கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ஈழத்தின் வனப்பு

Wednesday, June 29, 2005

இராவணன் வெட்டு

திருக்கோணச்சரம் கோயிலுக்கு முன்னே இராவணன் வெட்டு உள்ளது. சற்றே அருகில் நெருங்கிப் பார்க்கும்போது அழகையும் பீதியையும் கொடுக்கும். புராணகதைகளில் இதைப் பற்றியும் கதைகள் உண்டு.

அழகு கொஞ்சும் மலைநாடு. படம் எடுக்கப்பட்ட இடத்தில் தேயிலைத் தொழிற்சாலை உண்டு. எப்படி தேயிலை பதமாக்கப்படுகின்றதென்ற செயன்முறை விளக்கங்களும், உடனேயே ப்ரஷ்ஷாக தயாரித்துத் தரப்படும் தேநீர் வசதியும் உண்டு. இரண்டு முறை சென்று அந்த அற்புத சுவையை கேக்குடன் சுவைத்திருக்கின்றேன். இன்னும் நாவில் அதன் உருசி கரைவதாய் ஒரு பிரமை.

கதிர்காமம்

அருணகிரிநாதர் உட்பட பலரால் பாடப்பட்ட தலம். சூரன்போரே இங்கே நிகழ்ந்ததாய்தான் கூறப்படுகின்றது. இப்போது முற்றுமுழுதாக சிங்களப் பிரதேசமாக மாறி, புத்தர் பல இடங்களை ஆக்கிரமித்துவிட்டார். பிரதான கோயில்களில் சிங்களத்தில்தான் வழிபாடுகள் நடக்கின்றது. அதைச் சூழவும் சில கோயில்களில் தமிழ்க் கடவுள்கள் வாளா அமர்ந்திருக்கின்றார்கள். படம் இருட்டில் எடுக்கப்பட்டாலும் முற்றுமுழுதாக சிங்களத்தில் எழுதப்பட்ட பதாகைதான் தொங்குகின்றது. முருகனுக்கு அடையாளமாய் தொங்கிக்கொண்டிருந்த வேலையும் (படத்தில் காண்க) பிறகு ஜேவிபியினர் அல்லது சிங்கள உறுமயக்கட்சியினரோ தூக்கிவிட்டனர் என்று சர்ச்சைகள் நடந்ததைக் கேள்விப்பட்டிருந்தேன். மீளவும் வைக்கப்பட்டதா அல்லது புதைக்கப்பட்டுவிட்டதா சரியா எதுவும் சரியாகத் தெரியவில்லை.

மலையகத்தைச் சுற்றிப் பார்த்தபோது, நான் நீராடி சுத்தமாக்கிய நீர்வீழ்ச்சி இது. இதற்கு மேலே ஏறிப்போனால் இன்னும் அழகாய் விழும் நீர்வீழ்ச்சியையும், கலகலவென்று சிரித்தபடி நீராடும் பெண்களையும் காணலாம்.

சீகிரியா ஓவியங்கள்

படம் எடுக்கத் தடை என்று கூறப்பட்டாலும் கள்ளமாய் எடுத்து தொல்பொருள் ஆய்வாளர்களிடம் ஏச்சும் வாங்கியிருக்கின்றேன். சிகிரியாவில் ஏறிப்போவது ஒரு அலாதியான அனுபவம். மேல் தளத்தில் எல்லாம் உடைந்து நிர்மூலமாகப் போயிருந்தாலும், எப்படி இப்படியொரு இடத்தை காசியப்பன் தனது இராச்சியமாய் தேர்ந்தெடுத்துக்கொண்டான் என வியக்க வைக்கும் இடம். நீராடும் பொய்கைகள் போலக் கூடத் தெரிந்தன (மாதிரி எனக்குக் கிடந்தது). எத்தனை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் நீராடிக் குதூகலித்த இடமோ? ஒரு இறப்பைப் போல அடையாளமின்றிப் போயிருக்கின்றது இன்று.

20 comments:

Anonymous said...

பதிந்தது:NONO

படங்களுக்கு நன்றி... அடுத்தமுறை இலங்கைக்கு செல்லும் போது நிச்சயமாக பாக்கவேண்டும்!!!!!!

30.6.2005

6/29/2005 10:06:00 PM
Anonymous said...

பதிந்தது:Gopi

நான்

29.6.2005

6/29/2005 10:44:00 PM
Anonymous said...

டீ.சே
நன்றிகள்.
ஈழத்தின் அழகு தனி அழகுதான்.
ஈழநாதம் மட்டு. பதிப்பை பாருங்கள்.
அழகான மட்டுநகர் படங்கள் அதில்
இருக்கு.ஈழம் தனி அழகுதான்.

கரிகாலன்

6/29/2005 11:32:00 PM
Anonymous said...

பதிந்தது:Garunyan konfuzius

இராவணன் வெட்டைப் பெரியாரையெல்லாம் அறியாத சின்ன வயதில் பார்த்தபோதே என்னால் நம்பமுடியவில்லை.
எங்கவூரில் நிலாவரை என்றொரு கிணறு உள்ளது, அதை ராமன் தன்பரிவாரங்கள் தண்ணீர் குடிப்பதற்காக பாணத்தால் குத்தி ஏற்படுத்தியதென்பார்கள். ஒருகாலம் நவற்கீரி, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, விழான் முழுவதற்கும் நீர்ப்பாசனம் செய்த வற்றாத ஊற்று இன்று காலவர்த்தமானக்களுடன் நாளடைவில் உப்புத்தண்ணீராக மாறித் தற்கொலை செய்துகொள்வற்குத் தவிர வேறெதெற்கும் உதவாததாக மாறிவிட்டது.

முன்பு சிகிரியாவில் கடலை, மாலை, கைவினைப்பொருட்கள், இளனி, அன்னாசி, கஜூ விற்கும் சிறுவியாபாரிகள் அஜந்தா ஓவியங்களைப் பார்க்கவரும் வெளிநாட்டினருக்குத் தொந்தரவாக இருக்கிறார்கள் என்று சிறு Preservation Board இனர் விரட்டியடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுவியாபாரிகள் அஜெந்தா ஓவியங்களைச் சிதைத்துவிட்டார்கள். 1968ல் நாங்கள் பார்க்க நேர்ந்தபோது அனைத்தும் அகோரமாகவே இருந்தன. பிரிடிஷ் அருங்காட்சியகத்தினர் அவற்றைச் சீரமைக்கப்போவதாக முன்னர் கதை வந்தது. இப்போது உங்கள் படங்களைப் பார்க்கையில் அவை சீரமைக்கப்பட்டுவிட்டனபோல் தெரிகிறதே!
நம் மாணிக்கத்தீவின் அருஞ்செல்வங்கள் என்னும்போது ஒற்றைக் கொலரையாவது தூக்கிவிடலாம்!

காசியபன் மறைந்திருக்கத்தான் சிகிரியாக்குகையைப் பயன்படுத்தினானேதவிர இராசதானியாக அல்ல என்றுதான் நினைக்கிறேன். இன்னும் சரித்திரப்பேராசன்கள் எவராவது இதன்மேல் ஒளிபாய்ச்சலாம்.

இன்னும் தேயிலைத்தோட்டமும் (செங்குந்தவா?) நீர்வீழ்ச்சியும் அருமை.


DISPASSIONATED என்றால் என்ன தோழரே?

SAMUEL JOHNSON கொள்ளுப்பேரன் நான். எனக்கே தெரியவில்லை. வெட்கங்கெட்ட அகராதிக்காவது தெரிகிறதாவென்று சோதித்துப்பார்த்தேன். DISPASSIONATED என்றெதுவுங்கிடையாது வேணுமென்றால் DISPASSIONED என்று வைச்சுக்கோ எங்கிறதே?

= காருண்யன் =



30.6.2005

6/30/2005 02:58:00 AM
வானம்பாடி said...

Dispassionated என்று வராது. அந்த கடைசி d-யை மட்டும் தூக்கி விடுங்கள் DJ. 'Dispassionate DJ' என்பது சரியாக இருக்கும். அல்லது காருண்யன் சொன்னது போல 'Dispassioned' என்று வைத்துக் கொள்ளலாம்.

6/30/2005 04:05:00 AM
இளங்கோ-டிசே said...

காருண்யனும், சுதர்சனும் கூறுவதுதான் சரி. Dispassionate என்பதே சரியான வார்த்தைப்பிரயோகம்.. இது குறித்து முதலே தெரிந்தாலும் DISPASSIOANTE ஐயும் DJ ஐயும் இணைக்க ஒரு 'D' ச் சேர்ப்பதற்கு ஒரு 'உறங்கும் உண்மையே' காரணம். யார'D' அந்த மோகினி என்றெல்லாம் யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன் (முக்கியமாய் Bro & Cherry). ஏற்கனவே டிசே தமிழன் என்ற பெயரே weired யாய் இருக்கின்றதென்றதை பலதடவைகள் கேட்டபடியால் DISPASSIOANTE'D' DJ என்று மேற்கோள் குறிக்குள் போட விரும்பவில்லை. இப்போது Google ல் தேடிப்பார்த்தால், 'What is dispassionated' என்றோ அல்லது 'dispassionated' என்று தனித்தோ என்றாலும் எனது தளம்தான் முதலில் (ஆகககுறைந்தது என் இணையத்தில்) வருகின்றது. எனவே இத்தால் நண்பர்களுக்கு அறியத்தருவது என்னவெனின்ல் dispassionate என்பது அனைவருக்கும் பொதுவானது dispassionated என்பது டிசேக்கு மட்டுமே உரியது. விரைவில் இந்தச் சொல்லுக்கு copy-right எடுக்கலாம் எனவும் தீர்மானித்துள்ளேன் :-).

6/30/2005 08:51:00 AM
SnackDragon said...

//யார'D' அந்த மோகினி என்றெல்லாம் யாரும் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன் (முக்கியமாய் Bro & Cherry).//
கேட்கமாட்டோம். ஆனால் Dispassionate-டி DJ ன்று வேண்டுமானால் சில மோகினிகளுக்கு பரிந்துரைப்போம். ;-)

6/30/2005 09:14:00 AM
இளங்கோ-டிசே said...

//Dispassionate-டி DJ ன்று வேண்டுமானால் சில மோகினிகளுக்கு பரிந்துரைப்போம்.//

கார்த்திக், In every law, there will be some exceptions என்பதற்கிணங்க, எனக்கும் மோகினிகளைக் கண்டால், dis போய் தனியே passionate மட்டும் வந்துவிடும். எனவே மோகினிகளுக்கும் தேவதைகளுக்கும் பரிந்துரைக்கும்போது நல்ல passionate-டி டிசே என்று பரிந்துரையும் :-).
........
இதற்கு மேலேயுள்ள பின்னூட்டத்தை எழுத்துப்பிழைகள் திருத்துவதற்காய் நீக்கியிருந்தேன்.

6/30/2005 10:01:00 AM
கறுப்பி said...

டீசே, "இலங்கைச்சி" எண்டு பெயர்தான் எனக்கு ஆனால் பெரிதாகப் பெயர்பெற்ற இடங்கள் ஒன்றையும் நான் இலங்கையில் பார்த்தில்லை. ஒரு முறை மலைநாட்டிற்கு அங்கே அப்பா வேலை செய்ததால் விடுமுறைக்குப் போய் வந்தோம். அப்போது நான் சின்னப்பிள்ளை ஒன்றும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. இப்போதுதான் கனடாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு விடுமுறைக்குப் போய் இடங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுகின்றது. இதுதான் கனாக்காலம் என்பதோ? எனது நாடு என்றால் ரத்தமும் சதையும் கொண்ட படங்களைத்தான் பார்க்க முடியும் என்று மரத்துப் போன மனதுக்கு தாங்கள் போட்ட படங்கள் இதமாக உள்ளது. நன்றி.

6/30/2005 10:07:00 AM
Anonymous said...

கறுப்பி, இப்போதாவது 'கன்னியாகுமரியிலிருந்து-இமயத்துக்கான' பயணக்கனவிலும் பார்க 'கதிர்காமதிலிருந்து-பருத்திதுறைக்கான' பயணக்கனவின் முக்கியத்துவம் விளங்குகிறதா? என்னைக்கேட்டால் இலங்கையின் அழகும், அங்கு வாழும் ஒவ்வொரு இன மக்களின் கலாச்சரமும், பண்பாடும் என் மனதுக்கு மகிழ்வையழிப்பை. இலங்கையின் ஒவ்வொரு வாசல்களுக்கும் சென்ற அவை தரும் தரிசனங்களைப் பெறவேண்டும் என்று எனக்கு ஒரு கனவுண்டு... பார்ப்போம்.
-தர்சன்

6/30/2005 10:50:00 AM
கறுப்பி said...

தர்ஷன், கூடவே கொஞ்சம் பயமும் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் வடக்குப் பக்கம் பெரிதாகப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்றே நம்புகின்றேன். இருப்பவைகள் ஓரளவுக்கேனும் பார்த்தாயிற்று. மலைநாடுதான் எனக்குப் பிடித்தது அங்குதான் போகவேண்டும். தாங்கள் போகும் போது சொல்லுங்கள் நானும் வருகின்றேன். தனியப்போகப் பயமாக உள்ளது.

6/30/2005 11:00:00 AM
Anonymous said...

பதிந்தது:கோபி

அருமையான படங்கள், அப்புறம் DJ, என்னிடம் நீங்கள் ஈழத்தில் செய்த சில குறும்புப் படங்கள் உள்ளன... என்ன போடட்டுமா?

30.6.2005

6/30/2005 11:47:00 AM
இளங்கோ-டிசே said...

அய்யய்யோ கோபி. ஏற்கனவே அந்தப்படங்களை ஒரு வளாகத்தில் presentation செய்யும்போது போட்டு காட்டித்தானே அங்கே வந்திருந்த பலரை எழும்பி ஓடச்செய்திருந்தோம். அதை இங்கேயும் போட்டால், பிறகு என்னுடைய தளத்துக்கு எவரும் எட்டிப்பார்க்க கூட மாட்டினம் :-).

6/30/2005 12:05:00 PM
-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.
SnackDragon said...

// This post has been removed by the author.//

இங்கே என்ன சஸ்பென்ஸு ?

7/01/2005 11:55:00 AM
-/பெயரிலி. said...

இல்லை; சும்மா எல்லாப்பதிவுகளிலுமே பகிடி விட்டுக்கொண்டே இருக்கிறமே.. கறுப்பிதான் ஊரிலை இல்லை; பகிடிக்கும் ஒரு கிழமைக்கு லீவு விடுமமே எண்டுதான். இப்பிடியே பகிடி விட்டுக்கொண்டிருந்தம், கதிர்காமஸ், ஏற்கனவே வளைக்கத் தொடங்கின தமிழ் வலைப்பதிவுவரலாற்றிலை உம்மையும் என்னையும் வலைப்பதிவு வாலிகள் எண்டுமட்டுந்தான் வால்ந்திருப்போம்.
இங்கிலிஸில சொன்னால், Take yourself and your table seriously ;-)

7/01/2005 12:09:00 PM
சினேகிதி said...

நீங்கள் மலை நாடு சென்றபொழுது சீதையை சிறை வைத்த இடம் என்று சொல்லப்படுகின்ற சீதா எலிய கோயில் மற்றும் றம்பொடக்குச் செல்ல வில்லையா?

7/02/2005 04:08:00 PM
இளங்கோ-டிசே said...

//மலை நாடு சென்றபொழுது சீதையை சிறை வைத்த இடம் என்று சொல்லப்படுகின்ற சீதா எலிய கோயில் மற்றும் றம்பொடக்குச் செல்ல வில்லையா?
//
சினேகிதி,இரண்டு இடங்களுக்கும் போயிருக்கின்றேன். றம்பொட ஆஞ்சநேயர் கோயிலில் இருந்த சிலையின் பிரமாண்டம் பிரமிப்பைத் தந்திருக்கின்றது. சீதா எலியவுக்கு இரண்டு முறை பயணித்திருந்தேன். இரண்டாம் தடவை ஆறுதலாக (தங்கிநின்ற இடம் அருகிலிருந்தததால்) விடிகாலையில் கோயில், அதன் சுற்றுப்புறம் என்று காலாற நடந்து இயற்கையின் அழகையெல்லாம் இரசித்தது இனிய நினைவுகள்.

7/03/2005 04:09:00 AM
சினேகிதி said...

றம்பொட ஆஞ்சநேயர் பிரமாண்ட சிலை திரைநீக்கம் செய்யப்பட்டபோது பாரத்துப் பிரமித்தேன்.

7/03/2005 04:51:00 PM