கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கடந்தகாலம் பற்றிய குற்றவுணர்வு

Wednesday, May 18, 2011

-பெர்ன்ஹார்ட் ஸீலிங்கின் 'The Guilt about the Past' ஐ முன்வைத்து-
(ஈழ‌ம்: 2009ன் நிக‌ழ்வுக‌ளுக்கு...)
1.
'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு' (The Guilt about the Past) என்கின்ற‌ இந்நூல் ஆறு ப‌குதிக‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டு எழுத‌ப்ப‌ட்டிருக்கின்ற‌து. ச‌ட்ட‌ப் பேராசிரிய‌ரான‌ பெர்ன்ஹார்ட் ஸீலீங் (Bernhard Schlink), ஒக்ஸ்போர்ட் க‌ல்லூரியில் பேசிய‌வ‌ற்றின் தொகுப்பே இக்க‌ட்டுரைக‌ளாகும். இத்தொகுப்பிலிருக்கும் 'கூட்டுக் குற்ற‌வுண‌ர்வு', 'க‌ட‌ந்த‌கால‌த்தை ச‌ட்ட‌த்தினூடாக‌ தேர்ச்சிபெறுத‌ல்', 'ம‌ன்னிப்பும் மீளிண‌க்க‌மும்' ம‌ற்றும் 'க‌ட‌ந்த‌ கால‌த்தைப் ப‌ற்றிய‌ க‌தைக‌ள்' ஆகிய‌வற்றைக் கீழே ச‌ற்று ஊன்றிப் பார்போம். பெர்ன்ஹார்ட் 'தி ரீட‌ர்' (The Reader) என்கின்ற‌ பிர‌பல‌மான‌ நாவலை எழுதியவ‌ருமாவ‌ர். 'தி ரீட‌ர்' நாவ‌லும் நாஸிப்ப‌டையில் ப‌ணியாற்றிய‌ ஒரு பெண்ணின் 'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌த்தை' முத‌ன்மைப்ப‌டுத்துவ‌தை நினைவுப‌டுத்திக்கொள்ள‌லாம். ப‌தின்ம‌த்திலிருக்கும் ஒருவ‌னுக்கு ம‌த்திய‌வ‌ய‌திலிருக்கும் இப்பெண்ணோடு காத‌ல் முகிழ்வ‌தையும், பிற்கால‌த்தில் தான் காத‌லித்த‌ இப்பெண்ணே, யூத‌ர்க‌ளை அடைத்துவைத்த‌ முகாமிற்குக் காவ‌லாளியாக‌ இருந்த‌தையும் அறிந்துகொள்கின்றான். வ‌தைமுகாமில் அடைத்துவைக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ள் தீ விப‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்ட‌த‌ற்கு இப்பெண்ணும் ஒரு முக்கிய‌ காரணியென‌ குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டும்போது இந்த‌ இளைஞ‌னுக்கு ஏற்ப‌டும் குற்ற‌வுண‌ர்வே இக்க‌தையின் முக்கிய‌ தொனியாக‌ இருக்கிற‌து.

'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு' நூலில் நுழைவ‌த‌ற்கு முன்ன‌ர் நாம் சில‌ விட‌ய‌ங்க‌ளை க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டியிருக்கிற‌து. இதை எழுதிய‌ பெர்ன்ஹார்ட் ஒரு ச‌ட்ட‌ப்பேராசிரிய‌ராக‌ இருந்த‌போதிலும், அவ‌ர் ஜேர்ம‌னியில் நாஸிக‌ளால் யூத‌ர்க‌ளுக்கு நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ இன‌ப்ப‌டுகொலைக்கு ஒரு சாட்சியாக‌ இருந்த‌வருமல்ல‌; பாதிக்க‌ப்ப‌ட்ட‌ யூத‌ர்க‌ளின் த‌லைமுறையைச் சார்ந்த‌வ‌ரும‌ல்ல‌. ஜேர்ம‌னிய‌த் த‌ந்தைக்கும், ஸ்விடிஷ் தாயிற்கும் பிற‌ந்த‌ பெர்ன்ஹார்ட் ஒரு ஜேர்ம‌னிய‌ராவார். மேலும் பெர்ன்ஹார்ட் 1944ல் பிற‌ந்த‌வ‌ர் என்ப‌தால் அவ‌ர் நாஸிக‌ளின் ப‌டுகொலைக்குப் பின்பாக‌த் தோன்றிய‌ ஜேர்ம‌னிய‌ முத‌ல்த‌லைமுறையைப் பிர‌திப‌லிப்ப‌வ‌ராவ‌ர். அறுப‌துக‌ளின் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர் என‌க் கூறிக்கொள்ளும் பெர்ன்ஹார்ட் எப்ப‌டித் த‌ம‌து த‌ந்தைய‌ர்க‌ளும், பேர‌ர்க‌ளும் செய்த‌ அழிவுக‌ளைத் த‌ன‌து த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் எதிர்கொள்கின்றார்க‌ள் என்ப‌தை ஒரு முக்கிய‌ பேசுபொருளாக‌ இந்நூலில் எடுத்துக் கொள்கின்றார். தானும் த‌ன்னைச் சார்ந்த‌ த‌லைமுறையும் ச‌ந்தித்த‌ அவ‌மான‌ங்க‌ளையும், எதிர்கொண்ட‌ கேள்விக‌ளையும், த‌டுமாற்ற‌ங்க‌ளையும் போல‌ அன்றி, வேறுவித‌மாக‌வே இந்த‌ அழிவுக‌ளை த‌ம‌க்குப் பின் வ‌ரும் ஜேர்ம‌னிய‌த் த‌லைமுறை எதிர்கொள்ளும் என‌வும் குறிப்பிடுகிறார்.

இந்நூலின் முத‌லாம் அத்தியாய‌த்தில், க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர்க‌ளுக்குரிய‌தா அல்ல‌து கூட்டு ம‌ன‌ங்க‌ளுக்குரிய‌தா என்கின்ற‌ கேள்விக‌ளை பெர்ன்ஹார்ட் முன்வைக்கின்றார். அதாவது ஒரு இனத்தில் குறிப்பிட்ட சிலர் குற்றங்களை இழைத்தமைக்காய், முழு இனமுமே அதற்கான குற்றவுணர்வைக் கொண்டிருக்க வேண்டுமா என்பதை வாசிப்பவர்களிடம் முன்வைக்கிறார். அத‌ற்கு முன், ஆதிகால‌த்திலிருந்து எப்ப‌டி ஒரு குற்ற‌த்திற்குத் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் முறை மாறிக்கொண்டிருக்கிற‌து என்ப‌தைக் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார். ஒரு கால‌த்தில் ஒரு இன‌க்குழும‌த்தைச் சேர்ந்த‌ ஒருவ‌ர் குற்ற‌ஞ்செய்தால் அவ‌ர் சார்ந்திருக்கும் முழு இன‌க்குழும‌முமே அத‌ற்கான‌ த‌ண்ட‌னையை ஏற்றுக்கொள்ளும் ந‌டைமுறை இருந்த‌தைக் குறிப்பிடுகின்றார். பின்ன‌ர் த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கும் முறை, குற்ற‌த்தைச் செய்த‌வ‌ரை ம‌ற்ற‌ இன‌க்குழும‌த்திற்கு கையளிக்கின்ற வழக்கம் இருந்த‌தைச் சுட்டிக்காட்டுகின்றார். அவ்வாறு கைய‌ளிக்க‌ப்ப‌டும் குற்ற‌ம் செய்த‌ ந‌ப‌ரை விரும்பினால் கொல்ல‌வோ அல்ல‌து த‌ங்க‌ளுக்கு அடிமையாக‌ வைத்திருக்க‌வோ ம‌ற்ற‌ இன‌க்குழும‌த்திற்கு உரிமை இருந்த‌தைக் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார். ந‌ம‌து கால‌த்தில் குற்ற‌ங்க‌ளுக்கு விசார‌ணை செய்வ‌தையும்,த‌ண்ட‌னை வ‌ழ‌ங்குவ‌தையும் அர‌சும், காவ‌ல்துறையும் எடுத்துக்கொண்ட‌ன‌ என்கிறார் பெர்ன்ஹார்ட்.

ட‌ர்பாரிலோ,கொசோவாவிலோ ந‌ட‌க்கும் ப‌டுகொலைக‌ளைப் ப‌ற்றித் த‌ன்னால் விரிவாக‌க் க‌தைக்க‌முடியாது. ஆனால் தான் வாழும் ஜேர்ம‌னியில் நிக‌ழ்ந்த‌ இன‌ப்ப‌டுகொலை ப‌ற்றி ஒரு ஜேர்ம‌னிய‌னாக‌த் த‌ன்னால் பேச‌முடியும் என்கிறார். தீர்ப்பு வ‌ழ‌ங்கும் முறைக‌ள் எவ்வாறு கால‌த்திற்குக்கால‌ம் மாறிக்கொண்டிருக்கின்ற‌ன‌ என்ப‌தையும், அத‌ற்கு உதார‌ண‌மாக‌ 1945ற்குப் பின்பான‌ ஜேர்ம‌னியும், 1989ற்குப் பின்பான‌ இணைந்த‌ (கிழ‌க்கு/மேற்கு)ஜேர்ம‌னியும் நாஸிப்படையிலிருந்து குற்றஞ்செய்தவர்களுக்கு வ‌ழ‌ங்கிய‌ தண்டனைகளையும் எடுத்துக் காட்டுகின்றார். பெர்லின் சுவ‌ர் உடைக்க‌ப்ப‌ட்டு இணைந்த‌ ஜேர்ம‌னியின் பின், ச‌ட்ட‌த்தில் ப‌ல‌ திருத்த‌ங்க‌ள் ஏற்ப‌ட்ட‌ன‌ என‌வும், எந்த‌ ஜேர்ம‌னியின் (கிழ‌க்கின‌தாஅல்ல‌து மேற்கின‌தா) ச‌ட்ட‌ங்க‌ளைப் பின்ப‌ற்றுவ‌தென்ற‌ சிக்க‌ல்க‌ள் எழுந்த‌தையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இத‌ன் நீட்சியிலே, நாஸியில் இருந்த‌ ஒருவ‌ர் அக்காலத்தில் குற்ற‌ம் புரிந்தார் என்ப‌து நிரூபிக்கப்பட்டால் த‌ண்டிக்க‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌ம் என‌ வ‌லியுறுத்தும் பெர்ன்ஹார்ட், ஆனால் ஒருவ‌ர் நாஸிப்ப‌டையில் இருந்திருக்கிறார் என்ற‌ ஒரேயொரு கார‌ண‌த்தை ம‌ட்டும் வைத்து த‌ண்டிக்க‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மா என்ற‌ கேள்வியை எழுப்புகின்றார். நாஸிக‌ள் யூத‌ர்க‌ளைக் கொன்ற‌போது, ஜேர்ம‌னிய‌ராக‌(அல்ல‌து நாஸிப்ப‌டையில் இருந்த‌) ஒருவ‌ர் அதை எதிர்க்காததை நாம் த‌வ‌றென்று சுட்டிக்காட்ட‌லாம். ஆனால் அத‌ற்காக‌ அவ‌ரைக் குற்ற‌வாளியாக்க‌ முடியுமா என்கிறார் பெர்ன்ஹார்ட். அதாவ‌து ஒருவ‌ர் குற்ற‌ம் செய்யும்போது அவ‌ருக்கு த‌ண்ட‌னை கிடைக்க‌ நாம் போராடியிருக்க‌வேண்டும். ஆனால் அதேச‌ம‌ய‌ம் அவ்வாறு குற்ற‌ஞ்செய்த‌வ‌ர் த‌ண்ட‌னை பெற‌ நாம் போராடியிருக்காவிட்டால், நாம் அந்த‌க் குற்ற‌த்தைச் செய்த‌வ‌ருக்கு நிக‌ரான‌ த‌ண்ட‌னையைப் பெற‌வேண்டுமா என‌க் கேட்கிறார் பெர்ன்ஹார்ட்.

2.
இந்நூலை வாசிக்கும்போது, பெர்ன்ஹர்ட் நாஸிக‌ளின் அட்டூழிய‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌, முத‌லாம் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர் என்ப‌தை நாம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும். என‌வே அவ‌ர‌து இள‌மைக்கால்ம் யூத‌ப்ப‌டுகொலைக‌ளைச் செய்த‌ நாஸிக‌ள் நீதிம‌ன்ற‌த்தின் முன் நிறுத்த‌ப்ப‌ட்டு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுக்கொண்டிருக்கின்ற‌ கால‌மாக‌வே இருந்திருக்கிற‌து. பெர்ன்ஹாட் போன்ற‌வ‌ர்க‌ள் மீது அன்பான‌ த‌ந்தைய‌ர்க‌ளாக‌வும், பேர‌ர்க‌ளாக‌வும் இருந்த‌ ப‌ல‌ர் மிக‌ மிலேச்ச‌ன‌த்த‌ன‌மாய் யூத‌ர்க‌ளைக் கொன்ற‌ கொலையாளிக‌ள் என்ப‌தை அறிகின்ற‌போது 'ந‌ம‌து த‌ந்தைய‌ரை கொல்வ‌து எப்ப‌டி'? என்கின்ற‌ கேள்விக‌ள் இய‌ல்பாய் பெர்ன்ஹார்ட்டின் த‌லைமுறைக்கு எழுந்திருக்கும் என்ப‌தும் புரிந்துகொள்ள‌க்கூடிய‌தே. என‌வே இந்த‌க் குற்ற‌வுண‌ர்விலிருந்தும், யூத‌ர்க‌ளைக் கொன்ற‌ வ‌ர‌லாற்றுப் பெரும்ப‌ழியிலிருந்தும் பெர்ன்ஹார்ட்டின் த‌லைமுறை வெளிவ‌ர‌வேண்டியுமிருந்த‌து என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும். மேலும் இந்நூலிலிருக்கும் க‌ட்டுரைக‌ள் மிக‌வும் பொதுவான‌ த‌ள‌த்திலும், பெர்ன்ஹார்ட்டின் த‌னிப்ப‌ட்ட‌ அனுப‌வ‌ங்களிலிருந்தும் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தையும் நாம் நினைவில் இருந்த‌வேண்டும்.

இர‌ண்டாவ‌து ப‌குதி 'க‌ண்டித்த‌லும் ம‌ன்னித்த‌லும்' ம‌ற்றும் 'ம‌ற‌த்த‌லும் மீளிண‌க்க‌ம் செய்வ‌தும்' ப‌ற்றிப் பேசுகிற‌து. இத‌ற்கு த‌ன் வாழ்விலிருந்து பெர்ன்ஹார்ட் ஒரு சொந்த‌ அனுப‌வ‌த்தைத் த‌ருகின்றார். தான் சிறுவனாக‌ இருக்கும்போது அன்றன்றைய‌ நாளில் செய்த‌ ந‌ல்ல‌வைக‌ளுக்கு ந‌ன்றி சொல்லியும், பிழைக‌ளுக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌வும்ப‌டியும் க‌ட‌வுளிட‌ம் பிரார்த்திக்கும்ப‌டி கிறிஸ்துவில் ந‌ம்பிக்கை வைத்திருந்த அம்மாவால் தான் வ‌ள‌ர்க்க‌ப்ப‌ட்டேன் என்கிறார் பெர்ன்ஹார்ட்.  ஒரு‌முறை தான் த‌ன் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்குத் த‌வறிழைத்து விட்டேன், அத‌னால் ம‌ன்னிக்கும்ப‌டி க‌ட‌வுளிட‌ம் பிரார்த்தித்தேன் என‌த் த‌ன் தாயிட‌ம் கூறிய‌போது, க‌ட‌வுளிட‌ம் அல்ல‌, நீ த‌வ‌றிழைத்த‌ ச‌கோத‌ர‌ர்க‌ளிட‌மே நேரில் ம‌ன்னிப்புக் கேட்க‌வேண்டுமென‌ அம்மாவினால் அறிவுறுத்த‌ப்ப‌ட்டேன் என்கிறார் பெர்ன்ஹார்ட். ஆக‌ க‌ட‌வுளிட‌ம் முழு ந‌ம்பிக்கையுள்ள‌ அம்மா கூட‌ முத‌லில் த‌வறிழைத்த‌ ம‌னித‌ர்க‌ளிட‌ந்தான் ம‌ன்னிப்புக் கேட்க‌ச் சொல்கிறார் என்கிறார்.  அப்ப‌டி எனில் நம‌க்கேன் ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கும் க‌ட‌வுள் வேண்டியிருக்கிற‌தென‌ கேள்வி எழுப்பும் பெர்ன்ஹார்ட் அத‌ற்கும் ஒரு ப‌திலையும் த‌ருகின்றார். குற்ற‌முள்ள நெஞ்சோடு ஒருவ‌ர் வாழ்வ‌தென்ப‌து மிக‌வும் க‌டின‌ம், நாம் த‌வ‌றிழைத்த‌ ம‌னித‌ர்க‌ள் உயிருட‌ன் இருக்கும்போது அவ‌ர்க‌ளிட‌மே நாம் ந‌ம‌து ம‌ன்னிப்புக்க‌ளை நேரடியாகக் கோர‌லாம். ஆனால் இன்று உயிரோடு இல்லாத‌ ம‌னித‌ர்க‌ளுக்கு நாம் இழைத்த‌ த‌வ‌றுக‌ளின் நிமித்த‌ம் பெருகும் குற்ற‌வுண‌ர்வுகளை எப்ப‌டிக் க‌ரைக்க‌ முடியும்? ஆக‌வேதான் ந‌ம‌க்கு ம‌ன்னிப்பு அளிக்கும் ஒரு க‌ட‌வுள் வேண்டியிருக்கிறார் என்கிறார். ஆனால் இப்ப‌டித் தான் கூறுவ‌தை நாத்திகவாதிக‌ள் ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள் என்ப‌தையும் அவ‌ர் குறிப்பிடுகிறார் .

பெர்ன்ஹார்ட், ச‌ட்ட‌த்தை ஒரு க‌ருவியாக்கி நினைவூட்ட‌லையும், ம‌ற‌த்த‌லையும் எளிதாக்க‌ முடியுமா என‌ த‌ன் மூன்று க‌ருத்தாங்க‌ங்க‌ளை த‌ன‌து க‌ட்டுரையொன்றில் முன்வைக்கிறார். முத‌லாவ‌து க‌ருத்தாக‌, 'நினைவூட்ட‌ல், மீட்சிக்கான‌ இர‌க‌சிய‌ம்' (Remembering is the secret of redemption) என்கிறார். யூத‌ம‌க்க‌ள் தொட‌ர்ந்தும் த‌ங்க‌ளுக்குள்ளும், தொட‌ர்ந்து வ‌ரும் த‌ம் த‌லைமுறைக‌ளுக்கும் நாஸிக‌ளின் ப‌டுகொலைக‌ளை எப்போதும் நினைவுப‌டுத்திக்கொண்டிருக்கின்றார்க‌ள் எனும் பெர்ன்ஹார்ட், இத‌ன் மூல‌ம் தங்க‌ள் மீது எதிர்கால‌த்தில் எப்போதாவ‌து நிக‌ழ்த்த‌ப்ப‌டும் அட‌க்குமுறைக‌ளை எதிர்க்க‌ த‌ங்க‌ளை த‌யார்ப்ப‌டுத்தி விழிப்புநிலையில் வைத்திருக்கின்ற‌ன‌ர் என்கின்றார். இந்த‌ க‌ருத்தாக்கமான‌து பெர்ன்ஹார்ட் முன்வைக்கும் மூன்றாவ‌து க‌ருத்தாக்க‌மான‌ 'க‌ட‌ந்த‌கால‌த்தில் ந‌ட‌ந்த‌ (அநீதியான‌) நிக‌ழ்வுக‌ள் எதிர்கால‌த்தில் நிக‌ழாது த‌டுக்க‌, நினைவூட்ட‌ல் என்ப‌து மிக‌ அத்தியாவ‌சிய‌மான‌து' என்ப‌த‌ற்கு மேலும் வ‌லுச்சேர்ப்ப‌தாக‌வும் இருக்கிற‌து.

இர‌ண்டாவ‌து க‌ருத்தாக்க‌மாய் 'ஒருவ‌ரின் குடும்ப‌த்திலும் ச‌மூக‌த்திலும் அவ‌ரின் த‌னித்துவ‌ அடையாள‌ம், ந‌ம்பிக்கை, உறுதிப்பாடு என்ப‌வ‌ற்றை உறுதிப்ப‌டுத்துவ‌து' என்ப‌து நினைவூட்ட‌லும், (ந‌ட‌ந்த‌த‌ற்கான‌)குற்ற‌வுண‌ர்வும். க‌வ‌லையுண‌ர்வும் கொள்வ‌தற்கான‌ முன்நிப‌ந்த‌னைக‌ளாகும் என்கிறார். இத‌ற்கு பெர்ன்ஹார்ட் நாஸிக‌ள் செய்த‌ ப‌டுகொலைக‌ளுக்குப் பின்பான‌ ஜேர்ம‌னியை எடுத்துக்கொள்கின்றார். நாம் உண்மையில் யூத‌ர்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌வைக‌ளிற்கு குற்ற‌வுண‌ர்வும்,க‌வ‌லையும் கொள்கின்றோம் என்றால் ஒவ்வொரு யூத‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ள‌து த‌னி அடையாள‌ம், அவ‌ர்க‌ளை நாம்  வெறுக்கமாட்டோம் என்கின்ற‌ ந‌ம்பிக்கை, இனி இவ்வாறு நிக‌ழாதெனும் உறுதிப்பாடு ஆகிய‌வ‌ற்றை அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்குவ‌தே இத‌ற்கான‌ முன் நிப‌ந்த‌னைக‌ளாகும் என்கின்றார். இந்த‌ இட‌த்திலேயே பெர்ன்ஹார்ட், குற்ற‌ம் நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌ நாஸிக‌ளுக்குத் த‌ண்ட‌னை வ‌ழங்கப்ப‌ட‌வேண்டுமென்ப‌தை வ‌லியுறுத்துகிறார். அதேபோன்று ப‌ழைய‌ (ஹிட‌ல‌ரின்)அர‌ச‌ அமைப்பில் ப‌ங்க‌ளித்த‌வ‌ர்க‌ள் குற்றங்களைச் செய்யாவிட்டால் கூட, புதிய‌ ஜேர்ம‌னிய‌ அர‌சின் ச‌ட்ட‌ங்க‌ளுக்கு ஒத்தியங்காவிட்டால், அவ‌ர்க‌ளும் கூட்டுக் குற்றவுணர்விற்கு(collective guilt) பொறுப்பேற்க வேண்டும் என்கிறார். எனெனில் இவ‌ர்க‌ள் இன்ன‌மும் புதிய‌ சன‌நாய‌க‌ நெறிக‌ளுக்கு இசையாவிட்டால் இவ‌ர்க‌ளிட‌ம் இன்ன‌மும் ப‌ழைய‌ சிந்த‌னைப்போக்கே (யூத‌ வெறுப்பே) இருக்கிற‌து என்ப‌தைப் பெர்ன்ஹார்ட் சுட்டிக்காட்டுகிறார்.

3.
'ம‌ன்னித்த‌லும் மீளிண‌க்க‌மும்' அத்தியாய‌த்தில், மீளிண‌க்க‌த்திற்கான‌ முக்கிய‌ நிப‌ந்த‌னையாக‌ அனைத்து உண்மைக‌ளும் ஒடுக்கிய‌வ‌ர்க‌ளின் த‌ர‌ப்பில் இருந்து பேச‌ப்ப‌ட‌வேண்டும் என்கிறார். தாமும் த‌ம‌து ச‌ந்த‌தியின‌ரும் செய்த‌ ஒடுக்குமுறைக‌ள்/ப‌டுகொலைக‌ளை ப‌ர‌ந்த‌ம‌ன‌தோடு ஒத்துக்கொண்டு பாதிக்க‌ப்ப‌ட்ட‌ த‌ர‌ப்போடு திற‌ந்த‌ உரையாட‌ல்க‌ளை செய்ய‌வேண்டும் என‌ பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகின்றார்.. அதேபோன்று இந்த‌ மீளிண‌க்க‌த்தின்போது, பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் ஒடுக்கிய‌வ‌ரை ம‌ன்னித்துவிட்டால் கூட‌, அத்த‌ர‌ப்பு ந‌ட‌ந்த‌ ஒடுக்குமுறைக‌ளை முற்றாக‌ விள‌ங்கி, அவ‌ற்றை ம‌ற‌ந்துதான் ம‌ன்னிக்க‌வேண்டும் என்கின்ற‌ எந்த‌ அவ‌சிய‌மும் இல்லை என‌கிறார். மேலும் மீளிண‌க்க‌ச் சூழ‌ல் என்ப‌து, பாதிக்க‌ப்ப‌ட்ட‌ த‌ர‌ப்பும் த‌ன்னைப் போன்ற‌ ச‌மமான‌ ம‌னித‌ர்க‌ளே என்கின்ற‌ புரிந்துண‌ர்வோடும், அவ‌ர்க‌ள் அவ்வாறு வாழ‌ உறுதிசெய்துகொண்டுமே நிக‌ழ்த்த‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தையும் பெர்ன்ஹார்ட் வ‌லியுறுத்துகிறார். மீளிண‌க்க‌ம் என்ப‌து நோப‌ல் ப‌ரிசுக‌ளை இர‌ண்டுத‌ர‌ப்புக்க‌ளின் முக்கிய‌த‌ஸ்த‌ர்க‌ளுக்கும் கொடுத்துவிட்ட‌வுட‌னேயே எளிதாக‌ நிக‌ழ்ந்துவிட‌க்கூடிய‌ ஒரு விட‌ய‌ம‌‌ல்ல‌ என்ப‌தைக் குறிப்பிடுகிறார். ஜேர்ம‌னிய‌ர்க‌ள் யூத‌ர்க‌ளுக்கு நிக‌ழ்த்திய‌ ப‌டுகொலைக‌ளுக்கு பின் மீளிண‌க்க‌ம் ஒர‌ள‌வு வெற்றிய‌டைந்திருந்தாலும் அது முழுமையான‌தில்லை எனும் பெர்ன்ஹார்ட், இன்ன‌மும் ஜேர்ம‌னி க‌ட‌ந்த‌கால‌த்தில் பிரான்ஸ், போல‌ந்து உள்ளிட்ட‌ நாடுக‌ளோடு மீளிண‌க்க‌ம் செய்ய‌த் த‌யாராக‌வில்லை என்ப‌தையும் சுட்டிக்காட்டுகிறார்.

தென்னாபிரிக்காவில் அமைக்க‌ப்ப‌ட்ட‌ 'உண்மை ம‌ற்றும் மீளிண‌க்க‌க் குழு' ந‌ல்ல‌விட‌ய‌மே என்றாலும் நினைத்த‌ அள‌வுக்கு அது முன்னேற்ற‌த்தைக் காண‌வில்லை என்ப‌தையும் க‌வ‌னப்ப‌டுத்துகின்றார். இத‌ற்கான‌ முக்கிய‌ கார‌ண‌மாக‌ ஒடுக்குமுறைக‌ளைச் செய்த‌ த‌ர‌ப்பு ம‌ன‌ந்திற‌ந்து த‌ன‌து ஒடுக்குமுறைக‌ளையும், குற்ற‌ங்க‌ளையும் பொதுவெளியில் பேச‌ முன்வ‌ராமையைக் குறிப்பிடுகின்றார். எனினும் இன்றைய‌ சூழ‌லில் ஒர‌ள‌வு முன்னேற்ற‌முடைய‌ செய‌ற்பாடாக‌ 'ம‌ன்னித்த‌லும் மீளிண‌க்க‌ம் செய்த‌லுமே' இருக்கின்ற‌து என்ப‌தையும் பெர்ன்ஹார்ட் ஒப்புக்கொள்கின்றார்.

இந்நூலின் இறுதி அத்தியாய‌த்திற்கு, 'க‌டந்த‌கால‌த்தைப் ப‌ற்றிய‌ க‌தைக‌ள்'(Stories about the Past ) என‌ த‌லைப்பிட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. நாம் க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌வ‌ற்றை புனைவுக‌ளாக்கும்போது அது க‌ட‌ந்த‌ கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ப்ப‌ட்ட‌ அழிவுக‌ளின் வீரிய‌த்தை இல்லாம‌ற் செய்துவிடுமா? என்ற‌ கேள்வியை பெர்ன்ஹார்டு இங்கே எழுப்புகின்றார். மேலும் யூத‌ர்க‌ள் மீது ந‌ட‌ந்த‌ ப‌டுகொலைக‌ளை புனைவாக்கும்போது அங்கே ந‌கைச்சுவை, அழ‌கிய‌ல் போன்ற‌வ‌ற்றை புகுத்துவ‌தும் ச‌ரியா என‌வும் கேட்கிறார். இத‌ற்கு மாற்றாய் ந‌ம‌க்கு இருக்கும் சிற‌ந்தொரு வ‌ழி, ந‌ட‌ந்த‌வ‌ற்றை இய‌ன்ற‌ள‌வு வீரிய‌ம் குறையாது ஆவ‌ண‌ப்ப‌ட‌மாக்க‌லே எனும் பெர்ன்ஹார்ட், க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌வ‌ற்றை சில‌ ப‌குதிக‌ளாய்க்கொண்டு க‌தைக‌ளாக‌வோ, திரைப்ப‌ட‌ங்க‌ளாக‌வோ ஆக்குவ‌தும் த‌வ‌றில்லை என‌க் குறிப்பிடுகிறார். 'ஆஷ்சுவிட்ஷ் ப‌டுகொலைகளின் பின் க‌விதை என்ப‌தே இல்லை' (After Auschwitz , there is no poetry) என‌ தியோட‌ர் கூறிய‌தை பெர்ன்ஹார்ட் நினைவூட்டுகிறார் . திரைப்ப‌ட‌ங்க‌ளிலோ, க‌தைக‌ளிலோ யூத‌ப்ப‌டுகொலைக‌ளின் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை சித்த‌ரிப்ப‌தில் த‌வ‌றில்லை எனும் பெர்ன்ஹார்ட் ஆனால் க‌தாபாத்திர‌ங்க‌ள் அன்றைய‌ கால‌த்தின் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ளைக் க‌ட்டாய‌ம் பிர‌திப‌லிக்க‌ வேண்டும் என்கிறார். எவ்வாறு ஒரு எஸ்.எஸ்.காவ‌லாளி பொதுவாக‌ அன்றைய‌ நாஸி வ‌தைமுகாமில் இருந்திருப்பாரோ அவ்வாறே அவ‌ரின் பாத்திர‌ம் ப‌டைக்க‌வேண்டும் என்ப‌தை வ‌லியுறுத்துகிறார். அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் ஒரு ஜேர்ம‌னிய‌ர் யூத‌ருக்கு உத‌வுகின்றார் என்றால் அது ஒரு விதிவில‌க்கான‌ நிக‌ழ்வாக‌ ம‌ட்டுமே சித்த‌ரிக்க‌ப்ப‌டுத‌ல் அவ‌சிய‌மென்கிறார்.

எனினும் ஒரு க‌தையோ திரைப்ப‌ட‌மோ எப்போதும் ஒருசாராரின் உண‌ர்வுக‌ளை காய‌ப்ப‌டுத்த‌க்கூடும் என்ப‌தையும், மேலும் அத‌னால் அப்ப‌டைப்புக்கான‌ எதிர்ப்பும் எழுமென்ப‌தையும் பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகிறார். இத‌ற்கான ஒரு உதார‌ண‌மாய் , ஜேர்ம‌னிய‌ப் ப‌ட‌மான‌ 'ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் வாழ்க்கை' (The Lives of Others)  எடுத்துக்கொள்கிறார். கிழ‌க்கு ஜேர்ம‌னியில், ஒரு நாட‌க‌க்குழு அர‌சுக்கு எதிராக‌ நாட‌க‌ம் போடுவ‌தை உள‌வ‌றிய‌ அர‌சின் உள‌வுத்துறையான‌ ஸ்ரேசியால் ஒருவ‌ர் இந்நாட‌க‌க் குழுவை க‌ண்காணிக்க‌ வேலைக்கு அம‌ர்த்த‌ப்ப‌டுகின்றார். அந்நாட‌க‌க்குழு அர‌சுக்கு எதிராக‌ இய‌ங்குவ‌து தெரிந்தும் அந்த‌ உள‌வுத்துறை ந‌ப‌ர், அவ‌ர்க‌ளை அர‌சுக்குக் காட்டிக் கொடுக்காது இறுதியில் த‌ப்ப‌விட‌ச் செய்கிறார் என்ப‌தை இப்ப‌ட‌த்தைப் பார்த்த‌ ந‌ம் அனைவ‌ருக்கும் தெரியும். இப்ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌போது ஸ்ரேசியினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் த‌ம‌து எதிர்ப்பைக் தீவிர‌மாக‌க் காட்டிய‌தாக‌ பெர்ன்ஹார்ட் குறிப்பிடுகின்றார். ஸ்ரேசியின் உண்மையான‌ அட‌க்குமுறைக‌ளை இது அதிக‌ம் அழ‌கிய‌ல்ப‌டுத்தி அத‌ன் வீரிய‌த்தைக் குறைக்கிற‌து என்ப‌து அவ‌ர்க‌ளின் வாத‌மாய் இருந்த‌தாக‌க் குறிப்பிடும் பெர்ன்ஹார்ட், அதேச‌ம‌ய‌ம் இப்ப‌ட‌ம் உல‌க‌ம் முழுதும் மிக‌வும் வ‌ர‌வேற்பைப் பெற்ற‌தையும்,ஜேர்ம‌னியின் ஒருப‌குதியின‌ர் ஆத‌ரித்த‌தையும் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்றார். என‌வே இவ்வாறான‌ முர‌ண்க‌ளுட‌னேயே க‌ட‌ந்த‌கால‌த்தைப் ப‌ற்றிப் பேசும் ப‌டைப்புக்க‌ள் வெளிவ‌ரும் என‌க்கூறும் பெர்ன்ஹ‌ர்ட், நாம் இவ்வாறான‌ சித்த‌ரிப்புக்க‌ளை விதிவில‌க்காக‌ விள‌ங்கிக்கொள்ளும் போதிய‌ அறிவைப் பெற்றிருக்க‌வேண்டும் என்கிறார்.

'The Lives of others' திரைப்ப‌ட‌த்தை பெர்ன்ஹார்ட் விவ‌ரிக்கும்போதுதான், நாங்க‌ள் 'ஏதிலிக‌ளினூடாக‌' திரையிட்ட 'The Boy in the Striped Pyjamas' திரையிட்ட‌பின் நிக‌ழ்ந்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நினைவுக்கு வ‌ந்த‌து. இக்க‌தையில் வ‌தைமுகாமில் இருக்கும் யூத‌ச் சிறுவ‌னோடு நாஸிப்படையில் உய‌ர்பொறுப்பிலிருக்கும் அதிகாரியொருவரின் ம‌க‌னுக்கு ந‌ட்பு முகிழ்கின்ற‌து. இறுதியில் ஒரு த‌வ‌றால் அந்த‌ அதிகாரியின் ம்க‌னும், யூத‌ச் சிறுவ‌னோடு சேர்ந்து விஷவாயு செலுத்த‌ப்ப‌டும் அறைக்குள் அக‌ப்ப‌ட்டு இற‌ப்ப‌தாய்ப் ப‌ட‌ம் முடியும். இத்திரையிட‌லின் க‌ல‌ந்துரையாட‌லில், இப்ப‌ட‌த்தின் முடிவு 'ஒரு நாஸிச்சிறுவ‌னும் சேர்ந்து இற‌ப்ப‌தாலேயே ந‌ம‌க்கு அதிக‌ம் துக்க‌ம் வ‌ருகின்ற‌மாதிரியான‌ எண்ண‌த்தை விளைவிக்கின்ற‌து' என்றொரு புள்ளியைச் சுட்டிக்காட்டியிருந்தேன். எத்த‌னையோ ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான் யூத‌ச்சிறுவ‌ர்க‌ள் அநியாய‌மாய்க் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை, இங்கே பாருங்க‌ள் நாசிச் சிறுவ‌ன் ஒருவனும் செத்திருக்கின்றான் என‌ச் சித்த‌ரிப்ப‌த‌ன் மூல‌ம், 'க‌ட‌ந்த‌ககால‌த்தில் நிக‌ழ்ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வீரிய‌மிழ‌க்க‌ச் செய்யும் ஒரு செய‌ல்' என்கின்ற‌ விம‌ர்ச‌ன‌த்தை நாம் இப்ப‌ட‌த்தின் மீதும் முன்வைக்க‌லாம். ஆக‌வே இவ்வாறான‌ திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்கும்போதோ, புனைவுக‌ளையோ வாசிக்கும்போதோ நாம் இவ்வாறான‌ நிக‌ழ்வுக‌ள் மிக‌ மிக‌ச் சொற்ப‌மான‌ விதிவில‌க்கான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் என்ப‌தைக் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌த்தான் வேண்டியிருக்கிற‌து.

பெர்ன்ஹார்ட்டின் 'க‌ட‌ந்த‌கால‌ம் ப‌ற்றிய‌ குற்ற‌வுண‌ர்வு' மிக‌ முக்கிய‌மான‌ ஒரு நூலென‌ நாம் எடுத்து அதை எழுத்தெண்ணி ஊன்றி வாசிக்க‌த்தேவையில்லை. மேலும் இந்நூல் ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரின் ச‌ந்த‌தியைச் சார்ந்த‌வ‌ரால் அல்ல‌, ஒடுக்கிய இனத்தின் த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ரால் எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்ப‌தையும் நாம் க‌வ‌ன‌த்திற்கொள்ள‌ வேண்டும். எனினும் க‌ட‌ந்த‌கால‌த்தில் நிக‌ழ்ந்த‌ கொடூர‌ங்க‌ளைத் தாண்டி ஒடுக்கிய‌/ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌ங்க‌ளைச் சேர்ந்த‌ அடுத்த‌ த‌லைமுறையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் நிக‌ழ்கால‌த்தில் நிம்ம‌தியாக‌ வாழ்வ‌த‌ற்கான‌ சில‌ முக்கிய‌ புள்ளிக‌ளை இந்நூல் க‌வ‌ன‌ப்ப‌டுத்துகின்ற‌து என்ப‌தைக் கூற‌த்தான் வேண்டும். முக்கிய‌மாய் ஆயுத‌ப்போராட்ட‌ம் முடிந்தும், ஒரு குழ‌ப்பமான‌ சூழ்நிலை க‌விழ்ந்திருக்கும் இல‌ங்கையில் இன்று ப‌கைம‌ற‌ப்பையும் மீளிண‌க்க‌த்தையும் முன்வைக்கும் எல்லாத் த‌ர‌ப்பின‌ரும் இந்நூலை அவ‌சிய‌ம் வாசிக்க‌வேண்டும். குறிப்பாய் 'ம‌ன்னித்த‌லும் மீளிண‌க்க‌மும்' என்ற‌ அத்தியாய‌த்தில் ஒடுக்கிய‌த‌ர‌ப்பு, ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ த‌ர‌ப்பை த‌ன்னைப் போன்ற‌ ச‌க‌ம‌னித‌ராய் ம‌திக்கவும், அமைதிச் சூழ்நிலைக‌ளை உருவாக்க‌வும் பாடுப‌ட்டால்தான்... அத‌ன்பின்ன‌ரே மீளிண‌க்க‌ம் சாத்திய‌ம் என்கின்ற‌ பெர்ன்ஹாட்டின் க‌ருத்துக்க‌ளை ஊன்றிப் ப‌டிக்க‌வேண்டும். மேலும் மீளிண‌க்க‌ம் என்ப‌த‌ற்கு க‌டுமையான‌ உழைப்பும், இவ்வாறு மீளிண‌க்க‌ம் தொட‌ங்கிய‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் அவை நினைத்த‌வ‌ள‌வில் சாத்திய‌மாக‌வில்லை என்கின்ற‌ பெர்ன்ஹார்ட்டின் அவ‌தான‌ங்க‌ளையும் நினைவில் இருத்த‌ வேண்டும். இல்லாதுவிட்டால் போர் முடிந்த‌ உட‌னேயே 'ப‌கைமற‌ப்பு', 'மீளிண‌க்க‌ம்' என்று உரையாடுவ‌து இன்னொரு 'ஆட‌றுக்க‌ முன் ச‌ட்டி வைத்த‌ க‌தையாக‌' எவ‌ருக்கும் உப‌யோக‌மின்றி புஸ்வாண‌மாக‌ப் போய்விடுமென்ப‌தையும் மெல்லிய‌ குர‌லில் கூற‌ வேண்டியிருக்கிற‌து.

மேலதிகமாய் உதவியவை:
(1) 'Guilty as charged' by Thomas Hurka (The Globe and Mail)
(2) 'Look Back in horror' by Joanna Bourke (The Sunday Times)

ந‌ன்றி: 'கால‌ம்'- 2011

ப‌ற‌ந்துபோன‌ இரும‌ர‌ங்க‌ளும் ப‌ச்சைய‌ம் இழ‌ந்த‌ காடுக‌ளும் - 03

Friday, May 13, 2011

டிசே த‌மிழ‌ன் - க‌லீஸ்தினோ

-ப‌குதி 03

III.
இவ்வளவு காலமும் என்னைப் புறக்கணித்துவிட்டு இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒரு மெயிலை இவன் அனுப்பியிருந்தான். எல்லாவற்றையும் மறந்து அல்லது கடந்தகாலத்தை நினைவூட்டாது இருவரும் மீண்டும் டேட்டிங் செய்யத் தொடங்கியிருந்தோம். ஒரு நாள் இர‌வு நாங்கள் 'கெல்சி'யிற்கு சாப்பிடப் போயிருந்தோம். இவன் கழிவறைக்குப் போயிருந்த‌ நேர‌ம் இவனது கைத்தொலைபேசியை சும்மா தோண்டியபோது துஷா@.... என்ற பெயரில் தொலைபேசி எண் ஒன்று பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன். அட இது எனது தோழிக்கு பழக்கமான துஷாவல்லவா என்று இழையொன்றின் நுனியைப் பிடித்து, பிறகு துஷாவிற்கும் இவ‌னிற்கும் க‌ட‌ந்த‌கால‌த்தில் இருந்த‌ உற‌வின் முழுப் பரிமாணத்தையும் அறிந்துகொண்டேன்.

நான் மிகுந்த சிக்கலுக்குள் -இவன் திரும்பி வந்த காலகட்டத்தில்- இருந்தேன். அந்தக் காலகட்டத்தைப் போல நான் மனவுளைச்சலுக்கு உள்ளான ஒருபொழுது என்றுமே இருந்த‌தில்லை. எனது நிலைப்பாட்டை... எனது சுயத்தை.... எனது பெற்றோருக்காவது விளங்கப்படுத்த முடியுமென அவர்களோடு போராடிக்கொண்டிருந்தேன். அவர்கள் என் மீதான எல்லா கயிறுகளையும் இறுக்கத்தொடங்கியிருந்த‌ன‌ர். தற்கொலை செய்யலாமோ என்று கூட பலமுறை அந்த நேரங்களில் நினைத்துக்கொண்டதுண்டு. இவ்வளவு காலமும் என் வாழ்வின் ஒரு பகுதியாயிருந்த பெற்றோரைச் சட்டென வெட்டிவிட்டும் போக முடியவில்லை. என்னிடம் எதுவும் கேட்காமலே எனக்கான திருமண விடயத்தை அவ‌ர்க‌ள் தீவிரமாகத்தொடங்கினர்.

இந்த விடயத்திலிருந்து உடனடியாகத் தப்பவேண்டும், இல்லாவிட்டால் காலமுழுக்க கண்ணீரோடு கழிக்கவேண்டியிருக்கும் என்ற யோசனையிலிருந்தபோதே இவன் மீளவும் எமது உறவை தூசி தட்டி புதுப்பிக்க விருப்பி எனக்கொரு மெயிலை அனுப்பியிருந்தான். இப்போதைக்கு தெரியாத பேயிற்குக் கழுத்தை நீட்டுவதை விட தெரிந்த பிசாசுக்கு சம்மதம் தெரிவிப்பது நல்லதென நினைத்து. இவனைத் திருமணம் செய்வதற்குச் தெரிவித்து இருந்தேன்.

4
இவளுடைய நச்சரிப்பதுத் தாங்க முடியாமல் தான், இப்போது ஐயப்பன் கோயிலில் எண்ணெய் சாத்துவதற்காய் கால்கடுக்க நிற்கவேண்டியிருக்கிறது. குளிர்த்திச் சோற்றுக்காய் நிற்கும் மற்ற கியூவில் போய் நிற்க எனக்கு விருப்பமிருந்தாலும், 'கோயிலுக்குப் போவது கும்பிடத்தான்' என்பதில் உறுதியாய் நிற்பவளின் விழிகள், நான் மற்றக் கியூவில் போய் நின்றால் சிவந்துவிடும் ஆபத்துமிருக்கிறது. ஐயப்பன் ஒரு பிரமச்சாரி என்றும் பெண்கள் எல்லாம் ஐயப்பன் கோயிலுக்குள் போகக்கூடாது என்றும் அல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்படி நீங்கள் பெண்களை விடுகிறது நியாயமா என்று இந்த அறங்காவல் சபையிடம் யாராவது கேள்வி கேட்டு பெண்கள் கோயிலுக்கு வருவதைத் தடை செய்தால், நான் நிம்மதியாய் எனக்குப் பிடித்த குளிர்த்திச் சோற்றைச் சாப்பிட்டுவிட்டு என்பாட்டில் போய்விடலாம். சா...என்ன உலகமிது. புலம்பெயரப் பெயர த‌மிழ்ப்பெண்க‌ள் ம‌ட்டுமில்லை, சாத்திர சம்பிரதாயங்களும் மாறிவிடுகின்றன.

ம்...இப்போது நினைத்தாலும் கொஞ்சம் வியப்பாய்தானிருக்கிறது; இடையில் நான் பல திருகுதாளங்களைச் செய்தபின்னும் எந்தக் கேள்வியும் கேட்காது என்னை அதேமாதிரி இவள் ஏற்றுக்கொண்டிருக்கின்றாள். எவ்வளவுதான் நாங்கள் விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதில் சிலையாக நிற்கும் சாமிகளைவிட உறுதியாகத்தான் இவளைப் போன்ற பெண்கள் நிற்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இவ‌ளைப் போன்ற‌ பெண்களை நடமாடுந் தெய்வங்கள் என்று அழைப்பதில் எவ்விதத் தப்பும் இல்லைத்தான். இப்போது சுடிதாரில் வந்திருக்கிற இவளுக்கு, நான் அணிந்து வரக்கட்டாயப்படுத்திய தாலி இன்னும் அழகைக் கொடுக்கிறது. ஆனால் வளாக காலத்தில் எங்கள் இருவருக்குமிடையில் இருந்த அந்நியோன்னியம், எல்லாவற்றையும் பகிரும் ஆவல் எல்லாம் எங்கையோ இந்தத் திருமணத்தின்பின் வடிந்துபோனதுபோலத்தான் தோன்றுகின்றது. ஏன் இரவுகளில் கூட அவ்வளவு உற்சாகமில்லை; ஒவ்வொருமுறையும் ஏதோவொரு சாட்டுச்சொல்லி கவனத்தைத் திசை திருப்பிக்கொண்டிருப்பது ஏனென்றும் விளங்கவில்லை.

IV.
இவனோடான திருமணத்தின்பின் நான் யாரென்பது மிகத் தெளிவாக எனக்கு விளங்கியது. என்னைச் சிலவேளைகளில் இவன் ஒரு விளையாட்டுப் பொருளாய்ப் பாவித்தது குறித்த கோபமிருந்தாலும் என் மீது இவன் இப்போது வைத்திருக்கும் அன்பில் எவ்விதச் சந்தேகமுமில்லை. எனது நிலையை எப்படி இவனுக்கு எடுத்துச் சொல்வது என்பதும் எனக்கு விளங்கவில்லை. ஆனால் இப்படியே இருக்கமுடியாது. எனக்குரியதற்ற இந்தவெளியில் நான் எல்லாவற்றையும் மூர்க்கமாய் நிராகரித்துக்கொண்டும் கோபித்துக்கொண்டும் இருப்பது எனக்குப் விளங்கத்தான் செய்கின்றது. எனக்கான முடிவை விரைவில் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்.

V
(ஏழு மாதங்களுக்குப் பின்...)
கலீஸ்தினோ, தயவு செய்து இதற்கு மேல் என்னை எதுவும் வற்புறுத்தாதே. நான் சொல்லும் உண்மையை ஏற்றுக்கொள்ள இந்தச் சமூகமோ அல்லது இதை வாசிக்கப்போகின்றவர்களோ இன்னும் தயாரில்லை. ஆனால் உண்மை எப்போதும் எல்லோரையும் திருப்திப்படுத்துவதாகவும் இருப்பதில்லை. அது ஒரு அழியாச்சுடர் போலத் தன்விருப்பில் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது. சிலவேளை இன்றைய சூரிய நாட்களில் சுடரின் ஒளி மறைக்கப்பட்டாலும், மின்மினிகள் உலகிறகு அவசியமான நாட்களில் சுடரின் மகிமையை இந்த உலகம் விளங்கிக்கொள்ள முயலுமென நினைக்கின்றேன். அதுவரை காலம் காத்திருக்கலாம்; ஆனால் எனது வாழ்நாட்களுக்கு அவ்வாறான பொறுமை இருக்கப்போவதில்லை.

இப்போது எனக்கான தெரிவுகளை நானே எடுத்துக்கொள்ளும் வலிய ஒருவளாக மாறிவிட்டேன். எனெனில் என் தெரிவுகளில் மட்டுமே நான் நானாக இருக்கமுடியும். பிறருக்காய் எனது வாழ்வை நான் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.இவ்வாறு நான் கூறுவது சிலருக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கக்கூடும்; ஆனால் இதுவே நான். இங்கே எனக்கு முன் எத்தனையோ பேர் என்னைப் போல எங்கள் சமூகத்தில் வாழ விரும்பியிருக்கலாம். ஏன் சிலவேளை வாழ்ந்துமிருக்கலாம்.

பிரிய கலீஸ்தினோ நீ என் மீது வைத்திருகும் அக்கறையால்தான் இவ்வளவற்றையும் உனக்குப் பொறுமையுடன் கூறுகின்றேன். எல்லா உண்மைகளும் இச்சமூகத்திற்குத் தெரியவரும்போது என்னை மிதித்துப்போடவே இச்சமூகம் விரும்பும் என்பதை நீயறியாததல்ல. ஆனாலும் அவசரப்பட்டு, நான் கூறிய எதையும் உட‌னே பதிவு செய்துவிடாதே. நாங்கள் ஏற்கனவே திட்டமிருந்தபடி வன்கூவரின் ஒதுக்குப்புறமான நகருக்குப் போய் எங்கள் அடையாளங்களைக் களைந்து வாழத்தொடங்கும் பொழுதுகளில் வேண்டுமானால் மட்டும் பொதுவில் எழுது.

உன்னிடமிருக்கும் நம்பிக்கையைப் போல எனக்கு டீஜேவிடம் இல்லை. அவன் எங்களை விட மூன்று வயது சிறியவனாக இருக்கலாம். ஆனால் இந்த வயதிலும் பல விடயங்களின் சீரியஸ்தன்மையை விளங்காது விளையாட்டுப் பிள்ளை போலவே இருக்கின்றான். நாங்கள் படித்த மானிடவியலின் முக்கிய கூறுகள் பற்றி கொஞ்சம் அவனுக்கு விளங்கப்படுத்து. முக்கியமாய் விளிம்புநிலை மனிதர்கள் குறித்து மிகுந்த தெளிவற்றவனாகவே அவன் இருப்பது போலத்தோன்றுகின்றது.

நீ என்னிடம் இப்போது கதை கேட்டுக்கொண்டிருப்பதைப்போல எனது முன்னால் துணையான அவனிடம், டீஜே சிலவிடயங்களை கேட்டறிந்துகொள்வதை -நீ சொல்லி- நானறிவேன். எனது கதை, எனது முன்னாள் துணையின் குரலில்லாது முழுமை பெறாது என்பதை நீங்கள் இருவரும் கூறியதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் என்றோ ஒருநாள் நீங்கள் இருவரும் சேர்ந்து எழுதப்போகும் எனது கதையை 'ஆண்களுக்கான மொழியில்' மட்டும் பதிந்து எனது குரலை ஒடுக்கிவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது.

அதுபோலவே எங்களின் உண்மையான வலிகளும், நெருக்கடிகளும், அகச்சிக்கல்களும் சித்தரிக்கப்படாது எங்களின் கதை ஒருவகையான கேலியுடன் எழுதப்படவும் வாசிக்கப்படவும் கூடும் என்றே நம்புகின்றேன். ஆனால் இவற்றையெல்லாம் விட என் கதை பகிரப்படவேண்டுமென ம‌ன‌ம் அவாவி நிற்கிறேன். எல்லா அவமதிப்புக்களுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் அப்பால் நான் எனது தெரிவுகளுடன் வாழவிரும்புகின்றேன் என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும். எனெனில் எங்கள் சமூகத்தில் என்னைப் போன்ற பலர் தமக்கு விருப்பமான துணைகளுடன் வாழ்வதற்கு இவ்வாறான அகச்சிக்கல்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

என்றேனும் ஒருநாள் நீயோ டீஜேயோ, அவனை மீண்டும் சந்தித்தால், சூழலின் கைதியினால் மட்டுமே நான் அவனைத் திருமணஞ்செய்துகொள்ளும் முடிவை எடுக்கவேண்டியதாயிற்று எனச் சொல். அதற்காக நான் உண்மையில் இன்று மிக மனம் வருந்துகின்றேன் என்பதையும் அவனுக்கான எதிர்கால வாழ்வுக்காய் என் பிரார்த்தனைகள் என்றும் இருக்கும் என்பதையும் அவனுக்கு என் சார்பில் தெரியப்படுத்துங்கள்.

குறிப்பு-1: (கலீஸ்தினோவுடையது) என் தோழியின் கதையைக் கேட்டு எழுதியபின் இதைப் பிரசுரிக்கமுன்னர் அவரைத் தொலைபேசியில் தொட‌ர்புகொள்ள‌ முய‌ன்ற‌போது, இல‌க்க‌ம் பாவ‌னையில் இல்லை என‌க்கூறிய‌து. இக்க‌தையை அவ‌ர் கூறத்தொடங்கியபோதே தான் இன்னும் சில மாதங்களில் எவரது தொடர்புமில்லாது தனது பெண் துணையுடன் வேறொரு நகரின் புறநகருக்குப் போய்விடுவேன கூறியிருந்தார். இப்போது முழுதாக எங்கள் எவரின் தொடர்பு எதுவுமின்றி இருக்கவே விரும்புகின்றார் எனது தோழியென நினைக்கின்றேன். அவர் கூறிய கதையை விரிவாகப் பதிவு செய்ய முடியாமைக்கு நமது வாசிப்புச் சூழல் குறித்த பதற்றமும், எனக்குள்ளேயிருக்கும் தன்சார்பு சார்ந்த தணிக்கையும் காரணமெனக் கூற விரும்புகின்றேன்.

குறிப்பு-2: (டிசேயினுடையது) நான் அவனின் கதையைக் கேட்டதால் அவனைப் பற்றியே கூறமுடியும். அவனுக்கு எல்லா உண்மைகளையும் அறிந்தபோது திகைப்பாக இருந்தது. இப்படி அரைகுறையான நிலையில் இருவரும் இருப்பதைவிட அவள் அப்படிப் போனது சரியான முடிவே என்றான். பிறகு இடைப்பட்ட வருடங்களில் இலங்கைக்கு போய் ஒரு பெண்ணை மணம் முடித்து வ‌ந்திருக்கின்றான். சிலவேளைகளில் நீங்க‌ள் க‌ன‌டாவில் கோயில் எங்கையும் போகும்போது சேலையும் தாலியும் கட்டிய தன் துணையை இரசிக்கின்றவர்களின் ஒருவனாய் அவனை நீங்கள் பார்க்கலாம். ஒருமுறை, நான் துஷாவின் தொலைபேசி எண்ணை எனக்குத் தந்து உதவமுடியுமா எனக் கேட்டதன் பிறகு, தன்னை இனிச் சந்திக்கவோ தொலைபேசியில் அழைக்கவோ வேண்டாமென கடுமையான கோபத்தில் கூறிவிட்டான். அந்த நாள் 2007 கார்த்திகை 09.

குறிப்புக்களாய் எழுதியது 2006, திருத்தி ஒழுங்கமைத்தது 2008 இலையுதிர்க்காலம்)
நன்றி: கூர் 2011

பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும் - 02

Wednesday, May 11, 2011

-பகுதி 02 -

2.
அவ‌ளோடான‌ ஒன்ற‌ரை வ‌ருட‌த்திற்கு மேலான‌ நேச‌த்தில் ம‌ன‌மொடிந்துபோகிற‌ மாதிரி பெரிதாய் எதுவும் எங்க‌ளுக்கிடையில் நிக‌ழாத‌போதும், ஏதோ ஒரு இடைவெளி எங்க‌ளுக்குள் வந்த‌ மாதிரித் தோன்றிய‌து. இந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில்தான் துஷாவின‌து ந‌ட்புக் கிடைத்த‌து. நான் ச‌ப்வேயில்தான் வ‌ளாக‌த்துக்குப் போய்க்கொண்டிருந்தேன். துஷாவைச் ச‌ந்தித்த‌து சென்.கிளேய‌ர் ஸ்ரேச‌னில்தான். இருவ‌ரும் வ‌குப்புக்க‌ளுக்குப் போகும் நேர‌ம் ஒன்றாக‌ இருந்த‌த‌னால் அடிக்க‌டி காலைவேளைக‌ளில் அவ‌ளை நான் காண்ப‌து உண்டு. ஆர‌ம‌ப‌த்தில் புன்ன‌கையில் தொட‌ங்கிய‌ ச‌ந்திப்பு பிற‌கு ரெயினுக்குள் க‌தைத்துக்கொண்டு போகும்வ‌ரை நீண்ட‌து. இருவ‌ரும் ஒரே வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருந்த‌தால் பேசுவ‌த‌ற்கு நிறைய‌ விட‌ய‌ங்க‌ள் இருந்த‌ன‌.

அப்போதுதான் எங்க‌ள் வ‌ளாக‌த்திலும் த‌மிழ‌ர் சிங்க‌ள‌வ‌ர் என்ற‌ பிண‌க்குப்பாடு வ‌ந்து த‌மிழ‌ருக்கென‌ ஒரு மாண‌வ‌ர் அமைப்பும், இல‌ங்கைய‌ருக்கென‌ இன்னொரு மாண‌வ‌ர் அமைப்பும் உருவாகி -இங்கேயும் ஈழ‌த்தைப் போல‌- அர‌சிய‌ல் சூடு பிடிக்க‌த்தொட‌ங்கியிருந்தது. நான் த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் அங்க‌த்துவ‌னாய் இருந்தாலும் அவ்வ‌ப்போது சிங்க‌ள‌வ‌ர்க‌ளால் ந‌ட‌த்த‌ப்பெற்ற‌ இல‌ங்கைய‌ர் அமைப்புக் கூட்ட‌ங்க‌ளுக்கும் போவ‌துண்டு. ஒன்றுப‌ட்ட 'தேசிய‌' இல‌ங்கையில் என‌க்கு பெரு விருப்புப் போல‌ என்று நீங்க‌ள் த‌வ‌றாக‌ நினைக்க‌க்கூடும். அப்ப‌டியேதுமில்லை, ந‌ல்ல வ‌டிவான‌ சிங்க‌ளப் பெட்டைய‌ள் அங்கே அடிக்க‌டி வ‌ந்து போய்க்கொண்டிருந்த‌துதான் முக்கிய‌ கார‌ண‌ம்.

எங்க‌டை த‌மிழ்ப்பெட்டைய‌ள் கால‌நிலைக்கேற்ப‌வோ, த‌ங்க‌ள் விருப்புக்கேற்ப‌வோ ஆடைக‌ள் அணிவதை 'புராத‌ன‌ த‌மிழ் மூளை' கொண்ட‌ ப‌ல‌ரால் அனும‌திக்க‌ப்ப‌டுவ‌தில்லை. க‌ச்சானையை வாய்க்குள் போட்டுச் ச‌ப்பிக்கொண்டிருப்ப‌து மாதிரி எப்போதும் புற‌ணி சொல்லிக் கொண்டேயிருப்பார்க‌ள். சில‌வேளைக‌ளில் இதையும் மீறி பெண்க‌ள் ந‌ட‌ந்துகொண்டால், அந்த‌ப் பெண் குறித்து இல்லாத‌தும் பொல்லாத‌துமாய் மின்ன‌ஞ்ச‌ல்க‌ளை அனுப்பி குறிப்பிட்ட‌ பெண்க‌ளுக்கு ம‌ன‌வுளைச்ச‌ல்க‌ளைக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். இவ்வாறான‌ பிர‌ச்சினைக‌ள் எதுவும் இல‌ங்கைய‌ரின் அமைப்பில் பெரிதாக‌ ந‌டைபெறுவ‌தில்லை. அதுவும் அவ‌ர்க‌ள் கிறிஸ்ம‌ஸ் நேர‌ங்க‌ளில் செய்யும் பார்டிக‌ளும் பிற‌கு ந‌டைபெறும் க‌ளியாட்ட‌ங்க‌ளும்...இதெல்லாம் த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் க‌ன‌வில் கூட‌ நினைத்துப் பார்க்க‌ முடியாது.

த‌மிழ் நிக‌ழ்வுக‌ளுக்கு வ‌ருகின்ற‌ முக்கால்வாசி ச‌ன‌ம், தாங்க‌ளும் அக்கொண்டாட்ட‌த்தின் ஒரு ப‌குதியாக‌ மாறி க‌ளிப்ப‌டைவ‌தை விட்டு விட்டு 'எந்த‌ப் பெட்டை எந்த‌ப் பெடிய‌னோடு க‌தைத்தாள், எந்த‌ப் பெடிய‌னோடு நெருக்க‌மாக‌ ஆடினாள்' என்று க‌ண்காணிப்ப‌திலேயே பெரும் நேர‌த்தைச் செல‌வ‌ளிப்பார்க‌ள். இது பெடிய‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமான‌ ம‌னோநிலைய‌ல்ல‌, சாதார‌ண‌மாய் வ‌ருகின்ற‌ பெண்க‌ளையும் த‌ங்க‌ளைப் போல‌வே விடுப்பு பார்க்கும் ம‌னோநிலைக்கு மாற்றிய‌ பெருமை இவ்வாறான‌ ஆண்க‌ளுக்கே உண்டு.
துஷாவிற்கு த‌மிழ் அமைப்பில் சேர‌ அவ்வ‌ள‌வாய் விருப்ப‌மிருக்க‌வில்லை. த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் தீவிர‌மாய் விவாதிக்க‌ப்ப‌டும் ஈழ‌ அர‌சிய‌ல் அவ‌ளுக்குப் பிடிப்ப‌தில்லை. அவ‌ள‌து த‌க‌ப்பனிற்கும் மாமாவிற்கும் ஈழ‌த்திலிருந்த‌ ஏதோவொரு இய‌க்க‌ம் பெரிதாய்க் க‌ஷ்ட‌ம் கொடுத்து ம‌யிரிழையில் த‌ப்பிவிட்ட‌தாய் ஒருமுறை சொல்லியிருந்தாள். என‌க்கும் இடிய‌ப்ப‌ச் சிக்க‌லுள்ள‌ ஈழ‌ப்பிர‌ச்சினை அவ்வ‌ள‌வாய் விள‌ங்கிய‌தில்லை. என‌வே நானும் அர‌சிய‌ல் பேசுவ‌திலிருந்து வில‌கியிருந்தேன். மேலும் துஷா போன்ற‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌ழ‌குவ‌த‌ற்கு அர‌சிய‌ல் தெரியாத‌துபோல‌ இருப்ப‌துதான் சால‌வும் சிற‌ந்த‌து. ஆனால் ஈழ‌ அர‌சிய‌ல் பேசுவ‌தை அடியோடு ம‌றுத்த‌ துஷா, ச‌ங்கீத‌ வ‌குப்புக்கும் வீணை வ‌குப்புக்கும் போன‌துதான் என‌க்கு விய‌ப்பாயிருந்த‌து. சில‌வேளை ஈழ‌த்திலிருந்து துர‌த்திய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ மாமாவும் அப்பாவும் த‌மிழ்த்துவ‌த்தில் மீது பிடிப்பிருந்து அவ‌ளுக்கும் இது க‌ட‌த்த‌ப்ப‌ட்டிருக்க‌லாமோ தெரியாது.

அவ‌ள் ஒருமுறை வீணையைத் தாங்கிய‌ப‌டி நீல‌க்க‌ல‌ர் சாறியோடு இருந்து எடுத்த‌ புகைப்ப‌ட‌த்தைக் காட்டிய‌து நினைவிருக்கிற‌து. இடுப்பை மூடியிருந்த‌ சேலையைத்தாண்டி அவ‌ள் தொப்புளில் வ‌ளைய‌மொன்றை அணிந்திருந்த‌தை முத‌ன்முத‌லில் நான் க‌ண்ட‌றிந்த‌தும் அப்போதுதான். பிற‌கு ந‌த்தார் விடுமுறைக்காய் 'இல‌ங்கைய‌ர்க‌ள் அமைப்பு' ஒழுங்குசெய்த‌ கொண்டாட்ட‌ இர‌வின்போது நான் கொஞ்ச‌ம் எஸ்க‌ஸி எடுத்திருந்தேன். அன்றைய‌ இர‌வில்தான் சிங்க‌ள‌த்தோழ‌னின் Condo அறையில்தான் நான் அவ‌ளின் தொப்புளின் வ‌ளைய‌த்தை ஆடையெதுவுமின்றிக் க‌ண்ட‌து. Condom அணிய‌த்த‌யார‌கிய‌போது அது அவ‌சிய‌மில்லை தான் pillsல் இருக்கின்றேன் என்றாள்.


II
அவ‌ன் என்னோடு இப்போது அவ்வ‌ள‌வாய்க் க‌தைப்ப‌தில்லை, நேரில் ச‌ந்திக்க‌ ஆர்வ‌ம் கூட‌க் காட்டுவ‌தில்லை என்ப‌தைப் பார்க்கும்போது அவ‌ன‌து ப‌க்க‌த்தில் வேறு ஏதோ மும்முர‌மாய் ந‌ட‌ந்துகொண்டிருக்கின்ற‌து என்ப‌தை என்னால் உய்த்துண‌ர‌ முடிந்த‌து. 'ஏன் நீ என்னை இப்போது முன்போல் ச‌ந்திப்ப‌தில்லை, போனில் பேசுவ‌தில்லை?' என்று ஒருமுறை கேட்ட‌போது த‌ன‌து அக்காவின் திரும‌ண‌ம் விரைவில் ந‌டைபெற‌ப்போவ‌தாக‌வும், அத‌ற்கான் ஆய‌த்த‌ங்க‌ளில் இருப்ப‌தாக‌வும் கூறினான். ஒரு அக்காவின் திரும‌ண‌த்திற்காய் நாலைந்து மாத‌ங்க‌ளுக்கு மேலாய் இப்ப‌டி பிஸியாக இருப்ப‌வ‌னை இப்போதுதான் என் வாழ்வில் ச‌ந்திக்கின்றேன். ந‌ல்ல‌வேளை அவ‌னுக்கு நாலைந்து அக்காமாரோ த‌ங்க‌ச்சிமாரோ இல்லையென‌ நினைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் நான் ச‌மாதிக்குள் போகும்வ‌ரை அவ‌னைச் ச‌ந்திக்க‌முடியாத‌ப‌டி 'திரும‌ண‌' விட‌ய‌ங்க‌ளில் ஓடிக்கொண்டிருந்திருப்பான்.

தொட‌க்க‌ கால‌த்தில் இப்ப‌டி அவ‌ன் ஆகிய‌து என‌க்கு மிக‌க் க‌ஷ்ட‌மாய்த்தானிருந்த‌து. சின்ன‌ சின்ன‌ செய்கைக‌ளில் த‌ன்னையொரு ந‌ல்ல துணையென அவ‌ன் காட்டிய‌தால் அவ‌னை விட்டு வில‌குவ‌து என‌க்கு ம‌ன‌ உளைச்ச‌லைத் த‌ருவ‌தாய் இருந்த‌து. அப்போது தோழியொருத்திதான் என்னை ஆற்றினாள். அவ‌ளில்லாதிருப்பின் இவ்வ‌ள‌வு விரைவில் இந்த‌ உளைச்ச‌லிருந்து வெளியில் வ‌ந்து, என‌து ப‌ட்ட‌ப்ப‌டிப்பை முடித்திருக்க‌வே முடியாது. அவ‌னை என‌து வாழ்விலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ம‌ற‌க்க‌த் தொட‌ங்கியிருந்தேன்.

பெப்ர‌வ‌ரியில் வ‌ந்த‌ ஒருவார‌ விடுமுறையில் நானும் தோழியும் மெக்ஸிக்கோவிற்குப் போயிருந்தோம். த‌ங்கும் ஹொட்ட‌ல்,சாப்பாடு எல்லாம் சேர்ந்த‌ ப‌க்கேட்ஜ்தான் எடுத்திருந்தோம். நாங்க‌ள் போயிருந்த‌ கால‌ம் அங்கு ம‌ழைக்கால‌ம். அவ்வ‌ப்போது தூறுகின்ற‌ ம‌ழையும், ச‌ட்டென்று வெயில் எறிப்ப‌துமாய் இருந்த‌ கால‌நிலை எங்க‌ளுக்குப் பிடித்த‌மாயிருந்த‌து. அத்தோடு நாங்க‌ள் த‌ங்கியிருந்த‌ ஹ‌ன்கூனில் வேலை செய்துகொண்டிருந்த‌ பெண்க‌ளும் ஆண்க‌ளும் ந‌ன்கு அன்பாய் எங்க‌ளுட‌ன் ப‌ழ‌கியிருந்தார்க‌ள். உல்லாச‌ப்ப‌ய‌ணிக‌ளாய் வ‌ந்திருந்த‌ அனேக‌ர் ஹொட்ட‌லின் சுற்றாட‌லுக்குள் முட‌ங்கியிருக்க‌, நாங்க‌ளோ வெளியிட‌ங்க‌ளுக்குப் ப‌ய‌மின்றித்திரிந்தோம். அவ்வாறு போகும்போது நாங்க‌ள் ம‌ண்ணிற‌க்காரிக‌ள் என்ப‌தால் புற‌ந‌க‌ர்ப்ப‌குதியில் இருந்த‌ ச‌ன‌ங்க‌ளும் எங்க‌ளை வித்தியாச‌மாய்ப் பார்க்க‌வில்லை. தோழி ஏற்க‌ன‌வே உய‌ர்க‌ல்லூரியில் இர‌ண்டு மூன்று ஸ்பானிஸ் வ‌குப்புக்க‌ள் எடுத்திருந்த‌தால், தெரிந்து வைத்திருந்த‌ அடிப்ப‌டை ஸ்பானிஸ்... பாதை தொலைந்துவிடாதிருக்க‌..., உண‌வக‌ங்க‌ளுக்குச் சென்று சாப்பிட‌..., அங்காடிக‌ளில் பொருட்க‌ளை வாங்க‌... என‌ ந‌ன்கு பிர‌யோச‌ன‌ப‌ட்ட‌து.
அந்த‌ விடுமுறையில் நான் நிறைய‌ விட‌ய‌ங்க‌ளை அறிந்துகொண்டேன். அவ‌ற்றில் ப‌ல‌ என‌க்குப்புதிய‌தாக‌வும் பிடித்த‌மான‌தாக‌வும் இருந்த‌ன‌. வகுப்புக்க‌ளில் ப‌க்க‌ங்க‌ளாய்ப் ப‌டித்த‌ ப‌ல‌வ‌ற்றை அனுப‌வ‌ரீதியாக‌ உண‌ர்ந்துகொண்டேன். ஒரு பெண்ணாய் என‌க்கான‌ த‌னித்துவ‌மான‌ முடிவுக‌ளை இனி எதிர்கால‌த்தில் எடுக்க‌முடியும் என்ற‌ துணிச்ச‌லை இந்த‌ நாட்க‌ள் என‌க்கு ஏதோவொரு புள்ளியில் உணர்த்திவிட்டுச் சென்றிருக்கென‌ ந‌ம்புகின்றேன். எவ்வ‌ள‌வு குதூக‌ல‌த்தோடு நான் ஹ‌ன்கூனிலிருந்தேனோ அத‌ற்கு எதிர்ம‌றையான‌ ம‌னோநிலையோடு ரொறொண்டோ பிய‌ர்ச‌ன் விமான‌ நிலைய‌த்தில் வ‌ந்திற‌ங்கினேன். எனினும் இந்த‌ப் ப‌ய‌ண‌ம் இந்த‌ உல‌கை வேறுவித‌மாய்ப் பார்க்க‌, நான் யார் என்ப‌தை ஆழ‌மாய் அறிந்து கொள்ள‌ உத‌வியதிலென‌... ப‌ல்வேறுவித‌த்தில் என்றென்னும் நினைவில் கொள்ள‌க்கூடிய‌தாய் அமைந்துவிட்டிருந்த‌து.


3.
துஷா அன்று என‌து வீட்டுக்கு வ‌ந்த‌போது வான‌ம் க‌ருஞ் சாம்ப‌லாயிருந்த‌து. ப‌னி கொட்ட‌ இன்னும் ஆர‌ம்பிக்க‌வில்லையெனினும் காற்றின் நிமித்த‌ம் குளிர் மிக‌ மோச‌மாய் இருந்த‌து. இனி எல்லா மர‌ங்க‌ளும் இலைக‌ளும் உதிர்ந்து நிர்வாண‌மாய் நிற்க‌ப்போகின்ற‌ன‌. இந்த‌க் கொடுங்குளிரில் நிர்வாண‌மாய் நிற்ப‌து ம‌ர‌ங்க‌ளுக்கு ம‌ட்டுமே சாத்திய‌ம். வ‌ழ‌மையாக‌ வ‌ரும் துஷாவைப் போல‌ அவ‌ள் இன்றிருக்க‌வில்லை; எதையோ ப‌றிகொடுத்தாற்போல‌ அவ‌ள‌து முக‌ம் இருந்த‌து. சில‌வேளை இதுவ‌ரை இணைந்துகொள்ளாத‌ த‌மிழ் மாண‌வ‌ர் அமைப்பில் சேர்ந்துவிட்டாளோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்துவிட்ட‌து. எனெனில் அங்கு போக‌த் தொட‌ங்கிவிட்டால் உங்க‌ளைய‌றியாம‌லே ஒர் இருட்திரை உங்க‌ள் முக‌ங்க‌ளுக்கு முன் தொங்க‌த்தொட‌ங்கிவிடும். சாச்சா...துஷா இப்ப‌டியொரு விஷ‌க்குள‌த்தில் இற‌ங்கியிருக்க‌மாட்டாளென்று என் ம‌ன‌ம் கூறிய‌து. நான் கேற்றிலில் நீரைச் சூடாக்கிக்கொண்டு பாலை அடுப்பில் வைத்து சூடாக்க‌த் தொட‌ங்கினேன். குளிருக்குள் வ‌ந்த‌வ‌ளுக்கு அள‌வான சூட்டுட‌ன் கொடுக்கும் தேநீர் பிடிக்கும் என்ப‌து என‌க்கு ந‌ன்கு தெரியும்.

'இப்ப‌ ரீ தேவையில்லை, உன்னோடு க‌தைக்க‌வேண்டியிருக்கிற‌து.'

'அப்ப‌டியா..! ச‌ரி என்ன‌வென்று சொல்.'

'இல்லை, இனி நாங்க‌ள் இப்ப‌டிச் ச‌ந்திக்கிற‌து எல்லாம் ச‌ரிவ‌ராது போல‌த்தெரிகிற‌து.'

பிறகு, எங்க‌ளின் உரையாட‌ல் கொதித்துக்கொண்டிருந்த‌ பாலை விட‌ அதிக‌ம் சூடாகி, நான் அவ‌ள் முன்பொருமுறை நேச‌முட‌ன் வாங்கித்த‌ந்த‌ புத்த‌ர் சிலையை நில‌த்தில் எறிந்து என‌து கோப‌த்தைக் காட்டும்வ‌ரை போய்முடிந்த‌து. உடைந்து நொறுங்கிய‌ புத்த‌ரின் க‌ண்க‌ள் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க‌, துஷா என்னைவிட்டு என்றென்றைக்குமாய்ப் பிரிந்துபோனாள்.

துஷா என்னைவிட்டுப் போன‌தன்பிற‌கு புதிதாய் எவ‌ரையும் டேட்டிங் செய்யும் எண்ண‌ம் வ‌ர‌வில்லை. க‌ட்ட‌ற்றுத் துள்ளிக்கொண்டிருந்த‌ இள‌மை வ‌டிந்துபோயிற்றுப் போலும். ஏற்க‌ன‌வே மூன்று பாட‌ங்க‌ளில் பெயிலாக‌ இருந்த‌ நான் இம்முறையும் அந்த‌ப் பாட‌ங்க‌ளில் பாஸாக‌விட்டால், ஒரு வ‌ருட‌த்திற்கு வ‌ளாக‌த்தில் probation த‌ந்துவிடுவார்க‌ள். பிற‌கு ப‌டிப்ப‌த‌ற்கான‌ க‌ட‌னுத‌வியையும் த‌ர‌மாட்டார்க‌ள். ப‌டித்துப் ப‌ட்ட‌தாரியான‌வ‌ர்க‌ளே ஒழுங்காய் ஒரு வேலை எடுக்க‌முடியாது சும்மா வீட்டிலிருக்கையில், அரைகுறையில் ப‌டிப்பு நிற்கும் நான் எவ‌ரிட‌மும் வேலை கேட்டும் போக‌முடியாது. என‌வே இம்முறை கொஞ்ச‌ம் க‌வ‌ன‌மெடுத்த்துப் ப‌டித்து, நான்காம் ஆண்டை முடித்தால் ஒரு ப‌ட்ட‌த்தை எடுத்துவிட‌லாம் என்று வ‌குப்புக்க‌ளுக்கு ஒழுங்காய்ப் போக‌த்தொட‌ங்கினேன். என‌து ப‌ட்ட‌ம‌ளிப்பு முடிந்த‌போது இவ‌ள் நான்காண்டாம் ஆண்டில் ப‌டித்துக்கொண்டிருந்தாள். துஷாவோடு சுற்றித்திரிந்த‌தில் இவ‌ளை ம‌ற‌ந்து இடையில் கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ இடைவெளி வ‌ந்துவிட்ட‌து.

ஒருநாள் ப‌ழைய‌ ஞாப‌க‌ங்க‌ள் கிள‌ற‌, என‌து முன்னாள் 'கிளி' கூண்டைவிட்டுப் போயிற்றா அல்ல‌து ஒரு துணைக்காய் மோன‌த்த‌வ‌த்தில் இன்னும் காத்திருக்கிற‌தா என்ப‌த‌தை அறிய‌ ஒரு மெயிலைத் தூதுவிட்டேன். வ‌ந்த‌ நீண்ட‌ ப‌திலில், ஏதோ நிர்ப்ப‌ந்த‌த்தால் அவ‌ள் வீட்டை விட்டு வெளியே வாழ‌த் தீர்மானித்திருந்த‌து போல‌த் தோன்றிய‌து. ஆயிர‌மாண்டுக்குப் பின் வ‌ராது வ‌ந்த‌ மாம‌ணியென‌ அவ‌ளோடு நான் மீண்டும் ச‌ம‌ர‌ச‌மாகிவிட்டேன்.


(இன்னும் வரும்)

நன்றி:கூர் 2011
ஓவியம்: வான்கோ

பறந்து போன இருமரங்களும் பச்சையம் இழந்த காடுகளும்

Tuesday, May 10, 2011

ப‌குதி-01

1.
பொலித்தீன் பையைத் த‌ன்னுட‌ல் முழுதும் சுற்றிக்கொண்டு எரிந்துகொண்டிருக்கும் ந‌ண்ப‌னைப் ப‌ற்றிய‌ க‌ன‌வு அவ‌னைத் திடுக்குற‌ச்செய்து விழிப்ப‌டைய‌ச் செய்த‌து. நேர‌ம் என்ன‌வாயிருக்குமென‌ சிவ‌ப்பு ஒளியில் மிளிர்ந்துகொண்டிருந்த‌ அலார‌மைப் பார்த்த‌போது 3.25 A.M என்றிருந்த‌து. இனி விடியும் வ‌ரைக்கும் நித்திரை வ‌ராது என்ற‌ நினைப்பு அவ‌னுக்கு இன்னும் எரிச்ச‌லைக் கொண‌ர்ந்த‌து . இப்போதுதான் முத‌ற்த‌ட‌வையாக‌ ந‌ண்ப‌ன் எரிந்துகொண்டிருக்கும் க‌ன‌வு வ‌ருகின்ற‌து என்ப‌த‌ல்ல‌; முன்ன‌ரும் ப‌ல‌முறை வ‌ந்திருக்கின்ற‌துதான். ஒவ்வொருமுறையும் அல‌றிக்கொண்டு அத‌ல‌பாதாள‌த்திற்கு விழும் க‌ண‌த்தோடு ஓர் உறைநிலை க‌ன‌வில் வ‌ந்துவிடுகிற‌து. பிற‌கு ம‌ருள‌ ம‌ருள‌ உருளும் விழிக‌ளுட‌ன் நீள்விழிப்பு. சிறுவ‌ய‌தில் இப்ப‌டியான‌ கொடுங்க‌ன‌வுக‌ள் வ‌ரும்போது அருகில் ப‌டுத்திருக்கும் அம்மா அவ‌னுக்கு விபூதியைப் பூசிய‌வுட‌ன் ஏதோ ஒரு பாதுகாப்புண‌ர்வு வ‌ந்துவிடுவ‌துண்டு. புல‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌த‌ன்பின் எவ்வாறுதான் விபூதியைப் பூசினாலும் ந‌ண்ப‌ன் ப‌ற்றியெரியும் க‌ன‌வு வ‌ராம‌ல் நின்றுவிடுவ‌தில்லை; சிக்க‌லாக‌வும் வேத‌னையாக‌வும் ஆகிவிட்ட‌ புல‌ம்பெய‌ர் வாழ்வில் கோமாதாவின் கோமிய‌த்திலும் ஏதோ புதிரின் முடிச்சு விழுந்திருக்க‌வேண்டும். அத‌னால்தான் இங்கு திருநீறு பூசினாலும் துர்க்க‌ன‌வு நுங்கு போல‌ வ‌ழுக்கித் தூர‌ ந‌க‌ர்வ‌தில்லை, முருங்கைம‌ர‌த்துப் பிசின்போல‌த் தொட‌ர்ந்து ஒட்டிய‌ப‌டி வ‌ந்த‌ப‌டி இருக்கிற‌து.

மிடில் ஃபீல்ட் ரோட்டில் இருக்கும் ஐய‌ப்ப‌ன் கோயிலுக்கு ஒருக்காய்ப் போனால் இந்த‌த் துர்க்க‌ன‌வின் கொடுமை க‌லைந்துபோகுமோ தெரியாது. ஆனால் இவ‌ன் ஐய‌ப்ப‌ன் கோவிலுக்கு, அங்கே குளிர்த்திச் சோறு நிறைய‌க் காய்க‌றிக‌ளோடு கொடுக்கும் நேர‌த்திற்கு ம‌ட்டுமே ச‌ரியாக‌ப் போகின்ற‌வ‌ன். த‌ன்னை வழிபடுவ‌த‌ற்காய் அன்றி, கோயிற்சோறு சாப்பிடத்தான் இவ‌ன் இவ்வ‌ளவு சிர‌த்தையாக‌ வ‌ருகின்றான் என்று தெரிந்தால் ஐய‌ப்ப‌னுக்குக் கோப‌ம் வ‌ராதா என்ன‌? அத‌னால் தான் அவ‌ர் இவ‌னுக்கான‌ வ‌ர‌த்தை அருள் பாலிப்ப‌தில்லையோ தெரியவில்லை. அத்தோடு ஐய‌ப்ப‌ன் கோயிலுக்குப் போகும் ஒவ்வொருத‌ட‌வையும், முன்னால் பிஞ்ச் ச‌ந்தியிலிருக்கும் ச‌மோசா க‌டையில் நாலைந்து ச‌மோசாவையை -குளிர்த்திச் சோற்றுக்கு முன்- ஒரு starterயாய் சாப்பிட‌ ம‌ற‌ப்ப‌துமில்லை.

ச‌மோசா சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்குப் போவ‌தில் ஒரு பிழையுமில்லை. ஆனால் அன்றைக்கொரு நாள் சமோசா சாப்பிட்டுவிட்டு குளிர்த்திச் சோற்றுக்காய் காத்திருக்குக்கும்போது ப‌ல்லுக்குள் ஏதோ இழுப‌டுதே என்று நாக்கால் துழாவிப் பார்த்துக்கொண்டிருந்தான். ம‌ர‌க்க‌றி ச‌மோசாவிற்குள், முத‌ல்நாள் வைத்த‌ ப‌ழைய‌ உருளைக்கிழ‌ங்கையோ அல்ல‌து ம‌ரவ‌ள்ளிக்கிழ‌ங்கையோ போட்டிருக்கின்றார்க‌ளோ என்று விர‌லால் இழுத்துப் பார்த்த‌போது, அது இறைச்சித் துணுக்காயிருந்த‌து க‌ண்டு இவ‌னுக்குச் ச‌ற்று அதிர்ச்சியாய்த்தானிருந்த‌து. ச‌மோசா த‌ந்த‌ க‌டைச்ச‌ன‌ம் அவ‌ச‌ர‌த்தில் அசைவ‌ ச‌மோசாவை எடுத்துத் த‌ந்துவிட்டார்க‌ள் போலும். ம‌ச்ச‌த்தைச் சாப்பிட்டுவிட்டு எப்ப‌டி இங்கே கோயிலில் நிற்ப‌தென‌, வ‌ரிசையிலிருந்து வெளியே போக‌ ம‌ன‌ம் அந்த‌ர‌ப்ப‌ட்டாலும், இறைச்சி ப‌டைத்த‌ க‌ண்ண‌ப்ப‌ன் நாய‌னாருக்கே அருள்பாலித்த‌ க‌ட‌வுள் த‌ன்னையொன்றும் செய்ய‌மாட்டாரென்று ஒரு சாட்டை ம‌ன‌துக்குள் நினைத்துக்கொண்டு வ‌ரிசையில் சோற்றுக்காய்க் காத்திருக்க‌த் தொட‌ங்கினான்.

(i)
அவ‌னை அவ‌ர்க‌ள‌து வ‌ளாக‌த்து நிக‌ழ்வில்தான் முத‌ன்முத‌லில் ச‌ந்தித்திருந்தேன். அப்போது அவ‌ன் இர‌ண்டாம் ஆண்டு ப‌டித்துக்கொண்டிருந்தான். முதலாமாண‌டு மாண‌வ‌ர்க‌ளை வ‌ர‌வேற்கும் நிக‌ழ்வு ஒன்றில் அவ‌ன் நிக‌ழ்ச்சிக‌ளை ஒருங்கிணைப்ப‌வ‌னாக‌ இருந்தான். நான் வேறொரு வ‌ளாக‌த்தில் ப‌டித்துக்கொண்டிருந்தாலும், எங்க‌ளுக்கும் அழைப்பு வ‌ந்த‌தால் நானும் என்னுடைய‌ தோழிக‌ள் சில‌ருமாய் Frosh Week நிக‌ழ்வுக்குப் போயிருந்தோம். ச‌ற்று ந‌கைச்சுவை க‌ல‌ந்து, அவ‌ன் நிக‌ழ்வுக‌ளை தொகுத்து வ‌ழ‌ங்கிய‌து வ‌ந்திருந்த‌வ‌ர்க‌ளையும் கொஞ்ச‌ம் க‌ல‌க‌ல‌க்க‌ச் செய்திருந்த‌து. பிற‌கு இர‌வு விருந்திற்கான‌ உண‌வை எடுப்ப‌த‌ற்காய் நாங்க‌ள் அருக‌ருகில் வ‌ரிசையில் நிற்க‌வேண்டி வ‌ந்த‌போது, 'ந‌ல்லாய் MC செய்தீர்க‌ள்' என‌ ஆங்கில‌த்தில் சொன்னேன். 'நான் கோப‌ம் வ‌ரும்போது ஆங்கில‌த்தில் கெட்ட‌ வார்த்தைக‌ளைப் பேசுவேன‌, ம‌ற்ற‌ப‌டி த‌மிழ்தான் உரையாட‌லுக்கான மொழி' என்று என்னைக் கொஞ்ச‌ம் வெட்டிப் பேசிய‌போது முத‌லில் என‌க்கு அவ‌னை அவ்வ‌ளவாய்ப் பிடிக்க‌வில்லை.

இந்த‌த் திமிர் பிடித்த‌வ‌னைவிட‌, இர‌சிப்ப‌த‌ற்கு நிறைய‌ப் பெடிய‌ங்க‌ள் அங்கு இருந்த‌தால் அவ‌ன் குறித்து நான் பிற‌கு பெரிதாக‌ அக்க‌றைப்ப‌டவில்லை. ஆனால் அன்று நான் அணிந்து போயிருந்த‌ சேலைதான் என‌க்குச் ச‌ரியாக‌க் க‌ஷ்ட‌த்தைத் த‌ந்துகொண்டிருந்த‌து. You see...த‌ந்தூரி சிக்க‌னும் பிரியாணியும் த‌ந்த‌ ருசியில் அள‌வு க‌ண‌க்கில்லாது சாப்பிட்டுவிட்டேன் போலும். சேலையை விட‌ கொஞ்ச‌ம் த‌ள‌ர்வான‌ ஆடை ஏதேனும் அணிந்து வ‌ந்திருந்தால் இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌ப்ப‌ட‌வேண்டியிருந்திருக்காது. அழைப்பித‌ழில் Dress Code முக்கிய‌மென‌.... பெண்க‌ள் 'சேலையும்' ஆண்க‌ள் 'கோர்ட் சூட்டும்' அணிந்து வ‌ர‌வேண்டுமென‌ எழுதிப் போந்த‌ முட்டாளை ம‌ன‌துக்குள் திட்டிக்கொண்டிருந்தேன். ரெட் வைனையும் இர‌வுச் சாப்பாடோடு சேர்த்து அருந்திய‌தால் ஒருவித‌ ம‌ந்த‌நிலை என‌க்குள் வ‌ந்திருந்த‌து. விருந்து முடிந்து, ந‌ட‌ன‌ம் ஆடுவ‌த‌ற்கான‌ த‌ள‌த்தில் இசையும் பேரிரைச்ச‌லோடு எழ‌த்தொட‌ங்கிவிட்ட‌து. ஆடு ஆடு என்கின்ற‌ன‌ கால்க‌ளும் குடித்த‌ வைனும், ஆனால் ஆடினால் சிக்க‌லாகிவிடும் என்று வ‌யிற்றுக்குள் போன‌ ம‌ட்ட‌ன் பிரியாணி முணுமுணுப்ப‌து போல‌த் தோன்றிய‌து. கூட‌வே வ‌ந்திருந்த‌ தோழிக‌ளும் ஆட‌த்தொட‌ங்கிவிட்ட‌ன‌ர், வ‌ந்து த‌ங்க‌ளோடு ஆடென்று ஒவ்வொரு பாட‌லும் முடிகிற‌ ம‌ற்றும் தொட‌ங்குகின்ற‌ நேர‌ங்க‌ளில் வ‌ந்து, க‌திரையில் இருந்த‌ என் கைக‌ளை இழுத்து அர‌ங்க‌த்துக் கூட்டிச் செல்ல‌ மிக‌வும் பிர‌யாசைப்ப‌ட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

இனித்தான் க‌வ‌ன‌மாயிருக்க‌வேண்டும். ஒளி ம‌ங்க‌லாக‌ மாற‌த் தொட‌ங்க‌த் தொட‌ங்க‌, ந‌ல்லாய்த் 'த‌ண்ணி'யை மோண்டு குடித்துவிட்டு நிற்கின்ற‌ எந்த‌ப் பெடிய‌னும் நாயைப் போல‌ ஆகிவிடும் ஆப‌த்துண்டு. ஓர் அற்புத‌மான‌ கொண்டாட்ட‌ ம‌னோநிலையை எப்ப‌டிக் க‌ண‌நேர‌த்தில் குழ‌ப்பிவிடுவ‌து என்ற‌ வித்தையை எங்க‌ள் த‌மிழ்ப் பெடிய‌ங்க‌ளிட‌ம் தான் கேட்க‌வேண்டும். இவர்க‌ள் குடிபோதையில் த‌ங்க‌ளுக்குள்ளே அடிப‌டுவார்க‌ள், இல்லாவிட்டால் த‌ங்க‌ளின் காதலிக‌ளைக் கார‌ண‌ங்காட்டி அடிப‌டுவார்க‌ள், சில‌வேளை கார‌ண‌ம் எதுவுமில்லாம‌லே அடிபடுவ‌த‌ற்காக‌வே அடிப‌டுவார்க‌ள். என‌வே எந்த‌ நேர‌த்தில் எந்த‌ எரிம‌லை வெடித்துக் கிள‌ம்பும் என்று எவ‌ருக்கும் தெரியாது. எரிம‌லை வெடித்தால் கூட‌ப்ப‌ர‌வாயில்லை. பிற‌கு அது வ‌ருட‌க்க‌ண‌க்காய் க‌ண்ணிவெடிக‌ள் மாதிரி விட்டு விட்டு ரொறொண்டோ ந‌க‌ர் முழுதும் அங்கு இங்குமாய் வெடித்துக்கிள‌ம்பி பிர‌ச்சினைப்ப‌ட்டுக் கொண்டிருப்பார்க‌ள்.

இப்ப‌டி ஆடிக்கொண்டிருக்கும்போதுதான் போதையில் ஊறிய‌ ஒருவ‌ன் என்னோடு த‌ன‌விக்கொண்டிருந்தான். ஒழுங்காய் நின்று ஆட‌வே வ‌லுவில்லாத‌வ‌ன் அவ்வ‌ப்போது 'சோளி கே பீச்சே க்யா ஹே?' என்று என்னைப் பார்த்து இளித்துக் கேட்டுக்கொண்டிருந்தான். என‌க்கு வ‌ந்த‌ எரிச்ச‌லுக்கு அவ‌னுக்குச் செவிட்டில் அறைய‌வேண்டும்போல‌த்தான் தோன்றிய‌து. ஆனால் அறைந்தால் எல்லோரின‌தும் க‌வ‌ன‌மும் எங்க‌ள் மீது குவிந்துவிடும். இந்த‌க் கொண்டாட்ட‌ ம‌னோநிலையும் பிற‌கு எல்லோரிட‌மிருந்து விடைபெற்றுப் போய் விட‌வும் கூடும். மெல்ல‌ மெல்ல‌மாய் அவ‌னோடு சேர்ந்து ஆடுகின்ற‌மாதிரி அவ‌ன் திசையில்போய் என்னுடைய‌ ஹீல்ஸால் ந‌ன்றாக‌ மிதித்துவிட்டேன். அவனுடைய‌ பார்ட்டி ஷூவையும் தாண்டி அவ‌னது கால்க‌ளுக்குள் வ‌லி போயிருக்கும். ஒற்றைக்காலில் கெந்திய‌ப‌டி கொஞ்ச‌ம் த‌டுமாறித் த‌டுமாறி ஆட்ட‌ அர‌ங்கைவிட்டு ந‌க‌ர்ந்திருந்தான்.

'ஏன்டா நொண்டுகின்றாய்?' என்று யார் கேட்டாலும் 'ஒரு பெட்டை ஹீல்ஸால் மிதித்துவிட்டாள்' என்று சொல்ல‌ அவ‌ன‌து ஆம்பிளைத்த‌ன‌ம் விடாது என்ப‌து என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கு ந‌ன்கு தெரியும் இனி சோளிக்குள் என்ன‌ இருக்கிற‌து என்று கேட்க‌ நினைக்கும்போதெல்லாம் காலில் ஹீல்ஸ் இருந்த‌து ம‌ட்டும் தெளிந்த‌ உண்மை என்ப‌து அவ‌னுக்கு நினைவுக்கு வ‌ருமென‌ நினைக்கின்றேன்.

இப்ப‌டியாக‌ இந்த‌ Frosh Week Partyயில் ந‌ல்ல‌தொரு நினைவுப்ப‌ரிசை வ‌ம்புக்கார‌னுக்கு கொடுத்துவிட்ட‌ ச‌ந்தோச‌த்தில் திளைத்துக்கொண்டிருந்த‌போது, என்னெதிரே இவ‌ன் ஆடிக்கொண்டிருந்தை முத‌லில்  க‌வ‌னிக்காம‌ல் விட்டுவிட்டேன். பெடிய‌ன் ப‌ரவாயில்லை, கொஞ்ச‌ம் ந‌ல்ல‌ ஸ்ரெப்ஸோடு ஆடுகின்றாந்தான், ஆனால் தானொரு Usher என்ற‌ நினைப்பில் கை காலை அர‌ங்கில் விரித்து ஆடிய‌துதான் ச‌ற்று விநோத‌மாய் இருந்த‌து.

நான் இந்த‌ திமிர்க்கார‌னின் ஆட்ட‌ ந‌க‌ர்வுக‌ளை ம‌றுத‌லித்து என‌க்கான‌ வெளியில் ஆடிக்கொண்டிருக்கும்போது, 'என்ன‌ பாட்டுப் பாடி ஆடினால்தான் என்னோடு சேர்ந்து ஆடுவீர்க‌ளா?' என்று சிரித்தப‌டி கேட்டான். ஆ....! இவ்வ‌ள‌வு நேர‌மும் இங்கு ந‌ட‌ந்த‌தை ஒருவ‌ரும் அவ‌தானிக்கவில்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேனே, இவ‌ன் பார்த்திருக்கின்றான் போலிருக்கிற‌தே என்று என‌க்குள் சிறு ப‌த‌ற்ற‌ம் ப‌ர‌வ‌த்தொட‌ங்கிய‌து. ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாம‌ல், 'அப்ப‌டியொன்றுமில்லை உங்க‌டை யூனிப்பெடிய‌ங்க‌ளுகளுக்கு சும்மா காற்றில் கை காலை ம‌ட்டும் அசைக்க‌த்தான் தெரியும் என்று ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லியிருக்கின்றார்க‌ள்; இப்போது அதை நேரிலேயே பார்க்கிறேன்' என்று ச‌ற்று ஏள‌ன‌மாக‌ச் சொன்னேன்.

அநேகமான‌ ஆண்க‌ளைப் போல‌, இவ‌ன் என்னிட‌ம் என் கைத்தொலைபேசியின் எண்க‌ளைக் கேட்டான். நானும் அநேக‌மான‌ பெண்க‌ளைப் போல‌ 'அந்நிய‌ர்க‌ளிட‌ம் என‌து எண்க‌ளைப் ப‌ரிமாறிக்கொள்வ‌தில்லை ' என‌த் தெளிவாக‌ப் ப‌தில் கூறினேன். அப்ப‌டியா, ச‌ரி என்று அதிக‌ம் அல‌ட்டிக்கொள்ளாம‌ல் அவ‌ன் தொட‌ர்ந்து ஆடிக்கொண்டிருந்தான். அதிக‌ம் பேச‌முடியாத‌ப‌டிக்கு இசை மிகுந்த‌ அதிர்வாயிருந்த‌து. முக்கியமாய் என‌து சேலை நுனியை ஒருமுறையாவ‌து இழுத்துப் பார்க்க‌வேண்டும் என்ப‌த‌ற்கான‌ எந்த‌ ந‌க‌ர்வையும் அவ‌ன் எடுக்காத‌து என‌க்குச் ச‌ற்றுப் பிடித்திருந்த‌து. நேர‌ம் ந‌ள்ளிர‌வைத் தாண்டி வீடு திரும்பும்வேளையில், 'வேண்டும் என்றால் உன‌து தொலைபேசி எண்ணைத்தா, எப்போதாவ‌து என‌க்கு உன்னை அழைக்க‌வேண்டும் போலிருந்தால் அழைத்துக் க‌தைக்கின்றேன்' என‌ அவ‌ன‌து எண்க‌ளை வாங்கிக்கொண்டேன். அத‌ன் பின் வ‌ந்த‌ ந‌த்தார் விடுமுறையில் வ‌குப்புக்க‌ள் இல்லாது வ‌ந்த‌ த‌னிமையில் யாராவ‌து ந‌ண்ப‌ர்க‌ளை அழைத்துப் பேசுவோம் என்று கைத்தொலைபேசியை scroll செய்து கொண்டுபோன‌போது MCயென இவ‌ன‌து பெய‌ர் சேக‌ர‌ம் செய்து வைத்திருந்த‌து தெரிந்த‌து.

முத‌ன்முத‌லாக‌ அவ‌னை அழைத்த‌போது என்னை மீண்டும் அவ‌னுக்கு நினைவுப‌டுத்த‌வேண்டியிருந்த‌து. சில‌வேளைக‌ளில் என‌க்குத் த‌ந்த‌துபோல‌ இப்ப‌டி நிறைய‌ப் பெண்க‌ளிட‌ம் த‌ன் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருப்பானோ என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ர‌த்தான் செய்த‌து. அன்றைய‌ பொழுது அவ்வ‌ள‌வாய் அவ‌னோடு க‌தைக்க‌முடிய‌வில்லை. க‌ல்க‌ரியில் ப‌டித்துக்கொண்டிருக்கும் அக்கா விடுமுறைக்காய் த‌ங்க‌ளோடு வ‌ந்து நிற்கின்றார் என்றான். த‌ம‌து அக்கா, அண்ணா, அப்பா, அம்மாமார்க‌ளுக்கு முன்னால் ஏன் தான் எங்க‌டை பெடிய‌ள் இவ்வ‌ள‌வு ப‌ம்மிப் பவ்விய‌மாய் ந‌டிக்க‌ மிக‌க் க‌ஷ்ட‌ப்ப‌டுகின்றார்க‌ளோ தெரிய‌வில்லை. இப்ப‌டிப் ப‌துங்குகின்ற‌ பூனைக‌ள் பிற‌கு பொதுவெளியில் பெண்க‌ளைக் க‌ண்டால் எப்படிப் பிறாண்டுப‌டுவார்க‌ள் என்ப‌தை நாம‌றியாத‌வ‌ர்க‌ளா என்ன‌?

இப்ப‌டித் தொட‌ங்கிய‌து கிட்ட‌த்த‌ட்ட‌ ஒருவ‌ருட‌த்திற்கும் மேலாய் டேட்டிங் போவ‌துவ‌ரை நீண்டிருந்த‌து. எப்போதுமே புதிதாய்த் தொட‌ங்கும் எதுவுமே புத்துண‌ர்ச்சியாக‌வும் வேக‌மாக‌வும் இருப்ப‌து போல‌ எங்க‌ள் உற‌வும் ந‌ன்றாக‌த்தான் போய்க்கொண்டிருந்த‌து. இப்போது யோசித்துப் பார்த்தால், கிட்ட‌த்த‌ட்ட‌ சித்திய‌டைய‌மாட்டேன் என்று நினைத்து, ப‌ரீட்சை எழுத‌ப் ப‌ய‌ந்துகொண்டிருந்த‌ ஒரு பாட‌த்தின் ப‌ரீட்சைக்கு, என்னோடு கூட‌வே வ‌ந்து நான் ப‌ரீட்சை எழுதி முடியும் வ‌ரை என்னோடு அவ‌ன் கூட‌ இருந்த‌தை நினைத்தால் இத‌மாக‌ இருக்கிற‌து. 'நீ ப‌ரீட்சையில் பாஸ் ப‌ண்ணுவாய்' என்று ப‌ரீட்சை ஹோலுக்குப் போக‌முன்ன‌ர் என‌து நெற்றியில் அவ‌னிட்ட‌ விபூதி இப்போதும் ம‌ண‌ப்ப‌துபோல‌த்தான் தோன்றுகின்ற‌து. அது இர‌வு ந‌ட‌ந்த‌ ப‌ரீட்சை என்ற‌ப‌டியால் ப‌த்து ம‌ணியாகிவிட்ட‌து. வெளியே ச‌ரியான‌ குளிரும். வீட்டை திரும்பி வ‌ரும்போது அவ‌ன் க‌த‌க‌த‌ப்புக்காய் குடித்துக்கொண்டிருந்த‌ சிக‌ரெட்டை வாங்கி நான் முத‌ன்முத‌லாய் உள்ளிழுத்துப் புகையும் விட்டுமிருக்கின்றேன்.

(இன்னும் வ‌ரும்)
ந‌ன்றி: கூர் 2011
ந‌ன்றி: ஓவிய‌ம்

அல‌மெண்டாக் குறிப்புக‌ள்

Friday, May 06, 2011

~'கான‌ல் வ‌ரி', 'க‌ன‌டாத் தேர்த‌ல்',  'Gomorrah', 'Eat Pray Love'~

1.
த‌மிழ்ந‌தியின் 'கான‌ல் வ‌ரி'யை அண்மையில்தான் வாசிக்க‌ச் ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்த‌து. ஒரு (குறு)நாவ‌ல் என்றாலும் ப‌ல‌த்தையும் ப‌ல‌வீன‌ங்க‌ளையும் கொண்ட‌ ஒரு பிர‌தியாக‌வே தெரிந்த‌து. த‌மிழ்ச்சூழ‌லில் எது எத‌ற்கோ எல்லாம் விரிவான‌ வாசிப்புக்க‌ள் வ‌ரும்போது இந்நூல் அமைதியாக‌ உற‌ங்கிக்கொண்டிருப்ப‌து ச‌ற்று விய‌ப்பாய்த்தானிருக்கின்ற‌து. திரும‌ண‌மான‌ ஒரு பெண்ணுக்கும், திருமண‌மான‌ ஒரு ஆணுக்க்கும், அவ‌ர்க‌ளின் திரும‌ண‌த்தின் பின் முகிழ்கின்ற‌ உற‌வைப்ப‌ற்றி இந்நாவ‌ல் சிலாகிக்கின்ற‌து. வ‌ழ‌மையான‌ பொதுச‌ன‌ வாசிப்பைக் க‌வ‌ன‌த்திற்கொண்டு த‌ணிக்கை செய்யாது ஆண்-பெண் உட‌ல்சார்ந்த‌ உற‌வுக‌ள் விரிவாக‌ இதிலே பேச‌ப்ப‌டுவ‌து என‌க்கு முக்கிய‌மாக‌ப்ப‌ட்ட‌து. இன்னொரு நாட்டில்(?) வாழும் க‌ண‌வ‌னுக்காய் த‌ன் உட‌லைத் திற‌க்காத‌ பெண் பாத்திர‌ம், தான் விரும்புகின்ற‌வ‌னுக்க்காய் உட‌லை விரித்து வைக்கின்ற‌ இட‌த்தில், பெண்க‌ள் தேவ‌தைக‌ள்Xதெய்வ‌ங்கள் என்கின்ற‌ துவித‌நிலைப் பார்வையை அழித்து இய‌ல்பான‌ பாத்திர‌மாக ஆக்க‌ப்ப‌டுவ‌து முக்கிய‌மான‌து.

இவ்வாறான‌ முக்கிய‌புள்ளிக‌ள் சில‌ இப்பிர‌தியில் இருந்தாலும், இது த‌ன்னை மீறி ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்டதாக‌ அமைந்துவிடுவ‌துதான் இத‌ன் முக்கிய‌ ப‌ல‌வீன‌ம் போல‌ என‌க்குத் தோன்றிய‌து. இப்பிர‌திக்கான‌ ஒரு முக்கிய‌ உந்துச‌க்தியாக‌வும், பிர‌திக்குள்ளும் வ‌ரும் யூமாவாசுகியின் 'ம‌ஞ்ச‌ள் வெயில்' ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌தைப் போன்றே இதுவும் இருப்பதைக் க‌வ‌னிக்க‌வேண்டும். இத‌ன் அர்த்த‌ம் ம‌ஞ்ச‌ள் வெயிலைப் போன்ற‌துதான் கான‌ல்வ‌ரி என்ப‌த‌ல்ல‌.

திரும‌ண‌மான‌ த‌ன‌க்கும் ஏற்க‌ன‌வே திரும‌ண‌மான‌ இன்னொரு ஆணுக்குமிடையிலான‌ நீடிக்கும் உற‌வு, என்றேனும் ஒருநாள் திரும‌ண‌மான‌ அந்த‌ ஆணின் ம‌னைவிக்குத் தெரிய வருமாயின், த‌ங்களின் உற‌வைத் துண்டிக்க‌த் த‌யாரென‌ச் சொல்கின்ற‌து பெண் க‌தாபாத்திர‌ம். ஆனால் அதே பாத்திர‌ம், பின்னாளில் அந்த‌ ஆண் த‌ன் குழ‌ந்தைக‌ளின் ந‌ல‌னின்பொருட்டு இப்பெண்ணோடான‌ உற‌வைத்துண்டித்து வில‌கிப்போகும்போது காழ்ப்பைக் காட்டுகின்றது; ஆணுடனான‌ தன் உற‌வைக் காறித்துப்புகின்ற‌து; மேலும் அள‌வுக்கு மீறி வ‌ன்ம‌மும் கொள்கின்ற‌து. உண்மையில் இறுதியில் இந்நாவ‌ல் விட்டுச்செல்வ‌து ஒரு ஆணின் வ‌ருகைக்கான‌ காத்திருப்பை. இதுதானே சங்க மருவிய காலத்திலிருந்து க‌ண்ணகிக்கும் பிற பெண்களுக்கும் நிக‌ழ்ந்திருக்கின்ற‌து. அக்காத்திருப்பு நிக‌ழாத‌போது த‌ன் க‌டந்த‌கால‌ உற‌வை மீள‌ நினைத்து 'என்னை அவ‌ன் பாவித்திருக்கின்றான்' என‌க் கடுங்கோபத்துடன் இப்பிரதியின் பெண் பாத்திரம் மீள‌மீள‌ப் பேசுகிற‌து.

பிடிக்காத‌ க‌ண‌வ‌னுக்காய் உட‌லை நீண்ட‌கால‌மாய் திற‌க்காது, ஆனால் த‌ன‌க்குப் பிடித்த‌வ‌னுக்காய் எல்லாமுமாய் விரிந்திருந்ததாய் சொல்கின்ற‌ இப்பெண் பாத்திர‌ம், அவ‌னின் உற‌வு துண்டிக்க‌ப்ப‌ட்ட‌பின் 'தாங்க‌ள் ச‌ந்திக்கும் எல்லாப் பொழுதுக‌ளிலும் அவ‌ன் த‌ன் உட‌லைப் ப‌ற்றிய‌ சிந்த‌னையோடு இருந்து த‌ன் உட‌லை எடுத்துக்கொள்கின்ற‌வ‌ன்' என‌க் குற்றஞ் சாட்டுகின்றது. மேலும் த‌ன‌க்கு அப்ப‌டியில்லை,அவனைக் காணும் ஒவ்வொருபொழுதிலும், இவ்வ‌ளவுகால‌மும் பிரிந்திருந்த‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌வ‌ற்றை அவனுடன் ஆறுத‌லாக‌ முத‌லில் பேசுவ‌தே த‌ன‌க்குப் பிடித்த‌து என்கின்ற‌து. அதைவிட‌ இன்னும் மோசமாக‌, 'தான் வேண்டாம் வேண்டாம் என்கின்ற‌போதும், த‌ன் உட‌லை எடுத்துக்கொள்கின்ற‌வ‌னாக‌ அவ‌ன் இருந்திருக்கின்றான்' என‌ப் பிற்பகுதியில் குற்ற‌ஞ்சாட்டுகின்ற‌து.

அவ்வாறு ஒரு பெண் த‌ன‌க்குப் பிடிக்க‌வில்லை என்கின்ற‌போது உட‌லை எடுத்துக்கொள்வ‌து என்ப‌து 'பாலிய‌ல் ப‌லாத்கார‌ம்' அல்ல‌வா? 'ச‌ட்ட‌முறை'ப்ப‌டியில் திரும‌ண‌ம் செய்திருந்தால் கூட‌, க‌ண‌வ‌னோ/கூட‌ வாழ்பவ‌னோ யாராய் இருந்தால் கூட‌ ஒரு பெண் விரும்பாத‌போது பாலிய‌ல் உற‌வில் ஈடுப‌ட்டால் அதைக் குற்ற‌மாக‌த்தான் ச‌ட்ட‌ம் பார்க்கும். என்கின்ற‌போது த‌ன‌க்குப் பிடித்த‌வ‌னிட‌ம்/தான் விரும்பியதைப் ப‌கிர‌க்கூடிய‌ ஒருவ‌னிட‌ம் ஏன் அது த‌ன‌க்குப் பிடிக்க‌வில்லையென‌ச் சொல்லாது இப்பெண் பாத்திர‌ம் ஒரு submissive நிலையை அடைந்தது என்ப‌து ஒரு முக்கிய கேள்வி. இக்கேள்வியும், இப்பெண்பாத்திர‌ம் கூறும் பிற குற்ற‌ச்சாட்டுக‌ளுமே இந்நாவ‌லின் பிற்ப‌குதியைப் ப‌ல‌வீன‌ங்க‌ள் ஆக்குகின்ற‌து.

இய‌ல்பாய் இருவ‌ருக்கிடையே வ‌ந்திருக்க‌க்கூடிய‌ உட‌ல் ம‌ற்றும் ம‌ன‌ம் சார்ந்த‌ உற‌வை அது பின்னாலில் நீடிக்க‌வில்லை என்ப‌த‌ற்காய் திட்டித்தீர்க்க‌த் தேவையில்லை. இதை ஒரு ப‌தின்ம‌ர் த‌ன் காத‌ல் நீடிக்க‌வில்லை என்று ம‌ன‌மெரிந்து எழுதியிருந்தால் ந‌ம‌க்குக் க‌வ‌லையில்லை. ஆனால் திரும‌ண‌மாகி அது ச‌லித்து, 'இது க‌ள்ள‌ உறவே இல்லை' என‌த் தெளிவாக‌ ந‌ம்பும் ஒரு பெண் பாத்திர‌ம் பின்னாளில் இப்ப‌டிப் பேசுவ‌துதான் ஆச்ச‌ரிய‌ம் த‌ர‌க்கூடிய‌து.
திரும‌ண‌மான‌ ஆணோடு ஏற்படும் உற‌வு எங்கோ ஒருபுள்ளியில் முடியும் என்ப‌து ஏற்க‌ன‌வே தெரிந்துதானே உற‌வே தொட‌ங்கியிருக்கும் என்கிற‌போது அந்த‌ ஆண் வில‌கிப்போவ‌தை பெரும் 'துரோக‌மாய்'ச் சித்த‌ரிப்ப‌து நாவ‌லின் இய‌ல்பை மீறி இருக்கின்ற‌து.  உண்மையில் தொட‌க்க‌த்தில் ப‌ல‌வ‌ற்றை வெளிப்ப‌டையாக‌ எழுத‌ப்ப‌ட்டிருக்கும் பிர‌தியில், ஒரு ஆணின் வில‌கிய‌ 'துரோக‌ம்' அதிக‌ம் பேச‌ப்ப‌டாம‌ல், காத‌லிக்கும் கால‌ங்க‌ளில் எத்த‌னையோ உற‌வுக‌ள் முகிழ்வ‌தும் அழிவ‌துமாய் இருப்ப‌தைப் போன்று திரும‌ண‌த்தின்பின்னும் ஏன் உற‌வுக‌ள் முகிழ‌க்கூடாது? முகிழ்ந்தால் அது த‌வ‌றில்லை என்கின்ற‌ புள்ளிக‌ளில் இக்குறுநாவல் தன் க‌வ‌ன‌த்தைக் குவித்திருந்தால் சிற‌ந்த‌தொரு பிர‌தியாக‌ வ‌ந்திருக்கும்.

ஆனால் ஒரு ஆணுக்கான‌ காத்திருப்பும், அது நிக‌ழாத‌விட‌த்து கட‌ந்த‌கால‌த்தின் ஒவ்வொரு இய‌ல்பான‌ த‌ருண‌ங்க‌ளையும் பூத‌க்க‌ண்ணாடி கொண்டு பிழைபிடிப்ப‌துமாய் இருப்ப‌துவும் அலுப்பூட்ட‌க்கூடிய‌து,. த‌ன்னை வாச‌க‌ர்க‌ளின் முன் இப்பெண் பாத்திரம் நியாய‌ப்ப‌டுத்திக்கொள்வ‌து போன்றே ஆகிவிடும். ஆனால் இங்கேயும் என்ன‌ பிர‌ச்சினை என்ன‌வென்றால், த‌மிழில் இருக்கும் அதிக‌மான‌ வாச‌க‌ர்க‌ள், திரும‌ண‌த்திற்குப் பின்பான‌ உற‌வு என்ப‌தையே ஏற்றுக்கொள்ளாத‌வ‌ர்க‌ளாய் இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ள் என்ன‌ கூறுவார்க‌ள் என்றால், 'இப்ப‌டித்தான் திரும‌ண‌த்தின் பின் வேறு ஒரு உற‌வில் ஈடுப‌ட்டால் இதுதான் நிக‌ழும்; இப்ப‌டித்தான் ம‌ன‌ஞ்சித‌றி வ‌ருந்த‌வேண்டியிருக்கும்' என்று எளிதாகக் கூறிவிட்டு நகர்ந்து விடுவார்க‌ள். அதன் பின்னணியில் இருக்கும் காரணங்களைத் தேடவோ ஆழ‌மாக‌ அலசவோ போவதில்லை.

த‌னக்குப் பிடித்த‌வ‌ன் எப்ப‌டி த‌ன்னோடு சேர்ந்துகொண்டானோ அவ்வாறே அவ‌ன் வில‌கிச்செல்வ‌த‌ற்கான‌ சுத‌ந்திர‌ம் இருக்கின்ற‌து என்ப‌துதானே உண்மையான‌ நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பாக‌ இருக்க‌முடியும்? அதைவிடுத்து இய‌ல்பாய் இருந்திருக்கக்கூடிய‌ க‌ட‌ந்த‌கால‌ங்க‌ள் அனைத்தையும் ஆண் பிரிந்துபோன‌பின் ச‌ந்தேக‌க்க‌ண்ணோடு பார்ப்ப‌தென்ப‌து க‌ட‌ந்த‌கால‌த்து உற‌வு முழுதையும் நிராக‌ரிப்ப‌து போன்று ஆகிவிடும‌ல்ல‌வா? இத‌னால்தான் கூறுகின்றேன் 'கான‌ல்வ‌ரி' ப‌ல‌த்தையும் ப‌ல‌வீன‌ங்க‌ளையும் கொண்ட‌ ஒரு பிர‌தி என்று. இதை வாசித்த‌பின் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் கூறிய‌தும் இவ்விட‌த்தில் நினைவுக்கு வ‌ருகின்ற‌து. 80/90க‌ளில் ஈழ‌த்துப்பெண்க‌ள் முன்ன‌க‌ர்த்திய‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை பின்னே இழுத்துக்கொண்டு போவ‌தான‌ தொனி இந்நாவ‌லில் தெரிகின்ற‌து என்றார்.  ஆழியாள், 'எல்லாவ‌ற்றையும் திரும்பித் த‌ருகின்றாய் நான் உன‌க்குக் கொடுத்த‌ முத்த‌ங்க‌ளையும், என‌க்குள் செலுத்திய‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ விந்துக‌ளையும் எப்ப‌டித் திரும்பித் த‌ருவாய்?' என்று கேட்பது ஒரு வ‌லுவான பெண்ண‌ர‌சிய‌ல் அறைகூவ‌ல் (இதுவும் ந‌ண்ப‌ரே கூறிய‌து). இந்நாவ‌லில் இத‌ற்கு எதிர்த்திசையில் 'ஆணுக்கான‌ காத்திருப்பும், அது நிக‌ழாத‌போது காறித்துப்ப‌லும்'தான் நிக‌ழ்கிற‌து.

ஆண்மொழியில் எழுத‌ப்ப‌ட்ட‌ பிர‌தி என‌க்குறிப்பிட்டுச் சொல்ல‌ ப‌ல‌ புள்ளிக‌ள் இக்குறுநாவ‌லில் இருந்தாலும் சில‌வ‌ற்றையாவ‌து குறிப்பிட்டாக‌ வேண்டும். ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளில் தெளிவாக‌ இருக்கும் இப்பெண் பாத்திர‌ம், 'ஆண்க‌ள் நீங்க‌ள் எல்லாம் யோக்கிய‌ர்க‌ளா? க‌ட‌ந்து போகும் பெண்க‌ளின் பின்புற‌ங்க‌ளைப் பார்த்து இர‌சிப்ப‌வ‌ர்கள் அல்லவா? நீங்க‌ள் இராம‌ர்க‌ளே அல்ல‌' என்கின்ற‌மாதிரி ஓரிட‌த்தில் குறிப்பிட்டிருக்கும். பெண்ணுட‌லை வெறித்துப் பார்க்கும் ஆண்க‌ளை விம‌ர்சிக்க‌லாம்; த‌வ‌றேயில்லை. ஆனால் 'நீங்க‌ள் இராம‌ர்க‌ளே அல்ல‌' என்ப‌துதான் இடிக்கிற‌து. இராம‌ரே ஒரு அயோக்கிய‌ப்பாத்திர‌ம்.'க‌ற்பை'க் கார‌ண‌ங்காட்டி சீதையைத் தீக்குளிக்க‌ச் சொன்ன‌ 'உத்த‌ம‌ர்'. இறுதியில் இந்த‌க் க‌னவான் தான் இங்கேயும் ஒரு உதார‌ண‌ புருஷ‌ராக‌க் காட்ட‌ப்ப‌டுகின்றார். இன்னும் ஒரு நெருடிய‌ இட‌ம். த‌ன் ஆணைப் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள். நூல் த‌ற்ச‌ம‌ய‌ம் என்வ‌ச‌ம் இல்லாத‌தால், திர‌ண்ட தோள்க‌ள், புலியின் வ‌யிறு போன்ற‌ வ‌யிறு என‌ கிட்ட‌த்த‌ட்ட‌ ர‌ம‌ணிச்ச‌ந்திர‌ன் போன்ற‌ வ‌ர்ண‌ணைக‌ள் சில‌ இட‌ங்க‌ளில் வ‌ருகின்ற‌ன‌. நான‌றிந்த‌வ‌ரை/கேட்ட‌வ‌ரை பெண்க‌ள் ஆணுட‌லை -ஆண்க‌ள் பெண்ணுட‌லைப் பார்ப்ப‌து போன்று- பார்ப்ப‌தில்லை என்ப‌து வேறுவிட‌ய‌ம். ச‌ரி, ஆண்க‌ள்தான் பெண்க‌ளைப் ப‌ற்றி 'ம‌த‌ர்த்த‌ முலைக‌ள்,குறுகிய‌ இடை, வாழைத்த‌ண்டு தொடைக‌ள், ... அல்குல்' என‌ போதும் போதுமென்ற‌ள‌வுக்கு ச‌லிக்கும்வ‌ரை எழுதும்போது ஒரு பெண் ஆணைப் பார்த்து விய‌க்கக்கூடாதா என்று ஒருவ‌ர் கேட்க‌லாம். அந்த‌க் கேள்வியில் பிழையில்லைத்தான். ஆனால் ஆணுட‌ல் ப‌ற்றி எத்த‌கைய‌ சித்த‌ரிப்புக்க‌ள் இருந்தாலும், பிர‌தி முழுதும் தேடிப்பார்த்த‌போதும் ஆண்குறி ப‌ற்றிய‌ எந்த‌க் குறிப்புக்க‌ளையும் கான‌ல்வ‌ரியில் காண‌வில்லை. இந்த‌ இட‌த்தில்தான் அம்பையின் க‌தைக‌ளின் வ‌ரும் ஆணுட‌ல் ப‌ற்றிய‌ சித்த‌ரிப்புக்க‌ள் நினைவுக்கு வ‌ருகின்ற‌ன‌. அம்பையின் அள‌வுக்கு ஆண்குறிக‌ளை ப‌ற்றிய‌ வித‌வித‌மான‌ சித்த‌ரிப்புக்க‌ளை (அநேக‌மான‌வை ந‌க்க‌ல‌டிப்ப‌வை) த‌மிழ்ச்சூழ‌லில் வேறெங்கும் காண‌வில்லை, ஏன் மைதிலி கூட‌ ஒருக‌விதையில் 'கோப‌ம்/ உன் குறியைச் /சூம்ப‌வைத்துவிடுகின்ற‌து' என்று எழுதியிருக்கின்றார் என‌ நினைவு. இவ‌ற்றையெல்லாம் ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால், கான‌ல் வ‌ரியில் பிரிந்துபோகும் ஆணை வைத்து எழுதிய‌ இட‌ங்க‌ளில் பொதுவாக‌ ஒரு க‌ழிவிர‌க்க‌மும் காத்திருப்புமே தெரிகின்ற‌தே த‌விர‌, அம்பையோ, ஆழியாளோ, மைதிலியோ பிரிந்துபோன‌ உற‌வின் இழ‌ப்பைப் ப‌ற்றிப் பேசும்போதுகூட‌ அவ‌ர்க‌ள் அதை ஒரு வ‌லுவான‌ பெண்மொழியில் எழுதிய‌துபோன்று இல்லாது இருக்கின்ற‌து என‌ச் சுட்ட‌வே. இதுவே கான‌ல்வ‌ரியின் முக்கிய‌ ப‌ல‌வீன‌ம். இவ்வாறான‌ ப‌ல‌வீன‌ங்க‌ள் இருப்ப‌தால் 'கான‌ல்வ‌ரி' ஒதுக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒரு குறுநாவ‌ல‌ல்ல‌. இன்னுமின்னும் ஆழ‌மாய் விவாதிக்க‌வேண்டிய‌  ஒரு குறுநாவ‌லே என்ப‌தில் என‌க்கு எவ்வித‌ மாற்றுக்க‌ருத்துமில்லை.

2.
க‌ட‌ந்த‌ சில‌ கால‌ங்க‌ளாக‌ சுவார‌சிய‌ம‌ற்று முடியும் க‌ன‌டாப் பாராளும‌ன்ற‌த் தேர்த‌ல் இம்முறை ப‌ல‌ அதிர்ச்சிக‌ளையும், ஆச்ச‌ரிய‌ங்க‌ளையும் கொடுத்திருக்கின்ற‌து. வ‌ல‌துசாரிகளை உள்ள‌ட‌க்கிய‌ ப‌ழமைவாத‌க் க‌ட்சி இம்முறை 167 இருக்கைக‌ளைப் பெற்று பெரும்பான்மை அர‌சை அமைக்கின்ற‌து. மாகாண‌ங்க‌ளுக்கான‌ அதிக‌ உரிமைக‌ளை வ‌லியுறுத்தும் ப்ளொக் குயூபெக்குவா படுதோல்வியை அடைந்திருக்கின்ற‌து. லிப‌ர‌ல் க‌ட்சியின‌ர் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாற்றில் என்றுமே காணாத‌ மிக‌ப்பெரும் வீழ்ச்சியைச் ச‌ந்தித்திருக்கின்ற‌ன‌ர். கிறீன் க‌ட்சி முத‌ன்முறையாக‌ ஒரு இருக்கையை இத்தேர்த‌லில் பெற்றிருக்கின்ற‌து; இதையெல்லாவ‌ற்றையும் விட‌ என்டிபி என‌ப்ப‌டும் புதிய‌ ஜன‌நாய‌க் க‌ட்சியின‌ர் முத‌ன்முத‌லாக‌ எதிர்க்க‌ட்சியாக‌ ஆகியிருக்கின்ற‌ன‌ர். மேலும் இத்தேர்த‌ல் த‌மிழ‌ர்க‌ளுக்கும் முக்கிய‌மான‌தாய் ஆகியிருக்கின்ற‌து. முத‌ன்முத‌லாக‌ த‌மிழ‌ப் பின்புல‌த்தைச் சேர்ந்த‌ ராதிகா சிற்ச‌பேச‌ன் என்டிபி க‌ட்சி சார்பில் பாராளும‌ன்ற‌த்திற்கு தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார். இதுவ‌ரை கால‌மும் த‌மிழ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌, மாகாண‌, உள்ளூராட்சி தேர்த‌ல்க‌ளில் போட்டியிட்டிருந்தாலும், உள்ளூராட்சித் தேர்த‌லில் ம‌ட்டுமே ஒரு க‌வுன்சில‌ரையும், சில‌ Trusteeக‌ளையும் தேர்ந்தெடுக்க‌ முடிந்திருந்த‌து. அந்த‌வ‌கையில் பார்க்கும்போது, ராதிகா சிற்ச‌பேச‌னின் வெற்றி என்ப‌து த‌மிழ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை மிக‌ப்பெரும் பாய்ச்ச‌ல் என‌வே கொள்ள‌வேண்டியிருக்கின்ற‌து.

தேர்த‌ல் முடிவுக‌ள் 2011
ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி (CON) - 167  *(143)   
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌க் க‌ட்சி(NDP) - 102  (37)
லிப‌ர‌ல் க‌ட்சி(LIB) - 34  (77)
ப்ளொக் குயூபெக்குவா (BQ) - 04  (49)
கிறீண் க‌ட்சி(GRE) - 01  (00)
*(..)  அடைப்புக்குள் இருப்ப‌வை 2008ல் க‌ட்சிக‌ள் பெற்ற‌ இருக்கைக‌ள்

இத்தேர்த‌ல், லிப‌ர‌ல், ப்ளொக் குயூபெக்குவா க‌ட்சிக‌ளுக்கு ப‌டுதோல்வியைக் கொடுத்த‌தோடு அல்லாம‌ல், இவ்விரு க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ளும் அவ‌ர்க‌ள் போட்டியிட்ட‌ தொகுதிக‌ளிலும் தோற்க‌டிக்க‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள் என்ப‌து இவ்விரு க‌ட்சிக‌ளின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கு க‌வ‌லையை அளிக்க‌க்கூடிய‌து. அடுத்த‌டுத்து இவ்விரு க‌ட்சிக‌ளின் த‌லைவ‌ர்க‌ளும் த‌ம் ப‌த‌விக‌ளில் இருந்து ராஜினாமாச் செய்து வில‌க‌ இவ்விரு க‌ட்சிக‌ளும் த‌லைவ‌ர்க‌ளில்லாது இப்போது திகைத்து நிற்கின்ற‌ன‌. க‌ட‌ந்த‌ இரு தேர்த‌ல்க‌ளிலும் சிறுபான்மை அர‌சை அமைத்த‌ ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சிக்கு இம்முறை ம‌க்க‌ள் பெரும்பான்மை அர‌சைக் கொடுத்திருக்கின்றார்க‌ள். ஏல‌வே குறிப்பிட்ட‌மாதிரி மூன்றிலொரு ப‌ங்கு இருக்கைக‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தில் பெரும்பான்மை இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றினாலே, பெரும்பான்மை அர‌சை எந்த‌க் க‌ட்சியும் அமைக்க‌ முடியும் என்ப‌த‌ற்கிண‌ங்க‌, இம்முறை 106 இருக்கைக‌ளுள்ள‌ ஒன்ராறியோ மாகாண‌த்தில் ப‌ழ‌மைவாத‌க் க‌ட்சி 73 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பிய‌ ரொர‌ண்டோ ந‌க‌ராட்சியில் இதுவ‌ரை எந்த‌ இருக்கைக‌ளையும் கைப்ப‌ற்றாத‌ ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சி 9 இருக்கைக‌ளைக் கைப்ப‌ற்றியிருக்கின்ற‌து. குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் மீது அதிக‌ அழுத்த‌ங்க‌ளைப் பிர‌யோகிக்கும் ப‌ழ‌மைவாத‌க்க‌ட்சியை குடிவ‌ர‌வாள‌ர்க‌ள் நிர‌ம்பிய‌ ரொர‌ண்டோ ந‌க‌ர் ஏன் தேர்ந்தெடுக்கின்ற‌து என்ப‌து சுவார‌சிய‌மூட்ட‌க்கூடிய‌ கேள்வி ம‌ட்டுமின்றி, எப்போதும் லிப‌ர‌ல்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌ ம‌க்க‌ள் ஒர‌ள‌வு இட‌துசாரியுள்ள‌ என்டிபியின‌ரை அதிக‌ம் தேர்ந்தெடுக்காது, வ‌ல‌துசாரிக‌ளை தேர்ந்தெடுத்தார்க‌ள் என்ப‌தும் ஆச்ச‌ரிய‌ம் த‌ர‌க்கூடிய‌தே.

குயூபெக்கில் மாற்ற‌த்திற்கான‌ மிக‌ப்பெரும் அலை அடித்திருக்கின்ற‌து என்றுதான் கூற‌வேண்டும். சென்ற‌ தேர்த‌லில் ஒரேயொரு இருக்கையைப் பெற்ற‌, என்டிபி இம்முறை 75 இருக்கைக‌ளில் 58 இருக்கைக‌ளைப் பெற்றிருக்கின்ற‌து. இப்பெரும் அலை தேர்த‌ல் ந‌ட‌ப்ப‌த‌ற்கு ஒரேயொரு வார‌த்திற்கு முன் தான் தொட‌ங்கிய‌து என்றால் ந‌ம்புவ‌து க‌டின‌ம்; ஆனால் அதுதான் உண்மை. மாகாண‌த்திற்கான‌ சுயாட்சியையும், விரும்பினால் த‌னிநாடாக‌ப்பிரிந்துபோகும் உரிமையையும் வ‌லியுறுத்திய‌ க‌ட்சியை த‌ம‌க்குரிய‌ முக்கிய‌ தேர்வாக‌ வைத்திருந்த‌ குயூபெக் ம‌க்க‌ள் இம்முறை ஏன் அத‌ற்குப் ப‌டுதோல்வியைக் கைய‌ளித்தார்க‌ள் என்ப‌து ஆழ‌மாக‌ யோசிப்ப‌து ப்ளொக் குயூபெக்குவா த‌ன் ச‌ரிவிலிருந்து மீளெழ‌ உத‌வும். ஆனால் மாற்ற‌த்தை விரும்பிய‌ குயூபெக் ம‌க்க‌ள், ஒன்ராறியோ மாகாண‌த்த‌வ‌ர்க‌ளைப் போல‌வ‌ன்றி, வல‌துசாரிக‌ளைத் தேர்ந்தெடுக்காது ஒர‌ள‌வு இட‌துசாரியுள்ள‌ என்டிபியின‌ரைத் தேர்ந்தெடுக்கின்றார்க‌ள் என்ப‌தும் முக்கிய‌மான‌து.

3.
'Gomorrah' இத்தாலி நேபிளிலில் இருக்கும் மாஃபியா குழுக்க‌ளைப் ப‌ற்றிய‌ க‌தை. ப‌ல்வேறு ம‌னித‌ர்க‌ளைப் ப‌ற்றிச் சிறுகுறிப்புக‌ளாய் காட்சிக‌ள் நீண்டாலும் அனைவ‌ரும் ஏதோ ஒருவ‌கையில் மாஃபியாக் கும்ப‌லோடு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருக்கின்றார்க‌ள். ஒரு குழு, பிற‌கு அத‌ற்குள் உட்குழு, சிறைக்குப்போன‌ குழுவின‌ரின் குடும்ப‌த்துக்குப் ப‌ண‌த்தைப் ப‌கிர்ந்த‌ளிப்ப‌வ‌ர், பெருங்குழுவுக்குத் த‌லையிடிகொடுக்கும் இரு ப‌தின்ம‌ர், சிற‌ந்த‌ உடை வ‌டிவமைப்பாள‌ர், இர‌சாய‌ன‌க்க‌ழிவுக‌ளை இர‌க‌சிய‌மாக‌ நேபிளில் கொட்டி அதிக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌வ‌ர் என‌ ப‌ல்வேறுப‌ட்ட‌வ‌ர்க‌ளின் குறுக்குவெட்டான‌ வாழ்வு காட்சியாக்க‌ப்ப‌டுகின்ற‌து. இத்தாலி ப‌ற்றிய‌ விம்ப‌ங்க‌ளை இவ்வ‌கைப்ப‌ட்ட‌ திரைப்ப‌டங்க‌ள் பல‌வேளைக‌ளில் வெறும் குமிழியாக்கி விட்டுப் போகின்ற‌ன‌.

ஒருமுறை நாங்க‌ள் பிற‌ந்த‌ வ‌ள‌ர்ந்த‌ ம‌ண்ணுக்கு மீண்டும் திரும்பும் க‌ன‌வுக‌ள் ப‌ற்றிப் பேசிக்கொண்டிருந்த‌போது, இத்தாலியைச் சேர்ந்த‌ பெண், தான் ஒருபோதும் பிற‌ந்த‌நாட்டுக்கு திரும்ப‌ப்போவ‌தில்லை; அங்கே (முக்கிய‌மாய் தெற்கு இத்தாலியில்) அநேக‌பெண்க‌ள் ஆண்க‌ளுக்கு சேவ‌க‌ம் செய்ப‌வ‌ர்க‌ளாக‌ ம‌ட்டுமே வாழ்கின்ற‌ன‌ர் என‌க் கூறிய‌போது என‌க்கு முத‌லில் அதிர்ச்சியாக‌ இருந்த‌து. எனெனில் ப‌ழ‌ம் பேர‌ர‌சுக‌ள் செழித்து வ‌ள‌ர்ந்த‌ பிர‌தேச‌த்தைப் ப‌ற்றிய‌ என் க‌ன‌வுக‌ள் வேறுவித‌மாக‌ இருந்த‌ன‌. இப்போதும், இத்தாலிய‌ப் பிர‌த‌ம‌ரின் பெண் லீலைக‌ளுக்கு எதிராக‌ மிக‌ப்பெரும் போராட்ட‌ங்க‌ள் பெண்க‌ளால் இத்தாலியில் ந‌ட‌த்த‌ப்ப‌டுவ‌தை அறிவீர்க‌ள். இது ப‌ற்றிய‌ நியூஸ்வீக‌ க‌ட்டுரையொன்றில் இத்தாலிய‌ ந‌டிகை மொனிக்கா பெத்த‌லூசி க‌ருத்துக்கூறும்போது, 'ஆண்க‌ள் ம‌ட்டுமே அறிவான‌வ‌ர்க‌ள் என்ற‌ க‌ருத்தாக்க‌ம் முசோலினியின் கால‌த்தில் ஆழ‌மாக‌ விதைக்க‌ப்ப‌ட்ட‌து. இன்றும் அது தொட‌ர்கிற‌து, இப்போது கூட‌ இத்தாலியில் 90% ஆண்க‌ள் வோஷிங்மெஷினைப் பாவிக்க‌த் தெரியாத‌வ‌ர்க‌ளாய் இருக்கின்றார்க‌ள்' என்றிருக்கின்றார். இப்ப‌ட‌த்திலும் உட்குழுக்க‌ளின் பிர‌ச்சினையில் ம‌க‌ன் வேறு குழுவில் இருக்கின்றார் என்ப‌த‌ற்காய் முத‌லில் ப‌ழிவாங்க‌ப்ப‌டுப‌வ‌ராக‌ ஒரு அப்பாவித்தாயே இருக்கின்றார். ப‌ட‌த்தின் முடிவில் ஓடுகின்ற‌ வ‌ரிக‌ளில், 'இவ்வாறான‌ மாஃபியாக்க‌ள் தம‌து ச‌ட்ட‌முறைய‌ற்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக்ளின் மூல‌ம் ச‌ம்பாதிக்கும் ப‌ண‌த்தை ச‌ட்ட‌முறையில் இய‌ங்கும் வியாபார‌ங்க‌ளில் முத‌லிடுகின்றார்க‌ள். அவ்வாறே இந்த‌க் குழுவும் இப்போது 9/11பின் மீள‌க்க‌ட்ட‌ப்ப‌டும் இர‌ட்டைக்கோபுர‌ நினைவிட‌த்திலும் ப‌ண‌த்தை முத‌லிட்டிருக்கின்ற‌து' என‌ச் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. சுவார‌சிய‌மான‌ செய்திதான் இல்லையா?

'Eat,Pray,Love' என்கின்ற‌ ஜூலியா ரொப‌ர்ட்ஸ் ந‌டித்த‌ ப‌ட‌த்தின் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வாசித்த‌போது 'அலுப்புத்த‌ர‌க்கூடிய‌து' என்கின்ற‌ எண்ண‌மே இருந்த‌து. என‌வே அவ்வ‌ள‌வு எதிர்பார்ப்பில்லாது பார்க்க‌த்தொட‌ங்கிய‌போதும், அது ஒரு சுவார‌சிய‌மான‌ ப‌ட‌மாக‌வே என‌க்குத் தோன்றிய‌து. சில‌வேளைக‌ளில் 'காசே தான் க‌ட‌வுள‌டா' என்கின்ற‌ மேலைத்தேய‌ ம‌ன‌துக்கு இப்ப‌ட‌ம் சொல்ல‌வ‌ரும் செய்தி உவ‌ப்பில்லாது இருக்க‌க்கூடுந்தான். வேலை, க‌ண‌வ‌ன், ந‌ட்பு என‌ ஒரே ஒழுங்குகிற்குள் இருக்கின்ற‌ த‌ன் வாழ்க்கை இய‌ந்திர‌த்த‌ன‌மான‌து என்ப‌தை எலிச‌பெத்(ஜூலியா ரொபேர்ட்ஸ்) உணர்கின்றார். இத‌னால் எல்லாவ‌ற்றையும் உத‌றித்த‌ள்ளிவிட்டு த‌ன‌க்கு எப்போதும் விருப்ப‌மாயிருக்கும் நீண்ட‌தொரு ப‌ய‌ண‌த்தை மேற்கொள்கின்றார். முத‌லில் இத்தாலியாவுக்குப் போகும் அவ‌ருக்கு வித‌ம்வித‌மான‌ உண‌வுக‌ளைச் சாப்பிடும் ஆசை வ‌ருகின்ற‌து;வாழ்வின் மீதான‌ பிடிப்பு மீள‌ எழுகிற‌து. பிற‌கு இந்தியாவிற்குப் போய், த‌ன்னை உண‌ர்வுக‌ளின் கொந்த‌ளிப்பை நிதான‌மாக்கும் தியான‌த்தையும், பிரார்த்த‌னைக‌ளையும் க‌ற்கின்றார். இறுதியில் பாலிக்குப் போய் த‌ன் காத‌லைக் க‌ண்டுபிடிக்கின்றார். ஒவ்வொருநாடுக‌ளின் அற்புத‌மான‌ க‌லாசார‌மும், ம‌க்க‌ளும் ஒளிப்ப‌திவினூடாக‌ பார்ப்ப‌வ‌ருக்குக் க‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌து. 'எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத‌' வெறுமை ப‌ர‌வுகின்ற‌ ம‌ன‌தை உடைய‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ப் ப‌ட‌ம் ப‌ர‌வ‌ச‌த்தைத் த‌ர‌க்கூடும்.உங்க‌ளை மாற்ற‌வும், உங்க‌ளுக்குப் பிடித்த‌தை வாழ‌வும் ஒருபோதும் கால‌ம் க‌ட‌ந்துவிட‌வில்லை என்ப‌தை நுட்ப‌மாக‌ உண‌ர்த்தும் ஒருப‌ட‌ம்.

க‌ட‌ந்த‌ ஒரு வார‌மாய் நிறைய‌ப் ப‌ட‌ங்க‌ளைப் பார்த்துக்கொண்டிக்கின்றேன். சில‌வேளைக‌ளில் ஓரிர‌வுக்கு 2 திரைப்ப‌ட‌ங்க‌ள் என்கின்ற‌ அள‌வுக்கு. கிளிண்ட் ஈஸ்ட்வூட்(Clint Eastwood), வூடி அல‌ன் (Woody Allen) போன்றவ‌ர்க‌ளை அவ‌ர்க‌ள் ந‌டித்த‌ ப‌ட‌ங்க‌ளுக்காக‌ அன்றி, அவ‌ர்க‌ள் இன்றைய‌கால‌ங்க‌ளில் இய‌க்கிக்கொண்டிருக்கும் ப‌ட‌ங்க‌ளுக்காய் அவ‌ர்க‌ளை மிக‌வும் பிடிக்கும். அத‌னால் மிகுந்த‌ ஆர்வ‌த்தோடு கிளின்ட் ஈஸ்ட்வூட்டின் 'Gran Torino' ம‌ற்றும் 'Here After' பார்த்த‌போது அவை எதிர்பார்த்த‌ அள‌வுக்கு இருக்க‌வில்லை என்ப‌து என்ன‌ள‌வில் ஏமாற்ற‌மே. 'Here After' இன்னும் எத்த‌னையோ திசைக‌ளில் ஊட‌றுத்துச் செல்ல‌க்கூடிய‌ க‌தை, ஆனால் 'ச‌ப்'பென்று முடித்த‌மாதிரியான‌ உண‌ர்வே இறுதியில் மிஞ்சியிருந்த‌து.

மே தின‌ம் - 2011

Monday, May 02, 2011

தெருக்களில் 'வாக்கு' - No One Is Illegal

No One Is Illegalன் மேதின‌ அழைப்பு அறிக்கையை விரிவாக‌ வாசிக்க‌



எனெனில், இனி குடும்ப‌ ஸ்பொன்ச‌ர்ஷிப் செய்வ‌த‌ற்கு ப‌தினான்கு வ‌ருட‌ங்க‌ள் வ‌ரை எடுக்க‌லாம் ம‌ற்றும் அக‌திக‌ளை ஏற்றுக்கொள்வ‌து 56%த்தால் குறைக்க‌ப்ப‌டுகின்ற‌து



எனெனில், எல்லைக் காவ‌ல‌ர்க‌ளுக்கு பெண்க‌ளின் வ‌திவிட‌ங்க‌ளை ஆக்கிர‌மிப்ப‌த‌ற்கான‌ அதிகார‌ம் இப்போது இருக்கிற‌து


எனெனில், த‌ற்காலிக‌ குடியேற்றத் தொழிலாள‌ர்க‌ள் 'திற‌ன் குறைந்தவ‌ர்க‌ள்' என‌க் க‌ருத்த‌ப்ப‌ட்டு, நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு க‌ன‌டாவிலிருந்து துர‌த்த‌ப்ப‌ட‌லாம்



எனெனில், ரொர‌ண்டோவில் ஒவ்வொருநாளும், 70 ச‌மூக‌ உறுப்பின‌ர்க‌ள் சுற்றிவ‌ளைக்க‌ப்ப‌ட்டு நாடு க‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்



எனெனில், ஹார்ப்ப‌ருக்குத் தேவை 'மிக‌வும் இன‌த்துவ‌மான‌' வாக்கு, ஆனால் குடியேறிக‌ள் தேவையில்லை.



எனெனில், (ரொர‌ண்டோ மேய‌ர்) போர்ட் (அர‌சுக்குச் சொந்த‌மான‌) பொது வீடுக‌ளை விற்க‌வும்,ரிரிசி ப‌ஸ்க‌ளை குறைக்கவும், பொதுச்சேவைக‌ளுக்கு ப‌ண‌ம் அற‌விட‌வும் விரும்புகின்றார். இந்த ந‌ட‌வ‌டிக்கைக‌ள் பெண்க‌ள், குடியேறிக‌ள் ம‌ற்றும் வ‌றிய‌ ச‌மூக‌ங்க‌ளை இன்னும் மோச‌மாக‌ப் பாதிக்கும்.



எனெனில்,குடியேறிக‌ளின் நீதிக்கான‌ ஒழுங்க‌மைப்பாள‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்டு, கைது செய்ய‌ப்ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப்ப‌ட்ட‌துட‌ன் தொட‌ர்ச்சியாக‌ பொலிசால் தொந்த‌ர‌வுக்குள்ளாக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள்.



எனெனில், க‌னேடிய‌ அர‌சு தொட‌ர்ச்சியாக‌ பூர்வீக‌ ம‌க்க‌ளின் இறையாண்மையையும் விடுத‌லையையும் எதிர்த்துக்கொண்டே இருக்கிற‌து.



எனெனில், எங்க‌ளின் க‌ன‌வுக‌ள் வாக்க‌ளிப்புப் பெட்டிக‌ளில் முடிய‌க்கூடிய‌து அல்ல‌


ஆவ‌ண‌மில்லாத‌ ம‌ற்றும் குடியேறி தொழிலாள‌ர்க‌ளுக்கான‌ நீதி: எல்லோருக்குமான‌ அந்த‌ஸ்து! ப‌ய‌மில்லாது (எல்லாவ‌ற்றையும்) அணுகிப் பெறுத‌ல்!







எங்க‌ள் ச‌மூக‌ங்க‌ளுக்கான‌ நீதி: ச‌ம்ப‌ள‌த்தை, வாழும் காசை, தொழிற்ச‌ங்க‌ங்க‌ளை, இல‌வ‌சமான‌தும் எளிதில் பெற‌க்கூடிய‌துமான‌ பொதுச் சேவைக‌ளை அனைவருக்க‌மாய் அதிக‌ரித்த‌ல், வ‌ன்முறையான‌ பொலிசை அய‌லிட‌ங்க‌ளிலிருந்து அக‌ற்றுத‌ல்



கால‌னித்துவ‌ம், இராணுவ‌ ம‌ற்றும் பொருளாதார‌ போர்க‌ள் ம‌ற்றும் சூழ‌லிய‌ல் த‌ர‌ங்குறைத‌ல் என்ப‌வ‌ற்றிலிருந்து விடுத‌லை



சுத‌ந்திர‌மான‌ ந‌ட‌மாட்ட‌ம், சுத‌ந்திர‌மான‌ திரும்ப‌ல் ம‌ற்றும் சுத‌ந்திர‌மான‌ த‌ங்க‌ல்