கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Friday, May 20, 2005

வசந்தகாலத்தில்
வருகின்ற வாரயிறுதிகளுக்கு
தனித்துவமான வனப்புண்டு

இயற்கையின் விசித்திரங்களுடன்
விரிகின்ற மலர்களும்
அதன்,
வர்ணங்களையும் வாசத்தையும்
தம்முடன் காவிச்செல்கின்றதான
பிரமையைத்தரும் பெண்களும்
புத்துணர்ச்சி ஊட்டுவர்
மனதுக்கு

நண்பர்கள் கூட்டம்
நல்ல உணவு விடுதிகள்
திரைப்படங்கள்
அரையிருட்டுக் கிளப்புக்கள்
சிலவேளைகளில்
இத்தனையாம் மணித்துளியில் விழிக்கவேண்டுமென்ற
அவதியில்லா ஆனந்தச்சயனம்
இப்படித்தான்
பொழுதுகள் கழியும் பலருக்கு

கிளப்பிற்கு வரும்
அறிமுகமில்லா நங்கைகளுடன்
whine-up செய்தாடப் பிரியப்படும்
சிலருக்கு
மானப்பிரச்சினையாகி விடுகின்றது
தாம் அழைத்துச்செல்லும்
சகோதரிகளை தோழிகளை
யாரோ ஒரு அந்நியன்
கூட ஆடவரும்படி அழைக்கும்போது

இழுத்து மூடிய
கதவைத்துளைத்து
குண்டொன்று பாய
காலணியைக் கழற்றிய நிலையிலேயே
சரிந்து வீழ்கின்றாள்
ஒரு பெண்

அவள்
ஆவிபிரியும் கடைசிக்கணங்களை
நிராதரவாய் பார்க்கும் தகப்பன்
சித்தம் குழப்புகின்றான்

அனைத்து அடையாளங்களும் மறைத்து
தலைமறைவு வாழ்க்கையில்
வெற்றுப்பொழுதுகள் கழிக்கும்
*Bullet
நீயும் அறிதல் கூடும்
உனனிடம் இருப்பதுவும்
ஒரு உயிர்
அதைக் காவுகொள்ள காத்துக்கொண்டிருப்பதுவும்
ஒரு புல்லட்தான்
என்று.

*ஒரு சூட்டுச்சம்பவ கொலைவழக்கில் தேடப்படும் ஒருவரின் nick name

9 comments:

கறுப்பி said...

டீசே அண்மையில் ஏதாவது கிளப்பில் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததா? இப்போது அடங்கிவிட்டது என்றெல்லோ நினைத்துக் கொண்டிருக்கின்றேன். கவிதை நன்றாக உள்ளது.

5/20/2005 10:41:00 AM
-/பெயரிலி. said...

டிஜே, கருத்து நன்றாகத்தான் இருக்கிறது. கவிதை என்ற வகைடினைக் குறிவைத்திருந்தீர்களென்றல், கொஞ்சம் உரைநடையை நோக்கி நகர்ந்ததாகத் தெரிகிறது.

5/20/2005 10:49:00 AM
இளங்கோ-டிசே said...

கறுப்பி, அவ்வவ்போது சில சம்பவங்கள் நடந்துகொண்டுதானே இருக்கின்றது. சென்றமாதம் நடந்த ஒரு வளாக விழாவில்கூட, ஏற்பட்ட கலைப்பில் இடையில் மாட்டிக்கொண்ட ஒருபெண்ணுக்கு ஒருகண் பார்வை முற்றாகப்போய்விட்டதென்று (யாருக்கோ குறிவைத்து எறியப்பட்ட போத்தல் பகுதியால்) அறிந்தேன் :-(.
....
பெயலிலி, நீங்கள் கூறியதன்பிறகு திரும்பி வாசிக்கும்போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. நீங்கள் முன்பொருமுறை கூறியதுமாதிரி, வலைப்பதிவு சொந்தவீடாக இருப்பதால், வெட்டுதல், கொத்துதல், திருத்துதல், ஆறப்போடல் இல்லாமல் உடனேயே எழுதி, பதிந்துவிடுவதுதான் பிழைபோலக்கிடக்கின்றது.
ஆனால் உரைநடைக்கிட்டவான கவிதைகளில் எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒருவித ஈர்ப்பு இருந்து வந்திருக்கின்றது. அதுவும் பிரேம்-ரமேஷின் கவிதைகளில் ஆழமாய் போகப்போக பிடிப்பு இன்னும் கூடிவிட்டது :-).
....
கார்த்திக், வசந்தன், கிஸோ போன்றவர்கள் அடிக்கவரமுன்னர், ஒரு தற்காப்புக்காய், எல்லோரும் சிறுகதையில், நாவலில் ஒரு 'கவிதைத்தன்மை' தெரிவதாயாய் அடிக்கடி சொல்கின்றார்கள் தானே, அதுமாதிரி கவிதைகளில் உரைநடையைப் புகுத்தும் முயற்சிதான் என்று தப்பித்தலுக்காய் சொல்லிவிடுகின்றேன் :-).

5/20/2005 02:12:00 PM
இளங்கோ-டிசே said...

//கலைப்பில்//
'கலகலப்பில்' என்றிருந்திருக்கவேண்டும் :-(.

5/20/2005 02:28:00 PM
Anonymous said...

பதிந்தது:Manithan

டிஜே, 'புலெற்' என்பவரை குற்றவாளிபோல் சித்தரிக்கிறீர்கள்.அவர் நீங்கள் கூறும் குற்றத்தை செய்திருக்கலாம். ஆனால், அவரை நீமன்றம் ஒன்று குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கும்வரை நீங்கள் அப்படிக் கூறுவது தவறு. இது ஒரு தனிமனிதரின் உரிமை சர்ந்த விடையம். பல உண்ர்சிகரமான விடையங்களில் துரதிஷ்டவசமாக் இவ்வாறான் முன் முடிவுகலையெ எடுக்கிறோம்.

உங்களை ஒரு நிகழ்வு பாதித்தென்றால், அதைப் பற்றி எழுதும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் என்னொருவரின் அடிபடை உரிமையை மறுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. அதையை நீங்கள் செய்திருக்கிறேர்கள்.

20.5.2005

5/20/2005 03:59:00 PM
இளங்கோ-டிசே said...

மனிதன், எழுதிய கவிதைகளுக்கு அர்த்தம் கொடுப்பதில்லை என்றுதான் ஆரம்பத்திலிருந்தே கடைப்பிடித்து வருகின்றேன். அண்மையில்தான் ஒரு கவிதையின் வரிகளுக்காய் பேசமுயன்றேன். அதுகூட அந்தவரிகள் எனக்கே ஒருவித மயக்கத்தை திரும்ப வாசித்தபோது தந்ததால் (அதற்கு முன் எனக்கு நெருக்கமான சிலரிடம் தனிப்பட்டரீதியில் கேட்டு உறுதிசெய்துவிட்டுத்தான்) தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தேன். எந்தப்படைப்பும் பொதுத்தளத்தில் வைக்கப்படும்போது அதை எழுதியவர் சொந்தம் கொண்டாட முடியாது என்பதுதான் எனது நம்பிக்கை. அத்துடன், எழுதியவர் கூறிய அர்த்தத்தில்தான் ஒரு படைப்பு பார்க்கப்படவேண்டும் என்பதுகூட ஒருவித எழுத்து வனமுறைதான். அதைவிட, யாராவது ஒரு வாசகர் படைப்பு மீதான தன் வாசிப்பை முன்வைக்கும்போது, இல்லை இந்த அர்த்தத்தில்தான் நான் எழுதினேன் என்று வாசகரையும் தான் எழுதிய கண்ணோட்டத்தில் பார்க்கவைப்பது இன்னும் அதிகூடிய வன்முறை.
.....
உங்கள் கருத்தை வாசித்தபோது, சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணத்தோன்றியது. இதைக்கூட எழுதியவர் என்ற ரீதியில் அல்ல, உங்கள் வாசிப்பைப் பார்க்கும் இன்னொரு வாசகர் என்றரீதியில்தான் கூறுகின்றேன். நிச்சயம் நான் சொல்வதை உங்களுக்கு மறுக்கும் உரிமையும் இருக்கின்றது என்பதை ஒரு தெளிவுக்காய் முற்கூட்டியே கூறிக்கொள்கின்றேன்.
முதலில் Bullet என்பவரைக் கதைப்பது அவரை மட்டும் குறித்தல்ல. இப்படி இளைஞர் வன்முறையிற்கு இரையாகிப்போகும் அனைவரையும் முன்வைத்துத்தான் (உதாரணங்கள் சொல்லத்தேவையில்லை என்று நினைக்கின்றேன் :-( ). Bullet என்பவர் ஒரு குறியீடு அவ்வளவே.
//'புலெற்' என்பவரை குற்றவாளிபோல் சித்தரிக்கிறீர்கள்//
இதை நீங்கள் எங்கே எனது வரிகளில் கண்டுபிடித்தீர்கள் என்று நீங்கள் தெளிவுபடுத்தினால் தொடர்ந்து உரையாட இலகுவாயிருக்கும்.

//அவரை நீமன்றம் ஒன்று குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கும்வரை நீங்கள் அப்படிக் கூறுவது தவறு. இது ஒரு தனிமனிதரின் உரிமை சர்ந்த விடையம்.//
இதுகூட சரியாக விளங்கவில்லை.
சிலவேளைகளில் இந்தவரிகளிலிருந்துதான் இந்த முடிவை எடுத்தீர்களோ தெரியாது...
//நீயும் அறிதல் கூடும்
உனனிடம் இருப்பதுவும்
ஒரு உயிர்
அதைக் காவுகொள்ள காத்துக்கொண்டிருப்பதுவும்
ஒரு புல்லட்தான்
என்று.//
இது நிச்சயம் நீதிமன்றத்தையோ, பொலிசையோ குறிவைத்து எழுதப்பட்டதல்ல என்பதே எனது வாசிப்பு. இப்படி ஒரு சம்பவம் (அந்தப்பெண்ணின் இறப்ப்பு) நடந்தபின், பழிவாங்கல் சம்பவங்கள் கட்டாயம் நிகழத்தான் செய்தன/செய்கின்றன. இந்தக்கொலையின்பின் யதார்த்த்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை நீங்களும் அறிந்திருக்கக்கூடும். இது நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பை நினைவில் நிறுத்தியல்ல. இந்தச் சம்பவத்தின்பின் குழுக்களின் வன்முறை நீட்சியடையப்போவதை....எந்தப்பொழுதிலும் பாதிக்கப்பட்ட குழு (சிலவேளைகளில் இவர் குற்றவாளியில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் கூட) இவரைத்தீர்த்துக்காட்ட காத்துக்கொண்டிருக்கின்றது என்பதைத்தான் நான் எனது வாசிப்பாய் கொண்டேன். தன் வாழ்வையே இருட்டாக்கிவிட்டு சிந்திந்துக்கொண்டிருக்கும் ஒருவனின் மனநிலையத்தான் பிரதிபலிக்க முயன்றேன்.
//ஆனால் என்னொருவரின் அடிபடை உரிமையை மறுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை//
உண்மைதான். ஏற்றுக்கொள்கின்றேன். அவரவர்களின் காலணிகளில் நுழையாதவரையில் எதுவுமே தீர்ப்பாய் தெளிவாகச் சொல்லமுடியாது. இந்தக் கவிதையும் எதையும் தீர்ப்பாய், Bullet என்பவர் குற்றஞ்செய்துவிட்டார் ஆகவே அவருக்குத் தண்டனை கட்டாயம் கொடுக்கத்தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கவில்லை என்று தான் எனது வாசிப்பாய் நான் கொள்கின்றேன். ஆனால் அவரின் தலைமறைவு வாழ்க்கை அவரும் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதற்காய்தான் பூடகமாய் குறிப்பிட விளைகின்றது இந்த வரிகள் என நினைக்கின்றேன் (//அனைத்து அடையாளங்களும் மறைத்து
தலைமறைவு வாழ்க்கையில்//)
.....
பல 'மனிதன்'கள் சில இடங்களில் எழுதிக்கொண்டிருபதால் நீங்கள் எந்த 'மனிதன்' என்று தெரியவில்லை. இல்லாவிட்டால் உங்கள் 'மற்றப்' பெயரை பயன்படுத்தலாம் தானே, ஒரு தெளிவான அடையாளத்துக்காய் (வெப் கவுண்டர் பொய்சொல்லாது தானே :-) )

5/20/2005 09:42:00 PM
Ayyanar Viswanath said...

டிசே
இந்த கவிதையை ஐந்தாம் பத்தியிலிருந்து படித்துப்பார்த்தேன்.கச்சிதமான வடிவமா இருக்கு..வடிவம் அவசியமா என்ன? :)
புது சிந்தனை நல்லாருக்கு

5/20/2007 08:35:00 AM
இளங்கோ-டிசே said...

நன்றி அய்யனார்.

5/20/2007 11:32:00 AM
அருண்மொழிவர்மன் said...

எனக்கு ஆகப் பிடித்த உங்கள் கவிதை, அடிக்கடி உங்களிடம் மேற்கோள் காட்டும் கவிதை

2/12/2009 09:03:00 PM