கறுத்த பிரேம்
கண்ணாடிக்குள்ளிலிருந்து
நதியாய் அசைகின்றன
விழிகள்
ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில்
நெஞ்சுதடவிய
அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும்
முதுகில் படரும்
விரல்கள்
கத்திகளாய் குத்திக்கொண்டிருந்த
கடந்த காலம் தூர்ந்துபோக
சிறகுகள் முளைக்கின்றன
மனவெளி முழுதும்
ஒரு பொழுது
சப்வேயில்
அழகிய காதற்காலம்
துளித்துளியாய் கரைந்து
கருஞ்சாம்பர் வானமானதையும்
அதிலிருந்து முளைத்த துர்ச்சாபத்தேவதைகள்
வருடங்கள் மீதேறி
நிழ்ல்களாய்ப் பயமுறுத்தியதும்
நீயறிவாயா பெண்ணே?
பளிச்சிடும்
உன் மூக்குத்தியைப்போல
நினைவுகளை விரும்பியபோது
அணியவும் எறியவும்
முடியுமெனில்
எவ்வளவு நன்றாகவிருக்கும்
எனும்
என் வரிகளை இடைமறிக்கும் நீ
கடந்தகாலத்தை நினைவு கொள்ள
உனக்கு கருஞ்சாம்பர் வானமெனில்
எனக்கு பிடுங்கியெறியப்பட்ட மூக்குத்தியும்
கழுத்தை இறுக்கிய கரங்களும்
என்கிறாய்
நேசிப்பை முதன்முதலாய்
அனுபவிக்கும் சிலிர்ப்பைப்போல
கடந்தகாலத்தின் வலிகளுடன்
நம்மால் இன்னொருமுறை
இதமாய் நேசிக்கமுடிவது
வியப்புத்தான்
குளிருக்கு மூட்டிய
அடுப்பில்
எறிந்த சிறுகுச்சிகளாய்
இவ்விரவில்
சரசரவென்று பற்றிக்கொள்கிறது
காமம்
உன் ஆடைகள்
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்
வினாவுகிறாய்
முலை தடவும் மென்விரல்கள்
நாளை என் மூக்குத்தியை
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை
எப்படி நம்புவது.
Nov 11/05
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
thirumba vanthacha...kavithaithan valakam pola nalla iruku:-)
11/14/2005 10:18:00 AMIs DJ trying to become a rapper in Tamil :)
11/14/2005 10:25:00 AMநச்!
11/14/2005 10:56:00 AM'அசைகின்றன' அல்லவா!
Welcome back Thozha! :)
11/14/2005 11:48:00 AMபோனாத்தானே வர்றதுக்கு... என்ன, டிஜே? ;-)
11/14/2005 12:19:00 PMசுட்டிக்கு நன்றி ஜெயஸ்ரீ. 1)அதிலுள்ள உதாரணங்களின் பின் ஏதாவது ஒரு எண் இருக்கிறது, இல்லையா? கண்ணிரண்டும், காலிரண்டும்...இப்படி. இதில் எனக்குப் பிரச்சினையில்லை, 2) அவ்வுதாரணங்களில் உறுப்புக்களைப் பன்மையில் சொல்லிவிட்டு வினைச்சொல்லை ஒருமையில் சொல்லியிருக்கவில்லை, அல்லவா?
11/14/2005 12:40:00 PMஅந்த உதாரணங்களுக்கும் டிசேயின் வாக்கிய அமைப்புக்கும் வித்தியாசமிருப்பதாக என் புரிதல்.
கவிதைச் சவாரியோட வந்திருக்கிறீர்கள்!வாருங்கள்,வாருங்கள்.
11/14/2005 12:55:00 PMபதிந்தது:என்னார்
11/15/2005 01:40:00 AMஆடைகலைந்த கை அதையும் கலையும் ஜாக்கிரதை
மூக்குத்தி போனால் நீ முண்டச்சி அரிவாய் நீ இதை;
முன்னமொருவன் மூக்கறிந்தான் சூர்ப்பணகையை
இந்த கவிஞர்கறே இப்படித்தான் பொய் சொல்வர் உன்னை அழகென்று கொங்கைகளே சிவலிங்கம் என வைத்துப் பூஜித்தான் கோக் கவிஞன் காளிதாசன்.
15.11.2005
//பளிச்சிடும்
11/15/2005 02:30:00 AMஉன் மூக்குத்தியைப்போல
நினைவுகளை விரும்பியபோது
அணியவும் எறியவும்
முடியுமெனில்
எவ்வளவு நன்றாகவிருக்கும்
எனும்
என் வரிகளை இடைமறிக்கும் நீ
கடந்தகாலத்தை நினைவு கொள்ள
உனக்கு கருஞ்சாம்பர் வானமெனில்
எனக்கு பிடுங்கியெறியப்பட்ட மூக்குத்தியும்
கழுத்தை இறுக்கிய கரங்களும்
என்கிறாய்//
அருமை. மொத்தமும் அருமை.
இன்னொருமுறை நேசிக்க முடிந்தாலும் அடியில் வண்டலாய் படிந்திருக்கிறது கலங்கக் காத்திருக்கும் பயமும், நம்பிக்கையின்மையும்.
அ ரு மை . !
11/15/2005 04:06:00 AMகவிதை தொகுப்பை விரைவில் வெளியிடுங்கள் டீசே. அருமை.
11/15/2005 11:39:00 AM"கடந்தகாலத்தின் வலிகளுடன்
நம்மால் இன்னொருமுறை
இதமாய் நேசிக்கமுடிவது
வியப்புத்தான்" ஆனாலும் நீண்ட காலமாகும் .
நண்பர்கள் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் வரவேற்புக்கும் நன்றி.
11/15/2005 02:17:00 PM......
//Is DJ trying to become a rapper in Tamil :) //
இரவி, மேலேயுள்ளதற்கு version II என்று இன்னொரு விதமாய் எழுதி வலைப்பதிவில் சேமித்து வைத்திருக்கின்றேன். நல்லவேளை அதைப் போடவில்லை. போட்டிருந்தால், 'gangster' rapperயாய் வரவிரும்புகின்றீர் போல இருக்கிறது என்றுதான் வினாவியிருப்பீர்கள். version II ஜத்தான் முதலில் பதிவில் போட விரும்பினேன். ஆனால் ஒரு அன்பர் அண்மையில் இங்கே வெளியிடப்பட்டிருக்கும் சஞ்சிகை ஒன்றில், ஊரில் சாகின்றவனுக்கு 'கவிதை' எழுதாமல், இங்கே சாகின்றவனுக்கு எழுதிப் புண்ணியமில்லை என்று ஒருவித புது போர்மிலாவைக் கண்டுபிடித்து (அவர் குறிப்பிட்ட சில விசயங்களை வைத்துப் பார்த்தால் என்னை நோக்கித்தான் கேள்விகள் கேட்டிருக்கின்றார் என்று புரிந்தாலும், 'மெய்ப்பொருள் காண்பதே அறிவு' என்பதால் அவரிடம் நேரேயே கேட்டறிந்துவிட்டு பொழுதுபோகாத சமயத்தில் ஒரு counter-attack செய்யலாம் என்று முடிவு செய்திருக்கின்றேன். உதவிக்கு வந்து உதை வாங்கத்தானே கனக்க ப்ரோக்கள் எனக்காக இங்கிருக்கின்றார்கள் என்பதால் பயமில்லாது எழுதலாம் என்று நினைக்கின்றேன். 'மற்றது' பிறகு :-).
....
//'அசைகின்றன' அல்லவா//
எனக்கு கைகொடுக்க வந்த ஜெஸிறிக்கும், நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற சுந்தரவடிவேலாருக்கும் நன்றி. அசைகின்றன விழிகள் என்பதுதான் இந்த இடத்துக்குப் பொருத்தமாய் இருக்கும் போலத்தோன்றுவதால் மாற்றிவிடுகின்றேன். நன்றி.
//இன்னொருமுறை நேசிக்க முடிந்தாலும் அடியில் வண்டலாய் படிந்திருக்கிறது கலங்கக் காத்திருக்கும் பயமும், நம்பிக்கையின்மையும்//
11/15/2005 03:11:00 PM//....ஆனாலும் நீண்ட காலமாகும் . //
தங்கமணி, பத்மா: அஃதே உண்மையாம் :-(.
Post a Comment