
ஊரிலென்றால்
மல்லிகைப்பூ வாசம்
கமிழ்ந்தபடி இருந்திருக்கும்
இந்தமாதத்தில்.
இரவைப் பனிமூடிக்கிடக்க
விரல்களிலும் படிகிறது
குளிர்
நிழல்களைப்போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்
நினைவுகள் கொடூரமாய் தோற்கடிக்கும்போது
அவசரம் அவசரமாக
போர்வைக்குள் நுழைந்து
MP3 Playerல் இசையைப் பரப்பி
புத்தகங்களில் அமிழ்ந்துபோகலாம்
அப்போது
விரியத்தொடங்கும்
இதுவரை அறியா உலகில்
நடமாடுகின்றார்கள்
மனிதர்கள் மனிதர்களாகவே
தேவதைகளைக் கொன்ற
சாத்தான்கள்
நுழைந்த திசை
வெளுக்கத்தொடங்கையில் மட்டும்
மறக்கமுடிவதில்லை
இது
தற்கொலை செய்வதற்குரிய
தருணம் என்பதை.
Oct 09/05
6 comments:
டிஜே இக்கவிதையை நீங்கள் இன்னும் சிறப்பாகத் தந்திருக்கலாமோவெனத் தோன்றுகிறது.
10/09/2005 10:43:00 PM-/இரமணி.
டீசே ,
10/09/2005 10:50:00 PM/நிழல்களைப்போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்/
இது பிடித்துள்ளது. இப்படி வார்த்தையில் அடைப்பது எந்த அளவுக்கு பொருந்துகிறதோ இல்லையோ என்றாலும் :-)
ப்ரோ, அடிக்கடி உம்ம புளாக்கு பொளந்து கிடக்குது கவனிக்கவும்..கிளிக்கினால் கிழிக்குது மண்டையை.
MP3 ப்ளேயர் Sandisk-a?
10/10/2005 04:20:00 AMபின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!
10/10/2005 09:20:00 AM.....
இரமணி, எனக்கு ஒரு எருமை கிடைத்துவிட்டது. யமனும் எருமையில்தானே ஏறி வரவேண்டும் :-).
......
//ப்ரோ, அடிக்கடி உம்ம புளாக்கு பொளந்து கிடக்குது கவனிக்கவும்..கிளிக்கினால் கிழிக்குது மண்டையை. //
கார்த்திக், அரைவாசி ப்ளோக்கர் பொளந்தால், மிச்சத்தை நானும் பொளந்து பார்க்கின்றவன் என்பதால் அரைவாசித் தண்டனை என்க்கும் தரவேண்டும் :-).
.......
//MP3 ப்ளேயர் Sandisk-a? //
சுதர்சன்,அதேதான்.
பதிந்தது:Garunyan
10/18/2005 07:40:00 AMஉங்க கவிதைகளை எங்கூட சேர்ந்து படிக்கும் என் காமுகி செப்பினது:
நீங்க கவிதையின் கடைசிப்பகுதியை வேணுமின்னே அல்லது எங்களுக்கு மண்டைக்
கொடையட்டுமின்னே சித்தே திருகி வைச்சுடுறீங்களாம். இதில தற்கொலை, மின்னமொரு கவிதையில
புத்தன் கொழந்தைய அமுக்கிண்டுமாறுறது இப்பிடி..... இன்னும் என்னவென்ன வருமோ ஈச்வரா!!!!!!!!!!
Garunyan
18.10.2005
நேர்கோட்டு வாசிப்பில்லாமல், நானிருக்கும் அந்தக் கணத்துக்கேற்ப வாசிப்பவரையும் கொஞ்சம் குழப்பிப்பார்ப்பதில்தானே அதிக சந்தோசமிருக்கும் :-).
10/19/2005 02:51:00 PMPost a Comment