-6th Annual May Day of Action for Status for All-
தமிழில்: டிசே தமிழன்
அவர்களுக்குத் தேவை 'மிக இனத்துவ வாக்கு', ஆனால் அவர்களுக்கு குடியேறிகள் தேவையில்லை.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், இனவெறி பிரச்சார நிகழ்ச்சி நிரலை எதிர்த்து நில்லுங்கள்: தெருக்களில் 'வாக்கு'.
மே முதலாந்திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தில், வட அமெரிக்காவிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களோடும், உலகின் மில்லியன்கணக்கான மக்களோடும் இணைந்து நிற்போம். தொழிலாளர் சம்பளம் மற்றும் சம்பளமின்மை, குடியேறிகளுக்கான அந்தஸ்து (status) மற்றும் அந்தஸ்தின்மை: இவற்றை மேலும் ஆழமாய் இறுக்குதல், வேலை இழத்தல்கள், சூழலியல் அழிவுகள், ஏகாதிபத்திய போர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பேராசைகள் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டு மவுனமாக இருப்பதை நாம் மறுக்கின்றோம்.
நீதிக்கும், கவுரவத்திற்குமான தம் கனவுகளையும், பார்வைகளையும், நம்பிக்கைகளையும் மக்கள் இப்பேரணியில் பதாதைகள், ஆடைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களினூடாக எடுத்துவருவதை நாங்கள் உற்சாகப்படுத்துகின்றோம். எங்களுடன் பேரணியில் துணையாக வாத்தியங்கள் இசைக்கும் குழுக்கள், பொம்மலாட்டக்காரர்கள் மற்றும் பலர் வருவார்கள்.
எனெனில், இனி குடும்ப ஸ்பொன்சர்ஷிப் செய்வதற்கு பதினான்கு வருடங்கள் வரை எடுக்கலாம் மற்றும் அகதிகளை ஏற்றுக்கொள்வது 56%த்தால் குறைக்கப்படுகின்றது
எனெனில், எல்லைக் காவலர்களுக்கு பெண்களின் வதிவிடங்களை ஆக்கிரமிப்பதற்கான அதிகாரம் இப்போது இருக்கிறது
எனெனில், தற்காலிக குடியேற்றத் தொழிலாளர்கள் 'திறன் குறைந்தவர்கள்' எனக் கருத்தப்பட்டு, நான்கு வருடங்களுக்குப் பிறகு கனடாவிலிருந்து துரத்தப்படலாம்.
எனெனில், ரொரண்டோவில் ஒவ்வொருநாளும், 70 சமூக உறுப்பினர்கள் சுற்றிவளைக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றார்கள்
எனெனில், ஹார்ப்பருக்குத் தேவை 'மிகவும் இனத்துவமான' வாக்கு, ஆனால் குடியேறிகள் தேவையில்லை.
எனெனில், (ரொரண்டோ மேயர்) போர்ட் (அரசுக்குச் சொந்தமான) பொது வீடுகளை விற்கவும்,ரிரிசி பஸ்களை குறைக்கவும், பொதுச்சேவைகளுக்கு பணம் அறவிடவும் விரும்புகின்றார். இந்த நடவடிக்கைகள் பெண்கள், குடியேறிகள் மற்றும் வறிய சமூகங்களை இன்னும் மோசமாகப் பாதிக்கும்.
எனெனில்,குடியேறிகளின் நீதிக்கான ஒழுங்கமைப்பாளர்கள் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக பொலிசால் தொந்தரவுக்குள்ளாக்கப்படுகின்றார்கள்.
எனெனில், கனேடிய அரசு தொடர்ச்சியாக பூர்வீக மக்களின் இறையாண்மையையும் விடுதலையையும் எதிர்த்துக்கொண்டே இருக்கிறது.
எனெனில், எங்களின் கனவுகள் வாக்களிப்புப் பெட்டிகளில் முடியக்கூடியது அல்ல,
.....ஆகிய இக்காரணங்களையும் இன்னும் இருக்கும் காரணங்களையும், நாங்கள் தெருக்களுக்கு எடுத்து வருகின்றோம். சனநாயகம், வாக்களிப்புப் பெட்டிகளுடன் தொடங்குவதோ முடிவதோ அல்ல. மாற்றம் வருவதைப் பார்க்க காத்திருக்க விரும்பாமல் நாங்கள் (அந்த) மாற்றதை உருவாக்குகின்றோம். அடிநிலையிலிருந்து மேலாக... மக்களின் சக்தியைக் கொண்டு.
ஏன் No One Is Illegal மேதின நடவடிக்கை?
ஏப்ரல் 2006ல், ஹார்ப்பர் அதிகாரத்திற்கு வந்த சில நாட்களில், அவர் டப்ரின் அங்காடிப் பகுதியில் பலவேறு சுற்றிவளைப்புக்களைச் செய்யத் தொடங்கினார். இனப்பாகுபாட்டு விவரங்களுடன் பல நூற்றுக்கணக்கான முழு அந்தஸ்து (full status) இல்லாதவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள். இதற்கு எதிர்வினையாக, ஆயிரக்கணக்கான மக்கள் 'எல்லோருக்குமான அந்தஸ்து' (status for all) என்ற கோரிக்கையுடன் முதலாவது வருட மேதினத்தில் ரொரண்டோத் தெருக்களில் இறங்கினார்கள். இதை நாங்கள் ஜக்கிய அமெரிக்காவில் குடியேறிகளின் உரிமைகளுக்காய் நடந்த மாபெரும் பேரணிகளோடு இணைத்தும், அதிகம் விளிம்புநிலைக்குள்ளாக்கப்பட்ட வேலைசெய்யும் வர்க்கத்தை முன்னிறுத்தியும் சர்வதேச தொழிலாளர்கள் தினத்தில் செய்தோம். கடந்த ஆறு வருடங்களில், மத்தியிலுள்ள வலதுசாரிகளின் நாடுகடத்தும் செயலை நிறுத்துவதற்காய், குடியேறிகளின் உரிமைகளை அவர்கள் மேலும் ஒடுக்குவதற்கு எதிராக... மற்றும் எங்கள் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காய்... என ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கும் நாங்கள் போராடினோம்...
நாங்கள் பாடசாலைகளுக்கு, உணவுக்கு.., மருத்துவ வசதிக்கு.., பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான சேவைகள்... போன்ற சில அணுகுமுறைகளில் வென்றிருக்கின்றோம், அதே சமயம், நாங்கள் தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தல்களுக்கு எதிராக மிக வலுவாக குரலெழுப்பியபோதும் தோற்றிருக்கின்றோம், மிக அண்மையாக டானியல் கார்சியா பார்க்டேலில் இருந்து ஜனவரி முதலாந்திகதி நாடு கடத்தப்பட்டிருக்கின்றார். இந்த மே தினத்தில், நாங்கள் பார்க்டேலிருந்து -இங்கேதான் டானியல் கார்சியா கைதுசெய்யப்பட்டார் என்பதும் அமெரிக்கப்பாணி குடியேறிகள் சுற்றிவளைக்கப்படும் முறை அமுலாக்கப்பட்டு ஐந்து வருடங்களும் ஆகின்றன- என்பதையும் நினைவுகூர்ந்து பேரணியைத் தொடங்குகின்றோம்.
.
எல்லோருக்குமான அந்தஸ்து என்பது என்ன?
மத்திய, மாகாண மற்றும் உள்ளூராட்சி அரசுக்கள், குடிவரவாளர் அந்தஸ்து இல்லாதவர்களுக்கு, நல்ல உணவு, மருத்துவ வசதி, வாழ்க்கை, குழந்தைப் பராமரிப்பு, கல்வி, வதிவிடம், நீதி மற்றும் கவுரமான வாழ்க்கை என்பவை கிடைப்பதைத் தடுக்கின்றன. எல்லா மக்களும் (அவர்களுக்கு அந்தஸ்து இருக்கிறதோ இல்லையோ) சுதந்திரமாகவும், மதிப்புடனும், பயமற்றும் வாழத்தான் வேண்டும். பூர்வீகக் குடிகள்,வறிய மக்கள், நிறமுள்ள குடியேறிகள், பல பெண்கள், Queer மக்கள் மற்றும் மாற்றுத்திறன் உள்ளோருக்கு இந்த (கனேடிய) பிரஜா உரிமையானது அவர்களுக்கான சுதந்திரத்தை பூர்த்தி செய்யவில்லை என்பது எங்களுக்கு மேலும் தெரியும். அந்தஸ்துக்கான போராட்டம் என்பது அனைத்து மக்களுக்குமான ஒரு போராட்டமாகும்; குடியுரிமை, பால், பாலினம், மாற்றுத்திறன் அல்லது இனப்பாகு போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் எல்லாவற்றையும் -எப்படி ஒரு குடியேறி அந்தஸ்து உள்ளவர் பெறவேண்டுமோ- அவ்வாறு அவற்றைச் சுதந்திரமாகப் பெறவேண்டும்.
இத்தகைய ஒருமைப்பாட்டின் எழுச்சியில், ஒரு அசைவியக்கத்தை இந்நகரில் பார்ப்பதற்காய், 'எவருமே சட்டவிரோதமானவர்கள் அல்ல' அமைப்பைத் சேர்ந்தவர்களாகிய நாம் 'எல்லோருக்குமான அந்தஸ்து' என்ற கோசத்தின் அடிப்படையில் டப்றின் குரூவ் பூங்காவிலிருந்து அணிவகுக்க உள்ளோம்.
மே தின நாளில் இவற்றை கேட்க, உறுதிப்படுத்த, செயலாக்க நாங்கள் தெருக்களுக்கு எடுத்து வருகின்றோம்:
ஆவணமில்லாத மற்றும் குடியேறி தொழிலாளர்களுக்கான நீதி: எல்லோருக்குமான அந்தஸ்து! பயமில்லாது (எல்லாவற்றையும்) அணுகிப் பெறுதல்!
எங்கள் சமூகங்களுக்கான நீதி: சம்பளத்தை, வாழும் காசை, தொழிற்சங்கங்களை, இலவசமானதும் எளிதில் பெறக்கூடியதுமான பொதுச் சேவைகளை அனைவருக்கமாய் அதிகரித்தல், வன்முறையான பொலிசை அயலிடங்களிலிருந்து அகற்றுதல்
சுதந்திரமான நடமாட்டம், சுதந்திரமான திரும்பல் மற்றும் சுதந்திரமான தங்கல்
காலனித்துவம், இராணுவ மற்றும் பொருளாதார போர்கள் மற்றும் சூழலியல் தரங்குறைதல் என்பவற்றிலிருந்து விடுதலை
(நன்றி: http://toronto.nooneisillegal.org)