'A Passage North'இல் கிரிஷான் என்கின்ற பாத்திரத்திற்கு ஒரு காதலி இந்தியாவில் இருப்பார். அவரைப் பிரிந்து வந்து நான்கு வருடங்களில் -நனவிடைதோய்தலாக- கிரிஷான் அவரது காதலியான அஞ்ஜமை நினைவுகூர்வார். இந்த நான்குவருடங்களில் நான் நன்கு முதிர்ச்சியடைந்துவிட்டேன், எனக்கு தசைகள் திரண்டு தோள்கள் விரிந்துவிட்டன, இந்த நிலையில் என்னைப் பார்த்தால் அஞ்ஜம் இப்போது என்னை அதிகம் நேசிப்பார் என்று கிரிஷான் நினைப்பார். அப்படி நினைக்கும்போது, அந்த நான்கு வருடங்களில் தன்னைப் போலவே அஞ்ஜமும் முதிர்ச்சியடைந்திருப்பார், ஒவ்வொரு மனிதரும் தாம் விட்டுவந்த காலத்தில் இருந்ததுபோல தமக்குத் தெரிந்த மனிதர்களும் இருப்பார்கள் என்று நம்புகின்றோம். ஆனால் நாம் இடைப்பட்ட காலத்தில் எப்படி மாறுகின்றோமோ அப்படித்தான் அவர்களும் மாறியிருப்பார்கள். அதை மறந்துவிடுகின்றோம் என்று கிரிஷான் பிறகு தனக்குள் இந்த நாவலில் நினைப்பார்.
Showing posts with label பத்தி. Show all posts

வேதனைகள் எழுத்தை உருவாக்குவதில்லை
In இன்னபிற, In பத்தி, In வாசிப்புFriday, November 19, 2021
அதுதான் யதார்த்தம்.
இந்த நாவலில் இது பிரிந்த காதலுக்கு உரியதென்றாலும் இதைப் புலம்பெயர்ந்த எவருக்கும் பொருத்திப் பார்க்கலாம். அது போரோ, பொருளாதார நிமித்தமோ எதுவாக இருந்தாலும் இடம்பெயர்ந்த நிலமும் மனிதர்களும் நாம் விட்டுவந்த காலத்தைப் போல அப்படியே இப்போதும் இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் காலம் வேறுவிதமான பதில்களை நமக்காய் வைத்திருக்கின்றது.
ப்யூகோவ்ஸ்கி இறுதிக்காலத்தில் எழுதிய குறிப்புகள் 'The Captain Is Out to Lunch and the Sailors Have Taken Over the Ship' என்ற புத்தகமாக வந்திருக்கின்றது. தலைப்பே ஒருவிதமாக இருக்கிறது அல்லவா. அந்தக் குறிப்புகளில் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றி ப்யூகோவ்ஸ்கி எழுந்தமானமாக எழுதிக்கொண்டு போவார். அதில் ஓரிடத்தில், எழுத்தாளர்கள் எழுதியவற்றைவிட, அவர்களைத் தனக்குப் பிடித்தமாதிரி இப்படி இருந்திருப்பார்களெனக் கற்பனை செய்வது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது என்பார், ப்யூகோவ்ஸ்கி.
கிட்டத்தட்ட இதேமாதிரித்தான் நான் அனுபவித்தவற்றை, கைவிட்டு வந்தவற்றைப் பற்றி நாங்கள் எங்களுக்குப் பிடித்தமாதிரி நினைத்துக் கொள்கின்றோம்/நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகின்றோமோ தவிர, அதை அப்படியே நாம் நினைப்பதுபோல கடந்தகாலத்தில் இருந்திருக்கச் சாத்தியமில்லை என்பதும் கசப்பான உண்மை. என்றாலும் விழுங்கிக்கொண்டாகத்தான் வேண்டும். ஆகவேதான் கடந்தகாலத்தை நிகழ்காலத்தில் தேடத்தொடங்கும்போது நாம் ஏமாற்றமடைகின்றோம், விரைவில் சலிப்படைந்து போகின்றோம்.
ப்யூகோவ்ஸ்கி எல்லோரையும் விட கவிஞர்கள் மீது மிகுந்த சலிப்பை இந்தக் குறிப்புகளில் காட்டுகின்றார். அவர் சந்தித்த கவிஞர்களைப் பற்றி எழுதிச் செல்லுவது அவ்வளவு அங்கதச் சுவையுடையவை. இந்த இளம் கவிஞர்கள் எல்லாம் எந்தத் தொழிலையும் ஒழுங்காய்ச் செய்யாமல், வசதியாக வாழ்கின்றார்களே எப்படி என்று அதன் ஆழத்தைத் தேடிப் போகும்போது, அநேகமாக எல்லா இளஞ்கவிஞர்களையும் அவர்களின் தாயார்கள் பராமரித்துக் கொண்டிருக்கின்றார் என்பதை ப்யூகோவ்ஸ்கி கண்டுபிடிக்கின்றார்.
அதிலும் ஒரு கவிஞர் தன்னை ஒரு இடதுசாரியாகச் சொல்லிக்கொண்டிருப்பவர். ஞாயிறுகளில் தேவாலயத்தில் கவிதைப் பட்டறைகளையும் அடிக்கடி நடத்துபவர். அந்தப் பட்டறையில் கலந்துகொள்ளும் ஒரு பெண் ப்யூகோவ்ஸ்கியைச் சந்திக்கும்போது, இந்த இளம் கவிஞர் உணவுகள் விற்கும் டிரக்கில் கஷ்டப்பட்டு வேலை செய்து வாழ்கின்றார் என்று சொன்னதாகச் சொல்கின்றார். ஆனால் உண்மையில் இந்த கவிஞர் பல வீடுகளைச் சொந்தமாக வைத்து அதில் வரும் வாடகையில் சொகுசாக வாழ்கின்றவர். இப்படி பொய்சொன்னதை அறிந்த ப்யூகோவ்ஸ்கி இந்த கவிஞர் இருக்கும் அடுக்கத்துக்கு சென்று, Fred, come on down here and I'll kick you ass, you communist land owner!" என்று கத்திக் கூப்பிடுகிறார். அந்தக் கவிஞரோ, ப்யூகோவ்ஸ்கி இங்கிருந்து போய்விடுங்கள் என வீட்டுக்குள் இருந்து கெஞ்சுகிறார். ப்யூகோவ்ஸ்கி கோபத்தில் பியர் போத்தலை வீட்டு யன்னலை நோக்கி எறிந்துவிட்டு பொலிஸ் வரமுன்னர் அந்த இடத்தை விட்டு விலகிப் போவார். ஆக, இந்தக் காரணங்களால்தான் நான் தனியே இப்போது இருக்க விரும்புகின்றேன் என்பார் அவர்.
இது ப்யூகோவ்ஸ்கி இறப்பதற்கு ஒரு வருடம் முன்னர் எழுதப்பட்ட குறிப்புகளில் தொகுப்பு. வாசிப்பதற்கு மிகுந்த சுவாரசியமானது. அசோகமித்ரனுக்கு அவரது மூப்படைந்த காலத்திலும் எப்படி அவரது எழுத்து நீர்த்துப் போகாது இருந்தததோ, அப்படியே ப்யூகோவ்ஸ்கியின் எழுத்துக்களும் அவரின் கடைசிக்காலம் வரை அலுப்படையாதிருப்பதை நாம் இதை வாசிக்கும்போது அவதானிக்கலாம்.
நகுலனின் 'நினைவுப்பாதை'யை வாசிக்கும்போது நவீனன் என்ற கதைசொல்லி, தனது நண்பர்கள் ஏன் எப்போதும் தன்னைப் பற்றியே கதை சொல்லிக்கொண்டிருக்கின்றான் என்று அலுப்படைகின்றார்கள் என அதில் எழுதியிருப்பார். ஆனால் என்ன செய்ய என்னுடைய அனுபவம் இவ்வளவுதான், எனக்கு என்னை அகவயமாகப் பார்ப்பதுதான் முக்கியமாக இருக்கிறதென்று நவீனன் என்ற கதைசொல்லி வாசிக்கும் நமக்கு அடிக்கடி நினைவுபடுத்தியபடி இருப்பார்.
நகுலனுக்கு, ப்யூகோவ்ஸ்கியிற்கு மனிதர்களை விட்டு விலகியிருக்கும் பெருவிருப்பு இருந்திருக்கின்றது என்பது அவர்களின் எழுத்துக்களில் இருந்து எளிதாகப் புரியும். நகுலனையும், பிரான்சிஸ் கிருபாவையும் கூட சிலவேளைகளில் நான் ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்ப்பதுண்டு. நகுலனுக்கு அவருக்கென ஒரு தொழிலும், அவரின் குடும்பத்தினரால் வந்த சொந்த வீடும் இறுதிவரை இருந்ததால் அவர் ஓரிடத்தில் -தனக்குரிய உலகிற்குள் எவரது தொந்தரவுமின்றி- வசிக்க முடிந்திருக்கின்றது.
பிரான்சிஸ் கிருபா அவராக தன் வாழ்வைத் தேர்ந்தெடுத்தாரா அல்லது அவர் வாழ்ந்த வாழ்வு அவரைத் தேர்ந்தெடுத்ததா என்பது குறித்து நாம் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஆனால் நகுலனை, ப்யூகோவ்ஸ்கியை அறியும்போது பிரான்ஸிஸ் கிருபாவுக்கும் அவருக்குரிய உலகில் வாழச் சாத்தியமாகியிருந்தால் இன்னும் நிறைய எழுதியிருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகின்றது. இதன் அர்த்தம் வறுமையைப் பற்றிக் கதைக்கின்றேன் என்று நீங்கள் நினைத்தால் நான் எதைச் சொல்ல வருகின்றேன் என்பதன் அர்த்தத்தை இழந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!
சிலவருடங்களுக்கு முன் பிரமிளை நினைவுகூர்ந்த கூட்டத்திலும் பிரமிளை அவர் வறுமையில் வாழ்ந்தார், தமிழ்ச்சமூகம் கைவிட்டுவிட்டது என்பதுமாதிரி, பிரமிள் வறுமையில் வாழ்ந்த கலைஞர் என்ற விம்பத்தை அவருக்கு அணிவது சரியல்ல என்று யாரோ (எம்.டி.எம்?) எழுதியதை வாசித்தது ஞாபகம் இருக்கின்றது. அவ்வாறு இவர்களை நினைவுகொண்டால் நாம் அவர்களின் எழுத்தில் தோய்ந்த ஆன்மாக்களைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை என்று எளிதாக விளங்கிவிடும். இது அவர்களில் பிழைகளல்ல, அவர்களைப் புரிந்துகொள்ளாமல் நாம் விடும் தவறுகளே இவை.
ஒரளவு வசதியுடன் தமிழகத்திற்கு மலேசியாவிலிருந்து வாழ வந்த ப.சிங்காரம் ஏன் இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதவில்லை என்பதைக் கூட நாம் இந்த இடத்தில் வைத்து விளங்கிக்கொள்ள முயலலாம். இங்கே மீண்டும் ப்யூகோவ்ஸ்கியை நினைவுகொள்கின்றேன். எழுத்தாளர்கள் துன்பப்படுவதாலும், சிலுவையில் ஏற்றப்பட்டு வேதனையுறுவதன் மூலமாகவுமே சிறந்த எழுத்து வருமென்று பாவனை செய்கின்றார்கள். அப்படி விரும்புபவர்களைச் சிலுவையில் அறைய அனுமதியுங்கள். அவர்களை வாழ்த்தியும் விடுவோம். ஆனால் வேதனைகள் எழுத்தை உருவாக்குவதில்லை, எழுத்தாளரே அதை உருவாக்கின்றார் (..but pain doesn't create writing, a writer does.) என்கின்றார் ப்யூகோவ்ஸ்கி.
இப்படித்தான் பலர் அடையாளத்தைத் தாங்கி வைத்திருக்கின்றார்களே தவிர, அதற்கும் அவர்களின் வாழ்க்கை முறைக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இடதுசாரி, பகுத்தறிவு என்று சொல்லிக்கொள்வார்கள், ஆனால் இன்னொருபுறத்தில் பூர்ஷூவாக்களாகவும், சாதிமான்களாகவும் இருப்பார்கள்.
இதற்கும் ப்யூகோவ்ஸ்கியின் ஒரு கவிதைதான் ஞாபகத்துக்கு வருகின்றது. அந்தக் கவிதையின் தலைப்பு:
"I Wanted to Take Down the Government, But All I Took Down was my Best Friend's Wife"
***************
(Sep 23, 2021)
மழைக்காலம்
In பத்திWednesday, October 20, 2010
(2006, சேகரம்)
மழையைச் சந்திக்கும் எப்போதும் நினைவில் வருவது இரண்டு விடயங்கள்தான். தடிமன் வந்துவிடுமோ என்ற பயமும், அவளைப் பறறிய நனவிடை தோய்தலும்தான். மழையை- காதலுடன், மனதை வருட வைக்கும் நினைவுகளுடன், துளித்துளியாய் மனதில் பொழியவைக்கும் எழுத்துக்களை எழுதாத படைப்பாளிகள் மிகக் குறைவே என்றாலும் மழைக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒழுகாத கூரையில்லாத வீட்டை உடையவர்களும், வீடற்று தெருவில் உறங்குபவர்களும் மழையுடன் வேறுவிதமான உறவுகளைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.
ஊரில் இருந்தபோது நோயின் நிமித்தம் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டதால் மழையில் ஒருநாளும் ஆசை தீர நனைந்ததில்லை. ஓடுகளில் கல்லால் எறிவது போல பேரிரைச்சலுடன் விழும் மழைத்துளிகளைக் கேட்டபடி, வீட்டுக்கூரையின் மூலைகளில் பீலியைப்போல(?) வழிந்து ஓடுகின்ற நீரை விடுப்புத்தான் பார்த்திருக்கின்றேன். மேலும் ஓலையால் வேயப்பட்டிருந்த எங்கள் குசினியின் இடுக்குகளுக்குள்ளால் விழும் மழைத்துளிகள், அம்மா செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாணத்தால் மெழுகும் தரையை குழிகளாக்குவதையும் பார்த்துமிருக்கின்றேன். அதைப் பார்க்கும்போதெல்லாம் அம்மா குண்டுத்தோசை சுடும்போது ஒவ்வொரு குழிகளிலும் தோசைமாவை வார்க்கும்போது பொங்கி தோசை வருவதைப் போல இந்தக் குழிகளிலும் நீர் விழுந்து விழுந்து சிலவேளை குமிழிகளை உருவாக்கின்றனவோ என்றுதான் உவமித்துக்கொள்வேன்.
மழைக்காலங்களில் நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணிகள் மீது ஏனோ இனந்தெரியாத பரிவு வந்துவிடுகின்றது. தங்கள் உடலைச் சிலிர்க்கவைக்க மழைத்துளிகளை உதறுகின்ற நாயை, கோழிக் குஞ்சுகளை, ஆட்டுக்குட்டிகளை மிக விருப்புடன் அதிக வேளைகளில் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு . அதுவும் சிலவேளைகளில் மழை பெருமழையாக உருமாறும்போது வீட்டுப் பிராணிகள் எங்கள் வீட்டு விறாந்தைக்கு பெற்றோரால் புலம்பெயர வைக்கப்படுகையில் இன்னும் நெருக்கமாய் அவற்றின் அசைவுகளை அவதானிக்க முடிந்திருக்கின்றது. மழை தொடர்ந்து பெய்கின்றபோது பாடசாலையும் இல்லாது வீட்டுக்குள் முடங்குகின்றபோது புத்தகங்களோடு விட்டுவிட்டு சில உரையாடல்களை நிகழ்த்த முடிந்ததில் ஒருவிதமான இதம் இருக்கிறது. வீட்டின் ஒரு அறை முழுதும் புத்தகங்களே நிரம்பியிருக்கும். அப்பா, நூலகங்களில் வருட இறுதிகளில் புத்தகங்கள் ஏலத்துக்கு போகும்போது விகடன், கல்கி, கல்கண்டு, கலைக்கதிர் (?), சினிமாப் புத்தகங்கள் என்று அள்ளிக்கட்டி கொண்டு வருவார். இவ்வாறான மழைப் பொழுதுகளில் அந்தப்புத்தகங்களை விறாந்தையில் வாரம்,மாதம் என்ற ஒழுங்கில் அடுக்கி பரப்பி மகிழ்வதுதான் எனது பொழுதுபோக்காய் இருக்கும். அப்படிச் செய்வது என்றுமே அலுக்க்காத விசயமாக இருந்திருக்கின்றது. அப்பாவுக்கு இருந்த புத்தகங்களின் மீதான வாஞ்சையும், அக்காவுக்கு வாசிப்பில் இருந்த தீராத மோகமும்தான் என்னைப் புத்தகங்கள் வாசிக்கத்தூண்டியிருக்கலாம் என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகின்றது.. இப்படி எடுக்கப்பட்ட சஞ்சிகைகள் அத்தியாயம் அத்தியாயமாய் கட்டப்பட்டுத்தான், சாண்டியல்யனின் கடல் புறா, யவனராணி, சுஜாதாவின் பலகதைகள்(கரையெல்லம் செண்பகப்பூ இப்போதும் நினைவிலிருப்பது) போன்றவற்றை வாசிக்க முடிந்திருக்கிறது. இப்படி தொடராய் வந்தவற்றை அதுவும் ஓவியங்களுடன் வாசிப்பதில் இனம்புரியாத மகிழ்ச்சியும், உயிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.
மழைக்காலத்தில் மறக்கமுடியாத இன்னொரு நினைவு என்னவென்றால், அளவெட்டியையும் அமபனையையும் இணைக்கும் வீதியில் சைக்கிளோட்டிப் போவது. அந்த வீதியால போகும்போது இரண்டு பக்கமும் பசுமையாய் விரிந்திருக்கும் வயல்களில் இலயிக்காமல் எவரும் அவ்வளவு இலகுவில் கடந்துவிடமுடியாது. கமம் செய்வதற்கு நிலம் என்று எங்களுக்கு எதுவும் இல்லாதபோதும் வயல் மீது இருக்கும் என் காதல் அளவற்றது. அம்மாவோடு வீட்டில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு புல்லுச் செருக்குவதாய்ப் போவதிலிருந்து… அறுவடைகள் முடிந்தபின் மிளகாய்ச்செடிகளை இன்னபிற பயிர்களை விறகுக்காய் சேகரிப்பதிலிருந்து… ஊரில் இருந்தவரை எனக்கு வயல்களோடு நெருக்கமான பிணைப்பு இருந்திருக்கின்றது. அவ்வாறான ஒரு பொழுதில்தான் அண்ணா வாங்கிகொண்டுவந்த கொத்துரொட்டியை வாழைத்தோட்டம் ஒன்றில் முதன் முதலாய் சாப்பிட்டதும்… இன்னும் பசுமையாய் இருக்கிறது. இந்த குண்டும் குழியுமான -தாரையே தசாப்தங்களாய் காணாத- வீதியால் போகும்போது, என் வயதொத்தவர்கள் அல்லது குறைந்தவர்கள் வாழைக்குற்றிகளை, முறிந்து மிதக்கும் மரக்கிளைகளை படகாக்கி மழைக்காலங்களில் விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க ஆசை நுரை நுரையாகப் பொங்கத்தொடங்கும் (வழமையான நிலப்பிரசினைகளால் ஒவ்வொருத்தரும் நிலத்தை வெட்டி வெட்டி வீதி சிறுத்துக் கொண்டுபோனது இன்னொரு சுவாரசியமான விடயம்). நோயின் காரணத்தாலும் பெற்றோர் கண்டு விட்டால் என்னாகும் என்ற பயத்தாலும் வீதியில் நின்று அவர்களை இரசித்துவிட்டு கையசைத்துவிட்டு நகர்ந்தபடி இருந்திருக்கின்றேனே தவிர அவர்களோடு அசைதீர மழைநீரில் ஒருநாளும் சேர்ந்து விளையாடியது கிடையாது.
புலம்பெயர்ந்து வந்தபின்னும் மழையில் ஆசைதீர ஒருநாளும் நனைந்ததில்லை. அவள் -நான் இன்று முழுவதுமாய் மழையில் நனைந்தேன்- என்று சிலிர்த்துக் கூறியபோது என்னால் ஏன் இப்படி ஒருபோதும் இருக்கமுடியவில்லை என்றுதான் எண்ணத்தோன்றியது. வீட்டையே உலகமாய் திணிக்கப்படும் பெண்களுக்கு மழை -என்னால் புரிந்துகொள்ளமுடியாத- பல மொழிகளை அவர்களுக்காய்ப் பேசவும் கூடும். ஒரு மழைப்பொழுதில் பிறர் பற்றிய பிரக்ஞையின்றி நனைதல் என்பது ஒரு பெண்ணுக்கு மிகபெரும் சுதந்திரமாயும் இருக்கலாம். அவள் -உன்னோடு நனையும் ஒரு மழைப்பொழுதுக்காய் காத்திருக்கின்றேன்- என்கின்றாள். மழையை வீட்டுக்குள் இருந்து மட்டும் இரசித்துக்கொண்டிருப்பவனுக்கு அது எவ்வ்ளவு சாத்தியம் சாத்தியமின்மை என்று தெரியாதபோதும் என்றேனும் ஒருநாள் அவளோடு மழையில் முழுதாய் நானும் நனைந்துவிடக்கூடும் போலத்தான் தோன்றுகின்றது.
அப்போது…அந்தப் பொழுதை என்ன பெயரிட்டு அழைப்போம் கண்ணே?
(Friday, May 26th, 2006 at 8:55 am)

நாம் இருக்கும் கனடாவில்...
In பத்திFriday, April 02, 2010
(1)
பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, ரொறொண்டோவிலுள்ள காவற்துறையால், 'கறுப்பினத்தவர்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளையினத்தவர்களைச் சேர்ந்தவர்களை விட மூன்று மடங்கு நிறுத்தப்படவும், அடையாள அட்டைகளைக் கேட்கவும் செய்யப்படுகின்றார்கள்' என்று கூறப்படுகின்றது. இத்தகைய நிறவேறுபாடு ரொறொண்டோ பொலிசிடம் இப்போதுதான் அடையாளங் காணப்படுகிறது என்பதல்ல. கிட்டத்தட்ட எட்டு வருடங்களிற்கு முன்னும் இவ்வாறு காவல்துறையினர் நிறவேறுபாடு காட்டுகின்றார்கள் எனச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வழமைபோல அப்போது பொலிஸ் உயரதிகாரிகள் இது குறித்து கவனிக்கிறோம் என்று கிடப்பில் போட்டிருக்கின்றார்கள் போலும். இல்லையெனில் எட்டு வருடங்களின் பின் செய்யப்பட்ட இந்த ஆய்வு இன்னும் நிறவெறி இருக்கிறது என்று விரித்துக் கூறியிருக்காது. மிகுந்த அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கும் பொலிஸ் குறித்து வெளியிடப்படும் பிற குற்றச்சாட்டுக்கள் (இலஞ்சம் வாங்குதல்/போதைமருந்துக் கடத்தலிற்கு உடந்தையாக இருத்தல்) போன்றவை கூட கடந்தகாலத்தில் சாதாரண எடுத்துக்கொள்ளப்பட்டு 'காவற்துறையின் கண்ணியம்' காக்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் முக்கியமாய், இந்த அறிக்கையில் பொலிஸால் 'மண்ணிற' நிறமுடையவர்களும் இவ்வாறு கறுப்பின மக்களைப் போல நிறுத்தவும் அடையாள அட்டைகள் காட்டவும் கேட்கப்படுகின்றார்கள் என்பது கவனிக்கத்தது. இந்த 'மண்ணிற'வகைக்குள் அடக்குபவர்களில் நாங்களும் இருக்கின்றோம் என்பதை நினைவூட்டத்தேவையில்லை. மேலும் பொலிஸ் ஒருவரை நிறுத்தி விசாரிக்கும்போது அவர்களிற்கு உரிய ஒரு புத்தகத்தில் விசாரிக்கப்படும் நபர் நிறம், பெயர், முகவரி, உட்பட அவர் விசாரிக்கப்படுவதற்கான காரணமும் எழுதப்படவேண்டும் என்று அறிவுறுத்தபபடுகின்றது. ஆனால் தனிமனிதருக்குள்ள உரிமையில், தடுத்து நிறுத்தி விசாரிக்கப்படும் ஒருவர், தனது சுயவிபரங்களை (பெயர், முகவரி) என்பவற்றை பொலிஸிடம் கொடுக்காது இருக்கமுடியுமெனச் சட்டம் கூறுகின்றது. அதேசமயம் பொலீஸ் இவ்வாறு விபரங்களைக் கேட்கும்போது ஒருவர் கொடுக்க மறுத்தால், அவரைச் 'சந்தேகத்திற்குரிய நபர்' என்ற வகைக்குள் அடக்கி மேலும் தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தும் அபாயமும் இருக்கிறது என்று இந்த ஆய்வு கவனத்திற்கு உட்படுத்துகிறது.
பொலிஸ் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைக் குறைக்கும்பொருட்டு, பொலிஸின் தவறான விசாரணைகளை நாம் நமது தொகுதிகளில் நாம் தேர்ந்தெடுக்கும் கவுன்சிலர்கள், எம்பிமார்களின் கவனத்திற் கொண்டுவரலாம். பொலிஸ் என்பது நமது வரிப்பணத்தில் நமக்காக நடத்தபடுகின்ற் ஒரு அமைப்பே தவிர, அவர்கள் கூறும் அனைத்தையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை நாம் நினைவில் இருத்தியாக வேண்டும். மேலும் சிறுபான்மையாகவுள்ள (minorities) பல்வேறு சமூகங்களிலிருந்து காவற்துறைக்கு ஆட்களைச் சேர்க்கவேண்டும் என்று நாம் பொதுவெளியில் வலியுறுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, நிறத்தைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்தை ஆக்குபவர்களாகவும், காவற்துறையில் நிறைய இடங்களில் இருப்பவர்களாகவும் இருக்கும்போது அவர்களால் 'மற்றவர்களை' (சிறுபான்மையினரை) அவ்வளவு எளிதாக விளங்கிக்கொள்ள முடியாது.
(2)
இதேபோன்று ரையசன் (Ryerson) பல்கலைக்கழகத்தை முன்வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றையும் நாம் கவனிக்கவேண்டும். ஒராண்டு காலமாய் பல்கலைக்கழகத்தின் பல்வேறு மட்டத்தில் கலந்துரையாடியும், திறந்தவெளியில் கருத்துக்கேட்டும் வெளியிட்டப்பட்ட இவ்வறிக்கை ரையசன் வளாகத்தில் நிறவெறி உயர்மட்டத்தில் அதிகம் நிலவுவதாகக் கூறுகின்றது. முக்கியமான பல்கலைக்கழக அலுவலக உயர்மட்டத்தில் வெள்ளையினத்தவர் அல்லாத சிறுபான்மையினர் மிக்ககுறைவாக உள்ளதாகக் கூறுகின்றது. அத்துடன் சில பேராசிரியர்கள் மற்றும் பணிபுரிவோர் போன்றோர் பிற சிறுபான்மையினரைக் கவனத்திற்கொள்ளாது வகுப்பில் பகிடிகள் விடுவதாகவும், பிற மாணவர்கள் இவ்வாறு சிறுபான்மையினரை வகுப்புக்களில் கேலிசெய்யும்போது உரிய நடவடிக்கைகள் எடுப்பதில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ரையசனில் படிக்கும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த ஒருவர் 'வீடற்றவர்' (homeless) என அடையாளப்படுத்தப்பட்டு வளாகத்தின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வறிக்கையை எழுதியவர்கள், நிறவெறிக்கு எதிரான, காலனியாதிக்கத்திற்கு எதிராக, முஸ்லிம் வெறுப்புணர்வுக்கு எதிராக, யூதர் வெறுப்பு எதிராக பல்வேறு பாடங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டுமெனப் பரிந்துரைந்திருக்கின்றது. மேலும் கறுப்பின மற்றும் பூர்வீகக்குடியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களைப் போன்ற சிறுபான்மை சமூகங்களிலிருந்து இன்னும் நிறையப் பேராசிரியர்களை வேலைக்கு அமர்த்தவேண்டுமென எதிர்பார்ப்பதாய்க் கூறியிருக்கிறார்கள். இவ்வறிக்கையை அடுத்து பல்கலைக்கழகத்தின் தலைவர், ஒரு குழுவை அமைத்து இவ்வாறான விடயங்கள் தொடர்ந்து நிகழாது பல்வேறுமட்டங்களில் விழிப்புணர்வு செய்யப்படுமெனக் கூறியிருக்கின்றாரெனப் பத்திரிகைச் செய்தியொன்று கூறுகின்றது.
(3)
ஜனவர் மாதத்தில், ரெண்டனில்(Trenton) இருக்கும் விமானப்படைத்தளத்தின் ஒரு பகுதியிற்குப் பொறுப்பாக இருக்கும் கேணல் ரஸல் வில்லியம்ஸ் (Russell Williams) இரண்டு பெண்களைக் கொன்ற குற்றத்திற்காய் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இரண்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார். ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா, கனடாப் படைகள் செய்யும் அட்டூழியங்கள் நாம் அறியாததுமல்ல. அண்மையில் ஆப்கான் சிறைச்சாலைகளில் மிகக்கொடூரமாய் கனேடிய படைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று அறிக்கையை வைத்து பாராளுமன்றத்தில் விவாதம் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டே கனேடிய பிரதமர் ஹார்ப்பர் பாராளுமன்றத்தை நீண்டகாலத்திற்கு ஒத்திவைத்திருக்கின்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். கனடாப் படைகளுக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும், ஆக்கிரமிப்பு நிலங்களில் இருப்பதை வலதுசாரி பிரதமரும் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்களும் விரும்புகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் தேசியம் என்ற பெயரால் கனேடிய படைகள் செய்யும் துஷ்பிரயோகங்களையும் பாலியல் வன்புணர்ச்சிகளை மூடிமறைக்கத் தெரிந்த அரசுக்கு இப்படி ஒரு கேணல் தரத்தைச் சேர்ந்தவர் இரண்டு பெண்களைக் கொன்றதும், மேலும் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையும் மறைக்கமுடியாது விழிபிதுங்கி நிற்கவேண்டியிருக்கிறது. எந்த நாட்டு அரசும் தனது அதிகாரவர்க்க காவலாளிகளான இராணுவம் பொலிஸ் என்பவற்றை -அவை எந்தத் தவறைச் செய்தாலும்- விட்டுக்கொடுக்க அனுமதிப்பதில்லை. நாட்டின் இறையாண்மையைக் காரணங்காட்டி இவற்றை 'சாதாரண' விடயமாக்கிவிடுவார்கள்.
ஏன் இவ்வளவு குற்றச்சாட்டுக்கு உள்ளான கேணல் கூட இன்னும் சில வருடங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துவிடவும் கூடும். இராணுவம், பொலிஸ் என்ற அதிகார மையங்கள் எப்போதும் அப்பாவிகள் மீதே தனது பலத்தை நிரூபித்து தாம் தமது கடமைகளைச் செய்துகொண்டிருப்பதாய்க் கூறிக்கொண்டிருப்பார்கள். இந்தக் கேணலின் விவகாரத்தோடு, புதிய ஜனநாயக் கட்சியினர் (NDP) இராணுவ உயர்மட்டங்களில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், அதிகாரங்கள் குவிந்து துஷ்பிரயோகமும் செய்வதைத் தவிர்ப்பதன் பொருட்டும், இராணுவம் சாராத மக்களிலிருந்து தெரிவுசெய்யப்படும் அலுவலகர் ஒருவர், இவ்வாறான இராணுவமையங்களில் அமர்த்தப்படவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை வைத்திருக்கின்றார்கள். முன்னர் சோமாலியாவில் கனேடியப் படைகள் இவ்வாறான துஷ்பிரயோகம் செய்த காலங்களில் இவ்வாறான ஒரு சிவில் அலுவலகர் நியமிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ஆனால் மக்கள் நலன் சார்ந்து தொழிற்படும் ஒரு அரசாக அல்லாத வலதுசாரிகளைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் இவ்வாறான கோரிக்கைகள் எல்லாம் வலதுசாரி அரசின் காதில் ஏறுமா என்பதும் சந்தேகமே.
எழுதுவதற்கு உதவிய இணைப்புக்கள்:
(1) www.thestar.com/news/gta/article/761551--when-good-people-are-swept-up-with-the-bad
(2) www.thestar.com/news/gta/education/article/762011--ryerson-told-to-crack-down-on-racist-chill
(3) www.thestar.com/news/ontario/article/762152--cfb-trenton-chief-charged-with-murder-of-two-women
(நன்றி: வைகறை, Mar, 2010)

புத்தரும், அவனும் - 01
In பத்திSaturday, February 20, 2010
நீண்டநாள் காணாமற் போயிருந்த புத்தரை இன்று மீண்டும் அவன் தனது கணனி மேசைக்கடியில் ஒளிந்திருப்பதைக் கண்டான். பனிக்காலம் தொடங்கி அறையெல்லாம் சில்லிட்டுக்கொண்டிருக்க புத்தர் நடுநடுங்கியபடி இருந்தார். காடு, மலை, மழை எல்லாவற்றையும் புறக்கணித்து நெடுந்தூரம் அலைந்து திரியும் புத்தர் இப்படிப் பயந்து ஒடுங்கியபடி அவனது அறைக்குள் இருந்ததற்கு இந்தப் பனிக்காலம் மட்டும் காரணமாயிருக்காது என்பது தெளிவாகப் புரிந்தது.
புத்தரை இறுதியாய்ச் சந்தித்த பின்பான இடைவெளியில், நிகழ்ந்த எத்தனையோ விடயங்களை அவரிடம் பகிர்வதற்கு தன்னிடம் இருக்கின்றது என்ற எண்ணம் அவனுக்குள் நிறைந்து வழிய ஆரம்பித்தது. எனினும் வழமைபோல அவனது வீட்டுக்கு வருகைதருபவரைப் போல் இன்று புத்தர் இருக்கவில்லை.... அது ஏன் என்ற கேள்வி அவனுக்குள் சஞ்சலத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தது. வருகின்ற வழியில் எங்கையேயாவது ஆற்றில் அவனுக்காய் வெள்ளைத் தாமரைகளை ஆய்ந்து வர புத்தர் ஒருபோதும் மறப்பதேயில்லை. இன்றைய நாளில் அவனுக்காய் எந்தப் பூவையும் கொண்டுவரவில்லை என்பதோடு அவரது கரங்கள் சிவப்பு நிறமாய்க் கண்டிப்போய் இருந்ததைப் பார்க்கும்போது மனதிற்குள் சிறுவலி மின்னலாய் வெட்டிவிட்டுப்போயிருந்தது.
அவனது சகோதரர்களின் பிள்ளைகள் ஓடிப்பிடித்து விளையாடும்போது மேசைக்கடியில் ஒளிந்திருப்பதுபோல புத்தரும் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது அவனுக்கு ஒருமாதிரி இருந்தது (கண்ணை மூடினால் எவரும் கண்டுபிடிக்காமாட்டார்கள் என்பது குழந்தைகளின் மனத்துணிபு). சிறியவர்களோடு என்றால், அவர்கள் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாலும், காணாததுமாதிரி நடிக்கமுடியும், ஆனால் புத்தரோடு அப்படியெல்லாம் விளையாடமுடியாது அல்லவா? இந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது என்ற ஒரு திணறல் பனிக்காலத்தில் உரிய ஆடைகளை அணியாது வெளியே போனது போன்ற நிலைக்கு நிகராய் அவனுக்குள் உருவாககத் தொடங்கிவிட்டது
சாதாரணமாய் சந்திக்கும் புத்தர் என்றால் இப்போது கிண்ணங்களில் வைனையோ அல்லது கிழக்காசியாவிலிருந்து பிரத்தியேகமாக் புத்தர் தனது காவித்துணியில் மடித்துக்கொண்டுவரும் தேயிலையையோ வைத்து.... உருவாக்கிய தேநீரையோ அருந்திக்கொண்டு உரையாடிக்கொண்டிருப்பார்கள். திரவங்கள் நிறைந்த கிண்ணங்கள் காலியாக ஆக மனதும் விருப்பு வெறுப்புமற்ற ஒரு வெற்றிடமாய் மாறிக்கொள்ளத் தொடங்கும். பிறகு எல்லாமே புதிதாய்த் தோன்றுவதுமாதிரியும் எதையும் எதிர்கொள்ளலாம் என்ற தெம்பும் அந்தக்கணங்களில் பொங்கித் ததும்பத் தொடங்கியிருக்கும். ஆனால் இப்போது புத்தரின் நிலைமையைப் பார்த்தால் அதற்கான சாத்தியமே எதுவும் இல்லாதது போலத் தோன்றியது..
புத்தர் நிறைய விடயங்களை கற்பிக்கின்றோம் என்ற பிரக்ஞையில்லாது அவனுக்குள் ஊட்டியிருக்கின்றார். அவன் கண்ட கனவுகளைக் கூட சில இடங்களில் நிஜமாக்கியிருக்கின்றார். ஒரு மழைநாளில் வந்த புத்தரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது முளைத்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணையும் அவளின் குழந்தையும் நிஜமாகவே -3 வருடங்களின் பின்- அவன் தன் வாழ்வில் சந்திததபோது அவனுக்கு மிகவும் வியப்பாயிருந்தது. இன்று அவளும் அவள் குழந்தையும் துயர் கடந்த காலங்களைக் கடந்து ஒரு இளவேனிலுக்காய்க் காத்திருக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் புத்தருடன் பகிரவேண்டும் என நீண்டநாட்களாய் நினைத்துக்கொண்டிருந்தான்.
புத்தருடன் ஓர் இரவு
-இளங்கோ
மழைத்தூறல் ஓய்ந்து
ஈரம் இரவை
சிறகுகளால் கோதிக்கொண்டிருந்தபோது
வீட்டுக்கு வந்திருந்தார்
புத்தர்
Santa மட்டுமே
புகைக்கூண்டுக்குள்ளால் இறங்குவார்
என்றெண்ணிய
என் நான்கு வயது மகளுக்கு
கோடையில்
சாம்பர் பூத்திருந்த அடுப்பிலிருந்து
தூசி தட்டியபடி
புத்தர் வந்தது வியப்பாயிருந்தது
நான் அருந்துவதற்கு
மிதமாய் கலந்துவைத்திருந்த
வோட்காவை பகிர்ந்தபோது
ஒவ்வொரு மிடறும்
தாகத்திற்கு இதமாய் இருக்கிறதென்றார்
அரசியல் சினிமா
ஜென் செக்ஸ் என
ஒரு பட்டத்தைப்போல
திசையில்லாது உரையாடல் அசைந்துகொண்டிருக்கையில்
புத்தர் திடீரென வினாவினார்
கடந்துபோன காலத்தில்
நீ இழைத்த தவறுகளுக்கு
வருத்தம் கூற விரும்புகின்றாயாயென
நான்
பாவங்கள் விளைவித்த
மனிதர்கள் நிரையாக நிற்க
வெட்கிக் குனிந்தபடி
நடுங்கும் குரலில்
கோருகின்றேன் மன்னிப்பு
இப்போது
மனது மேகமாய் மிதந்து
குதூகலம் மழைநீராய் திரண்டபோது
DJ drop the s*** என்றலறியபடி
ராப் பாடலுக்கு ஆடத்தொடங்குகின்றோம்
நானும் புத்தரும்
நேரம் நள்ளிரவைக்கடந்தபோது
வெறுமையான மதுக்கோப்பைகளையும்
சில நட்சத்திரங்களையும்
துணைக்கு விட்டுவிட்டு
புத்தரும்
எனது நான்குவயது மகளும்
காணாமற்போயிருந்தனர்.
2.
மதியவுணவு
இடைவெளிகளின்போதுதான்
முகையவிழ்த்திருந்தது அவளுடனான நட்பு
அவளையும் இரண்டுவயதுக் குழந்தையையும்
சில மாதங்களுக்கு முன் கைவிட்டு
இன்னொரு பெண்ணுடன்
தன் துணைவன்
வாழத்தொடங்கியிருக்கின்றான்
என்றாள் விழிநீரைத்துடைத்தபடி
எனக்கு வாய்த்ததைப் போல
புத்தர்
அவள் வீடு தேடி
ஓர் இரவில் போகக்கூடும்
அல்லது
அவளிடமும் அவள் குழந்தையிடமும்
நான் புத்தரையும்
காணாமற்போன என் நான்கு வயதுக்குழந்தையும்
என்றேனும் ஒருநாள்
அடையாளம் காணவும்கூடும்.
(Aug 25/2005)
நன்றி: வைகறை (தை, 2010)

சே குவேரா, சுகுமாரன், லிவிங் ஸ்மைல் வித்யா: சில குறிப்புகள்
In பத்திWednesday, September 02, 2009
உலக அளவில் இன்று அரசியல் என்பது மாற்று, எதிர்ப்பு என்பவற்றை விடுத்து ஒருவித பித்த உறக்கத்தில் இருப்பதன் பயங்கரம் அச்சத்தை அளிக்கிறது. அறங்களைப் பற்றி பேசுவதும் அற அழுத்தங்களைப் பதிவு செய்வதும் பயங்கரவாதம், வன்முறை என்று அடையாளப்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் விடுதலை என்பது பற்றிச் சிந்திப்பது ஒரு கவித்துவமான ஆறுதலை மட்டுமே தரக்கூடியதாக உள்ளது.
(பிரேம் -ரமேஷ்: கட்டுரையும் கட்டுக்கதையும்)
1.
சில புத்தகங்களை அதிக ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கும்போது அவற்றிலிருந்து எடுத்துக்கொள்ள எதுவுமில்லையென்ற வெறுமை வந்துவிடும். எதிர்பார்ப்பில்லாது வாசிக்கும் சில புத்தகங்களோ சிலவேளைகளில் சுவாரசியமான வாசிப்பனுவத்தை எதிர்பாராது தந்துவிடுகின்றன. ஏற்கனவே அங்குமிங்குமாய் உயிர்மையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த காரணத்தால் -ஒரளவு அசுவாரசியமான நிலையிலே- தனிமையின் வழி என்னும் சுகுமாரனின் பத்தித் தொகுப்பை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். பக்கங்களைப் புரட்ட புரட்ட புறக்காரணங்களால் சோர்ந்துபோயிருந்த மனது நெருக்கமான கரங்களினால் இதமூட்டப்பட்டது போன்ற உணர்வுநிலைக்கு வந்திருந்தது. எத்தனைவிதமான மனிதர்களை.., எத்தனை விதமான உணர்ச்சிநிலைகளை சுகுமாரன் எதிர்கொண்டாரோ அவற்றையெல்லாம் வாசிக்கும் நம்மிலும் படிவதுமாதிரியான அனுபவத்தை இத்தொகுப்பு தோற்றுவித்திருந்தது. தன்னை நோகடித்திருந்தாலும், எந்த மனிதரையும் அவமானப்படுத்த விரும்பாத, அவர்களின் பலவீனங்களை ஏற்றுக்கொள்கின்ற ஒரு பத்தியெழுத்தாளராக சுகுமாரன் மாறுகின்றபோது இன்னும் நெருக்கமுடையவராக மாறிவிடுகின்றார்.
கவிஞர்களாலும் நல்ல பத்தியெழுத்தாளராக முடியும் என்ற நம்பிக்கையை பிரமிளுக்குப் பிறகு துல்லியமாகக் கண்டறிந்தது கொண்டது சுகுமாரனிடம் எனச் சொல்லலாம். இத்தொகுப்பில் கூறப்படும் சில (அவமான) அனுபவங்கள் சில பொழுதுகளில் கள்ளிக்காடு பாலச்சந்திரனின் சிதம்பர நினைவுகளை நினைவுபடுத்தியிருந்தது. இருவரினதும் அனுபவங்கள் வெவ்வேறானவை என்றாலும், நிகழும் நிலப்பரப்புக்கள் ஒன்றென்பதால் அவ்வாறான இணைப்பை எனது மனது பொருத்திப் பார்த்ததோ என்ற சந்தேகமும் உண்டுதான்.
வீட்டை விட்டு (இரண்டு முறை) ஓடிபோதல், அப்பாவைப் பிரிந்து அம்மாவோடும் சகோதரிகளோடும் வாழ்வது என்று பலவேறு துயர நினைவுகளைச் சுமந்திருந்தாலும், அவற்றைக் கூட வாழ்வில் இயல்புகளில் சிலவாய் இருக்கக்கூடும் என்று சுகுமாரன் எழுதிப்போவது பிடித்தமானது. ஆர்.ஷண்முகசுந்தரத்தை சந்திக்கும்போது அவர் படைப்புச் சார்ந்து கதைக்காது பிற விடயங்களைக் கதைத்து, இலக்கியம் சோறு போடாது என எச்சரிப்பதும், காஃப்காவினால் பரிட்சயமாகும் சிற்றிதழ் வெளியிடும் நண்பரொருவர் கடும்போதையால் இளவயதில் இறந்துபோவதையும் வாசிக்கும்போது இலக்கியம் சார்ந்த கசப்பே கவியத்தொடங்குகின்றது. ஆனாலும் இவ்வாறான கடந்தகால கசப்பான நிகழ்வுகளையும் தாண்டி ஏதோ ஒரு மர்மமான சுழல்தான் பலரை இன்னுமின்னும் படைப்பிலக்கியம் சார்ந்து தீவிரமாய் இயங்கவைத்துக்கொண்டிருக்கின்றது போலும்.
ஒரு பத்திரிகையாளராக சில்க் சுமிதாவைச் சந்திப்பதும், சுமிதா கவிஞராக இருக்கும் தனது சுயமரியாதையைக் கேலிபண்ணிவிட்டதாக பத்தியெழுத்தாளர் மனங்கோணுவதும், பிறகு சில்க் சுமிதாவின் தற்கொலை செய்த உடலைப் பார்க்கும்போது, எத்தனையோ ஆயிரமாயிரம்பேர்களின் கனவுகளில் வந்த ஒரு உடல், யாருமே கவனிக்காத உடலமாகிப்போன அபத்தத்தையெல்லாம் மனதில் ஊடுருவிச்செல்லும்படியாக சுகுமாரன் எழுதியிருக்கின்றார். சுகுமாரன் தன்னளவில் கவிஞராக இருப்பதோடு வெகுசன ஊடகங்கங்களிலும் பணிபுரிந்ததால் விசாலமான நிலப்பரப்புகளில் நிகழ்ந்த பலவேறு சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன.
2.
தனிமையின் வழி தொகுப்பைவிட அண்மையில் அதிகம் பாதித்த/வியந்த ஒரு நிகழ்வென்றால் லிவிங் ஸ்மைல் வித்யாவினது நான் வித்யா என்ற சுயசரிதை நூலை முன்வைத்து ஆஹா எப்ஃ எம்மில் நிகழ்ந்த நேர்காணல். எத்தனையோவிதமான அவமானங்களையும், துயரங்களையும் வித்யா பெற்றிருப்பார். நமது சமூகம் கொடுத்த/கொடுத்துக்கொண்டிருக்கும் வலிகளையும் தழும்புகளையும் மனதில் இருத்திக் காழ்ப்புக்கொள்ளாது (அவ்வாறிருப்பதற்கான அனைத்து உரிமையும் வித்யாவிற்கும் இருந்தும்) மிக நிதானமாய் தனது வலிகளை -மெல்லிய சிரிப்பால் கடந்து- இன்னும் திருநங்கைகளுக்காய் இச்சமூகம் மாறவேண்டிய முக்கிய புள்ளிகளை அந்நேர்காணலில் தொகுத்து அளித்திருந்தார். நாம் எல்லோருமே கொஞ்ச நேரம் ஒதுக்கியேனும் இந்நேர்காணலைக் கேட்பதென்பது நாமின்னும் திருநங்கைகளை அணுக்கமாக அணுக உதவக்கூடும். லிவிங் ஸ்மைல் வித்யா வெளிப்படையாக தனது சுயசரிதையாக எழுத வந்தது... திருநங்கையாக இல்லாதவர்களை மட்டுமில்லை, திருநங்கைகள் என்று அறிந்தும் சமூகத்தின் முன் வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குகின்றவர்களையும் பாதித்திருக்கிறது என்றே நம்புகின்றேன். திருநங்கைகளாக தங்களுக்கான உரிமைகளைக் கேட்கும்போதுகூட காலங்காலமாய் நாங்கள் வைத்திருக்கும் வெளியில் தங்களுக்கான இடத்தைக் கூடக் கோரவில்லை; தமக்கான தனித்துவமாயிருக்கும் ஒரு வெளியை அங்கீகரிகக மட்டுமே வித்யா போன்றோர் வேண்டுகின்றார்கள்; திருநங்கைகள் போன்ற விளிம்புநிலை மனிதர்கள் மட்டுமில்லை ஏனைய மாற்றுப் பாலினத்தவர்களும் இதையேதான் கேட்க விழைகின்றார்கள்.
இன்று கூட எழுத்துச்சூழலில் (வலைப்பதிவுகளிலும்) திருநங்கைகள் பிச்சையெடுக்கின்றார்கள், பொதுவெளியில் தங்களைச் சுற்றிக் கூடி 'ஏடாகூடமாய்' கேலிசெய்கின்றார்கள்' என்று இன்னும் அரிவரியில் இருப்பதுபோல பலர் எழுதும்போது/பேசும்போது அலுப்பே மிஞ்சுகின்றது. அவ்வாறானவர்கள் திருநங்கைகள் உட்பட்ட மாற்றுப்பாலினத்தவர்கள் அப்படியிருப்பதற்கான காரணங்களை வித்யா மிக எளிதாக எல்லோருக்கும் விளங்கும்படியாக கூறும் இந்நேர்காணலை நிச்சயம் கேட்டாக வேண்டும்.
தானொரு திருநங்கையாக மாறிக்கொண்டிருப்பதை அறிந்து, ஆனால் இன்னமும் பொதுவெளியில் அவ்வாறாக அறிவித்துக்கொள்ளாத அனிதா என்றொரு திருநங்கை, நான் வித்யா நூலை வாசித்தபோது தன்னாலும் இச்சமூகத்தில் தனித்து நிற்கமுடியும் என்ற நம்பிக்கையை வித்யா தந்திருந்தார் என்று இந்நிகழ்வில் கூறியதைக் கேட்டபோது மிகுந்த நெகிழ்வாயிருந்தது. இவ்வாறு வித்யாவின் இந்த நூல் இன்னும் பலருக்கு உத்வேகத்தையும்.., திருநங்கைகள் பற்றி அறிந்துகொண்டு நெருக்கம் கொள்ளவும்... உதவியிருக்குமென நினைக்கின்றேன்.
ஆணிலிருந்து பெண்ணாக (M 2 F) மாறுவதுபோல, ஒரு பெண்ணாயிருந்து ஆணாய் (F 2 M) மாறுவது அவ்வளவு சுலபமில்லையெனவும், மிகுந்த மனத்திடம் வேண்டியிருக்கிறதென வித்யா குறிப்பிடுவது கவனிக்கவேண்டிய ஒன்று. அத்தோடு இவ்வாறு பால் கலப்புடன் இருப்பவர்கள் உரிய அறுவைச்சிகிச்சை செய்யாதிருக்கும்வரை பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அண்மையில் இங்கு இதுதொடர்பாய் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்ட ஒருவர் தங்களுக்கு எந்தக் கழிவறைக்குச் செல்வது என்பதே மிகப்பிரச்சினையாக இருக்கிறதெனவும், ஒருமுறை தன்னை காவற்துறை பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறியதாய் நிகழ்ச்சியைப் பார்த்த தோழியொருவர் கூறியிருந்தார். ஆக, மேற்குலக் நாடுகளில் கூட இன்னமும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான இடைஞ்சல்கள களையப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. அண்மையில்தான் ஜபிஎம்(IBM) போன்ற சில தனியார் நிறுவனங்கள் இவ்வாறான நிலையிலிருப்பவர்கள் அறுவைச்சிகிச்சை செய்வதற்கான காப்புறுதிப் பொதிகளை (Insurance Packages) தமது தொழிலாளர் நலங்களில் சேர்ந்திருந்திருக்கின்றன.
லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்கள் விரிவாகவும் ஆழமாகவும் பேசுவதற்கான வெளிகள் எல்லா ஊடகங்களிலும் திறக்கப்படவேண்டும். இதுவரை மற்றவர்கள் அவர்களுக்காய்ப் பேசியது போலவன்றி, அவர்களே அவர்களின் குரல்களில் (தலித்துக்கள் போல) பேசுவதற்கான சூழல் கனியவேண்டும். இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களின் கருத்துக்களே சீழ்பிடித்து வீங்கிப்போயிருக்கும் சமுதாயத்தின் காயங்களை ஆற்றக்கூடிய வலிமையுடையதாக இருக்குமென நம்புகின்றேன். மில்க்(Milk) படத்தில் ஹார்வி தேர்தலில் நிற்கும்போது ஓரினப்பாலினருக்கு மட்டுமில்லாது வறுமைக்கோட்டிற்குள் வாழ்பவர்கள், வயதானவர்கள், ஹிப்பிகள் போன்றவர்களின் நலத்திட்டங்களையும் முன்வைத்தே போட்டியிருக்கின்றார். வலிகளைப் புரிந்தவர்களாலே பிறரது வலிகளையும் அதிகம் விளங்கிக்கொள்ள முடியும் என்றவகையில் இவ்வாறான விளிம்புநிலை மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவதையும், அதிகாரங்களைக் கைப்பற்றுவதையும் நாம் ஊக்குவிக்கவேண்டும்.
3.
சேகுவேராவினது வாழ்வின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவாரசியமாக ஆழமும் விரிவாக நீளக்கூடியதுதான். மோட்டார் சைக்கிள் டயரியாய் இருந்தாலெனன, கொங்கோ டயரியாயிருந்தாலென்ன, கடைசிக்கால பொலிவியா டயரியாயிருந்தாலென்ன எல்லாமே வியப்பும் திகைப்பும் உடையவை. சிலவேளை இப்படியொரு மனிதன் எமக்கு அண்மைக்காலத்தில் வாழ்ந்தானா என்ற பிரமிப்பும் கூடவே வந்துவிடத்தான் செய்கின்றது. தனது பிரச்சாரத்திற்கெனத்தான் Jorge G. Castañeda சேகுவாரா பற்றி எழுதினார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதையும் மீறி அந்நூலில் கூட சே தனித்துவமாக ஒளிரத்தான் செய்கின்றான். சூரியனைக் கண்டு நாய் குரைக்கின்றமாதிரி தமிழ்ச்சூழலில் சில குரல்கள் சேயை அசிங்கபடுத்த முயன்றாலும் சேயை உண்மையான விருப்புடன் வந்தடைகின்ற ஆயிரக்கணக்கான இளைஞர் இளைஞிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சேயினது மறைவின்போது, ஃபிடல், எங்கள காலத்திற்கு அல்ல, இனி வரும் எதிர்காலத்திற்கு எல்லாவிதத்திலும் ஒரு முன்மாதிரியே சே எனக்கூறுவது பொருத்தமான வார்த்தைகள்தான். எது என்னைச் சேயோடு அதிகம் நெருக்கமுறச் செய்கின்றது என்று யோசித்தால் அவன் தனது பெருங்கனவுகளின் பலவீனங்களை அறிந்து வைத்திருந்தான் என்பதே. ஆனால் வீழ்ச்சி அடைந்துவிடுவேனே என்பதற்கு அஞ்சி தனது கனவுகளைக் கைவிடத்தயாராகவும் இருக்கவில்லை என்பதுதான் அதிகம் வசீகரிக்கின்றது. கியூபாப் புரட்சியின்போது புரட்சியை ஏற்றுமதி செய்யமுடியாது என்கின்றவன், கொங்கோவிற்கு கியூபாக் கெரில்லாப் புரட்சியின் மாதிரிகளை எடுத்துச் செல்கின்றான். கொங்கோவில் தனது வீழ்ச்சியை (ஒருகட்டத்தில் சாகும்வரை அங்கு இருக்கலாமெனவும் முடிவு எடுக்கிறான்) சந்தித்தபின்னும் தனது புரட்சிக்கனவைக் கைவிடாதபடியால்தான் பொலிவியாவிற்குள் நுழைகின்றான். சேயை புரட்சியின் நாயகனாகப் பார்ப்பதைவிட, உயர்ந்த நம்பிக்கைக்காய் தன்னையே இழந்த வீழ்ச்சியின் நாயகனாய்ப் பார்ப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. எனெனில் வெற்றி கொண்டவர்களுக்கு மேலே செல்ல ஏதுமில்லை. தோற்றுக்கொண்டவன் தனக்கான வெற்றியை அடையும்வரை முயற்சித்துக்கொண்டேயிருப்பான அல்லவா. எனவே சேயை வீழ்ச்சியின் நாயகனாக நினைவுகொள்ளும்போது -அவன் ஒடுக்குமுறைகள் உள்ள எல்லா வெளிகளிலும் வழிகாட்டியாக வ்ந்துவிடச் செய்கின்றான்.
சேயினைப் பற்றி இரண்டு பாகங்களாய் எடுக்கப்பட்ட Steven Soderbergன் இந்நீளத்திரைப்படம் ஐந்து மணித்தியாலங்களுக்கு ஓடக்கூடியது. முதலாவது பாகம் சே ஃபிடலைச் சந்திப்பதிலிருந்து தொடங்கி, சேயினது பிரசித்துபெற்ற சான்ரா கிளாரா இராணுவ வெற்றியுடன் ஹவானாவை நோக்கி நகர்வதுடன் முடிகின்றது. இரண்டாம் பாகம் சே பொலிவியாவில் நுழைவதில் தொடங்கி சேயினது இறப்பில் நிறைவுபெறுகின்றது. ஏற்கனவே கூறியதுபோல இது சேயினது முழு ஆளுமையை காட்சிப்படுத்தும் ஒரு படமல்ல. சேயினது வாழ்வும் ஒரு திரைப்படத்தில் அடங்கக்கூடியதுமல்ல.
முதலாம் பாகம் தொடங்கும் காட்சி சுவாரசியமானது. சே அமெரிக்காவில் (ஐநா சபையில்) அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் முகத்திரையை கிழிப்பதுடன் ஆரம்பிக்கின்றது. அமெரிக்காவில் கூட சேயைக் கொல்வதற்கான சில முயற்சிகள் நடைபெறுகின்றன. சந்திக்கும் செனட்டர்களுடன், அமெரிக்கா இன்னும் Bay of Pigsஐ மறந்துவிடவில்லைத்தானே என சீண்டிப்பார்கவும் செய்கின்றார். அங்கிருந்து தொடங்கும் காட்சிகள் பிறகு பின்னோக்கி கியூபாவின் புரட்சியின் ஆரம்பக்கட்டங்களுக்கு நகரத்தொடங்குகின்றது. ஒரு மருத்துவராக இருக்கும் சே எப்படி போராளியாக மாறுகின்றார் என்பதையும், சேயினது அந்நியத்தன்மையைக் களைக்க எப்படி ஃபிடலும் ராகுலும் முயற்சிக்கின்றன்ர் என்பதும் கவனத்திற்குரியது (இந்த அந்நியத்தன்மையே ஏற்றுக்கொள்ள உள்ளூர் மக்கள்/போராளிகள் விரும்பாததாலேயே பொலிவியாவில் சேயினது வீழ்ச்சி மிகவிரைவாக நிகழ்கிறது என்பதையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்). சான்ரா கிளாராவில் ஆயுதத்தளபாடங்கள் ஏற்றிவரும் புகைவண்டியைத் தகர்ப்பதன் மூலம் சே ஒரு சிறந்த கெரில்லாத தள்பதியாக மாறுகின்றார். அதேவேளை குடிமக்களை சித்திரவதை செய்யும்.., பெண்களைப் பாலிய்ல் வன்புணர்சியிற்கு உள்ளாக்கும்... போராளிகளுக்கு கடுமையான தண்டனைகளையே -மரணதண்டனை உட்பட- கொடுக்கின்றார்.
இரண்டாம் பாகம் தொடங்கும்போது சேயினது பொருளாதராச் சீர்திருத்தஙகள் தோற்பது குறித்தோ, ஃபிடலுக்கும் சேயுக்குமிடையில் முகிழும் சோவியத்து X சீன கம்யூனிச விரிசல் குறித்தோ எதுவுமில்லாது படம் உடனேயே பொலிவியாவுக்கு பாய்ந்துவிடுகின்றது. முதலாம் பாகத்தில் ஒரு வெற்றிகரமான கெரில்லாத் தளபதியாக இருக்கும் சே, இரண்டாம் பாகத்தில் வீழ்ச்சிக்குரிய நாயகனாக ஆகிக்கொண்டிருப்பது காட்சிப்படுத்தப்படுகின்றது. சேயைக் காயங்களுடன் பொலிவியா-சிஜஏ கூட்டில் கைதுசெய்யும்போது, 'நான் சே என்னைக் கொல்வதை விடக் கைது செய்வது பலமடங்கு பிரயோசனமானது' என்று உறுதியுடன் கூறுவதெல்லாம் படத்தில் இல்லை. கொல்லப்படுவதற்கு முன்னர் அங்கிருக்கும் உள்ளூர் ஆசிரியையுடன் சே உரையாடும்போது, இத்தகைய படுமோசமான வகுப்புக்களிலிருந்தா பிள்ளைகள் கல்விகற்கின்ற்னர்.... இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளுக்காய்த்தானே நாம் போராட் விரும்பினோம் என்று கூறுவது நெகிழ்ச்சிதரக்கூடியது. சேயின் பிரசித்தம் பெற்ற இறுதிவாக்கியமான நீங்கள் என்னைக் கொல்லலாம் ஆனால் புரட்சி பற்றிய எனது நம்பிக்கையை என்றைக்கும் கொல்லமுடியாது என்பதன் சாட்சியாகத்தான் சே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
படமாகப் பார்க்கும்போது பல போதாமைகளை இத்திரைப்படம் கொண்டிருக்கின்றது. அதில் முக்கியமானது மிக ஆறுதலாக நகரும் திரைக்கதை. புரட்சியின் துளி பட்டிடாத மோட்டார் சைக்கிள் டயரி அழகாகப் படமாக்கப்பட்ட விதத்தில் சேயினது புரட்சி பற்றிய இத்திரைப்படம் எடுக்கப்படவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கிறது. ஆனால் சேயாக நடித்த Benicio del Toro சேயை நன்றாகப் பிரதியெடுத்து நடித்திருக்கின்றார். முக்கியமாய் ஆஸ்மாவால் கஷ்டபபடும் சேயின் காட்சிகள் மிகத் தத்ரூபமாய் இருக்கின்றன. சேயைப் பற்றி எத்தனை கோணத்திலும் படமாய்ப் பார்த்தாலும் ஒருபோதும் அலுக்கப்போவதில்லை. எனெனில் உண்மையான போராளிகளின் வாழ்க்கை ஒரு திரைப்படத்திற்குள் என்றுமே அடங்குவதில்லை.
(அருண்மொழிவர்மனுக்கு...)
படங்கள் - உரியதளங்களுக்கு நன்றி
(பிரேம் -ரமேஷ்: கட்டுரையும் கட்டுக்கதையும்)
1.
சில புத்தகங்களை அதிக ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கும்போது அவற்றிலிருந்து எடுத்துக்கொள்ள எதுவுமில்லையென்ற வெறுமை வந்துவிடும். எதிர்பார்ப்பில்லாது வாசிக்கும் சில புத்தகங்களோ சிலவேளைகளில் சுவாரசியமான வாசிப்பனுவத்தை எதிர்பாராது தந்துவிடுகின்றன. ஏற்கனவே அங்குமிங்குமாய் உயிர்மையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த காரணத்தால் -ஒரளவு அசுவாரசியமான நிலையிலே- தனிமையின் வழி என்னும் சுகுமாரனின் பத்தித் தொகுப்பை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். பக்கங்களைப் புரட்ட புரட்ட புறக்காரணங்களால் சோர்ந்துபோயிருந்த மனது நெருக்கமான கரங்களினால் இதமூட்டப்பட்டது போன்ற உணர்வுநிலைக்கு வந்திருந்தது. எத்தனைவிதமான மனிதர்களை.., எத்தனை விதமான உணர்ச்சிநிலைகளை சுகுமாரன் எதிர்கொண்டாரோ அவற்றையெல்லாம் வாசிக்கும் நம்மிலும் படிவதுமாதிரியான அனுபவத்தை இத்தொகுப்பு தோற்றுவித்திருந்தது. தன்னை நோகடித்திருந்தாலும், எந்த மனிதரையும் அவமானப்படுத்த விரும்பாத, அவர்களின் பலவீனங்களை ஏற்றுக்கொள்கின்ற ஒரு பத்தியெழுத்தாளராக சுகுமாரன் மாறுகின்றபோது இன்னும் நெருக்கமுடையவராக மாறிவிடுகின்றார்.
கவிஞர்களாலும் நல்ல பத்தியெழுத்தாளராக முடியும் என்ற நம்பிக்கையை பிரமிளுக்குப் பிறகு துல்லியமாகக் கண்டறிந்தது கொண்டது சுகுமாரனிடம் எனச் சொல்லலாம். இத்தொகுப்பில் கூறப்படும் சில (அவமான) அனுபவங்கள் சில பொழுதுகளில் கள்ளிக்காடு பாலச்சந்திரனின் சிதம்பர நினைவுகளை நினைவுபடுத்தியிருந்தது. இருவரினதும் அனுபவங்கள் வெவ்வேறானவை என்றாலும், நிகழும் நிலப்பரப்புக்கள் ஒன்றென்பதால் அவ்வாறான இணைப்பை எனது மனது பொருத்திப் பார்த்ததோ என்ற சந்தேகமும் உண்டுதான்.வீட்டை விட்டு (இரண்டு முறை) ஓடிபோதல், அப்பாவைப் பிரிந்து அம்மாவோடும் சகோதரிகளோடும் வாழ்வது என்று பலவேறு துயர நினைவுகளைச் சுமந்திருந்தாலும், அவற்றைக் கூட வாழ்வில் இயல்புகளில் சிலவாய் இருக்கக்கூடும் என்று சுகுமாரன் எழுதிப்போவது பிடித்தமானது. ஆர்.ஷண்முகசுந்தரத்தை சந்திக்கும்போது அவர் படைப்புச் சார்ந்து கதைக்காது பிற விடயங்களைக் கதைத்து, இலக்கியம் சோறு போடாது என எச்சரிப்பதும், காஃப்காவினால் பரிட்சயமாகும் சிற்றிதழ் வெளியிடும் நண்பரொருவர் கடும்போதையால் இளவயதில் இறந்துபோவதையும் வாசிக்கும்போது இலக்கியம் சார்ந்த கசப்பே கவியத்தொடங்குகின்றது. ஆனாலும் இவ்வாறான கடந்தகால கசப்பான நிகழ்வுகளையும் தாண்டி ஏதோ ஒரு மர்மமான சுழல்தான் பலரை இன்னுமின்னும் படைப்பிலக்கியம் சார்ந்து தீவிரமாய் இயங்கவைத்துக்கொண்டிருக்கின்றது போலும்.
ஒரு பத்திரிகையாளராக சில்க் சுமிதாவைச் சந்திப்பதும், சுமிதா கவிஞராக இருக்கும் தனது சுயமரியாதையைக் கேலிபண்ணிவிட்டதாக பத்தியெழுத்தாளர் மனங்கோணுவதும், பிறகு சில்க் சுமிதாவின் தற்கொலை செய்த உடலைப் பார்க்கும்போது, எத்தனையோ ஆயிரமாயிரம்பேர்களின் கனவுகளில் வந்த ஒரு உடல், யாருமே கவனிக்காத உடலமாகிப்போன அபத்தத்தையெல்லாம் மனதில் ஊடுருவிச்செல்லும்படியாக சுகுமாரன் எழுதியிருக்கின்றார். சுகுமாரன் தன்னளவில் கவிஞராக இருப்பதோடு வெகுசன ஊடகங்கங்களிலும் பணிபுரிந்ததால் விசாலமான நிலப்பரப்புகளில் நிகழ்ந்த பலவேறு சம்பவங்கள் நினைவூட்டப்படுகின்றன.2.
தனிமையின் வழி தொகுப்பைவிட அண்மையில் அதிகம் பாதித்த/வியந்த ஒரு நிகழ்வென்றால் லிவிங் ஸ்மைல் வித்யாவினது நான் வித்யா என்ற சுயசரிதை நூலை முன்வைத்து ஆஹா எப்ஃ எம்மில் நிகழ்ந்த நேர்காணல். எத்தனையோவிதமான அவமானங்களையும், துயரங்களையும் வித்யா பெற்றிருப்பார். நமது சமூகம் கொடுத்த/கொடுத்துக்கொண்டிருக்கும் வலிகளையும் தழும்புகளையும் மனதில் இருத்திக் காழ்ப்புக்கொள்ளாது (அவ்வாறிருப்பதற்கான அனைத்து உரிமையும் வித்யாவிற்கும் இருந்தும்) மிக நிதானமாய் தனது வலிகளை -மெல்லிய சிரிப்பால் கடந்து- இன்னும் திருநங்கைகளுக்காய் இச்சமூகம் மாறவேண்டிய முக்கிய புள்ளிகளை அந்நேர்காணலில் தொகுத்து அளித்திருந்தார். நாம் எல்லோருமே கொஞ்ச நேரம் ஒதுக்கியேனும் இந்நேர்காணலைக் கேட்பதென்பது நாமின்னும் திருநங்கைகளை அணுக்கமாக அணுக உதவக்கூடும். லிவிங் ஸ்மைல் வித்யா வெளிப்படையாக தனது சுயசரிதையாக எழுத வந்தது... திருநங்கையாக இல்லாதவர்களை மட்டுமில்லை, திருநங்கைகள் என்று அறிந்தும் சமூகத்தின் முன் வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குகின்றவர்களையும் பாதித்திருக்கிறது என்றே நம்புகின்றேன். திருநங்கைகளாக தங்களுக்கான உரிமைகளைக் கேட்கும்போதுகூட காலங்காலமாய் நாங்கள் வைத்திருக்கும் வெளியில் தங்களுக்கான இடத்தைக் கூடக் கோரவில்லை; தமக்கான தனித்துவமாயிருக்கும் ஒரு வெளியை அங்கீகரிகக மட்டுமே வித்யா போன்றோர் வேண்டுகின்றார்கள்; திருநங்கைகள் போன்ற விளிம்புநிலை மனிதர்கள் மட்டுமில்லை ஏனைய மாற்றுப் பாலினத்தவர்களும் இதையேதான் கேட்க விழைகின்றார்கள்.
தானொரு திருநங்கையாக மாறிக்கொண்டிருப்பதை அறிந்து, ஆனால் இன்னமும் பொதுவெளியில் அவ்வாறாக அறிவித்துக்கொள்ளாத அனிதா என்றொரு திருநங்கை, நான் வித்யா நூலை வாசித்தபோது தன்னாலும் இச்சமூகத்தில் தனித்து நிற்கமுடியும் என்ற நம்பிக்கையை வித்யா தந்திருந்தார் என்று இந்நிகழ்வில் கூறியதைக் கேட்டபோது மிகுந்த நெகிழ்வாயிருந்தது. இவ்வாறு வித்யாவின் இந்த நூல் இன்னும் பலருக்கு உத்வேகத்தையும்.., திருநங்கைகள் பற்றி அறிந்துகொண்டு நெருக்கம் கொள்ளவும்... உதவியிருக்குமென நினைக்கின்றேன்.
ஆணிலிருந்து பெண்ணாக (M 2 F) மாறுவதுபோல, ஒரு பெண்ணாயிருந்து ஆணாய் (F 2 M) மாறுவது அவ்வளவு சுலபமில்லையெனவும், மிகுந்த மனத்திடம் வேண்டியிருக்கிறதென வித்யா குறிப்பிடுவது கவனிக்கவேண்டிய ஒன்று. அத்தோடு இவ்வாறு பால் கலப்புடன் இருப்பவர்கள் உரிய அறுவைச்சிகிச்சை செய்யாதிருக்கும்வரை பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அண்மையில் இங்கு இதுதொடர்பாய் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்ட ஒருவர் தங்களுக்கு எந்தக் கழிவறைக்குச் செல்வது என்பதே மிகப்பிரச்சினையாக இருக்கிறதெனவும், ஒருமுறை தன்னை காவற்துறை பல்பொருள் அங்காடியிலிருந்து வெளியேற்றியதாகவும் கூறியதாய் நிகழ்ச்சியைப் பார்த்த தோழியொருவர் கூறியிருந்தார். ஆக, மேற்குலக் நாடுகளில் கூட இன்னமும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான இடைஞ்சல்கள களையப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது. அண்மையில்தான் ஜபிஎம்(IBM) போன்ற சில தனியார் நிறுவனங்கள் இவ்வாறான நிலையிலிருப்பவர்கள் அறுவைச்சிகிச்சை செய்வதற்கான காப்புறுதிப் பொதிகளை (Insurance Packages) தமது தொழிலாளர் நலங்களில் சேர்ந்திருந்திருக்கின்றன.
லிவிங் ஸ்மைல் வித்யா போன்றவர்கள் விரிவாகவும் ஆழமாகவும் பேசுவதற்கான வெளிகள் எல்லா ஊடகங்களிலும் திறக்கப்படவேண்டும். இதுவரை மற்றவர்கள் அவர்களுக்காய்ப் பேசியது போலவன்றி, அவர்களே அவர்களின் குரல்களில் (தலித்துக்கள் போல) பேசுவதற்கான சூழல் கனியவேண்டும். இவ்வாறான விளிம்புநிலை மனிதர்களின் கருத்துக்களே சீழ்பிடித்து வீங்கிப்போயிருக்கும் சமுதாயத்தின் காயங்களை ஆற்றக்கூடிய வலிமையுடையதாக இருக்குமென நம்புகின்றேன். மில்க்(Milk) படத்தில் ஹார்வி தேர்தலில் நிற்கும்போது ஓரினப்பாலினருக்கு மட்டுமில்லாது வறுமைக்கோட்டிற்குள் வாழ்பவர்கள், வயதானவர்கள், ஹிப்பிகள் போன்றவர்களின் நலத்திட்டங்களையும் முன்வைத்தே போட்டியிருக்கின்றார். வலிகளைப் புரிந்தவர்களாலே பிறரது வலிகளையும் அதிகம் விளங்கிக்கொள்ள முடியும் என்றவகையில் இவ்வாறான விளிம்புநிலை மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவதையும், அதிகாரங்களைக் கைப்பற்றுவதையும் நாம் ஊக்குவிக்கவேண்டும்.
3.
சேகுவேராவினது வாழ்வின் எந்தப் பகுதியை எடுத்தாலும் அது சுவாரசியமாக ஆழமும் விரிவாக நீளக்கூடியதுதான். மோட்டார் சைக்கிள் டயரியாய் இருந்தாலெனன, கொங்கோ டயரியாயிருந்தாலென்ன, கடைசிக்கால பொலிவியா டயரியாயிருந்தாலென்ன எல்லாமே வியப்பும் திகைப்பும் உடையவை. சிலவேளை இப்படியொரு மனிதன் எமக்கு அண்மைக்காலத்தில் வாழ்ந்தானா என்ற பிரமிப்பும் கூடவே வந்துவிடத்தான் செய்கின்றது. தனது பிரச்சாரத்திற்கெனத்தான் Jorge G. Castañeda சேகுவாரா பற்றி எழுதினார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அதையும் மீறி அந்நூலில் கூட சே தனித்துவமாக ஒளிரத்தான் செய்கின்றான். சூரியனைக் கண்டு நாய் குரைக்கின்றமாதிரி தமிழ்ச்சூழலில் சில குரல்கள் சேயை அசிங்கபடுத்த முயன்றாலும் சேயை உண்மையான விருப்புடன் வந்தடைகின்ற ஆயிரக்கணக்கான இளைஞர் இளைஞிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சேயினது மறைவின்போது, ஃபிடல், எங்கள காலத்திற்கு அல்ல, இனி வரும் எதிர்காலத்திற்கு எல்லாவிதத்திலும் ஒரு முன்மாதிரியே சே எனக்கூறுவது பொருத்தமான வார்த்தைகள்தான். எது என்னைச் சேயோடு அதிகம் நெருக்கமுறச் செய்கின்றது என்று யோசித்தால் அவன் தனது பெருங்கனவுகளின் பலவீனங்களை அறிந்து வைத்திருந்தான் என்பதே. ஆனால் வீழ்ச்சி அடைந்துவிடுவேனே என்பதற்கு அஞ்சி தனது கனவுகளைக் கைவிடத்தயாராகவும் இருக்கவில்லை என்பதுதான் அதிகம் வசீகரிக்கின்றது. கியூபாப் புரட்சியின்போது புரட்சியை ஏற்றுமதி செய்யமுடியாது என்கின்றவன், கொங்கோவிற்கு கியூபாக் கெரில்லாப் புரட்சியின் மாதிரிகளை எடுத்துச் செல்கின்றான். கொங்கோவில் தனது வீழ்ச்சியை (ஒருகட்டத்தில் சாகும்வரை அங்கு இருக்கலாமெனவும் முடிவு எடுக்கிறான்) சந்தித்தபின்னும் தனது புரட்சிக்கனவைக் கைவிடாதபடியால்தான் பொலிவியாவிற்குள் நுழைகின்றான். சேயை புரட்சியின் நாயகனாகப் பார்ப்பதைவிட, உயர்ந்த நம்பிக்கைக்காய் தன்னையே இழந்த வீழ்ச்சியின் நாயகனாய்ப் பார்ப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. எனெனில் வெற்றி கொண்டவர்களுக்கு மேலே செல்ல ஏதுமில்லை. தோற்றுக்கொண்டவன் தனக்கான வெற்றியை அடையும்வரை முயற்சித்துக்கொண்டேயிருப்பான அல்லவா. எனவே சேயை வீழ்ச்சியின் நாயகனாக நினைவுகொள்ளும்போது -அவன் ஒடுக்குமுறைகள் உள்ள எல்லா வெளிகளிலும் வழிகாட்டியாக வ்ந்துவிடச் செய்கின்றான்.சேயினைப் பற்றி இரண்டு பாகங்களாய் எடுக்கப்பட்ட Steven Soderbergன் இந்நீளத்திரைப்படம் ஐந்து மணித்தியாலங்களுக்கு ஓடக்கூடியது. முதலாவது பாகம் சே ஃபிடலைச் சந்திப்பதிலிருந்து தொடங்கி, சேயினது பிரசித்துபெற்ற சான்ரா கிளாரா இராணுவ வெற்றியுடன் ஹவானாவை நோக்கி நகர்வதுடன் முடிகின்றது. இரண்டாம் பாகம் சே பொலிவியாவில் நுழைவதில் தொடங்கி சேயினது இறப்பில் நிறைவுபெறுகின்றது. ஏற்கனவே கூறியதுபோல இது சேயினது முழு ஆளுமையை காட்சிப்படுத்தும் ஒரு படமல்ல. சேயினது வாழ்வும் ஒரு திரைப்படத்தில் அடங்கக்கூடியதுமல்ல.
முதலாம் பாகம் தொடங்கும் காட்சி சுவாரசியமானது. சே அமெரிக்காவில் (ஐநா சபையில்) அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தின் முகத்திரையை கிழிப்பதுடன் ஆரம்பிக்கின்றது. அமெரிக்காவில் கூட சேயைக் கொல்வதற்கான சில முயற்சிகள் நடைபெறுகின்றன. சந்திக்கும் செனட்டர்களுடன், அமெரிக்கா இன்னும் Bay of Pigsஐ மறந்துவிடவில்லைத்தானே என சீண்டிப்பார்கவும் செய்கின்றார். அங்கிருந்து தொடங்கும் காட்சிகள் பிறகு பின்னோக்கி கியூபாவின் புரட்சியின் ஆரம்பக்கட்டங்களுக்கு நகரத்தொடங்குகின்றது. ஒரு மருத்துவராக இருக்கும் சே எப்படி போராளியாக மாறுகின்றார் என்பதையும், சேயினது அந்நியத்தன்மையைக் களைக்க எப்படி ஃபிடலும் ராகுலும் முயற்சிக்கின்றன்ர் என்பதும் கவனத்திற்குரியது (இந்த அந்நியத்தன்மையே ஏற்றுக்கொள்ள உள்ளூர் மக்கள்/போராளிகள் விரும்பாததாலேயே பொலிவியாவில் சேயினது வீழ்ச்சி மிகவிரைவாக நிகழ்கிறது என்பதையும் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்). சான்ரா கிளாராவில் ஆயுதத்தளபாடங்கள் ஏற்றிவரும் புகைவண்டியைத் தகர்ப்பதன் மூலம் சே ஒரு சிறந்த கெரில்லாத தள்பதியாக மாறுகின்றார். அதேவேளை குடிமக்களை சித்திரவதை செய்யும்.., பெண்களைப் பாலிய்ல் வன்புணர்சியிற்கு உள்ளாக்கும்... போராளிகளுக்கு கடுமையான தண்டனைகளையே -மரணதண்டனை உட்பட- கொடுக்கின்றார்.
இரண்டாம் பாகம் தொடங்கும்போது சேயினது பொருளாதராச் சீர்திருத்தஙகள் தோற்பது குறித்தோ, ஃபிடலுக்கும் சேயுக்குமிடையில் முகிழும் சோவியத்து X சீன கம்யூனிச விரிசல் குறித்தோ எதுவுமில்லாது படம் உடனேயே பொலிவியாவுக்கு பாய்ந்துவிடுகின்றது. முதலாம் பாகத்தில் ஒரு வெற்றிகரமான கெரில்லாத் தளபதியாக இருக்கும் சே, இரண்டாம் பாகத்தில் வீழ்ச்சிக்குரிய நாயகனாக ஆகிக்கொண்டிருப்பது காட்சிப்படுத்தப்படுகின்றது. சேயைக் காயங்களுடன் பொலிவியா-சிஜஏ கூட்டில் கைதுசெய்யும்போது, 'நான் சே என்னைக் கொல்வதை விடக் கைது செய்வது பலமடங்கு பிரயோசனமானது' என்று உறுதியுடன் கூறுவதெல்லாம் படத்தில் இல்லை. கொல்லப்படுவதற்கு முன்னர் அங்கிருக்கும் உள்ளூர் ஆசிரியையுடன் சே உரையாடும்போது, இத்தகைய படுமோசமான வகுப்புக்களிலிருந்தா பிள்ளைகள் கல்விகற்கின்ற்னர்.... இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளுக்காய்த்தானே நாம் போராட் விரும்பினோம் என்று கூறுவது நெகிழ்ச்சிதரக்கூடியது. சேயின் பிரசித்தம் பெற்ற இறுதிவாக்கியமான நீங்கள் என்னைக் கொல்லலாம் ஆனால் புரட்சி பற்றிய எனது நம்பிக்கையை என்றைக்கும் கொல்லமுடியாது என்பதன் சாட்சியாகத்தான் சே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
படமாகப் பார்க்கும்போது பல போதாமைகளை இத்திரைப்படம் கொண்டிருக்கின்றது. அதில் முக்கியமானது மிக ஆறுதலாக நகரும் திரைக்கதை. புரட்சியின் துளி பட்டிடாத மோட்டார் சைக்கிள் டயரி அழகாகப் படமாக்கப்பட்ட விதத்தில் சேயினது புரட்சி பற்றிய இத்திரைப்படம் எடுக்கப்படவில்லை எனத்தான் கூறவேண்டியிருக்கிறது. ஆனால் சேயாக நடித்த Benicio del Toro சேயை நன்றாகப் பிரதியெடுத்து நடித்திருக்கின்றார். முக்கியமாய் ஆஸ்மாவால் கஷ்டபபடும் சேயின் காட்சிகள் மிகத் தத்ரூபமாய் இருக்கின்றன. சேயைப் பற்றி எத்தனை கோணத்திலும் படமாய்ப் பார்த்தாலும் ஒருபோதும் அலுக்கப்போவதில்லை. எனெனில் உண்மையான போராளிகளின் வாழ்க்கை ஒரு திரைப்படத்திற்குள் என்றுமே அடங்குவதில்லை.
(அருண்மொழிவர்மனுக்கு...)
படங்கள் - உரியதளங்களுக்கு நன்றி
நாம் சொன்னால் மட்டுமே குழந்தைப் போராளி
In பத்திWednesday, January 21, 2009
-மற்றும் சில...
உலகத்திற்கு பொது நீதி என்பது இனியில்லையென்று எப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அப்படியெனில் வள்ளுவர், அவ்வையார் 'அருளியதெல்லாம்' பொது நீதியல்லவா என்று ஒருவர் வினாவினால் அவரவர் விருப்பு அவரவர்க்கு உரியதென இப்போதைக்கு விடுவோம். பின் நவீனத்துவம் கூட இனி 'பொதுவான' என்ற ஒன்று இல்லையெனத்தான் கூறிக்கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவ நிலவரத்தை எவர் ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, இந்த மேலைத்தேய நாடுகள் அப்படியே அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும் - அதாவது எதிர்மறையான பக்கத்தில். குழந்தைப் போராளிகளுக்காய் உலகம் நீண்டகாலமாய் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு விழிநீர் சொரிபவர்களில் உண்மையான அக்கறையோடு இருப்பவர்களும் இருக்கிறார்கள்; அல்லாதவர்களும் இருக்கிறார்கள். போர்ச்சூழலில் ஒருவர் பதினெட்டு வயதிற்குள் ஆயுதங்களோடு இருப்பாராயின் அவரொரு குழந்தைப் போராளியென 'பொதுவாக' அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் அப்படியிருந்தால் மட்டும் ஒருவர் குழந்தைப் போராளியாக இருந்துவிட முடியாது. அதற்குள்ளும் அரசியல் இருக்கிறது. அதாவது இந்த மேலைத்தேய நாடுகள் தமது 'அளவீடுகளால்' அளந்து தமக்கு எந்தப் பாதகமும் இல்லாது இருக்கிறது என்று நினைத்து ஒரு சான்றிதழை வழங்கினால் மட்டுமே ஒருவர் குழந்தைப் போராளியாக முடியும்.
இன்னும் எளிதாகச் சொல்வது ஆனால், குழந்தைப் போராளிகள் (சிலவேளைகளில் இராணுவம்) என்பது இப்போராளிகள் யாருடன் மோதிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து வித்தியாசப்படும். உதாரணமாக இலங்கை, ஆபிரிக்காக் கண்டத்தில் பல நாடுகள் போன்றவற்றில் உங்களுக்குள்ளேயே நீங்கள் அடிபட்டுப் பலரைப் போட்டுத்தள்ளினால் நீங்கள் குழந்தைப் போராளிகள் என முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள். ஆனால் அதேசமயம் நீங்கள் -பதினெட்டு வயதிற்குள் இருந்து- அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேசங்களின் படைகளோடு போரிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் குழந்தைப் போராளிகளல்ல; தீவிரவாதிகளே.
அண்மைய வருடங்களில் நிறைய குழந்தைப் போராளிகளின் சுயவரலாற்று மற்றும் புனைவு கலந்த புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. புதினங்கள் வருவதன் பதிப்பக/பூகோள அரசியல்களுக்கு அப்பால் குழந்தைப் போராளியாக்கப்பட்டவர்களுக்காய் மனிதாபிமானமுள்ள எல்லோரினதும் மனங்களும் கசியத்தான் செய்கின்றன. நம்மைப் போன்ற 'போர் துரத்த' பின்னங்கால் அடிபட ஓடிவந்தவர்களைவிட, அதன் சாயலை அறியாத இந்தியா போன்ற 'சனநாயக' நாடுகளில் வாழ்பவர்கள், மேற்கத்தைய நாடுகளில் வசிப்பவர்கள் உட்பட அதிகாரங்களிலுள்ளவர்கள் இன்னும் அதிகமாய் குழந்தைப் போராளிகள் பற்றி உச்சுக்கொட்டுவதை நாம் அவதானித்துக் கொண்டுதானிருக்கின்றோம். அது தவறுமில்லை. ஆனால் இவர்களின் முகமூடிகள் எப்போது கிழிகிறது என்றால், இதே குழந்தைப் போராளிகள் பாதிப்பை இவர்களது வீட்டு வாசலில் செய்யும்போதுதான்...எல்லாம் கிழிந்து கோவணந்தெரிகிறது அல்லது இதுவரை பேசிய மனிதவுரிமைகளைக் கைவிட்டு நிர்வாணமாய் நிற்பவர்களாய் ஆகிப்போகின்றார்கள்.
2001ல் அமெரிக்காவும் அதன் நேசபடைகளும் (கனடா உட்பட) ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கின்றன. 2002ல் ரொரண்டோவில் பிறந்த (ஆகவே அவரொரு கனேடியர்) ஒமார் கடார் (Omar Khadr ) 2002ல் அமெரிக்கப் படைகளுக்குக் கிரனைட் எறிந்தற்காய் கைது செய்யப்படுகின்றார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. கிரனைட் வெடித்ததில் அமெரிக்கப்படையைச் சேர்ந்தவொருவர்(medic) காயப்படுகின்றார். அமெரிக்காப் படை திருப்பிச் சுட்டதில் ஒமாரிற்குக் காயம் ஏற்பட்டு ஒரு கண் பார்வையை இழக்கின்றார். தலிபானில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒமார் கியூபாவிலுள்ள குவாண்டனாமோ (Guantánamo) சித்திரவதைச் சிறைக்கூடத்திற்கு அனுப்படுகின்றார். மீண்டும் கவனிக்க, ஒமாருக்கு 15 வயது. ஆனால் அது பற்றி எந்தக் கவனமும் எடுக்கப்படாது அவர் பெரியவர்களுடனான சிறையிலே அடைக்கப்படுகின்றார். இங்கேதான் நமக்கு மனிதவுரிமைகள் போதிக்கும் மேலைத்தேயத்தின் உண்மை முகம் பல்லிளிக்கிறது. சாதாரணமாக கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒருவர் பதினெட்டு வயதிற்குள் குற்றங்கள் செய்திருந்தால் (கொலையே செய்திருந்தால்கூட) அவர்களின் பெயர்களையே இன்னபிற விடயங்களையோ பொதுவில் வைக்கப்படக்கூடாது என்றொரு சட்டம் இருக்கிறது. அவையெல்லாம் ஒமார் விவகாரத்தில் மீறப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும்; ஆனால் ஆபிரிக்காக் கண்டங்களில் அவன் இவனைப் போட்டான், அவளை இவன் பாலியல் வன்புணர்ந்தான் என்றெல்லாம் நடந்ததை எழுதும்போது, என்னதான் செய்திருந்தாலும் அவர்கள் குழந்தைப் போராளிகள் அவர்களை மன்னிக்கவேண்டும் என்கின்ற கன்டா, அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேயம் ஒமார் விவகாரத்தில் ஏன் வாய்க்குள் கொழுக்கட்டையை வைத்து உள்ளே தள்ளவும் முடியாமல் வெளியே துப்பவும் முடியாது மவுனித்திருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
இன்று கிட்டத்தட்ட ஒமார் சிறையில் அடைக்கப்பட்டு ஏறேறக்குறைய 6 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டன. ஐ.நா சபை வரையறுக்கிற சிறுவர் சீர்திருந்த்தப்பள்ளிக்குக்கூட கூட ஒமாரை அனுப்பாது வயது வந்தவர்களுடன் சிறைக்கூடத்திற்கு ஒன்றாகச் சேர்ந்து குவாண்டனாமோ சிறைக்கூடத்தில் அமெரிக்காவும் கனடாவும் தள்ளியதை நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். கனடாவில் சிலவேளைகளில் கொலைகளைச் செய்தவர்கள் கூட, 7 வருடத்தணடனைக்குப் பின், குறிப்பிட்ட வரையறைகளுடன் (conditions) வெளியே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கும்போது, ஒமார் போன்றவர்களுக்கு என்ன நீதியை இந்தக் கனேடிய அரசு வழங்கப்போகின்றது? கனடாவிலுள்ள மனிதவுரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக -கனடாப் பிரஜாவுரிமையுள்ள- ஒமார் குவாண்டனாமோ சிறையிலிருந்து, கனடாவுக்கு அனுப்பப்பட்டு நேர்மையான முறையில் அவரது வழக்கு கனடா நீதிமன்றத்தில் நடத்தப்படவேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும் கூட, ஒரு சிறு அறிக்கையைக் கூட ஒப்புக்காய் வெளியிடாது கள்ள மவுனம் சாதிக்கும் நமது அதிவணக்கத்திற்குரிய பிரதமர் ஹார்ப்பர் இதுகுறித்து ஏதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பதைவிட, என்றேனும் ஒருநாள் புதனில் உயிரினம் தோன்றி எல்லா மனிதர்களினதும் உரிமைகளைச் சரிநிகராக மதிக்கும் என்று நம்புவது நியாயமானது.
இலங்கையில் குழந்தைப் போராளிகள் பற்றி மேற்குலகம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது, சில வருடங்களுக்கு முன் ஒரு சிங்களப் பேராசிரியர், நண்பரொருவருக்குக் சுட்டிக்காட்டியிருந்தார்... குழந்தைப் போராளிகளை விட அதிகமாய் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் நீண்டகாலமாக இலங்கையில் இருந்துவருகின்றார்கள், அதையிட்டேன் மேற்குலகம் அதிகம் கவலைப்படுவதில்லை என்று. மேலும் சுற்றுலாப் பயணிகளாய் இந்தக் குழந்தைப் பாலியல் தொழிலாளர்களைத் தேடிவருவது அதிகம் யார் என்று ஊகிப்பது நமக்கு அவ்வளவு கடினமுமில்லை.
இஃது வெளியே வந்த ஒரு ஒமாரைப் பற்றிய கதை. வெளியே வராத நூற்றுக்கணக்கான 'குழந்தைப்போராளிகள்' ஒமார்களின் கதைகள் நிகழ்காலத்தில் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ளவேண்டும். ஆக, இன்று நமக்குக் கற்பிக்கப்படுகின்ற 'மனிதாபிமானம்' எனபது கூட பெருங்கதையாடலென பின் நவீனத்துவம் வரையறுப்பது பற்றி யோசித்துப் பார்ப்பதில் தவறேதும் இருக்காது போலத்தான் தோன்றுகின்றது.
............
கனடாவிலுள்ள சட்டங்கள் மற்றும் மனிதவுரிமைகள் சம்பந்தமாய் ஒரு பாடம் வளாகத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் நண்பரொருவர் தமது பாடப்புத்தகத்திலுள்ள ஒரு விடயத்தை என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தார். வழக்கின் விபரம் இதுதான்...பத்மநாதன் என்பவர் கனடாவிற்கு வந்து அகதி அடைக்கலம் கேட்டு அவருக்கு அடைக்கலம் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த காலப்பகுதியில் அவர் பெருமதிப்புள்ள போதைப் பொருட்களைக் கடத்திப் பிடிபடுகின்றார். பத்மநாதன் போதைமருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அவருக்கு 7 வருடங்கள் சிறைக்குள்ளிருக்க தண்டனை வழங்கப்படுகின்றது. வழக்கு முடிந்து வெளியே வரும் பத்மநாதன், கனடா நீதிமன்றத்தில் தன்னையொரு அகதியாக அடைக்கலம் தரும்படி கேட்கின்றார். நீதிமன்றம் -அவர் போதைமருந்து கடத்தியன் காரணமாக- அவரது அகதி அடைக்கல வழக்கை நிராகரிக்கின்றது. ஆனால் பத்மநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது பத்மநாதனுக்கு அகதி அடைக்கலம் கனடாவில் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது சரியா பிழையா என்ற கலந்துரையாடல் நண்பரின் வகுப்பில் நிகழ்ந்திருக்கின்றது. வகுப்பு முடிந்து நண்பர் என்னிடம் வந்து இத்தீர்ப்புக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? என்றார். பத்மநாதன் தனது குற்றத்திற்காய் ஏழுவருடங்கள் தண்டனையை அனுபவித்துவிட்டார் எனவே அவருக்கு அகதி அடைக்கலம் கொடுத்ததில் தவறேதுமில்லை என்றேன். நண்பருக்கு எனது கருத்தில் அவ்வளவு உடன்பாடில்லைப் போலும். என்றாலும் அவர்(பத்மநாதன்) போதைமருந்து கடத்தியிருக்கின்றார்... என்றார்.
போதைமருந்து கடத்துவது குற்றந்தான் அவர்கள் அதைத் தெரிந்துதான் கடத்துகின்றார்கள்...அதை வாங்கிப்பாவிப்பவர்களும் தடை செய்யப்பட்ட பொருளைத்தான் பாவிக்கின்றோம் என்ற புரிதலுடந்தான் பாவிக்கின்றார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களை வைத்து சூதாட்டம் நடத்தும் (கள்ள கணக்கு உட்பட எல்லா தகிடுதித்தங்களும் செய்யும்) பெருமுதலைகள் என்ன செய்கின்றன என்று யோசித்தால் போதைமருந்து கடத்துபவர்கள் எல்லாம் சிறியவர்களாகிவிடுவார்கள் (மைக்கல் மூரின் The Corporation என்ற ஆவணப்படம் நினைவுக்கு வருகின்றது). இப்பெரு நிறுவனங்கள் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டவை; அந்த நம்பிக்கையில்தான் எல்லாத்தரப்பு மக்களும் தமது பணத்தை முதலீடு செய்கின்றார்கள். ஆனால் பெருமுதலைகளின் நிறுவனங்கள் திவாலாகினால் முதலிட்ட சாதாரண மக்களுக்கு யார் பதில் சொல்வார்கள்? பெருமுதலைகள் ஹாயாக ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஜெயிலுக்குள் இருந்துவிட்டு (கூடவே ஒரு புத்தகமும் எழுதிவிட்டு) வெளியே வந்துவிடுகின்றார்கள். அவர்கள் அல்லவா போதை மருந்து கடத்துபவர்களை விட பெரும் ஆபத்தானவர்கள். Nortel கனடா தலைநகரிலிருந்தே ஆப்பு வைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். (எப்போது படித்து முடிப்போம்; எப்போது நோர்ட்டெலுக்குள் நுழையலாம் என்று காவிக்கொண்டிருந்த என் கனவு தகர்ந்ததால் வந்த எரிச்சல் அல்ல இது :-) . Nortel சென்ற வாரம் Bankruptcy File செய்திருக்கின்றார்கள் என்பது மேலதிகச் செய்தி.
நம்முடைய பொதுப்புத்தியில் பலவிடயங்கள் சிறுவயதிலிருந்தே திணிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. சிலருக்கு சாதி என்ற அடையாளமே பெருமைக்குரிய இன்னொரு பெயர் போல... என்ற மாதிரி -பல்வேறு விடயங்கள்- ஒவ்வொருவரின் மூளையிலும் சாதாரணமாய்ப் பதியப்பட்டிருகின்றன. சில நாடுகளில் பாலியல் வன்புணர்ந்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கபட்டிருக்கின்றன. இந்தியாவில் கூட சிலருக்கு வடமாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவ்வாறாயின் நாமேன் இவ்வாறான கேள்விகளை ஒருபோதும் எழுப்புவதில்லை...? இந்திய இராணுவம் காஷ்மீர் அஸாம், மணிப்பூர் உள்ளிட்ட உள்ளூர் மாநிலங்களில் மட்டுமில்லை, 'அமைதிப்படைகளாக' ஆக்கிரமித்த இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் கூட எண்ணற்ற பாலியல் வன்புணர்ச்சிகளைச் செய்திருக்கின்றன (இந்திய இராணுவம் மட்டுமில்லை; உலகிலுள்ள அநேக இராணுவங்கள் அப்படித்தான். கனடிய இராணுவம் சோமாலியாவில் செய்திருக்கின்றது.) . ஆக சாதாரண ஒருவர் பாலியன் வன்புணர்ச்சி செய்யும்போது என்ன தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றாரோ அதேபோன்று இராணுவத்திலுள்ளவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டுமல்லவா? ஆகக்குறைந்தது நீதிமன்றத்திலாவது நிறுத்தப்பட்டிருக்கின்றார்களா? வீரப்பனைத் தேடுகின்றோம் என்ற பெயரில் அதிரடிப்படை நிகழ்த்திய கொடூர சித்திரவதைகளுக்கும், வன்புணர்வுகளுக்கும் -வீரப்பன் கொல்லபட்ட சில ஆண்டுகளாகிய பின்னாவது- எந்த அதிரப்படையினராவது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்களா? ஆனால் நாம் போதை மருந்து கடத்துபவர்களையும், திருடுபவர்களையும் மட்டுமே பெரிய குற்றவாளிகளாக்கிவிடுகின்றோம். மிகுதி அனைவரையும் நாம் 'தேசியத்தின்' பெயரிலும் 'இறையாண்மையின்' இரட்சிப்பிலும் மன்னித்துவிடும் மகாத்மாக்களாகி விடுகின்றோம் போலும். அதைவிட கொடுமை இன்னுஞ்சிலர் இராணுவம் என்றால் அப்படியிப்படித்தான் செய்யும் என்று செப்பி பரமாத்மாக்களாகிவிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான்.
(1) Omar Khadr
(2) காட்டூன்: ரொரண்டோ மெட்ரோ நியூஸ்(Jan 22, 2009)
உலகத்திற்கு பொது நீதி என்பது இனியில்லையென்று எப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அப்படியெனில் வள்ளுவர், அவ்வையார் 'அருளியதெல்லாம்' பொது நீதியல்லவா என்று ஒருவர் வினாவினால் அவரவர் விருப்பு அவரவர்க்கு உரியதென இப்போதைக்கு விடுவோம். பின் நவீனத்துவம் கூட இனி 'பொதுவான' என்ற ஒன்று இல்லையெனத்தான் கூறிக்கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவ நிலவரத்தை எவர் ஏற்றுக்கொள்கின்றாரோ இல்லையோ, இந்த மேலைத்தேய நாடுகள் அப்படியே அரவணைத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும் - அதாவது எதிர்மறையான பக்கத்தில். குழந்தைப் போராளிகளுக்காய் உலகம் நீண்டகாலமாய் கண்ணீர் உகுத்துக்கொண்டிருக்கிறது. அவ்வாறு விழிநீர் சொரிபவர்களில் உண்மையான அக்கறையோடு இருப்பவர்களும் இருக்கிறார்கள்; அல்லாதவர்களும் இருக்கிறார்கள். போர்ச்சூழலில் ஒருவர் பதினெட்டு வயதிற்குள் ஆயுதங்களோடு இருப்பாராயின் அவரொரு குழந்தைப் போராளியென 'பொதுவாக' அடையாளப்படுத்தப்படுகின்றது. ஆனால் அப்படியிருந்தால் மட்டும் ஒருவர் குழந்தைப் போராளியாக இருந்துவிட முடியாது. அதற்குள்ளும் அரசியல் இருக்கிறது. அதாவது இந்த மேலைத்தேய நாடுகள் தமது 'அளவீடுகளால்' அளந்து தமக்கு எந்தப் பாதகமும் இல்லாது இருக்கிறது என்று நினைத்து ஒரு சான்றிதழை வழங்கினால் மட்டுமே ஒருவர் குழந்தைப் போராளியாக முடியும்.
இன்னும் எளிதாகச் சொல்வது ஆனால், குழந்தைப் போராளிகள் (சிலவேளைகளில் இராணுவம்) என்பது இப்போராளிகள் யாருடன் மோதிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பொறுத்து வித்தியாசப்படும். உதாரணமாக இலங்கை, ஆபிரிக்காக் கண்டத்தில் பல நாடுகள் போன்றவற்றில் உங்களுக்குள்ளேயே நீங்கள் அடிபட்டுப் பலரைப் போட்டுத்தள்ளினால் நீங்கள் குழந்தைப் போராளிகள் என முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள். ஆனால் அதேசமயம் நீங்கள் -பதினெட்டு வயதிற்குள் இருந்து- அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேசங்களின் படைகளோடு போரிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் குழந்தைப் போராளிகளல்ல; தீவிரவாதிகளே.
அண்மைய வருடங்களில் நிறைய குழந்தைப் போராளிகளின் சுயவரலாற்று மற்றும் புனைவு கலந்த புதினங்கள் வெளிவந்திருக்கின்றன. புதினங்கள் வருவதன் பதிப்பக/பூகோள அரசியல்களுக்கு அப்பால் குழந்தைப் போராளியாக்கப்பட்டவர்களுக்காய் மனிதாபிமானமுள்ள எல்லோரினதும் மனங்களும் கசியத்தான் செய்கின்றன. நம்மைப் போன்ற 'போர் துரத்த' பின்னங்கால் அடிபட ஓடிவந்தவர்களைவிட, அதன் சாயலை அறியாத இந்தியா போன்ற 'சனநாயக' நாடுகளில் வாழ்பவர்கள், மேற்கத்தைய நாடுகளில் வசிப்பவர்கள் உட்பட அதிகாரங்களிலுள்ளவர்கள் இன்னும் அதிகமாய் குழந்தைப் போராளிகள் பற்றி உச்சுக்கொட்டுவதை நாம் அவதானித்துக் கொண்டுதானிருக்கின்றோம். அது தவறுமில்லை. ஆனால் இவர்களின் முகமூடிகள் எப்போது கிழிகிறது என்றால், இதே குழந்தைப் போராளிகள் பாதிப்பை இவர்களது வீட்டு வாசலில் செய்யும்போதுதான்...எல்லாம் கிழிந்து கோவணந்தெரிகிறது அல்லது இதுவரை பேசிய மனிதவுரிமைகளைக் கைவிட்டு நிர்வாணமாய் நிற்பவர்களாய் ஆகிப்போகின்றார்கள்.2001ல் அமெரிக்காவும் அதன் நேசபடைகளும் (கனடா உட்பட) ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கின்றன. 2002ல் ரொரண்டோவில் பிறந்த (ஆகவே அவரொரு கனேடியர்) ஒமார் கடார் (Omar Khadr ) 2002ல் அமெரிக்கப் படைகளுக்குக் கிரனைட் எறிந்தற்காய் கைது செய்யப்படுகின்றார். அப்போது அவருக்கு வயது பதினைந்து. கிரனைட் வெடித்ததில் அமெரிக்கப்படையைச் சேர்ந்தவொருவர்(medic) காயப்படுகின்றார். அமெரிக்காப் படை திருப்பிச் சுட்டதில் ஒமாரிற்குக் காயம் ஏற்பட்டு ஒரு கண் பார்வையை இழக்கின்றார். தலிபானில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒமார் கியூபாவிலுள்ள குவாண்டனாமோ (Guantánamo) சித்திரவதைச் சிறைக்கூடத்திற்கு அனுப்படுகின்றார். மீண்டும் கவனிக்க, ஒமாருக்கு 15 வயது. ஆனால் அது பற்றி எந்தக் கவனமும் எடுக்கப்படாது அவர் பெரியவர்களுடனான சிறையிலே அடைக்கப்படுகின்றார். இங்கேதான் நமக்கு மனிதவுரிமைகள் போதிக்கும் மேலைத்தேயத்தின் உண்மை முகம் பல்லிளிக்கிறது. சாதாரணமாக கனடா உள்ளிட்ட நாடுகளில் ஒருவர் பதினெட்டு வயதிற்குள் குற்றங்கள் செய்திருந்தால் (கொலையே செய்திருந்தால்கூட) அவர்களின் பெயர்களையே இன்னபிற விடயங்களையோ பொதுவில் வைக்கப்படக்கூடாது என்றொரு சட்டம் இருக்கிறது. அவையெல்லாம் ஒமார் விவகாரத்தில் மீறப்பட்டது ஒரு புறம் இருக்கட்டும்; ஆனால் ஆபிரிக்காக் கண்டங்களில் அவன் இவனைப் போட்டான், அவளை இவன் பாலியல் வன்புணர்ந்தான் என்றெல்லாம் நடந்ததை எழுதும்போது, என்னதான் செய்திருந்தாலும் அவர்கள் குழந்தைப் போராளிகள் அவர்களை மன்னிக்கவேண்டும் என்கின்ற கன்டா, அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேயம் ஒமார் விவகாரத்தில் ஏன் வாய்க்குள் கொழுக்கட்டையை வைத்து உள்ளே தள்ளவும் முடியாமல் வெளியே துப்பவும் முடியாது மவுனித்திருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும்.
இன்று கிட்டத்தட்ட ஒமார் சிறையில் அடைக்கப்பட்டு ஏறேறக்குறைய 6 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டன. ஐ.நா சபை வரையறுக்கிற சிறுவர் சீர்திருந்த்தப்பள்ளிக்குக்கூட கூட ஒமாரை அனுப்பாது வயது வந்தவர்களுடன் சிறைக்கூடத்திற்கு ஒன்றாகச் சேர்ந்து குவாண்டனாமோ சிறைக்கூடத்தில் அமெரிக்காவும் கனடாவும் தள்ளியதை நாம் யோசித்துப்பார்க்கவேண்டும். கனடாவில் சிலவேளைகளில் கொலைகளைச் செய்தவர்கள் கூட, 7 வருடத்தணடனைக்குப் பின், குறிப்பிட்ட வரையறைகளுடன் (conditions) வெளியே வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் இருக்கும்போது, ஒமார் போன்றவர்களுக்கு என்ன நீதியை இந்தக் கனேடிய அரசு வழங்கப்போகின்றது? கனடாவிலுள்ள மனிதவுரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாக -கனடாப் பிரஜாவுரிமையுள்ள- ஒமார் குவாண்டனாமோ சிறையிலிருந்து, கனடாவுக்கு அனுப்பப்பட்டு நேர்மையான முறையில் அவரது வழக்கு கனடா நீதிமன்றத்தில் நடத்தப்படவேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும் கூட, ஒரு சிறு அறிக்கையைக் கூட ஒப்புக்காய் வெளியிடாது கள்ள மவுனம் சாதிக்கும் நமது அதிவணக்கத்திற்குரிய பிரதமர் ஹார்ப்பர் இதுகுறித்து ஏதாவது செய்வார் என்று எதிர்பார்ப்பதைவிட, என்றேனும் ஒருநாள் புதனில் உயிரினம் தோன்றி எல்லா மனிதர்களினதும் உரிமைகளைச் சரிநிகராக மதிக்கும் என்று நம்புவது நியாயமானது. இலங்கையில் குழந்தைப் போராளிகள் பற்றி மேற்குலகம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது, சில வருடங்களுக்கு முன் ஒரு சிங்களப் பேராசிரியர், நண்பரொருவருக்குக் சுட்டிக்காட்டியிருந்தார்... குழந்தைப் போராளிகளை விட அதிகமாய் குழந்தைப் பாலியல் தொழிலாளர்கள் நீண்டகாலமாக இலங்கையில் இருந்துவருகின்றார்கள், அதையிட்டேன் மேற்குலகம் அதிகம் கவலைப்படுவதில்லை என்று. மேலும் சுற்றுலாப் பயணிகளாய் இந்தக் குழந்தைப் பாலியல் தொழிலாளர்களைத் தேடிவருவது அதிகம் யார் என்று ஊகிப்பது நமக்கு அவ்வளவு கடினமுமில்லை.
இஃது வெளியே வந்த ஒரு ஒமாரைப் பற்றிய கதை. வெளியே வராத நூற்றுக்கணக்கான 'குழந்தைப்போராளிகள்' ஒமார்களின் கதைகள் நிகழ்காலத்தில் மறைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ளவேண்டும். ஆக, இன்று நமக்குக் கற்பிக்கப்படுகின்ற 'மனிதாபிமானம்' எனபது கூட பெருங்கதையாடலென பின் நவீனத்துவம் வரையறுப்பது பற்றி யோசித்துப் பார்ப்பதில் தவறேதும் இருக்காது போலத்தான் தோன்றுகின்றது.
............
கனடாவிலுள்ள சட்டங்கள் மற்றும் மனிதவுரிமைகள் சம்பந்தமாய் ஒரு பாடம் வளாகத்தில் எடுத்துக்கொண்டிருக்கும் நண்பரொருவர் தமது பாடப்புத்தகத்திலுள்ள ஒரு விடயத்தை என்னோடு பகிர்ந்துகொண்டிருந்தார். வழக்கின் விபரம் இதுதான்...பத்மநாதன் என்பவர் கனடாவிற்கு வந்து அகதி அடைக்கலம் கேட்டு அவருக்கு அடைக்கலம் கொடுக்கலாமா அல்லது வேண்டாமா என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த காலப்பகுதியில் அவர் பெருமதிப்புள்ள போதைப் பொருட்களைக் கடத்திப் பிடிபடுகின்றார். பத்மநாதன் போதைமருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு அவருக்கு 7 வருடங்கள் சிறைக்குள்ளிருக்க தண்டனை வழங்கப்படுகின்றது. வழக்கு முடிந்து வெளியே வரும் பத்மநாதன், கனடா நீதிமன்றத்தில் தன்னையொரு அகதியாக அடைக்கலம் தரும்படி கேட்கின்றார். நீதிமன்றம் -அவர் போதைமருந்து கடத்தியன் காரணமாக- அவரது அகதி அடைக்கல வழக்கை நிராகரிக்கின்றது. ஆனால் பத்மநாதன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது பத்மநாதனுக்கு அகதி அடைக்கலம் கனடாவில் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது சரியா பிழையா என்ற கலந்துரையாடல் நண்பரின் வகுப்பில் நிகழ்ந்திருக்கின்றது. வகுப்பு முடிந்து நண்பர் என்னிடம் வந்து இத்தீர்ப்புக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்? என்றார். பத்மநாதன் தனது குற்றத்திற்காய் ஏழுவருடங்கள் தண்டனையை அனுபவித்துவிட்டார் எனவே அவருக்கு அகதி அடைக்கலம் கொடுத்ததில் தவறேதுமில்லை என்றேன். நண்பருக்கு எனது கருத்தில் அவ்வளவு உடன்பாடில்லைப் போலும். என்றாலும் அவர்(பத்மநாதன்) போதைமருந்து கடத்தியிருக்கின்றார்... என்றார்.
போதைமருந்து கடத்துவது குற்றந்தான் அவர்கள் அதைத் தெரிந்துதான் கடத்துகின்றார்கள்...அதை வாங்கிப்பாவிப்பவர்களும் தடை செய்யப்பட்ட பொருளைத்தான் பாவிக்கின்றோம் என்ற புரிதலுடந்தான் பாவிக்கின்றார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களை வைத்து சூதாட்டம் நடத்தும் (கள்ள கணக்கு உட்பட எல்லா தகிடுதித்தங்களும் செய்யும்) பெருமுதலைகள் என்ன செய்கின்றன என்று யோசித்தால் போதைமருந்து கடத்துபவர்கள் எல்லாம் சிறியவர்களாகிவிடுவார்கள் (மைக்கல் மூரின் The Corporation என்ற ஆவணப்படம் நினைவுக்கு வருகின்றது). இப்பெரு நிறுவனங்கள் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டவை; அந்த நம்பிக்கையில்தான் எல்லாத்தரப்பு மக்களும் தமது பணத்தை முதலீடு செய்கின்றார்கள். ஆனால் பெருமுதலைகளின் நிறுவனங்கள் திவாலாகினால் முதலிட்ட சாதாரண மக்களுக்கு யார் பதில் சொல்வார்கள்? பெருமுதலைகள் ஹாயாக ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஜெயிலுக்குள் இருந்துவிட்டு (கூடவே ஒரு புத்தகமும் எழுதிவிட்டு) வெளியே வந்துவிடுகின்றார்கள். அவர்கள் அல்லவா போதை மருந்து கடத்துபவர்களை விட பெரும் ஆபத்தானவர்கள். Nortel கனடா தலைநகரிலிருந்தே ஆப்பு வைத்தது நம் எல்லோருக்கும் தெரியும். (எப்போது படித்து முடிப்போம்; எப்போது நோர்ட்டெலுக்குள் நுழையலாம் என்று காவிக்கொண்டிருந்த என் கனவு தகர்ந்ததால் வந்த எரிச்சல் அல்ல இது :-) . Nortel சென்ற வாரம் Bankruptcy File செய்திருக்கின்றார்கள் என்பது மேலதிகச் செய்தி.
நம்முடைய பொதுப்புத்தியில் பலவிடயங்கள் சிறுவயதிலிருந்தே திணிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. சிலருக்கு சாதி என்ற அடையாளமே பெருமைக்குரிய இன்னொரு பெயர் போல... என்ற மாதிரி -பல்வேறு விடயங்கள்- ஒவ்வொருவரின் மூளையிலும் சாதாரணமாய்ப் பதியப்பட்டிருகின்றன. சில நாடுகளில் பாலியல் வன்புணர்ந்தவர்களுக்கு மரணதண்டனை வழங்கபட்டிருக்கின்றன. இந்தியாவில் கூட சிலருக்கு வடமாநிலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவ்வாறாயின் நாமேன் இவ்வாறான கேள்விகளை ஒருபோதும் எழுப்புவதில்லை...? இந்திய இராணுவம் காஷ்மீர் அஸாம், மணிப்பூர் உள்ளிட்ட உள்ளூர் மாநிலங்களில் மட்டுமில்லை, 'அமைதிப்படைகளாக' ஆக்கிரமித்த இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் கூட எண்ணற்ற பாலியல் வன்புணர்ச்சிகளைச் செய்திருக்கின்றன (இந்திய இராணுவம் மட்டுமில்லை; உலகிலுள்ள அநேக இராணுவங்கள் அப்படித்தான். கனடிய இராணுவம் சோமாலியாவில் செய்திருக்கின்றது.) . ஆக சாதாரண ஒருவர் பாலியன் வன்புணர்ச்சி செய்யும்போது என்ன தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றாரோ அதேபோன்று இராணுவத்திலுள்ளவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருக்கவேண்டுமல்லவா? ஆகக்குறைந்தது நீதிமன்றத்திலாவது நிறுத்தப்பட்டிருக்கின்றார்களா? வீரப்பனைத் தேடுகின்றோம் என்ற பெயரில் அதிரடிப்படை நிகழ்த்திய கொடூர சித்திரவதைகளுக்கும், வன்புணர்வுகளுக்கும் -வீரப்பன் கொல்லபட்ட சில ஆண்டுகளாகிய பின்னாவது- எந்த அதிரப்படையினராவது நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்களா? ஆனால் நாம் போதை மருந்து கடத்துபவர்களையும், திருடுபவர்களையும் மட்டுமே பெரிய குற்றவாளிகளாக்கிவிடுகின்றோம். மிகுதி அனைவரையும் நாம் 'தேசியத்தின்' பெயரிலும் 'இறையாண்மையின்' இரட்சிப்பிலும் மன்னித்துவிடும் மகாத்மாக்களாகி விடுகின்றோம் போலும். அதைவிட கொடுமை இன்னுஞ்சிலர் இராணுவம் என்றால் அப்படியிப்படித்தான் செய்யும் என்று செப்பி பரமாத்மாக்களாகிவிடுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான்.
(1) Omar Khadr
(2) காட்டூன்: ரொரண்டோ மெட்ரோ நியூஸ்(Jan 22, 2009)
ஆடுகின்ற கதிரையில் அமரப்போவது யாரோ?
In கனடாத் தேர்தல், In பத்திThursday, December 04, 2008
-சூடாகும் கனடா அரசியலும், அவசரமவசரமாய் முகமூடிகளைக் கழற்றிய நம் காலத்து சனநாயக மீட்பர்களும்-
சில வாரஙகளுக்கு முன் வானொலி நிகழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ஆங்கில அகராதியில் புதிதாக வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்கள் என்று கூறியிருந்தார்கள். 'Mah' என்ற வார்த்தை அலுப்பானது (boring) என்ற ஒத்த கருத்தைப் பிரதிபதிப்பது என்று விளக்கி, விரித்துச் சொல்லும்போது, 'அண்மையில் நடந்த கனடாத் தேர்தல் மிக அலுப்பானது' என்று -இப்புதிய வார்த்தையைப் பயன்படுத்தி- ஒரு உதாரணத்தைக் கூறியிருந்தார்கள்.
வழமையாக கனடாத் தேர்தல்கள் எவ்வித ஆரவாரங்களுமில்லாது நடப்பது என்றாலும், இம்முறை குறுகிய காலத்தில் தேர்தல் திகதி அறிவித்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு, அருகிலிருந்த ஐக்கிய அமெரிக்காவில் நடந்த சுவாரசியமான தேர்தல் சூழலும் 'இன்னும் அலுப்பாக்கியதற்கு' ஒரு முக்கிய காரணமெனலாம். இங்கே முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தொலைக்காட்சியில் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அதே நேரத்தில் நிகழ்ந்த, ஐக்கிய அமெரிக்காவின் உப ஜனாதிபதிகளுக்கான விவாதத்தைப் பார்த்த கனேடியர்களே அதிகம் என்று கூறப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி கனடாவில் நடக்கும் தேர்தலையா, ஐக்கிய அமெரிக்காவில் நடக்கும் தேர்தலையா அதிகம் கவனிக்கின்றீர்கள் என்றொரு பத்திரிகை கருத்துக்கணிப்பு நிகழ்த்தியபோது 70%ற்கும் அதிகமான மக்கள் 'அமெரிக்கத் தேர்தலையே' என்று உள்ளதை உள்ளபடியே சொல்லியுமிருக்கின்றார்கள். இதில் பெரிய வியப்பு ஏதுமில்லை. ஈழத்திலிருந்தபோது அதிகம் ஈழத்தமிழர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதைவிட இந்திய அரசியல் பேசுவதில் சுவாரசியமாக இருந்திருப்பதைத்தான் அவதானித்திருக்கின்றேன். சிறுவயதில் இலங்கைப் பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர்களை விட இந்தியப் பாராளுமன்ற அமைச்சர்களின் பெயர்களை அறிந்து வைத்திருந்தது எனக்கும் நினைவிருக்கின்றது. இன்றும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள், இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிப்பது என்பது இதன் நீட்சியில் வருகின்ற ஒரு விடயந்தான்.
2.
கனடாவில் தற்சமயம் நான்கு முக்கிய கட்சிகள் இருக்கின்றன: லிபரல் (Liberals), கொன்சர்வேடிவ் (Conservatives) , புதிய ஜனநாயக் கட்சி (New Democratic Party) , ப்ளொக் கியூபெக்குவா (Bloc Quebecios). என்பன அவை. அண்மைக்காலமாக கிறீன் கட்சியும் (Green Party) மக்களிடையே செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆக இவ்வாறாக கனடாத் தேர்தல்கள் அலுப்பாகவும்..., தங்களை எவரும் கவனிக்கின்றார்கள் இல்லை என்று அரசியல்வாதிகள் எண்ணியதாலோ என்னவோ சென்ற வாரங்களிலிருந்து கனடிய அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது.
2006ற்கு முன், தொடர்ந்து நீண்ட காலமாக மிதவாத லிபரல் கட்சியே கனடாவின் ஆட்சி பீடத்திலிருந்திருக்கின்றது. இலங்கையில் ஜ.தே.கவிற்கு கொழும்பு மாதிரி, தமிழ்நாட்டில் தி.மு.கவிற்கு சென்னை போல, லிபரல் கட்சியின் அசைக்கமுடியாத ஒரு கோட்டையாக ஒன்ராறியோ மாகாணம் இருந்திருக்கின்றது. கனடாவின் 308 பாராளுனற ஆசனங்களில் 106 ஆசனங்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கின்றது. 2000 ஆண்டில் லிபரல் கட்சி இரண்டாவது முறையாக ழான் கிறைட்சியனின் தலைமையில் பெரும்பான்மை அரசு அமைத்தபோது, வென்ற 172 ஆசனங்களில், 100 ஆசனங்கள் ஒன்ராறியோ மாகாணத்திலிருந்து லிபரலுக்கு கிடைத்திருந்தன. 106 ஆசனங்களுள்ள ஒன்ராறியோ மாகாணத்தின் 100 ஆசனங்களை லிபரலுக்கு மக்கள் அளித்தமை இது முதற்தடவையுமில்ல. அதற்கு முன் நிகழ்ந்த 1997 தேர்தலிலும் லிபரல் கட்சி 101 ஆசனங்களை வென்றிருக்கின்றது. ஆக, ஒன்ராறியோ மாகாண மக்களின் மனங்களை அசைத்துப் பார்க்கும் கட்சியே கனடாப் பாராளுமன்றத்தில் எவ்விதப் பயமுமின்றி அமரலாம் என்ற உண்மை எளிதாக அனைவருக்கும் புரியும். ஒன்ராறியோ மாகாணத்திற்கு அடுத்த அதிக ஆசனங்களைக் கொண்ட (75) கியூ(கு)பெக் மாகாணத்தில், லிபரல், வலதுசாரியான 'கொன்சர்வேடிவ்' போன்ற கட்சிகள அவ்வளவு எளிதில் கால் பதிக்க முடியாது, 'கியூபெக்' தனி நாடு கேட்டுப் போராடும் ப்ளொக் கியூபெக்கா என்ற கட்சி தொடர்ந்து பெரும்பான்மை ஆசனங்களை (50 ஆசனங்களுக்கு அண்மையாக தொடர்ந்த பல தேர்தல்களில்) வென்றுகொண்டுவருகின்றது. ப்ளொக் கியூபெக்கா கட்சி, கியூபெக மாகாணத்தில் மட்டுமே போட்டியிருக்கின்ற ஒரு கட்சி.
3.
1993ல் இருந்து தொடர்ச்சியாக 2006 வரை ஆட்சி புரிந்த லிபரல் கட்சியை வீழ்த்தி தாம் ஆட்சிப்பீடத்தில் ஏறுவதற்காய் அதிதீவிர வலதுசாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டே வந்திருந்தனர். தனித்து நின்று வெற்றிபெறமுடியாது என்ற உண்மை வலதுசாரிகளுக்கு உறைத்தபோது, பலவேறு மாகாணங்களின் உள்ளூர் வலதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, 2004 தேர்தலில் கூட்டாய் வலதுசாரிகள் குதித்தனர் (இந்நேரம் பிஜேபி உங்களுக்கு நினைவுக்கு வரலாம்). இதற்கிடையில் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்த ழான் கிறைட்சியன் தலைமையிலான லிபரல் கட்சி, நூறு மில்லியனுக்கு மேலான Sponsorship Scandalலில் மாட்டுப்பட்டு விழி பிதுங்கத்தொடங்கியது. 2004ல் லிபரல் கட்சியிற்கு போல் மார்ட்டின் தலைமை தாங்கி, உறுதியான வலதுசாரிகளின் கொன்சர்வேடிவிற்கு எதிராய் நின்றபோதும், மக்கள் இன்னும் லிபரல் கட்சியைக் கைவிடத் தயாரில்லை என்பதை நிரூபித்தனர். மொத்த ஆசனங்களான 306ல், 135 ஆசனங்களைப்பெற்று லிபரல் கட்சி வெற்றி பெற்றது. இதற்கிடையில் ஊழல் வழக்கின் மீதான இரண்டாவது அறிக்கை விசாரணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டு லிபரல் கட்சியின் ஊழல் பெருச்சாளிகள் கையும் களவுமாய் பிடிபட, என்டிபி, ப்ளொக் க்யூபெக்கா, கொன்சர்வேட்டிவ் ஆகிய கட்சிகள் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து (172 -134) லிபரல் ஆட்சி கலைக்கப்பட்டு 2006ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2006 தேர்தலில் லிபரலின் கோட்டையான ஒன்ராறியோ மாகாணம் உடைக்கப்பட்டு, இதுவரை பெரும்பான்மையாக ஒன்ராறியோவில் ஆசனங்களை வென்ற லிபரலைப் பின் தள்ளி 54 ஆசனங்களை கொன்சர்வேட்டிவ் அரசுக்கு மக்கள் கொடுக்க, லிபரல் 40 ஆசனங்களையே வெல்ல முடிந்தது. இவ்வாறாக நெடும் 'வனவாசத்திற்கு'ப் பிறகு வலதுசாரிகளால ஒரு சிறுபான்மை அரசைக் கனடாவில் 2006ம் ஆண்டில் அமைக்க முடிந்தது.
கனடாத் தேர்தல் - 2006 (Total Seats: 308)
Conservative - 124
Liberal - 103
Bloc Quebecois - 51
NDP - 29
Independent - 1
2006ல் 'வராது வந்த மாமணியாய்' ஆட்சியைப் பிடித்த வலதுசாரிகள், குறுகிய காலத்திற்குள் -2008ல் -அவசமவசரமாக இன்னொரு தேர்தலை அறிவிக்க என்ன நடந்தது என்பது வெள்ளிடை மலை. முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சி அப்போதுதான் ஒரு புதிய தலைவரைத் தங்களுக்குத் தேர்ந்தெடுத்திருந்தனர். அத்தோடு லிபரல் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் தலைவர் பதவியை வெல்லக்கூடியவர்கள் என்று மிகவும் நம்பப்பட்ட Michael Ignatieff. Bob Rae, Gerard Kennedy போன்றவர்கள் தோற்கடிக்கப்பட அதிகம் பிரபல்யமில்லாத Stéphane Dion கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே லிபரலுக்குள் தனது தலைமையை Stéphane Dion முதலில் உறுதியாய் நிரூபிக்கவேண்டிய அவசரமான நிலைமை.
மேலும் லிபரல் கட்சி இன்னும் இரண்டோ மூன்று வருடங்களுக்கு ஒரு தேர்தலை எதிர்பார்க்காத நிலைமையில் (no preparations), குறைந்த கால அவகாசத்திற்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படுகின்றது. Stéphane Dion தனது உட்கட்சிப் பூசல்களையே இன்னும் சமாளிக்கமுடியாத நிலையில் தேர்தலைச் சந்திக்கின்றார். தேர்தல் திகதியை அறிவிக்கின்றபோது கொன்சர்வேடிவ்ற்கு இன்னொரு அதிஸ்டமும் கைகொடுக்கின்றது. கச்சா எண்ணெயின் விலை கூடி கனடாவின் டொலர் பெறுமதியும் உலகசந்தையில் கிடுகிடுவென்று ஏற, எல்லா புறச்சூழல்களும் கொன்சர்வேட்டிவ் கட்சியிற்கு ஒரு வலுவான பெரும்பான்மை கிடைப்பது உறுதியென்று கட்டியங் கூறுகின்றன. இந்த இடத்தில் கன்டாவிலிருக்கும் புலி எதிர்ப்பாளர்களும் உற்சாகமாகவே தேர்தலை எதிர்கொண்டனர் என்பதையும் குறித்தாகவேண்டியிருக்கின்றது. கொன்சர்வேட்டிவ் அரசே புலிகள் இயக்கத்தைக் கன்டாவில் தடைசெய்து பல்வேறு புலிகளின் செயற்பாடுகளை முடக்கத்தொடங்கியிருந்தது. வலதுசாரி அரசாங்கம் ஒன்று வந்தால், கனடாவிற்கு வரும் குடிவரவாளர்கள்/அகதிகளுக்கு என்ன நடக்கும் என்பதையோ, ஓரினப்பாலினர் போன்றவர்கள் மற்றும் (invisible) சிறுபான்மையினருக்கு என்ன நிகழும் என்பது குறித்தோ, ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்தனை ஆண்டுகள் கனடிய இராணுவம் தங்கி 'மனிதாபிமானப்பணி' செய்யப்போகின்றதோ என்ற அக்கறையெல்லாம் இவர்களைப் போன்றவர்களுக்கு அவசியமில்லாத ஒன்றே. புலியை எதிர்த்தால் மட்டுமே நமது மூச்சிருக்கும்வரை செய்வது என்றிருப்போர்க்கு மற்றப் பிரச்சினைகள் நினைவுக்கு வராதது அவர்களது 'சனநாயக'நிலைப்பாடு என்க. சரி, அதை இப்போதைக்கு விடுவோம்.
ஆக பெரும்பான்மை ஆட்சியை நோக்கி வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த கொன்சர்வேட்டியிற்கு முதலில் ஆப்படித்தது, ஜக்கிய அமெரிக்காவின் வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி. 'எமது வங்கிகள் எல்லாம் மிகவும் வலுவான நிலையிலிருக்கின்றன, கவலையேபடவேண்டாம்' என்று நிதியமைச்சர் தேர்தல் காலத்தில் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட 75% ற்கு மேலான வர்த்தகத்தை ஜக்கிய அமெரிக்காவோடு கனடா செய்துகொண்டிருக்கும்போது மக்கள் இதை உறுதியாய் நம்பத் தயாராக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் பொருளாதார வீழ்ச்சியை வைத்து, லிபரல் வென்றுவிடுமோ என்ற நிலை வந்தபோது, அந்த அற்புத தருணத்தை -எமினெமின் வார்த்தைகளில் சொல்வதனால் Seize the momentஐ- லிபரல் கட்சியின் உறுதியற்ற தலைமையால் தமக்குரியதாக மாற்றமுடியவில்லை. ஒரு கட்சியின் அரசியல் விஞ்ஞாபனத்தை விமர்சிக்காது, லிபரல் கட்சியின் தலைவரை நோக்கி மிகவும் கீழ்த்தரமான தாக்குதல்களை கொன்சர்வேட்டிவ் கட்சி தொலைக்காட்சிகளில் நடத்தத்தொடங்கியது, அத்தகையபொழுதில் ' நான் நல்லவன்; மக்களுக்கு அதையெல்லாம் விளங்கப்படுத்தத் தேவையில்லை' என்று அரசியல் சதுரங்கத்தில் எதிர்க் காய்களை நகர்த்தத்தெரியாத லிபரல் கட்சி தலைவரை அரசியல் தெரியாத அப்பாவியெனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அத்தோடு சுற்றுச் சூழலில் மிகுந்த அக்கறையுடையவராக Dion இருந்ததால், சுற்றுச் சூழலை முன்வைத்து நிறைய வரிகளை சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காய் அறவிடப்போகின்றார் என்ற ஒரு பயத்தை மக்களிடையே மிக நுட்பமாக கொன்சர்வேட்டிவ் கட்சி கொண்டு சென்றுமிருந்தது.
ஆக, இப்போது சந்தைப் பொருளாதார வீழ்ச்சியால் கொன்சர்வேடிக் கட்சியிற்கு பெரும்பான்மை அரசு அமைப்பது என்ற நிலையிலிருந்து, 'நாயைப்பிடி பிச்சை வேண்டாம்' என்ற நிலையில் தம் வசத்து இருந்த ஆட்சியை மீளவும் காப்பாற்றவேண்டிய நிலையில் தேர்தல் 2008 ஒக்ரோபரில் நடக்கின்றது.
தேர்தல் 2008 (Total Seats 308)
Conservative - 143
Liberal - 77
Bloc Quebecios - 49
NDP - 37
Independent - 2
இவ்வாறாகச் சென்ற ஒக்ரோபரில் ஒரு பெரும்பான்மை அரசை வலதுசாரிகளுக்குக் கொடுக்க மக்கள் தயாரில்லையென்ற நிலையில், மீண்டும் வலதுசாரிகள் இன்னொரு சிறுபான்மை அரசை பாராளுமன்றத்தில் 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்றவளவில் அமைத்துக்கொண்டார்கள்...
4.
கனடாத் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த இரவிலோ அதற்கடுத்த நாளிலோ, கூடவே துணையாயிருந்த நண்பரிடம், ஏன் மற்றக்கட்சிகள் கூட்டாய்ச் சேர்ந்து கொன்சர்வேடிவை விழுத்தி கூட்டணி அரசை அமைக்கக்கூடாது என்று கேட்டிருக்கின்றேன். இன்னொரு நண்பரிடமும் இது பற்றி விவாதித்த்தாய் நினைவு. இங்கு உயர்கல்லூரியில் படித்த காலங்களிலேயே கனடா வரலாறு, அரசியல் பாடங்கள் பக்கம் போனதேயில்லை. கனடாவின் வரலாறு என்பதே இரத்தக்கறைபடிந்த வரலாறு என்பது வேறு விடயம். ஆகவே கனடிய அரசியல் சட்டத்தில் இவ்வாறான கூட்டணியரசுகள் அமைப்பபதற்கு எதிரான ஒரு சட்டம் கூட இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். எனெனில் இரண்டாம் உலகமகாயுத்ததின் பின், கொம்யூனிஸ்ட் கட்சியொன்றை கனடா தடை செய்ததாய் எங்கையோ வாசித்தது நினைவிலிருக்கின்றது. எதுவும் நடக்கலாம் உலகத்தில்.
ஆக வலதுசாரிகள் மீண்டும் ஆட்சிப்பீடத்திலேறினார்கள். இந்த வருடத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த வருடத்தின் பிற்பகுதியிலாவது ஒரு Recession கட்டாயம் நிகழும் என்று நமது மேன்மைக்குரிய நிதியமைச்சர் செப்பினார். விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் பெரிய துண்டு விழப்போகின்றது (ஆகவே மக்களே உங்களை எப்பாடுபட்டவாது காப்பாற்றுங்கள்) என்றும் அவர் கட்டியம் கூறினார் (ஆப்கானிஸ்தானிற்கே நிறைய பில்லியனின் நிதி போகின்றது பிறகு எப்படி பட்ஜெட்டை balance செய்வதாம்?). அவை எதுவும் குறித்து அதிகம் கவலைப்படாது, தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதற்காய் சுப்பிரமணிய சுவாமியை, ஆனந்தசங்கரியை இங்கே அழைத்து கூட்டங்கள் நடத்தும் நமது புதிய சனநாயகவாதிகள் கொன்சர்வேட்டிவ் அரசு வந்ததால் புலிகளுக்கு மேலும் 'ஆப்பு'க் கிடைக்கப்போகின்றது என்று கொண்டாடினார்கள். எல்லாவிதமான சனநாயகமும் இருக்கின்றதென்றால், புலிகளை எதிர்ப்பதற்கு மட்டுமில்லை புலிகளை ஆதரித்துப் பேசுவதற்கான உரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டும் என்று உண்மையான சன்நாயக விழுமியங்கள் தெரிந்திருந்தால், தமிழ்த் தேசிய கூட்டணியில் மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட பா.உறுப்பினர்களுக்கு கன்டா விசா கொடுக்க மறுக்கப்பட்டபோதெல்லாம் 'அரசியலுக்கு அப்பால்' சனநாயக உரிமையை முன்வைத்து குரல் எழுப்பியிருக்கவேண்டும்... ஒரு சிங்களவரான கலாநிதி விக்கிரபாகுவிற்கு விசா மறுக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கவேண்டும், ஆனால் புலி அடையாளம் கொடுத்து... அவருக்கு விசா மறுக்கப்பட்டதைக் கொண்டாடியதோடு நமது புலியெதிர்ப்பு சன்நாயக உரிமைகள் முடிந்துவிட்டன. புலி X புலி எதிர்ப்பு அரசியலுக்கு அப்பால் நகரமுடியாத புலம்பெயர் அரசியல் நிலவரம் மிகவும் கவலைக்குரித்தானது. புலம்பெயர்ந்து அரசியலை முன்னெடுப்பவர்கள் அல்லது அப்படிச் சொல்பவர்கள், எதற்கெதற்கோ அறிக்கை விடுகின்றார்கள்/கையெழுத்துப் போடுகின்றார்கள். இன்று புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் வன்னிக்குள்ளிருக்கும் மக்களுக்காகவே, கிழக்கு மாகாணத்தில் மாறி மாறி போட்டுத்தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிச் சனங்களுக்காகவோ, மலையகப்பகுதிகள், கொழும்பின் சுற்றுப்புறங்களில் நிகழும் கண்மூடித்தனமான கைதுகள்/ஆட்கடத்தல்கள் பற்றியோ, இலங்கை அரசின் மிலேச்சனத்தனமான கிளஸ்ரர்(Cluster) குண்டுத்தாக்குதல்களுக்கு எதிராகவோ ஒரு அறிக்கை விடுவார்கள் என்றால்..ம்கூம். இப்படியெல்லாம் செய்தால் நமது நடுநிலைமை குழப்பப்பட்டு வரலாற்றில் தம் பெயர்கள் பொன்னெழுத்துக்களில் தவறாகப் பதியப்பட்டு விடுமோ என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது போலும். நமது மக்களுக்காய் எழுந்த இயக்கங்களின் அரசியல் எல்லாம் எப்படி தனி மனிதர்களில் போய் ஒடுங்கிக்கொண்டனவோ அதைவிட மிகக்கேவலமாய் நமது புலம்பெயர் அரசியல் தனிமனிதர்களின் நலன்களுக்காய் முன்னெடுக்கப்படுவதைக் காணும்போது மிகவும் கேவலமாக இருக்கின்றது. எத்தனையோ தேவையற்ற விடயங்களை தமிழ்நாட்டிலிருந்து சுவீகரித்துக்கொண்ட நாம், தமிழகத்துப் படைப்பாளிகள்/ செயற்பாட்டாளர்களிடமிருந்து இவ்வாறான சமயங்களிலாவது -சற்றாவது- மக்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்வது பற்றி கற்றுக்கொள்ளலாம்.
நிற்க. கனடாவின் அரசியலைப் பற்றியெழுத வந்த இக்கட்டுரை எங்கெங்கோ அலைகின்றது. நேர்கோட்டு வாழ்வே இனிச் சாத்தியமில்லை என்கின்றபோது நேர் எழுத்துமுறை சாத்தியமா என்ன? ஆக இறுதியாய் கனடா கொன்சர்வேட்டிவ் அரசு கவிழ்வதர்கான சூழ்நிலைகள் சென்ற வாரத்திலிருந்து கனியத்தொடங்கியிருக்கின்றன.
சிறுபான்மை அரசாகவிருக்கும் கொன்சர்வேட்டிவ் அரசு தானொரு பெரும்பான்மையாக அரசாக தன்னை நினைத்து தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கத்தொடங்கியபோது, இம்முறை லிபரல், என்டிபி, ப்ளொக் கியூபெக்கா சேர்ந்து கொன்சர்வேடிவ் கட்சியிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வருகின்ற திங்கட்கிழமை கொண்டுவருகின்றன. பில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழித்து இரண்டு வருடத்திற்குள் மூன்றாவது தேர்தலை கனடிய மக்கள் சந்திக்க விரும்பமாட்டார்கள் என்பதால், லிபரலும், என்டிபியும் இணைந்து கூடடணியமைத்து அரசைத் தங்களுக்குத் தரும்படி கோருகின்றார்கள். ப்ளொக் கியூபெக் தான் ஆட்சியில் பங்குபெற்றாமல் வெளியிலிருந்து 2010 ஆண்டுவரை ஆதரவு தருகின்றோம் என்றிருக்கின்றார்கள். கொன்சர்வேடிவ் கட்சி கவிழ்வது உறுதியாகிவிட்டது. வருகின்ற ஜனவரி மாதம் சமர்பிக்கின்ற பட்ஜெட் வரையாவது பொறுத்திருக்க... என்று பிரதமர் கதறத்தொடங்கியுள்ளார்.
இம்முறை யார் கனடாவில் ஆட்சியிலிருப்பது என்பதை கவர்னர் ஜெனரலே தீர்மானிக்கவேண்டியவராய் இருக்கின்றார். லிபரல்-என்டிபி இணைந்து, இன்னொரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்காது, தேர்தலில்லாது ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்தது ஒரு நல்லதொரு முயற்சியே. ஆக கவர்னர் ஜெனரலுக்கு மூன்று தெரிவுகள் உள்ளன.
முதலாவது உடனடித் தெரிவாய் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் (ஆகக்குறைந்த அடுத்த பட்ஜெட் சமர்ப்பிக்கும் வரையாவது), அதையேதான் கொன்சர்வேடிவ் அரசாங்கம் கேட்கின்றது. அந்த இடைவெளிக்குள் ஏதாவது சமரசத்தை பின்கதவுவழியால் செய்யலாம் என்று ஆட்சியிலிருக்கும் வலதுசாரிகள் நம்புகின்றனர். இரண்டாவது தெரிவு, பாராளுமன்றத்தைக் கலைத்து இன்னொரு தேர்தலை நடத்துவது. மூன்றாவது தெரிவு, லிபரல்-என்டிபி கூட்டணிக்கட்சிகளை ஆட்சியமைக்கக் கேட்பது.
ப்ளொக் கியூபெக்கா கட்சியினரை பிரிவினைவாதிகள் என்று மோசமாகத் திட்டும்..., புதிய குடிவரவாளர்கள் மீது சட்ட விதிகளை இறுக்கும்..., ஆப்கானிஸ்தானிலுள்ள கனேடிய இராணுவத்தை திருப்பியழைக்க விரும்பாத..., சமர்பிக்கும் பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் குறித்து அதிகம் கவலைப்படாத, கொன்சர்வேட்டிவ் கவிழ்த்து ஒரு கூட்டணி அரசு வருவதே மக்களுக்கு நன்மை பயக்கும். மேலும் இடதுசாரித்தன்மையுள்ள என்டியிபியினர் ஆட்சியில் பங்குபெறும்போது மத்திய/கீழ்த்தர மக்களிற்கும், சிறுபான்மையினருக்கும், புதிய குடிவரவாளருக்கும் ஏதாவது சில நன்மைகளாவது நிகழும் சாத்தியமுமுண்டு.
ம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...?
குறிப்பு 1 : கியூபெக தனிநாடாக பிரியவேண்டும் என்ற ப்ளொக் கியூபெக்கா உள்ளிட்ட கட்சிகள் முக்கிய கோரிக்கையாக வைத்திருந்தாலும், 1967ல் ரூடோ லிபரல் கட்சியின் தலைவராகிப் பிரதமரானதிலிருந்து இற்றைவரை லிபரல் கட்சியிலிருந்து பிரதமர் ஆனவர்கள் எல்லோரும் கியூபெக மாநிலத்திலிருந்தே வந்திருக்கின்றார்கள் என்பது கவனதிற்குரியது. இன்றைய லிபரல் கட்சியின் தலைவரும் கியூபெக மாகாணத்தைச் சேர்ந்தவரே.
குறிப்பு 2: கடந்த மூன்று தேர்தல்களில் என்டிபி கட்சியினர், 19, 29, 37 ஆசனங்களென வளர்ச்சிபெற்று வருவது -தனிப்பட்டவளவில்- எனக்கு உவப்பான விடயம்.
நன்றி: விக்கிபீடியா (தேர்தலின் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்களுக்கு)
படம் 1: கனடா அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதத்தின்போது
படம் 2: கனடாப் பாராளுமன்றம்
சில வாரஙகளுக்கு முன் வானொலி நிகழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ஆங்கில அகராதியில் புதிதாக வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்கள் என்று கூறியிருந்தார்கள். 'Mah' என்ற வார்த்தை அலுப்பானது (boring) என்ற ஒத்த கருத்தைப் பிரதிபதிப்பது என்று விளக்கி, விரித்துச் சொல்லும்போது, 'அண்மையில் நடந்த கனடாத் தேர்தல் மிக அலுப்பானது' என்று -இப்புதிய வார்த்தையைப் பயன்படுத்தி- ஒரு உதாரணத்தைக் கூறியிருந்தார்கள்.
வழமையாக கனடாத் தேர்தல்கள் எவ்வித ஆரவாரங்களுமில்லாது நடப்பது என்றாலும், இம்முறை குறுகிய காலத்தில் தேர்தல் திகதி அறிவித்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு, அருகிலிருந்த ஐக்கிய அமெரிக்காவில் நடந்த சுவாரசியமான தேர்தல் சூழலும் 'இன்னும் அலுப்பாக்கியதற்கு' ஒரு முக்கிய காரணமெனலாம். இங்கே முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தொலைக்காட்சியில் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அதே நேரத்தில் நிகழ்ந்த, ஐக்கிய அமெரிக்காவின் உப ஜனாதிபதிகளுக்கான விவாதத்தைப் பார்த்த கனேடியர்களே அதிகம் என்று கூறப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி கனடாவில் நடக்கும் தேர்தலையா, ஐக்கிய அமெரிக்காவில் நடக்கும் தேர்தலையா அதிகம் கவனிக்கின்றீர்கள் என்றொரு பத்திரிகை கருத்துக்கணிப்பு நிகழ்த்தியபோது 70%ற்கும் அதிகமான மக்கள் 'அமெரிக்கத் தேர்தலையே' என்று உள்ளதை உள்ளபடியே சொல்லியுமிருக்கின்றார்கள். இதில் பெரிய வியப்பு ஏதுமில்லை. ஈழத்திலிருந்தபோது அதிகம் ஈழத்தமிழர்கள், இலங்கைப் பாராளுமன்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதைவிட இந்திய அரசியல் பேசுவதில் சுவாரசியமாக இருந்திருப்பதைத்தான் அவதானித்திருக்கின்றேன். சிறுவயதில் இலங்கைப் பாராளுமன்றத்திலுள்ள அமைச்சர்களை விட இந்தியப் பாராளுமன்ற அமைச்சர்களின் பெயர்களை அறிந்து வைத்திருந்தது எனக்கும் நினைவிருக்கின்றது. இன்றும் பெரும்பான்மையான ஈழத்தமிழர்கள், இந்திய கிரிக்கெட் அணியை ஆதரிப்பது என்பது இதன் நீட்சியில் வருகின்ற ஒரு விடயந்தான்.
2.
கனடாவில் தற்சமயம் நான்கு முக்கிய கட்சிகள் இருக்கின்றன: லிபரல் (Liberals), கொன்சர்வேடிவ் (Conservatives) , புதிய ஜனநாயக் கட்சி (New Democratic Party) , ப்ளொக் கியூபெக்குவா (Bloc Quebecios). என்பன அவை. அண்மைக்காலமாக கிறீன் கட்சியும் (Green Party) மக்களிடையே செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆக இவ்வாறாக கனடாத் தேர்தல்கள் அலுப்பாகவும்..., தங்களை எவரும் கவனிக்கின்றார்கள் இல்லை என்று அரசியல்வாதிகள் எண்ணியதாலோ என்னவோ சென்ற வாரங்களிலிருந்து கனடிய அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது.
2006ற்கு முன், தொடர்ந்து நீண்ட காலமாக மிதவாத லிபரல் கட்சியே கனடாவின் ஆட்சி பீடத்திலிருந்திருக்கின்றது. இலங்கையில் ஜ.தே.கவிற்கு கொழும்பு மாதிரி, தமிழ்நாட்டில் தி.மு.கவிற்கு சென்னை போல, லிபரல் கட்சியின் அசைக்கமுடியாத ஒரு கோட்டையாக ஒன்ராறியோ மாகாணம் இருந்திருக்கின்றது. கனடாவின் 308 பாராளுனற ஆசனங்களில் 106 ஆசனங்கள் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கின்றது. 2000 ஆண்டில் லிபரல் கட்சி இரண்டாவது முறையாக ழான் கிறைட்சியனின் தலைமையில் பெரும்பான்மை அரசு அமைத்தபோது, வென்ற 172 ஆசனங்களில், 100 ஆசனங்கள் ஒன்ராறியோ மாகாணத்திலிருந்து லிபரலுக்கு கிடைத்திருந்தன. 106 ஆசனங்களுள்ள ஒன்ராறியோ மாகாணத்தின் 100 ஆசனங்களை லிபரலுக்கு மக்கள் அளித்தமை இது முதற்தடவையுமில்ல. அதற்கு முன் நிகழ்ந்த 1997 தேர்தலிலும் லிபரல் கட்சி 101 ஆசனங்களை வென்றிருக்கின்றது. ஆக, ஒன்ராறியோ மாகாண மக்களின் மனங்களை அசைத்துப் பார்க்கும் கட்சியே கனடாப் பாராளுமன்றத்தில் எவ்விதப் பயமுமின்றி அமரலாம் என்ற உண்மை எளிதாக அனைவருக்கும் புரியும். ஒன்ராறியோ மாகாணத்திற்கு அடுத்த அதிக ஆசனங்களைக் கொண்ட (75) கியூ(கு)பெக் மாகாணத்தில், லிபரல், வலதுசாரியான 'கொன்சர்வேடிவ்' போன்ற கட்சிகள அவ்வளவு எளிதில் கால் பதிக்க முடியாது, 'கியூபெக்' தனி நாடு கேட்டுப் போராடும் ப்ளொக் கியூபெக்கா என்ற கட்சி தொடர்ந்து பெரும்பான்மை ஆசனங்களை (50 ஆசனங்களுக்கு அண்மையாக தொடர்ந்த பல தேர்தல்களில்) வென்றுகொண்டுவருகின்றது. ப்ளொக் கியூபெக்கா கட்சி, கியூபெக மாகாணத்தில் மட்டுமே போட்டியிருக்கின்ற ஒரு கட்சி.
3.
1993ல் இருந்து தொடர்ச்சியாக 2006 வரை ஆட்சி புரிந்த லிபரல் கட்சியை வீழ்த்தி தாம் ஆட்சிப்பீடத்தில் ஏறுவதற்காய் அதிதீவிர வலதுசாரிகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டே வந்திருந்தனர். தனித்து நின்று வெற்றிபெறமுடியாது என்ற உண்மை வலதுசாரிகளுக்கு உறைத்தபோது, பலவேறு மாகாணங்களின் உள்ளூர் வலதுசாரிச் சிந்தனையுள்ள கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, 2004 தேர்தலில் கூட்டாய் வலதுசாரிகள் குதித்தனர் (இந்நேரம் பிஜேபி உங்களுக்கு நினைவுக்கு வரலாம்). இதற்கிடையில் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுத்த ழான் கிறைட்சியன் தலைமையிலான லிபரல் கட்சி, நூறு மில்லியனுக்கு மேலான Sponsorship Scandalலில் மாட்டுப்பட்டு விழி பிதுங்கத்தொடங்கியது. 2004ல் லிபரல் கட்சியிற்கு போல் மார்ட்டின் தலைமை தாங்கி, உறுதியான வலதுசாரிகளின் கொன்சர்வேடிவிற்கு எதிராய் நின்றபோதும், மக்கள் இன்னும் லிபரல் கட்சியைக் கைவிடத் தயாரில்லை என்பதை நிரூபித்தனர். மொத்த ஆசனங்களான 306ல், 135 ஆசனங்களைப்பெற்று லிபரல் கட்சி வெற்றி பெற்றது. இதற்கிடையில் ஊழல் வழக்கின் மீதான இரண்டாவது அறிக்கை விசாரணைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டு லிபரல் கட்சியின் ஊழல் பெருச்சாளிகள் கையும் களவுமாய் பிடிபட, என்டிபி, ப்ளொக் க்யூபெக்கா, கொன்சர்வேட்டிவ் ஆகிய கட்சிகள் அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து (172 -134) லிபரல் ஆட்சி கலைக்கப்பட்டு 2006ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2006 தேர்தலில் லிபரலின் கோட்டையான ஒன்ராறியோ மாகாணம் உடைக்கப்பட்டு, இதுவரை பெரும்பான்மையாக ஒன்ராறியோவில் ஆசனங்களை வென்ற லிபரலைப் பின் தள்ளி 54 ஆசனங்களை கொன்சர்வேட்டிவ் அரசுக்கு மக்கள் கொடுக்க, லிபரல் 40 ஆசனங்களையே வெல்ல முடிந்தது. இவ்வாறாக நெடும் 'வனவாசத்திற்கு'ப் பிறகு வலதுசாரிகளால ஒரு சிறுபான்மை அரசைக் கனடாவில் 2006ம் ஆண்டில் அமைக்க முடிந்தது.கனடாத் தேர்தல் - 2006 (Total Seats: 308)
Conservative - 124
Liberal - 103
Bloc Quebecois - 51
NDP - 29
Independent - 1
2006ல் 'வராது வந்த மாமணியாய்' ஆட்சியைப் பிடித்த வலதுசாரிகள், குறுகிய காலத்திற்குள் -2008ல் -அவசமவசரமாக இன்னொரு தேர்தலை அறிவிக்க என்ன நடந்தது என்பது வெள்ளிடை மலை. முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சி அப்போதுதான் ஒரு புதிய தலைவரைத் தங்களுக்குத் தேர்ந்தெடுத்திருந்தனர். அத்தோடு லிபரல் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் தலைவர் பதவியை வெல்லக்கூடியவர்கள் என்று மிகவும் நம்பப்பட்ட Michael Ignatieff. Bob Rae, Gerard Kennedy போன்றவர்கள் தோற்கடிக்கப்பட அதிகம் பிரபல்யமில்லாத Stéphane Dion கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகவே லிபரலுக்குள் தனது தலைமையை Stéphane Dion முதலில் உறுதியாய் நிரூபிக்கவேண்டிய அவசரமான நிலைமை.
மேலும் லிபரல் கட்சி இன்னும் இரண்டோ மூன்று வருடங்களுக்கு ஒரு தேர்தலை எதிர்பார்க்காத நிலைமையில் (no preparations), குறைந்த கால அவகாசத்திற்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படுகின்றது. Stéphane Dion தனது உட்கட்சிப் பூசல்களையே இன்னும் சமாளிக்கமுடியாத நிலையில் தேர்தலைச் சந்திக்கின்றார். தேர்தல் திகதியை அறிவிக்கின்றபோது கொன்சர்வேடிவ்ற்கு இன்னொரு அதிஸ்டமும் கைகொடுக்கின்றது. கச்சா எண்ணெயின் விலை கூடி கனடாவின் டொலர் பெறுமதியும் உலகசந்தையில் கிடுகிடுவென்று ஏற, எல்லா புறச்சூழல்களும் கொன்சர்வேட்டிவ் கட்சியிற்கு ஒரு வலுவான பெரும்பான்மை கிடைப்பது உறுதியென்று கட்டியங் கூறுகின்றன. இந்த இடத்தில் கன்டாவிலிருக்கும் புலி எதிர்ப்பாளர்களும் உற்சாகமாகவே தேர்தலை எதிர்கொண்டனர் என்பதையும் குறித்தாகவேண்டியிருக்கின்றது. கொன்சர்வேட்டிவ் அரசே புலிகள் இயக்கத்தைக் கன்டாவில் தடைசெய்து பல்வேறு புலிகளின் செயற்பாடுகளை முடக்கத்தொடங்கியிருந்தது. வலதுசாரி அரசாங்கம் ஒன்று வந்தால், கனடாவிற்கு வரும் குடிவரவாளர்கள்/அகதிகளுக்கு என்ன நடக்கும் என்பதையோ, ஓரினப்பாலினர் போன்றவர்கள் மற்றும் (invisible) சிறுபான்மையினருக்கு என்ன நிகழும் என்பது குறித்தோ, ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்தனை ஆண்டுகள் கனடிய இராணுவம் தங்கி 'மனிதாபிமானப்பணி' செய்யப்போகின்றதோ என்ற அக்கறையெல்லாம் இவர்களைப் போன்றவர்களுக்கு அவசியமில்லாத ஒன்றே. புலியை எதிர்த்தால் மட்டுமே நமது மூச்சிருக்கும்வரை செய்வது என்றிருப்போர்க்கு மற்றப் பிரச்சினைகள் நினைவுக்கு வராதது அவர்களது 'சனநாயக'நிலைப்பாடு என்க. சரி, அதை இப்போதைக்கு விடுவோம்.
ஆக பெரும்பான்மை ஆட்சியை நோக்கி வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த கொன்சர்வேட்டியிற்கு முதலில் ஆப்படித்தது, ஜக்கிய அமெரிக்காவின் வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி. 'எமது வங்கிகள் எல்லாம் மிகவும் வலுவான நிலையிலிருக்கின்றன, கவலையேபடவேண்டாம்' என்று நிதியமைச்சர் தேர்தல் காலத்தில் அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட 75% ற்கு மேலான வர்த்தகத்தை ஜக்கிய அமெரிக்காவோடு கனடா செய்துகொண்டிருக்கும்போது மக்கள் இதை உறுதியாய் நம்பத் தயாராக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் பொருளாதார வீழ்ச்சியை வைத்து, லிபரல் வென்றுவிடுமோ என்ற நிலை வந்தபோது, அந்த அற்புத தருணத்தை -எமினெமின் வார்த்தைகளில் சொல்வதனால் Seize the momentஐ- லிபரல் கட்சியின் உறுதியற்ற தலைமையால் தமக்குரியதாக மாற்றமுடியவில்லை. ஒரு கட்சியின் அரசியல் விஞ்ஞாபனத்தை விமர்சிக்காது, லிபரல் கட்சியின் தலைவரை நோக்கி மிகவும் கீழ்த்தரமான தாக்குதல்களை கொன்சர்வேட்டிவ் கட்சி தொலைக்காட்சிகளில் நடத்தத்தொடங்கியது, அத்தகையபொழுதில் ' நான் நல்லவன்; மக்களுக்கு அதையெல்லாம் விளங்கப்படுத்தத் தேவையில்லை' என்று அரசியல் சதுரங்கத்தில் எதிர்க் காய்களை நகர்த்தத்தெரியாத லிபரல் கட்சி தலைவரை அரசியல் தெரியாத அப்பாவியெனத்தான் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அத்தோடு சுற்றுச் சூழலில் மிகுந்த அக்கறையுடையவராக Dion இருந்ததால், சுற்றுச் சூழலை முன்வைத்து நிறைய வரிகளை சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காய் அறவிடப்போகின்றார் என்ற ஒரு பயத்தை மக்களிடையே மிக நுட்பமாக கொன்சர்வேட்டிவ் கட்சி கொண்டு சென்றுமிருந்தது.
ஆக, இப்போது சந்தைப் பொருளாதார வீழ்ச்சியால் கொன்சர்வேடிக் கட்சியிற்கு பெரும்பான்மை அரசு அமைப்பது என்ற நிலையிலிருந்து, 'நாயைப்பிடி பிச்சை வேண்டாம்' என்ற நிலையில் தம் வசத்து இருந்த ஆட்சியை மீளவும் காப்பாற்றவேண்டிய நிலையில் தேர்தல் 2008 ஒக்ரோபரில் நடக்கின்றது.
தேர்தல் 2008 (Total Seats 308)
Conservative - 143
Liberal - 77
Bloc Quebecios - 49
NDP - 37
Independent - 2
இவ்வாறாகச் சென்ற ஒக்ரோபரில் ஒரு பெரும்பான்மை அரசை வலதுசாரிகளுக்குக் கொடுக்க மக்கள் தயாரில்லையென்ற நிலையில், மீண்டும் வலதுசாரிகள் இன்னொரு சிறுபான்மை அரசை பாராளுமன்றத்தில் 'தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்' என்றவளவில் அமைத்துக்கொண்டார்கள்...
4.
கனடாத் தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த இரவிலோ அதற்கடுத்த நாளிலோ, கூடவே துணையாயிருந்த நண்பரிடம், ஏன் மற்றக்கட்சிகள் கூட்டாய்ச் சேர்ந்து கொன்சர்வேடிவை விழுத்தி கூட்டணி அரசை அமைக்கக்கூடாது என்று கேட்டிருக்கின்றேன். இன்னொரு நண்பரிடமும் இது பற்றி விவாதித்த்தாய் நினைவு. இங்கு உயர்கல்லூரியில் படித்த காலங்களிலேயே கனடா வரலாறு, அரசியல் பாடங்கள் பக்கம் போனதேயில்லை. கனடாவின் வரலாறு என்பதே இரத்தக்கறைபடிந்த வரலாறு என்பது வேறு விடயம். ஆகவே கனடிய அரசியல் சட்டத்தில் இவ்வாறான கூட்டணியரசுகள் அமைப்பபதற்கு எதிரான ஒரு சட்டம் கூட இருக்கலாம் என்று நினைத்திருந்தேன். எனெனில் இரண்டாம் உலகமகாயுத்ததின் பின், கொம்யூனிஸ்ட் கட்சியொன்றை கனடா தடை செய்ததாய் எங்கையோ வாசித்தது நினைவிலிருக்கின்றது. எதுவும் நடக்கலாம் உலகத்தில்.ஆக வலதுசாரிகள் மீண்டும் ஆட்சிப்பீடத்திலேறினார்கள். இந்த வருடத்தில் இல்லாவிட்டாலும் அடுத்த வருடத்தின் பிற்பகுதியிலாவது ஒரு Recession கட்டாயம் நிகழும் என்று நமது மேன்மைக்குரிய நிதியமைச்சர் செப்பினார். விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் பெரிய துண்டு விழப்போகின்றது (ஆகவே மக்களே உங்களை எப்பாடுபட்டவாது காப்பாற்றுங்கள்) என்றும் அவர் கட்டியம் கூறினார் (ஆப்கானிஸ்தானிற்கே நிறைய பில்லியனின் நிதி போகின்றது பிறகு எப்படி பட்ஜெட்டை balance செய்வதாம்?). அவை எதுவும் குறித்து அதிகம் கவலைப்படாது, தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பதற்காய் சுப்பிரமணிய சுவாமியை, ஆனந்தசங்கரியை இங்கே அழைத்து கூட்டங்கள் நடத்தும் நமது புதிய சனநாயகவாதிகள் கொன்சர்வேட்டிவ் அரசு வந்ததால் புலிகளுக்கு மேலும் 'ஆப்பு'க் கிடைக்கப்போகின்றது என்று கொண்டாடினார்கள். எல்லாவிதமான சனநாயகமும் இருக்கின்றதென்றால், புலிகளை எதிர்ப்பதற்கு மட்டுமில்லை புலிகளை ஆதரித்துப் பேசுவதற்கான உரிமைக்கும் குரல் கொடுக்கவேண்டும் என்று உண்மையான சன்நாயக விழுமியங்கள் தெரிந்திருந்தால், தமிழ்த் தேசிய கூட்டணியில் மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட பா.உறுப்பினர்களுக்கு கன்டா விசா கொடுக்க மறுக்கப்பட்டபோதெல்லாம் 'அரசியலுக்கு அப்பால்' சனநாயக உரிமையை முன்வைத்து குரல் எழுப்பியிருக்கவேண்டும்... ஒரு சிங்களவரான கலாநிதி விக்கிரபாகுவிற்கு விசா மறுக்கப்பட்டதை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கவேண்டும், ஆனால் புலி அடையாளம் கொடுத்து... அவருக்கு விசா மறுக்கப்பட்டதைக் கொண்டாடியதோடு நமது புலியெதிர்ப்பு சன்நாயக உரிமைகள் முடிந்துவிட்டன. புலி X புலி எதிர்ப்பு அரசியலுக்கு அப்பால் நகரமுடியாத புலம்பெயர் அரசியல் நிலவரம் மிகவும் கவலைக்குரித்தானது. புலம்பெயர்ந்து அரசியலை முன்னெடுப்பவர்கள் அல்லது அப்படிச் சொல்பவர்கள், எதற்கெதற்கோ அறிக்கை விடுகின்றார்கள்/கையெழுத்துப் போடுகின்றார்கள். இன்று புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் வன்னிக்குள்ளிருக்கும் மக்களுக்காகவே, கிழக்கு மாகாணத்தில் மாறி மாறி போட்டுத்தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிச் சனங்களுக்காகவோ, மலையகப்பகுதிகள், கொழும்பின் சுற்றுப்புறங்களில் நிகழும் கண்மூடித்தனமான கைதுகள்/ஆட்கடத்தல்கள் பற்றியோ, இலங்கை அரசின் மிலேச்சனத்தனமான கிளஸ்ரர்(Cluster) குண்டுத்தாக்குதல்களுக்கு எதிராகவோ ஒரு அறிக்கை விடுவார்கள் என்றால்..ம்கூம். இப்படியெல்லாம் செய்தால் நமது நடுநிலைமை குழப்பப்பட்டு வரலாற்றில் தம் பெயர்கள் பொன்னெழுத்துக்களில் தவறாகப் பதியப்பட்டு விடுமோ என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது போலும். நமது மக்களுக்காய் எழுந்த இயக்கங்களின் அரசியல் எல்லாம் எப்படி தனி மனிதர்களில் போய் ஒடுங்கிக்கொண்டனவோ அதைவிட மிகக்கேவலமாய் நமது புலம்பெயர் அரசியல் தனிமனிதர்களின் நலன்களுக்காய் முன்னெடுக்கப்படுவதைக் காணும்போது மிகவும் கேவலமாக இருக்கின்றது. எத்தனையோ தேவையற்ற விடயங்களை தமிழ்நாட்டிலிருந்து சுவீகரித்துக்கொண்ட நாம், தமிழகத்துப் படைப்பாளிகள்/ செயற்பாட்டாளர்களிடமிருந்து இவ்வாறான சமயங்களிலாவது -சற்றாவது- மக்களுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்வது பற்றி கற்றுக்கொள்ளலாம்.
நிற்க. கனடாவின் அரசியலைப் பற்றியெழுத வந்த இக்கட்டுரை எங்கெங்கோ அலைகின்றது. நேர்கோட்டு வாழ்வே இனிச் சாத்தியமில்லை என்கின்றபோது நேர் எழுத்துமுறை சாத்தியமா என்ன? ஆக இறுதியாய் கனடா கொன்சர்வேட்டிவ் அரசு கவிழ்வதர்கான சூழ்நிலைகள் சென்ற வாரத்திலிருந்து கனியத்தொடங்கியிருக்கின்றன.
சிறுபான்மை அரசாகவிருக்கும் கொன்சர்வேட்டிவ் அரசு தானொரு பெரும்பான்மையாக அரசாக தன்னை நினைத்து தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கத்தொடங்கியபோது, இம்முறை லிபரல், என்டிபி, ப்ளொக் கியூபெக்கா சேர்ந்து கொன்சர்வேடிவ் கட்சியிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வருகின்ற திங்கட்கிழமை கொண்டுவருகின்றன. பில்லியன் கணக்கில் பணத்தைச் செலவழித்து இரண்டு வருடத்திற்குள் மூன்றாவது தேர்தலை கனடிய மக்கள் சந்திக்க விரும்பமாட்டார்கள் என்பதால், லிபரலும், என்டிபியும் இணைந்து கூடடணியமைத்து அரசைத் தங்களுக்குத் தரும்படி கோருகின்றார்கள். ப்ளொக் கியூபெக் தான் ஆட்சியில் பங்குபெற்றாமல் வெளியிலிருந்து 2010 ஆண்டுவரை ஆதரவு தருகின்றோம் என்றிருக்கின்றார்கள். கொன்சர்வேடிவ் கட்சி கவிழ்வது உறுதியாகிவிட்டது. வருகின்ற ஜனவரி மாதம் சமர்பிக்கின்ற பட்ஜெட் வரையாவது பொறுத்திருக்க... என்று பிரதமர் கதறத்தொடங்கியுள்ளார்.
இம்முறை யார் கனடாவில் ஆட்சியிலிருப்பது என்பதை கவர்னர் ஜெனரலே தீர்மானிக்கவேண்டியவராய் இருக்கின்றார். லிபரல்-என்டிபி இணைந்து, இன்னொரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்காது, தேர்தலில்லாது ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்தது ஒரு நல்லதொரு முயற்சியே. ஆக கவர்னர் ஜெனரலுக்கு மூன்று தெரிவுகள் உள்ளன.
முதலாவது உடனடித் தெரிவாய் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல் (ஆகக்குறைந்த அடுத்த பட்ஜெட் சமர்ப்பிக்கும் வரையாவது), அதையேதான் கொன்சர்வேடிவ் அரசாங்கம் கேட்கின்றது. அந்த இடைவெளிக்குள் ஏதாவது சமரசத்தை பின்கதவுவழியால் செய்யலாம் என்று ஆட்சியிலிருக்கும் வலதுசாரிகள் நம்புகின்றனர். இரண்டாவது தெரிவு, பாராளுமன்றத்தைக் கலைத்து இன்னொரு தேர்தலை நடத்துவது. மூன்றாவது தெரிவு, லிபரல்-என்டிபி கூட்டணிக்கட்சிகளை ஆட்சியமைக்கக் கேட்பது.
ப்ளொக் கியூபெக்கா கட்சியினரை பிரிவினைவாதிகள் என்று மோசமாகத் திட்டும்..., புதிய குடிவரவாளர்கள் மீது சட்ட விதிகளை இறுக்கும்..., ஆப்கானிஸ்தானிலுள்ள கனேடிய இராணுவத்தை திருப்பியழைக்க விரும்பாத..., சமர்பிக்கும் பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் குறித்து அதிகம் கவலைப்படாத, கொன்சர்வேட்டிவ் கவிழ்த்து ஒரு கூட்டணி அரசு வருவதே மக்களுக்கு நன்மை பயக்கும். மேலும் இடதுசாரித்தன்மையுள்ள என்டியிபியினர் ஆட்சியில் பங்குபெறும்போது மத்திய/கீழ்த்தர மக்களிற்கும், சிறுபான்மையினருக்கும், புதிய குடிவரவாளருக்கும் ஏதாவது சில நன்மைகளாவது நிகழும் சாத்தியமுமுண்டு.
ம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...?
குறிப்பு 1 : கியூபெக தனிநாடாக பிரியவேண்டும் என்ற ப்ளொக் கியூபெக்கா உள்ளிட்ட கட்சிகள் முக்கிய கோரிக்கையாக வைத்திருந்தாலும், 1967ல் ரூடோ லிபரல் கட்சியின் தலைவராகிப் பிரதமரானதிலிருந்து இற்றைவரை லிபரல் கட்சியிலிருந்து பிரதமர் ஆனவர்கள் எல்லோரும் கியூபெக மாநிலத்திலிருந்தே வந்திருக்கின்றார்கள் என்பது கவனதிற்குரியது. இன்றைய லிபரல் கட்சியின் தலைவரும் கியூபெக மாகாணத்தைச் சேர்ந்தவரே.
குறிப்பு 2: கடந்த மூன்று தேர்தல்களில் என்டிபி கட்சியினர், 19, 29, 37 ஆசனங்களென வளர்ச்சிபெற்று வருவது -தனிப்பட்டவளவில்- எனக்கு உவப்பான விடயம்.
நன்றி: விக்கிபீடியா (தேர்தலின் கட்சிகள் பெற்ற ஆசனங்களின் விபரங்களுக்கு)
படம் 1: கனடா அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொலைக்காட்சி விவாதத்தின்போது
படம் 2: கனடாப் பாராளுமன்றம்
நினைவுகள், நிகழ்வுகள், விசனங்கள்
In நிகழ்வு, In பத்திThursday, May 01, 2008
சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட சோவியத்து சிறுவர் இலக்கியங்களுக்கும் எனது சிறுவயது வாசிப்பில் முக்கிய இடமுண்டு. அதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து பொ.ஜங்கரநேசனால் வெளியிடப்பட்ட நங்கூரமும், செங்கை ஆழியான் எனப்படும் செ.குணரத்தினம் ஆசிரியர்களில் ஒருவராய் இருந்த அறிவுக்களஞ்சியமும் நினைவில் வருகின்றன. தொடர்ச்சியாக போர்மேகங்கள் மூடப்பட்டிருந்த காலகட்டத்தில் இவையெல்லாம் வாசிக்கக் கிடைத்திருக்கின்றன என்பது ஒரளவு வியப்புக்குரிய விடயந்தான். பாடசாலையிலும் சில பாடங்களில் முதலிடம் பெறும்போது பரிசளிக்கும் வைபவத்தில் அதிகமாய் சோவியத்து சிறுவர் நூற்களையே பரிசாக வழங்குவார்கள்.. மேலும் எனது சகோதரர்களும் வாசிப்பில் விருப்புடையவர்களாய் இருந்ததால் அவர்களின் சேகரிப்பிலிருந்து எனக்கு இவ்வாறான சஞ்சிகைகள்/புத்தகங்கள் கிடைப்பது இல்குவாகவும் இருந்தது (அப்படி படங்களைப் பார்த்து பார்த்து -ஆங்கிலம் அவ்வளவு பரீட்சயமில்லாது- விளங்கிக்கொள்ளமுயன்ற புத்தகங்கள் ரின்ரின்னுடையவை).
இன்னுஞ் சொல்லப்போனால் போர்ச்சூழலுக்குள் அள்ளுப்பட்டு திரிந்தாலும், போரை நேரடியாக அறிமுகப்படுத்தியது சோவியத்து இலக்கியங்களே என்றுதான் கூறவேண்டும். முழங்காலைத் தாண்டிய நீண்ட அங்கிகளை (coats) அணிந்தபடி நீண்ட துவக்குகளை (ஏகே47) நீட்டியபடி இருக்கும் வீரர்களை முதலில் தரிசித்ததும் சோவியத்து இலக்கியங்களிலேயேதான். கிராமம் கிராமமாய் செஞ்சேனையினர் (Red Army) கால்நடையாகவும், குதிரைகளிலும் அணிவகுத்துப்போகும்போது அவர்களின் பின்னால் போவது மாதிரியும், நாம் மாட்டுப்பட்டுப்போன போரிலிருந்து எங்களை விடுவிக்க எமது போராளிகள் செஞ்சேனை வீரர்களைப்போல அணிவகுத்து வருவார்களெனவும் -முக்கியமாய் இந்திய இராணுவக் காலத்தில்- கனவுகள் கண்டிருக்கின்றேன்.
இவ்வாறான சிறுபராயத்து நினைவுகளை மீண்டும் கிளர்ந்தெழச் செய்தது சரவணனின் ஏழுநிறப்பூ என்ற வலைப்பதிவு. அதன் நீட்சியில், இன்றைய கால சிறுவர்களுக்கு எங்களுக்குக் கிடைத்ததுபோன்று அல்லாது, அவர்கள் வயதுக்குரிய சஞ்சிகைகள்/நூல்கள் மிக அரிதாகக் கிடைக்கின்றன என நண்பரொருவருடன் கவலைப்பட்டுக் கதைத்துக்கொண்டிருந்தேன். எனது அண்ணா ஒருவரின் வீட்டுக்குப்போகும்போதெல்லாம், அவர்கள் வீட்டில் நிரம்பியிருக்கும் அற்புதமான வடிவமைப்பிலிருக்கும் ரஷ்ய/உக்ரேனிய சிறுவர் நூற்களைப் பார்க்கும்போது, ரஷ்ய மொழியில் பரீட்சயமுள்ள அவரை, இக்கதைகளை மொழிபெயர்த்துத் தாருங்கள் -எப்போதாவது ஒருகாலத்தில் வெளியிடமுயற்சிக்கலாம்- என்று அடிக்கடி தொந்தரவுபடுத்திக் கொண்டிருப்பேன்.
தமிழில் என் மனதுக்கு மிக நெருக்கமான மொழிநடையைக் கொண்டவரான எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் வந்த, அலிஸூம் அற்புத உலகமும் நூலை வாசித்தபோது அதன் எழுத்துநடை வறட்சியாக இருந்தது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. பிறகு சிறு சிறுகதைகளை மொழிபெயர்த்து வந்த எஸ்.ராவின் 'கால் முளைத்த கதைகள்' தொகுப்பை, கொழும்பில் அக்காவின் மகளுக்கு வாங்கிக்கொடுத்தபோது அதை முழுமையாக வாசிக்க முடியாமற் போனாலும் -வாசித்தளவில்- அது எனக்குப் பிடித்திருந்தது. ஜெயமோகனின் பனிமனிதன் குறித்து இரண்டு வேறுபட்ட கருத்துக்களைக் கேட்டிருக்கின்றேன். எனினும் நெருங்கிய நண்பரொருவர் ஜெயமோகனை பனிமனிதனில் வாசிக்கத் தொடங்கி வந்த ஆர்வத்தால், ஜெயமோகனின் மற்ற நாவல்களையும் வாசித்து அவரது எழுத்து நடையை தொடர்ந்து வியந்துகொண்டிருப்பவர் என்றபடியால், நல்லதொரு வாசிப்பனுபவத்தை சிறுவர்களுக்கு பனிமனிதன் கொடுக்கக்கூடியது என்றே நம்புகின்றேன். அதுமட்டுமில்லாது நீயும் இப்படி என்னைப் போன்ற வாசிப்புப் புள்ளியிலிருந்து தொடங்கியிருந்தாய் என்றால் ஜெமோவை இந்தளவுக்குத் திட்டிக்கொண்டிருக்கமாட்டாய் என்றும் அந்த நண்பர் கூறுவார். என்ன செய்ய, நான் ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கியபோது அவரது நாவிற்குள் விஷ்ணு புரண்டு படுக்கத்தொடங்கிய கலிகாலமாயிற்றே!
மேலும் தமிழில் பதிப்பிக்கப்படும் சிறுவர் நூற்களை, இங்கே (புலம்பெயர்ந்த நாட்டில்) பிறந்த சிறுவர்களுக்கு அப்படியே வாசித்துக் காட்டவும் முடியாது. கிழமைக்கு ஒருமுறை -சில மணித்தியாலங்கள்- தமிழ் படிக்கப்போகும் அண்ணாவின் எட்டு வயது மகனுக்கு தமிழைச் சொல்லிக் கொடுககும்போதுதான் தமிழ் எவ்வளவு கடினமான முறையில் கற்பிப்பதற்கு இருக்கின்றது என்று விளங்குகின்றது. எனினும் கிழமைக்கு ஒருமுறை தமிழ் படித்தாலும், அவனுக்கு இருக்கும் ஆர்வத்தால் தமிழை ஒரளவு எழுதவும் வாசிக்கவும் செய்கின்றான் என்பது ஆறுதல் தரும் விடயம். அண்மையில் தெரிதா பற்றிய கட்டுரையை கணனியில் தட்டிக்கொண்டிருந்தபோது, நான் எழுதியவற்றைத் தான் வாசிக்கப்போகின்றேன் எனத் தட்டுத்தடுமாறி ஒரு பந்தியை வாசிக்கத் தொடங்கியிருந்தான். அதைத் கேட்டுக்கொண்டிருந்த அம்மா, 'உனது தமிழ் மானாட மயிலாடவில் நமீதா கதைக்கும் தமிழ் போல இருக்கிறது' என்றார் (அப்படியென்ன நமீதா தமிழ் கதைக்கிறார் என்று மானாட மயிலாடவின் ஒரு எபிசோட் பார்த்தபோது பூஜா நடுவராக வந்திருந்தார் என்பது வேறு விடயம்).
ஈழத்தில் படித்த பாடசாலையில் நூலக வசதி இருந்தாலும், ஓ/எல் வகுப்பு வரும்வரை அதற்குக் கீழேயுள்ள மாணவர்களை அதைப் பயன்படுதத விடமாட்டார்கள் (யாழ்ப்பாணத்துக்காரர்களுக்கு இருக்கும் சொத்துச் சேகரிக்கும் பழக்கம்போல அல்லது வைக்கல் பட்டறை நாய்போல எனவும் இதை வாசிக்கலாம்). அதுமட்டுமில்லை, வகுப்பறையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கூட, புத்தகங்களை வாசிக்க விடமாட்டார்கள். அவ்வாறு வாசிக்கும்போது பின் பக்கத்தால் வந்து உளவறிந்த ஆசிரியர்களிடம் பிடிபட்டு அடிவாங்கிய நாட்கள் நிறையவுண்டு. நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே பாடசாலை சொந்த இடத்தை விட்டு அகதியாய் எங்களோடு அலையத் தொடங்கிவிட்டது. வாசிப்பதற்கு நூலகம் என்ற ஒன்றில்லாதபோது, ஏன் நானே தொடங்கக்கூடாது என்று நடமாடும் நூலகம் ஒன்றை நான் இன்னொரு நண்பனுடன் சேர்ந்து ஆரம்பித்திருந்தேன். பன்னிரெண்டு பதின்மூன்று வயதிற்குள் எனக்கு கொமிக்ஸ் புத்தகங்கள் மீதிருந்த ஆர்வம் போய்விட்டிருந்தது. எனவே என்னிடமிருக்கும் கொமிக்ஸ் புத்தகங்களை விற்றுவிட்டு அதில் வரும் காசைக்கொண்டு அறிவுக்களஞ்சியம், நங்கூரம், தளிர் (இந்தியாவிலிருந்து வந்ததென நினைக்கிறேன்) போன்ற சஞ்சிகைகளையும் பிற நூற்களையும் வாங்கத் தொடங்கினேன். நூலகத்திற்கு அல்பேர்ட் ஐன்ஸ்டீன் என்று கூட பெயர் வைத்திருந்தேன்.
பழைய கொமிக்ஸ் புத்தகங்களை தனக்குரியதாக வைத்திருக்க விரும்பிய நண்பனொருவன் ஆர்வத்தில் நிறைய வாங்கி, பின் பணவசதியில்லாததால் முழுப்பணத்தைத் தரவுமிலலை. அவனுக்குத் திருப்பித் தர பண்ம் இல்லையென்பதை நேரடியாகச் சொல்லாமல் அவன், நாங்கள் பணத்தை நிலத்தில் புதைத்து வைத்திருக்கின்றோம் தோண்டியெடுத்தவுடன் திரும்பித் தருகின்றேன் என்று காரணம் சொன்னதை உண்மைதானென அந்தப்பொழுதில் நமபியதை நினைக்க இப்போது சிரிப்பாக இருக்கிறது. எனினும் அப்படியும் மனிதர்கள் யாழில் இருந்தார்கள் என்பதைப் பின்னாட்களில் அறிந்திருக்கின்றேன். யாழில் 95ல் நிகழ்ந்த இடப்பெயர்வின்போது தங்களில் பலர் நகை/பணம் என்பவற்றை தங்கள் வளவில் புதைத்துவிட்டு வந்திருந்தோம் என்று நண்பர்கள் இஙகத்தைய வளாக வாழ்வில் சொல்லியிருக்கின்றார்கள். நல்லவேளை நாங்கள் இடம்பெயர்ந்தபோது அதைச் செய்யவில்லை. எங்களிடம் பணமும் நகையும், எங்கள் வீட்டு வளவை விட அளவுக்கதிகமாய் இருந்ததால் புதைக்க இடங்காணாது என்றுதான் எங்களோடே எடுத்து வந்திருந்தோம்.
எமது நடமாடும் நூலகத்திற்கு நிதித்தேவையை நிவர்த்தி செய்வற்காய் இரண்டு விடயங்களைச் செய்திருந்தோம். ஒன்று மாதந்தோறும் பொது அறிவுப்போட்டி நடத்துவது. ஒவ்வொரு வினாக்கொத்துக்கும் (question paper) இரண்டு ரூபாய் அறவிடுவது. அதேபோன்று புத்தகங்கள் திருப்பித் தருவது தாமதமானால் தாமதக் கட்டணம் என்று ஒன்றை வசூலிப்பது. புத்தக வாடகைக்கு இரண்டு ரூபாய் என்றால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு ரூபாய் என்று கந்துவட்டிக்காரனே திகைக்கும்படி கட்டணம் அறவிட்டிருந்தோம். காலம் பிந்திய புத்தகங்களோடு எங்களுக்கு பிடித்த பெண்கள் சிரித்தபடி நின்றாற்கூட, கட்டணம் வசூலிப்பதில் ஒருபோதும் பின்னின்றதில்லை (பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற சொல்லாடலை நாங்கள் இந்த விடயத்தில் தவறென்றுதான் நிரூபித்திருக்கின்றோம் போலும்). நான் யாழில் இருந்தவரை இந்த நடமாடும் நூலகம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள இயங்கியிருந்தது. பிறகு மற்ற நண்பர்கள் அக்கறை காட்டவில்லை என்பதைவிட, பின்னாளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எதிர்ப்பாலினரை அறிந்துகொள்வதற்கு, அதிக நேரம் வேண்டியிருந்ததால் செயலிழந்துபோயிருக்கலாம் எனத்தான் தோன்றுகின்றது.
................
அண்மைய நளினி - பிரியங்கா சந்திப்புப் பற்றி பரபரப்புச் செய்திகளுக்குப் பஞ்சமேயில்லை. விகடன், குமுதம் போன்ற சனங்களுக்குத் தீனிபோட்டு தமது வணிகத்தைப் பெருக்கிக்கொள்ளும் சஞ்சிகைகள் பற்றிச் சொல்லத்தேவையேயில்லை. விகடனின் முகப்பில் வந்த தலைப்பே, இப்படித்தான் 'நளினி....துரோகி நீ : கனல் கக்கும் கணவர் முருகன்.' சரி தலைப்பு இப்படிப் போட்டிருக்கின்றார்களே, முருகனையோ நளினியையோ நேரடியாகச் சநதித்திருக்கின்றார்கள் போலும் என்று உள்ளே தேடினால் அப்படி எதுவுமேயில்லை. ஏதோ சிறைச்சாலைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டதை வைத்து, முருகன் நேரடியாகச் சொன்னதாய் எழுதுவதைப் பத்திரிகா தர்மம் என்று நியாயப்படுத்துபவர்களைக் கூப்பிட்டு -உங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களாயிருப்பின் இப்படி எழுதுவீர்களா- என்று கோபத்துடன் கேட்கத்தோன்றுகின்றது. கிட்டத்தட்ட 18 வருடங்களாக சிறைக்குள்ளிருப்பவர்களின் உளவியல் குறித்த எந்தக் கரிசனமுமில்லாது இவ்வாறு எழுதும் அரைகுறைகளை வேறு என்ன தான் செய்வது? இதில் நகைச்சுவை என்னவென்றால் அதே வாரம் வந்த குமுதத்தில் நளினியின் பேட்டி வருகின்றது. அதில் இது வடிகட்டின பொய் என்றும், முருகனோடு உறவு சுமுகமாய் இருப்பதாகவும். முருகன் இச்சந்திப்புக்காய் நன்றி சொல்லி பிரியங்காவுக்கு கடிதம் எழுதியதாகவும் நளினி சொல்கின்றார். ஆக, முன்னட்டையில் -சம்பந்தப்பட்ட முருகனோ நளினியோ நேரடியாகச் சொல்லாமல்- 'நளினி....துரோகி நீ' எனப் பிரசுரித்த விகடன் இப்போது என்ன செய்யப்போகிறது?
நளினி - பிரியங்கா சந்திப்புப் பற்றி சாரு நிவேதிதா நல்லதொரு கட்டுரை எழுதியுள்ளார். சாருவோடோ, இரவிக்குமாராடோ முரண்படுவதற்கு எத்தனையோ புள்ளிகள் இருந்தாலும், இவ்வாறான விடயங்களில் சாருவோ, இரவிக்குமாரோ வேறு சிலரை மாதிரி அபத்தமாய் உளறிக்கொண்டிருக்கமாட்டார்கள் என்பது அவர்களைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.
'பரிக்ஷா' ஞாநிதான் இன்னுந் திருந்துகின்றபாடில்லை. சுபவீக்கு எழுப்பிய கேள்விகளுக்கு அதி அசுரன் போன்றவர்கள் கொடுத்த பதிலடிக்கு மவுனம் சாதித்துக்கொண்டு அடுத்த வேலைக்கு/வேளைக்கு நகரும் ஞாநிகளுக்கு, இப்போது ஏன் ஜெயவர்த்தனாவைக் கொல்லாது ராஜீவ்வைக் கொன்றார்கள் என்று அதிபுத்திசாலித்தனத்தமான கேள்வி ஞானம் வருகின்றது ('ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு கொலை முயற்சி கூட புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாக நான் எங்கும் படித்ததில்லை (குமுதம்: ப 140)).
ஞாநி போன்றவர்களின் முக்கிய பிரச்சினையே ஒன்றைப் பேசும்போது மற்றதைப் முன்னிறுத்திப் பேசுவது என்பதே. சுபவீ பிறதோழர்களோடு சேர்ந்து சிங்கள இயக்குநனரைத் தாக்கியிருந்தால் அது குறித்துப் பேசவேண்டுமே தவிர, ஏன் நீ அதைத் செய்யவில்லை. அதைச் செய்தால்தான் இதைச் செய்யலாம் என்பது மாதிரியான 'அறிவுஜீவி'க்கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தால் நாம் சமூகத்தில் எந்த விடயத்துக்கும் எதிர்வினை செய்யமுடியாது (சிங்கள இயக்குநரைத் தாக்கியது எனக்கு உடன்பாடில்லை என்பதையும் குறிப்பிட்டுவிடுகின்றேன்). இப்படி கேட்டுக்கொண்டிருப்பதற்குத்தான் அதி அசுரன் பலமான அடிபோட்டிருந்தார்...
தீண்டாமை என்பது இரட்டை டம்ளரில் மட்டுமல்ல. கோவிலிலும் இருக்கிறதல்லவா? இந்து மதத்தில், சாஸ்திரங்களில், பார்ப்பனர்களிடத்தில் ஒட்டு மொத்தமாக இருக்கிறதல்லவா? இவற்றை எல்லாம் ஒழிக்கச் சொல்ல வேண்டியதுதானே?
ஞானி அவர்களே நீங்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டுமென்றால், துசாரா பெய்ரீசை தாக்கிய சுபவீ, சாதிவெறிக்கு அடையாளமான பார்ப்பனர்களின் பூணூலை அறுப்பாரா? சங்கர மடத்திற்கு வெடிகுண்டு வைப்பாரா? சங்கராச் சாரியை வெட்டிக் கூறுபோடுவாரா? மனு நீதி நூலை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பாரா? இராமயணத்தைச் வீட்டு வீட்டுக்குச் கொடுத்து செருப்பால் அடிக்கச் செய்வாரா?
இப்படி எல்லாம் ஒரு நாளும் ஞாநி யாரைப் பார்த்தும் கேட்டதில்லையே ஏன்? இரட்டைக்குவளை உடைப்பு என்ற தீண்டாமையோடு மட்டும் மோதச் சொல்கிறீர்களே, தீண்டாமைகளுக்கு அடிப்படையான சாதியோடும், மதத் தோடும், மதத் தலைர்களோடும், கடவுளோடும் போராடச் சொல்லாதது ஏன்?
இப்போது ஞாநி தினமும் பொழுதும் கருணாநிதியைச் சொறிந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது, நாங்களும், ஞாநி இந்தந்த விடயங்கள் இன்னும் தீவிரமாக இருக்கின்றன, எனவே அவற்றைப் பேசிவிட்டு வந்தால்தான் உங்களுக்கு கருணாநிதியை விமர்சிக்க உரிமை இருக்கின்றது என்று சொன்னால் பரிக்ஷா ஞாநி காது கொடுத்துக் கேட்பாரா? எங்கே இடங்கிடைக்கிறதோ அங்கே தான் சொன்ன/கடைப்பிடித்த கொள்கைகளை கைகழுவிவிட்டு, உள்நுழையும் நுட்பந்தெரிந்த ஞாநியிடம் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது கூட சற்று அதிகப்படியோ என்றுதான் தோன்றுகின்றது.
ஒரு கொலையை, பழிக்குப் பழி வாங்கலைக் கண்டிக்கலாமே தவிர, ஏன் ஜெயவர்த்தனாவைக் கொல்லவிலலை என்று கேட்பது, அவராலும் 'இந்தியத் தேசியப் பெருமிதங்களிலிருந்து' இன்னும் முழுமையாக வெளிவரமுடியவில்லையோ எனத்தான் யோசிக்கவேண்டியிருக்கிறது. இப்போது எனக்கிருக்கும் கேள்வி என்னவென்றால், ஜெயவர்த்தனா கொல்லப்பட்டிருந்தால், ஞாநி ராஜீவின் கொலையை - ராஜீவும் அவரது 'அமைதிப்படையும்' ஈழத்தில் செய்த எல்லா அட்டூழியங்களுக்காய்- அவசியமான ஒரு கொலைதான் என ஏற்றுக்கொண்டிருப்பாரா என்பது? ஆக இப்படித்தான் இவர்களின் நடுநிலைமை அவர்களுக்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருக்கிறது. ராஜீவின் கொலையை ஒரு துன்பியலாக மட்டும் எடுத்துக்கொண்டு மட்டும் கவலைப்படமுடியாது எனும் ஞாநிக்குச் ஒன்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. ஒரு படுகொலை என்றவளவில் ராஜீவின் கொலையை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதே தவிர, ராஜீவின் கொலையை இந்திய மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாதற்கு இருக்கும் காரணத்தை விட, அதை நியாயப்படுத்த -இந்திய இராணுவ காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த என்னைப்போன்றவர்களுக்கு - பத்து மடங்கான காரண்ங்கள் வலிகளுடனும் வாதைகளுடனும் உறைந்து இருக்கின்றன என இறுக்கமான குரலில் சொல்லவேண்டியிருக்கிறது. அதேவேளை முழுக்கட்டுரையை வாசிக்கும்போது இரு தரப்பினரும் பழையவற்றை மறந்து நேசக்கரம் நீட்டவேண்டும் என்ற ஞாநியின் அக்கறையை நான் மறுக்கப்போவதில்லை. ஆனால் அதை வெளிக்காட்ட இப்படி புத்திசாலித்தனமாய் சிந்திக்கின்றோம் என்று அபத்தமான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்காகவே மேலுள்ளவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
இந்த வெகுசன ஊடகங்களைப் பற்றிய இன்னொரு குறிப்பையும் சொல்லவேண்டும். அண்மையில் ஷோபாசக்தியிடம் நீங்கள் எப்படி இப்படியான சஞ்சிகைகளுக்கு எல்லாம் நேர்காணல் கொடுக்க்முடிகின்றது அறஞ்சாரந்த விடயமல்லவா என்றரீதியில் யாராலோ (யமுனா ராஜேந்திரனா?), கேள்வி எழுப்பப்பட்டபோது, ஷோபாசக்தி, என்ன செய்வது, என்னுடைய நண்பர்கள் அச் சஞ்சிகைகளில் இருக்கின்றார்கள் அதனாற்றான் அவற்றில் வெளிவந்திருக்கின்றன என்றொரு சப்பைக்காரணத்தைத் தந்திருந்தார். ஷோபாசக்தி எப்போது இந்தியா போகின்றார் வருகின்றார் என்ற விபரத்தை நாம் அறிந்துகொள்ள அவருக்குத் தொலைபேசி அழைத்து பணத்தை விரயமாக்க வேண்டியதில்லை; இந்தியா ரூடே, குமுதம், விகடன் என்பவற்றைப் புரட்டிக்கொண்டிருந்தாலே போதுமானது. இப்போது என்னிடமிருக்கும் கேள்வி என்னவென்றால் 'எதிரிகள்'/'துரோகிகள' எங்கேயும் இருப்பதுபோல, நண்பர்களும் கூட எங்கேயும் இருக்கக்கூடுமல்லவா? நாளை ஷோபாசக்தியின் நண்பர்களில் சிலர் தலித்துக்களை கேவலமாக எழுதுகின்ற சஞ்சிகையிலோ, ஆர்.எஸ்.எஸ் சார்புகள் உள்ள பத்திரிகைகளிலோ இருந்தாலும், ஷோபாசக்தி தனது நேர்காணல் வெளிவரும்போது இதே காரணத்தைத்த்தான் சொல்லித் திரிவாரா என்பது? தமது குருவென அ.மார்க்ஸைக் கைகாட்டுகின்ற (சுகனா ஷோபாசக்தியா அப்படிச் சொன்னது என்று மறந்துவிட்டது) ஷோபாசக்தி, இந்தியா ரூடேயிற்கு பேட்டியோ அல்லது கருத்தோ கூறும்போது, -வெங்கட்சாமிநாதன் விவகாரத்தில்- அ.மார்க்ஸ் மலந்துடைத்து இந்தியா ரூடேக்கு அனுப்பிய காகிதத்தைத் திருப்பவும் அ.மார்க்சின் முகத்திலேயே திருப்பி அடிப்பதற்கு நிகரானது என்றுதான் நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது. பெரியாரைத் தங்களின் வழிகாட்டிகளில் ஒருவராக வரித்துள்ள ஷோபாசக்தி பெரியார்- இராஜாஜி நட்பிலிருந்து, 'நண்பர்களோடு' எநதெந்தப் புள்ளிகளில் உடன்பட்டும் விலகியும் இருப்பது என்பதைக் கற்றுக்கொள்ள முயற்சித்தால் ஷோபாசக்திக்கு நலந்தரும்; மேலும் நல்லதொரு படைப்பாளி என்று ஷோபாசக்தியில் நம்பிக்கை கொள்கின்ற எங்களுக்கும் அது வழிகாட்டும்.
------------------------
பெரியார் பற்றி ஜெயமோகன் கொள்கின்ற காழ்ப்புணர்வும், தேவையில்லாத பயங்குறித்தும் அதிகம் இங்கே சிலாகித்து எழுதவேண்டியதில்லை. பெரியாரை முதன்மையான பாத்திரமாகக் கொண்டு ஜெயமோகன் இன்னும் ஒரு நாவல் எழுதாமல் இருக்கின்றாரே என்பதுதான் எனக்கு ஆச்சரியம் தரக்கூடிய ஒருவிடயம். ஜெயமோகன் ஒரு மலையாளி என்று இனத்துவேசத்தோடு எழுகின்ற குரல்களைக்கூட, அப்படி ஜெயமோகனை நிராகரித்தல் மிக அபத்தமானது என்ற புரிதலை என்னைப்போன்றவர்களுக்கு (திண்ணை விவாதக்களத்தில் நான் எழுதியதாய் நினைவு) ஏற்பட்டதே பெரியார் கற்பித்த மத, இன, மொழி, சாதி அபிமானங்களை விட்டுத்தள்ளுகின்ற தன்மையால் என்று சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது. இப்போது இந்தப்பதிவில் பெரியார் வன்முறையைத் தூண்டக்கூடியவர் என்ற அபத்தமான ஒரு புள்ளியை ஜெமோ வந்தடைக்கின்றார் (எனக்கு ஈ.வே.ரா அவர்கள் மீதுள்ள முக்கியமான மாற்றுக்கருத்து இரண்டுதான். அவரது எதிர்மறை நோக்கு அழிவுத்தன்மை கொண்டது. அடிப்படையில் தீங்கு விளைவிப்பது. இரண்டு அவர் ஒரு மக்கள்க்கூட்டம் மீது முன்வைத்த வெறுப்பு மிக மிக அபாயகரமானது. எந்நேரமும் வன்முறையாக மாறக்கூடியது. வரலாற்றின் தவறுகளை ஒருபோதும் ஒருவகை வரலாற்றுச் சதிகளாகக் காணலாகாது. அவை வரலாற்றின் போக்கில் பலவேறு காரணிகளால் உருவாகி வருபவை. உலகின் மாபெரும் வன்முறைகள் அனைத்துமே வரலாற்றுச் சதி என்ற பிரச்சாரத்தில் இருந்து தொடங்குபவையே...) பெரியார் பற்றி இங்கே வலைப்பதிவுகளில் நண்பர்கள் எழுதிய எத்தனையோ பதிவுகளில் கூட பெரியார் வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொண்டவரில்லை என்பது பற்றி விரிவாகவே எழுதப்பட்டிருக்கின்றன. பார்ப்பனியம் மீது க்றாரான விமர்சனங்களை பெரியார் முன்வைத்தபோதும், எங்கேயும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று துவேசக்கருத்துக்களைக் கூறியதாய் நான் வாசித்ததில்லை. ஏன் பெரியாரின் பின் திரண்ட இளைஞர் கூட்டத்தை, பெரியார் விரும்பியிருந்தால் பிராமணர்கள் மீது வன்முறையை பிரயோகிக்க கூடிய கூட்டமாய் மாற்றியிருக்க முடியுந்தானே? உணர்ச்சியும் கோபமும் கொப்பளிக்க பேசிய பெரியார் தன்னை நம்பி வந்தவர்களிடம், அது வன்முறையாக மாற்றக்கூடிய ஆபத்தைத்தரும் என்கின்றபோதும் அவ்வாறு நிகழாது மிகுந்த கவனத்துடன் இருந்திருக்கின்றார் என்றால் பெரியாரின் ஆளுமையைப் பாராட்டவேண்டுமே தவிர ஜெமோ மாதிரி அபத்தமான கணிப்புக்களை/கருதுகோளைக் கூறிக் கொண்டிருக்கத் தேவையில்லை. இன்று பிற மதத்தினர் மீது வன்மத்துடன், கொலைகளையும், பாலிய்ல் வன்புணர்வுகளையும் செய்துகொண்டிருப்பது பெரியாரிய நண்பர்களல்ல, மாட்டை அடித்துச் சாப்பிடுவதே பாவம் என்று சொல்லிக்கொண்டே மனிதர்களைக் கொன்று குவிக்கின்ற, வன்முறையைப் பயில்விக்கின்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீதும், அதன் தலைவர்கள் மீதுந்தான் ஜெமோ இந்தக் குற்றச்சாட்டுக்களை வீசியிருக்கவேண்டும். ஆனால் ஜெமோ அப்படிச் செய்யமாட்டார்; பெரியார் தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கவந்த கடப்பாரை என்ற வகையில்தான் எழுதி இன்புற்றுக்கொண்டிருப்பார். ஆக, இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்று பெரியார் விடயத்திலிருக்கும் ஜெமோவை, நாகர்கோயிலுக்கு அருகில் கன்னியாகுமரியில் உயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவன் தன் ஞான ஒளியைப் பாய்ச்சி உய்விக்கவேண்டுமென நாமும் இறைஞ்சுவோமாக.

Subscribe to:
Posts (Atom)