பனியைப்போல குவிந்துகொண்டிருக்கிறது
பகிர முடியாத நம் வலிகள்
கொடுங்காற்று வீச
தெருவில் சறுக்கிவீழ்ந்த அகதியொருவன்
தன்னை பனிப்புலத்தில் தள்ளிவிட்ட
போரை
கெட்டவார்த்தையால் திட்டுகிறான்
உன்னை
காரின் பின்சீட்டில்
புணர்ந்துகொண்டிருக்கையில்
யோனியில்
கிரனைட் வைத்து சிதைக்கப்பட்டவள்
குறுக்காய் கடந்துபோகின்றாள்.
.......................
மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல
கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய்
வார்த்தைகள் வார்த்தைகள்
ஒவ்வொருவரின் நியாயங்களும்
அழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை
கமபளிப்போர்வைக்குள்
உன் வெப்பந்தேடி
அலைந்துழல்கையில்
கால்விரல்களில் படியும்
பிரிவின் வாதைகள்
எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்
வாசிப்பு
என்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.
............................
கடிகாரத்தின்
இருமுட்களுக்குமிடையில் சிக்கிய
பல்லி நான்
முன்னே நகரும் முள் நீ
பின்தொடரும் முள் கடந்தகாலம்
கடந்தகாலத்தில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு
வாய்ப்பதில்லை
நிகழ்காலமும் நீயும்.
(Feb 04, 2007)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாசிப்பு
2/05/2007 04:38:00 AMஎன்னை மோசமாய்த் தோற்கடிக்கும் காலத்தில்
நீ விட்டுச்சென்ற
கண்ணீர்த்துளியில் சுருக்கிட்டு
தற்கொலை செய்வேன்.
............................
நல்ல கவித்துவம் பொருந்திய வரிகள் டி.சே.
//ஒவ்வொருவரின் நியாயங்களும்
2/05/2007 08:53:00 AMஅழகாய்த்தானிருக்கின்றன
தவறுகளேயிருப்பதேயில்லை//
அவரவரது நியாயங்கள் அவரவரைப் பொறுத்தவரை மறுபரிசீலனைக்கு இடமற்றவைதான்..
//எல்லாவற்றையும் செரிக்க
எல்லோரையும் நேசிக்க
இப்பனிக்காலம் கற்றத்தருவதைப்போல
போகாதேயென்று
ஒரு வார்த்தையால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்//
"சொல்லாது போன வார்த்தைகளாலும்
தாமதித்த வெளிப்பாடுகளாலும்
நிறைந்திருக்கிறது
உள்ளாறாது நீளும் வாழ்க்கை"
கனிமொழியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.. இது அனைவருக்குமான சோகம் போலும்..
//கடந்தகாலத்தில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவனுக்கு
வாய்ப்பதில்லை
நிகழ்காலமும் நீயும்.//
ம்ம்ம்... கடந்தகாலங்களை உதறித்தள்ளிவிட்டு வாழத் தெரிந்தவர்கள் பேறு பெற்றவர்களாயிருக்க வேண்டும்..
மனம் கனத்துப் போகிறது.., நன்றி டிசே!
என்ன டி.சே. பின்னூட்டமிட்ட பெயர்கள் இரண்டிரண்டாகத் தெரிகின்றன. எனது கண்களில்தான் கோளாறா... எதற்கும் பாருங்கள்.
2/05/2007 12:02:00 PMநன்றி நண்பர்களே.
2/05/2007 01:56:00 PM.....
நதி, blogger betaற்கு மாறியதால் பழைய பின்னூட்டங்களில் பெயர்கள் சரியாகத் தெரியாததால், கோபியின் code ஜ பாவித்தேன். எனது வார்ப்புருவில் இருக்கும் ஏதோ பிழை காரணமாய் இரண்டு இரண்டாய் பெயர்கள் தெரிகிறது போலும் :-(.
Post a Comment