வாழை
ஒரு திரைப்படம் அது முடிந்தபின்னும் உறைந்தநிலையில் சில நிமிடங்கள் எதுவும் செய்ய முடியாமல் உங்களை இருக்கையில் இருக்கச் செய்கின்றது. இத்தனைக்கும் அத்திரைப்படத்தின் கதையை ஏற்கனவே ஒரளவுக்கு அறிந்திருக்கின்றீர்கள். ஆனால் அதைத்தாண்டியும் ஒருவரின் autobiography நம் ஆழுள்ளம் வரை தீண்டுகின்றது. ஒரு சிறுவன் வளர்ந்து ஆடவனாகவோ அல்லது வயதுக்கு வரும் (coming of age) திரைப்படமாக அல்லாது, ஒரு சிறுவனின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவம் ஒன்றோடு ஒரு திரைப்படத்தை முடியச் செய்வதற்குத் துணிச்சல் வேண்டும்.
சமகாலத் தமிழ்த் திரையுலகம் பெருமை கொள்ளக்கூடிய ஒரு படைப்பு இது.
நடன்ன சம்பவம்
பலர் இப்போது புகழ்ந்து கொண்டிருக்கும் மலையாளப் படமான 'அடீயோஸ் அமிகோ' என்னை அவ்வளவாகக் கவரவில்லை. இரண்டு நல்ல மலையாள நடிகர்களையும் வைத்து இன்னும் சிறப்பாக இந்தத் திரைப்படத்தைக் கொண்டுவந்திருக்கலாம் . அதேபோலவே ஸ்டன்டை பிரதான வைத்து எடுக்கப்பட்ட ஆங்கிலப்படமான The Fall Guy ஐ அண்மையில் பார்த்தபோது, அங்கும் அருமையான நடிகர்களை வீணாக்கிவிட்டார்கள் என்று நினைத்தேன். அதிலும் எனக்குப் பிடித்த எமிலி (Emily Blunt) இப்படி ஓர் 'உப்புச்சப்பில்லாத' பாத்திரத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து இருக்கவே கூடாது.
நாம் எல்லோரும் எதிர்கொள்கின்ற/கடந்துவருகின்ற சமகாலப் பிரச்சினையை மட்டுமின்றி, பெண்களுக்குள் மிக இயல்பாய் விரிந்துகொண்டிருக்கும் சுதந்திர வெளியையும் எவ்வித அலட்டலில்லாமலும் இதில் சித்தரித்திருக்கின்றார்கள்.
**************
0 comments:
Post a Comment