கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

'உயிர்நிழல்' கலைச்செல்வன் மறைவு

Saturday, March 05, 2005

திரு.கலைச்செல்வன் மாரடைப்பாற் காலமாகிவிட்டார்.
இவர் எக்ஸ்சில் சஞ்சிகை ஆசிரியர். அவருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

-ப.வி.ஸ்ரீரங்கன்
............................................
கலைச்செல்வனின் இழப்பு மிகவும் துயரமானது. உயிர்நிழலில் ஆசிரியரான பின்னர் எழுதுவதைக்குறைத்துக்கொண்டாலும், பிரான்சிலிருந்த காத்திரமான இலக்கியவாதிகளில் இவரும் ஒருவர். உயிர்நிழலில் ஆசிரியராக இருந்த சமயம் கனடா வந்தபோது திருமாவளவனின் (கவிஞர் திருமாவளவனின் தம்பி, கலைச்செல்வன்) வீட்டில் இவரை, நானும் இன்னுமொரு தோழனுமாக சந்திருக்கின்றோம். நண்பர்கள், உறவுகள் நிரம்பியிருந்த வீட்டில், மற்றவர்கள் குறுக்கிடக்கூடாதென்று, எம்மைத் தனியே ஒரு அறைக்குள் கூட்டிச்சென்று பேசிய அவரது அன்பு நினைவு கூரக்கூடியது.

பல கனவுகள், நம்பிக்கைகள் என்று நானும் நண்பனுமாய் தொடர்ந்து விடாமல் பேசப்பேச எம்மைப் பேசவிட்டபடி சிகரெட் புகைத்தபடி விழிகளால் எம்மை படித்தபடி இருந்த கலைச்செல்வன் இன்று எம்மிடையே இல்லையென்பதை எப்படித் தாங்கிக்கொள்வது? சஞ்சிகை வெளியிடும் எண்ணமெல்லாம் எங்களுக்கு உண்டென்று கூறியதற்கு தனது அனுபவங்களை இவங்கள் பெடியங்கள்தானே என்று அலட்சியப்படுத்தாமல் எங்களுடன் விரிவாகப் பகிர்ந்திருந்தார். தனதும் இலக்சுமியினதும் வேலை செய்யும் முக்கால் வாசிப்பணம் உயிர்நிழல் வெளியிடுவதிலேயே போயிவிடுவதாகவும், இங்கே வந்தபோது எல்லா வீட்டிலும் விலைஉயர்ந்த Sofa-set, dining table இருப்பதைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது என்று நகைச்சுவையாகச் சொன்னதும் நினைவில் வருகிறது. ஈழத்து அரசியல், இலக்கியம் என்றெல்லாம் பலதும் பேசியபோது நேர்மையாகப் பலவிசயங்களை ஒப்புக்கொண்டபோது அவர்மீதான என் மதிப்பு மேலும் உயர்ந்தது. அவரை நேரில் சந்திக்க முன்னர், நான் யாரென்ற அடையாளந்தெரியாமலே மின்னஞ்சலில் உயிர்நிழலுக்காய் அனுப்பிய படைப்புக்களை பிரசுரித்து என்னை ஊக்குவித்த அவரை நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

அவரை இழந்த துயரத்தில் தவிக்கும், லக்சுமி, கலைச்செல்வனின் மகன், திருமாவளவன் குடும்பத்தினர், மற்றும் நண்பர்கள் அனைவருடன் எனது துயரையும் பகிர்ந்துகொள்கின்றேன்.

-டிசே
............................................
அமரர் கலைச்செல்வன் பற்றிய குறிப்புகளைப் படித்ததும் ஒரு உண்மை புலனாகிறது.அதாவது கலை ஒருபோதுமே எவரையும் மதிக்காமல் நடந்ததை நாம் அறியோம்.நாம் அவரைச் செல்லமாக் கலையென்பதும் அவரெமை பாவி(ப.வி.)என்பதும் இன்னும் எமது நெஞசில் பசுமையானது.நாம் பல இ.சந்திப்புகளில் அவரோடு இணைந்து செயற்பட்டுள்ளோம்.இன்று நினைத்தாலும் நெஞ்சில் பசுமையான பல நினைவுகள் வந்து போகின்றது;நாம் பார்த்திபன் நடராசன் சுசீஅண்ணன் சுகன் கவிஞர் சிவம் வீட்டில் நாட்கணக்காக உரை யாடிய 90களின் பல பொழுதுகள் இப்போது வந்து கண்முன் விரிகிறது.அவரது எக்ஸ்சில் பிளவுடன் நாம் அவரது உயிர் நிழலில் எழுதுவதைத் தவிர்த்தோம்.இப்போது நோக்கும்போது நம் சிறுபிள்ளைத்தன மேதாவிவேலை நம் முகத்தில் ஓங்கியடிக்கக் கண்ணீர் வருகிறது.நாம் அவ்வளவு பாசத்துடனான தோழமையுறவைக்கொண்டிருந்தோம்.அவரது தனிப்பட்ட வாழ்வைக் கிண்டலடித்து நாமொரு சிறுகதையைக் பாரீஸ் ஈழமுரசில் எழுதியதும்"வெண்பனிச் சகதி" எனும் தலைப்பில் பின்பு எமது அறிவின் கட்டுப்பெட்டித்தனத்தையெண்ணி வருந்தி பொழுதும் இப்போ எம் விழிகளை ஈராமாக்கியபடி.கலைச்செல்வன் மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர்கள்.அவரது அறிவுப் பலமே அதுதாம்.திரு. நா.கண்ணனைப் போல் எவ்வளவு கருத்துச் சேறடிப்புக்கும் அவர் உணர்ச்சி வசப்படுவதில்லை. இது ஒன்றே எனக்கு அவரிடம் அதிகம் விரும்பிய குணம்.அவர் இப்போது நம் மத்தியிலில்லை.ஆனால் அவரது மிகப்பெரிய அறிவுசார் விமர்சனப்பாங்கும் அவர்தம் ஆழ்ந்த சமூகப்பார்வையையும் நம்மத்தியில் விட்டுப் போய்யுள்ளார்கள்.இருக்கும்போது நாம் ஆய் ஊய் என்பதும் பின்பு சுடலை ஞானத்துடன் கருத்திடுவதையெண்ணும்போது வருத்தமாகவுள்ளது!தூண்டில் எனும் சஞ்சிகையையும் இந்த நண்பர்கள் குழாத்தையும் என்றும் மறக்கவே முடியாது. அதுவொரு காலம்.என்றபோதும் அவரது இழப்பாற்றுயருரும் லக்ஸ்மி அக்காவுக்கும் அவர்தம் குமரன் கபிலனுக்கும் கூடவே அவர் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் முடிந்தால் இறுதிச் சடங்கில் வந்தும் கலக்கிறோமென ஆறுதல் படுத்துகிறோம்.

-ப.வி.ஸ்ரீரங்கன்
............................................
குறிப்பு: மேலேயுள்ளவை எனது வேறொரு பதிவில் ஏற்கனவே பின்னூட்டங்களாய் இடப்பட்டிருந்தவை. கலைச்செல்வனின் மறைவு குறித்து, இரு பதிவுகள் நா.கண்ணனின் தளத்திலும், தோழியர் தளத்திலும் எழுதப்பட்டுள்ளன.

8 comments:

Anonymous said...

பதிந்தது:DJ

Just read another posting about Kalaichelvan's pass away in pahtivukal.com
http://www.geotamil.com/pathivukal/kalaichelvan_passedaway.html

5.3.2005

3/05/2005 01:28:00 PM
Anonymous said...

பதிந்தது:P.V.Sri Rangan

கலை
போய் வா தோழா!
எமது ஆழ்ந்த வலியாய்
வார்த்தைச் சுமைகாவி வரும் எம்முணர்வு
நீ மகிழ்ந்திருந்த கூட்டில் நின் துணையும் குஞ்சும் நித்தமொரு நிகழ்வுகளில் நின் முகத்தைத் தேடியபடி...
நண்பனே!
நாமோ கலை என்ற தோழமையின் சுகம் தேடி
கால் வலிக்க நடக்கவில்லை
எனினும்

நிகழ்வுகளின் தடம்தரும் நேற்றைய கனவுகளுடன்
உன் கம்பீரக் கண்களைத் தரிசிக்க விம்மிக்கொள்வதும் வீங்குவதாகவும்
என்னுயிர்த்தோழா!
உனக்குக் கூடவா நொடிப்பொழுது வாழ்வு?
நேற்றைய பொழுதுகளின் நீண்ட கனவு எம் நெற்றிக்கு முன்
நின் தோழமையின் சுகத்தைச் சொன்னபடி...

கருத்தினது வளையத்துள் மாட்டாத நின் மனது
தோழர்கள்தம் இதயத்துள் எப்படி மாட்டியது!
தென்றலாய் நீ அறிமுகமானாய்
தேனாய் இனித்து நின்றாய் நின் கருத்துக்களில்
தேசத்தின் புதல்வரெல்லாம் தேடிக் கற்கத்தகு எம்நூலகமே
தேம்பியழ ஏன் வைத்தாய்?

ஓ! நீ பாரதியின் உள்ளொளியோ?
அன்றுன் வரவிற்காய் காத்திருந்த பொழுதெல்லாம்
சோகமான உணர்வுகளின் சுவடுகளாய் சுற்றிச் சுற்றி
சொன்னதன்று பல சேதி
மாறாய் தோழமையின் வலியைத் தரத் தக்க தோழனாய் நீ இருந்தாய்
தொண்ணூறுகளின் மத்தியில்
அரும்பிய நம் காதல் அமிழ்தினுமிdpதாய்த் தென்றாலாய்த் தலைகோதிச் சென்றது!

தாய்மையின் மனதும்
தலைவனின் பண்பும் ஒருங்கே பெற்றவன் நீ
கலையென்று கூறும் நாமும்
பாவி! என்று விளிக்கும் நின் கனிவும் கானல் நீராகிக் கருகிடுமா தோழா?
வானத்தின் வனப்புகளுக்கெல்லாம் வனப்பாய் போனாயோ
இல்லை
வந்து நின் வனப்பறிந்த காலனுனைக் கவர்ந்து சென்றானா?
நின் தோழமையின் சுகமறியும் காலனுனை மீளக் கொணர்ந்தெமக்கு தந்துதவானேர்?

தோழா!
தேகமெல்லாம் வலியெடுக்க தேம்பி நான் அழாதிருப்பினும்
என் உள்ளகத்தின் வலியதனைக்
கண்ண நீரினாற் கண்டவன் நீ!
போய் வா தோழா
போய் வா!...
உன்னோடு ஒரு நாட்கலக்கும்
ப.வி.


5.3.2005

3/05/2005 05:30:00 PM
ROSAVASANTH said...

எனக்கு உயிர்நிழலின் இரண்டு அல்லது மூன்று இதழ்கள் மட்டுமே வாசிக்க கிடைத்திருக்கிறது. கலைசெல்வனை பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை. நன்பர்களுடன் இந்த இழப்பின் சோகத்தில் பங்குகொள்கிறேன். என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

3/05/2005 08:03:00 PM
இளங்கோ-டிசே said...

ப.வி.சிறிரங்கன், உங்கள், கலைச்செல்வனின் நினைவுகளின் பகிர்தலுக்கு நன்றி. நேற்று திருமாவளவனின் வீட்டிற்கு சென்றபோது, அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இணையத்தில் வந்த பதிவுகளை hard-copyயாய் அவரது வீட்டிலேயே எடுத்துக்கொடுத்திருந்தேன். கலைச்செல்வனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காய் விரைவில் பாரிஸ் செல்கிறார் என்று கேள்விப்பட்டேன். இங்குள்ள கலைச்செல்வனின் நண்பர்களும் ஒரு நினைவுக்கூட்டம் செய்யப்போவதாய்ச் சொன்னார்கள்.
நிற்க, கலைச்செல்வனின் சிறுகதைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதை ஒரு தொகுப்பாய் ஆறுதலான ஒரு பொழுதில் வெளியிடச்சொல்லி திருமாவளவனிடம் கேட்டிருந்தேன். யோசிப்பதாய் சொன்னார்.ஆகக்குறைந்தது அதுதான் நாங்கள் கலைச்செல்வனிற்காய் செய்யும் சிறு நன்றியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

3/06/2005 01:23:00 PM
Anonymous said...

பதிந்தது:P.V.Sri Rangan

டி.ஜே.உங்கள் எண்ணங்களோடு நானும் உடன்படுகிறேன்.அவை மிகச் சரியானது!அவருக்கு நாங்கள் செய்யும் கௌரவம் அது.நிச்சியமாச் செய்ய வேண்டிய பணி. அவர் சிறந்த மார்கஇசிய வpமர்சகர்.அவரது விமர்சனக் கட்டுரைகளும் தொகுக்கப்பட வேண்டும்.அவை விமர்சனத்தை எப்படிச் செய்யலாம் என்பதற்குப் பாடமாகக்கூட வைக்கத் தகுந்தது. மேலும் உங்களுக்கு என் நன்றி.இந்த கணனி அறிவற்ற மனிதனும் ஏதோ சொல்ல வழிவிட்ட உங்கள் பணியும் மகத்தானதே!
நன்றியுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

6.3.2005

3/06/2005 01:44:00 PM
Anonymous said...

பதிந்தது:P.V.Sri Rangan

கலைச்செல்வனின் இறுதி நிகழ்வும்

தோழமை வெளிப்பாடும்!

புலம் பெயர் வாழ்சூழலில் தமிழ்பேசும் மக்கள்தம் வாழ்வானது சமூகக் கூட்டுவாழ்விலிருந்து உதிர்ந்த வாழ்சூழலாகவேயிருக்கிறது.என்றபோதும்எமது வாழ்வின் மீதான கூட்டுணர்வுக்கும்ääசமூகமேம் பாட்டுக்கான ஒரு உந்துதல் இயக்கமாக புலம்பெயர் வாழ் மக்களின் படைப்புகளும்ää இதையொட்டியெழுந்த இலக்கியச் சந்திப்புமே பாரிய பங்காற்றியிருப்பதை மறைந்த கலை இலக்கியவாதி அமரர் கலைச்செல்வனின் இறுதி நிகழ்வு இதற்கொரு உதாரணமாக-கணிப்பீடாக-சாட்சியாக இருக்கிறது.

நேற்றைய அவரது இறுதிநிகழ்வானது தோழமையின் அதியுச்ச பச்ச வெளிப்பாடாக வெளிப்பட்டதுääஇதுவரை புலம்பெயர் வாழ்வில்-மரண இறுதி நிகழ்வுகளில்இவ்வளவு பெருந்தொகை மக்கள் கூடியாதாக நாம் காணவில்லை.இங்கிலாந்துääகனடாääஅவுஸ்திரேலியாääடென்மார்க்ääசுவிஸ்ääஜேர்மனி என்று பல் தேசங்களிலிருந்து கூடிய மக்கள் அந்த மனிதநேயமிக்க தோழனின் முகத்தை இறுதியாகத் தரிசித்துக் கண்ணீர் மல்கி அஞ்சலித்தார்கள்! ஒவ்வொருவரும் அவருடனான தத்தம் அனுபங்களையும் நட்பையும் வார்த்தைகளினூடாய்ப்பகிர்ந்துகொண்டார்கள்ääஇந்த இறுதி நிகழ்வைத் தோழமையின் அதியுச்ச வெளிப்பாடாகவும்ääமனிதவுறவின் வலிமையாகவும் நாம் கருதிக்கொண்டால்-புலம்பெயர் வாழ்வில் கூட்டுணர்வும்ääவாழ்வும் எவ்வளவு அவசியமானதென்பதையும் புரிந்து கொள்ள முடியும்.படைப்புகளினூடாய் தோழமையையும்ääபுரிந்துணர்வையையும் கட்டியமைத்து நமது வாழ்வையும்-உரிமைகளையும் வென்றெடுப்பதே அந்த அற்புதமான தோழனுக்கு நாமாற்றும் உண்மையான வீர அஞ்சலியாகும்.

-ப.வி.ஸ்ரீரங்கன்

15.03.05

15.3.2005

3/15/2005 06:14:00 AM
Anonymous said...

பதிந்தது:டிசே

கலைச்செல்வனின் இறுதியஞ்சலி பற்றிய குறிப்பிற்கு நன்றி, சிறிரங்கன்.நிறைய நண்பர்கள் இறுதி நிகழ்வில் கல்ந்துகொண்டதிலிருந்து கலைச்செல்வனின் அற்புதமான ஆளுமை தெரிகின்றது. முரண்பாடுகளிடையேயும் நல்ல நட்பையும், நண்பர்களையும் கட்டியெழுப்பமுடியுமென்பதற்கு கலைச்செல்வனின் வாழ்வு நமக்கெல்லாம் நல்லதொரு உதாரணம்.


15.3.2005

3/15/2005 09:38:00 PM
maatrupirathi said...

உங்கள் தளம் பார்க்க கிடைக்கிறது.

6/06/2010 02:26:00 AM