கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மன்னிக்க வேண்டுகின்றேன்!

Sunday, January 23, 2005

பொடிச்சி மற்றும் நண்பர்களுக்கு,
நான் தவறு செய்து விட்டேன் என்று நினைக்கின்றேன். எழுதிய நண்பர் தனிப்பட்டமுறையில் மிகநெருக்கம் என்பதாலும், இதைப் பிரசுரிப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று தெரிந்தாலும், அது அறம் சேர்ந்த விடயம் என்பதால் தவறிழைத்திருப்பதாய்தான் தெரிகிறது. எனெனில் அவரோடு இப்போது சிறிதுகாலமாக தொடர்பில்லாததால் அவரின் அனுமதியைப் பெறமுடியவில்லை. இந்தக்கடிதத்தில் அவரது சில தனிப்பட்ட விபரங்களைத் தவிர்த்தே பிரசுரித்துள்ளேன். எனினும் அவரால் விவாதத்தில் பங்குபெற முடியாதிருப்பதால் இதைப் பிரசுரித்தது பிழைதான். அந்த நண்பரிடம் இனி நேரில் காணும்போது மன்னிப்பையும் இந்தப்பதிவை அவரின் அனுமதி பெறும்வரை இங்கிருந்து அகற்றியும் விடுகின்றேன். மனதிற்கு மிகச் சங்கடகமாயிருக்கிறது.எல்லாம் சொதப்பி விட்டேன். மிகவும் மன்னிக்கவும்.

11 comments:

ROSAVASANTH said...

//ஜெயமோகன் இங்கு வந்திருந்தபோது பரஸ்பரம் நடந்த உரையாடலில்- கேரள, கன்னட தாழ்த்தப்பட்ட மக்களிடம் இன்று ஏற்பட்டிருக்கும் மலர்ச்சிக்கு, நாராயணகுரு வழிவந்த தாழ்த்தப்பட்ட ஈழவர் எழுச்சியையும், கன்னட லிங்காயத்துக்கள், வீரசைவர்களின் எழுச்சியையும், தமிழக தலித் மக்களது தாழ்ச்சியையும் ஒப்பிட்டு இவற்றிற்கு திராவிடத்தலைகளின் செட்டியார், நாயக்கர், வேளாளர், மறவர் போன்ற உயர்சாதியப் பின்புலமும், ஆளாண்மையும்தான் காரணம் என்பதை விலாவாரியாக விளக்கினார். பெரியார் காலத்திலும், பின்பும் ஆளுமைகொண்டு வெளித்தெரிய வந்த ஒரு தாழ்த்தப்பட்ட தலைவரை உங்களால் எனக்குக் குறிப்பிடமுடியுமா?//

எனக்கு அதிகம் பேச தேவையில்லை. கிட்டதட்ட இதன் பாதிப்பைத்தான் இந்த கடிதம் முழுக்க பார்க்க முடிகிறது. ஜெயமோகந்ததன் சொன்னார், கேட்ட அவருக்கு கேரளாவில் இன்னும் (நாராயணகுருதான் முதல் கம்யூனிஸ்ட் என்று சொல்லும்) தலைமைத்தளத்தில் வரவில்லை என்ற கேள்விக்குள் போக தோன்றவில்லை. அடுத்து

ஜெயமோகன் 'விளக்கியவுடன்' அவர் பேச்சு மூச்சற்று ஆனதாகத்தான் தெரிகிறது.

//கன்னட லிங்காயத்துக்கள், வீரசைவர்களின் எழுச்சியையும், தமிழக தலித் மக்களது தாழ்ச்சியையும் ஒப்பிட்டு ..//

என்ன கொடுமையடா இது! வீரசைவ இயக்கம் திராவிட இயக்கத்தைவிட பச்சையான *ஆதிக்க ஜாதி* பார்பன எதிர்ப்பு இயக்கம். அது எப்போது தலித் இயக்கமானது? வீரசைவர்களின் எழுச்சியை காட்டி தமிழக தலித் மக்களது தாழ்ச்சியை விளக்கினாராம். இந்த பலி ஆடும் தலையாட்டி கொண்டிருந்து விட்டு டீஜேக்கி பதில் எழுதியதா?

இன்றய யதார்த்தத்தில் கர்நாடகாவில் லிங்காயத்துகளிடமிருந்தே தலித்கள் மீதான் பெரும் வன்மூறை வெடிக்கிறது. ஒரு தனிப்பட்ட (ஆதிக்க)ஜாதி நலனுக்கான, (மற்றபடி ஜாதி ஒழிப்பு குறித்து எந்த தெளிவும் இல்லாத) வெறும் பார்பன எதிர்ப்பு இயக்கம் இங்கே தலித் இயக்கமாக திரிக்க படுகிறது. பெருமளவு பிற்படுத்தப்ட்ட ஜாதிகளை உள்ளடக்கி, தலிதகளை நோக்கியும் ஒரு விளிப்பை கொண்டிருந்த, இன்றய திருமாவளவன், கிருஷ்ணசாமிக்கான அரசியல் வெளியை அளிக்கும் திரவிட இயக்கம் தலித் எதிரி இயக்கமா? எங்கே போய் முட்டிகொள்ள?

சரி, என் கருத்துக்கு வருகிறேன். திராவிட இயக்கம் மேல் நிச்சயமாய் விமர்சனம் வேண்டும். ஆனால் தி.இ. மற்றும் பெரியார் மேல் ரவிகுமார் தனது முதல் சில கட்டுரைகளில் முன்வைத்தது தவிர்த்து, வரும் அத்தனையும் வெறும் அவதூறாகவும், திரித்தல்களாகவுமே என்னால் பார்க்கமுடிகிறது. இதில் ஜெயமோகனை குறித்து சொல்லவே வேண்டாம். மனிதர் கயிறை திரித்து பூணுலாக்குவார். ரவிக்குமார் எங்கே ஜெயமோகனுடன் இணைகிறார் என்பது மிகவும் உற்று கவனிக்கபடவேண்டிய விஷயம். தனது கடைசி பெரியார்/பெண்ணிய கட்டுரையில் மனிதர் தானே தன்னை கட்டவிழ்த்து வெளிகாட்டிவிட்டார். இது குறித்து விரிவாய் அணுக நிச்சயம் உத்தேசம் உண்டு.மற்றபடி ஜெயமோகன் பாதிப்பு, கொஞ்சம் ரவிக்குமார் ம்ற்றும் சொந்த சிந்தனைகள் கலந்து உங்கள் நண்பர் எழுதியிருக்கும் கடிதம் இங்கே யாருக்கு பயன்படும் என்று தெரியாததல்ல.

1/23/2005 03:36:00 AM
ROSAVASANTH said...

//நான் மேலுள்ள பெரிய கடிதத்தை எழுதினாலும், மனப்பூர்வமாக ஒன்றைக் கூறுகிறேன். பெரியார் என்ற மகா செயல்வீரன் பிறந்திருக்காவிட்டால், தமிழகம் இன்று மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கியே நின்றிருக்கும்.//

இதற்கு ரொம்ப பெரிய மனசு பண்ணி பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதிதான் என்று சொல்லும் ஜெயமோகனே பரவாயில்லை.

1/23/2005 03:39:00 AM
அனாதை ஆனந்தன் said...

அன்பின் டிசே,

இந்த பதில்களுக்கான தங்கள் கேள்விகளை கொஞ்சம் இங்கே
தரமுடியுமா?

நன்றி
அனாதை

1/23/2005 08:47:00 AM
ROSAVASANTH said...

வாங்க அனாதை!

ஆமாம் டீஜே, நானும் கேட்க நினைத்து மறந்து போய்விட்டேன்.

1/23/2005 09:45:00 AM
இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த், ஆனந்தன் மற்றும் ஆர்வமுள்ளவர்க்காய்....

1. திராவிட எழுச்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் இன்றைய நிலையென்ன?
2. சாதீய ஒதுக்கீட்டில் கல்வி, வேலை போன்றவை யாரால் கிடைத்தது? அல்லது பத்துவீத பிராமணருக்கே அதை முழுதும் தாரை வார்த்துக்கொடுப்பதா உங்களது நிலைப்பாடு?
3. அரசியலில் யாரும் பங்குபெறலாம் என்ற ஓர் நிலைப்பாடு எங்கிருந்து முளைத்தது?
4. சா¢. சினிமாவில் சீரழிவை விடுவோம்,, அங்கும் திராவிட பாதிப்பு இல்லாவிட்டால் யாருடைய கைஓங்கியிருக்கும்? (இப்போதும் பிராமணர்,செட்டியார்கள்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என்பது வேறுகதை. பார்க்க, ரஜனி, எம்.ஜி.ஆர் படங்கள், எம்.ஜீஆர் ஒருபோதும் கடவுளையோ, கடவுள் சம்பந்தவிடயங்களை படங்களிலோ பாடல்களிலோ நுழைத்ததில்லை (பிரச்சாரம் என்று உங்களைப்போன்றவர்கள் சாயம்பூசலாம்) இந்துத்துவா முகமணிந்த ரஜனியின் படங்களில் அள்ளஅள்ளக்குறையாத முடநம்பிக்கைகள்? இப்போது இந்துத்துவா உள்ளே நுழைய திராவிடக்கட்சிகள் காரணமெனினும், இதுவரை காலமும் அதை உள்ளே நுழையவிடாது தடுத்தது எது? (குறிப்பு: நான் குறிப்பிடும் அனைத்தும் பொ¢யாரை மட்டுமே உள்ளடக்கியதும் அதன் சில நீட்சியும்)
5. திராவிடக்கட்சிகளின் போதாமையால்தான் தலித் அரசியல் தோன்றியது எனலாம். திராவிட எழுச்சி என்ற ஒரு சின்ன ஏணியில்லாமல் எவ்வாறு அடித்தளமக்கள் இந்தளவு (மிகச்சிறிதளவெனினும்) எழுச்சியுறமுடிந்திருக்கும்?
6. திராவிட இலக்கியங்கள் குறித்து எனக்கும் கிட்டத்தட்ட உங்களின் பார்வையே. அவர்களின் பலரே சொல்லியிருக்கிறார்கள். தங்களுக்கு எழுத்து பிரச்சாரமாக§வு இருந்ததென்று பாரதிதாசன்கூட கம்பராமாயணத்தை நிராகா¢க்கவில்லையென எங்கையோ கேள்விப்பட்டதாய் நினைவு. பாரதியின் சுதந்திரக்கவிதைகள் உங்களால் விரும்பப்படுமெனின் பாரதிதாசனின் தமிழ்த்தேசிய எழுச்சி குறித்த கவிதைகள் எவ்வாறு நிராகா¢ப்படுமென்பதை சற்று தெளிவுபடுத்தினால் நல்லது.. சுதந்திரம் கிடைத்திருக்கிறது. எனவே பாரதிக்கு வெற்றி, தனித்தமிழகம் கைவிடப்பட்டது எனவே பாரதிதாசனிற்கு தோல்வி. (பாரதிதாசன் குறித்து அதிகம்பேச எனக்கு கூச்சமாகவிருக்கிறது. ஏனெனில் அவரது கவிதைகள் அதிகம் நான் வாசித்தில்லை.)
7. பொ¢யார் கட்டமைத்த பெண்ணியக்கருத்துக்கள் என்னவாவது?
8. இன்னமும் இப்போது ஞாபகத்து வராத பல குறிப்புக்கள் உண்டு.

இவைதான் என் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள். இது பெரியார் பற்றிய ஒரு விவாதத்தில்தான் எழுதப்பட்டது. இதன்பிறகுதான் அந்த நண்பர் தந்த எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் தொகுத்த, பெரியார்: சுயமரியாதை சுயதர்மம் வாசித்தேன்.

1/23/2005 05:48:00 PM
ROSAVASANTH said...

உங்கள் நண்பர எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் தொகுத்த, பெரியார்: சுயமரியாதை சுயதர்மம் வாசித்து விட்டுத்தான் உங்களுக்கு கொடுத்தாரா?

1/23/2005 09:08:00 PM
ஒரு பொடிச்சி said...

"ஆனால் தி.இ. மற்றும் பெரியார் மேல் ரவிகுமார் தனது முதல் சில கட்டுரைகளில் முன்வைத்தது தவிர்த்து, வரும் அத்தனையும் வெறும் அவதூறாகவும், திரித்தல்களாகவுமே என்னால் பார்க்கமுடிகிறது. இதில் ஜெயமோகனை குறித்து சொல்லவே வேண்டாம். மனிதர் கயிறை திரித்து பூணுலாக்குவார். ரவிக்குமார் எங்கே ஜெயமோகனுடன் இணைகிறார் என்பது மிகவும் உற்று கவனிக்கபடவேண்டிய விஷயம். தனது கடைசி பெரியார்/பெண்ணிய கட்டுரையில் மனிதர் தானே தன்னை கட்டவிழ்த்து வெளிகாட்டிவிட்டார்"
-Rosa vasanth

இதைப்பற்றி எழுதுங்கள் ரோசாவசந்த். ரவிக்குமாரின் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை உட்பட (நிறப்பிரிகைகாலத்தைய தவிர்ந்த) படித்திருக்கிறேன். அவருடைய பெண்ணிய வாசிப்புகள் பல எனக்கு ஏற்புடையதே. சொல்லப்போனால் ஒரு ஆணிடமிருந்து வருகிற பெண்ணிய வாசிப்பு, இயல்பாக உண்மையான அக்கறையுடன் வருவதை அவரிடத்தில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு தலித் என்கிற வகையில் அவரால் பெண்ணின் பிரச்சினையையும் மனதார உணர முடிகிறது என்றே நினைக்கிறேன் (எல்லாரும் அப்படியென்றல்ல)
எனக்குப் பெரிய ஆச்சரியம் ரவிக்குமார் 'காலச்சுவடு' இல் இருப்பது. பாவலாவான ஒரு கூட்டத்தில் நடுவே fit பண்ணாமல் நின்றுகொண்டிருப்பதுபோல. காலச்சுவடில் ஒரு வாசகர் ஒருமுறை எழுதினார், காலச்சுவடை ரவிக்கமார் பயன்படுத்துகிறார் என, பார்க்கின்ற முறையில்தானே எல்லாம்? காலச்சுவடு அவரை பயன்படுத்துகிறது என்பதே உண்மை.
இது குறித்து என்ன நடக்கிறது என அறிய மிகவும் ஆவல். ரவிக்குமார் ஜெயமோகனோடுஇணைகிற புள்ளி இருக்காமல்போனால் நல்லது. உங்களுக்க நேரங்கிடைக்கும்போது, ரவிக்குமாரின் அவதூறுகளும் திரித்தல்களும், பெரியார் கட்டுரையில் எப்படித் தன்னை கட்டவிழ்த்துக்கொணடார் என்று அறியத்தாருங்கள்.
மற்றும்படி,பாப்லோ நெருடா பற்றிய அவரது வாசிப்பிற்கெல்லாம் நிறைய (வெறும் உணர்ச்சி சார்ந்த)
எதிர்ப்பு வந்தது. எந்த பிம்பத்தையும் 'கொண்டாடிக்கொண்டிருக்க' பிரியப்படுகிற மனங்களது எதிர்ப்பு அது. பெரியார் குறீத்த விமர்சனத்திலும் அத்தகைய எதிர்ப்பு உங்களிடத்தில் இராது என நம்புகிறேன்.
காலச்சவடிற்கு அதில் நலன் இருக்கிறது என்கிறரீதியின் என்றால்
எழுதுங்கள்.

1/23/2005 10:22:00 PM
ஒரு பொடிச்சி said...

டிஜே!
உங்கள் நண்பரிடம் அனுமதி கேட்டு இதைப் பிரசுரித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அது அறம் சார்ந்த விசயம், அவரால் -அவரிற்காக வந்து விவாதிகக்க முடியாதில்லியா?

1/23/2005 10:35:00 PM
ROSAVASANTH said...

பொடிச்சி அவர்களுக்கு,

நான் இது குறித்து மெல்லியதாய் எனது பதிவில் எழுதி நீக்கிவிட்டேன். நிச்சயம் இது குறித்து எழுதவேண்டும். ஆனால் அது மிக பெரிதாய் (அதுவும் எதிர்வினைகள் வந்தால்) போக கூடிய வாய்ப்பு உள்ளது. இப்போது அதற்கு தயராய் இல்லை. பெரியார் மீதான விமர்சனங்கள் மட்டுமின்றி அயோத்திதாசரை பற்றி எழுப்பப்படும் பிம்பங்கள் குறித்தும் பேச வேண்டும், என்பதால் இது மிக பெரிதாய் போக வாய்புள்ளது.

ஆனால் இங்கே பல விஷயங்கள் மிக அற்பமான புள்ளியிலேயெ துவங்குகிறது. அ,மார்க்ஸும், ரவிகுமாரும் அடித்து கொள்ளும் ஒரு ஈகோ சண்டையே, மற்றவையாய் பரிணமிக்கும்போது ஏற்படும் பிரச்சனை இது. என் புரிதலின் படி ரவிகுமாருக்கு அமார்க்ஸ் மற்றும் அவரை சேர்ந்தவர்க்ளை தாக்குவதாக பெரியாரை தாக்குகிறார். இது இன்னும் பாதிப்பை தரும் என்று அவருக்கு தெரியும். அ.மார்க்ஸுக்கு பெரியாரை தாக்குவதை, தன்னை தாக்குவதாய் நினைத்து பதிலடி கொடுத்து வருகிறார். இந்த ஈகோ சண்டையில் பெரியார், அயோத்திதாசர் எல்லாம் வந்து போக, சம்பந்தமில்லாமல் இன்னொரு பக்கம் இதை பயன் படுத்தி ஜெயமோகனும் நாராயணகுருவும் வந்து இணைகிறார்கள்.

கொஞ்சம் கவனித்தால் ஒரு விஷயம் எளிதில் தட்டுப்படும். இன்று 'தலித் பார்வை' என்று சொல்லிகொண்டு பெரிய கூட்டம் பெரியாரை திட்ட தயாராய் இருக்கிறது. இவர்கள் அத்தனை பெரும் ஒரு கட்டத்தில் பெரியாரை வானளாவ புகழ்ந்தவர்கள். கரெக்டாய் அ.மார்க்ஸுடன் சண்டை வந்த மறுநாள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிகொண்டு பெரியாரை திட்ட துவங்கியிருப்பதை காணலாம்.இதெல்லாம் சிரிப்பாக இல்லை. இதில் எங்கே அறிவு பூர்வமாய் விவாதிப்பது?

1/24/2005 01:42:00 AM
Anonymous said...

அரசியல் தளத்தில் எல்லோரும் பங்கு பெரும் சூழ்நிலை பெரியாரால்
உருவாகி இருந்தாலும் , இன்றைய நிலையில் சாதீய கட்டுகள் இறுகும் வண்ணம் தலித் ,வன்னியர், நாடார்,தேவர்,யாதவர்,முக்குலத்தோர் என சாதீயரீதியில் பலம் பெறுவது எதை காட்டுகிறது, கலப்பு திருமணங்கள் வரவேற்ப்பில்லாமல் போனது, அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல போகிறோம்? இதை எப்படி எடை போடுவது.

சமூக தளத்திலும் போலி ஆன்மிகவாதிகளும்,போலி சாமியார்களும் , ஜோசியம் ,ராசி பலன்கள் , மூடநம்பிக்கைகளும், புற்றீசல் போல
செம்படை(மேல்மருவத்தூர்),கரும்படை(அய்யப்பன்),காவிப்படை(பழனி)
என தங்களது தெய்வப்பக்தியை பறைச்சாற்றும் கூட்டமும் ,இதில் பெரியாரின்
பாதிப்பு இல்லாமல் போனது எதனால்?

பெண்கள் படித்து வருவது அதிகரித்தாலும்(அவர் மட்டுமே காரணம் அல்ல),இன்றைய சமுதாயத்தில் அவர்கள் நிலையில் மாற்றம் இல்லையே?,திரைப்படங்களில்
Sex Symbol ஆக சித்தரிக்கப்படுவது மாறவில்லையே?

தெளிவு பெறவே கேட்கிறேன்


ஜபருல்லா

1/25/2005 12:54:00 AM
இளங்கோ-டிசே said...

pasuG has left a new comment on your post "மன்னிக்க வேண்டுகின்றேன்!":

தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு தாழ்த்தப்பட்டவர். பாமக தலைவர், விடுதலைச் சிறுத்தை எல்லோருமே தாழ்த்தப்பட்டவர்தாம். தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு அதிகமே தவிர, பார்ப்பனர் அல்லாத மேற்குடி மக்கள் எதிர்ப்பு அவ்வளவு இல்லை. ஏன் என்றால், தி.க, தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளை வளர்த்தும், திராவிடம் பேசி, தமிழ் பேசி மக்களை ஆரிய மாயையில் இருந்து விடுவிக்க முயன்றதும் தமிழகத்து மேற்சாதியினரின் சாதியற்ற பரந்த மனப்பான்மையினால் தான். (எ.கா): பெரியார், வ.உ.சி, பாரதியார், ஜீவா...
திராவிடர் கழகம் பற்றி, பெரியார் பற்றி எனது விமர்சனத்தை www.periyar.blogspot.com படிக்கலாம்

(someone left this comment to this posting...Couldn't publish it directly from my blog. DJ)

2/05/2006 10:01:00 AM