நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

வறுமைக்கு எதிராய்...

Sunday, July 03, 2005

"These concerts are the start point for The Long Walk To Justice, the one way we can all make our voices heard in unison. "
-Bob Geldof


இன்று வரலாற்றில் ஒரு முக்கிய காலடியை எடுத்து வைத்துள்ளோம். இந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மாற்றத்தைக் கொண்டுவருமோ தெரியாது. ஆனால் நாம் வாழும் காலத்தில் ஒரு மாற்றம் வேண்டி அனைவரும் எங்களால் இயன்ற எதையோ செய்ய முயன்றிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சிக்குரியது என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் Live8 நிகழ்வுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தேறியுள்ளன. ஒரு இசைக்கலைஞன் கூறியதுமாதிரி, எனது காலத்தில் இல்லாவிட்டாலும் எனது குழந்தைகளின் குழந்தைகள் 'What is poverty?' என்று கேட்கும்போதாவது நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.

உலகமயமாதல்; மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சனநாயக நாடுகளின் 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக போராடுவது என்பது அவ்வளவு கடினமில்லை. இன்றைய காலகட்டத்தில் அதிகாரங்களுக்கெதிரான போராட்ட வடிவம் எது என்பதை அடையாளங்கொள்வதுகூட சரியான கடினம் போலத்தான் தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையீனங்களிடையே தம்மாலும் எதையாவது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் Live8 அமைப்பினர் முன்வந்துள்ளனர். வறிய நாடுகளின், முக்கியமாய் ஆபிரிக்காக் கண்டத்திலுள்ள நாடுகளின் வறுமையை உலகின் செல்வந்த நாடுகளின் மேலும் சுரண்டாமல் இருக்க, மிகப்பிரமாண்டமான இசைநிகழ்வுகள் மூலம் மக்களை ஒன்றுசேர்க்கின்றனர். அதிகார அரசாங்களுக்கெதிராய் நேரடியாக விமர்சனம் செய்து போராடவிட்டாலும், நியாயமான முறையில் வறுமையான நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவேண்டுமென இவர்கள் உலகின் செல்வந்த நாடுகளிடம் கோரிநிற்கின்றனர்.


வறுமையின் காரணமாக தினமும் 30, 000 குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்றனர். வருகின்ற ஜூலை மாதம் ஆறாந்திகதி, இறுதிச் சந்தர்ப்பமாக இந்த அவலநிலையை நிறுத்துவதற்காக ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. உலகின் எட்டு (G8 countries) செல்வந்த நாடுகள் ஸ்கொட்லாண்டில் G8 மாநாட்டுக்காய் கூடவுள்ளனர். அவர்களிடம் வறுமையுள்ள நாடுகளுக்கு வழங்கும் உதவியை இரட்டிப்பாகச் செய்யவும், ஏற்கனவே அந்த நாடுகளுக்குள்ள கடன்களை முற்றுமுழுதாக இல்லாமற்செய்யவும், வறிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளில் நேர்த்தியாக இருக்கவும் Live8 என்ற அமைப்பு உலக மக்களின் குரல்களினூடாக இந்தக்கோரிக்கைகளை முன்வைக்கின்றது.. இதன் நோக்கம், வறிய நாடுகளின் மக்களின் ஏழ்மையை இல்லாமற்செய்ய உதவும்படி செல்வந்த நாடுகளுக்கு அதிக அழுத்தத்தை பிரயோகிப்பதாகும். அதற்காக உலகின் வெவ்வேறு பகுதியுள்ள நாடுகளில் ஒரே சமயத்தில் பல இசைநிகழ்ச்சிகளை ந்டத்தி, இந்த ஒரேயோரு செய்தியை இந்தச் செல்வந்த நாடுகளின் அரச பீடத்தில் அமர்ந்துள்ள கனவான்களுக்கு மில்லியன்கணக்கான மக்களின் குரல்களில் உரத்துக்கூறுவது!

Madonna
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் (அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, தென்னாபிரிகா, ஜப்பான், கிரீஸ்), இக்கோரிக்கைகளுக்காய் உலகமக்களின் ஆதரவு வேண்டி மிகப்பெரும் இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எங்களுக்கு பணம் தேவையில்லை. நீங்கள் தான் வேண்டும் என்ற வாசகத்துடன் தான் இந்த நண்பர்கள் நம்மிடம் உதவிக்கு வருகின்றனர். கனடாவில், ஒன்ராறியோ மாநிலத்தில், பெரியில்(Barrie) 35,000 மக்கள் பங்குபற்றி தமது ஆதரவை அளித்துள்ளனர். அந்த நிகழ்வில் கூறியதுமாதிரி, இங்கே வந்து இசைநிகழ்ச்சியை காசு கொடுத்து போவதால் உங்கள் குரல் கேட்கப்போவதில்லை. நீங்கள் உங்கள் ஆதரவை இணையத்தளத்திலோ அல்லது text message யிலோ கொடுப்பதுதான் முக்கியமானது. ஆகவே வீடு சென்றபின் அதைச் செய்ய மறந்துவிடாதீர்கள் என்று அடிக்கடி நினைவுபடுத்தினார்கள். நிகழ்ச்சியின் இடைநடுவில் 16 மில்லியன் குரல்கள் பதிவுசெய்யப்பட்டதாக கூறியதாய் நினைவு. ஒவ்வொரு மணித்தியாலத்திலும் அவை மில்லியன்களாய் அதிகரித்துக்கொண்டிருந்தது, இந்த நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்குபெற்றாவிட்டாலும் பலர் தமது ஆதரவை வெளியில் இருந்தும் அளித்துக்கொண்டிருந்தது நம்பிக்கை தருவதாக இருந்தது. இதை எழுதுகின்ற இந் நேரம் அது இரட்டிப்பாக மூன்று மடங்காக உயர்ந்திருக்கவேண்டும்; உயர்ந்திருக்கும்.
Will Smith
பல்வேறு நாடுகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, அனைத்து முக்கிய இசைக்கலைஞர்ளும் பங்குபெற்றியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. முக்கியமாய், பாடுவதை நிறுத்தி பொதுவாழ்வை விட்டு விலகிச்சென்றவர்கள் எல்லாம் இந்நிகழ்வுகளில் பங்குபெற்றி தமது குரலை வறுமைக்கெதிராய் பதிவுசெய்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, Popல் Madonna, Mariah Carey போன்றவர்களும், Rapல் Kanye West, Jay-z போன்றவர்களும், Rock n Rollல் Robbie Williams, Cold Play போன்றவர்களும் உருக்கமான பாடல்களை பாடி பலரது கவனத்தைக் கவர்ந்திருந்தனர். முக்கியமாய் மடோனாவின் Just a prayer பார்த்துக்கொண்டிருந்தபோது என்னை மிகவும் பாதித்தது.

இந்த இசைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்னாபிரிக்கா ஜோகன்ஸ்பேர்க்கில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை முக்கியமானது. முதுமையின் காரணமாய் சரியாக நடக்கக்கூட முடியாதுவிட்டாலும், பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்று இருந்தாலும், இந்த நிகழ்வில் தானும் பங்குபெறுவது தனக்கு பெருமிதம் தருவதாகக் கூறியுள்ளார். ஆயுதங்களுக்கும், போரிற்கும் செலவிடும் பணத்தை வறுமைக்கும், HIV போன்ற நோய்களுக்கும் உதவிசெய்ய செல்வந்த நாடுகள் முன்வரவேண்டும் என்று கூறினார்.. இன்றைய நிகழ்ச்சி வருகின்ற ஜுலை மாதம் ஆறாந்திகதி கூடுகின்ற G8 நாடுகளின் தலைவர்களின் முன் தவிர்க்கமுடியாத ஒரு கேள்வியாக போய்ச்சேரப்போகின்றது என்றார். அதேவேளை இந்த நிகழ்வுடன் மட்டும் நிற்காமல் தொடர்ச்சியான நிகழ்வுகளாய் பல்வேறு தளங்களினூடாக இது எடுத்துச்செல்லப்படவேண்டும் என்று தனது ஆசையையும் பதிவுசெய்தார்.. நெல்சன் மண்டேலா ஒரு மிகப்பெரும் ஆளுமை என்பதற்கு சந்தேகமே இல்லை. நடமாடக் கடினப்பட்டு மேடையை வந்துவிட்டாலும், பேசத்தொடங்குகின்றபோது உறுதி தெறிக்கின்றது. Dear Comrades என்று ஆரம்பித்த உரையில், கைதட்டப்பட்ட ஒவ்வொரு பொழுதிலும், விழிகளை உயர்த்தி, புருவங்களால் அந்த ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஒரு குழந்தைமாதிரி எனக்குத் தோன்றினார்.
Mariah Careyஏற்கனவே இந்த G8 ற்கெதிராய் பல்வேறு அரச நிறுவனமற்ற அமைப்புக்கள், மாணவர்கள் என்று பலர், இந்த நாடுகளின் தலைவர்கள் கூடுமிடங்களில் எல்லாம் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர். அந்த எதிர்ப்பையும் மீறி, அந்தந்த நாடுகளின் பொலிஸ், இராணுவம் போன்றவை கடுமையாய் இவர்களை தண்டித்துமிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒட்டாவாவில் கூடிய G8 பிரதிநிதிகளுக்கெதிராய் எதிர்ப்புத் தெரிவித்த எங்கள் வளாக மாணவ தலைவன் மீது பொலிஸ் தங்கள் நாய்களை ஏவி தமது சட்டம் ஒழுங்கை சீராகக் கவனித்ததை அறிந்திருக்கின்றேன். இந்த இசை நிகழ்ச்சியினிடையே ஒரு விளம்பரம் செய்திருந்தனர். இந்த G8 நாடுகளின், எந்த நாட்டிலும் ஒரு நாள் 50,000 மக்கள் இறந்துபோகின்றார்கள் இந்த நாட்டு அரசாங்கங்கள் வாளாவிருக்கப்போவதில்லை. அப்படியெனில் அவர்களால் தினமும் மற்ற நாடுகளில் வறுமையால் இறந்துபோகின்ற 50,000 மக்களுக்காய் உருப்படியான விடயங்களை ஏன் செய்யமுடியவில்லை? என்றொரு கேள்வியை பார்ப்பவரிடையே எழுப்புவதாய் அது அமைந்திருந்தது. அதையேதான் உங்களிடமும் நானும் விட்டுச்செல்கின்றேன்.

நண்பர்களே, நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் பெயரையும் இணைத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது. நானும் எனது ஆதரவைத் தெரிவித்து அதனூடாக எனது தொகுதி எம்பிக்கும், கனடா பிரதம மந்திரிக்கும் ஒரு விண்ணப்பம் அவர்களின் தளத்தினூடாக அனுப்பியுள்ளேன். நீங்களும் உங்கள் குரலைப் பதிவுசெய்யலாமே!

பி.கு: இந்த விடயத்தை உடனடியாகக் கவனத்தில் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. தவறுகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கின்றேன். படங்கள் இந்தத் தளத்திலிருந்து

10 comments:

Anonymous said...

பதிந்தது:-/,

undefined

3.7.2005

7/03/2005 02:36:00 AM
பத்மா அர்விந்த் said...

நானும் இதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். கோடிக்கணக்கான மக்கள் உணவுக்கே கஷ்டபடும்போது நாம் தேவையில்லாத செய்திகளில் நேரத்தை விரயம் செய்கிறோம். Dominican republic நேரில் சென்று பார்த்தால் ப்சியின் கொடுமை புரியும்.பதிவுக்கு மிக்க நன்றி

7/03/2005 08:18:00 AM
Anonymous said...

பதிந்தது:karthikramas

டீ ஜே உபயோகமான பதிவு. இதைப்பற்றியும் எழுதலாம்.
http://www.hbo.com/events/girlinthecafe/index.html
http://news.yahoo.com/news?tmpl=story&u=/ap/20050621/ap_en_tv/ap_on_tv_girl_in_cafe

2.7.2005

7/03/2005 11:43:00 AM
SnackDragon said...

http://news.yahoo.com/news?tmpl=story&u=/ap/20050621/ap_en_tv/ap_on_tv_girl_in_cafe

7/03/2005 11:45:00 AM
Anonymous said...

பதிந்தது:தமிழ்

வறுமை ஒழிய வேண்டுமென்று சர்வதேச இசைக்குழு. போர்வெறியில் தமிழீழ இசை நிகழ்ச்சிகள்


உலக வறுமை ஒழியவேண்டுமென்று உலகக் கலைஞர்கள் பிலடெல்பியாவிலிருந்து யோகனஸ்பேர்க்வரை இன்று 02.06. 2005 இசைவிழாக்களை நடாத்தினார்கள். புலிகளோ யுத்தத்திற்கு நிதி சேகரிப்பதற்காகக் கலைவிழாக்களை நடாத்துகிறார்கள். சின்னப் பிள்ளைகளின் பரதநாட்டியத்தில் யுத்தம் அழகு, போர் அழகு என்று இசைத்துப்பாடுகிறார்கள்.
இது ஒன்றே நாம் உலகத்தில் எத்தகைய பிற்போக்கான சிந்தனைகளில் வாழ்கிறோம் என்பதை உரித்துக் காட்டுகிறது. நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பல நூறு கலைஞர்கள் சர்வதேசக் கலைகளைக் கலந்து குழம்பாக்கி ரசமாக்கி கலைஅமுதங்களை மடைதிறந்து பருகவிட்டார்கள். 200 மில்லியனுக்கு மேலான ரசிகர்களும் சர்வதேச சகோதரத்துவத்தின் மேன்மையை விளங்கியவர்களும் இதிலே உற்சாகத்தோடும் பெருமையோடும் கலந்து கொண்டார்கள். ஆபிரிக்காவின் வறுமையை ஒழிப்பதற்கென்று இன்று 3 பில்லியன் அமெரிக்கடாலர்கள் நிதியாகச் சேர்ந்துள்ளன. ஆனால் எமது நாட்டிலோ ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருக்கிறார்கள்.
இன்i;றய இந்த உலகளாவிய நிகழ்வுப்போக்கானது சர்வதேசிய வாதமும் சர்வதேசிய சகோதரத்துவமும் வெறும் அருவமானதோ, பிரமையானதோ, மர்மமானதோ அல்ல என்பதை மேலும் நிறுவிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் பூகோளமயமாய் அபிவிருத்திகண்டது ஏதோ இன்றைய நவீன மனிதனின் அகவய விருப்பு வெறுப்பினால் அல்ல. சர்வதேசம் முழுவதும் பகிரப்பட்ட உழைப்புப்பிரிவனை, எண்ணற்ற உழைப்புப் பிரிவினை, பல்நாட்டுக் கொம்பனிகள், ஏறத்தாள எல்லாப் பெரிய உற்பத்தி, வினியோக நிறுவனங்களும் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளின் மூலம் பங்கிடப்பட்ட நிலமை, உலகச் சந்தை, அந்தச் சந்தையே ஒவ்வொரு நாட்டு அரசியலையும் நூற்பாவையைப் போல இருத்தி எழுப்பி நாட்டியம் ஆட்டுவிப்பது, கலை கலாச்சாரம், அறிவியல் நடை உடை பாவனைகள் எல்லாம் பல்தேசிய பல்லினக் கலப்பாகியது போன்றவையே இன்றைய சகாப்தத்தின் மகோன்னதமாகும்.
சர்வதேச வலைத்தளம், ஈ-மெயில், கையடக்கத் தொலைபேசி போன்றவற்றின் மின்காந்த அலைகள் பட்டுப்பூச்சி பட்நூலால் தன்னை இடைவெளி இல்லாமல் சுற்ற்pயது போல உலகத்தைச் சதா சுற்றிக் கொண்டிருக்கிறது. உலக அபிவிருத்தி இந்த மட்டத்தில் இருக்கும் பொழுது இதைக் கிரகிக்கும் திறமையற்ற அயோக்கியர்களும் கடைந்தெடுத்த சுயநலமிகளும் நாம் பிறந்த நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யோசியாமல் ஏதோ கட்டாயம் தமிழீழம் எடுத்துத்தான் தீரவேண்டும் என்று அடாவாடித்தனம் பண்ணுகிறார்கள். இவர்கள் கனவுகாணும் தமிழீழம் கிடைத்தாலும் அங்கே பாலும் தேனும் ஓடாது.
உதாரணத்திற்கு நைஜீரியா ஒரு நாளைக்கு 35 மில்லியின் பரல் எண்ணையை உற்பத்தி செய்கிறது. அது கட்டாயம் ஒரு செல்வநாடாகத் திகழ வேண்டும். அனால் அங்கே வறுமை கோரத் தாண்டவம் ஆடுகின்றது. ஏனெனில் முதலாளித்தவ அரசியலைத் தமது கொள்கையாகக் கொண்டவர்கள் வறியவர்களை உற்பத்திசெய்யும் நொக்கிலேயெ செயற்படுவர். வறுமை ஓர் அரசியற் பிரச்சனை. எங்கள் நாட்டில் வறுமையைக் கொண்டு வருவதற்காகவே இனவாத அரசியலைத் தேர்ந்தெடுத்தார்கள். உட்பகை உள்ளநாடு முன்னேறியதே கிடையாது. இதற்காக எங்களது அடுத்த சமுதாயம் இந்த இனவாதிகளையும் பிரிவினைவாதிகளையும் பிற்காலத்தில் கேள்விப்பட்டு ஒட்ட வெறுப்பார்கள்.
தமிழ் மொழி சர்வதேசவாதம் பேசிய மொழியாகும்.
'உலகு புரந்து ஊட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவிற்பொருந்திய பூங்கொடி '
என்று இளங்கோவடிகள் சொல்லிப் பெருமைப்படுகிறார். உலகைப் புகழ்ந்து, உலகுக்கு உணவூட்டி, உலகைப் போற்றும் ஒழுக்கத்தையுடைய புலவர்களை உடையது தமிழ்.
'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும்...'
என்று இன்றுவரை தோன்றிய தமிழர்களிலே அதிகம் வாசித்த மகான் கம்பன் கம்பராமாயணத்தின் முதற் சொல்லையே உலகம் என்று எழுதிவிட்டுப் போயுள்ளான்.
' உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு...' என்றுதானே பெரியபுராணத்தைப்பாடிய சேக்கிழாரும் ஆரம்பித்தார்.
திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரரும் ' உலகம் உவப்ப என்றுதானே தொடங்கினார். வள்ளுவனும் 'முதற்றே உலகு..' என்று தனது முதற்குறளிலேயே உலகை வைத்துப் பேசியுள்ளார். அது மாத்திரமல்ல ஒருதொகை குறள்களை 'உலகு' என்ற கடைசிச் சொல்லால் பாடி முடித்துள்ளான்.
இவைகள் எல்லாம ;தற்செயலானவைகளா? இந்தத் தெய்வீகக் கவிஞர்கள் அனைவரும் உலகம் பற்றிய சிந்தனையையும் உலகம் உவக்க வேண்டும், உலகம் உய்யவேண்டும், தமிழன் உலகத்தோடு ஒத்து ஒழுங்கான பாதையில் செல்லவேண்டும் என்ற ஆசையும், கவலையும் இருந்ததினாலேயே இப்படிப் பாடிப் போயினர்.
'ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலக இயற்கை'- என்றுதானே புறநாறு புகட்டியது.
இந்த இசைவிழாக்கள் வறுமைக்கு எதிரான அரசியல் உணர்மையை உயர்த்தி ஆபிரிக்காவிலும் உலகத்திலும் வறுமையை அகற்றுவதன் மூலம் சமத்துவத்தை ஏற்படுத்த முனைவதாகும். இது ஜி-8 நாடுகள் என்று சொல்லப்படும் ஏகாதிபத்திய நாடுகள் ஸ்கொட்லாந்தில் தமது வழமையான சந்திப்பை நடாத்தும்பொழுதே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் 200000 பேரளவில் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டுளள்னர். கைட்பாக்கில் 200000 பேரும் பெர்லினில் 150000 பேரும் மோஸ்கோவில் 200000 பேரும் றோமில் 200000 பேரும் ஜப்பானில் 10000 பேரும் ரொறொன்ரொவில் 35000 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.. உலகம் முழுக்க இந்த இசைநிகழ்வை 2 பில்லியன் சனங்கள் தொலைக்காட்சி மூலம் பார்வையிட்டனர். ஸ்கொட்லாந்தில் 150 அராஜகவாதிகள் கறுப்பு அங்கியோடு கலந்து கொண்டனர்.
இந்த ஊhவலங்களில் கலந்துகொண்டவர்கள் மூன்றாமுலக நாடுகளின் கடன்களை ரத்துச் செய்யும் படியும் இந்த நாடுகளுக்கான உதவிநிதிகளை இரண்டுமடங்காக்கும் படியும், வர்த்தகத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்த வறிய நாடுகளின் வறுமையைக் குறைக்கும் படியும் இந்த ஜீ-8 தலைவர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.. அதே நேரத்தில் உலகவங்கியையும் சர்வதேச நாணயசபையையும் உலக வர்த்தக அமைப்பையும் ஆபிரிக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் நிபந்தனைகளை விதிக்க வேண்டாமென்றும், கட்டுமான மாற்றங்களைச் செய்யும்படி நிர்ப்பந்திக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டனர்.
இன்று ஆபிரிக்காவே மேற்குலக ஏகாதிபத்தியங்களின் யுத்தவெறி வடிகால்களாகும். போனவருடம் மட்டும் ஏறத்தாள 800 மில்லியன் சனத்தொகையையுடைய இந்தக் கண்டத்தில் 119 பில்லியன் டொலர் பணஊழல் நடைபெற்றுள்ளது. றுவண்டா, கென்னியா, சிம்பாபே என்று இனக்கலவரங்களும் இனக்கொலைகளும் தூண்டப்பட்டுள்ளன. மாறி மாறி இராணுவ சதிகள் இடம்பெறுகின்றன. இராணுவ ஜெனரல்கள் மைக்ரோசொவ்ற் பில்கெற்ஸ்; அளவுக்கு பணத்தை இரகசிய வங்கிகளில் போட்டுள்ளனர்.
மூன்றாமுலக நாடுகளின் மொத்தக் கடன் 2000 பில்லியன் டொலர்களாகும். அப்படியிருக்க இந்த ஜி-8 தலைவர்கள் உதவி நிதியாக 25 பிலல்லியன்டொலர்களை ஒது;க்கினர். ஆர்பாட்ட நெருக்குவாரத்தால் அதை 40 பில்லியன்களாக உயர்த்தினர். இது பட்டகடனுக்கான வட்டிக்கும் சேவைச் செலவுகளுக்குங்கூடப் போதாது. மறுபக்கத்தில் இந்த உதவி நிதிகளை அரசியல்வாதிகளும் என்.ஜி.ஓக்களும்; சுரூட்டிவிடுவர். கொடுத்த காசு போன வழியில் திரும்பி மேற்குலக இரகசிய வங்கிகளுக்கு வந்துவிடும்.
இந்த இசைவிழாக்கள்London, Philadelphia, Paris, Berlin, Johannesburg, Rome, and Moscow போன்ற நகரங்களில் ஒரேநாளில் நடைபெற்றது. இன்று உலகம் முழுவதும் அணிவகுக்கப்பட்டு போராட்டங்களை இசைந்து இணைந்து நடாத்தக் கூடிய மட்டத்திற்கு உலகமக்களிடையே உறவுகள் வளர்ந்தபோது இலங்கைத் தமிழர்களாகிய நாம் எமது முஸ்லீம் சகோதரரோடு இணைய முடியாமல் இருக்கும் சாபக் கேடான அரசியலைச் செய்கின்றோம். தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா ஜீ-8 தலைவர்களை நோக்கி வறுமையைக் கடந்தகாலமாக்க விடுங்கள் என்று கேட்டுக் கொண்டர்h.அவர் மேலும் கூறுகையில் நாம் செல்வந்த நாடுகளுக்கு நெருக்குவாரம் கொடுக்க நிர்ணயித்துவிட்டோம். இந்த தலைவர்களுக்குச் சொல்கின்றோம் நீங்கள் வறுயை ஒழிக்கும் திசையை மட்டும் ;பாருங்கள்.. உங்களது பொறுப்புணர்வைக் காட்டுக்கள். வெறும் வெற்று உத்தரவாதங்களைத் தராதீர்கள். ஏற்படப் போகும் வெகுஜனக் கொலையை நிறுத்தக் கூடிய சக்தி உங்களுக்கு உண்டு என்று பகர்ந்தர்.
உலகம் இப்படி இருக்க எங்களது நாட்டில் புலிகளுக்கு ஒரேயொரு வழிதான் திறந்திருக்கிறது. தமிழ் சமூகத்தைப் பற்றியோ ஒட்டுமொத்த இலங்கையைப் பற்றியோ அன்றேல் இந்திய உபகண்டத்தைப் பற்றிய சமுதாய உணர்மை இல்லாததுகேற்பவே அவர்களது அவர்களது நன்னெறியும் ;இருக்கும். மானிட நன்னெறி என்பது தான்வாழும் சமூகத்தின் நலனுக்குத் தன்னை முழுமையாகக் கீழ்படுத்துவதால் மாத்திரம் வருவதாகும். இன்றைய கிழக்குக் கொலைகளைத் தூண்டும் சிந்தனையை அவர்கள் கொண்டவர்கள். அவர்கள் உலகத்தோடு ஒத்துவாழத் தெரியாத செத்தவர்களாகும்.
ஒ;த்தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.-குறள்-


3.7.2005

7/03/2005 04:54:00 PM
இளங்கோ-டிசே said...

பத்மா, நீங்கள் இந்தவிடயங்களோடு அதிக சம்பந்தம் உள்ளதால்,நீங்கள் இது குறித்து ஒரு பதிவு எழுதினால் , ஆழமாய் இருக்கும் என்று நினைக்கின்றேன். எனவே நேரம் வாய்த்தால் எழுதுங்களேன்.
கார்த்திக், நீங்கள் தந்த சுட்டிகளுக்கு நன்றி. ஆறுதலான ஒரு பொழுதில் வாசித்துப் பார்க்கின்றேன்.
தமிழ், விரிவான பதிவுக்கு நன்றி. பல விடயங்களில் உடன்பாடும், சிலவிடயங்களில் முரணும் உள்ளது. நேரங்கிடைத்தால் விரிவாய் எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

7/04/2005 09:35:00 AM
Anonymous said...

பதிந்தது:காவலன்

கனடாவில் ஒரு நிகட்ச்சி இதற்க்காக நடைபெற்றதாக அறிகிறேன்... DJ நீங்கள் சென்றீர்களா? வரும் காளங்களில் நடந்தாள், அறியத்தரவும். நன்றி!

4.7.2005

7/04/2005 03:52:00 PM
கிஸோக்கண்ணன் said...

அவசியமான பதிவு. பாராட்டுக்கள் டீசே.

7/04/2005 04:29:00 PM
Anonymous said...

Hi all visitors) who becomes the champion of England's football?
[url=http://medsonlinenoprescription.net/category/anti-depressants]buy antidepressants online[/url]

2/24/2012 09:36:00 PM
Anonymous said...

hello) who will win the FA Cup?
[url=http://medsonlinenoprescription.net/category/blood-pressure]buy blood pressure medication[/url]

2/27/2012 04:00:00 PM