ரெயின்
In கவிதைகள்Monday, April 02, 2012
ஒளியைச் சுருட்டியபடி
விரையும் ரெயினின்
இழுபடும் பெட்டிகளில்
வாழ்வு ஓலமிடுகிறது
ஒரு ரூபாய் நாணயத்தை
தண்டவாளத்தில் வைத்துவிட்டு
புளியம்பூவை சுவைத்து நின்ற நாட்களும்
பிறகு ரெயினே வராத
நிராதரவான தண்டவாளங்களில்
சிலிப்பர் கட்டை பெயர்த்து
பங்கர்கள் சமைத்தபோதுகளில்
நம் கண்களின் முன்னே
ரெயினொரு வரலாற்றுப் பொருளாகிக் கடந்துபோனது.
நின்று நிதானித்து
ஏறிப் பயணிக்கவோ விடுப்புப் பார்க்கவோ
எந்த இரெயினும் பிறகு வாய்த்ததுமில்லை
கடந்த காலங்களின் முன் மண்டியிடும்போது
வந்துசேரும் பதற்றத்திற்குள்
எப்போதும் ஒரு ரெயின் ஓடிக்கொண்டேயிருக்கிறது
வெயிலூறும் ஒழுங்கைகளில் செருப்பில்லாது
கள்ளிவேலிகளைக் கடந்த
சிறுவர்களை மீண்டும் உயிர்ப்பிக்காதவரை
எந்த ரெயினில் ஏறினாலும்
குழந்தமையைக் கொன்றுவிடும்
கொடுங்காலத்திற்குள் சென்றுவிடுமெனும் அச்சத்தில்
சிலிப்பர்கட்டைகளை மாற்றிமாற்றி
அடுக்கியபடியிருக்கின்றேன் தண்டவாளங்களில்லாது.
Apr 02, 2012
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிகவும் நல்ல கவிதை. பகிர்விற்கு நன்றி.
4/02/2012 08:48:00 PMநன்றி சித்திரவீதிக்காரன்.
4/05/2012 12:44:00 AMPost a Comment