
-ஈரானியத் திரைப்படம் Baranஐ முன்வைத்து-
அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது என்றவாறுதான் பல அகதிகள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களுடன் வாழுகின்ற அகதிகளுக்கு வாழ்வில் சின்னச்சின்னதாய் தம்மை நெகிழ்த்திவிட்டுப்போகும் அழகிய தருணங்கள எத்தகை அருமையானது...