கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

பத்திரிகையாளர் சிவராம் (தராக்கி) கொழும்பில் கொலை

Thursday, April 28, 2005


இன்னொரு கறுப்பு நாள்


photo

81 மே 31 இரவு

ராணி!
இன்னும் வரவில்லையென்று
அச்சம் சூழ
வாசலைப் பார்த்தபடி
எனக்காக காத்திருப்பாய்.

ஆதரவிற்கு
உன்னருகில் யாருண்டு...?
வீட்டினுள்ளே
சின்னஞ் சிறுசுகள்
மூலைக்கொன்றாய்
விழுந்து படுத்திருக்கும்.

வெறிச்சோடிய வீதியில்
நாய்கள் குரைக்க
விரைந்தோடிய ஒருவனால்
செய்திகள் பரவ
இன்னும் கலங்குவாய்.

தொலைவில்
உறுமும் ஜீப்பின் ஒலியில்
விளக்கை அணைத்து
இருளில் நின்றிப்பாய்.

உயிரைக் கையில் பிடித்தபடி
குண்டாந் தடிக்கும்
துப்பாக்கி வெடிக்கும்
தப்பியோடிய மக்களில் ஒருவனாய்
என்னை நினைத்திருப்பாய்.

நானோ...!
நம்பிக்கையின்
கடைசித் துளியும் வடிந்து
மரணத்தருகே.

சூழவும்
உடைபடும் கடைகளின் ஒலியும்,
வெறிக் கூச்சலும்,
வேற்று மொழியும்
விண்ணுயர்ந்த தீச்சுவாலையும்.

-மு.புஷ்பராஜன்

(1981/அலை-18)
நன்றி: மரணத்துள் வாழ்வோம்: ஈழத்துக் கவிதைகள்
{இந்தக்கவிதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளாகியும் ஈழத்தமிழர் வாழ்வில் எந்தமாற்றமும் வரவில்லை என்பதைத்தான் யதார்த்தம் கோரமுகத்துடன் மீண்டும் இன்றையபொழுதிலும் நிரூபிக்கின்றது.}

17 comments:

Anonymous said...

பதிந்தது:suratha

சங்கதி தளத்திலிருந்து மேலதிக செய்தி
http://www.sankathi.com

ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிகளால் தராகி சிவராம் சுட்டுக்கொலை

(மேலதிக விபரம் இணைப்பு) நேற்றிரவு ஸ்ரீலங்கா அரசின் கைக்கூலிகளால் கடத்தப்பட்ட பிரபல ஊடகவியலாளரும் தமிழ்நெட் செய்திச் சேவையின் ஆசிரியருமான தராகி என்று அழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்கு முன்பாகவுள்ள ஜப்பான் நட்புறவுப் பாலத்திற்குக் கீழ் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை சக ஊடகவியலாளர் ஒருவர் அடையாளம் காட்டியுள்ள பொழுதிலும்ää அதை உறுதிப்படுத்துவதற்கு அவரது குடும்பத்தினர் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என சம்பவ இடத்திலிருந்து சங்கதி நிருபர் எள்ளாளன் அறிவித்துள்ளார்.

முகம் சிதைவடைந்த நிலையில் அவரது சடலம் காணப்படுவதாகவும் முகப்பகுதியிலேயே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

பம்பலபிட்டியில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இரவு உணவை முடித்த பின்னர் சிவராமும் மற்றும் ஒரு ஊடகவியலாளாரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இன்ரக்கூலர் ரக வாகனத்தில் வந்தவர்களால் சிவாராம் கடத்தப்பட்டார்.

கடத்தியவர்களில் இருவர் தமிழ் பேசியதாகவும் மற்றையவர்கள் சிங்களவர்கள் என்றும் சம்பவத்தை அவதானித்த சாட்சிகள் தெரிவித்திருந்தனர்.

சிவராமின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தைச் சுற்றி பெருமளவான ஸ்ரீலங்கா காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பதுடன் பெருமளவான சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்களும் சூழ்ந்திருப்பதாகவும் எமது நிருபர் அறிவிக்கின்றார்.



சிவராமுக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா புலனாய்வு துறையின் பலவீனம் மற்றும் புலனாய்வு துறைக்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து இவர் அண்மையில் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. டெய்லி மிரர் எனும் ஆங்கில ஊடகத்திலும் பல தமிழ் ஊ;டகங்களிலும் படைத்துறை ஆய்வு கட்டுரைகளை இவர் எழுதி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விமல் வீரவங்க சிவாரம் குறித்தும் தமிழ் நெற் இணையத்தளம் குறித்தும் கடுiமாயான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை நினைவு கூரத்தக்கது.

இரு மொழி புலமை வாய்ந்த இராணுவ ஆய்வளாரன இவர் சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

தமிழ் மக்களிள் விடுதலைப் போராட்டத்தின் நியாத்தினை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு செல்லம் ஊடகவியலாளர்களுக்கு எதிராக சிங்கள பேரினாவதம் நடத்தும் தாக்குதலின் தொடர்ச்சியே சிவராமின் கொலை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

சர்வதேச அரங்கில் அரசாங்கத்தின் கபட நாடகத்தை அம்பலப்படுத்திய சிவராமை கொலை செய்தமையின் ஊடாக ஏனைய ஊடகவியலாளர்களுக்கும் எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை சர்வதேச அரங்கில் விமர்சனம் செய்வதற்கு ஊடகவியலாளர்கள் அச்சமடையும் நிலை ஒன்றை தோற்றுவிப்பதே இந்த படுகொலையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.




29.4.2005

4/29/2005 12:25:00 AM
Anonymous said...

பதிந்தது:kulakaddan

மீண்டும் ஒரு படுகோலை............ தமிழர் தரப்புக்காய் உழைத்தது பொறுக்க முடியாது செய்யப்பட்டுள்ளது.

29.4.2005

4/29/2005 02:46:00 AM
Chandravathanaa said...

இருபத்தைந்து ஆண்டுகளாகியும் ஈழத்தமிழர் வாழ்வு கேள்விக்குறியாய்....

4/29/2005 04:44:00 AM
Anonymous said...

பதிந்தது:அல்வாசிட்டி.விஜய்

:-(

29.4.2005

4/29/2005 05:17:00 AM
Boston Bala said...

வருத்தங்கள்

4/29/2005 07:33:00 AM
Sri Rangan said...

டி.ஜே.வணக்கம்!பார்த்தீர்களா?நாம் எதற்காக நாயாகக் கத்துகிறோம்?கொலை,எதிர்க்கொலையைச் செய்விக்கிறது.இதிலிருந்து எப்படி மீள்வது?மனித உயிர்களை மசிராகப் பார்க்கும் அரசியலை எவன் அனுமதிப்பான்?மனிதர்களின் அழிவில் அரசியல் பண்ணும் மடையர் கூட்டமா மனிதாபினம் பற்றிப் பேசமுடியும்!அயோக்கியர்களின் அராஜகத்தை எதிர்த்தபேனை ஓய்ந்து விட்டது.

4/29/2005 08:56:00 AM
கறுப்பி said...

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்?

4/29/2005 09:04:00 AM
Anonymous said...

பதிந்தது:Mathy

:(

29.4.2005

4/29/2005 11:03:00 AM
சுந்தரவடிவேல் said...

இன்றைக்கு நார்வேயின் சேதுரூபனுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு அந்நாட்டு அமைச்சரொருவர் கூறியிருக்கிறார். அச்சுறுத்தல் இருந்தும் பாதுகாப்பு வழங்காமலிருந்தார்களா? கறுப்பியின் பதிவில் ஸ்ரீரங்கன் எழுதியிருந்தது (?) போல் நாம் அறிவு ஜீவிகளை இழந்து கொண்டிருக்கிறோம்.

4/29/2005 03:18:00 PM
இளங்கோ-டிசே said...

ராஜினி, செல்வி, 'புதியதோர் உலகம்' கோவிந்தன், 'தினமுரசு' ரமேஷ், நடேசன், நிமலராஜன், 'தினமுரசு' சின்னபாலா, இப்போது தராகி என்று (என்னளவில் தெரிந்த) எத்தனையோ உண்மையான புத்திஜீவிகளை இழந்துவிட்டோம். உயிரிழந்துபோன இவர்களில் அநேகருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பிருந்தும் அதை உதறித்தள்ளிவிட்டு தாம் சரியென நினைத்த கொள்கைகளுக்காய் ஈழத்திலேயே இருந்து தமது உயிரையும் பலியாகக் கொடுத்துள்ளார்கள்.
தராகியின் இழப்பு நிச்சயம் ஈழத்தமிழருக்கு பெரும் இழப்பு என்றுதான் என்னைப்பொறுத்தவரை சொல்வேன். மிக ஆழமாக அவர் எழுதும் அரசியல் கட்டுரைகள் மிகவும் தரம் வாய்ந்தவை. இராணுவ ஆய்வாளர் என்று விதந்தேந்தப்படும் இக்பால் அக்தாஸின், ஈழப்போராட்டம் பற்றிய பல எதிர்வுகூறல்களே தவறாக இருக்கும்போது தராகியின் (அவர் முன்னால் போராளியாக இருந்தது ஒரு காரணமாயிருக்கக்கூடும்) கட்டுரைகள் மிகச் சரியாக எழுதப்பட்டிருப்பது கண்டு நான் வியந்திருந்திருக்கின்றேன். தராக்கி போல முந்தி தினமுரசில் ரமேஷிம் எக்ஸ்ரே ரிப்போட் என்று நல்ல போரியல் கட்டுரைகள் கொலைசெய்யப்படும்வரை எழுதியவர். இன்னும் தராகி முன்வைக்கும் தமிழ்த்தேசியத்தில் எனக்கு முரண்பாடுகள் இருப்பினும், ஈழப்போராட்டம் சரியான திசையில் செல்வதற்காய், இலத்தீன் அமெரிக்கா, பாலஸ்தீனிய, ஆபிரிக்கா நாடுகளின் தேசியப்போராட்டங்களின் வெற்றி தோல்விகளை அலசி, ஈழப்போராடத்தின் ஒப்பிட்டு எழுதிய கட்டுரைகளில் தராகியின் ஆழமான அறிவையும், விரிந்த வாசிப்பையும் அவதானித்திருக்கின்றேன்.
...
இந்தப்பொழுதில், எல்லாம் போயிற்று போ!

4/29/2005 08:33:00 PM
இளங்கோ-டிசே said...

A good article about Sivaram
By: Theiveekan
http://www.tamilnatham.com/articles/theiveekan20050430.htm

4/30/2005 12:45:00 AM
Narain Rajagopalan said...

வருத்தப்படுகிறேன் என்கிற சொல்லால் ஒரு புத்திஜீவியின் இழப்பினை சொல்லமுடியாமல் போனாலும், வேறு சொற்கள் இல்லாமல் நொண்டியடிக்கிறேன். தராக்கி பற்றி நிறைய படிக்கவில்லையாகினும், அவரின் நேர்மையும், கட்டுரைகளையும் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

இன்னமும் எத்தனை உயிர்களை இழந்து ஈழத்தமிழரின் உரிமைகளை கோரப் போகிறோம். :(

4/30/2005 01:51:00 AM
இளங்கோ-டிசே said...

சிவராம்,கனடா 'தமிழ்ச்சோலை'யிற்கு (இறுதியாய்) வழங்கிய,
'சமகால அரசியல் ஆய்வு'

இதில் கூட விரிவாக, ட்சூனாமி கட்டமைப்பின் உதவி வழங்கும் பின்னணியின் அரசியலை விபரிக்கின்றார். அழகாக நோர்வே, அமெரிக்காப் பின்னணிகளையும், ட்சூனாமி நிவாரண உதவிகளின் சரியாகப் பங்கிடப்படாத நிலையை சரியாக வெளியுலகத்திற்குக் கொண்டுவரும் புலிகளின் 'தயங்கும்' மனப்பான்மையையும் சாடியிருக்கின்றார்.
....
இன்னொரு முறை, சிவராம் தனது உலக அரசியல் அறிவை எப்படி ஈழப்போராட்டத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றார் என்பதைப் பாருங்கள். S*** man, We really have lost a talented guy :-(.

4/30/2005 12:56:00 PM
இளங்கோ-டிசே said...

மன்னிக்கவும், மேலேயுள்ள பின்னூட்டத்தில்
"...ட்சூனாமி நிவாரண உதவிகளின் சரியாகப் பங்கிடப்படாத நிலையை சரியாக வெளியுலகத்திற்குக் கொண்டுவரத் 'தயங்கும்' புலிகளின் மனப்பான்மையையும் சாடியிருக்கின்றார்..."
என்றிருந்திருக்கவேண்டும்.

4/30/2005 01:05:00 PM
கொழுவி said...

தெய்வீகன்!
நீண்டகாலம் அவரோடு பத்திரிகையாளராக உங்களுக்கிருந்த தொடர்புகளை வைத்து நீங்கள் விரிவான கட்டுரையொன்றை வரைய வேண்டும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

4/30/2005 07:30:00 PM
இளங்கோ-டிசே said...

Another link, Another point of view:
http://www.tamilcircle.net/news/Sivaram.htm

5/02/2005 11:06:00 PM
இளங்கோ-டிசே said...

Sivaram Dharmeratnam: A Journalist’s life
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=14778

5/02/2005 11:15:00 PM