கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பிற‌ழ்ந்த‌வ‌னின் வாக்குமூல‌ம்

Friday, April 03, 2009

நானொரு கொலைகார‌னென்ப‌தை
எவரும் ந‌ம்ப‌ப்போவ‌தில்லை.
கொலைக‌ளுக்கான‌ சில‌ வ‌ரைமுறைக‌ளை
கைவ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள்
'கொலை...' என்று ஆர‌ம்பித்த‌வுட‌னேயே
ஏற்க‌ன‌வே செய்ய‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ளின்
ப‌ட்டிய‌லுட‌ன் ஒப்பிட‌த் தொட‌ங்குகின்றார்க‌ள்
முக்கிய‌மாய் கொலையைச் செய்த‌வ‌ன்
தான் கொலை செய்த‌தை ஒப்புக்கொள்வ‌தில்லையென‌வும்
இப்ப‌டி கொலையைச் செய்துவிட்டு
வெளியே ந‌ட‌மாடித் திரிவ‌த‌ற்கு
ச‌ட்ட‌த்தில் ஓட்டைக‌ள் இல்லையென‌வும்
தெளிவான‌ வாத‌ங்க‌ளை வைத்து
நான் கொலை செய்ய‌வில்லையென‌ நிரூபிக்கவும் செய்கின்றார்க‌ள்.

ந‌ன்று.
என‌க்கு அண்மைக்கால‌மாய்
எதிர்கால‌ம் 'க‌ட‌ந்த‌கால‌மாக‌வும்'
க‌ட‌ந்த‌கால‌ம் 'எதிர்கால‌மாக‌வும்'
பிள‌வுப‌ட்ட‌ ம‌னோநிலையில்
எதிர்கால‌த்தில் நிக‌ழ்த்த‌ப்போகின்ற‌ கொலையை
ஏற்க‌ன‌வே செய்துவிட்டேன் என்கின்ற‌போது
உங்க‌ளுக்கு பிற‌ழ்ந்த‌வ‌னின் குறிப்புக‌ள் நினைவுககு வ‌ர‌லாம்.

நான் ஏழாவ‌து முறையாக‌
காத‌லித்து கைவிட்ட‌வ‌ளோடு
ஏற்க‌ன‌வே ஆறுபெண்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில்
க‌ருத்த‌ரித்து வ‌ள‌ர்ந்த‌ காத‌ற் சிசுக‌ளைக் கொன்றேனென‌
அழ‌கிய‌லோடு க‌விதை சொல்ல‌ பிரிய‌முண்டெனினும்
கொலைக‌ள் எப்போதும் குரூர‌மான‌வை
இப்போது கிறுக்கிக்கொண்டிருக்கும் க‌ர‌டுமுர‌டான‌
இந்த‌ ஏதோ ஒன்றைப்போல‌.

கொலை செய்தேன் செய்தேனென‌

என‌தெல்லாப் பிர‌திக‌ளிலும்
எழுதிய‌த‌ன் அலுப்புத் தாங்காது
உண்மைக‌ளை அறிவ‌த‌ற்காய்
விம‌ர்ச‌ன‌க் க‌த்திக‌ளோடு அவச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாய்
பிரேத‌ப் ப‌ரிசோத‌னைக்கு வ‌ருகின்றீர்க‌ள்
முத‌லில் இஃதொரு க‌விதை இல்லையெனும் நீங்க‌ள்
இங்கே பாவிக்க‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள்
ஏற்க‌ன‌வே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வையால்
க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ எழுத்தும் கூட‌
என்கிறீர்க‌ள்.

நான் க‌விதையை அல்ல‌,
கொலைக்கான‌
என் வாக்குமூல‌த்தைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
மேலும்
ஏற்க‌ன‌வே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ சொற்க‌ளனான
ஒரு மொழியில்
வார்த்தைத் திருட்டுக்களைத்தான்
நாமெல்லோரும் செய்துகொண்டிருக்கின்றோமென‌
ஒரு முற்றுப்புள்ளிக்கு அண்மையாக‌ நின்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

பிர‌திக்கு அப்பால‌ல்ல‌
அத‌ற்கு உள்ளேதான் எல்லாம் உள்ள‌தென்று
பூத‌க்க‌ண்ணாடியின் துணையோடு மீண்டும் தோண்டுகின்றீர்க‌ள்
அர்த்த‌ம‌ற்ற‌ சொற்க‌ளென்று வெட்ட‌த்தொட‌ங்கினால்
எஞ்சியிருக்கும் தாளின் முற்றுப்புள்ளியிலும் புதிய‌தொரு அர்த்த‌மிருக்கும்
புன்ன‌கை பூச‌ப்ப‌ட்டவென் சொரூப‌ குண‌த்துக்குள்
நான் செய்த‌ கொலையும் ம‌றைந்திருக்கலாம்

இல்லை, இல்லை
இது உன் ம‌ன‌ப்புதிர்க‌ளால் க‌ட்டிய‌மைத்த‌
ச‌துர‌ங்க‌ப் பெட்டிக‌ளில் எம்மைய‌ழைத்து
முடிவுறாத‌ ஆட்ட‌திற்கான‌ முஸ்தீபுக‌ளென்ற‌ப‌டி
நீ கொலையே செய்ய‌வில்லையென‌ பூத‌க்க‌ண்ணாடியோடும்
க‌த்திரிக்கோலுட‌னும் வெளியேறிவிடுகின்றீர்க‌ள்.
ந‌ண்ப‌ர்க‌ளே உங்க‌ளிட‌ம் ம‌ன்றாடிக்கொண்டிருக்கின்றேன்
த‌ய‌வு செய்து நான் செய்துவிட்ட கொலையைக் க‌ண்டுபிடித்து
கொலைகார‌ன் என்றென்னை அடையாள‌ப்ப‌டுத்துங்கள்.
இவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு
எவ‌ரிட‌மும் பிடிப‌டாம‌ல் இருப்ப‌தென்ப‌து
நான் மிக‌வும் க‌டின‌ப்ப‌ட்டு செய்துவிட்ட‌
கொலையை ம‌திப்ப‌ற்ற‌தாக்கி விடுகிற‌து.


ப‌ட‌ம்: Galatea of the Spheres by Salvador Dali

4 comments:

துர்க்கா-தீபன் said...

நான் உட்பட்ட இன்னொருவனுக்கு இருப்பின் நிஜத்தை சொல்லுமெனில் எத்தனை (காதலின்??) சிசுக்களையும் கருவறுக்கலாம் என்பதான எங்களின் அன்றாடக் கொலைகளின் நியாயங்களில் தாம் நாம் இன்னும் வாழ்கிறோம். இதில் கொலைகாரன் என்றும் கொலையனவன் என்றும் பெரிதாய் பேதமில்லை.

எல்லோரிடமும் தொங்குமொரு வளைகயிறும் தூக்குமரமும் உள்ளது தண்டித்தலின் தருணங்கள் தான் வேறுபடுகிறது. இதுபோன்ற மிகச்சில கணங்களில் தான் தண்டிக்கப்படுதலும் சுகம் என்று உணர்கிறோம். அதுவரை நகரும் பொழுது நகர்ந்து கொண்டே இருக்கும் நிகழும் கொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.


// இவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு
எவரிடமும் பிடிபடாமல் இருப்பதென்பது
நான் மிகவும் கடினப்பட்டு செய்துவிட்ட
கொலையை மதிப்பற்றதாக்கி விடுகிறது.//
உங்களிடமே அகப்படாமல் நீங்கள் செய்த கொலைகள் எனக்கு தெரிகின்றன. கல் வீசும் திராணி அற்று சகலரும் மலையில் இருந்து விலக..உங்களுக்கான பாவமன்னிப்பு தீர்க்கப்படுகிறது. உங்களுக்கான அப்பத்திலும் நீரிலும் இருக்கிறது எங்களின் பாவத்தின் மூலகங்கள்.. அதை நீங்கள் விலக்கவே முடியாதபடி இதன் மூலம் விசுவாசிக்கப்படுகிறீர்கள். உங்கள் பாவத்துக்காக மண்டியிடுவதன் மூலம் எங்களின் பாவங்களை வாசிப்பதான உங்கள் பரிசுத்தம் மீது கருணை பரவக் கடவது.

4/05/2009 03:38:00 AM
தமிழன்-கறுப்பி... said...

இன்னுமொரு முறை வாசிக்கிறேன்...

:)

4/13/2009 04:48:00 PM
DJ said...

துர்க்கா,
விரிவான‌ உங்க‌ள் வாசிப்பு ம‌ன‌துக்கு இத‌மாயிருக்கிற‌து.

த‌மிழ‌ன்‍-க‌றுப்பி,
நாம் எப்ப‌டி வாசிக்கிறோமோ அதுவே அந்த‌ப்ப‌டைப்புக்கான‌ அர்த்த‌மென‌ எடுத்துக்கொள்ளும் சுத‌ந்திர‌ம் இன்றைய‌ கால‌த்தில் வாச‌க‌ருக்குண்டு. என‌வே அவ்வ‌ள‌வு ப‌ய‌ப்பிட‌த்தேவையில்லை :-).

4/14/2009 09:23:00 AM
தமிழன்-கறுப்பி... said...

அதனால்தான் இன்னுமொரு முறை வாசிப்பதாக சொன்னேன் இல்லையேல் புரியவில்லை என்று சொல்லி இருப்பேன். அப்படி ஒரு கவிதையை புரியவில்லை என்று விட்டுவிடுவிட மாட்டேன் :)

நன்றி அண்ணன்..!

4/14/2009 09:43:00 AM