நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ரொரண்டோ வலைப்பதிவர் சந்திப்பு

Tuesday, April 19, 2005

விரைவில் ரொரண்டோவில் வலைப்பதிவர் சந்திப்பொன்றை நடத்தலாமென்று ஒரு எண்ணம் மதியும், கறுப்பியும், பெயரிலியின் பதிவில் பின்னூட்டங்கள் இட்டபின் எனக்கும் தோன்றியுள்ளது. அதற்கான சில யோசனைகளை கனடாவில் வசிக்கும் ஒரு 'குடி'மகன் என்ற வகையில் நானும் முன்வைக்கலாம் என்று யோசித்துள்ளேன்.

முதலாவது முக்கிய நிபந்தனையாக சந்திப்பின்போது புகைப்படங்கள் எடுத்தல் தடைசெய்யப்படவேண்டும். புகைப்படங்கள் எடுத்து எமது உண்மையான வயதுகள் தெரியும்பட்சத்தில் இதுவரை நாம் (முக்கியமாய் நான்) எமது தளத்தில் கட்டியெழுப்பிய பிம்பங்கள் அனைத்தும் உடைந்துவிடும் அபாயம் இருப்பதால் ஒரு முன்னெச்சரிக்கையாய் இருக்கவிரும்புகின்றேன்.

இரண்டாவது, சந்திப்பில் கலந்துகொள்ளும் அனைவரும் தமது பதினாறு வயதுப் புகைப்படங்களுடன் வரவும். அந்தப்படங்களை பிரசுரிப்பதன் மூலம் ஏனைய நாடுகளிலுள்ள நண்பர்களை நாம் இன்னும் பதின்மவயதில் இருப்பவர் என்று இலகுவாய் நம்பவைக்கலாம். படங்களின் நம்பகத்தன்மையை இன்னும் அதிகரிப்பதற்காய் சிறந்த கிராபிக் கலைஞரான பெயரிலியின் உதவியையும் நாம் நாடத்தயங்கத்தேவையில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன்.

முக்கியமாய், கலந்துகொள்ளப்போகும் அனைவரும் சுவையான உணவுப்பதார்த்தங்களை தங்களுடன் கொண்டுவரவேண்டும். அதுவும் தாங்களாகவே தயாரித்ததாகவே இருக்கவேண்டும். சந்திப்பின்போது ஏனைய வலைப்பதிவர்கள் இந்த உணவு எப்படித் தயாரிக்கப்பட்டது என்று ஏதேனும் சந்தேகம் எழுப்பினால், அந்த உணவின் ரெசிப்பியைத் தடங்களின்றி, விளக்கமாய்க் கூறவேண்டும். அவ்வாறு கூறாதுபட்சத்தில் கூட்டத்திலிருந்து முற்றுமுழுதாக வெளியேற்றப்படுவீர்கள்.

உணவை உண்பதுவும் இரசிப்பதுவும் நமது முக்கிய விடயமாக இருப்பதால், உங்கள் பதினாறு வயதுப்புகைப்படங்களில் ஏதாவது உணவு தெரியும்படி பார்த்துக்கொள்ளவும். அப்படியெனில்தான் சம்பவங்களுடன் விபரிக்கும்போது நமது புகைப்படங்களையும் ஏனையவர்கள் இலகுவில் நம்புவார்கள்.

எந்தக்காரணம் கொண்டும் இலக்கியமோ அல்லது இலக்கியவாதிகள் பற்றியோ சந்திப்பின்போது பேசக்கூடாது. அவ்வாறு வாய்தவறிப்பேசுபவர்களுக்குத் தண்டனையாக மதியின் பதிவிலுள்ள சிறுவர் பாடலொன்றைப் பாடச்சொல்வதுடன், அந்தப்பாடலுக்கு அபிநயித்துக்காட்டவும் வேண்டப்படுவர்.

இறுதியாய் நமது சந்திப்பை வரலாறு காணாத சந்திப்பாய், ஆக்ககுறைந்தது 24 பேராவது (சென்னைச் சந்திப்பில் 23 பேர் பங்குபற்றியதால்) கலந்துகொள்ளவேண்டும். ஆகவே இப்படியொரு மிகப்பெரும் சந்திப்பை நிகழ்த்தவேண்டியிருப்பதால் கலந்துகொள்ளும் நண்பர்கள் தமது பெயர்களுடன், தமது வலைப்பதிவுகளையும் முன்கூட்டியே பதிவுசெய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள். 23 பேரைத் தாண்டாவிட்டால், நான் வேறு சில பெயர்களில் புதிய வலைப்பதிவுகளை உருவாக்கி இந்தந்தப் பெயரிலுள்ள நண்பரகள் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்று பிறகு பீலா விட்டு பிறரை இலகுவில் நம்பவைக்கலாம். எனினும் காசி, ஒரே ஜபி முகவரியில் இருந்து பல தளங்களை உருவாக்கினால் என்னைக் கையும் மெய்யுமாக பிடித்துவிடக்கூடும் என்ற பயமிருப்பதால், புதிய தளங்கள் உருவாக்கும் இந்த இன்பச்சுமையை ஏனைய நண்பர்கள் என்னோடு தயவு செய்து பகிர்ந்துகொள்ள முன்வரவும். இந்தச் சமயத்தில் பதின்மத்தில் இருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகள், உறவுக்காரர்கள் புகைப்படங்களையும் இயலுமாயின் கொண்டுவரவும். எனெனில் ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு நபர்களின் புகைப்படத்தை ஆதாரத்துடன் நிரூபிக்க இருப்பதாலேயே இவ்வாறு கேட்கப்படுகின்றீர்கள்.இவ்வாறு இதுவரைகாலமும் உலகம் கண்டிராத வலைப்பதிவர் சந்திப்பொன்றை நடப்பதையறிந்த ஒன்ராறியோ மாநில முதலமைச்சர், தானும் ஏதேனும் உதவிசெய்யவேண்டும் நேற்றுத் தொலைபேசியில் கூறி, எமது சந்திப்பு நடப்பதற்காய் மாகாணப் பாராளுமன்றத்தை நமக்கு ஒதுக்கித் தருவதாய் மகிழ்ச்சியுடன் கூறினார். வருடத்தில் ஆகக்குறைந்தது மூன்று மாதங்கள் மட்டும் பாராளுமன்றத்திற்கு சமூகளித்துவிட்டு, மக்களின் வரிப்பணத்தில் சுற்றுலாச்செய்யும் அவரதும் ஏனைய அமைச்சர்களின் அன்புக்கு வலைப்பதிவர்களின் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். எனினும் எமது சந்திப்பு நடப்பதால் கோடைகால பாராளுமன்ற ஒன்றுகூடலை ஒத்திவைக்க வரவேண்டியிருக்குமே என்று ஒரு சாதாரண 'குடி'மகனின் போதையுடன் நான் கேட்டபோது, சார்ஸினதும் கமீலாவினதும் திருமணத்திற்கு சென்று நேரடியாக வாழ்த்த முடியாமற்போய்விட்டது, உங்கள் சந்திப்பைச் சாட்டாக கொண்டு நானும் எனது கட்சி எம்பிக்களும் இங்கிலாந்திற்கு விடுமுறைக்குச் செல்ல இதுவே சரியான தருணம், நீ இது குறித்து அதிகம் கவலைப்படதேவையில்லை என்று சற்று அதட்டித் தெரிவித்துக்கொண்டார்.

கனடா வாழ் வலைப்பதிவர்கள் சந்திக்கின்றோம் என்றாலும் ஒருவருக்கு விதிவிலக்க அளிக்கலாம் என்று நினைக்கின்றேன். அமெரிக்காவிற்குச் சொந்தமான பிரதேசமெனினும் கனடாவிற்கு வடக்கே இருக்கின்ற அலாஸ்காவில் தற்சமயம் வசிக்கும் தங்கமணிக்கு இந்த golden opportunity வழங்கப்படுகின்றது. எனினும் அவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் துருவக்கரடியையும் இந்தச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடும் என்பதால் இது குறித்து இறுதிமுடிவை நண்பர்களாய் சேர்ந்து எடுத்தல் நல்லதெனத்தோன்றுகின்றது. தங்கமணிக்கு அனுமதியளித்தால், உலகமேப்பில் கனடாவிற்கு மேற்குப்பக்கமாய் மிக அருகில் இருக்கும் ஜப்பானில் வசிக்கும் தன்னையும் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் என்று ரோசாவசந்தும் கேள்வியெழுப்பக்கூடும். ஆனால் அவரை கலந்துகொள்ளாமற்செய்ய என்னிடம் ஒரு வழியுண்டு. அவர் சந்திப்பில் கல்ந்துகொள்ளும்பட்சத்தில், எந்தச்சமயத்திலேனும் இளையராஜாவின் பாடலை முணுமுணுக்கவோ, உரத்துப்பாடவோ கூடாது என்று ஒரு சட்டம்போட்டோம் எனில், 'என்னாலே ஒருக்காலும் அப்படியிருக்கமுடியாது டோய்' என்று அவராகவே ஒதுங்கிக்கொள்வார் என்பது எனது நம்பிக்கை.இதை எழுதும்சமயத்தில் வெளியே வசந்தகாலம் உருகிக்கொண்டிருப்பது தெரிகின்றது. நண்பர்களுக்கு வெளிப்புறத்திடலில்தான் சந்திக்க அதிக விருப்பம் இருக்கக்கூடும் என்பதுவும் புரிகின்றபடியால், நயாகரா நீர்வீழ்ச்சியிற்கு அருகில் சந்திப்பை நடத்தினால் மிக நல்லாயிருக்கும்போலத்தோன்றுகின்றது. எனினும் அதில் ஒரு சிக்கலுண்டு. இப்படி நாம் ஒரு வரலாறு காணாத சந்திப்பை நிகழ்த்த இருப்பதாலும், அது அமெரிக்கா பார்டருக்கு அருகிலிருப்பதாலும், அமெரிக்காவிலிருந்து எதிரிகள் (முக்கியமாய் கார்த்திக் & பெயரிலி) பொறாமையின் நிமிர்த்தம் இந்தச்சந்திப்பைக் குழப்ப்பக்கூடும் என்ற ஒரு அச்சம் எழுகின்றது. ஆகவே நமது சந்திப்புக்கு பாதுகாப்புத்தர கனடீய இராணுவத்தையும், சும்மா கண்ட கண்ட இடத்தில் எல்லாம் காரை நிறுத்தி, McDonalds burgersஜ freeயாய் சாப்பிட்டு தொந்தி வளர்க்கும் பொலிசினதும் உதவியைக்கேட்பதாய் உத்தேசித்துள்ளேன். இறுதியாய் வந்த மின்னஞ்சலில்படி நமது பிரதம மந்தியும் நமது வரலாற்றுச் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த வைரஸ் மூலம் ஒரு வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் இதுவரை காலமும் எப்போதாவது அமெரிகாவுடன் hockeyயில் விளையாடி வெல்வதை, அமெரிகாவுடன் போரில் ஈடுபட்டு வெற்றிகொள்வதுமாதிரியான பெருமிதத்தில் இருக்கும் எங்களுக்கு, அமெரிக்க வலைப்பதிவர்களுக்கு நேரடியாகச் சவாலிட்டு இப்படியொரு சந்திப்பை நடத்துவது தனக்கு மிக மகிழ்ச்சி அளிப்பதாய் கூறியுள்ளார். அத்துடன் இதுவே வரலாற்றில் நிகழ்ந்து மிகப்பெரும் வலைப்பதிவர் சந்திப்பு என்று கின்னஸ்காரகளும் ஒத்துக்கொண்டால், நமது வலைப்பதிவு நடந்த நாளை ஒவ்வொரு வருடமும் தேசிய விடுமுறையாக அறிவித்து மக்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்போவதாகவும் கூறியுள்ளார்.

இறுதியில், கனடாவில் ஒரேயொரு பசுவில் mad cow disease கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே தனது இறைச்சி இறக்குமதியைத் தடைசெய்த அமெரிக்காவில், இப்போது பொதுசனத்திற்கு தெரியாமல் mad cow நோயால் பாதிக்கப்ப்ட்ட மாடுகள் பராமரிக்கப்படுவதுவதை பிபிசி documentary செய்துள்ளதைக் கண்டு அமெரிக்கா சனாதிபதி ஜோர்ஜ்.w.புஷ் கதிகலங்கி, வெள்ளை மாளிகையைக் கண்ணீர்மாளிகையாக்கிக் கொண்டிருக்கின்றார் என்ற ஒரு செய்தியைக் காற்றுவாக்கில் கேள்விப்பட்டேன். எனவே அவரது சோகக்கதைகளை எழுதுவதற்காய் ஒரு வலைப்பதிவு அவருக்காய் உருவாக்கவேண்டுமெனவும், ஈராக்கில் எண்ணெய்க்குதங்கள் தீப்பற்றியெறிவதால், அவரது Texas எண்ணெய்க்கம்பனிகள் பணப்பற்றாக்குறையால் நிலைகுலைந்து இருப்பதால் ஓசாம பின்லாடன் கொஞ்சம் இரக்கங்காட்டி ஜோர்ஜ் புஷ்ஷிற்கு பில்லியனில் பணம் கடன் கொடுக்கவேண்டும் என்ற அறிக்கையை நாங்கள் எழுதி ஒசாமாவிற்கு சமர்ப்பிக்கவேண்டும் என்றும் நண்பர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

வரலாறு காணாத சந்திப்பைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பின்னூட்டமாயோ அல்லது தனிப்பதிவாயோ எழுதி ஆதரவு தரவேண்டும் என்று கண்ணீர்மல்க உங்களிடம் இறைஞ்சிக்கேட்கின்றேன்.

(புகைப்படங்கள்)

21 comments:

Narain Rajagopalan said...

ரோசாவசந்தினை அழைக்கும்போது அங்கிருந்து வெறுமனே 4-5 மணிநேரங்கள் பயண சூழலிலேயே இருக்கும் நாராயணனையும், விசா, கைச்செலவுக்கு காசு மற்றும் திரும்பி வரும்போது குறைந்த பட்சம் ஒரு $3-4000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து அழைப்பு விடுக்கலாம். சென்னையின் அற்புதங்களையும், உணவு வகைகளையும், முடிந்தால், கனடா நாட்டு இம்மிக்ரேஷன் அதிகாரிகள் அனுமதித்தால், நல்ல கொத்துபரோட்டாவும், நாயர் கடை டீயும் ஒரு அண்டாவிலிட்டு, விமானத்தின் கார்கோவில் அனுப்பி விட, கனடிய பிரதமருக்கு வேண்டுகோள் விடுக்கலாம். இதைத் தாண்டி, தமிழ் புத்தாண்டுக்கு வந்த எல்லா படங்களும் சொங்கி, சொதப்பிக் கொண்டிருப்பதால், உங்கள் உள்ளூரில் எடுத்த தமிழ்ப்படங்களைப் பார்த்து அவற்றையும் கலாய்க்க ஒரு வாய்ப்பு தரலாம். கள்ள பாஸ்போர்ட்டில் கனடாவிலேயே இருக்க முடியுமென்றால், ஏதாவது ஒரு அனிமேஷன் நிறுவனம் வைத்து பிழைத்துக் கொள்ளலாம். பெயரிலியை பங்காளியாக்கி, ஆப்பிளுக்கும், ஹூடினிக்கும் சவால் விடலாம். மொதல்ல விசா அனுப்புங்கப்பா!!

4/19/2005 01:03:00 AM
ROSAVASANTH said...

//மொதல்ல விசா அனுப்புங்கப்பா!! //
அதே! நான் ஜப்பான் நாட்டு பிரஜை இல்லாததால் எனக்கும்...! நல்ல ஸூஷி, ஸஷிமே ஸாகேயுடன் வருகிறேன்.

ஆனால் டீஜே தடுக்க திட்டமிட்டு 'இளயராஜா பாட்டு பாடக்கூடாது' என்று சொல்வதாக தெரிகிறது. இப்படி சொல்வதால் பாடுவதை தடை செய்ய முடியாது. அதற்கு பதில் எம்கேடி தொடங்கி, அண்ணண் தேவாவின் 'கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு' வரை (ஸாகே ஊற்றிவிட்டு) துணைவி, மகன் சகிதம் காட்டு கூச்சல் போட்டு சந்திப்பில் குழப்படி செய்ய நேரிடலாம், ஜாக்கிரதை!

4/19/2005 01:24:00 AM
Anonymous said...

நரேன், ரோசாவசந்த் உங்கள் விசா குறித்து பிரதம மந்திரியிடம் பேசியுள்ளேன். அவர் தனது பதவிக்கு நீங்கள் வேட்டு வைக்காதவிடத்தில் உங்களிருவரையும் கனடீய 'குடி'களாய் ஆக்குவதில் பிரச்சினையில்லை என்று கூறுகின்றார். ஆனால் சின்ன எச்சரிக்கை: இந்த நாடு ஒரு பொறிவைக்கும் தேசம். உள்ளே வந்துவிட்டீர்கள் என்றால், பலநூறு கண்ணிகளால் பிணைக்கப்பட்டு இங்கேயே வாழ்க்கைபூரா உழலவேண்டியிருக்கும் :-(.

4/19/2005 11:21:00 AM
Anonymous said...

பதிந்தது:karthikramas

//எனினும் அவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் துருவக்கரடியையும் இந்தச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் //
உண்மையைத் திரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
**துருவக்கரடி வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கும் தங்கமணியையும் இந்தச்சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கவேண்டும் ** என்று இருக்க வேண்டும்.

//பலநூறு கண்ணிகளால் பிணைக்கப்பட்டு இங்கேயே வாழ்க்கைபூரா உழலவேண்டியிருக்கும் :-(//
பலநூறு கன்னிகளால் பிணைக்கப்பட்டு இங்கேயே வாழ்க்கைபூரா உழலவேண்டியிருக்கும் :-(, என்ன ஓய் நடக்குது அங்க? கனடிய ஹுக் ஹெஃப்னராக முயற்சியா?

ரோசாவுக்கு போட்டியாக அண்ணன், வைகைபுயல் வடிவேலுவின் டயலாக்கோடு என் குழப்பத்தை ஆரம்பிப்பேன் . அதற்கும் ஜாக்கிரதை!!

19.4.2005

4/19/2005 11:37:00 AM
கறுப்பி said...

நாராயணன் விசா ஒண்டும் பிரச்சனையில்லை. அது நான் எடுத்து அனுப்புவன். கனடாக்கு வருஷம் வருஷம் எத்தினை இந்தியச் சினிமாக்காறர்கள் இலக்கியவாதிகள் வந்து போகின்றார்கள் தெரியுமா? வைரமுத்து இரண்டாம் முறையாக இந்த வருடமும் வருகின்றார். இப்ப இது கனேடிய (ஈழத்து) தொழிலதிபர்களுக்குள் ஒரு போட்டியாகிப் போய் விட்டது. நான் நினைக்கிறேன் யார் ரஜனியைக் கூப்பிடுகின்றார்களோ அவர்தான் அதி உயர்ந்த தரத்தை வெற்றியைப் பெறுவார் என்று நம்புகின்றேன். அதற்காக இப்போது வெயிட்டிங்.
கறுப்பிக்கு கடைசி ஒரு நாராயணனைக் கூப்பிடும் தகுதியாவது இல்லாமல் போயிடுமா என்ன? ஹ ஹ ஹ

டீசே பதினாறு வயதில் எடுத்த புகைப்படம் வேணுமென்றால் அடுத்த வருடமாக சந்திப்பை மாற்றியமைப்பீர்களா?

அட கனடாவில் புளொக் வைத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விடக் குறைவு. (கறுப்பி அறிந்தவரையில்)

4/19/2005 12:10:00 PM
Anonymous said...

டீசே
உண்மையிலேயே இப்படி ஒரு சந்திப்பை எற்பாடு செய்தால் என்ன?
கறுப்பி சொல்லியிருக்கிறா கனடாவில்
ப்ளாக் பதியும் ஆண்களின் எண்ணிக்கை
பெண்களைவிட குறைவு என்று.எனக்கு மீசை துடிக்கிறது.டீசேக்கு மீசை துடிக்கவில்லையா?(மீசை இருக்கிறதா
என்பது வேறு விடயம்)ஏனெனில் இங்கு
மீசை இல்லாமல் சிறு தாடி வைப்பது
தான் இப்போது ரொரண்ரோவில் நாகரீகம் அடுத்து யுவதிகள் மத்தியில்
அதற்க்கு தான் மரியாதை.டீசே தனக்கு
16 வது என்பதால் கண்டிப்பாக இப்படிதான் தோற்றமளிப்பார் என நம்பலாம்.

அடுத்து சந்திப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மிதிவெடி வழங்கப்படும்
என்பதையும் அறிவித்து விடவும்.
என்னப்பா ஈழத்தில் தான் மிதிவெடி
எண்டால் கனடாவிலுமா என்றுவிட்டுபலர் வராமல் இருந்துவிடக்கூடும்
என்பதால் ஒரு வார்த்தை "மிதிவெடி"என்பது கனடாவில்
தற்போது அறிமுகமாகி சக்கை போடு போடும்
ஒரு தின்பண்டத்தின் பெயர்.தின்பண்டத்தின் மூலம் ஈழம் என்பதால் இப்பெயர்.

4/19/2005 05:28:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

I will be in Toronto during June 4, 5 & 6 and during June 11 & 12.

Will be there to attend Iyer's award ceremony during june 11 & 12th.

would be coming the june 4 & 5 to meet Iyer.

[will comment later to Narain & Rosa.

Narain, looks like Sumathy would smooth ways for you. Rosa ungaLukku DJ oru vazi panniruvaarnu ninaikkiraen. ;)]

Karthik, ozungu mariyaathaiyaa vanthu SErum!!!

Monction aasaamiya aattathula sErungappa!

4/19/2005 05:48:00 PM
Venkat said...

டிசே - இன்டைக்கு ராத்திரி பையன் தூங்கும்போது அவனோட ஹாலோவீன் முகமூடியை ரகசியமாக 'லவுட்டீஸ்' பண்ணி ஒளிச்சு வச்சுக்கிறேன்.

நாராயண் - கொத்து பரோட்டாவா, டொராண்டோவுக்கா? திருநெல்வேலிக்கே அல்வா கொடுக்கப் பாக்குறீகளா? எந்த மாதிரி கொத்துப்பரோட்டா வேணும்? இன்னும் இடியாப்பம், சொதி, சம்பல், ... (ம்ம்ம். நமக்கு இப்படி நாலு சைவம்தான் தெரியும். அஹா.. படிச்சது நெனப்புல வந்திடுச்சு தலையில்லாத நெத்திலிக்கருவாடு வேணுமா, ஸ்கார்புரோல கெடைக்கும்).

வஸந்த் - ஒங்கள வரவிடாமத் தடுத்தால் ஒங்க சார்பாக நானே இளையராஜா பாட்டப் (அவரைவிட மோசமாக குரலில் பாடுவேன்). பொதுவில் இதுமாதிரி கூட்டங்களில் கடைசியாக என் பாட்டுதான் இருக்கும். கூட்டத்தைக் கலைக்கக் கேரண்டியான உத்தி.

மதி - வாங்க, வாங்க!

4/19/2005 09:51:00 PM
Narain Rajagopalan said...

இளையராஜா பாடல்கள் தடை செய்யப்பட்டால், அதை எதிர்த்து மெரீனா கடற்கரையில் கூட்டம் போடுவோம். முக்கியமாக, வந்திருக்கும் எல்லோரையும் கடற்கரையில் காற்று, கடலை போட வந்தவர்கள் முதற்கொண்டு "அவர்களை" என விளித்து, உகாண்டாவினைப் பாருங்கள், ஜெர்மனியைப் பாருங்கள், நியுஸிலாந்தினைப் பாருங்கள் என்று உரத்து கூவி, 238வது வட்டத்தின் பிய்ந்து போன மாலையணிந்து, "அகில உலக சர்வ வல்லமை டாக்டர் இசைஞானி, இசை மேதை ராசைய்யா இளையராஜா மன்றத்தில்" போடப்பட்ட காதி கிராப்டில் 30% தள்ளுபடியில் வாங்கிய பச்சை கரை "பொன்னாடை" போற்றி, ஏதாவது வாயில் நுழையாத பெயரை சொல்லி, அவரை கவிஞராகி (இதைத் தான் அன்றே ஜெர்மானிய கவிஞன் ரெப்ரசா மெக்டோன்ல்டு ஆர்தோமான் பீட்சா சொன்னான்)மேற்கோள் காட்டி, சோடா குடித்து நன்றி கூறி உரையை முடித்துக் கொள்வதாக சொல்லி, அங்கிருந்தபடியே மீண்டும் ஏதாவது ஒரு லத்தீன் அமெரிக்கா நாட்டின் பிரச்சனையை பேசி, தொடர்ச்சியாக 3 மணி நேரம் இந்த இளையராஜா பிரச்சனையை பேசி எதிர்ப்பில் ஈடுபடுவோம் என்பதை வன்மையாக சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி கறுப்பி, ஏதாவது பெண்ணை இழுத்துக் கொண்டு ஒடும் திட்டமிருப்பின் மடல் அனுப்புகிறேன். ஒன்றுக்கு இரண்டாக விசா எடுத்து வையுங்கள் ;-)

4/19/2005 11:50:00 PM
மாமூலன் said...

வயஇயஹுதஞஇiஞகைஇ ஙஹுஉஜஇJfஇ ந்ஹுழஇறஊfஇடிகஇ நஙஹுஞுiகிa வட்இடி ,iஞதடஇ ந்ஹுலுஜஇஜபஊfஇfபஞஹுஉஇஇ.
நஙஉபருfஇடி நுfஹுஙகஇ தஉஇஉ கஹுஜபஉபநுa லெeஇJfஇfபஞகூளஇf.
ரஉப வட்இடி மிஒஙஇடீ சழஇலஹு?
ரஹுஙஇஙஹுலு வடஇட நுஙஹுலுநுதஸஇ?
ஷளஇf யளஇif முலஇலுfஇfஞபகைஇ ஙஊஙஇடீகஹு? நுரஸ்ரீ கழநுக ர்ப்இfஹுJஙஇஙஹு.

4/20/2005 12:12:00 AM
மாமூலன் said...

vy;yhtw;iwAk; ghuj;Jf; nfhz;bUf;Fk; nghWikia vdf;F ,iwtd; nfhLj;jpUf;fpwhu;;.
ngupRf;F Nfhgk; tu;u khjpupNa ele;Jf;fpwPq;f.
rup vdf;F miog;G cz;lh?
rhg;ghL vd;d NghLNts;?
xq;f yq;if Ml;Lf;fwpAk; gUg;Gkh? Nr! kzNk rfpf;fhJg;gh.

4/20/2005 12:13:00 AM
மாமூலன் said...

During summer, your giving a goood collection of Xmas Photos. Ennaa rasanai!
Do you have any part time photographer, always followng with you to take piture like the one in old tamil/middle tamil movies?
funny man/women

4/20/2005 12:16:00 AM
மாமூலன் said...

The first two .. comments
GupQ;rh GupQ;Rf;NFhq;f ,y;id;dh nrhwpQ;Rf;Nfhq;f.

4/20/2005 12:17:00 AM
இளங்கோ-டிசே said...

Maappillaiyaar Said:
எல்லாவற்றையும் பாரத்துக் கொண்டிருக்கும் பொறுமையை எனக்கு இறைவன் கொடுத்திருக்கிறார்;.
பெரிசுக்கு கோபம் வர்ர மாதிரியே நடந்துக்கிறீங்க.
சரி எனக்கு அழைப்பு உண்டா?
சாப்பாடு என்ன போடுவேள்?
ஒங்க லங்கை ஆட்டுக்கறியும் பருப்புமா? சே! மணமே சகிக்காதுப்பா

(Was converted to unicode by me: DJ)

4/20/2005 06:37:00 PM
இளங்கோ-டிசே said...

நண்பர்கள் நரேனும், ரோசாவசந்தும் தங்களை நமது வலைப்பதிவு சந்திப்பில் கலந்துகொள்ள அனுமதிக்காவிட்டால், குழப்படி செய்யப்போவதாயும், கண்டனக்கூட்டம் நடத்தப்போவதாயும் கூறியதால், நமது ரொரண்டோ நண்பர்கள் (நாம் அப்பாவிகள் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும் :-) ) அவர்களையும் சந்திப்பிற்கு அழைக்கலாம் என்று கூறியுள்ளனர்.

சரியான குழப்படிக்காரர்களாய் இவர்கள் இருவரும் இருப்பதால் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினராய் இவர்களை கெளரவித்து, பேச மற்றும் பாடச்சொல்லிவிட்டு, நாம் நரேன் சென்னையில் இருந்தும், ரோசாவசந்த ஜப்பானிலிருந்தும் கொண்டுவரும் உணவுகளை ஒரு பிடிபிடிக்கலாம் என்று முடிவுசெய்துள்ளோம். அத்துடன் இவர்கள் இருவரும்தான் அடிக்கடி பிறரின் வலைப்பதிவுகளில் கேள்விகளை கேட்டுக்கொண்டு திரிபவர்கள் என்று எனது நண்பர் 007 உளவறிந்து கூறியதால், இந்த சந்திப்பில் நாம் விரும்பியமட்டும் அவர்களிடம் எமது கேள்விக்கணைகளை அள்ளியெறியலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அட, தங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரவில்லையே என்று அமெரிக்கா தொடங்கி அவுஸ்திரேலியாவரை பெருமூச்சு எழுவது தெரிகின்றது. பார்த்தப்பா ஓசோன் படை சேதமாகப்போகின்றது :-).

இளையராஜாவிற்கு எதிரான எனது தீர்மானத்திற்கு எதிராய், ரோசாவசந்த், நரேன், வெங்கட் போன்ற இளையராஜாவின் தீவிர இரசிகர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதால் நான் எனது கருத்தை வாபஸ்பெற்றுக்கொள்கின்றேன் :-).ஆனால், 'இந்த மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, அந்த மணமகள்தான் வந்த நேரமடா' என்ற பாடலை எனது நண்பனின் நினைவுக்காய் நீங்கள் அனைவரும் சேர்ந்து பாடிக்காட்டவேண்டும் என்றொரு கட்டளையையும் அன்பாக விடுகின்றேன் (நண்பா! உன் மனதில் இருக்கும் அந்த ரெட்டைக்கால் பூ, உன் ஊரிற்கு வந்துசேர்ந்துவிட்டதா :-)?
//கறுப்பி சொல்லியிருக்கிறா கனடாவில் ப்ளாக் பதியும் ஆண்களின் எண்ணிக்கை
பெண்களைவிட குறைவு என்று//
நல்லவிடயந்தானே கரிகாலன். கனடாவில் பெண்களின் பங்களிப்பு உயர்வாக இருக்கிறது என்பதில் நாங்கள் பெருமிதங் கொள்ளலாந்தானே. ஆனால் நான் (எனக்குத்தெரிந்தளவில்) கணக்குப்போட்டுப் பார்த்தபோது கிட்டத்தட்ட ஆண்களும், பெண்களும் சரிசமனான எண்ணிக்கையில்தான் வருகின்றனர்.
//டீசே தனக்கு 16 வது என்பதால் கண்டிப்பாக இப்படிதான் தோற்றமளிப்பார் என நம்பலாம். //
கரிகாலன் நீங்களாவது ஒப்புக்கொண்டிருக்கின்றீர்களே.சந்தோசமாயிருக்கின்றது (வசந்தன், கார்த்திக் கவனிக்க: கரிகாலன் கூறுவதைக் கேட்டு இனியாவது திருந்துங்கள் :-) )

4/20/2005 07:13:00 PM
இளங்கோ-டிசே said...

கரிகாலன், மதி, வெங்கட், கறுப்பி!
நல்ல யோசனை. கனடாவில் இருக்கும் மற்ற நண்பர்களும் சம்மதித்தால் யூன் மாதத்தில் ஏதேனும் ஒருநாள் சந்தித்து சாப்பிடலாமே. ரொரண்டோ கலாச்சாரத்தின்படி விருந்தினராய் வருபவர்தான் செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதால் மதி அல்லது Monctionகாரர் (பெயரைச் சொல்லட்டா அடுத்தமுறை?) இந்தச் சந்திப்பிற்கான உணவுச்செலவுகளைப் பார்த்துக்கொள்வார்கள் :-). நல்ல உணவு எந்த resturantல் சாப்பிடுவது என்ற முடிவை என்னிடம் விட்டுவிடுங்கள்.

4/20/2005 07:15:00 PM
வசந்தன்(Vasanthan) said...

டி.சே.!
என்ன இருந்தாலும் புகைப்படம் வெளிவருவதில் கவனமாயிருக்க வேணும். அதால நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். அதுதான் நானும் என்ர படவிசயத்தில கவனமாயிருக்கிறன். ஒழிச்சு மறைச்சு போட்டதக் கூட டக்ளஸ் தேவானந்தா எண்டு ஒருத்தர் வந்து கெடுத்திட்டார்.
சரி. முதலே என்ர வாழ்த்துக்கள். ஆனா கறுப்பி சொல்லிறமாதிரி கனடாவில் பெண்டுகளின்ர ஆதிக்கம் தான் அதிகம் போல கிடக்கு.

4/20/2005 07:18:00 PM
கிஸோக்கண்ணன் said...

நானும், எனது கமெராவும் தயார். நீங்கள் தயாரா?

எந்த நாளென்று நீங்களே தெரிவு செய்யுங்கள் டிசே.

கமெராவுடன்... மன்னிக்கவும் அன்புடன் கிஸோக்கண்ணன்

4/20/2005 08:04:00 PM
Anonymous said...

Since we are talking about singing songs in our forth coming meeting, Guys! read this news to avoid copy right problems !
Frenchman buys 25,000 Indian songs
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4464393.stm

4/21/2005 12:43:00 PM
கறுப்பி said...

மாப்பிள்ளையார்;-
என்ன அது லங்கை ஆட்டுக்கறியும் பருப்புமா? எண்டு ஒரு கிண்டல் தொனி. சாப்பிட்டுப் பார்த்தீர்களா ஆட்டுக்கறியை? கனடாவிற்கு வாங்கோ விதம் விதமா ரெஸ்ரோறண்ட் கூட்டிப்போய் ஆட்டுக்கறி வாங்கித்தாறன். லங்கையரின் கறிதான் உப்பும், உறைப்பும் தூக்கலா அசத்தலா இருக்கும் தெரியுமா?

4/21/2005 03:09:00 PM
Anonymous said...

அய்யா DJ,
இப்படி சைக்கிள் கேப்பில ஆட்டோ ஓட்டறீங்களே. எனக்குத் தெரியும் இப்படியெல்லாம் சொல்லி, பிறகு சொதி-எல்லாம் கொடுப்பீர்கள் என்று

4/24/2005 05:32:00 PM