கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Monday, February 27, 2006

- ஒவ்வொரு விவாதமும்
அந்தக் கொலையில் மையங்கொள்ளும்
அல்லது
மூச்சுத்திணறவைத்தபடி முற்றுப்பெறும்
அதே கொலையில்
.......
- ஆணாதிக்கத்தைப் போல
என்றும் வெறுப்பேன்
உங்களின் மேலாதிக்கத்தையும்.
...........
- இரும்புக் கவசத்தால்
கோதுமைமா அள்ளித்தந்தவர்
பிறகு
மண்டைகள் உடைத்ததையும்
வீட்டினருகிலிருந்த முகாமிலிருந்து
அலறும் குரல்கள்
நம் இரவுகள் தின்றதையும்
மறந்தும்விடலாம்
செம்மணிப் புதைகுழிபோல
...........
- புதைந்த குழியிலிருந்து
எலும்புக்கூடுகளை எடுத்தால்
வெறுப்புத்தான் எஞ்சும்
மனிதத்தை இழக்காதிரெனும்
உம் அறிவுரைகளையும் கேட்டோம்:
மறந்தோம்
வைத்தியசாலைக் கொலைகளை
அகதிமுகாம் அவலங்களை
தோழிகளின் யோனிச்சிதைவுகளை
...........
- கிளிப்பிள்ளையாய்
ஒரு உயிருக்கு
பல்லாயிரம் கொலைகளைச் சமானஞ்செய்வதில்
ஜன்ஸ்டீனின் e=mc^2மாய்
எஞ்சிய அன்போ
வெறுப்போ அடங்கியிருக்கலாம்
...........
- விந்தைதான்.
தலைவரின் தாயைப் பிணமாக்கியவரை
மறக்கவும் முடியும்
செய்த கொலைகளுக்கு
மன்னிப்புக் கேடகவும் தோன்றும்
'கொலையாளியின்' ஜீனை பிரதமராக்கி
தேசியம்பாடவும் முடிகிறது
...........
- உங்களுக்கு
மனிதத்தில் அக்கறையிருந்தால்
ஆயுதங்களில் நம்பிக்கையில்லையெனில்
தலைவருக்காய்
பலியிடப்பட்ட ஆயிரம் 'வீரர்கள்' குறித்தும் பேசுங்கள்
வல்லரசுக் கனவுகளையும் கைவிடுங்கள்
...........
- ஒடுக்கப்பட்டவர்கள்
என்றும் விளைவது
ஆண்-பெண் உறவின்
பரஸ்பரப் புரிந்துணார்வு
உங்களின் விருப்பு
ஆண்டாள்-அடிமை விசுவாசமெனில்
கட்டுங்கள் நடையை
..........
- *வீழ்வதும் எழுவதும்
எதுவெனினும்
நாம் நாமாகவே
இருக்கப் பிரியப்படுவோம்.

*தோழியொருத்தின் கடித வரிகள்

10 comments:

வானம்பாடி said...

+++++

2/27/2006 11:16:00 AM
Anonymous said...

Good poem

by,
FD

2/27/2006 12:10:00 PM
Bobby said...

Great one man

2/27/2006 12:13:00 PM
Anonymous said...

;-)
ஐயன் மீர் அது ஆலை மறம். நீவீர் நான் அல் புல் கள்

2/27/2006 12:36:00 PM
Thangamani said...

DJ கவிதையாய் இது சரியாக வரவில்லை எஅண்ட்ரு நினைக்கிறேன். ஆனால் கேள்விகள் சரியானவை!

2/27/2006 01:44:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே
....
//கவிதையாய் இது சரியாக வரவில்லை //
தங்கமணி, உங்கள் அவதானம் சரியானதே. (சிலருக்கு எது சொன்னாலும், பிரயோசனமில்லை என்று உணர்ந்திருந்தாலும்)அண்மையில் சில புதிய/இளைய வலைப்பதிவர்கள் எழுதியதை வாசித்தபோது சிலவற்றைப் பதிவுசெய்யவேண்டும் என்று மனது விரும்பியது. கட்டுரையாக எழுத விரும்பினாலும் நேரமின்மை மற்றும் அலுப்புக் காரணமாய் எதையாவது பதிவு செய்திவிட்டால் போதும் என்று இப்படி எழுதி 'பொதுவானவை' என்ற வகைக்குள் தமிழ்மணத்தில் பதிவு செய்திருந்தேன் :-).
....
தமிழ்மணம் தனது மறுமொழியப்பட்ட பக்கத்தில், பின்னூட்டங்களை திரட்டுவதில் எனது பக்கத்துக்கு சிரமம் தருவதால் பலருடைய குட்டுக்களிலிருந்து தப்பிக்கலாம் என்று பெருமூச்சுவிடுகின்றேன் :-).

2/27/2006 02:24:00 PM
இளங்கோ-டிசே said...

தஙகமணியின் பின்னூட்டதுக்கு ஏற்ப வடிவத்தை மாற்றிவிட்டேன்.மாற்ற முதல் இதை வாசித்து ஜீரணித்தவர்களுக்கும் நன்றி.

2/27/2006 02:43:00 PM
Sen Sithamparanathan said...

கடைசி நான்கு வரிகள் கவர்ந்தன என்னை

2/27/2006 06:52:00 PM
வசந்தன்(Vasanthan) said...

டி.சே,
பலநேரங்களில் இப்படியான இடங்களில் வாயைக் கொடுப்பதைவிடப் பேசமாலிருப்பதே மேலென்று இருந்திருக்கிறேன். அதிலும் நுட்பமாக, விசமத்தனத்தோடு எழுதப்படும்போதெல்லாம் இப்படித்தான் தோன்றும். ஆனால் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அப்படிப் பொத்திக்கொண்டிருக்கச் சாத்தியப்படுவதில்லை.
யாராவது உண்மையில் புரியாமல் எழுதுகிறார்களென்றால் ஏதாவது எழுதத் தோன்றும். இப்போது குறிப்பிட்ட சில கேள்விகளையும் கருத்துக்களையும் தட்டச்சி படியெடுத்து வைத்துள்ளேன். இனி இது பற்றி யார் எங்கே என்ன கதைத்தாலும் எல்லா இடத்திலும் அதை ஒட்டுவதென்று முடிபு. அத்தோடு கொலைகளின் மீதான என்தரப்பு மகிழ்ச்சியையும் கூச்சமின்றிப் பதிவு செய்ய உத்தேசம்.
நசரேத்திற் பிறந்த ஒருத்தன் சொன்னதுபோல்,
"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்".

2/28/2006 09:28:00 AM
இளங்கோ-டிசே said...

செந்தூரன் பின்னூட்டத்துக்கு நன்றி.
.....
உண்மைதான் வசந்தன். எப்பவோ இந்த மாதிரி விசயங்களில் fed-up ஆகித்தான் அதிகம் விவாதிப்பதில்லை. திண்ணையின் விவாதக்களத்தில் சாதாரண ஒரு விசயத்தை எழுதப்போய், அதையே தணிக்கை செய்து -தங்கள் மேலாதிக்கத்தைக் காட்டியபோது- வெளியேற நேர்ந்ததற்கும் இதுவே காரணம். அந்தவகையில் வலைப்பதிவுகள் தரும் சுதந்திரம் அற்புதமானது.
.....
ஒரே விடயத்தை திருப்ப திருப்ப எழுதுவதும் அலுப்பூட்டுபவை அலுப்பூட்டுபவை. இதைக்கூட, அறிய விரும்பும் புதியவர்கள்/இளையவர்கள் திறந்தமனதாயிருந்தால் அறியட்டும் என்றுதான் எழுதினேன். ஈழத்தில் இருந்தபோது, அந்த நாட்டு இந்த நாட்டு புரட்சிகள் என்று அரையும் குறையுமாய் வாசித்தபோது, அட இவர்கள் எல்லாம் மகாத்மாக்கள் என்று நினைதேன். பிறகு விரிவாக வாசித்தபோது எல்லா தேசியப்போராட்டங்களும் இரத்தக்கறை படிந்தவையே என்ற புரிதல் வந்தது. கத்தியின்றி இரத்தமின்றி நடந்ததாக விதந்துரைக்கப்பட்ட பிரெஞ்சுப்புரட்சியின் முடிவில் கூட, ஆட்சியாளர்கள் கில்லட்டுக்குத்தான் பலியிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் வரலாறு.

2/28/2006 10:21:00 AM