1.
நம்மைப் போல சக மனிதரையும் நேசித்தல் என்பது அற்புதமான ஒரு விடயம். நமக்குள்ள எல்லாச் சுதந்திரங்களும் பிறருக்கும் வேண்டும் என்று அவாவி நிற்பது போல்,. மற்றவர்களின் தனிமனித உரிமைகள் பாதிக்கப்படும்போது நமதான உரிமைகள் பாதிக்கப்படுகின்ற என்றரீதியில் குரல்கொடுக்கின்றவர்கள்தான் உண்மையான மனிதாபிமானிகள். ஆனால் உலகம் இவ்வாறு அழகாய், எல்லோரும் சம உரிமைகளுடன் வாழ்கின்ற ஒரு நிலப்பரப்பாய் விரிந்திருக்கவில்லை என்பதுதான் நம் காலத்தைய சோகம். மையவோட்டத்திலிருந்து விலக்கி விளிம்புகளாக்கப்பட்டு, பல்வேறுபட்ட மக்கள் திரள் இருப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் 'இவ்வுலகம் மிக அழகானது' என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றுவதுதான்.
புலம்பெயர் தேசங்களில் நமது நிறம்/நாம் பின்பற்றும் மதம்/நம் கலாசாரப் பின்புலங்கள் என்ற பல்வேறு வகைகளை முன்வைத்து ஒடுக்கப்படுகின்றோம் என்று உணர்கின்ற நாமே எம் சமூகத்திலேயே சாதி, பாலினம், பிரதேசங்கள் போன்றவற்றை முன்வைத்து பலரை விளிம்புநிலை மனிதர்களாக்கி வைத்திருக்கின்றோம். இது குறித்து சிறிதும் அவமானப்படாது பிறரை குற்றஞ்சாட்டுவதில் மட்டும் காலங்காலமாக நமது தமிழர் 'பெருமை'களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
'ஒடுக்கப்படுகின்றவர்களின் போராட்டங்கள் ஒருபோதும் முடிவதில்லை'என்றரீதியில் பன்முகவெளியில் ட்ன்ஸ்ரனின் உரை தொடங்கியது. டன்ஸ்ரன் தன்னை வெளிப்படையாக ஓரினப்பாலினராக(gay) அறிவித்த ஒருவர். 'சிநேகிதன்' என்ற ஓரினப்பாலினருக்க்கான ஓர் அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருபவர். (எளிய புரிதலிற்காய் நான் இங்கே ஓரினப்பாலினர் அமைப்பு என்று குறிப்பிட்டாலும் அவர்கள் LGTTIQQ2S என்ற வகைக்குள் வரும் அனைவரையும் உள்ளடக்குகின்றனர் என்பதைத் தயவுசெய்து கவனத்திற் கொள்ளவும்).
நாம் விளிம்பு நிலையாக்கப்பட்ட மனிதர்களாய் இருந்தாலன்றி, அவர்களின் ஒடுக்கப்படும் வலிகளைப் பற்றியோ அதற்கெதிரான போராட்டங்கள் பற்றியோ முழுதாய் விளங்கிக்கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் பேசுவதற்கு வேண்டிய வெளிகளைத் திறந்துவிடுவதில்.., அவர்களை வெளிப்படையாக பேசவிடுவதென.., ஆரோக்கியமான உரையாடல்களைத் தொடர்வதில் அக்கறையாக நாம் பங்குபெறமுடியும். சாதி நிலையில் தான் ஒடுக்கப்படுவதை, ஒருவர் ஒரு பொதுவெளியில், மட்டுப்படுத்தப்பட்ட மணித்தியாலங்களில் தனது முழுக்கதையையோ வலியையோ/ தத்தளிப்புக்களையோ கூறிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கமுடியாது. முதலில் தான் அவ்வாறு உரையாடுவதை -தானாய் அல்லாத பிறர்- எவ்வாறு எடுத்துக்கொள்வார் என்ற பயங்கள் விளிம்புநிலையினருக்கு ஏற்படுவதும், தாம் சொல்லும் நிகழ்வுகளைக் கொண்டு பிறகு தன்னை அடையாளப்படுத்தி, தம்மை மேலும் ஒடுக்குவதற்கு காரணிகளாக இவைகள் அமையக்கூடும் என்ற நினைப்பும் ஒருவருக்கு ஏற்படுதல் இயல்பானது. நியாயமானதும் கூட.
ஆகவே இவ்வாறு விளிம்புநிலையில் உள்ளவர்களின் வாழ்வை அறிந்துகொள்ள அக்கறைகாட்டாத சமூகத்தில், தனது அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்து ஒருவர் பொதுவெளியில் உரையாடத் தயாராகுகின்றார் என்றால் அது கூட மிகப்பெரும் போராட்டத்தின்பின் வந்திருக்கக்கூடியது என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கின்றது. மேலும் ஒடுக்கப்பட்டு சமூகத்திலிருந்து விலத்தி வைக்கப்படும் ஒருவர் தான் கடந்துவந்த பாதை முழுதையும் பொதுவெளியில் வைக்கும் சாத்தியங்களும் மிகக்குறைந்ததாக இருக்கின்றது என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். இவ்வாறான புரிதல்களுடனேயே நாம் விளிம்புநிலையிலிருப்பவர்களுடனான எமது உரையாடல்களைத் தொடங்கவேண்டும். அவ்வாறில்லாது நமக்கு இருக்கும் 'வெளி' அனைத்தும் அவர்களுக்கும் இருக்கிறது என்று சிறுபிள்ளைத்தனங்களுடன் உரையாடல்களை ஆரம்பித்தால் நாம் இன்னும் அவர்களை ஒடுக்குபவராய் ஆகிவிடும் ஆபத்துக்களுண்டு.
2.
பிற அமர்வுகளைப் போலன்றி -தாம் பேச சபையிலிருப்பவர்களைச் செவிமடுக்கச் செய்யாது- சபையிலிருப்பவர்களையும் பங்குபெறச் செய்யும் நோக்குடன் டன்ஸரன் அமர்வை மாற்றியமைத்து வித்தியாசமாக இருந்தது. மூன்று கேள்விகள் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு குழுவினரினதும் பதில்களை அறிந்து, அதன் மூலம் ஒரு கலந்துரையாடல் உற்சாகமாய்த் தொடங்கப்பட்டது. இதுவே பொதுவெளியில்(தமிழர் மத்தியில்) செய்யும் முதல் அமர்வு என்பதால் எளிதான கேள்விகளை முன் வைத்திருக்கின்றோம் என்றனர் டன்ஸ்ரனும் அவருடன் வந்திருந்த பிற நண்பர்களும்..
முதற்கேள்வியாக Gay, Lesbian என்பவற்றிற்கு தமிழில் எவ்வாறான சொற்கள பயனபடுத்தப்படுகின்றன என்று கேட்கப்பட்டது. சிலர் ஓரினப்பாலினர்/ தற்பால் சேர்க்கையாளர் என்றும் வேறு சிலர் ஆண் ஓரினப்பாலார், பெண் ஓரினபாலார் என்றும் கூறினர். இன்னொரு குழு ஓரினப்பாலினருக்கு எவ்வாறான வசைச்சொற்கள் நம் சமூகத்தில் பயன்படுத்தப்படுகின்றன என்று அச்சொற்களையும் குறிப்பிட்டார்கள். எங்கள் குழுவில் இருந்த நண்பரொருவர் தமிழர் பண்பாட்டில் ஆதிகாலத்திலிருந்தே ஓரினப்பால் இருந்து வந்ததெனவும், ஆனால் சங்கம் மருவிய காலங்களில் மதங்களின் ஆதிக்கத்தால் அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள் எனவும், ஆகவே ஓரினப்பாலினருக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய சொற்களை நாம் மீட்டெடுப்பதன் மூலம் வரலாற்றை மீளக் கண்டுபிடிப்பதாய் இருக்குமென்ற கருத்தை முன்வைத்தார். மேலும் இன்றும் தமிழகத்திலிருக்கும் (இந்தியா) பல சிற்பவேலைப்பாடுகளில் தற்பால்சேர்க்கை சித்தரிக்கப்பட்டிருப்பது முக்கிய சாட்சியம் எனவும் சொன்னோம். அத்துடன் வரலாற்றிலிருந்து புழங்கிய ஒரு சொல்லை எடுத்தாளும்போது 'இப்போதுதான் இந்த மாதிரியான உறவு/சேர்க்கை' என்று பாசாங்குகாட்டும் மனிதர்களிற்கு உறுதியான எதிர்வினை கொடுக்க உகந்தமாதிரியாகவும் இருக்கும் என்றும் கூறினோம்.
எல்லாக் குழுக்களின் கருத்துக்களை தொகுத்து டன்ஸ்ரன் தனது சில கருத்துக்களையும் சேர்த்து LGTTIQQ2Sக்கு விரிவான விளக்கம் கூறியிருந்தார். தான் 90களில் அமைப்பாயிருக்கையில் LGBT மட்டுமே இருந்ததாகவும் இப்போது இன்னும் பல விளிம்புநிலையினரை உள்ளடக்கி தாமொரு உறுதியான அமைப்பாக மாறிவருகின்றோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதேவேளை எல்லாப் பிற அமைப்புக்களிற்கும் இருப்பதைப் போல தாங்களிற்கும் பல பிளவுகள் இருக்கின்றன எனவும் அவற்றோடும் போராடவேண்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். முக்கியமாய் தங்கள் 'சிநேகிதன்' அமைப்பில் அதிக இலங்கையர்கள் இருப்பதால் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் தாங்கள் அதிகம் கவனிக்கப்படாது இருக்கின்றோம் எனறு நினைக்கும் நிலை இருக்கிறது என்றார்.
இரண்டாவது கேள்வியாக என்ற எப்படி தமிழ்ப்படங்களில் Gay, Lesbians சித்தரிக்கப்படுகின்றார்கள் கேள்வி கேட்கப்பட்டது. தமிழ்ப்படங்களே எங்கள சமூகத்தின் முகங்களாக (அதாவது அதிகமானோர் பார்ப்பவர்கள் என்றவகையில்) இருப்பதனால் இந்தக்கேள்வி கேட்கப்பட்டதாய்க் கூறப்பட்டது. அரவாணிகள்/திருநங்களைகள் போல எவ்வித மாற்றமுமின்றி மிகக்கேவலமான முறையிலேயே அனைத்து விளிம்புநிலையினரும் சித்தரிக்கப்படுகின்றார்கள் என்பதே பலரின் பொதுக்கருத்தாய் இருந்தது 'வேட்டையாடு விளையாடு'வில் வரும் வில்லன்களை ஓரினப்பாலாக்கி நகைச்சுவை என்ற பெயரில் அது வன்மமாய் வெளிப்பட்டது பலரால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோன்று இவ்வாறான விளிம்புநிலையினரை இயல்பாய்காட்டும் எந்த சாதகமான முயற்சியும் தமிழ்ச்சூழலில் காட்டப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
மூன்றாவது கேள்வியாக, கனடாவில் ஓரினப்பாலினர் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் சட்டம் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? எனக் கேட்கப்பட்டது. அனைவரும் இச்சட்டம் ஏற்றுக்கொள்ளக்க்கூடியது; வரவேற்கத்தக்கது என்று கூறினோம். அதேசமயம் இந்தச் சட்டம் இவ்வாறானவர்களை சமூகத்தில் இயல்பானவர்களாய் ஏற்றுக்கொள்ளாது அடையாளப்படுத்தி வேறுபடுத்தி வைத்திருக்கும் அபாயமுண்டு . எனவே இவ்வாறானவர்களை இயல்பாய் பொதுச்சமூகம் ஏற்றுக்கொள்ளும்வரை தொடர்ச்சியான போராட்டங்கள் நிகழ்த்தப்படுதல் அவசியமானது என்றும் கவனப்படுத்தினோம். எனெனில் இனி ஓரினப்பாலினருக்கான உரிமைகளையோ அல்லது அவர்கள் ஒடுக்கப்படுவதையோ குறிப்பிட்டால் 'அதுதானே ஏற்கனவே சட்டமிருக்கிறது;அது பார்த்துக்கொள்ளும் ' என்று -தொடர்ச்சியாய் செய்யவேண்டிய போராட்டத்தை- அடக்கிவிடும் வாய்ப்பு அதிகாரவர்க்கங்களிற்கும், மதம்சார்ந்த அமைப்புக்களிற்கும் பொதுப்புத்தியிற்கும் ஏற்பட்டுவிடும் என்ற அபாயத்தைச் சுட்டிக்காட்டினோம்.
3.
இக்கேள்விகளுக்குப் அப்பால் பிறகு இன்னொரு கேள்வி டன்ஸ்ரனின் நண்பர்களால் முன்வைக்கப்பட்டது. அதாவது பெற்றோராக இருக்கும்/இருக்கப்போகும் நீங்கள் உங்கள் மகனோ/மகளோ தான் தற்பாலினத்தவர் என்று கூறினால் உங்களது எதிர்வினை எப்படியிருக்கும் ?. பல்வேறு கருத்துக்கள் இக்கேள்வியை முன்வைத்துச் சொல்லப்பட்டன. சிலது மிகுந்த அபத்தமாகவும் இருந்தன. அதைத் தனிமனிதர்களின் கருத்து என்றில்லாது பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்கள் என்றவகையிலும் தமது மனதில் உள்ளத்தை வெளிப்படையாகச் சொல்கின்றார்கள் என்றவகையிலும் அவற்றை டன்ஸ்ரனும் அவரின் நண்பர்களும் எடுத்துக்கொண்டாலும் எனக்கு -தனிப்பட்டவளவில்- எரிச்சலாகவே இருந்தது. முக்கியமாய் ஒருவர், சிறார்களாய்/பதினமங்களில் இருக்கும்போது தற்பால் சேர்க்கையில் கட்டாயமாய் ஈடுபடுத்தப்படுவதால் அவர்கள் பிற்காலத்தில் அப்படியாகிவிடும் அபாயம் இருக்கிறது என்றார். இதை மறுத்து சுமதி அதை பாலியல் துஷ்பிரயோகமாகவே (sexual abuse) எடுக்கவேண்டுமே தவிர ஒரு உறவாய் எடுக்கவேண்டியதில்லை எனக்குறிப்பிட்டார். நானும் அதேயே ஆண்கள்/பெண்கள் தனியே விடுதிகள்/சிறைகள் போன்றவற்றில் இருக்கும்போது தற்பால் உறவில் ஈடுபடுகின்றார்கள். அது நிச்சயம் பாலியல் வறட்சியால் (sexual starvation) ஏற்படுவதே தவிர,இயல்பான ஓரினபாற் சேர்க்கையாய் இருப்பதில்லை. எனெனில் பிறகு பொதுவெளிக்குள் அவர்கள் வரும்போது தமது பாலியல் உறவை இயல்பாய்த் தேர்ந்தேடுக்கின்றார்கள். ஆகவே பாலியல் வறட்சியால் வரும் தற்பால் உறவுகளையும், இயல்பாய் வரும் தற்பால் உறவுகளையும் ஒன்றாய்ச் சேர்த்துக் குழப்பக்கூடாது என்றும் குறிப்பிட்டேன். அவ்வாறு பார்த்தால் ஆண்கள்/ பெண்கள் எனத் தனித்தனியே ஹொஸ்டல்களில் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானோர் பிற்காலத்தில் தற்பால் சேர்க்கையாளராக இருக்கவெண்டும். ஆனால் அவ்வாறான விகிதம் அதிகம் இருப்பதற்காய் எந்தத் தரவையும் நான் அறிந்ததில்லை எனவும் குறிப்பிட்டேன் (நிகழ்வில் நான் சொல்லவந்ததைச் சரியாகக் குறிப்பிட்டேனோ தெரியவில்லை)
உரையாடலின் முடிவில், டன்ஸ்ரன் தமிழ்ச்சமூகத்தில் ஓரினப்பாலினராய் இருப்பதன் அவதிகளையும் பதற்றங்களையும் முன்வைத்து சில விடயங்களையும் கூறினார். உதாரணமாய் நான்கு சகோதரகளுடன் பிறந்த தனக்கு தன்னை தற்பால் சேர்க்கையாளர் என பொதுவெளியில் அடையாளப்படுத்தல் (ஒரளவு) எளிதாய் இருப்பதைப் போன்று, சகோதரிகளுடன் பிறந்த ஒரு தற்பால் சேர்க்கையாளருக்கு எளிதாக இருப்பதில்லையென்றார். எனெனில் 'உனது சகோதரர் தற்பால்சேர்க்கையாளர்' என்று அச்சகோதரிகளின் திருமணவாழ்வு நம் சமூகத்தில் குழப்படும் சாத்தியங்கள் நிறைய உள்ளதெனக் குறிப்பிட்டார். மேலும் தமிழில் பயன்படுத்தப்படும் உறவு முறை அழைப்புக்களிலும் சிக்கல்கள் தங்க்ளைப் பொறுத்தவரை உள்ளதென்று குறிப்பிட்டார். உதாரணமாய் தனது சகோதரரின் மகன் தன்னைச் சித்தப்பா என்று அழைக்கின்றவர். ஆனால் தனது துணையை சகோதரரின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகும்போது எவ்வாறு அவரை அழைப்பது போன்ற சிக்கல்கள் இருக்கின்றதென்றார். சிறிய விடயங்களாய் நாம் கவனிக்காத இம்மாதிரியானவை பெரும் 'அரசியலாய்' இருப்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம். இவற்றுக்கு எல்லாம் தீர்வுகளை அடைவதற்கு ஓரினபாலாருக்கு மட்டுமில்லை அவர்களைப் புரிந்துகொள்ள அக்கறைப்படும் நமக்கும் இருக்கின்றது என்பதை ஒருபோதும் மறந்துவிடமுடியாது.
புகைப்படங்கள்: சென்றவருடம் (2009) றொறொண்டோவில் நடந்த Pride Week ன்போது எடுக்கப்பட்டவை
*டன்ஸ்ரனும், அவரின் நண்பர்களும் இத் தலைப்பிலேயே தமது அமர்வைச் செய்திருந்தனர்
(நம் சூழலில் இவ்வாறான விடயங்கள் விரிவாக உரையாடப்படுவதில்லை என்ற எண்ணத்தாலேயே நிகழ்வில் நிகழ்ந்த அனைத்தையும் இயன்றவரை தொகுத்திருக்கின்றேன்)