கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நிகழ்வு: ஏலாதி இலக்கியவிருது

Sunday, August 17, 2008

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா)
கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது


-தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்

2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84 கவிதை நூல்கள் இப்போட்டிக்கு வரப் பெற்றன.இரண்டுஅடுக்கு தேர்வின் அடிப்படையில் தமிழச்சி தங்கபாண்டியனின் வனப்பேச்சி கவிதை நூல்,மற்றும் புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஈழத்து இளம் படைப்பாளியான இளங்கோவின் நாடற்றவனின் குறிப்புகள் கவிதை நூல் ஏலாதி இலக்கியவிருதுக்காய் தேர்வு செய்யப்பட்டன.

ஆகஸ்ட்15 தக்கலையில் நடைபெற்ற ஏலாதி இலக்கிய விருது விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை தாங்கினார். அறிமுக உரையை கவிஞர் நட.சிவகுமார் நிகழ்த்தினார்.

குமரிமாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்கவிஞர்களாக தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்ட கவிதைப் பயிலரங்கத்தை பணித்திரு.பி.எஸ்.அருள் தொடங்கி வைத்தார். ஏலாதி இலக்கிய விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு தன்னுடைய கவிதைப் பகிர்வை வெளிப்படுத்தினார்.

'கோட்பாடுகளுக்குள் கவிதையை தேடாமல்.வாழ்க்கை அனுபவங்களுக்குள் கவிதையை கண்டுபிடிக்கவேண்டும் என்றார்.உதிரத்தின் நிணத்துடனும்,வியர்வையின் கசகசப்புடனும், உழுத மண்ணின் பிரசிவிப்பு மூச்சுடனும், நான் பிறந்த கிராமத்தின் சகதியுடனும், வெக்கையுடனும் என் எழுத்து ஞாபகங்களாக விரிகிறது என்றார். அலாவுதீனின் பூதத்தை சின்ன குப்பிக்குள் அடைக்கும் மாயவித்தையையாகவும் கவிதை உருமாறும் என்றார்''

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஏலாதி இலக்கிய விருதுக்கான ரூபாய் இரண்டாயிரத்துக்கான நன்கொடையையும் நினைவுப் பரிசினையும் கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் ,ஜி.எஸ்.தயாளன் ஆகியோர் வழங்கினர்.

குமாரசெல்வா,ஆர்.பிரேம்குமார்,செல்சேவிஸ்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா ஆன்டெனிராஜாசிங்,தர்மசிங் சிவராமன், விஜயகுமார், ஜே.ஆர்.வி.எட்வர்டு, சிறப்புவிருந்தினர் கே.ஏ.குணசேகரன், உள்ளிட்டவர்கள் கவிதை உரையாடலில் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி கைலாசமூர்த்தி குழுவினரின் கிராமிய இசை, நிகழ்ச்சிக்கு அழகூட்டியது.தவில் நாயன கலைஞர்களுக்கு அரங்குக்கு வெளியே விளம்பரம் எதுவுமின்றி கவிஞர் தமிழச்சி நிதி உதவிகள் வழங்கினார்.

விருது பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் விருதுநகர் மல்லாங்கிணறு கிராமத்தை சார்ந்தவர்.சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரான தமிழச்சி இலங்கை புலம்பெயர் தமிழர்களின் படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்த முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளார்.இவரின் முதல் கவிதை தொகுப்பு எஞ்சோட்டுப் பெண். ஏலாதி விருது பெற்ற வனப்பேச்சி கவிதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இதுபோல் ஏலாதிவிருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட ஈழத்துப் படைப்பாளியான 'நாடற்றவனின் குறிப்புகள்' நூலாசிரியர் இளங்கோ யாழ்பாணம் அம்பனையில் பிறந்தவர்.போர் மூர்க்கமாய் எழுந்தபோது உள்நாட்டிலேயே அகதியாக அலைந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர். போர்க்கால அவலங்களும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களும் இவரது 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதை நூலில் மெளன சாட்சியாய் பதிவாகி உள்ளன. இத் தொகுப்பை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கவிஞர் இளங்கோ கனடாவிலிருந்து அனுப்பியிருந்த மின்னஞ்சல் உரை மிகவும் உருக்கமாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் இருந்தது. ஏலாதி இலக்கிய விருது விழாவில் வாசிக்கப்பட்ட அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறோம்

'சிறுவயதிலேயே உயிருக்காய் தப்பியோடி அகதி வாழ்க்கை பழக்கமாயிற்று விட்டது. பதினொரு வயதுக்குப் பிறகு முற்றாக நான் வாழ்ந்த ஊருக்கு போக முடியாத அளவுக்கு போர் மிக உக்கிரமாயிருந்தது.

இன்றைய காலகட்டத்தில் போர் நான் ஈழத்தில் வாழ்ந்த காலகட்டத்தைவிட இன்னும் பலமடங்கு உக்கிரமாய் பல நூர்றுக்கணக்கானவர்களை பலி கொண்டும், இடம் பெயரவும் செய்து கொண்டிருக்கும் போது எனக்காய் விதிக்கப்பட்ட அகதிவாழ்க்கையில் நான் ஒரளவு 'ஆசீர்வதிக்கப்பட்டவன்' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஆகக் குறைந்தது உயிருக்காவது உத்திரவாதமளிக்கும் ஒரு நாட்டிலாவது வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது. எறிகணை வீச்சினதோ, விமானத்தாக்குதலினதோ அச்சமில்லாது விரும்புகின்ற போது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முடிகின்றது.

ஒரு புதியவனுக்கு அவன் யாரென்று அவனது பின்புலங்கள் அறியாது அவனது படைப்பை மட்டுமே முன்னிறுத்தி வழங்கப்படும் ஒரு விருது என்ற வகையில் ஏலாதி இலக்கிய விருதை ஏற்றுக் கொள்கின்றேன்.

...இறுதியில் நான் சிறுவயதில் அகதியாய் அலைந்ததைவிட மிகக் கொடுமையான சூழ்நிலைக்குள் இன்று ஈழத்திலும் உலகெங்கிலும் சிறார்கள் அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அச்சிறார்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்.இன்னும் இவ்விருதுடன் வழங்கும் நன்கொடையை தமிழகத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஏதாவதொன்றுக்கு வழங்குமாறு என் சார்பில் இதைப் பெற்றுக் கொள்ளும் 'அடையாளம்' சாதிக்கிடம் கேட்டுக் கொள்கிறேன்'

ஏலாதி விருது வழங்கும் விழாவை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தக்கலை ஏற்பாடு செய்திருந்தது.


(மின்னஞ்சலில், ஏலாதி இலக்கிய விருதை வழங்கிய நண்பர்கள் நடந்த நிகழ்வைப் பதிவு செய்து அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. முழுமையான ஏற்புரையை இங்கு வாசிக்கலாம்)

32 comments:

Sri Rangan said...

அன்பு டி.ஜே,தங்கள் உணர்வுகளின் எழுத்து வடிவத்துக்குப் பரிசு கிடைப்பதையொட்டி நான் மகிழ்வதற்கில்லை!
ஆனால்,உங்கள் உணர்வுகளினூடாக நமது வாழ்வையொருவர் புரிந்தாரென்றால் நிச்சியம் நான் மகிழ்வேன்!
இதுதாம் உங்கள் எழுத்துக்கான வெற்றி.

நான் அறிந்தவரையில் இன்றைய இந்தக் கவிதை வடிவம் வெறும் சொற்களை அடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் எழுத்துக்களே வாழ்வின் தவிப்பை-விருப்பை-உயிர்த்திருத்தலின் உன்னதத்தை,சகமானுடரோடான சகோதரத்தைப் பேசுகிறது.இதற்குப் பரிசு என்பதைவிட நமது வாழ்வையும்,வடுவையும் புரியும் ஒவ்வொருவரும் நமது வாழ்வைச் செப்பனிடுவதற்கான கரங்களை நம்மோடிணைப்பதே நான் விரும்பும் பரிசு.அதுதாம் உங்கள் எழுத்துக்கான இறுதி வெற்றி.தொடர்ந்து எழுதுங்கோ.


நட்புடன்,
ஸ்ரீரங்கன்

8/17/2008 10:47:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி ஸ்ரீரங்கன்.
...
விருது கிடைத்திருக்கின்றது என்றறிந்தபோது, தொடக்கத்தில் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற தயக்கமிருந்தது. எனினும் நீங்கள் குறிப்பிடுவது போன்று, 'எங்கள் உணர்வுகளை எமது வாழ்க்கையை' புரிந்துகொள்ளும் அல்லது பகிர்ந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்றவகையில் ஏற்றுக் கொண்டிருந்தேன். நன்றி.

8/17/2008 01:30:00 PM
Anonymous said...

who is the man in green shirt, in the 1st photo.. so damn handsome!
-di nora

8/21/2008 01:11:00 AM
Kasi Arumugam said...

வாழ்த்துகள் இளங்கோ.

8/26/2008 09:33:00 PM
தமிழ்நதி said...

உளமார்ந்த வாழ்த்துக்கள் இளங்கோ. கவிஞரை தொலைபேசியில் பிடிக்க முயல்கிறேன்:)

8/26/2008 10:19:00 PM
-/சுடலை மாடன்/- said...

மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன் இளங்கோ!

நன்றி - சொ.சங்கரபாண்டி

8/26/2008 11:21:00 PM
குரங்கு said...

வாழ்த்துகள் இளங்கோ.

இன்னும் பல்வேறு விருதுகளை பெற வாழ்த்துகள்.

8/27/2008 12:26:00 AM
குசும்பன் said...

வாழ்த்துக்கள் இளங்கோ!

8/27/2008 01:33:00 AM
Chandravathanaa said...

மிகவும் சந்தோசமாயிருக்கிறது இளங்கோ. எனது நட்புக்குரியவர் என்பதையும் விட ஈழத்தவர் ஒருவருக்கு ஏலாதி விருது கிடைத்தது என்பதில் எனக்கு நியமாகவே மகிழ்ச்சி.

அதிலும் மண்ணோடு புதைந்து, மனதோடு அழுந்தி.. கிடக்கும் எமது ஈழத்து அவலங்களை உணர்வோடும், உயிர்ப்போடும் எடுத்துச் சென்று எமது சகோதர உறவுகளிடம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதில் நிறைந்த திருப்தி.

மனதார்ந்த வாழ்த்துக்கள்.

நட்புடன்
சந்திரவதனா

8/27/2008 04:55:00 AM
கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்புத் தோழர் இளங்கோ அவர்களுக்கு,

தங்களுக்கு ஏலாதி இலக்கிய விருது வழங்கப்பட்ட செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

தாங்கள் தொடர்ந்துப் பணியாற்ற வாழ்த்துகிறேன்.

நன்றி.

8/27/2008 07:00:00 AM
இராம்/Raam said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இளங்கோ... :)

8/27/2008 07:20:00 AM
கானா பிரபா said...

வாழ்த்துக்கள் DJ, mikka makilchiya irukku

8/27/2008 07:26:00 AM
anujanya said...

விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.

அனுஜன்யா

8/27/2008 07:45:00 AM
Unknown said...

ஏலாதி இலக்கிய விருது ஈழத்தவருக்குக் கிடைத்தது என்பதில் "களத்துமேட்டுக்கு" மிக்க மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்.

8/27/2008 08:00:00 AM
Anonymous said...

வாழ்த்துக்கள் இளங்கோவன் ஐயா.

8/27/2008 08:17:00 AM
Anonymous said...

hearty congratulations.

8/27/2008 08:52:00 AM
Anonymous said...

வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும் உங்கள் வெற்றி.

8/27/2008 08:56:00 AM
Vijayakumar said...

வாழ்த்துக்கள் இளங்கோ

8/27/2008 09:09:00 AM
இளங்கோ-டிசே said...

ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, உங்க‌ளின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என‌து நெகிழ்ச்சியான‌ ந‌ன்றிக‌ள்.
.....
த‌மிழ்ம‌ண‌ம் ம‌ற்றும் வேறு சில‌ இணைய‌த்த‌ள‌ங்க‌ளில் வ‌ந்த‌ வாழ்த்துச் செய்திக‌ளுக்கும் ந‌ன்றிக‌ள்.

8/27/2008 11:45:00 AM
meenamuthu said...

வாழ்த்துகள் இளங்கோ!

மகிழ்ச்சியாக உள்ளது

8/27/2008 12:03:00 PM
U.P.Tharsan said...

வாழ்த்துகள் இளங்கோ.

8/27/2008 07:58:00 PM
விருபா - Viruba said...

வாழ்த்துக்கள்.

8/27/2008 09:46:00 PM
கே.என்.சிவராமன் said...

வாழ்த்துக்கள் நண்பா...

8/27/2008 11:40:00 PM
Kanags said...

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் டிசே.

8/28/2008 04:46:00 AM
ஜோ/Joe said...

மனமார்ந்த வாழ்த்துகள் ..மகிழ்ச்சி ஐயா!

8/28/2008 08:54:00 AM
Anonymous said...

ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே.

8/29/2008 09:47:00 AM
Ken said...

வாழ்த்துகள் நண்பரே

9/02/2008 03:06:00 AM
சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள்

9/02/2008 03:28:00 PM
Anonymous said...

ந‌ன்றி கென் & சின்ன‌க்குட்டி.

9/05/2008 09:18:00 AM
Jeyapalan said...

வாழ்த்துக்கள்.

12/04/2008 03:49:00 PM
Anonymous said...

ந‌ன்றி செயபால்.

12/05/2008 03:36:00 PM
Anonymous said...

ந‌ன்றி செயபால்.

12/05/2008 03:36:00 PM