-காலம் சஞ்சிகை ஆதரவில் நடந்த புத்தகக்கண்காட்சி-
(ரொரண்டோ)
திரைப்படங்கள் திரையிடல், இன்னிசைக்கச்சேரி போன்றவற்றோடு 'வாழும் தமிழ்' புத்தகக்கண்காட்சி நடந்தேறியது. திரையிடலின்போது குறித்த நேரத்துக்குப்போக முடியாதபோதும், இன்னிசைக் கச்சேரியை கேட்கமுடிந்தது. நீண்டநாட்களுக்குப் பின் பாரதியார் பாடல்களை இசையுடன் இனிய குரல்களுடனும் கேட்டது நல்லதொரு அனுபவம்.
வாங்கிய சில புத்தகங்கள்
(1) முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன - ரமேஷ்-பிரேம்
(2) இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் - பிரேதா - பிரேதன்
(3) பெரியார்: தலித்துக்கள் முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்
(4)அழுவதற்கு நேரமில்லை - தாமரைச்செல்வி
(5) அமைதியான ஒரு மாலைப்பொழுதில் (மொழிபெயர்ப்புக் கதைகள்) - எம்.எஸ்
6) கனவுப்புத்தகம் - ஜே.பி. சாணக்யா
(7) நான் பேச விரும்புகின்றேன் (கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்து....) - ச.தமிழ்ச்செல்வன்
(8) மீனுக்குள் கடல் - பாதசாரி
(9) அந்தமான் நாயக்கர் - கி.ராஜநாராயணன்
(10) வெயிலோடு போய் - ச.தமிழ்ச்செலவன்
(11) அகாலம் - சமயவேல்
(12) வாளின் தனிமை - ச.தமிழ்ச்செல்வன்
அன்புடன் கிடைத்தவை
(13)வலை - டானியன் அன்ரனி (டானியல் அன்ரனியின் சகோதரர் டானியல் ஜீவா தந்தது)(14)காலம் - இதழ் -27 ( 'காலம்' செல்வம் தந்தது; கவிதையென்று எதையோ ஒன்றை சஞ்சிகைக்காய் எழுதிக்கொடுத்த கஷ்டத்திற்காய்... )
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
டி.சே.
11/26/2006 12:17:00 PM‘வாழும் தமிழ்’ பற்றிய பதிவு மற்றும் படங்கள் பார்த்தேன். அங்கு வாழ்ந்த காலத்தில் நான் மிக ஆவலோடு காத்திருந்து கலந்துகொள்ளும் நிகழ்வு அது. புத்தகங்களுக்காக அதிகம் செலவழிப்பதும் அன்றுதான். பழைய முகங்களைப் படங்களில் காண… தூர இடைவெளியால் இழந்துபோன உறவுகள் என்ற துயர் மேலிடுகிறது. ‘நான் பேச விரும்புகிறேன்’மிக அருமையான புத்தகம். ஆளுமை மிக்க படைப்பாளிகளின் வாழ்வு குறித்துப் பேசும் புத்தகம். நீங்கள் எடுத்த புத்தகங்களுள் உங்களுக்குப் பிடித்தவை எவையென வாசித்து முடித்ததும் தெரியப்படுத்தவும். (சோம்பல்தான்) வாங்கி வாசிக்கிறேன்.
அண்ணா!
11/26/2006 01:50:00 PMவாழும் தமிழ் மூலம்!!! தமிழ் வாழும் எனும் சேதி சொல்லுகிறீர்கள். படத்துடன் சேதி தந்ததுக்கு நன்றி.
வாங்குவோரை விடப் புத்தகம் அதிகம் போல் உள்ளது....சனம் டிவிடி கடைகளுக்குள் நிக்குதுகள் போல.
யோகன் பாரிஸ்
/பழைய முகங்களைப் படங்களில் காண… தூர இடைவெளியால் இழந்துபோன உறவுகள் என்ற துயர் மேலிடுகிறது./
11/27/2006 12:07:00 PMநதி, உங்களுக்குத் தெரிந்த இன்னும் சில முகங்களைப் படம் எடுத்தனான் :-). ஆனால் அவர்களின் முறையான அனுமதியின்றி இணையத்தில் பிரசுரிக்கத் தயக்கமிருந்ததால் பதியவில்லை.
'நான் பேசவிரும்புகின்றேன்' தொகுப்பை உங்களைமாதிரித்தான் இன்னொரு நண்பர் வாசித்துவிட்டு சிலாகித்துப் பேசியிருக்கின்றார். (கண்டவுடன் வாங்குவதற்கு அதுவும் ஒரு காரணம்). இந்நூலை நான் வாங்கிவிட்டேன் என்றவுடன் வாசித்துமுடித்துவிட்டாயா என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கின்றார் (லிவ் உல்மனையாவது வாசியென்றார்). நானும் சரி சரி என்றபடி, பெரியாரை வாசித்துக் கொண்டிருக்கின்றேன் :-).
.....
/வாங்குவோரை விடப் புத்தகம் அதிகம் போல் உள்ளது....சனம் டிவிடி கடைகளுக்குள் நிக்குதுகள் போல./
யோகன், புத்தக்கண்காட்சிகளுக்கு இப்ப்டித்தான் 'கூட்டம் பெருமளவில்' வரும் என்பதால் கவலைப்பட ஏதுமில்லை :-(. அவரவர்க்கு பிடித்ததை அவரவர்கள் செய்கின்றார்கள் போலும்!
Post a Comment