "இப்ப‌டியான‌ சூழ்நிலையில், ஒரு தாயாக‌ இருப்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌து" என்று என‌க்கு அவ‌ர் சொன்னார். " என‌க்கு இர‌ண்டு பிள்ளைக‌ள் இருக்கின்றார்க‌ள், ஒரு ப‌தினாறு வ‌ய‌து ம‌க‌னும் ப‌தின் மூன்று வ‌ய‌து ம‌க‌ளும். க‌ன‌க்க‌ பிர‌ச்சினைக‌ளை நான் எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து, என‌து பெரிய‌ ப‌ய‌ம் என்ன‌வென்றால், புலிக‌ளால் என‌து பிள்ளைக‌ள் க‌ட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளாகிவிடுவார்க‌ளோ என்ப‌து".

"என‌து ம‌க‌ள் இங்கே என்ன‌ ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌து என்ப‌தை அவ்வ‌ள‌வு அறிந்த‌வ‌ள் அல்ல‌, நானும் அவ‌ளுக்கு இவ‌ற்றைச் சொல்ல‌ முய‌ற்சிக்க‌வும் இல்லை. அவ‌ள‌து குழ‌ந்தைமையைச் ச‌ந்தோசிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் உள்ள‌ அவ‌ளை நான் குழ‌ப்ப‌ விரும்ப‌வில்லை. ஆனால் என‌து ம‌க‌னுக்கு எல்லாம் விள‌ங்கும். "

"அவ‌ன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வ‌ரும்போது, த‌ன‌க்கு மேல் வ‌குப்பிலுள்ள‌வ‌ர்க‌ள் ச‌ண்டைக்காய் கூட்டிச் செல்ல‌ப்ப‌டுகின்றார்க‌ள் என்ப‌தை அடிக்க‌டி கூறுவான். இது பிள்ளைக‌ளுக்கு மிக‌வும் க‌ஷ்ட‌மான‌து, அவ‌ர்க‌ள் த‌ம‌து பிற‌ந்தநாட்க‌ளைப் ப‌ற்றிக் க‌தைத்து, நேர‌ம் வ‌ரும்போது யார் முத‌லில் கூட்டிச் செல்ல‌ப்ப‌டுவார்க‌ள் என்ப‌தைக் க‌ண‌க்கிடுகின்றார்க‌ள். என‌து ம‌க‌ன் 1992ல் பிற‌ந்த‌வ‌ர், இப்போது, புலிக‌ள் 1991ல் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளைக் கூட்டிச்செல்கின்றார்க‌ள்....அடுத்த‌ வ‌ருட‌ம் 1992 ஆக‌ இருக்கும்.

"இன்னொரு பெரிய‌ பிர‌ச்சினை என்ன‌வென்றால், எங்க‌ள் ச‌ன‌த்துக்கிடையே இருக்கும் பொறாமை ம‌ன‌ப்பான்மை. ஒரு பிள்ளை வீட்டிலிருந்து (புலிக‌ளால்) கூட்டிச்செல்ல‌ப்ப‌டுகையில், அப்பிள்ளையின் பெற்றோர், புலிக‌ளிட‌ம், அந்த‌ச்சுற்றாட‌லிலுள்ள‌ வீடுக‌ளில் ஒளிந்திருக்கும் ம‌ற்றப்பிளைக‌ளைப‌ ப‌ற்றிய‌ விப‌ர‌ங்க‌ளைச் சொல்லுகின்றார்க‌ள். எங்க‌ள் ச‌ன‌த்துக்கிடையேயுள்ள‌ இவ்வாறான‌ பொறாமை ம‌ன‌ப்பான்மை, ஒவ்வொருத்த‌ரும் ஒவ்வொருத்த‌ரைப் ப‌ற்றியும் (கோள்மூட்ட‌) சொல்ல‌ வைக்கின்ற‌து. ஒரு பெண் பிள்ளை ஆறு மாத‌மாய் ஒரு ப‌ள்ள‌த்துக்குள் ப‌துங்கியிருந்த‌து என‌க்குத் தெரியும். ஒவ்வொரு இர‌வும் அவ‌ள‌து த‌ந்தை உண‌வும் நீரும் கொண்டுவ‌ந்து கொடுக்க‌ அவ‌ள் எல்லோருடைய‌ பார்வையிலிருந்தும் த‌ப்பியிருந்தாள். ஒரு வெயிலான‌ நாளில் அந்த‌ப்பிள்ளை கிண‌ற்றில் த‌ண்ணீர் குடித்துவிட்டு ப‌ள்ள‌த்துக்குள் திரும்பிப்போவ‌தை அய‌ல‌வ‌ர் ஒருவ‌ர் க‌ண்டிருக்கின்றார். அடுத்த‌ நாள் புலிக‌ள் வ‌ந்து அவ‌ளைப் ப‌ள்ள‌த்திலிருந்து கூட்டிச் சென்றிந்த‌ன‌ர். இவ்வாறான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எங்க‌ள் ச‌மூக‌ அமைப்பின் அடித்த‌ள‌ங்க‌ளை அழித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌. "

"என‌து பிள்ளைக‌ளும் கிபீருக்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌ப்பிடுகின‌ம். ஒருநாள் மாலை என‌து ம‌க‌ன் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வ‌ரும்போது, வான‌த்திலில் கிபீர் ச‌டுதியாக‌த் தோன்றி, எங்க‌ள் வீட்டுக்கு அருகிலிருந்த‌ புலிக‌ளின் முகாமிற்கு குண்டு வீசிய‌து. அந்த‌ச் ச‌த்த‌ம் மிக‌ப் பெரிய‌து, அந்த‌ச் ச‌த்த‌ம் என‌க்குள் நிறைய‌ப் ப‌ய‌த்தைக் கொடுத்த‌து. என‌து ம‌க‌ன் அந்த‌ப் ப‌க்க‌த்தாலை வ‌ந்துகொண்டிருக்கும் நேர‌ம் என்ப‌தை நான் உண‌ர்ந்து அவ‌னுக்கு சேத‌ம் ஏற்ப‌ட்டிருக்குமோ என்ற‌ ப‌ய‌த்தில் நான் க‌த்தினேன். ஓடிக்கொண்டே வ‌ந்த‌ நாங்க‌ள் இருவ‌ரும் பாதையின் இடைந‌டுவில் ச‌ந்தித்தோம். அவ‌னைக் க‌ண்ட‌போது என‌க்கு ப‌ய‌மாக‌வும், ம‌கிழ்ச்சியாக‌வும் இருந்த‌து. ஆனால் இப்போது அவ‌ன் கிபீருக்கு ச‌ரியாக‌ப் ப‌ய‌ந்துபோயிருக்கின்றான். வீட்டிலிருக்கும் எங்க‌ளுக்குக் கேட்க‌முன்ன‌ரே அவ‌னுக்கு அந்த‌ச் (கிபீர்) ச‌த்த‌ம் கேட்கிற‌து. உட‌னேயே ஓடிப்போய் வீட்டுக்குப் பின்ப‌க்க‌முள்ள‌ கானுக்குள் ப‌டுத்துக்கொள்கின்றான். இவ்வாறு மாலையில் ந‌ட‌க்கும்போது, அவ‌னால் ப‌டிக்க‌ முடியாதிருக்கின்ற‌து, என‌க்கும், இந்த‌த் தாக்க‌ம் அவ‌ன‌து ப‌டிப்பைக் குழ‌ப்பிவிடுமோ என்று ச‌ரியாக‌க் க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. "

"என‌து பிள்ளைக‌ள் ந‌ன்கு ப‌டிக்க‌வும் ந‌ல்ல‌ க‌ல்வியையும் பெற‌ விரும்புகின்றேன், ஆனால் கிபீரின் ச‌த்த‌த்தை காலையில் நாங்க‌ள் கேட்கும்போது, அவர்க‌ள் பாட‌சாலைக்குப் போவ‌தை விரும்ப‌வில்லை. என‌து பிள்ளைக‌ள் என்றோ ஒரு நாள் கொல்ல‌ப்ப‌ட‌ப்போகின்றார்க‌ள் என்று வ‌ர‌வ‌ர‌ என‌க்குச் ச‌ரியாக‌ப் ப‌ய‌மாயிருக்கிற‌து...ஆக‌வேதான் அவ‌ர்க‌ளை வீட்டிலிருக்க‌ச் சொல்கின்றேன். என‌து பய‌த்தின் கார‌ண‌மாக‌ சில‌வேளைக‌ளில் அவ‌ர்க‌ள் வார‌த்தில் ஒருநாளோ இர‌ண்டு நாட்க‌ளோ பாட‌சாலைக்குப் போவ‌தைத் த‌வ‌ற‌விடுகின்றார்க‌ள். நானொரு கெட்ட‌ அம்மாவாக‌ ஆகிக்கொண்டிருப்ப‌தாய் இது என்னைச் ச‌ரியாய்க் க‌வ‌லைப்ப‌டுத்துகிற‌து. ஆனால் நான் என‌து பிள்ளைக‌ளைப் பாதுகாக்க‌ முய‌ற்சித்துக்கொண்டிருக்கின்றேன்."

2008 ஆண்டுமுழுதும், இல‌ங்கை இராணுவ‌ம் மேற்குக்க‌ரையோர‌த்தால் கிளிநொச்சி நோக்கியும், யாழ் தீப‌க‌ற்ப‌க‌த்தையும் மிகுதி நாட்டையும் இணைக்கும் கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ ஆனையிற‌வு நோக்கியும் முன்னேறிய‌ப‌டி இருந்த‌து. பொதும‌க்க‌ள் மீண்டும் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலிருக்கும் புதுக்குடியிருப்பு நோக்கி இட‌ம்பெய‌ர‌த்தொட‌ங்கின‌ர். இந்த‌க்க‌ண‌ம்வ‌ரை, இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ள் மிக‌வும் மோச‌மான‌ நிலையில் வாழ்ந்திருந்தாலும், கிளிநொச்சியிலும், ஆனையிற‌விலும் ந‌ட‌ந்த‌ ச‌ண்டைக‌ளிலிருந்து காப்பாற்ற‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள்.

செஞ்சிலுவை ச‌ங்க‌ம் த‌விர்ந்த‌ அனைத்து உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ளும், ஐப்ப‌சி 16, 2008ல் இருந்து வெளியேற்ற‌ப்ப‌ட்டு, அர‌சாங்க‌த்தின் ந‌க‌ரான‌ வ‌வுனியாவில் த‌ங்க‌வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். இம்ம‌க்க‌ளை அவ‌ர்க‌ளுக்கு உத‌வி தேவைப்ப‌டுகின்ற‌ முக்கிய‌ த‌ருண‌த்தில் விட்டுவிட்டு வ‌ந்த‌து என்னுடைய‌ வாழ்வில் மிக‌ வ‌லியைத் த‌ந்த‌ அனுப‌வ‌மாகும். அத்தியாவ‌சிய‌ தேவைக‌ள் கிடைக்காத‌ நிலையில், எறிக‌ணைக‌ளின‌தும், விமான‌ங்க‌ளின் தாக்குத‌ல்க‌ளுக்கிடையில், நான் என‌து ந‌ண்ப‌ர்க‌ளையும், கூட‌ வேலை செய்த‌வ‌ர்க‌ளையும் வ‌ன்முறைக‌ளுக்கிடையிலும், ந‌ம்பிக்கையீன‌ங்க‌ளுக்கிடையிலும் விட்டு வெளியேற‌ வேண்டியிருந்த‌து. ஐப்ப‌சி மாத‌த்திலிருந்து, உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்கள் ஒவ்வொரு நாளும் உண‌வையும் த‌ங்குமிட‌ங்க‌ளையும், அத்தியாவ‌சிய‌மான‌ ம‌ருந்துக‌ளையும் ம‌க்க‌ளுக்கு கொண்டுசெல்வ‌த‌ற்கு திணறிக் கொண்டிருக்க‌ வேண்டியிருக்கின்ற‌து. ப‌ல‌வேறு வ‌கையான‌ அமைப்புக்க‌ளின் தொட‌ர்ச்சியான‌ த‌டுத்துநிறுத்த‌ல்க‌ளால், அத்தியாவ‌சிய‌ பொருட்க‌ள் மிக‌வும் அவ‌சிய‌மாய்த் தேவைப்ப‌டுகின்ற‌ இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளுக்கு கொண்டுசெல்லுத‌ல் த‌டுக்க‌ப்ப‌டுகின்ற‌து. கார்த்திகை ப‌ருவ‌மழையின் கார‌ண‌மாக‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் ம‌ர‌ங்க‌ளைத் த‌ம‌து வீடுக‌ளாக்கி, இருக்கின்ற‌ சொற்ப உண‌வுப்பொருட்க‌ளைப் ப‌கிர்ந்த‌ப‌டி இருக்கின்றார்க‌ள். உத‌வி நிறுவ‌ன‌ங்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ ம‌லேரியாவையும், போசாக்கின்மையையும் த‌டுப்ப‌த‌ற்கு உதவி கேட்டுக்கொண்டிருக்கின்றார்க‌ள், ஆனால் விளைவு என்ன‌வோ சொற்ப‌மே.

தை 02, கிளிநொச்சி இல‌ங்கை இராணுவ‌த்திட‌ம் விழும்வ‌ரை, இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளால் புதுக்குடியிருப்பு ப‌குதியிலிருந்து ந‌க‌ர‌ முடியவில்லை. அவ‌ர்க‌ள் இந்து ச‌முத்திர‌த்தாலும், முன்னேறிக்கொண்டிருந்த‌ இராணுவ‌த்தாலும், விடுத‌லைப்புலிக‌ளாலும் சூழ‌ப்ப‌ட்டிருந்தார்க‌ள். புலிக‌ள் இட‌ம்பெய‌ர்வ‌த‌ற்கு த‌டுத்த‌தோடு, அவ‌ர்க‌ளைத் த‌ங்க‌ள் இய‌க்க‌த்திற்குச் சேர்ப்ப‌த‌ற்கும், வேலைக‌ளைச் செய்வ‌த‌ற்கும் ப‌ய‌ன்ப‌டுத்தின‌ர்.

கிளிநொச்சியின் கைப்ப‌ற்ற‌லோடும், சில‌ நாட்க‌ளின் பின்பான‌ ஆனையிற‌வின் வீழ்ச்சியோடும், புலிக‌ளுக்கு எதிர்கால‌ம் அவ்வ‌ளவு ந‌ல்ல‌தாக‌த் தென்ப‌ட‌வில்லை. வ‌ன்னியிலுள்ள‌ ம‌க்க‌ள் கூட்ட‌ம் த‌ற்ச‌ம‌ய‌ம் த‌ங்க‌ளுக்கேற்ற ப‌குதிக‌ளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்க‌ள். இல‌ங்கை இராணுவ‌ம் கிளிநொச்சியைத் த‌ம் வ‌ச‌மாக்கிய‌பின், இறுதி யுத்த‌ம் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டிலுள்ள‌ முல்லைத்தீவை நோக்கி ந‌க‌ர்ந்து கொண்டிருக்கின்ற‌து. மிக‌ப்பெரும் இட‌ம்பெய‌ர்ந்த‌ ச‌ன‌த்திர‌ள் கிளிநொச்சியிற்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலிருக்கிற‌து, ஆனால் இம்முறை அவ‌ர்க‌ளுக்கு ஒளிந்துகொள்ள‌ எந்த‌ இட‌மும் இல்லை.

"இந்த‌ மோச‌மான‌ நில‌வ‌ர‌ம் மிக‌ உச்ச‌த்தில் இருக்கிற‌து" என்றார் ச‌ர்வ‌தேச‌ அமெனெஸ்டி ஆய்வாள‌ரான‌ யோலென்டா போஸ்ட‌ர். " முல்லைத் தீவை நோக்கிய‌ அர‌சாங்க‌ ந‌ட‌வ‌டிக்கையினால் ச‌ண்டை உக்கிர‌ம‌டைய‌ க‌ட‌ந்த‌ வார‌ம் ம‌க்க‌ளுக்கு இழ‌ப்புக்க‌ள் அதிக‌ரித்திருக்கின்ற‌ன‌. த‌மிழ் புலிக‌ள் ம‌க்க‌ளைப் போக‌ விட‌வேண்டும், அதேவேளை அர‌சாங்க‌ம், பொறியில் அக‌ப்ப‌ட்டும், ப‌ல‌வேளைக‌ளில் ம‌ற‌க்க‌ப்ப‌ட்டும்விட்ட‌ ம‌க்க‌ளுக்கான‌ உட‌ன‌டி ம‌னிதாபிமான‌ உத‌விக‌ளைச் செய்ய‌ அனும‌திக்க‌ வேண்டும்."

ச‌ர்வ‌தேச‌ செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம், ம‌க்க‌ள் வெளியேறுவ‌த‌ற்கான‌ -உட‌ன்பாடுள்ள‌ பாதையில்லாத‌து குறித்து மிக‌வும் விச‌ன‌ப்ப‌ட்டுள்ள‌து, அத்துட‌ன் ம‌க்க‌ள் மிக‌ச்சிறிய‌தான‌ ப‌குதியில் செறிவாக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள், இத‌னால் அவ‌ர்க‌ள‌து வாழ்விட‌ நிலைமைக‌ளும், பாதுகாப்பும் மிக‌வும் க‌வ்லைக்கிட‌மாயுள்ளது, குறிப்பாய் தொற்றுநோய்க‌ள். ம‌க்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ள் (அர‌சாங்க‌த்தால்) த‌டுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாலும், , ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் உத‌வில்லாத‌தாலும், எவ்வித‌ பாதுகாப்புமின்றி இட‌ம்பெய‌ர்ந்த‌ ம‌க்க‌ளின் நிலைமை மிக‌ மோச‌மாய் இருக்கிற‌து.

வ‌ன்னி ம‌க்க‌ளுக்கு இல‌ங்கை இராணுவ‌ம் ப‌ற்றி மிகுந்த‌ பாதுகாப்பின்மையாக‌ இருப்ப‌தே உண்மை. த‌மிழ‌ர் மீதான‌ 25 வ‌ருட‌ ப‌டுகொலைக‌ளின் வ‌ர‌லாற்றில், இல‌ங்கை இராணுவ‌த்தின் தெளிவான‌ நோக்காக‌ புலிக‌ளை முற்றாக‌ அழிப்ப‌தாய் இருக்கையில் வ‌ன்னி ம‌க்க‌ள் மிகவும் அந்த‌ர‌மான‌ நிலையை எதிர்நோக்கியிருக்கின்றார்க‌ள். கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லோருடைய‌ குடும்ப‌த்திலும் யாரோ ஒருவ‌ர் விரும்பியோ அல்ல‌து க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டோ புலி உறுப்பின‌ராக‌ இருக்கின்றார். இந்த‌ நிலைமையால் தாங்க‌ள் புலிக‌ளின் அனுதாபிகளாக‌ பார்க்க‌ப்ப‌டுவோம் என்று இன்னும் அதிக‌மாய் இல‌ங்கை இராணுவ‌த்தின் மீது ப‌ய‌ப்பிடுகின்ற‌வ‌ர்க‌ளாய் ம‌க்க‌ள் இருக்கின்றார்க‌ள், அவ்வ‌ண்ண‌மே தாங்க‌ள் இல‌ங்கையின‌து பாதுகாப்பிற்கு அச்சுறுத்த‌லாய் இருப்ப‌தாய்ப் பார்க்க‌ப்ப‌டுவோம் என்ப‌தும்.

"இல‌ங்கை இராணுவ‌ம் இந்த‌ப் ப‌குதியிற்கு வ‌ருவ‌து குறித்து என‌க்கு மிக‌வும் ப‌ய‌மாயிருக்கிற‌து" என்று யாழ்ப்பாண‌த்தைச் சேர்ந்த‌ செல்வ‌ன் கூறினார். "என‌க்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் த‌ர‌ப்ப‌ட்டால் நான் வெளியேறுவேனா என்ப‌து என‌க்குச் ச‌ந்தேக‌மாய் இருக்கிற‌து. எங்க‌ள் கிராம‌த்திலிருக்கும் எல்லோரும் அர‌சாங்க‌த்தின் ப‌குதிக‌ளுக்கு செல்வார்க‌ளாயிருப்பின், நான் என‌து குடும்ப‌த்துட‌ன் போக‌க்கூடும். ஆனால் எங்க‌ள் எல்லோருக்கும் ச‌ரியாய்ப் ப‌ய‌மாயிருக்கிற‌து, நாங்க‌ள் ஒருபோதும் வெளியில்(அர‌ச‌ ப‌குதியில்) வாழ்ந்த‌தில்லை ஆதனால் அங்கே எப்ப‌டி(நிலைமை) இருக்கும் என்றும் தெரிய‌வில்லை."

வ‌ன்னி 'விடுவிக்க‌ப்ப‌டும்போது' வ‌ன்னியிலிருந்து ஆயிர‌க்க‌ண‌க்கில் ம‌க்க‌ள் வெள்ள‌மாய் வ‌ர‌க்கூடுமென்று வ‌வுனியாவில் அர‌சாங்க‌ம் (த‌டுப்பு) முகாங்க‌ளைத் த‌யார்ப‌டுத்தியுள்ள‌து. ஆனால் நாங்க‌ள் க‌ட‌ந்த‌கால‌த்தில் பார்க்கின்ற‌போது, இத்த‌கைய‌ 'ம‌னிதாபிமான‌ முகாங்க‌ள்' முக்கிய‌மான‌ சித்திர‌வ‌தைக் கூட‌ங்களாக‌வும், இம்முகாங்க‌ளிலிருந்து ம‌க்க‌ள் வெளியேற‌ ப‌ல‌ மாத‌ங்க‌ள் எடுக்க‌க்கூடிய‌தாக‌வும் இருந்திருக்கிற‌து. அத்துட‌ன் இங்கே த‌டுத்து வைக்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளுக்கு என்ன‌ காத்திருக்கிற‌து? வ‌ள‌மான‌ அவ‌ர்க‌ளின் வ‌ன்னி நில‌ங்க‌ள் இந்த‌ யுத்த‌த்தால் வெடிக்க‌ப்ப‌டாத‌ குண்டுக‌ளால் நிர‌ப்ப‌ப்ப‌ட்டுள்ள‌து. இன்ன‌மும் வெடிக்காத‌ எறிக‌ணைக‌ள் ப‌திந்துள்ள விவ‌சாய‌ நில‌ங்க‌ளையும், க‌ரையோர‌ப் ப‌குதிக‌ளையும் சுத்திக‌ரித்து விவசாயிக‌ள் திரும்பிப்போக‌ இன்னும் ப‌ல‌வ‌ருட‌ங்க‌ள் எடுக்கும்? என்ன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மீள்சீர‌மைப்புக்கும் மீள் குடியேற்ற‌ங்க‌ளுக்கும் செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌? இவையெல்லாம் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்டு கைய‌ளிக்கும்வ‌ரை இந்த‌ ம‌க்க‌ள் இவ்வாறான‌ த‌டுப்பு முகாங்க‌ளிலா காத்திருக்க‌வேண்டும்?

சுயாதீன‌ க‌ண்காணிப்பாள‌ர்க‌ள் வ‌ன்னியில் இல்லாத‌தால், இர‌ண்டு ப‌க்க‌மும் ஒழுங்க‌மைக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ர‌ப்புரையைச் செய்து வ‌ருகின்ற‌ன‌, இத‌னால் உத‌வி வ‌ழ‌ங்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ ஐப்ப‌சியிலிருந்து வெளியேறிய‌பின், வ‌ன்னியிலுள்ள‌ ம‌க்க‌ளின் உண்மையான‌ நில‌வ‌ர‌த்தை அறிவ‌து மிக‌வும் க‌டின‌மாயிருக்கிற‌து. அந்த‌ மாத‌ம் வ‌ரையும்(ஐப்ப‌சி) பார்த்த‌வ‌கையில் சொல்வ‌த‌னால், ம‌க்க‌ள் உண‌வு, உறைவிட‌ம், பாதுகாப்பு க‌ழிவிட‌ வ‌ச‌திக‌ள் மிக‌வும் குறைந்த‌ க‌ஷ்ட‌மான‌ வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்க‌ள்... ச‌ர்வ‌தேச‌ நிறுவ‌ன‌ங்க‌ளின் வெளியேற்ற‌த்துட‌ன், உத‌விப் பொருட்க‌ள் வ‌ழ‌ங்குவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்ட‌ன‌, ப‌ருவ‌ம‌ழையின் கார‌ண‌மாக‌வும், உக்கிர‌மான‌ இராணுவ‌ ந‌டவ‌டிக்கையாலும், நிலைமை மிக‌வும் மோச‌மாக‌ நினைத்துப் பார்க்காத‌ அள‌வுக்குப் போயிருக்கும்.


ந‌ன்றி:

Tehelka
த‌மிழில்: டிசே த‌மிழ‌ன்


புகைப்ப‌ட‌ம் 1: வீடும், பாதுகாப்பும் பிற‌வ‌ச‌திக‌ளும‌ற்று ம‌ர‌த்தின் கீழ் த‌ங்கியிருந்த‌ குடும்ப‌ம் ஒன்று.
புகைப்ப‌ட‌ம் 2: இல‌ங்கை இராணுவத்தின் எறிக‌ணைக‌ளால் அழிக்க‌ப்ப‌ட்ட‌ வீட்டின் எஞ்சிய‌பகுதியில் த‌னித்திருக்கும் சிறுவ‌ன்.
புகைப்ப‌ட‌ம் 3: ம‌னிதாபிமான‌ப் ப‌ணிக‌ளைச் செய்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளை இல‌ங்கை அர‌சாங்க‌ம் வ‌ன்னிக்குள இருந்து வெளியேற்ற‌போது, அவ‌ர்க‌ளைப் போக‌வேண்டாம் என்று ம‌க்க‌ள் ந‌ட‌த்திய‌ போராட்ட‌ம்.
(இப்ப‌ட‌ங்க‌ளும் மேலே க‌ட்டுரையை எழுதிய‌வ‌ராலேயே எடுக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌)

நாம் சொன்னால் ம‌ட்டுமே குழ‌ந்தைப் போராளி

Wednesday, January 21, 2009

-ம‌ற்றும் சில‌...


உல‌க‌த்திற்கு பொது நீதி என்ப‌து இனியில்லையென்று எப்போது நிரூபிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. அப்ப‌டியெனில் வ‌ள்ளுவ‌ர், அவ்வையார் 'அருளிய‌தெல்லாம்' பொது நீதிய‌ல்ல‌வா என்று ஒருவ‌ர் வினாவினால் அவ‌ர‌வ‌ர் விருப்பு அவ‌ர‌வ‌ர்க்கு உரிய‌தென‌ இப்போதைக்கு விடுவோம். பின் ந‌வீன‌த்துவ‌ம் கூட‌ இனி 'பொதுவான‌' என்ற‌ ஒன்று இல்லையென‌த்தான் கூறிக்கொண்டிருக்கின்ற‌து. பின் ந‌வீன‌த்துவ‌ நில‌வ‌ர‌த்தை எவ‌ர் ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, இந்த‌ மேலைத்தேய‌ நாடுக‌ள் அப்ப‌டியே அர‌வ‌ணைத்துக்கொள்ள‌த் த‌யாராக‌ இருக்கிற‌து என்றுதான் கூற‌வேண்டும் - அதாவ‌து எதிர்ம‌றையான‌ ப‌க்க‌த்தில். குழ‌ந்தைப் போராளிக‌ளுக்காய் உல‌க‌ம் நீண்ட‌கால‌மாய் க‌ண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிற‌து. அவ்வாறு விழிநீர் சொரிப‌வ‌ர்க‌ளில் உண்மையான‌ அக்க‌றையோடு இருப்ப‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள்; அல்லாத‌வ‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள். போர்ச்சூழ‌லில் ஒருவ‌ர் ப‌தினெட்டு வ‌ய‌திற்குள் ஆயுத‌ங்க‌ளோடு இருப்பாராயின் அவ‌ரொரு குழ‌ந்தைப் போராளியென‌ 'பொதுவாக‌' அடையாள‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகின்ற‌து. ஆனால் அப்ப‌டியிருந்தால் ம‌ட்டும் ஒருவ‌ர் குழ‌ந்தைப் போராளியாக‌ இருந்துவிட‌ முடியாது. அத‌ற்குள்ளும் அர‌சிய‌ல் இருக்கிற‌து. அதாவ‌து இந்த‌ மேலைத்தேய‌ நாடுக‌ள் த‌ம‌து 'அளவீடுக‌ளால்' அளந்து த‌ம‌க்கு எந்த‌ப் பாத‌க‌மும் இல்லாது இருக்கிற‌து என்று நினைத்து ஒரு சான்றித‌ழை வ‌ழ‌ங்கினால் ம‌ட்டுமே ஒருவ‌ர் குழ‌ந்தைப் போராளியாக‌ முடியும்.

இன்னும் எளிதாக‌ச் சொல்வ‌து ஆனால், குழ‌ந்தைப் போராளிக‌ள் (சில‌வேளைக‌ளில் இராணுவ‌ம்) என்ப‌து இப்போராளிக‌ள் யாருட‌ன் மோதிக்கொண்டிருக்கின்றார்க‌ள் என்ப‌தைப் பொறுத்து வித்தியாச‌ப்ப‌டும். உதார‌ண‌மாக‌ இல‌ங்கை, ஆபிரிக்காக் க‌ண்ட‌த்தில் ப‌ல‌ நாடுக‌ள் போன்ற‌வ‌ற்றில் உங்க‌ளுக்குள்ளேயே நீங்க‌ள் அடிப‌ட்டுப் ப‌ல‌ரைப் போட்டுத்த‌ள்ளினால் நீங்க‌ள் குழ‌ந்தைப் போராளிக‌ள் என‌ முழும‌ன‌தாக‌ ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டுவீர்க‌ள். ஆனால் அதேச‌ம‌ய‌ம் நீங்க‌ள் -ப‌தினெட்டு வ‌ய‌திற்குள் இருந்து- அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேச‌ங்க‌ளின் ப‌டைக‌ளோடு போரிட்டுக் கொண்டிருந்தீர்க‌ள் என்றால் நீங்க‌ள் குழ‌ந்தைப் போராளிக‌ள‌ல்ல‌; தீவிர‌வாதிக‌ளே.

அண்மைய‌ வ‌ருட‌ங்க‌ளில் நிறைய‌ குழ‌ந்தைப் போராளிக‌ளின் சுய‌வ‌ர‌லாற்று ம‌ற்றும் புனைவு க‌ல‌ந்த‌ புதின‌ங்க‌ள் வெளிவ‌ந்திருக்கின்ற‌ன‌. புதின‌ங்க‌ள் வ‌ருவ‌த‌ன் ப‌திப்ப‌க‌/பூகோள‌ அர‌சிய‌ல்க‌ளுக்கு அப்பால் குழ‌ந்தைப் போராளியாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்காய் ம‌னிதாபிமான‌முள்ள எல்லோரின‌தும் ம‌ன‌ங்க‌ளும் க‌சிய‌த்தான் செய்கின்ற‌ன‌. ந‌ம்மைப் போன்ற‌ 'போர் துர‌த்த‌' பின்ன‌ங்கால் அடிப‌ட ஓடிவ‌ந்த‌வ‌ர்க‌ளைவிட‌, அத‌ன் சாய‌லை அறியாத‌ இந்தியா போன்ற‌ 'ச‌ன‌நாய‌க‌' நாடுக‌ளில் வாழ்ப‌வ‌ர்க‌ள், மேற்க‌த்தைய‌ நாடுக‌ளில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌ அதிகார‌ங்க‌ளிலுள்ள‌வ‌ர்க‌ள் இன்னும் அதிக‌மாய் குழ‌ந்தைப் போராளிக‌ள் ப‌ற்றி உச்சுக்கொட்டுவ‌தை நாம் அவ‌தானித்துக் கொண்டுதானிருக்கின்றோம். அது த‌வ‌றுமில்லை. ஆனால் இவ‌ர்க‌ளின் முக‌மூடிக‌ள் எப்போது கிழிகிற‌து என்றால், இதே குழ‌ந்தைப் போராளிக‌ள் பாதிப்பை இவ‌ர்க‌ள‌து வீட்டு வாச‌லில் செய்யும்போதுதான்...எல்லாம் கிழிந்து கோவ‌ணந்தெரிகிற‌து அல்ல‌து இதுவ‌ரை பேசிய‌ ம‌னிதவுரிமைக‌ளைக் கைவிட்டு நிர்வாண‌மாய் நிற்ப‌வ‌ர்க‌ளாய் ஆகிப்போகின்றார்க‌ள்.

2001ல் அமெரிக்காவும் அத‌ன் நேச‌ப‌டைக‌ளும் (க‌ன‌டா உட்ப‌ட‌) ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கின்ற‌ன‌. 2002ல் ரொர‌ண்டோவில் பிற‌ந்த‌ (ஆக‌வே அவ‌ரொரு க‌னேடிய‌ர்) ஒமார் க‌டார் (Omar Khadr ) 2002ல் அமெரிக்க‌ப் ப‌டைக‌ளுக்குக் கிர‌னைட் எறிந்த‌ற்காய் கைது செய்ய‌ப்ப‌டுகின்றார். அப்போது அவ‌ருக்கு வ‌ய‌து ப‌தினைந்து. கிர‌னைட் வெடித்த‌தில் அமெரிக்க‌ப்ப‌டையைச் சேர்ந்த‌வொருவ‌ர்(medic) காய‌ப்ப‌டுகின்றார். அமெரிக்காப் ப‌டை திருப்பிச் சுட்ட‌தில் ஒமாரிற்குக் காய‌ம் ஏற்ப‌ட்டு ஒரு க‌ண் பார்வையை இழ‌க்கின்றார். த‌லிபானில் இருந்த‌தாக‌க் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டு ஒமார் கியூபாவிலுள்ள‌ குவாண்டனாமோ (Guantánamo) சித்திர‌வ‌தைச் சிறைக்கூட‌த்திற்கு அனுப்ப‌டுகின்றார். மீண்டும் க‌வ‌னிக்க‌, ஒமாருக்கு 15 வ‌ய‌து. ஆனால் அது ப‌ற்றி எந்த‌க் க‌வ‌னமும் எடுக்க‌ப்ப‌டாது அவ‌ர் பெரிய‌வ‌ர்க‌ளுட‌னான‌ சிறையிலே அடைக்க‌ப்ப‌டுகின்றார். இங்கேதான் ந‌ம‌க்கு ம‌னிதவுரிமைக‌ள் போதிக்கும் மேலைத்தேய‌த்தின் உண்மை முக‌ம் ப‌ல்லிளிக்கிற‌து. சாதார‌ண‌மாக‌ க‌ன‌டா உள்ளிட்ட‌ நாடுக‌ளில் ஒருவ‌ர் ப‌தினெட்டு வ‌யதிற்குள் குற்ற‌ங்க‌ள் செய்திருந்தால் (கொலையே செய்திருந்தால்கூட‌) அவ‌ர்க‌ளின் பெய‌ர்க‌ளையே இன்ன‌பிற‌ விட‌ய‌ங்க‌ளையோ பொதுவில் வைக்க‌ப்ப‌ட‌க்கூடாது என்றொரு ச‌ட்ட‌ம் இருக்கிற‌து. அவையெல்லாம் ஒமார் விவ‌கார‌த்தில் மீற‌ப்ப‌ட்ட‌து ஒரு புற‌ம் இருக்க‌ட்டும்; ஆனால் ஆபிரிக்காக் க‌ண்ட‌ங்க‌ளில் அவ‌ன் இவ‌னைப் போட்டான், அவ‌ளை இவ‌ன் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ந்தான் என்றெல்லாம் ந‌ட‌ந்த‌தை எழுதும்போது, என்ன‌தான் செய்திருந்தாலும் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைப் போராளிக‌ள் அவ‌ர்க‌ளை ம‌ன்னிக்க‌வேண்டும் என்கின்ற‌ க‌ன்டா, அமெரிக்கா உள்ளிட்ட‌ மேலைத்தேய‌ம் ஒமார் விவ‌கார‌த்தில் ஏன் வாய்க்குள் கொழுக்க‌ட்டையை வைத்து உள்ளே த‌ள்ளவும் முடியாம‌ல் வெளியே துப்ப‌வும் முடியாது ம‌வுனித்திருக்கிற‌து என்ப‌தைப் பார்க்க‌வேண்டும்.


இன்று கிட்ட‌த்த‌ட்ட‌ ஒமார் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டு ஏறேற‌க்குறைய‌ 6 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலே ஆகிவிட்ட‌ன‌. ஐ.நா ச‌பை வ‌ரைய‌றுக்கிற‌ சிறுவ‌ர் சீர்திருந்த்த‌ப்ப‌ள்ளிக்குக்கூட‌ கூட‌ ஒமாரை அனுப்பாது வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுட‌ன் சிறைக்கூட‌த்திற்கு ஒன்றாக‌ச் சேர்ந்து குவாண்டனாமோ சிறைக்கூட‌த்தில் அமெரிக்காவும் க‌ன‌டாவும் த‌ள்ளிய‌தை நாம் யோசித்துப்பார்க்க‌வேண்டும். க‌ன‌டாவில் சில‌வேளைக‌ளில் கொலைக‌ளைச் செய்த‌வ‌ர்க‌ள் கூட‌, 7 வ‌ருட‌த்த‌ண‌டனைக்குப் பின், குறிப்பிட்ட‌ வ‌ரைய‌றைக‌ளுட‌ன் (conditions) வெளியே வாழ்வ‌த‌ற்கு அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கும்போது, ஒமார் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு என்ன‌ நீதியை இந்த‌க் க‌னேடிய‌ அர‌சு வ‌ழ‌ங்க‌ப்போகின்ற‌து? க‌ன‌டாவிலுள்ள‌ ம‌னித‌வுரிமை ஆர்வ‌ல‌ர்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ -க‌ன‌டாப் பிர‌ஜாவுரிமையுள்ள‌- ஒமார் குவாண்டனாமோ சிறையிலிருந்து, க‌ன‌டாவுக்கு அனுப்ப‌ப்ப‌ட்டு நேர்மையான‌ முறையில் அவ‌ர‌து வ‌ழ‌க்கு க‌ன‌டா நீதிம‌ன்ற‌த்தில் ந‌ட‌த்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்துக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். ஆயிர‌த்திற்கு மேற்ப‌ட்ட‌ பால‌ஸ்தீனிய‌ர்க‌ள் அநியாய‌மாக‌க் கொல்ல‌ப்ப‌ட்டும் கூட‌, ஒரு சிறு அறிக்கையைக் கூட‌ ஒப்புக்காய் வெளியிடாது க‌ள்ள‌ ம‌வுன‌ம் சாதிக்கும் ந‌ம‌து அதிவ‌ண‌க்க‌த்திற்குரிய‌ பிர‌த‌ம‌ர் ஹார்ப்ப‌ர் இதுகுறித்து ஏதாவ‌து செய்வார் என்று எதிர்பார்ப்ப‌தைவிட‌, என்றேனும் ஒருநாள் புத‌னில் உயிரின‌ம் தோன்றி எல்லா ம‌னித‌ர்க‌ளின‌தும் உரிமைக‌ளைச் ச‌ரிநிக‌ராக‌ ம‌திக்கும் என்று ந‌ம்புவ‌து நியாய‌மான‌து.


இல‌ங்கையில் குழ‌ந்தைப் போராளிக‌ள் ப‌ற்றி மேற்குலக‌ம் க‌வ‌லைப்ப‌ட்டுக்கொண்டிருந்த‌போது, சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஒரு சிங்க‌ள‌ப் பேராசிரிய‌ர், ந‌ண்ப‌ரொருவ‌ருக்குக் சுட்டிக்காட்டியிருந்தார்... குழ‌ந்தைப் போராளிக‌ளை விட‌ அதிக‌மாய் குழ‌ந்தைப் பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் நீண்ட‌கால‌மாக‌ இல‌ங்கையில் இருந்துவ‌ருகின்றார்க‌ள், அதையிட்டேன் மேற்குலக‌ம் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை என்று. மேலும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளாய் இந்த‌க் குழ‌ந்தைப் பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ளைத் தேடிவ‌ருவ‌து அதிக‌ம் யார் என்று ஊகிப்ப‌து ந‌ம‌க்கு அவ்வ‌ள‌வு க‌டின‌முமில்லை.

இஃது வெளியே வ‌ந்த‌ ஒரு ஒமாரைப் ப‌ற்றிய‌ க‌தை. வெளியே வ‌ராத‌ நூற்றுக்க‌ண‌க்கான‌ 'குழ‌ந்தைப்போராளிக‌ள்' ஒமார்க‌ளின் க‌தைக‌ள் நிக‌ழ்கால‌த்தில் ம‌றைக்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌தை நாம் நினைவிலிருத்திக் கொள்ள‌வேண்டும். ஆக‌, இன்று ந‌ம‌க்குக் க‌ற்பிக்க‌ப்ப‌டுகின்ற‌ 'ம‌னிதாபிமான‌ம்' என‌ப‌து கூட‌ பெருங்க‌தையாட‌லென‌ பின் ந‌வீன‌த்துவ‌ம் வ‌ரைய‌றுப்ப‌து ப‌ற்றி யோசித்துப் பார்ப்ப‌தில் த‌வ‌றேதும் இருக்காது போல‌த்தான் தோன்றுகின்ற‌து.

............

க‌ன‌டாவிலுள்ள‌ ச‌ட்ட‌ங்க‌ள் ம‌ற்றும் ம‌னித‌வுரிமைக‌ள் ச‌ம்ப‌ந்த‌மாய் ஒரு பாட‌ம் வ‌ளாக‌த்தில் எடுத்துக்கொண்டிருக்கும் ந‌ண்ப‌ரொருவ‌ர் த‌ம‌து பாட‌ப்புத்த‌க‌த்திலுள்ள ஒரு விட‌ய‌த்தை என்னோடு ப‌கிர்ந்துகொண்டிருந்தார். வ‌ழ‌க்கின் விப‌ர‌ம் இதுதான்...ப‌த்ம‌நாத‌ன் என்ப‌வ‌ர் க‌ன‌டாவிற்கு வ‌ந்து அக‌தி அடைக்க‌ல‌ம் கேட்டு அவ‌ருக்கு அடைக்க‌ல‌ம் கொடுக்க‌லாமா அல்ல‌து வேண்டாமா என்று வ‌ழ‌க்கு நீதிம‌ன்ற‌த்தில் நிலுவையிலிருந்த‌ கால‌ப்ப‌குதியில் அவ‌ர் பெரும‌திப்புள்ள‌ போதைப் பொருட்க‌ளைக் க‌ட‌த்திப் பிடிப‌டுகின்றார். ப‌த்ம‌நாத‌ன் போதைம‌ருந்து க‌ட‌த்த‌ல் தொட‌ர்பான‌ வ‌ழ‌க்கில் த‌ன‌து குற்ற‌த்தை ஒப்புக்கொண்டு அவ‌ருக்கு 7 வ‌ருட‌ங்க‌ள் சிறைக்குள்ளிருக்க‌ த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகின்ற‌து. வ‌ழ‌க்கு முடிந்து வெளியே வ‌ரும் ப‌த்ம‌நாத‌ன், க‌ன‌டா நீதிம‌ன்ற‌த்தில் த‌ன்னையொரு அக‌தியாக‌ அடைக்க‌லம் த‌ரும்ப‌டி கேட்கின்றார். நீதிமன்ற‌ம் -அவ‌ர் போதைம‌ருந்து க‌ட‌த்திய‌ன் கார‌ண‌மாக‌- அவ‌ர‌து அக‌தி அடைக்க‌ல‌ வ‌ழ‌க்கை நிராக‌ரிக்கின்ற‌து. ஆனால் ப‌த்ம‌நாத‌ன் உச்ச‌ நீதிம‌ன்ற‌த்தில் மேல் முறையீடு செய்யும்போது ப‌த்ம‌நாத‌னுக்கு அக‌தி அடைக்க‌லம் க‌ன‌டாவில் கொடுக்க‌ப்ப‌டுகின்ற‌து. இவ்வாறு உச்ச‌நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பு வ‌ழ‌ங்கிய‌து ச‌ரியா பிழையா என்ற‌ க‌ல‌ந்துரையாட‌ல் ந‌ண்ப‌ரின் வ‌குப்பில் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. வ‌குப்பு முடிந்து ந‌ண்ப‌ர் என்னிட‌ம் வ‌ந்து இத்தீர்ப்புக் குறித்து நீ என்ன‌ நினைக்கிறாய்? என்றார். ப‌த்ம‌நாத‌ன் த‌ன‌து குற்ற‌த்திற்காய் ஏழுவ‌ருட‌ங்க‌ள் த‌ண்ட‌னையை அனுப‌வித்துவிட்டார் என‌வே அவ‌ருக்கு அக‌தி அடைக்க‌லம் கொடுத்த‌தில் த‌வ‌றேதுமில்லை என்றேன். ந‌ண்ப‌ருக்கு என‌து க‌ருத்தில் அவ்வ‌ள‌வு உட‌ன்பாடில்லைப் போலும். என்றாலும் அவ‌ர்(ப‌த்ம‌நாத‌ன்) போதைம‌ருந்து க‌ட‌த்தியிருக்கின்றார்... என்றார்.


போதைம‌ருந்து க‌ட‌த்துவ‌து குற்ற‌ந்தான் அவ‌ர்க‌ள் அதைத் தெரிந்துதான் க‌ட‌த்துகின்றார்க‌ள்...அதை வாங்கிப்பாவிப்ப‌வ‌ர்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ பொருளைத்தான் பாவிக்கின்றோம் என்ற‌ புரித‌லுட‌ந்தான் பாவிக்கின்றார்க‌ள். ஆனால் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளை வைத்து சூதாட்ட‌ம் ந‌ட‌த்தும் (க‌ள்ள‌ க‌ண‌க்கு உட்ப‌ட‌ எல்லா த‌கிடுதித்த‌ங்க‌ளும் செய்யும்) பெருமுத‌லைக‌ள் என்ன‌ செய்கின்ற‌ன‌ என்று யோசித்தால் போதைம‌ருந்து க‌ட‌த்துப‌வ‌ர்க‌ள் எல்லாம் சிறிய‌வ‌ர்களாகிவிடுவார்க‌ள் (மைக்க‌ல் மூரின் The Corporation என்ற‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் நினைவுக்கு வ‌ருகின்ற‌து). இப்பெரு நிறுவ‌ன‌ங்க‌ள் அர‌சுக‌ளால் அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வை; அந்த‌ ந‌ம்பிக்கையில்தான் எல்லாத்த‌ர‌ப்பு ம‌க்க‌ளும் த‌ம‌து ப‌ண‌த்தை முத‌லீடு செய்கின்றார்க‌ள். ஆனால் பெருமுத‌லைக‌ளின் நிறுவ‌ன‌ங்க‌ள் திவாலாகினால் முத‌லிட்ட‌ சாதார‌ண‌ ம‌க்க‌ளுக்கு யார் ப‌தில் சொல்வார்க‌ள்? பெருமுத‌லைக‌ள் ஹாயாக‌ ஒரு வ‌ருட‌மோ அல்ல‌து இர‌ண்டு வ‌ருட‌மோ ஜெயிலுக்குள் இருந்துவிட்டு (கூட‌வே ஒரு புத்த‌க‌மும் எழுதிவிட்டு) வெளியே வ‌ந்துவிடுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ள் அல்ல‌வா போதை ம‌ருந்து க‌ட‌த்துப‌வ‌ர்க‌ளை விட‌ பெரும் ஆப‌த்தான‌வ‌ர்க‌ள். Nortel க‌ன‌டா த‌லைந‌க‌ரிலிருந்தே ஆப்பு வைத்த‌து ந‌ம் எல்லோருக்கும் தெரியும். (எப்போது ப‌டித்து முடிப்போம்; எப்போது நோர்ட்டெலுக்குள் நுழைய‌லாம் என்று காவிக்கொண்டிருந்த‌ என் க‌ன‌வு த‌க‌ர்ந்த‌தால் வ‌ந்த‌ எரிச்ச‌ல் அல்ல‌ இது :-) . Nortel சென்ற‌ வார‌ம் Bankruptcy File செய்திருக்கின்றார்க‌ள் என்ப‌து மேல‌திக‌ச் செய்தி.

ந‌ம்முடைய‌ பொதுப்புத்தியில் ப‌ல‌விட‌ய‌ங்க‌ள் சிறுவ‌ய‌திலிருந்தே திணிக்க‌ப்ப‌ட்டுக்கொண்டேயிருக்கின்ற‌ன‌. சில‌ருக்கு சாதி என்ற‌ அடையாளமே பெருமைக்குரிய‌ இன்னொரு பெய‌ர் போல‌... என்ற‌ மாதிரி -ப‌ல்வேறு விட‌ய‌ங்க‌ள்- ஒவ்வொருவ‌ரின் மூளையிலும் சாதார‌ண‌மாய்ப் ப‌திய‌ப்ப‌ட்டிருகின்ற‌ன‌. சில‌ நாடுக‌ளில் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ந்த‌வ‌ர்களுக்கு ம‌ர‌ண‌த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப‌ட்டிருக்கின்ற‌ன‌. இந்தியாவில் கூட‌ சில‌ருக்கு வ‌ட‌மாநில‌ங்க‌ளில் நிக‌ழ்ந்திருக்கின்ற‌ன‌. அவ்வாறாயின் நாமேன் இவ்வாறான‌ கேள்விக‌ளை ஒருபோதும் எழுப்புவ‌தில்லை...? இந்திய இராணுவ‌ம் காஷ்மீர் அஸாம், ம‌ணிப்பூர் உள்ளிட்ட‌ உள்ளூர் மாநில‌ங்க‌ளில் ம‌ட்டுமில்லை, 'அமைதிப்ப‌டைக‌ளாக‌' ஆக்கிர‌மித்த‌ இல‌ங்கை, சோமாலியா போன்ற‌ நாடுக‌ளில் கூட‌ எண்ண‌ற்ற‌ பாலிய‌ல் வ‌ன்புண‌ர்ச்சிக‌ளைச் செய்திருக்கின்ற‌ன‌ (இந்திய‌ இராணுவ‌ம் ம‌ட்டுமில்லை; உல‌கிலுள்ள‌ அநேக‌ இராணுவ‌ங்க‌ள் அப்ப‌டித்தான். க‌ன‌டிய இராணுவ‌ம் சோமாலியாவில் செய்திருக்கின்ற‌து.) . ஆக‌ சாதார‌ண ஒருவ‌ர் பாலிய‌ன் வ‌ன்புண‌ர்ச்சி செய்யும்போது என்ன‌ த‌ண்ட‌னைக்கு உள்ளாக்க‌ப்படுகின்றாரோ அதேபோன்று இராணுவ‌த்திலுள்ள‌வ‌ர்க‌ளும் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டு த‌ண்ட‌னை விதிக்கப்ப‌ட்டிருக்க‌வேண்டும‌ல்ல‌வா? ஆக‌க்குறைந்த‌து நீதிம‌ன்ற‌த்திலாவ‌து நிறுத்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ளா? வீர‌ப்ப‌னைத் தேடுகின்றோம் என்ற‌ பெய‌ரில் அதிர‌டிப்ப‌டை நிக‌ழ்த்திய‌ கொடூர‌ சித்திர‌வ‌தைக‌ளுக்கும், வ‌ன்புண‌ர்வுக‌ளுக்கும் ‍-வீர‌ப்ப‌ன் கொல்ல‌ப‌ட்ட‌ சில‌ ஆண்டுக‌ளாகிய‌ பின்னாவ‌து- எந்த‌ அதிர‌ப்ப‌டையின‌ராவ‌து நீதிம‌ன்ற‌த்தில் நிறுத்த‌ப்ப‌ட்டு த‌ண்ட‌னைக்குள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ளா? ஆனால் நாம் போதை ம‌ருந்து க‌ட‌த்துப‌வ‌ர்க‌ளையும், திருடுப‌வ‌ர்க‌ளையும் ம‌ட்டுமே பெரிய‌ குற்ற‌வாளிக‌ளாக்கிவிடுகின்றோம். மிகுதி அனைவ‌ரையும் நாம் 'தேசிய‌த்தின்' பெய‌ரிலும் 'இறையாண்மையின்' இர‌ட்சிப்பிலும் ம‌ன்னித்துவிடும் ம‌காத்மாக்க‌ளாகி விடுகின்றோம் போலும். அதைவிட‌ கொடுமை இன்னுஞ்சில‌ர் இராணுவ‌ம் என்றால் அப்ப‌டியிப்ப‌டித்தான் செய்யும் என்று செப்பி ப‌ர‌மாத்மாக்க‌ளாகிவிடுவ‌தைப் பார்த்துக்கொண்டிருப்ப‌துதான்.



(1) Omar Khadr
(2) காட்டூன்: ரொர‌ண்டோ மெட்ரோ நியூஸ்(Jan 22, 2009)

புதுவிசையில் வெளிவ‌ந்த‌ இர‌ண்டு க‌விதைக‌ள்

Tuesday, January 20, 2009

-புதுவிசை (ஒக்ரோபர் - டிசம்பர் 2008)

நனவுகளின் பலிக்காலம்

கறுப்புத்துணியால்
இறுக்கப்பட்ட விழிபிதுங்க
பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட
என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய்
அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை
அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள்
இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்;
-அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை
மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன்
நாக்கு பலவாயிரம் கதைசொல்லிகளை கட்டெறும்புகளாய்ப் பிரசவிக்கிறது.

பிரேதங்கள் உரையாடுவதில்லையெனினும்
நீங்கள் ஊற்றிக்கொண்டிருக்கும் சிவப்புவைனில் மிதக்கும்
ஐஸ்கட்டியிலிருந்தெனது சிதைந்தமூளை கரைவதான நினைப்பில்
விரல்கள் நடுங்கி இதயம் அழுத்தமுறும்
ஒரு குழந்தையைப் புணர்ந்தவனுக்கும் இவ்வாறு பதற்றங்களோடிருப்பவனுக்கும்
வித்தியாசங்கள் அவ்வளவாய் இருப்பதுமில்லை

அம்மாவிற்கு
'தேசியம்' தெரியாது
சர்வதேசியத்தால் எல்லாமே தீர்ந்துவிடுமென்ற 'வரலாற்றுண்மை'யும் அறியாள்
தாடியைத்தாண்டி பெரியாரையும் மார்க்ஸையும் இனம்பிரித்தறியும்
சில்லெடுப்புக்களில் அக்கறையிருந்ததுமில்லை
ஆனால் அவளுக்கு
சுருண்டிருக்கும் குறியாய் பிஸ்ரல் இருப்பதும்
விறைத்த லிங்கமாய் ஏகே-47 விரிந்தும்
மாறிமாறி வதைத்துக்கொல்லும் 'ஆம்பிளைத்தனங்கள்' தெரியும்

என்னுடைய கனவாயிருந்தது;
எல்லாவற்றிலிருந்தும் தப்பியோடுவது
காசு கொஞ்சம் உழைத்து அம்மா உலக்கைபோட்டு அரிசி இடித்தலை
வாடி வதங்குவதை நிறுத்துவது
பனிப்புலத்தில் ஒருத்தியைப் புணர்ந்து
காஃப்காவின் நாயகனைப்போலவென் கடந்தகாலச்சோகங்களைச் சிதைப்பது.

f*** off, you bloody shot gun!
தலையிலடித்து மண்ணை வாரியிறைத்து
தன் ஆடைகள் கிழித்து
என்னைப் புணர்ந்தெனினும் தன் இளையமகனை
திருப்பித்தருவியளா பாவிகளேயெனக் கேட்டுருகும்
அம்மாக்களின் கதறல்கள் நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்து எதிரொலிப்பவை

அம்மா,
உன் யோனியை இறுக்கிமூடி
குறிகளை மட்டுமில்லை
துவக்குகளையும் உள்நுழைய அனுமதிக்காதே;
நான்
எவருமே நெருங்கவியலாத
பயங்களற்ற சவமாய்
உனக்குள்ளே கதகதப்பாய்த் துயில விரும்புகின்றேன்.



இறுதியில் நிகழ்ந்தது

நாமெழுப்பும் கண்காணிப்புத்தேசத்தின்
எண்ணற்ற தெருக்களில்
நேசம் பாசியைப்போல பின்னலிடுகிறது
வழுக்கி விழுந்து உதிரமுருகி சாலைதகிப்பினும்
காயங்களை மறைக்கும் புத்திசாலித்தனத்தை
தாபமொரு சுனையாய்க் கசியவிடும்
செயல்களின் தவறுகளை கர்ப்பக்கிரகத்தில் பதுக்கியொளிக்க
துர்நாற்றம் தாங்கமுடியாக்கடவுளர்கள்
நாம் விமர்சித்து
உயிர்த்தெழுவதற்கான சந்தர்ப்பங்களோடு வெளியேறிவிடுகின்றனர்


கதகதப்பான நினைவுகளை வெயிலில் காயும்
ஆடைகளோடு உலரவைத்துவிட்டு
அலுப்பூட்டும் பெருமூச்சுக்களோடு
இந்த் ஆண்கள் இப்படித்தானென நீயும்
இந்தப் பெண்களே இப்படித்தானென நானும்
எதிரெதிர்த்திசைகளிலிருந்து சபிக்கிறோம்

காலப்பெருங்காகமொன்று
தன்கூரிய அலகால் கொத்தத்தெடங்குகையில்
விரல்கள் குழைந்து புனைந்த Tottem Pole சரிந்து
நேசம் நமக்களித்த ஓவியங்கள குலைகின்றன
ஆதிக்குடியின் வெண்தாடிக்கிழவன்
சூரியன் காணாத்துயரில் தற்கெலைத்த துயரம்
நம்மிலும் கருமையாய்ப்படர
நிச்சயமின்மைகளில் நடக்கத்தொடங்குகிறோம்

இன்னெரு இழப்பு
இன்னெரு பருவமாற்றம்
இன்னெரு இடப்பெயர்வு.

சுழன்றாடும் துருவப்பனிப்புயலிற்கு
நாடோடிக்கும் நின்று தரிப்பவனுக்கும்
வித்தியாசம் தெரிவதேயில்லை
தான் நினைத்த நேரம் பெழிந்துவிட்டு
கலங்காது நகரும் பனியின் வாழ்க்கை
எவருக்கும் வாய்ப்பதுமில்லை.


ந‌ன்றி: கீற்று

நீங்க‌ள் க‌ருவிலே எம்மைக் கொன்றிருக்க‌வேண்டும்

Thursday, January 15, 2009

Life is lived in the subtext.
-Unknown

ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வை
திணிக்க‌ப் ப‌ழ‌கிவிட்ட‌ நாளொன்றில்
அன்று பெய்திருக்க‌வேண்டிய‌ ப‌னிம‌ழை
திசை மாறிப் பெய‌ர்ந்திருந்த‌த‌ன் வினோத‌த்தை
சுவ‌ர்க‌ள் சூழ‌விருந்த‌ தீவு அறைக்குள்ளிருந்து விய‌ந்த‌ப‌டியிருந்தோம்
வாழ்த‌ல் என்ப‌து என்ன‌வென‌று தொட‌ங்கிய‌
ச‌லிப்பான‌ தேட‌ல் புத்த‌க‌ங்க‌ளிற்குள் ப‌துங்கிக்கொள்ள
ஒரு வார‌மாய் இடைவிடாத‌ வாசிப்பு.
மூட‌ப்ப‌டாத‌ புத்த‌க‌ங்க‌ள், தோய்க்க‌ப்ப‌டாத‌ உடுப்புக்க‌ள்
ப‌சிக்கும்போது ரொட்டியைச்சூடாக்க‌ முட்டையைப்பொறிக்க‌வென‌
அவ்வ‌ப்போது குசினியுட‌னான‌ முத்த‌மிட‌ல்க‌ள்
இறுதியில் மிஞ்சிய‌து என்ன‌வோ
நிர்வாண‌ங‌களில் மீது ந‌ம் த‌னிய‌ன்க‌ள் நின்றாட‌
பெருந்த‌னிமையில் சுட‌ர்விட்ட‌ணைந்த‌ த‌விப்பு
ஒன்ப‌தாவ‌து நாள் அறை வ‌ந்துசேர்ந்த‌ தோழியுட‌ன்
நாமிணைந்து ச‌மைத்த‌ காளான்க‌றியைச் சுவைக்கையில்
வாழ்வென்ப‌து ஆவி ப‌ற‌ந்துகொண்டிருக்கும்
சோற்றில் மித‌ப்ப‌தாய்த் தோன்றிய‌து.

2.

ந‌ம‌தெல்லாக் க‌ன‌வுக‌ளும்
க‌ண்ணாடியில் ஆவியாகிக் க‌ரைந்துகொண்டிருக்கையில்
முல்லைத்தீவு முற்றுகையிட‌ப்ப‌டுகிற‌து
காஸா ஆக்கிர‌மிக்க‌ப்ப‌டுகின்ற‌து
த‌ம‌து உட‌ல்க‌ளை
நில‌ம் பிள‌ந்துவ‌ந்த‌ கவ‌ச‌வாக‌ன‌ங்க‌ளுக்கு காணிக்கைசெய்த‌
ஒரு த‌லைமுறை முன்னேயிருக்கிற‌து
இனி என்றென்றைக்குமாய் அடிமை வாழ்வாவென‌
பின் வ‌ந்த‌ த‌லைமுறை க‌ல‌ங்குகிற‌து
நாமின்னும் க‌தைத்துக்கொண்டிருக்கின்றோம்
உரையாட‌லிலிருந்து செய‌லுக்குத் திரும்புவ‌து குறித்து
மீண்டும்
மீண்டும்
மீண்டும்
................... அலுப்பேயின்றி.

3.
மூதாதைய‌ர் இன்னும் சுவாசித்துக்கொண்டிருக்கும் ம‌ண்ணை
ப‌ல்குழ‌ல் பீர‌ங்கிக‌ளால் பிள‌ந்து
அடிமைப் பிள்ளைக‌ளைப் பிர‌ச‌விக்க‌ முடியாது
இர‌த்த‌ வெடில‌லையும் காற்றில்
துர்க்கைய‌ம்ம‌ன்க‌ள் த‌லைவிரித்து அலைவ‌தால்
அட‌க்க‌நினைக்கும் எவ‌ர்க்கும்
நிம்ம‌தியான‌ இர‌வுக‌ளினி வாய்க்க‌ப்போவ‌துமில்லை

வ‌லிய‌வ‌ன் ம‌ட்டுமே வாழ்வானெனும்
போரின் ம‌னுநீதியைக்க‌ண்டு
வெறுத்தொதுங்கிய‌ கால‌ம் நெடிய‌தெனினும்
எம்மை வ‌யிறுக‌ளில் க‌ருவாய்ச்சும‌க்கையில்
இர‌ட்டைக் குழ‌ந்தைக‌ளாய்

கூட‌வே போரையும்
பிர‌ச‌வித்த‌ பிரிய‌ அன்னைய‌ர்க‌ளே...
நீங்க‌ள் எம்மைக் க‌ருவிலே கொன்றிருக்க‌வேண்டும்.

குழ‌ந்தைக‌ள் பிற‌க்காத‌ நாட்டில்
ச‌ந்த‌திக‌ளின் நீட்சியில்லாதது போல‌
த‌ன் துப்பாக்கிக‌ளுக்கு
குறிபார்த்துச்சுட‌ உட‌ல‌ங்க‌ள் கிடைக்காத ச‌லிப்பில்
போரும்
த‌ற்கொலை செய்வ‌ற்கு வாய்ப்பிருக்கிற‌து

5.
பிற‌கொருநாள்
அம்மார்க‌ளே...
ந‌ம்ம‌ண்ணில் உள்ள‌ன‌வெல்லாம் யுத்த‌மில்லாது வாழ‌ட்டுமென‌
புதிய‌ க‌ருக்க‌ளைப் பிர‌ச‌வியுங்க‌ள்;
இல்லாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை
குழ‌ந்தைக‌ளில்லாது நிம்ம‌தியாய் நீங்க‌ள் வாழ்ந்தீர்க‌ளென்று
எம் ச‌வ‌க்குழிக‌ளின் முன்நின்று உர‌த்துச் சொல்லுங்க‌ள்.




(வ‌ளாக‌ நாட்க‌ளுக்கு...)

ஹேமா அக்கா

Wednesday, December 24, 2008

'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.

பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி. இந்திய‌ன் ஆமி வ‌ந்த‌கால‌த்திலை கூட‌, இப்ப‌டி அள்ள‌ அள்ள‌க்குறையாத‌ ந‌ல்ல த‌ண்ணியும், தார‌ள‌மாய் ல‌க்ஸ் சோப்பும் கிடைக்கும்போது என்ன‌ ச‌னிய‌னுக்கு நீங்க‌ள் ச‌ண்டை பிடிக்கிறிய‌ள் என்டொரு ஆமிக்கார‌ன் ச‌ன‌த்தை செக்பொயின்றில் வைத்து ப‌ரிசோதித்துப் பார்க்கும்போது கேட்ட‌தாயும் ஒரு க‌தையிருந்த‌து. அவ‌ன் அப்படிகேட்ட‌திலையும் பிழையில்லைத்தான். ந‌ல்ல‌ தோட்ட‌க்காணிக‌ள், நிறைய‌ ப‌னைம‌ர‌ங்க‌ள், ஆடு மாடுக‌ள் என்று எங்க‌டை ஊரிலை ச‌ன‌ங்க‌ள் இருந்த‌போது அவ‌னுக்கு அப்ப‌டித் தோன்றிய‌தில் பிழையுமில்லை.

நாங்க‌ள் க‌த்து க‌த்தென்று க‌த்த‌ அண்டை அய‌லிலிருந்த‌ ச‌ன‌மெல்லாம் கிண‌ற்ற‌டியில் கூடிவிட்ட‌து. விழுந்த‌ கிண‌று ஒரு ப‌ங்குக்கிண‌று. ஆனால் ப‌ங்கிருக்கிற‌வைய‌ள், இல்லாத‌வைய‌ள் என்டு ஊரிலையிருக்கிற‌ எல்லாச் ச‌ன‌மும் அதைத்தான் பாவிக்கிறவையள். எங்க‌டை ஊர் மண், ச‌ன‌ம் சாதி பார்க்கிற‌ மாதிரி வ‌ஞ்ச‌ம் எதுவும் செய்த‌தில்லை. யார் தோண்டினாலும் ந‌ல்ல‌ த‌ண்ணியைத் த‌ந்துகொண்டிருந்த‌து. இல‌ங்கை ஆமியின் ஒபரேஷ‌ன் லிப‌ரேச‌னோடு தொட‌ங்கிய‌ பொம்ம‌ர‌டியிலிருந்தும் ப‌லாலியிலிருந்தும், காங்கேச‌ந்துறையிலிருந்தும் அடிக்கின்ற‌ ஷெல்ல‌டியிலிருந்தும் த‌ப்புவ‌த‌ற்கென‌ நானும் அம்மாவும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் எங்க‌டை வீட்டு செவ்விளநீர் ம‌ர‌த்தடிப் ப‌க்க‌மாய் வெட்ட‌த் தொட‌ங்கிய‌ ப‌ங்க‌ருக்குள்ளேயே ஆற‌டி வ‌ர‌முன்ன‌ரே தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்ந்திருக்கின்ற‌து. டொங்கு டொங்கு என்று அலவாங்கு போட‌ உறுதியாயிருக்கும் சுண்ணாம்புக் க‌ல்லுக்குள்ளிலிருந்து எப்ப‌டித்தான் இப்ப‌டி ந‌ல்ல‌ சுவையான‌ த‌ண்ணீர் வருகின்ற‌தென்ப‌து என‌க்கும் அந்த‌ வ‌ய‌தில் சரியான வியப்பாய்த்தானிருக்கும். ஹேமாக்கா விழுந்த‌ கிண‌று த‌ண்ணிய‌ள்ளுகின்ற‌ கிண‌று என்டப‌டியால் அந்த‌ள‌வு ஆழ்ப்ப‌மில்லை. ஆன‌ப‌டியால் த‌ப்பிவிட்டா. இப்போ யோசிக்கும்போது ஹேமாக்கா தான் உயிரோடும் இருக்கோனும் ஆனால் அதேச‌ம‌ய‌ம் த‌ன‌து எதிர்ப்பையும் காட்ட‌வேண்டுமென‌ ச‌ம‌யோசித‌மாய் யோசித்துத்தான் இந்த‌க்கிண‌ற்றுக்குள்ளை குதித்திருப்பா போல‌... இல்லை, த‌ன்ரை உயிரை மாய்த்துக்கொள்ள‌ வேண்டும் என்று நினைத்திருந்தால் அவான்ரை வீட்டுக்கு இர‌ண்டு வீடுக‌ள் தாண்டிக்கிட‌ந்த‌ ஆழ்ப்பமான‌ கிண‌த்துக்குள்ளையெல்லோ குதித்திருக்க‌வேண்டும். அந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதித்தால் ச‌ன‌ம் உயிரோடு த‌ப்ப‌முடியாத‌ள‌வுக்கு அந்த‌ மாதிரி ஆழ்பப‌மாயும், அடியில் நிறைய‌ப் பாசியுமாயும் அது இருந்தது.

'ஹேமாக்கா வெளியே வாங்கோ, வெளியே வாங்கோ' என்டு நாங்க‌ள் கிண‌த்துக்க‌ட்டைச் சுற்றி குஞ்சைப் ப‌ருந்திட்டைப் ப‌றிகொடுத்த கோழி மாதிரி க‌த்திக்கொண்டிருந்தோம். ஹேமாக்கா என்ன‌ க‌ட் வும‌னா இல்லை சுப்ப‌ர் வும‌னா... சும்மா அப்ப‌டியே விர் என்று கிண‌த்துக்குள்ளையிலிருந்து ப‌ற‌ந்துவ‌ர‌. யாரோ ஒராள் ந‌ல்ல‌ மொத்த‌மான‌ க‌யிறையெடுத்து கிண‌த்துக்குள்ளை விட‌ அவா அதைப் பிடித்து ஏறி வ‌ர‌மாட்டேனென‌ அட‌ம்பிடித்துக்கொண்டிருந்தா. அவாவை எப்ப‌டி வெளியே எடுக்கிற‌து என்டு எல்லோருக்கும் பெரிய‌ பிர‌ச்சினையாய்ப் போயிட்டுது. அதைவிட‌ ப‌ர‌ப‌ர‌ப்பாய் வ‌ந்த‌ ச‌ன‌மெல்லாம் ஏன் இந்த‌ப் பெட்டை கிண‌த்துக்குள்ளை குதித்தாள், அத‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌வென்டு ஆராய‌த்தொட‌ங்கிவிட்ட‌து. பொழுதும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் இருள‌த்தொட‌ங்கிவிட்ட‌து. ஹேமாக்காவும் கீழே விட்ட‌ க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு மேலேயேறி வ‌ர‌மாட்டென‌ அட‌ம்பிடித்துக்கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுதுகொண்டிருக்கிறா. யாராவ‌து பெடிய‌னை கிண‌த்துக்குள்ளை இற‌க்கி அவ‌னைப் பிடித்துக்கொண்டு ஹேமாவாக்காவை தூக்க‌லாமெண்டாலும், ஹேமாக்கா ஒரு கும‌ர்ப்பெட்டையாயிருப்ப‌து 'க‌ற்பு' சார்ந்த‌ பிர‌ச்சினையாக‌வும் ச‌ன‌த்துக்கு இருக்கிற‌து. வ‌ய‌துபோன‌ கிழ‌டுக‌ளை இற‌க்க‌லாந்தான். ஆனால் ஹேமாக்காவின் பார‌த்தை த‌ங்க‌டை தோளிலை தாங்கிக்கொண்டு க‌யிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறுவ‌த‌ற்குள் கிழ‌டுக‌ளுக்கு சீவ‌ன் இருக்குமா என்ப‌தும் கேள்விக்குரிய‌துதான். ஒரு த‌ற்கொலை முய‌ற்சி த‌ப்பித்துவிட்ட‌து என்ற நிம்ம‌திப்பெருமூச்சை தெரிந்தே செய்கின்ற‌ ஒரு கொலையில் ப‌ரீட்சித்துப் பார்க்க‌ ச‌ன‌த்துக்கு அவ்வளவாய் உட‌ன்பாடில்லை. என‌வே கிழ‌வ‌ர்க‌ளையும் இற‌க்க‌முடியாது. ஆக‌ இவ்வாறாக‌ ஹேமாக்காவை வெளியே எடுப்ப‌து பெரும் சிக்க‌லாகிவிட்ட‌து. வெளியே நிற்கிற‌ ச‌ன‌ம் என்ன‌ செய்வ‌து என்று கையைப் பிசைந்துகொண்டிருப்ப‌தைப் பார்த்துப் பார்த்து ச‌லித்தே ஹேமாக்கா தான் இந்த‌க்கிண‌த்துக்குள்ளை குதிக்கமுன்ன‌ர் த‌ன் முடிவை ஆழ‌ ம‌றுப‌ரிசீல‌னை செய்திருக்க‌லாம் என்டு கூட நினைத்திருக்க‌லாம்.

க‌டைசியாய், இர‌ண்டுப‌க்க‌மும் கையிருக்கிற‌ க‌திரையிலை நான்கு க‌யிறைக் க‌ட்டி ஒரு பெட்டியை இற‌க்கிற‌மாதிரித்தான் க‌திரையை இற‌க்கிச்சின‌ம். ஹேமாக்கா க‌திரையிருந்து நாலு க‌யிற்றில் இர‌ண்டு க‌யிற்றைக் கையிர‌ண்டாலும் பிடிக்க‌, வெளியிலிருந்து ச‌ன‌ம் தூக்க‌த்தொட‌ங்கிச்சினம். சூர‌ன்போரிலை சூர‌னையும் முருகையும் அங்கால் ப‌க்க‌ம் இங்கால‌ ப‌க்க‌ம் ஆட்டுகின்ற‌ மாதிரி கிண‌த்தின்றை உட்சுவ‌ரிலை அடிப‌ட்டு அடிப‌ட்டு ஹேமாக்கா வெளியே வ‌ந்திருந்தா. அவாவைப் பார்க்க‌ச் ச‌ரியாய்ப் பாவ‌மாயிருந்த‌து. ம‌ழைக்கால‌த்திலை ந‌னைகின்ற‌ கோழிக்குஞ்சுக‌ள் மாதிரி பாவாடை ச‌ட்டை எல்லாம் ந‌னைந்து கூனிப்போயிருந்தா. அத்தோடு ச‌ன‌மெல்லாம் ஒரே மாதிரியாய்ப் பார்த்த‌ பார்வை அவாவையின்னும் கூனிக்குறுக‌ச் செய்திருக்கும்.

2.
ஹேமாக்கா கிண‌ற்றில் விழுந்த‌ற்கான‌ கார‌ண‌த்தை ச‌ன‌ம் அல‌சிப் பிழிவ‌த‌ற்கு முன்ன‌ரே என‌க்கு அத‌ற்கான‌ கார‌ண‌ம் தெரிந்திருந்த‌து. உண்மையிலேயே ச‌ன‌ம் ஹேமாக்காவைக் குற்ற‌வாளிக்கூண்டில் ஏற்றினால் நானுமோர் சாட்சியாக‌ ஏற்த்தான் வேண்டியிருக்கும். ஆனால் அவ்வாறான பொழுதில் மவுனமாய் இருந்திருப்பேனே த‌விர‌ ஹேமாக்காவிற்கு எதிராய் எதுவும் சொல்லியிருக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்வேன். எனெனில் ஹேமாக்கா அவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வா; என‌க்கும் அவாவை எங்க‌டை அமமாவிற்கு பிற‌கு அப்ப‌டிப் பிடிக்கும்.

எங்க‌டை வீட்டையும், ஊரிலையிலிருந்த‌ ப‌ள்ளிக்கூட‌த்தையும் பிரிப்ப‌து ஒரு ரோட்டுத்தான். க‌ல்லு நிர‌ப்பி தார் ஊற்றி ச‌ம‌த‌ள‌மாய் அமைப்ப‌துதான் தெருவென்றால், இதைத் தெருவென்றே கூற‌முடியாது. ஒரு வெள்ள‌வாய்க்காலாய் இருந்து கால‌ப்போக்கில் ஒரு ஒழுங்கையாகிவிட்ட‌து என்றுதான் சொல்ல‌வேண்டும். ம‌ழை பெய்ந்து வெள்ள‌ம் ஓடுகின்ற‌ வேலையில் வாழைக்குற்றியில் வ‌ள்ள‌ம் விடுவ‌த‌ற்கு மிக‌ உக‌ந்த‌ இட‌மென‌ச் சொல்ல‌லே இன்னும் சால‌ச் சிற‌ந்த‌து. அவ்வாறு எங்க‌ள் வீடுக‌ளையும், ப‌ள்ளிகூட‌த்தையும் பிரிக்கின்ற‌ ஒழுங்கையினூடு நீங்க‌ள் செல்வீர்க‌ளாயின் 'ட‌'வ‌டிவில் நீங்க‌ள் வ‌ல‌து கைப்ப‌க்க‌மாய் திரும்பினால் ஒரு ஹொஸ்ட‌லைக் காண்பீர்க‌ள். அங்கேதான் தூர‌ இட‌ங்க‌ளிலிருந்து ப‌டிக்கின்ற‌ பெடிய‌ன்க‌ள் ப‌டித்துக்கொண்டிருப்பார்க‌ள். ஹொஸ்ட‌லிலிருந்து பின்ப‌க்க‌மாய் ஒழுங்கைக்குள் நுழைவதற்கு இருக்கும் கேற் எப்ப‌வும் பூட்டிய‌ப‌டியே இருக்கும். என‌வே ஹெஸ்ட‌லுக்குப் போவ‌த‌ற்கு அல்ல‌து அங்கிருந்து வெளியே வ‌ருவ‌த‌ற்கோ நீங்க‌ள் உய‌ர‌ம் பாய‌த‌லில் தேர்ச்சி பெற்ற‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும். எனெனியில் ம‌திலேறிக் குதிக்க‌வேண்டும். என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் ஹொஸ்ட‌லில் ப‌ட‌ம் போடும்போது, ப‌ட‌ம் தொட‌ங்கிய‌பின் இருட்டோடு இருட்டாய் உள்ளே மதிலேறிக்குதித்துப் போய்விடுவோம். ப‌ட‌ம் தொட‌ங்க‌ப்போகின்ற‌தென்றால் ஹொஸ்ட‌லில் இருக்கும் அண்ணாமார்க‌ள் விசில‌டிப்பார்க‌ள். நாங்க‌ள் முன்னேறிப்பாய்வ‌த‌ற்குத் த‌யாராய் ஹொஸ்ட‌ல் ம‌தில‌டிக்க‌டியில் நின்றுகொண்டு இருப்போம். ஆனால் நாங்கள் சிறுவர்களாயிருந்ததால் மதிலில் ஏற்றிவிடுவதற்கு யாரினதோ உதவி தேவையாகவிருக்கும். இவ்வாறாக‌ நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்திருக்கின்றோம். சில‌ அண்ணாக்களின் பிற‌ந்த‌நாள் கொண்டாடங்க‌ளில் க‌ல‌ந்துகொண்டிருக்கின்றோம்.

ஹொஸ்ட‌லிருக்கும் பெடிய‌ங்க‌ளுக்கு சில‌வேளைக‌ளில் க‌ர‌ண்டில்லாவிட்டால் குளிக்க‌த் த‌ண்ணியில்லாது போய்விடும். அப்போதும‌டடும் பின்ப‌க்க‌ கேற் திற‌க்க‌ப்ப‌ட்டு எங்க‌ள் வீட்டுக்கிண‌றுக‌ளில் குளிக்க‌ ஹொஸ்ட‌ல் நிர்வாக‌த்தால் அனும‌திக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்டால், எங்க‌டை ஊரும் அல்லோல‌க‌ல்லோல‌ப்ப‌ட்டுவிடும். இன்னும் குறிப்பாக‌ச் சொல்ல‌ப்போனால், ஊரிலையிருக்கிற‌ கும‌ர்ப்பெட்டைய‌ளுக்குத்தான் உள்ளூற‌ ம‌கிழ்ச்சி த‌தும்பியோடியபடியிருக்கும். அதுவ‌ரை வீட்டிலை அம்மாமார் 'பிள்ளை த‌ண்ணிய‌ள்ளிக்கொண்டு வாங்கோ' என்டால் கூட‌ ஓடிப்போய் ஒளித்துக்கொள்ப‌வ‌ர்க‌ள் கூட் ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ள் குளிக்க‌ வாறாங்க‌ள் என்டால் வாளியோடு கிண‌த்த‌டிக்கு அடிக்க‌டி போவதும் வருவதுமாய் இருப்பார்கள். கிண‌த்த‌டியில் விழிக‌ளும், புருவ‌ங்க‌ளும் நிக‌ழ்த்துகின்ற‌ உரையாட‌ல்க‌ளுக்கு காப்பிய‌ங்க‌ளின் சுவை கூட‌ நிக‌ரான‌வையா என்ப‌து ச‌ந்தேக‌ந்தான். ஹொஸ்ட‌ல் பெடிய‌ங்க‌ளுக்கும் ந‌ன்கு தெரியும், தாங்க‌ள் இர‌க‌சியாய்ப் பெண்க‌ளால் இர‌சிக்க‌ப்ப‌டுகின்றோம் என்று. என‌வே ஹொஸ்ட‌லை விட்டு வ‌ரும்போது ஏதோ பெரிய‌ ஊர்வ‌ல‌ம் வாற‌ மாதிரி க‌த்திக் குழறி த‌ங்க‌ளை வ‌ர‌வை ப‌றைசாற்றிக்கொண்டே வ‌ருவார்க‌ள். இன்னுஞ்சில‌ர் உற்சாக‌த்தின் மிகுதியில் சேர்ட் எல்லாம் க‌ழ‌ற்றி கையில் வைத்த‌ப‌டி த‌ம‌து 'ஆண்மையை' காட்டமுய‌ற்சிப்பார்க‌ள். அந்த‌ நேர‌த்தில் எத்த‌னையோ வீடுக‌ளின் வாச‌ல்க‌ளில் இருந்து வெளிவ‌ந்த‌ பெருமூச்சுக்களின் வெப்ப‌த்தில் அடுப்புக‌ளில் தீ கூட‌ ப‌ற்றியெரிந்திருக்க‌லாம்.

இப்ப‌டி குளிக்க‌ வ‌ந்த‌ பொழுதிலோ அல்ல‌து வேறு ச‌ந்த‌ர்ப்ப‌த்திலோதான் ஹேமாக்காவிற்கும் வ‌சீக‌ர‌ன் அண்ணாவுக்கும் நேச‌ம் முகிழ்ந்திருக்க‌வேண்டும். அவ‌ர்க‌ளுக்கிடையிலான‌ ஊடாட்ட்ட‌ங்க‌ளுக்கு நானொரு தூதுவ‌னாக‌ மாற‌வேண்டியிருந்த‌து. க‌டித‌ப்ப‌ரிமாற்ற‌ங்க‌ள், உட‌ன‌டிச் செய்திக‌ள் அல்ல‌து திட்ட‌ மாற்ற‌ங்க‌ள் என்று ப‌ல்வேறு ப‌ரிணாங்க‌ளில் ஊழிய‌ம் செய்து அவ‌ர்க‌ளின் காத‌லுக்கு நானொரு த‌விர்க்க‌முடியாத‌ தீவிர‌ தொண்ட‌னானேன். இவ்வாறான‌ ஊழிய‌ங்க‌ளுக்கு ஹேமாக்கா த‌ங்க‌டை வீட்டில் நின்ற‌ மரங்களிலிருந்து விளாம்ப‌ழ‌ங்க‌ள், தோட‌ம்ப‌ழ‌ங்க‌ளையும், ஆல‌ம‌ர‌த்த‌டிச் ச‌ந்தியிலிருந்த‌ முருக‌ன் விலாஸில் எட்னா, க‌ண்டோஸ் வ‌கையான‌ சொக்கிலேட்டுக்க‌ளையும், வாய்ப்ப‌ன்க‌ளையும் போண்டாக்க‌ளையும் ச‌ன்மான‌மாக‌ அளித்து த‌ன‌து அன்பையும் ம‌திப்பையும் வெளிப்ப‌டுத்தியிருந்திருக்கிறார்.

ஒருநாள் இப்ப‌டித்தான் ஹேமாக்காவும், வ‌சியண்ணாவும் ஹெஸ்ட‌ல் ம‌திலடியில் ச‌ந்திப்ப‌தாய் ஏற்பாடு. வ‌ழ‌க்க‌ம்போல‌ நிக‌ழ்வ‌துபோல‌ ஹேமாக்கா என்னை ம‌திலால் தூக்கிப்பிடிக்க‌ நான் விசில‌டித்து வ‌சிய‌ண்ணாவுக்கு சிக்ன‌ல் அனுப்பினேன். இவ்வாறான ச‌ந்திப்புக்க‌ள் ந‌ல்லாய்ப் பொழுதுப‌ட்டு இர‌வு மூடுகின்ற‌ ஏழும‌ணிய‌ள‌வில்தான் ந‌ட‌க்கும். அப்போதுதான் ஒழுங்கைக்குள் ச‌ன‌ ந‌ட‌மாட்ட‌ம் குறைவாயிருக்கும். அத்தோடு ச‌ன‌ம் க‌ண்டாலும் யாரென்று முக‌ம் பார்க்காது த‌ப்பியோடக்கூடிய‌தாக‌வும் இருக்கும். நான் ம‌திலுக்குள்ளால் எட்டிப்பார்த்து வ‌சிய‌ண்ணா வாறாரா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். குர‌லை வைத்துத்தான் அடையாள‌ம் காண‌க்கூடிய‌ள‌வுக்கு அன்று ந‌ல்ல‌ இருட்டு. என்னுடை விசில் ச‌த்த‌ம் கேட்டு வ‌ந்த‌ வ‌சிய‌ண்ண‌ என்ரை கையைப் பிடித்தார். ஆனால் இப்ப‌டி ஒருநாளும் இறுக்க‌மாய்ப் பிடிப்ப‌தில்லையே என்று 'ஆ... கை நோகின்ற‌தென்று' நான் சொல்ல‌, 'யாரடா நீ உன‌க்கென‌ன‌ இந்த‌ நேர‌த்திலை இங்கே வேலை?' என்று ஒரு குர‌ல் கேட்ட‌து. இது நிச்ச‌யமாய் வ‌சிய‌ண்ணாவின் குர‌லில்லை. 'ஐயோ இது ஹொஸ்ட‌ல் வோட‌னின்ரை குர‌லெல்லோ' என்டு என‌க்கு உட‌ம்பு ந‌டுங்க‌த் தொட‌ங்கிவிட்ட‌து. த‌ப்பியோட‌லாம் என்டால் ம‌னுச‌ன் கையையும் விடுகிற‌தாகவும் இல்லை. அங்காலை ஹேமாக்கா என்ரை காலைத் தூக்குபிடித்துக்கொண்டு நிற்கிறா. 'எத‌ற்க‌டா இப்ப‌ விசில‌டித்தாய்?' என்டு அந்த‌ ம‌னுச‌ன் உறுமுகிற‌து. ப‌க‌ல் வேளைக‌ளில் நாங்க‌ள் ப‌க்க‌த்திலையிருக்கிற‌ ப‌ற்றைக் காணிக்குள்ளை கிரிக்கெட் விளையாடும்போது ரெனிஸ் போல் சில‌வேளைக‌ளில் ஹொட‌லுக்குள் விழுவ‌துண்டு. அவ்வாறான‌ த‌ருண‌ங்க‌ளில் நாங்க‌ள் ம‌திலுக்கு இங்காலை நின்று ப‌ந்தை எடுத்துத்தாங்கோ என்று க‌த்துவோம். அப்ப‌டியொருத்த‌ரும் எடுத்துத் த‌ர‌ இல்லையெண்டால் நாங்க‌ளாவே ம‌திலேறிக் குதித்து ப‌ந்தை எடுப்போம். அப்ப‌டி இற‌ங்கியெடுக்கும்போது வோட‌னின் க‌ண்ணில்ப‌ட்டால் ப‌ந்து எடுக்க‌வ‌ந்தோம் என்று சொல்லித் த‌ப்பிவிடுவ‌துண்டு. இப்ப‌ வோட‌ன் என்ரை கையைப் பிடித்துக்கொண்டு 'யார‌டா நீ யாறறை மோன‌டா நீ'? என்டு வெருட்ட‌, என‌க்கு எல்லா அறிவும் கெட்டு, 'ரெனிஸ் போல் விழுந்துவிட்ட‌து எடுக்க‌வ‌ந்த‌ன்' என்டு வாய்த‌வ‌றி உள‌றிவிட்டேன். இந்த‌ இருட்டுக்குள்ளை யார்தான் ரெனிஸ் போல் தேட‌ வ‌ருவாங்க‌ள், வேறேதோ விவகார‌ம் ஓடிக்கொண்டிருக்கிற‌து என்டு வோட‌னுக்கு இப்ப‌ ந‌ல்லா விள‌ங்கிட்டுது. ச‌னிய‌ன் பிடித்த‌ ம‌னுச‌ன் என்னை விடுவ‌தாயில்லை. இனியும் இப்ப‌டிக்காரண‌ஞ் கேட்டுக்கொண்டிருந்தால் எல்லாவ‌ற்றையும் போட்டுக் கொடுக்க‌வேண்டிவ‌ரும் என்ற‌நிலையில் ச‌ட்டென்று வோட‌னின் பிடியிலிருந்து ஒரு கையை உத‌றியெடுத்து ந‌ல்லாய் 'நொங்கென்று' அவ‌ற்றை த‌லையில் குட்டினேன். ம‌னுச‌னுக்கு நொந்திருக்க‌வேண்டும்; மற்றக் கையின் பிடியைத் த‌வ‌ற‌விட்டார். நானும் ஹேமாக்காவும் பேய் ஒன்று எங்க‌ளைப் பின் தொட‌ர்ந்து வ‌ருகின்ற‌மாதிரி பின்ன‌ங்கால் த‌லையில்பட எங்க‌டை வீடுக‌ளுக்கு ஓடிவ‌ந்து சேர்ந்திருந்தோம்.

எப்ப‌டிப் ப‌த்திர‌மாய் பொத்தி பொத்தி வைத்தாலும் எந்த‌ விஷ‌ய‌ம் என்டாலும் ஒருநாள் வெளியே வ‌ர‌த்தானே செய்யும். அப்ப‌டித்தான் ஒருநாள் ஹேமாக்கா-வ‌சிய‌ண்ணா காத‌லும் ஹேமாக்கா வீட்டுக்கு தெரிய‌வ‌ர. இர‌ண்டு நாளாய் வீட்டில் அறைக்குள் வைத்து ஹேமாக்காவிற்கு செம அடி. அவா பிடிவாத‌மாய் வ‌சிய‌ண்ணாவைத்தான் காத‌லிப்ப‌ன் க‌லியாண‌ங்க‌ட்டுகிற‌ன் என்டு நின்டிருக்கிறா. இர‌ண்டு நாளாய் அறைக்குள்ளையே பூட்டிவைத்திருக்கின‌ம். இனி பிடிவாத‌த்தை விட்டுவிட்டுவாள் என்று நினைத்து மூன்றாம் நாள் வெளியே விட‌த்தான் ஹேமாக்கா இப்ப‌டி கிண‌த்துக்குள்ளை குதித்திருக்கிறா. இப்ப‌ ஹேமாக்காவின் காத‌ல் ஊருல‌க‌த்திற்கு எல்லாம் தெரிய‌வ‌ந்துவிட்ட‌து. இப்ப‌டியாக ஹேமாக்கா-வசியண்ணா விடயத்தில் ஒரு முடிவும் காண‌முடியாது இழுப‌றியாக‌ போன‌போதுதான் இந்திய‌ன் ஆமிப் பிர‌ச்சினை வ‌ந்த‌து. ப‌ள்ளிக்கூட‌மெல்லாம் பூட்ட‌ ஹெஸ்ட‌லிலிருந்த‌ பெடிய‌ங்க‌ளும் த‌ங்க‌ள் த‌ங்க‌ள் ஊருக‌ளுக்குப் போக‌த் தொட‌ங்கிட்டின‌ம். ஹேமாக்காவின் பெற்றோருக்கும் அப்பாடா இந்த‌ப்பிர‌ச்சினை இப்படிச் சுமுக‌மாய் முடிந்துவிட்ட‌தே என்டு பெரிய‌ நிம்ம‌தி. ஊர்ச்ச‌ன‌த்தின் வாய்க‌ளும் இப்போது ஹேமாக்காவின் க‌தையைவிட‌ இந்திய‌ ஆமிப்பிர‌ச்சினையைப் ப‌ற்றித்தான் அதிக‌ம் மென்று துப்பத் தொட‌ங்கிவிட்ட‌து. சண்டை தொடங்கியதால், என‌க்கும் ப‌ள்ளிக்கூட‌ம் இல்லையென்ட‌ப‌டியால் நானும் ஹேமாக்கா வீட்டிலைதான் அதிக‌ம் பொழுதைக் க‌ழிக்கத்தொடங்கினேன். இந்தியன் ஆமிக்கும் புலிக‌ளுக்கும் ச‌ண்டை தொட‌ங்கி எங்க‌டை ஊர்ச் ச‌ன‌மெல்லாம் உண‌வில்லாது ச‌ரியாய்க் க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌ கால‌த்தில். ம‌க்க‌ளைத் த‌ங்க‌ளுக்குள் உள்ளிழுக்க‌வேண்டுமென்றால் அவ்வ‌ப்போது நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்க‌வேண்டும் -உல‌க‌த்திலுள்ள‌ எல்லா அதிகார‌ அர‌சுக‌ளும் நினைப்ப‌துபோல‌- இந்திய‌ன் ஆமியும் த‌ங்க‌டை முகாங்களுக்குச் ச‌ன‌த்தைக்கூப்பிட்டு சாமான்க‌ள் கொடுப்பான‌க்ள். ஒரு வீட்டிலையிலிருந்தும் வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ பெடிய‌ன் பெட்டைக‌ளை இந்த‌ விட‌ய‌ங்க‌ளுக்கு அனுப்புவ‌தில்லை; 'எதுவுமே' ந‌ட‌க்கால‌மென்ற‌ ப‌ய‌ந்தான். ஆக‌வே ப‌த்துவ‌ய‌சுக்குள்ளையிருந்த‌ என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள்தான் ஆமிக்கார‌ன் த‌ருகின்ற‌ நிவார‌ண‌த்துக்கு கியூவிலை நிற்ப‌ம். ஒருமுறை ஆமிக்கார‌ன் த‌ன்ரை ஹெல்மெட்டாலை அள்ளிய‌ள்ளி கோதுமை மாவை நிவார‌ணமாகத் தந்த‌பொழுதில்தான், காவ‌லில் நின்ற‌ இன்னொரு ஆமிக்கார‌ன் என்னைக் கூப்பிட்டு ஒரு கூலிங் கிளாஸைத் த‌ந்தான். என‌க்கென்டால் அந்த‌மாதிரிச் ச‌ந்தோச‌ம். அவ்வ‌ள‌வு பேர் கியூவிலை நிற்கேக்கை என‌க்கு ம‌ட்டும் ஆமிக்கார‌ன் கூலிங்கிளாஸ் தாறானென்டால் நான ஏதோ வித்தியாச‌மானவனாய்த்தானே இருக்க‌வேண்டும். நான் ஊருக்குள்ளை ஓடிப்போய் ஒவ்வொர் வீட்டிலையும் ஏறியிற‌ங்கி ஆமிக்கார‌ன் என‌க்கு 'கூல்டிங்' கிளாஸ் த‌ந்துவிட்டான் என்று பெருமைய‌டித்துக்கொண்டிருந்தேன். 'அது 'கூல்டிங்' கிளாஸ் இல்லைய‌டா கூலிங் கிளாஸ்' என்று ஹேமாக்கா தான் திருத்தினா. 'உங்க‌ளுக்கு ஒரு கூல்டிங் கிளாஸ் கிடைக்க‌வில்லை என்டு பொறாமை அதுதான் நான் சொல்வ‌தை நீங்க‌ள் பிழையெண்டிறிய‌ள்' என்று நான் சொல்ல‌ ஹேமா சிரித்துக்கொண்டிருந்தா. ஹேமாக்கா சிரிக்கிற‌து எவ்வ‌ள‌வு அழ‌கு. அவாவின்ரை ப‌ற்க‌ளின் விம்பம் கூலிங் கிளாஸில் தெறிப்ப‌தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் நானும் ஹேமாக்காவும் அவ‌ங்க‌டை வீட்டிலை தனியே இருக்கேக்கே இந்தியன் ஆமிக்கார‌ன்க‌ள் செக்கிங்குக்கு என்டு வ‌ந்தாங்க‌ள். செக்கிங்கில் வ‌ந்த‌ ஆமிக்கார‌ங்க‌ளில் என‌க்கு கூலிங்கிளாஸ் த‌ந்த ஆமிக்கார‌னுமிருந்தான். நான் அப்போதும் அந்த‌ கூலிங்கிளாசை என்னோடுதான் வைத்திருந்தேன். அந்த‌ ஆமிக்கார‌ன், bomb bomb என்டான். எங்கையோ குண்டை ஒளித்துவைத்திருக்கின்றம் என்டு ஐமிச்சத்தில் அவன் தேடுகின்றான் போல‌ என்டு முதலில் நினைத்தேன். No Sir No Bomb என்டு ஹேமாக்கா த‌ன‌க்குத் தெரிந்த‌ ஆங்கில‌த்தில் சொன்னா...ஆமிக்கார‌ன் bomb bomb என்று திருப்பி திருப்பிச் சொல்லிக்கொண்டேயிருந்தான். you bomb என்டான்....ஹேமாக்கா bomb ஒளித்துவைத்திருக்கிறா என்ட‌மாதிரி அவாவோடை மார்பைப் பிடித்தான்....அக்காவிற்கு என்ன செய்வ‌தென்டு திகைப்பு....நான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற‌ன் என்டு ஆமிக்காரனுக்கு நினைவுக்கு வ‌ந்திருக்கோனும். you bomb you bomb என்டு சொல்லிக்கொண்டு முன்னாலிருந்த‌ அறைக்குள்ளை ஹேமாக்காவைக் கொண்டு போனான்...நான் விளையாடுகின்ற‌மாதிரி பாவனை செய்துகொண்டு ஓர‌க்கண்ணால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த‌ அறைக்கு உள்ளே கொக்கி போட்டு மூடினால்தான் பூட்ட‌ப்ப‌டும். ஆமிக்கார‌னுக்கு 'செக்கிங்குக்காய்' அடுத்த‌ வீட்டுப் போகும் அவ‌ச‌ர‌மோ அல்ல‌து கொக்கி போட்டு அறையை மூடினால் நான் க‌த்தி சனத்தைக் கூட்டிடுவேனே என்று நினைத்தானோ தெரியாது...மெல்லிய‌தாய் க‌தவைச் சாத்தினான்...அதனால் அறை முழுதாய் மூட்ப்ப‌டாது கொஞ்ச‌ம் நீக்க‌லுட‌ன் திற‌ந்த‌ப‌டியிருந்த‌து. you bomb bomb என்டு ஹேமாக்காவின் ச‌ட்டையைக் க‌ழ‌ற்ற‌ச் சொன்னான். பிற‌கு அக்காவைச் சுவ‌ரோடு அழுத்தியபடி ஆமிக்கார‌னின் பின்புற‌ம் அங்குமிங்குமாய் அசைவ‌தும‌ட்டுமே தெரிந்த‌து. ஆமிக்கார‌ன் 'செக்கிங்' முடித்துப்போன‌போது என‌க்கு அவ‌ன் த‌ந்த‌ கூலிங்கிளாஸ் பிடிக்க‌வில்லை. வீட்டை அதைக் கொண்டுபோய் அம்மம்மா பாக்கு இடிக்கிற‌ க‌ட்டையாலை அதை அடித்து உடைத்தேன்.

இந்திய‌ன் ஆமி வெளிக்கிட‌ வ‌ந்த‌ பிரேம‌தாசாவின் ஆட்சிக்கால‌த்தில் வ‌சிய‌ண்ணா ஒருநாள் எங்க‌டை ஊருக்கு வ‌ந்திருந்தார். எல்லாச் ச‌னிய‌னும் இந்திய‌ன் ஆமிக்கால‌த்தோடு ஒழிந்துவிட்ட‌தென‌ நினைத்த‌ ஹேமாக்காவின் பெற்றோருக்கு வ‌சிய‌ண்ணா த‌ன‌க்கு ஹேமாக்காவைக் க‌லியாண‌ங்க‌ட்டித்த‌ர‌க்கேட்ப‌த‌ற்காய் வ‌ந்திருந்த‌து அதிர்ச்சியாயிருந்த‌து. ஏற்க‌ன‌வே எடுத்த முடிவையே திரும்ப‌வும் சொன்னார்க‌ள். 'ஏலாது' என்டு ஹேமாக்காவின் பெற்றோர் உறுதியாய்ச் சொன்ன‌தோடு, வ‌சிய‌ண்ணா திரும்பி அவ‌ற்றை ஊருக்குப் போய்விட்டார். எல்லாம் சுமுகமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது என்று நினைத்த‌ ஒருபொழுதில் ஹேமாக்காவைக் காண‌வில்லையென்று ஊரெல்லாம் தேட‌த்தொட‌ங்கியது. பிற‌கு ஹேமாக்கா வ‌சிய‌ண்ணாவோடு சேர்ந்து ஓடிப் போய்விட்டா என்ப‌து எல்லோருக்குந் தெரிய‌வ‌ந்த‌து. 'ஏன் ஹேமாக்கா இங்கேயிருக்காது தூர இட‌த்திற்கு ஓடிப்போன‌வா?' என்டு அம்மாட்டை நான் கேட்ட‌த‌ற்கு, 'சும்மா வாயை மூடிக்கொண்டிரு' என்டுதான் அம்மா அந்த நேரத்திலை சொன்னா. பின்னாட்க‌ளில் அப்ப‌டி ஹேமாககா ஓடிப்போன‌த‌ற்கு வ‌சிய‌ண்ணாவும் ஹேமாக்காவும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்ற‌ கார‌ண‌த்தை அறிந்தேன். ஊரிலையிருந்து ச‌ன‌ம் கொழும்புக்குப் போய்விட்டு வ‌ருகுகின்ற‌போது ஹேமாக்காவும், வ‌சிய‌ண்ணாவும் கிளிநொச்சிப் ப‌க்க‌மாய் இருக்கின‌ம் என்டு த‌க‌வ‌லை அறிந்து சொல்லிச்சு.. நாள‌டைவில் ஹேமாக்காவை ம‌ற‌க்க‌ வைக்கும்ப‌டி போர் எங்க‌டை ஊர்ப்ப‌க்க‌மாய் திரும்ப‌வும் உக்கிர‌மாக‌த் தொட‌ங்கிய‌து.

4.
95ம் ஆண்டு யாழில் நிக‌ழ்ந்த‌ பெரும் இடம்பெய‌ர்வின்போது எங்க‌ளுக்கு முத‌லில் அடைக்க‌லந்த‌ந்த‌து ஹேமாக்க‌வும் வ‌சிய‌ண்ணாவுந்தான். காட்டையும் குள‌த்தையும் அண்டியிருந்த‌ அவைய‌ளின்றை ம‌ண்ணால் மெழுகிப் பூசியிருந்த‌ வீடு உண்மையிலேயே அந்த‌ நேர‌த்திலே சொர்க்க‌மாய்த்தானிருந்த‌து. சில‌ மாத‌ங்க‌ள் ஹேமாக்கா வீட்டையிருந்துவிட்டு நாங்க‌ள் த‌னியே இன்னொரு இட‌த்திற்குப் போயிருந்தோம். ஆனால் அதிக‌மாய் ஒவ்வொரு பின்னேர‌மும் நான் ஹேமாக்கா வீட்டுப்பக்கமாய் வ‌ந்துபோய்க்கொண்டிருந்தேன். ப‌தின்ம‌ங்க‌ளில் இருந்த‌ ப‌ருவ‌ம். எல்லாவ‌ற்றையும் மூர்க்க‌மாய் நிராக‌ரித்துக்கொண்டு நான் ம‌ட்டும் சொல்வ‌து/செய்வ‌தே ச‌ரியென்று உடும்புப்பிடி பிடித்துக்கொண்டிருந்த‌ கால‌ம‌து. நானும் வ‌சிய‌ண்ணாவும் அடிக்க‌டி அர‌சிய‌ல் பேசி சூடாகிக் கொண்டிருப்போம். அவ‌ருக்கு எங்க‌டை பிர‌ச்சினையில் நிதான‌மாய் இந்தியாவை அணுகியிருக்க‌வேணும் என்ற‌ ஒரு எண்ண‌ம் இருந்த‌து. அதாவ‌து இந்தியாவோடு அணுச‌ர‌ணையாய் இருந்திருந்தால் எங்க‌டை பிர‌ச்சினை எப்ப‌வோ தீர்ந்திருக்குமென்ப‌து அவ‌ருடைய‌ அசைக்க‌முடியாத‌ ந‌ம்பிக்கை. எங்க‌டை இந்த‌ முர‌ண் அர‌சியல் விவாத‌ங்க‌ளை சில‌வேளைகளில் செவிம‌டுக்கிற‌ ஹேமாக்கா, 'உங்க‌ள் இர‌ண்டுபேராலையே ஒரு விச‌ய‌த்துக்கு பொதுவான‌ முடிவுக்கு வ‌ர‌முடியாது இருக்கும்போது எப்ப‌டித்தான் எங்கடை ச‌ன‌த்துக்கு எல்லாம் பொதுவாய் வாற‌ தீர்வு கிடைக்க‌ப்போகின்ற‌தோ தெரியாது' என்று சிரித்துக்கொண்டு சொல்லுவா.

ஒருநாள் இப்ப‌டித்தான் வ‌ழ‌மைபோல‌ அர‌சிய‌ல் பேசி நான் மிக‌வும் கொந்த‌ளித்துக்கொண்டிருநத‌ நேர‌ம். அந்த‌ நேர‌த்தில் வ‌சிய‌ண்ணாவை அடித்தால் கூட‌ப் ப‌ர‌வாயில்லை என்ற‌மாதிரி அவர் மீதான கோப‌ம் நாடி ந‌ர‌ம்புக‌ளில் ஏறிக்கொண்டிருந்த‌போது என்னைய‌றியாம‌லே, 'நீங்க‌ள் ஒரு ம‌னுசரே, எங்கடை ஹேமாக்காவை இந்திய‌ன் ஆமி கெடுத்தாப்பிற‌கும் அவ‌ங்க‌ளைச் ச‌ப்போர்ட் ப‌ண்ணிக்கொண்டிருக்கிறிய‌ள்' என்றேன். என‌க்கே நான் என்ன‌ சொன்னேன் என்று அறிய‌முடியாத‌ உண‌ர்ச்சியின் கொந்த‌ளிப்பு. யாரோ க‌ன்ன‌த்தில் ப‌டாரென்று அறிந்த‌மாதிரி ச‌ட்டென்று எங்கள் எல்லோருக்குள்ளும் தாங்கிக்கொள்ள‌வே முடியாத‌ மிக‌ப்பெரும் ம‌வுன‌ம் கவிழ்ந்திருந்தது. அதுவரை வாஞ்சையோடு என்னைப் பார்க்கும் ஹேமாக்காவின் விழிக‌ள் அப்ப‌டியே உறைந்துபோயிருந்த‌து; என்ன‌ வித‌மான‌ உண‌ர்ச்சியென்று இன‌ம்பிரித்தறியா முடியாத‌ள‌வுக்கு நான் குற்ற‌த்தின் க‌ட‌லுக்குள் மூழ்க‌த்தொட‌ங்கியிருந்தேன். எதுவுமே சொல்லாம‌ல் எவ‌ரிட‌மும் முறையாக‌ விடைபெறாது நான் வீட்டை போய்ச் சேர்ந்திருந்தேன்.

அடுத்த‌ நாள் விடிய‌ அம்மா, 'டேய் த‌ம்பி ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா என்டு ச‌ன‌ம் சொல்லுது... ஓடிப்போய் என்ன‌ நடந்ததெண்டு பார்த்திட்டு வான்று ப‌ட‌பட‌வென்டு கையால் த‌ட்டி எழுப்புகிறா. நான் வோட‌ன் என்னைப் பிடிக்க முயன்ற பொழுதை விட‌ வேகமாய் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்டு அறிய‌ சைக்கிளையெடுத்துக்கொண்டு ஓடுகின்றேன். ஹேமாக்காவுக்கு ஒன்டும் ந‌ட‌ந்திருக்க‌க்கூடாது என்டு எங‌கடை ஊர் வைர‌வ‌ரை நேர்ந்துகொண்டு சைக்கிளை வேக வேகமாய் உழக்குகின்றேன். ஹேமாக்காவை குள‌த்துக்குள்ளாலை இருந்து தூக்கிக்கொண்டு வ‌ருகின‌ம். 'ஐயோ ஹேமாக்கா குள‌த்துக்குள்ளை குதிச்சிட்டா எல்லோரும் ஓடிவாங்கோ' என்டு சிறுவனாய் இருக்கும்போது நான் கத்தியது மாதிரி இப்ப க‌த்த‌முடியாது நான் உறைந்துபோய் நிற்கின்றேன். வ‌சிய‌ண்ணா என்ரை கையைப்பிடித்துக்கொண்டு, 'இந்திய‌ன் ஆமி உம்ம‌ளை கெடுத்த‌து ப‌ற்றி இதுவ‌ரை ஏன் என்ன‌ட்டை சொல்லேலை என்டு ம‌ட்டுந்தான் கேட்ட‌னான் வேறொன்றுமே கேட்க‌வில்லை. ஒன்டுமே பேசாம‌ல் இருந்த‌வா இப்ப‌டிச் செய்வா என்டு நான் க‌ன‌விலையும் நினைத்துப் பார்க்க‌வில‌லை என்று ந‌டுங்கும் குர‌லில் சொல்லிக்கொண்டு இருந்தது என‌க்கு யாரோ பங்கருக்குள்ளிலிருந்து முணுமுணுப்பதுபோலக் கேட்கிற‌து. 'ஹேமாக்கா எழும்புங்கோ நான் வ‌ந்திருக்கின்றேன். உங்க‌ளுக்குத் தெரியுமா உங்க‌ளுக்கு அன்டைக்கு ஆமி அப்ப‌டிச் செய்த‌தைப் பார்த்த‌போது நான் அவ்வளவு காலமும் க‌வ‌ன‌மாய்ப் பொத்திவைத்திருந்த‌ கூலிங்கிளாசையே உடைத்து நொறுக்கின‌வ‌ன்.... நீங்க‌ள் எப்ப‌வும் எங்க‌டை ஹேமாக்காதான். எழும்புங்கோ...எழும்புங்கோ' என்டு ம‌ன‌ம் விடடுக்குழ‌றி அழ‌வேண்டும் போல‌ இருக்கிற‌து. கொலைக‌ளைச் செய்த‌வ‌ர்க‌ளால் ம‌ன‌தை லேசாக்க‌ அழ‌முடிய‌வதில்லை; உள்ளுக்குள்ளேயே ம‌றுகி உருகி த‌ங்க‌ளின்ரை பாவ‌ங்கள் எப்ப‌வாவ‌து க‌ரையாமாட்டாதா என்று காலம் முழுதும் ஏங்கிக் கொண்டிருக்க‌வேண்டிய‌துதான்.