கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

ராப் பாடல்களினூடு ஒரு சிறு பயணம்

Thursday, May 05, 2005

சென்ற வருடத்துப் பிற்பகுதியில்தான் ராப் பாடல்களை ஆர்வத்துடன் கேட்கத்தொடங்கியிருந்தேன். மென்மையான பாடல்களில் ஆரம்பித்து, கானாப் பாடல்களில் வெறிபிடித்து அலைந்த ஒருவன், ராப் பாடல்களை நோக்கிப் பயணிப்பது பெரிய விடயமல்ல. ராப் பாடல்களைக் கேட்கக்கேட்க அந்தக் கலைஞர்களின் பின்புலம் பற்றி அறியும் ஆவல் தொற்றிக்கொள்ள, ராப் பாடல்களுக்கான சஞ்சிகைகளையும், அவர்களைப் பற்றி வெளிவந்த திரைப்படங்களையும் பார்க்கத்தொடங்கினேன். அண்மையில் டூபாக்(Tupac)கின் வாழ்க்கை வரலாற்றை ஒரு ஆவணமாகக் காட்சிப்படுத்தும், Tupac:Resurrection என்ற படத்தையும், அதற்கு முன் Eminem, Eminemவாக நடித்து வெளிவந்த, 8 Mile படத்தையும் பார்த்திருந்தேன்.ராப் பாடல்களிலும் கானாப் பாடல்களிலும் பல ஒற்றுமைகளை அவதானிக்கலாம். இரண்டுமே விளிம்புநிலை மனிதர்களின் ஆளுமையை விரித்துச் சொல்பவை; வரிகளில் கெட்ட வார்த்தைகள் மிகச் சாதாரணமாய் புழங்கும். கானாப் பாடல்களைப் போல, அநேக ராப் பாடல்களும் கணநேரத்தில் தோன்றுபவை. 8 miles படத்தைப் பார்த்தால் மிக அழகாக இதையெல்லாம் காட்சிப்படுத்தியிருப்பார்கள். உடலை முறிக்கும் தொழிற்சாலைகளில் கிடைக்கும் ஓய்வுநேரத்தில் ஒருவர் சும்மா ஒரு பாடலைத் தன்பாட்டில் தொடங்க, அப்படியே சங்கிலி இணைப்புக்களாய் மற்றவர்கள் தொடர்ந்தபடி இருப்பார்கள். ராப் பாடல்களுக்கான போட்டிகளில் கொடுக்கப்படும் பீட்ஸ¤ற்கு(beats) உடனேயே பாடல்களைப் புனைந்தபடி, லயத்தையும் தவறவிடாமல் இருக்கவேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.



ராப் பாடல்களின் ஒரு முக்கிய ஆளுமைகளில் ஒருவராக இருப்பவர் Tupac. தனது இருபத்தைந்து வயதிலேயே வன்முறைக்கு இரையாகிவிட்டாரென்றாலும், அவர் அந்தக்குறைந்த வயதிலேயே தனது சமூகத்திற்காய் சிந்தித்து, அரச அதிகார மையங்களுக்கு எதிராய் கடும் விமர்சனத்தை தனது பாடல்களிலும், நேரடிப்பேச்சிலும் வைத்திருக்கின்றார். ஒரு பேட்டியில் டூபாக் கூறுவார், அமெரிக்கா அரசாங்கம், FBI, பொலிசார் எல்லாமே ஒருவிதமான காங்குகளாலேயே நடத்தப்படுகின்றது. ஆனால் கறுப்பின மக்கள் மட்டுமே காங்குகளாய் இருக்கின்றார்கள் என்று கூறப்படுவதிலேயே ஆரம்பிக்கின்றது, கறுப்பின மக்களுக்கெதிரான நிறவெறி என்று. இன்னும், அமெரிக்கா அரசாங்கம் உண்மையில் வீதியில்திரியும் வன்முறைக்கும்பல்களை, சரியான வேலைத்திட்டங்களுடன் முற்றாக இல்லாமற்செய்துவிடமுடியும், ஆனால் அவையிற்கு அப்படிச் செய்துவிடுவதிலோ, கறுப்பின மக்கள் வன்முறையற்ற வாழ்வு வாழ்வதிலோ அரசாங்கத்திற்கு விருப்பமில்லை. அதனால்தான் அரசமைப்புக்கள் எதுவுமே உருப்படியாகச் செய்யாமல் இருக்கின்றன என்று. தனது வாழ்க்கை, Thug Life என்று பிரகடனப்படுத்தி (இப்போது இந்த வார்த்தை ராப் பாடல்களில் சாதாரணமாகிவிட்டாலும்) டூபாக்தான் இதை முன்வைத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன். தன்னைப் போன்ற மக்கள் வன்முறையை வாழ்வு முறையாகத் தேர்ந்தெடுக்க திணிக்கப்பட்டு இருக்கின்றார்களே தவிர, விரும்பி இந்த வாழ்க்கை முறையை ஏற்றவர்களில்லை என்று இறுதியாய் சிறையில் இருந்து வந்த சமயத்தில் கொடுத்த ஒரு நேர்காணலில் சொல்கின்றார். பசியில் இருக்கும் ஒருவன் உணவு வேண்டுமென்றால், முதலில் ஒரு வீட்டின் கதவைத் தட்டலாம். திறக்காவிட்டால், உடைத்து விட்டு கேட்கலாம். அதுவும் சாத்தியமில்லையென்றால் திருடியே கொள்ளலாம் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார். டூபாக் எந்த வன்முறை recordம் இல்லாமல் ஒரு கறுப்பர் என்ற அடையாளத்திற்காகவே சும்மா முதலில் சிறையில் அடைக்கப்படுகின்றார் (பதின்ம வயதில் சிறைக்குப்போகும் கொடுமையைப் போல ஒன்றும் இல்லையென்ற்கின்றார். அதுவும் அங்கே கிட்டத்தட்ட 30, 40 வயதில் இருப்பவர்களுடன் பழகும்போது வாழ்க்கையே நிலைகுலைந்து போய்விடும் என்று, அப்படியொருத்தரும் பதின்மவயதில், சிறைக்குச் செல்லாதீர்கள் என்று எச்சரிக்கவும் செய்கின்றார்). பிறகு அதுவே அவரை வன்முறையாளனாக்கின்றது. முதலில் துவக்கெடுத்துச் சுட்டதும் பொலிசாரை நோக்கித்தான். அப்படியே தொடங்கிய வன்முறைக்காய், அவர் இசைத்தட்டுக்கள் விற்று வந்த பணத்தின் பெரும்பகுதியை (கோர்ட், கேஸ்) என்று செலவழித்துமிருக்கின்றார். பிறகு வன்முறை வழக்குகளுடன், பெண்கள் மீதான் பாலியல் குற்றச்சாட்டுக்களும் தொடர அவர் வாழ்வில் நிம்மதியில்லாமல் அலையத்தொடங்குகின்றார். அரசாங்கத்தின் மீது கடுமையாக விமர்சனங்கள் வைக்கத்தொடங்க, அவர்மீது பல பொய்யான வழக்குகள் எல்லாம் அரச தரப்பால் தொடரப்படுகின்றன. எனினும் அதையும் மீறி, அவரது இசைத்தட்டுக்கள் மிகப்பெரும் வரவேற்பை இரசிகர்களின் மீது பெறுகின்றன. அதற்கு இன்னொருகாரணம்,மிகக்கடுமையான வார்த்தைப் பயன்பாடுகளும், பாடல் வரிகளை அரசியல்படுத்தியமையும். இவ்வாறு ஒரு போராட்டம் குணம் டூபாக்கிற்கு எப்படி வருகின்றதென்றால், அவரது தாயிடமிருந்தும், புறக்கணிப்பிலிருந்தும் என்றும் நாம் கண்டுகொள்ளலாம். டூபாக்கின் தாயார் கறுப்பின மக்களின் எழுச்சிக்காய் போராடிய, Black Panthers இயக்கத்தில் தீவிரமாய் இயங்கிய ஒரு பெண்மணியாவார். கிட்டத்தட்ட டூபாக்கைக் கருவாக வயிற்றில் தாங்கிய அதிககாலங்களில் டூபாக்கின் தாயார் சிறையில்தான் கழித்திருக்கின்றார். . தனது தாயின் போராட்டக்குணம்தான் தனக்கும் வந்திருக்கின்றது என்று டூபாக் பலவிடங்களில் கூறியிருக்கின்றார். இளவயதில் தான் வளர்ந்த இடத்தில் இருந்த ஏழ்மையைக் காணச்சகிக்காது நீயுயோர்க், நியூஜேர்சி, லொஸ் ஏஞ்சல்ஸ் என்று ஓவ்வொரு இடமாய் ஓடிப்போனபோதும், எங்கேயும் கறுப்பினமக்களின் வாழ்க்கை ஒரேமாதிரி மிகவும் கொடுமையாக இருந்தைப் பார்த்த கோபந்தான் தன்னை இப்படியொரு போராட்டப்பாட்டுக்காரனாக ஆக்கியது என்கின்றார் டூபாக். 25வயது வயதில், மைக் டைசனின் பிரபல்யம் வாய்ந்த ஒரு குத்துச்சண்டைப் போட்டியைப் பார்த்துவருகின்றபொழுதில், தெருவோரத்தில் சுடப்படுகின்றார். முதலில் பலமுறைகள் சுடப்பட்டும், தப்பிய அவர் இந்தமுறையும் திரும்பிவருவார் என்ற நம்பிக்கையில் இருந்த அவரது இரசிகர்களால் டூபாக்கின் இளவயது மரணத்தைத் தாங்கமுடியாமல் போகின்றது. இன்றும், கிட்டத்தட்ட பத்துவருடங்கள் ஆனபின்னும், டூபாக் எந்த இசைத்தட்டு வந்தாலும் சிலவாரங்களாவது (எம்ஜிஆர் படங்கள் போல) billboardல் முதலிடத்தில் இருக்காமற் போவதில்லை (அண்மைக்கால உதாரணம், Eminem தயாரித்த, டுபாக்கின் Loyal to the Game).



இன்றைய பொழுதில் அதிகம் பேசப்படும் ராப் கலைஞர்களில் முக்கியமானவர்கள், எமினமும், 50centம். இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் single mothersல் வளர்க்கப்பட்டவர்கள். இன்னமும் தமது தந்தை யார் என்ற உண்மை தெரியாதவர்கள் (பிரபல்யமான பொழுதில் அதை அறிவதில் தங்களுக்கு எந்த விருப்பமும் இல்லையெனவும் பிரகடனப்படுத்தியவர்கள்) இவர்கள் இருவரினதும் தாயார்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். 50Centன் தாயாரை யாரோ சுட்டுத்தான் கொன்றிருக்கின்றார்கள். தாயாரைக் கொன்றவர் குறித்து அறியும் ஆவல் இருக்கின்றதா என்று வினாவியபோது, தனது தாயார் 15வயதிலேயே குழந்தையைப் பெற்றெடுத்தவர். பிறகு cracks விற்றுத்தான் வாழ்க்கையை நடத்தியவர். கட்டாயம் அவர் crackஆல் அல்லது துவக்கால் இறப்பதைத் தவிர வேறொரு முடிவை எப்படி எதிர்பார்க்கமுடியும் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். எமினமின் பாடல்கள் கிட்டத்தட்ட டூபாக்கின்(அதிக கடுமை இல்லையெனினும்) பாடல்களுக்கு அண்மையாக உள்ளன. அமெரிக்கா அரசாங்கத்தையும், ஈராக் போரையும் நிர்த்தாட்சணமின்றி Mosh என்ற பாடலில் விமர்சிக்கின்றார். அவ்வாறே, மைக்கல் ஜாக்சனின் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தையும் கிண்டலத்துப் பாடுகின்றார். மைக்கல் ஜாக்சனின் பாடல்குறித்து பலரிடமிருந்து, மிகக்கடுமையான விமர்சனம் வந்திருக்கின்றது. எனினும் அவர் தான் கூறியது சரியென்று, எந்தச் சமரசமும் செய்யாது இன்னும் இருப்பது அவர் மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றது. அந்தப்பாடலில்கூட (Just Lose it), தனக்குக் கூட ஒரு ஆளுமையாக இருந்த மைக்கல் ஜாக்சனின் இன்றைய காலத்து வீழ்ச்சியைத்தான் எமினிம் கூறுகின்றார்.



50Cent ஒரு முக்கிய பாடகர் என்பதைவிட, அவரது கோமாளித்தனங்கள்தான் முக்கியமானது. அவர் ஆரம்பத்திலேயே தனது கொள்கை என்னவென்பதைச் சொல்லிவிடுகின்றார். Get rich or Die trying என்றுதான் கூறிக்கொண்டு வருகின்றார். இன்றைக்கு மிகப்பெருஞ்செல்வந்தராகிவிட்டார். அவரது G-unitம், ஆடை விற்பனைகளும் வெற்றி நடைபோடுகின்றன. அண்மையில் வெளிவந்த The Massacre இன்னும் billboardல் முதலிடத்தில்தான் நிற்கின்றது. இந்த இசைத்தட்டை வெளிவந்த ஒருவாரத்தில், கிட்டத்தட்ட 1.8 மில்லியன பிரதிகள் விற்கப்பட்டிருக்கின்றன. 50Centன் வாய் சும்மா இருக்காது. ஜோர்ஜ்.புஷ் மாதிரி யாரையாவது எதிரிகளை உருவாக்கிக்கொண்டேயிருப்பார். ஏற்கனவே Fat Joe, Jadakissயோடு beefs செய்தது காணாது என்று இப்போது The Game என்பவரோடு சண்டைபிடிக்கத்தொடங்கிவிட்டார். அதன் எதிரொலிதான், நியுயோர்க்கிலுள்ள ரேடியோ நிலையத்தருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சண்டை. அதில் The Gameன் நண்பர் படுகாயமடைந்திருக்கின்றார். இத்தனைக்கும் சில மாதங்களுக்கு முன்தான், 50Cent, The Gameயோடு சேர்ந்து The Documentary என்று ஒரு இசைத்தட்டை வெளியிட்டிருந்தார். நிலைமை இன்னும் கடுமையாகப் போகப்போகின்றது என்று உணர்ந்த, 50Cent பிறகு The Gameயோடு, ஒரு இணக்கத்தைச் சேர்ந்து செய்திருந்தார். இந்தக் கூட்டத்தை, அமெரிக்கா/கனடா ஊடகங்கள், ஒரு சமாதான உடன்படிக்கைக்கு நிகராய் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தன. இன்னும் 50Cent, குண்டுதுளைக்காத இரண்டு ஜீப்புகளை ஒவ்வொன்றும் ஒரு லட்சத்திற்கும் மேலாகச் செலவு செய்து, நியுயோர்கிலும், லொஸ் ஏஞ்சலிலும் வைத்திருக்க்கின்றார். இவ்வளவு செலவு செய்து வைத்திருந்தும், '........ guys don't like to shoot me' என்று அவ்வவ்போது கவலைப்படுகின்றார். அண்மையில் G-unit குழுவிலுள்ள Lloyd Banksன் விருந்திற்கு, supriseயாய் கலந்துகொண்டு, (bullet-proofs அங்கியுடன்) ஒரு பாடலையும், சனங்களுக்கருகில் நின்று 'பயமில்லாமல்' பாடியுமிருக்கின்றார். கிட்டத்தட்ட ஒன்பது முறைகள் சூடுவாங்கியவர், என்பதால் நிரம்ப எண்ணிக்கையான பாதுகாவலர்களுடன் திரிபவர். இத்தனை அபத்தங்கள் இருந்தாலும், 50Cent அருமையாகப் பாடக்கூடியவர் என்பதை மறுக்கமுயாது. காமத்தை அப்படியே மனதில் வழியவிடும், Candy Shop என்ற் ஒரு பாடலிற்காகவே அவரது இறுதி இசைத்தட்டை வாங்கலாம்.



Snopp Dogg கிட்டத்தட்ட டூபாக் போல பிரபல்யமானவர். இவரில் என்னை வியக்க வைப்பது இவருக்கு ஒழுங்காக நடனமாடவோ அல்லது ஊடகங்கள் முன்வைக்கும் 'ஆண்மை'க்குரிய உடலமைப்போ இல்லாமலே இரசிகர்களை எப்படி ஈர்த்துக்கொண்டார் என்பது. இவரது அண்மைய வரவான, Rhythm & Gangsta: The Masterpiece ல் உள்ள பாடல்களில், 'Drop it like it's hot' மிகப்பிரபல்யம் வாய்ந்தது. அந்த இசைத்தட்டில் ஒரு பாடலில், 'leave her, dunt hit her' என்ற வரிகள் வரும் இன்னொரு பாடலும் எனக்குப் பிடித்தமானது. வழமையான Bitches, M****F** போன்ற வார்த்தைகள் இருந்தாலும், ஆகக்குறைந்தது, விலகிப்போகும் பெண்ணிற்கு வன்முறையால் பதில் சொல்லாது, சும்மா விலகிவிடு என்று அவர் சொல்வதை, அவரது இரசிகர்கள் கொஞ்சமாவது கவனிக்கத்தான் செய்வார்கள் என்று நம்புகின்றேன். அவரது நேர்காணலில் ஒரு நிருபர் இப்படிக் கேட்பார், 'Drugs அடிக்கின்றீர்களா?' என்று அவர் 'இல்லையே அதை நிறுத்தி கனகாலம் ஆயிட்டேதே' என்பார். 'அப்படியா? எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டன?' என்று நிருபர் ஆச்சரியத்துடன் திரும்பிக்கேட்க, 'ம்...சில வாரங்களாய்த்தான்' என்று அவர் கூறியதிலுள்ள நகைச்சுவையை இரசித்துமிருக்கின்றேன்.



ராப் கலைஞர்கள் தமது திசையை இன்றைய காலகட்டத்தில் மாற்றிவிட்டனரென்ற குற்றச்சாட்டை சில கட்டுரைகளில் வாசித்திருக்கின்றேன். பத்து வருடங்களுக்கு முன்வரை அதிகாரங்களுக்கெதிராய் அறைகூவல் விடுபவையாய் இருந்தவை, இன்று காமத்திலும், தனிநபர்/குழு வன்முறையோடு தேங்கிவிடுகின்றன என்று கூறுகின்றனர். தமது ஆலபங்களை பிரபல்யப்படுத்துவதற்காய், ராப் பாடகர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கின்றனர் என்ற விமர்சனங்கள் இருக்கின்றன. Janet Jackson, Super Bowlல் தனது மார்பைக் காட்டியதும், 50Cent, The Gameயோடு சுடுபட்டதும் கூட தமது ஆல்பங்களை விளம்பரப்படுத்தும் உத்திகளே என்கின்றனர். ராப் பாடல்களில் மிக முக்கியமான குறையாக நான் பார்ப்பது அவை பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையும், பாடல்களைக் காட்சிப்படுத்தும்போது பெண்களைக்காட்டும் முறையையும்தான். இப்படியான் சித்தரிப்புக்கள்தான் பெண் ராப் பாடகர்களின் பாடல்களிலும் இருப்பது கண்டு வியந்துமிருக்கின்றேன். ஏன் பெண் பாடகிகளால் இந்த ஆணாதிக்கத்தன்மையைப் பிரித்துணர முடிவதில்லை என்று யோசித்திருக்கின்றேன். இல்லாவிட்டால், இப்படியிருப்பதுதான் கலாச்சாரம் என்று ஆக்கிவிட்டார்களோ தெரியவில்லை. பதினமத்தைக் கடந்த என்னைப் போன்றவர்களுக்கு ராப் பாடல்கள் வாழ்வில் பெரிதாய் எதையும் திசை திருப்பிவிடப்போவதில்லை. ஆனால் பதினமத்தில் இருப்பவர்களுக்கு இந்தப்பாடல்கள் பெண்கள் பற்றிய பிழையான புரிதல்களைக் கொடுத்துவிடக்கூடும். உண்மையில் என்னைப் பொறுத்தவரையில் ராப் பாடல்களை ஆர்வமாகக்கேட்கத்தொடங்கிகாலத்தின்பின் பல விசயங்களை அறிந்திருக்கின்றேன்/பெற்றிருக்கின்றேன் என்றுதான் சொல்லவேண்டும். முக்கியமாய், சரியென்று நான் நினைப்பதை, பிறரின் முகத்திற்கு நேரெதிரே சொல்லும் துணிவு, எனக்கு இன்றைய பொழுதில் ஒரளவுக்காவது இருக்கின்றதென்றால், அது ராப்பாடல்களின் மூலம் வந்தது என்றுதான் கூறுவேன். வாழ்வில், எத்தனையோ புனிதப்பிரகிருதிகள் உடைந்துபோவதைப் பார்க்கும்போது, தாங்களும் பலவீனமான ஆகிருதிகள் என்பதை மறைக்காமல், பாடிக்கொண்டிருக்கும் ராப் பாடகர்களையும் சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமுமில்லை.

(குறிப்பு: மேலேயுள்ளவை நான் வாங்கிய சில இசைத்தட்டுக்களின் முகப்புப் படங்கள்)

54 comments:

Narain Rajagopalan said...

50 Cent நடித்து வந்திருக்கும், நைக்கி விளம்பரமோ / அடிடாஸ் விளம்பரமோ சர்ச்சையினை கிளப்பிவிட்டிருக்கிறது பார்த்தீர்களா ? நீங்கள் சொன்னது என்னுடைய களம். சென்னை கல்லூரிகளை வைத்து ஒரு காலத்தில் ராப் பாடல் பாடியவன் நான். அதெல்லாம் ஒரு காலம். கலைஞனால், தமிழ்நாட்டில் காசு கிடைக்காது என்று தெரிந்துதான் மென்பொருள் பன்னூடகத்துறைக்கு வந்துவிட்டேன். விளம்பரங்கள் எழுதுகிறேன். இன்றைக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடித்துவிட்டு, நிதானமாய் இரவு வந்து விரிவாக எழுதுகிறேன்.

5/05/2005 01:25:00 AM
அன்பு said...

நாராயணன்,

நீங்கள் எதை விட்டு வைத்தீர்!?
அதைச் சொன்னால் அதுபற்றி ஒரு பதிவு போடுவதாக உத்தேசம்:)

5/05/2005 06:08:00 AM
-/பெயரிலி. said...

/Janet Jackson, Super Bowlல் தனது மார்பைக் காட்டியதும்,/
Janet Jackson, Rapper?!
Since when bro? ;-)
பின்னேரம் வந்து மிகுதியைப் பேசிக்கொல்கிறேன் ;-)

5/05/2005 08:17:00 AM
-/பெயரிலி. said...

/காமத்தை அப்படியே மனதில் வழியவிடும், Candy Shop என்ற் ஒரு பாடலிற்காகவே அவரது இறுதி இசைத்தட்டை வாங்கலாம்./
இங்கே கத்தோலிக்கப்பாடசாலைகளிலே candy shop இனைக் கேட்கக்கூடாதென்று போன கிழமையிலிருந்து பிரச்சனை நடக்கிறது.
ராப் பாடகர்கள் பெண்களை உருவகிக்கும் விதம் குறித்தும் பெண் ராப் பாடகர்கள் குறித்தும் எழுதக்கூடாதா? ;-)

5/05/2005 08:23:00 AM
சன்னாசி said...

Snoop Dog உண்மையிலேயே ஒரு வசீகரமான personality - இந்தக் கணக்கில் வராதெனினும், இதேபோல Outkastன் Andre3000ம் கூட...

5/05/2005 09:36:00 AM
Venkat said...

டி.சே - நல்ல பதிவு. உங்களைப் போலவே எனக்கு ராப் பிடிக்கும் ஆனால் அதன் இசைக்காக மாத்திரமே.

கலகக்காரர்களாக ஆரம்பிக்கும் இன்றைய ராப் பாடகர்கள் என்னைப் பொருத்தவரை உண்மையில் இறுகிப்போன ஸ்டீரியோடைப்பாகவே தெரிகிறார்கள் (இதற்கும் அவர்கள் இசைக்கும் சம்பந்தமில்லை. அதை நான் மிகவும் ரசிக்கிறேன்). அவர்களுடைய நடவடிக்கைகள் வர்த்தக உலகின் இன்னொரு முகமாகவே தென்படுகின்றன. உதாரணமாக, ஒரு புதிய குறுவட்டு வ்ருவதற்கு முன்னால் ஒரு துப்பாக்கிச் சூடு என்பது இப்பொழுது நடைமுறை. இதில் எவ்வளவு கலகம் எவ்வளவு விளம்பரம் என்பது ரெக்கார்டிங் கம்பெனி முதலாளிகளுக்குத்தான் தெரியும்.

இந்த ராப் பாடகர்கள் உண்மையாகவே தாங்கள் நேசிக்கும் பிறவகை சங்கீதத்தை ஒரு கலகத்துக்காவேனும் தங்கள் குறுவட்டில் போடுவார்களா. அந்த தைர்யம் பீட்டிஸ்க்கு இருந்தது. அவர்களால் தபலாவையும், சரோடையையும் நார்வீஜிய சங்கீதத்தையும் சகஜமாகத் தங்கள் பாடலில் தைர்யமாக நுழைக்க முடிந்தது. ஜ்மி ஹெண்ட்ரிக்ஸின் கிடார் பெருங்குரலெடுத்து அழுதது. The Who ராக்கின் உச்சத்தைத் தொட்டு அதில் ஒபராவை வடிக்க முடிந்தது. இவர்கள் எல்லோருக்கும் தங்கள் திறமையை முதலாக வைத்துக் கலகம் செய்ய முடிந்தது. இசைத்தட்டுக்களின் விற்பனையைப் பற்றிய கவலையெல்லாம் கிடையாது.

இன்றைய ராப்-பில் உண்மையான கலகம் இருக்கிறது என்று நம்புவது கஷ்டமாக இருக்கிறது. முதலில் தங்கள் முதலாளிகளை எதிர்த்துக் கலகம் செய்ய முயலட்டும். RIAAவின் அப்பத்தமான தொழில்நுட்ப விரோதப் போக்குகளைத் தங்கள் பாடலில் சொல்லட்டும்.

5/05/2005 12:24:00 PM
இளங்கோ-டிசே said...

//Janet Jackson, Rapper?!
Since when bro? ;-)//

Since I started listening her songs :-). Big bro making me in trouble. Yah, You're right Peyarili. It is wrong to say that Janet is a rapper. At the same time, I don't think so, we can include her as a pop singer. In some music stores, I see her CDs are listed in rap/dance category same as Lil Kim and Missy Elliott.
......
Friends, Me writing this in a rush. I will write more about this later tonight. Thankx.

5/05/2005 12:29:00 PM
-/பெயரிலி. said...

வெங்கட் சொல்லும் இன்றைய ராப்பர்களின் மெய்யான நிலை குறித்தே என் பார்வையும். பில் கொஸ்பியும் இதையே சுட்டுகிறார். இதுபற்றி விபரமாகப் பின்னால்
----
after all, Maya converges (in)to Missy Elliott ;-)
Maya's galang a lang --> Missy Elliot's One minutue Man ;-)

5/05/2005 01:21:00 PM
சுந்தரவடிவேல் said...

இதுகளை ரொம்பக் கேட்டது/பாத்தது இல்லை. ஆவல் இருக்கு. இப்போ மியா மியா (MIA) என்று கத்துகிறார்களே அவரும் ராப்பர்தானே?

5/05/2005 01:47:00 PM
பத்மா அர்விந்த் said...

டிசே
எனகு ராப் பாடல்களின் வடிவமைப்பு பிடிக்கும். ஆனால் இசை கலஞர்கள் ஒருவிதத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தங்களை கட்டாயப்படுத்திக் கொண்டு வாழ்கிறார்களோ என்ற எண்ணம் உண்டு.
ஜனெட் பாப் இசை பக்கம் என்றல்லவா நினத்தேன்!!

5/05/2005 02:54:00 PM
Voice on Wings said...

DJ, Rap மிகவும் பிரபலமடையக் காரணமாயிருந்த Run DMC, MC Hammer போன்றவர்களை குறிப்பிட்டிருக்கலாம். Shaggy என்ற Jamaican பாடகரும் பிரபலமானவர். Rap, Reggae ஆகியவற்றுக்கு இடைபட்ட இசை வகை அவருடையது. Reggae கேட்பதுண்டா?

French மொழியிலும் Rap உண்டு. மொழியின் அழகினாலோ என்னவோ எனக்கு அவை ஆங்கில Rapஐ விட அதிக விருப்பம் :) French Rapper K-Melஇன் குரல் எனக்குப் பிடித்த ஒன்று.

இசையைப் பற்றிய கட்டுரையை அளித்ததற்கு நன்றி :)

5/05/2005 02:57:00 PM
Narain Rajagopalan said...

//ஜ்மி ஹெண்ட்ரிக்ஸின் கிடார் பெருங்குரலெடுத்து அழுதது. //
ஆஹா, அழுகையா அது. ஆனந்த சங்கீதமய்யா அது. டிசே, பொதுவாக நான் ராப் பித்து பிடித்து அலைந்தது ஒரு 8 - 9 வருடங்களுக்கு முன்னால். அப்போதுதான் இந்தியாவில் பாபா செகல் என்கிற பாடகர் பிரபலாமாகி இருந்தார். அவரின் "தண்டா தண்டா பாணி" என்கிற ஆல்பம்தான் நான் கேட்ட முதல் ராப்/பாப் ஆல்பம். பின் கொஞ்சமாய் சேனல் வீ, எம் டிவி பார்த்து என்னறிவினை வளர்த்துக் கொண்டேன் ;)

நிறைய ராப் பாடகர்கள் வந்தாலும் என் தேர்வு இன்னமும் எமெனெம் தான். ஆப்ரோ அமெரிக்கர் அல்லாத ஒருவர் ராப் பாடுதல் வெகு அபூர்வம். அவ்வகையில் பார்த்தால், எமெனெம் ஒரு விதிவிலக்கு. நீங்கள் சொல்வது போல, சமூக நையாண்டிகளை சர்வசாதாரணமாக கெட்ட வார்த்தைகளொடு சொல்லிவிட்டு போவார்கள். ஒரு விகடகவியின் நகைச்சுவையுடனும், எள்ளலுடனும் அவர்களின் பாடல்கள் அமைந்திருக்கும் (எமெனெமின் மைக்கேல் ஜாக்ஸன் பகடி பார்த்திருக்கிறீர்களா!)

நிறைய நபர்களின் பெயர்கள் தெரியாது ஆனாலும், பாடல்களை ரசித்திருக்கிறேன். அதெல்லாம் விடுங்க டிசே, நாம டெஸ்டினிஸ் சைல்ட் பார்ப்போம் ;)இங்கே தமிழில் ஒரே ஒரு ராப் பாடகர் இருக்கிறார். அவர் பெயர் பாசீ. பாபாவில் வரும் B to the A to the B to the A .. BABA... என்கிற ரஜினி துதிப்பாடல் அவர் எழுதியதுதான். தற்போது ஒரு ஹிந்தி ஆல்பம் செய்திருக்கிறார் அவ்வப்போது எஸ்.எஸ்.ம்யுசிக்கில் காட்டுகிறார்கள்.

இந்திய ராப் பாடகர்கள் என்றெடுத்தால், பாபா செகலுக்கு பின் எவரும் தேற மாட்டார்கள். அதற்குள் தலேர் மெஹந்தியின் பஞ்சாபிய பாங்க்ராவின் கலவையும், எளிய சொற்களில் ( சா ரா ரா...., கர்தி ரப்பு ரப்பு, நனனானே நாரே நாரே) இந்தியாவினை கலக்கிவிட்டதால், ராப்புக்கு ஆப்பு.

இது தாண்டி ட்ரம்ஸ் சிவமணியின் தனி ஆவர்த்தனங்கள் குறுந்தகடுகளாக கிடைக்கும். வாங்கி கேட்டுப் பாருங்கள். இல்லையென்றால், த்ரிலோக் குர்த்யு என்கிற ப்ர்க்யுஸன்ஸ்டின் கேசட் கேளுங்கள். இப்போது நான் விரும்பி கேட்பது அரேபிய பாடல்கள், சூஃபி பாடல்கள், அல்பேனிய பாடல்கள், நிறைய ஆப்ரிக்க தொல்குடிப் பாடல்கள். iTunes இறக்கி வைத்துக் கொண்டு, அதன் ரேடியோ அலைவரிசைகளாக கேட்டு வாருங்கள். உலக சங்கீதம் உன்னதமானதாக இருக்கிறது.

5/05/2005 02:59:00 PM
-/பெயரிலி. said...

/Shaggy என்ற Jamaican பாடகரும் பிரபலமானவர். Rap, Reggae ஆகியவற்றுக்கு இடைபட்ட இசை வகை அவருடையது. Reggae கேட்பதுண்டா? /
அய்யோ அய்யோ!! சகி என் சகா (சபா ராங் வேறை ஆள், ரைட்டோ ;-)). அவருடைய பாடல்களிலே இருக்கின்ற கருத்தினை விட்டுவிடுவோம். ஆனால், அவை இழையும் விதங்கள் திரும்பத் திரும்பக் கேட்க வைத்தன. You are my Angel, Mr. Bombastic, எல்லாவற்றிலும்விட, It wasn't me. சபாவுக்கும் சகிக்கும் ஒரு ஒற்றுமையிருக்கு. அவர்களின் குரல்களிலும்விடக் கொஞ்சம் நல்ல குரல் இருக்கின்றவர்களைத் தமக்கு ஒத்தூத விடுவது.... (யாராவது இதை இளையராசாவுக்குச் சொல்லுங்கோ ;-))

5/05/2005 03:36:00 PM
-/பெயரிலி. said...

/MC Hammer/
Jump! Jump! Jump!! You can't touch tHIS ;-)
recently he made a short comeback with his You can't in a superbowl ad... even he can touch it ;-)

5/05/2005 03:39:00 PM
இளங்கோ-டிசே said...

அடடா, இப்படியெல்லாம் ராப்பில் ஆழமான ஈடுபாடுள்ள பலரைப் பார்க்கும்போது சந்தோசமாய்த்தானிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு ராப் இசை பற்றி அவ்வளவு ஆழமாகத் தெரியாது. நான் கேட்கத் தொடங்கியவை அண்மையில் வெளிவந்த இசைத்தட்டுக்களில் இருந்துதான். அதுவும் ஒருவிதமான தேர்வாய், Dr.Dreயின் தயாரிப்பில் வெளிவந்த, அவர் அறிமுகப்படுத்திய இசைக்லைஞர்களின் பாடல்களைத்தான் தேடித் தேடிக் கேட்கத் தொடங்கினேன். நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் ராப் பாடகர்களை, East Coast, West Coast என்ற இருபிரிவாகப் பிரித்து (அவ்வவ்போது அடிப்பட்டும்) வருகையில் எனது தெரிவுகள் East Coast பாடகர்கள் மீதே அதிகம் இருக்கின்றது. Dr.Dreயின் கண்டுபிடிப்புக்கள்தான், எமினமும், 50Centம், The Gameம்.
ராப் உலகில் இன்றும் பேசப்படும் முக்கியமான மூன்று கொலைகள், Tupac, Notorious B.I.G மற்றும் Jam Master Jay(Run DMC குழுவிலிருந்த மூன்றுபெயரில் ஒருவர்) என்பவர்களினது. இன்னும் இவர்களது கொலைகளைச் செய்த சரியான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. டூபாக்கின் கொலையில், Notorious B.I.G மற்றும் Puff Daddy போன்றவர்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படப்படுகின்றனர். எனினும் நான் வாசித்தளவில், Notorious B.I.Gயின் குழுவில் இருந்த ஒருவர் டூபாக்கைச் சுட்டவர் என்றும், பிறகு அதே நபரே Notorious B.I.G ஐயும், டூபாக் இறந்த ஒருவருடத்தில் சுட்டுக்கொன்றார் என்றும்தான் சொல்கின்றன. எனவே இந்தக்கொலைகள் சாதாரணமான குழுக்களின் வன்முறை என்று கூறமுடியாது, இன்னொரு பெருங்கையும் மறைந்திருக்கின்றது என்று புரிகின்றது. டூபாக், B.I.G இரண்டு நபரையும் சுட்டுக்கொன்ற அந்த நபரும் சிலவருடங்களின் பின் கொல்லப்பட்டிருப்பது சந்தேகங்களை இன்னும் அதிகரிக்கின்றது.
பெயரிலி கூறிய, ராப்பில் பெண்களின் நிலை பற்றி பெண்கள் யாராவதுதான் விரிவாக எழுதவேண்டும். நாங்கள் (ஆண்கள்) எதையெழுதினாலும், எங்கேயாவது ஒரிடத்தில் ஆணாதிக்கம் நுட்பமாய் மறைந்திருக்கும். எனினும் சில்வற்றைக் குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன். டூபாக்கின் ஆவணப்படம் பார்த்தபொழுது, அதில் ஒரு காட்சியில் பெண்கள் அமைப்புக்கள் ராப் பாடகர்கள் பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் வார்த்தைகள்/காட்சிகளுகெதிராக தமது எதிர்ப்புக்களை நடத்தியதாய் காட்டியிருந்தார்கள். இன்னொரு வியப்பு என்னவென்றால், இன்று மேய்ந்துகொண்டிருந்த ராப் பாடலுக்கான் XXL இந்த மாத இதழில், இப்படியான வார்த்தைப் பிரயோகத்திற்கும், பெண்களின் உடலை நுகர்வாக்கி எடுக்கும் music videosவிற்கும் எதிராக ஒரு பெண்கள் இதழின் ஆசிரியர்குழு கண்டனம் தெரிவித்து, ராப்பிற்காய் வரும் இதழ்களின் ஆசிரியர்களை அழைத்தும் கலந்துரையாடலைச் செய்திருக்கின்றது. முக்கியமாய், பெண்களை Pimps யாய் பாடல்களில் உருமாற்றும் வார்த்தைப் பிரயோகங்கள் பற்றித் தமது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றனர். அத்துடன் அண்மையில் நடைபெற்ற ஒரு இசை விருது விழாவிற்கு, Snopp Dogg தனது குழுவிலுள்ள இரண்டு நடனக்காரிகளை விலைமாதர்கள் போலக் காட்சியளிப்பதுபோல ஆடைகள் அணிவித்துக்கொண்டு நிகழ்வில் பங்குபற்றியது குறித்தும் விமர்சித்துள்ளனர். இந்த எதிர்ப்புணர்வை இன்னும் பரவலாகக் கொண்டு சென்று ராப் இரசிகர்களிடையே கொண்டுசென்றால் மிகவும் நல்லது.

5/05/2005 10:52:00 PM
இளங்கோ-டிசே said...

//கலகக்காரர்களாக ஆரம்பிக்கும் இன்றைய ராப் பாடகர்கள் என்னைப் பொருத்தவரை உண்மையில் இறுகிப்போன ஸ்டீரியோடைப்பாகவே தெரிகிறார்கள் (இதற்கும் அவர்கள் இசைக்கும் சம்பந்தமில்லை. அதை நான் மிகவும் ரசிக்கிறேன்). அவர்களுடைய நடவடிக்கைகள் வர்த்தக உலகின் இன்னொரு முகமாகவே தென்படுகின்றன.//
உண்மைதான் வெங்கட். The Gameன் The Documentaryல் வரும் முதலாவது skitல் அவர் மிகத் தெளிவாகக்கூறுகின்றார். செல்வந்தர்கள் இன்னும் செல்வந்தர்களாகின்றார்கள், ஏழைகள் இன்னும் ஏழைகள் ஆகின்றனர். இதைப் பார்த்து வாளாவிருப்பதை விட, இந்த gameஜ விளையாடத்தொடங்குவதுதான் உத்தமம். I, into the game என்று கூறிவிடுவார்.
மற்றது, மிகவும் ஏழ்மையான நிலையில், cracks விற்றுக்கொண்டும் (50Cent, The Game), கிட்டத்தட்ட 'மாமா வேலை' செய்துகொண்டிருந்தவர்களும் (Snopp Dogg) ராப் இசைக்கு வரும்போது அவர்களது முக்கியமான நோக்கம், எப்படி விரைவாய் பணக்காரகளாக ஆவது என்பதில்தான் இருக்கும். அதைத் தவறென்றும் கூறமுடியாதுதானே. ஆனால் இப்படியான விளிம்புநிலை மனிதர்களுக்கு ராப் உலகம் தனது கரங்களை விரித்து அரவணைத்து இருப்பதைப் பாராட்டவேண்டும். அண்மையில் வாசித்த, VIBEலிலோ அல்லது SOURCEலிலோ, எழுதிய ஆசிரியத்தலையங்கத்தில், 'நிச்சயம் ராப் உலகத்தால் ராப்பர்களின் உலகம் மிக வசதியாகிப்போய்க்கொண்டுதானிருக்கின்றது. ஆனால் இன்னும் வறுமையின் பிடியிலிருக்கும் மனிதர்களுக்கு குறிப்பிடும்படியான எந்த வசதியும் வந்துவிடாத ஒருவிதமான capitalist நிலையில்தான் ராப் உலகமும் இருக்கின்றது' என்று எழுதியிருந்ததை வாசித்ததாய் நினைவு.
//RIAAவின் அப்பத்தமான தொழில்நுட்ப விரோதப் போக்குகளைத் தங்கள் பாடலில் சொல்லட்டும்.//
ராப் பாடகர்களின் பெரும்பணத்தையே அவர்களைச் sign பண்ணும் கொழுத்த முதலாளிகள்/நிறுவனங்கள் அபகரித்துக்கொள்வதில் இதற்கெதிராய் எல்லாம், ராப் பாடகர்கள் குரல்கொடுக்கும் காலம் இப்போதைக்கு வரும் சாத்தியம் இல்லை என்றே நினைக்கின்றேன்.
.......
பத்மா, பெயரிலி
நீங்கள் இருவரும் கூறியதுமாதிரி, Janet Jackson, Pop பாடகர்தான். ஆனால் இப்போது Hillary Duff, YoYo போன்ற பதின்மவயதுப்பெண்களின் பாடல்களைக் கேட்கும்போது, Janet யே அதற்குள் அடக்குவது எனக்கு அபத்தமாய் தோன்றுவது மாதிரித்தான் தெரிந்தது. எனினும் நீங்கள் இருவரும் கூறுவதே சரியானது.

5/05/2005 11:15:00 PM
இளங்கோ-டிசே said...

//Shaggy என்ற Jamaican பாடகரும் பிரபலமானவர். Rap, Reggae ஆகியவற்றுக்கு இடைபட்ட இசை வகை அவருடையது. Reggae கேட்பதுண்டா? //

Voice on wings,
பெயரிலி கூறியதுமாதிரி, 'சகி' எனக்கும் சகாதான். வளாகத்து நிகழ்ச்சிகளில் நண்பர்கள் 'It wasn't me' பாடலைப்பாடும்போது, 'it wasn't me' என்று கோரஸ் அவர்களுடன் பாடி எனது 'குரல்' வளமையைக் காட்டுவதுண்டு. அப்படியே இன்னொரு பாடலில் வரும், 'you're my darling angel' என்று வரிகளைப் பாடி சிலரது கோபப்பார்வைகளை பரிசாக, Shaggyயின் மீதுள்ள 'ஆர்வத்தால்' பெற்றிருக்கின்றேன்.
Sean Paulன் (http://www.sean-paul.net/index2.html) பாடல்கள் கேட்டிருக்கின்றீர்களா? இந்தியப்பின்புலமும் அவருக்கு இருக்கின்றது. அருமையானதொரு reggae பாடகர். Shake that thing, shake that thing miss எனக்குப் பிடித்த அவரது பாடல்களில் ஒன்று. Beyonceயோடு ஒரு பாடல் பாடியிருப்பதாயும் நினைவு.

5/05/2005 11:34:00 PM
-/பெயரிலி. said...

/Sean Paul/
three little birds with ziggy marley!!!.
Sean Paul~Shaggy+ Bob Marley

5/05/2005 11:44:00 PM
இளங்கோ-டிசே said...

//இது தாண்டி ட்ரம்ஸ் சிவமணியின் தனி ஆவர்த்தனங்கள் குறுந்தகடுகளாக கிடைக்கும். வாங்கி கேட்டுப் பாருங்கள். இல்லையென்றால், த்ரிலோக் குர்த்யு என்கிற ப்ர்க்யுஸன்ஸ்டின் கேசட் கேளுங்கள். இப்போது நான் விரும்பி கேட்பது அரேபிய பாடல்கள், சூஃபி பாடல்கள், அல்பேனிய பாடல்கள், நிறைய ஆப்ரிக்க தொல்குடிப் பாடல்கள். iTunes இறக்கி வைத்துக் கொண்டு, அதன் ரேடியோ அலைவரிசைகளாக கேட்டு வாருங்கள். உலக சங்கீதம் உன்னதமானதாக இருக்கிறது. //
//நாராயணன்,
நீங்கள் எதை விட்டு வைத்தீர்!?
அதைச் சொன்னால் அதுபற்றி ஒரு பதிவு போடுவதாக உத்தேசம்:) //
அன்பு நீங்கள் கூறுவதை நானும் வழிமொழிகின்றேன் :-).
........
நரேன், எமினம்தான் எனக்கும் மிகப்பிடித்த பாடகர். அவரது encore இசைத்தட்டுக்கு ஒரு பதிவு முன்பு இங்கேஇங்கே எழுதியிருந்தேன். இந்த இசைத்தட்டைக் கேட்டதிலிருந்துதான் தொடங்கியது, ராப் இசை மீதான ஆர்வம். எமினம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூறும் 8 Mile படம் பார்த்தீர்களா? அவரது பாடல்களைப் பார்த்துவிட்டு பின்புலம் ஆராயத்தொடங்கியபோது இன்னும் அதிக பிணைப்பை அவரது வாழ்க்கை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் அவரது சில நேர்காணல்களை வாசித்தபோது முந்தியிருந்த temper குறைந்து மிக நிதானமான மனிதராகக் காட்சியளிப்பதாய் தோன்றியது. தனது பிள்ளை மீதுள்ள பாசத்தை முன்வைக்கும் Mocking Bird கேட்டிருந்தீர்களா? மனதை மிகவும் நெகிழச்செய்யும் ஒரு பாடல்.
....
எமினம் தனது வெள்ளைத் தோலையும் தாண்டி, ஒரு rapperயாய், இன்று வெற்றியடைந்திருப்பது அவரது இடையறாத முயற்சியும், இசையின் மீதுள்ள ஆர்வமுந்தான். The rappers' rapper என்றுதான் 50Centம் பாராட்டுகின்றார். Dr.Dre அல்லது Eminemத்தோடு யாராவது சண்டைக்கு அழைத்தால், அவர்கள் தனக்கும் எதிரி என்றுதான் 50Cent கூறுகின்றார். அது உண்மைதான் என்பதை, VIBE விருது வழங்கும் விழாவில், Dr.Dreயிற்கு ஒருவர் முகத்தில் குத்தியபோது, 50Centன், G-unitல் உள்ள Young Bucks கத்தியால் எதிர் நபரைக் குத்தினதில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
....
எமினம் பற்றியும் சில குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. அவர் ஆரம்பக்காலத்தில் racistயான பாடல்களை கறுப்பர்களுக்கு எதிராக record செய்து வைத்திருந்தார் என்று. பிறகு அது தனது 16 வயதில்தான் பாடப்பட்டது என்றும் அந்தக்காலத்தில் தனக்கு இனத்துவேஷம் குறித்து அவ்வளவு புரிதல் இல்லையென்றும் எமினம் மறுத்திருந்தார். எனினும் ஒரு பத்திரிகை அந்த பாடல்கள் எமினமின் 16 வயதில் அல்ல, 20வது வயதில் பதிவுசெய்யப்பட்டன என்று நிரூபித்திருந்தது. அத்துடன் ஒரு கறுப்பினப்பெண் தனக்கு பதின்மவயதில் காதலியாக இருந்தார் என்றும் (கறுப்பினத்தவர்களின் ஆதரவைப்பெற) பொய்சொன்னார் என்ற இன்னொரு குற்றச்சாட்டுமிருக்கின்றது.
....
இதையெல்லாம் மீறி எமினமிம் இடம் ராப் உலகில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 18 மில்லியன் copies இந்த இணைய காலத்திலும் விற்கப்பட்டிருப்பது என்பது அவ்வளவு இலகுவில்லை (50Centன் அதிக copies, 11 மில்லியன்). அண்மையில் வெளிவந்த Encore இசைத்தட்டும் ஏற்கனவே 4மில்லியனுக்கு மேலே விற்றுவிட்டதாய் கூறுகின்றனர்.
.....
எனது பதிவில் கூறிய ஒருவிடயத்தை இனி மாற்றி வாசிக்கவேண்டும். 50Centன், இசைத்தட்டுப் பின்னுக்குத் தள்ளப்பட, Springsten இசைத்தட்டு BillBoardல் முதலிடத்தைப் பெற்றதாய் இன்றொரு செய்தியில் வாசித்திருந்தேன். சடுதியாக பத்து வீதமான வீழ்ச்சியை 50Cent இசைத்தட்டு விற்பனையில் அடைந்துள்ளதாய் அந்தக்குறிப்புக் கூறுகின்றது.
........
சுந்தரவடிவேல், மியாவை rapper என்று ஒரளவிற்கு சொல்லலாம். எனக்கென்னவோ அவரை Rapற்கும், Reggaeற்கும் இடையிலுள்ள (Shaggy மாதிரி) ஒருவர் என்றுதான் அடையாளப்படுத்தலாம் போலத்தான் தெரிகின்றது. சந்தோசமான விடயம் என்றால், ராப் இதழான, XXL இந்த இதழ், மியா பற்றிய ஒரு அரைவாசிப்பக்க செய்தியை பிரசுரித்திருக்கின்றது :-). அதில் மியா, girls in the streets தனது பாடல்களுக்கு தந்த வரவேற்பிற்கு நன்றி கூறியதுடன், ஆண்கள் indie musicயுடன் மட்டும் நிற்பதாய் கவலைப்பட்டிருந்தார். எங்கையப்பா, இன்னும் 'அருளர்' வாங்காதவர்கள் எல்லாம் அந்த இசைத்தட்டை வாங்கி மியாவுக்கு ஆதரவளியுங்களேன். கனடாவில் நான் எப்போது ஒரு entertainment club கட்டுகின்றேனோ, அப்போது முதலாவது பாடகராய் மியாவை அழைப்பதாயும் உத்தேசம்.
.......
நரேன், எத்தனையோ கனவுகளை மிதித்து, குழிகளில் புதைத்துவிட்டுத்தானே வாழ்வில் நகர்ந்தபடி இருக்கின்றோம். ஒரு பாடகராக ஆக முடியாத வலியைப் புரிந்துகொள்ளமுடிகின்றது. எனினும், நீங்கள் ஒரு பாடகராய்ப்போயிருந்தால், வலைப்பதிவுகளில் நாங்கள் அனைவரும் ஒரு நல்ல நண்பரை இழந்து அல்லவா இருப்போம் (அத்தோடு தனிப்பட்டவகையில், நான் பாண்டிச்சேரிக்குப் போய் கள்ளுக்குடிக்கும் வாய்ப்பையும் தவறவும் விட்டல்லவா இருப்பேன் :-) )
பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

5/06/2005 12:25:00 AM
Narain Rajagopalan said...

//சுந்தரவடிவேல், மியாவை rapper என்று ஒரளவிற்கு சொல்லலாம். எனக்கென்னவோ அவரை Rapற்கும், Reggaeற்கும் இடையிலுள்ள (Shaggy மாதிரி) ஒருவர் என்றுதான் அடையாளப்படுத்தலாம் போலத்தான் தெரிகின்றது.//

மியா rapper இல்லை. மியாவின் பாடல்கள், ரெகே, கொஞ்சம் மெட்டல் ஜாஸ், தொட்டுக்க ராப் என்கிற கலவையில் அமைந்திருக்கும். எனக்கென்னவோ, லத்தீன் அமெரிக்க பாடகிகள் என்றால்தான் தலையாடுகிறது. பெயரிலி சொல்வதுபோல்,மண்ணிற அழகிகள், மண்ணிற அழகிகள் தான். ஷகிரா கேட்டீர்களா? அதெல்லாம் சரி, N Sync என்றொரு குழு Backstreet Boys போலவே சுற்றிக்கொண்டிருந்ததே இருக்கிறார்களா? சமீபத்தில் மிகவும் ரசிக்கும் பாடகர்களாக பான் ஜோவியும், U2வும் இருக்கிறார்கள் . Tomb Raider படத்திற்காக U2 ஒரு பாடல் பாடியிருப்பார் என்று நினைக்கிறேன். அதில் தெறிக்குமிசையும், காட்டப்படும் விஷவல்களும் பிரமாண்டம்.

நான் பாடகனாக மாறவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை டிசே. முதலில் வேலை, பிறகு மற்றவை என்று பிரித்துவைத்திருக்கிறேன். இன்றைக்கும், நண்பர்களின் திருமணத்திற்கு வெளியூர் போனால், பஸ்ஸோ, காரோ, ரயிலோ கானா சர்வசாதாரணமாக, நிறைய கெட்ட வார்த்தைகளுடன் அனல் பறக்கும் ;-)

5/06/2005 02:37:00 AM
Narain Rajagopalan said...

சொல்ல மறந்தது ஹோட்டல் ரூவாண்டா பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன். பார்த்துவிட்டு பதியுங்கள். நேற்று தமிழ்மணத்தில் ஏதோ பிரச்சனை போல இருக்கிறது என் பதிவினை காட்டி, உடனே எடுத்து விட்டது.

5/06/2005 02:38:00 AM
இளங்கோ-டிசே said...

//எனக்கென்னவோ, லத்தீன் அமெரிக்க பாடகிகள் என்றால்தான் தலையாடுகிறது. பெயரிலி சொல்வதுபோல்,மண்ணிற அழகிகள், மண்ணிற அழகிகள் தான். ஷகிரா கேட்டீர்களா? //
கேட்டேன், நரேன்.
உண்மைதான், மண்ணிற அழ்கிக்ள்தான் என் மனதுக்கும் பிடித்தவர்கள் :-). அப்படியே மண்ணிய நடிகைகளானSalma Hayek, Penelope Cruz, Eva Mendes சேர்த்துகொள்ளலாம் :-).

//அதெல்லாம் சரி, N Sync என்றொரு குழு Backstreet Boys போலவே சுற்றிக்கொண்டிருந்ததே இருக்கிறார்களா? //
அவர்கள்(N Sync ) பிரிந்துவிட்டார்கள். அதிலிருந்து வந்த ஒருவர்தான், Justin Timberlake. மிகுதி, பிறகு.

5/06/2005 12:15:00 PM
Narain Rajagopalan said...

Justin Timberlake - இந்த பெயரை பிரிட்னி ஸ்பியர்ஸோடு கேள்விப்பட்டிருக்கிறேன். சரியா?

5/06/2005 11:38:00 PM
-/பெயரிலி. said...

/Justin Timberlake/
அஃது ஆறிய பழங்கஞ்சி
இன்றைய நாட்டு & நாள் நிலவரத்தின்படி,
Cameron Diaz

ஏன் நரேன், இவ்வளவு நேரம் ஜெனட் ஜக்ஸன் பொப்பா ரப்பா என்று முக்கியமா we வா தம் பிடித்தோம். ஜெனட்டுக்கும் ஜஸ்டினுக்கும் ஏதாச்சும் சம்பந்தமா என்று கேட்காமல் விட்டுவிட்டீர்களே? ;-)

5/07/2005 12:24:00 AM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ராப் பாடல்களில் இருக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனாலும், வேக வேகமாகப் பாடுவது பிடித்திருக்கிறது.

இங்கே எமினெம்'இன் சிடி வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாள் (அக்கா மகள் - 11 வயது).

சித்தியா கொஞ்சம் சொல்லுங்க.
மற்றவர்களும் சொல்லுங்க. நன்றி!

5/07/2005 04:01:00 AM
இளங்கோ-டிசே said...

மதி, இப்படி என்னைச் சிக்கலில் மாட்டிவிட்டீர்களே :-). என்னைப் பொறுத்தவரை, எமினமின் cleaned version இசைத்தட்டைக்கூட பதினொரு வயதுக்கார பிள்ளைக்கு வாங்கிக்கொடுக்கவேண்டாம் என்றுதான் சொல்வேன், எனினும் தடுத்தாலும் அவர்கள் ஏதோ ஒருவகையில் இந்தப்பாடல்களைக் கேட்கத்தான் செய்வார்கள் (நண்பர்கள் அல்லது இணையம் மூலமாக) என்பதுவும் உண்மையே :-((.

பிள்ளைகள் இங்கே அதி விரைவாக வளர்ந்துவிடுகின்றார்கள் என்பதுதான் பெரிய பிரச்சினை. இன்னும் ஆறு வயது கூட பூர்த்தியாகாத, அண்ணாவின் மகன் தனது வயதிற்குரிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்காது, பதின்மவயதுக்காரருடைய (teens tv) பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வதென்றுதான் யோசித்துக்கொண்டிருக்கின்றேன்/றோம். அதுவும், பெண்கள் அல்லது பெண்கள் பற்றிய உரையாடல்கள் வந்தால், eww girls என்று சேனல்களை மாற்றுகின்றான். இவற்றையெல்லாம் எங்கே கற்கின்றான் என்பது இன்னும் புரியாத விடயம். எப்படிச் சரியான திசையில் திரும்புவது என்பது இன்னும் விளங்காமற்தான் இருக்கின்றது. சில நாள்களுக்கு முன் பஸ்சில் ஒருபதின்மவயதுக்காரி, தனக்கும், பெற்றோருக்குமான முரண்களை விவரித்து, இறுதியில் சொன்னாள், Brown familyயில் ஒரு பெண்ணாகப்பிறப்பது மிகப்பெரும் பாவமென்று. இன்னும் பல பிள்ளை வளர்ப்புப்பற்றிய கதைகள் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒன்று மட்டும் புரிகின்றது, இங்கே பிள்ளையாய் வளர்வதும் கடினம், அதேபோல் பிள்ளை வளர்ப்பதுவும் கடினந்தான்.

5/12/2005 11:33:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றி டீ.ஜே.

//அதுவும், பெண்கள் அல்லது பெண்கள் பற்றிய உரையாடல்கள் வந்தால், eww girls என்று சேனல்களை மாற்றுகின்றான். இவற்றையெல்லாம் எங்கே கற்கின்றான் என்பது இன்னும் புரியாத விடயம். //

அதைச்சொல்லுங்க. இங்கயும் அதே கதைதான். அதுவும் இந்த ஆறு வயதுக்கு, அவனோட எட்டு வயது கசின் சொல்லிக் கொடுக்கிறான்/அல்லது கேலி செய்கிறான். கூடவே பள்ளிக்கூடத்திலும். அன்னிக்கு அப்படித்தான், 'ஸ்பொஞ்ச் பாப்' படம் பத்தி விலாவாரியா கதை சொல்லிட்டு இருந்தார் (ஆறு வயதுக்காரர்). உள்ளுடுப்பு மாத்திக்கிட்டேன்னு பாட்டுப் பாடுற மாதிரி ஒரு சின்னக் கட்டம் வருதுபோல. கொஞ்சம் வெக்கத்தோட சொல்லி முடிச்சுட்டார். இன்னொரு இடத்தில 'I have a crush'னு யாரோ ஒரு female(ஸ்பாஞ்ச் பாப்'ல எப்படிச் சொல்றது???) ஒரு maleக்கு சொன்னாளாம். சொல்லிட்டு பயங்கர வெக்கம், ஐயாவுக்கு. என்ன ஏதுன்னு விசாரிச்சேன். 'I have a crush'னு சொல்லக்கூடாதாம். நான் சொல்லக்கூடாதான்னு லொள்ளு பண்ணினேன். அய்யோஓஒ இல்ல!னு அலறல். ;)

சரி, அப்ப நான் 'I love you'னு சொல்றேன்.

ஓ! நோ!! girls, boysஐப்பாத்து சொல்லக்கூடாது.

ஏன், நான் ஆண்டி தானே. சொல்லலாம்தானே.

இல்ல. இல்ல. - அவசரமான மறுப்பு.

சரி க்ரஷ்'னா என்ன? ஏன் இப்படி அலறுறீங்க? - நான்

க்ரஷ்'னா ஒரு கேர்ள் அல்லது boy இன்னொரு கேர்ள் அல்லது boyயிட்ட பிடிச்சிருக்கு எண்டு சொல்லுறது. நீங்க சொல்லக்கூடாது. - பெரியவர்.

சரி எனக்கு 'ஐ லவ் யூ' பிடிச்சிருக்கு.

அதுவும் சொல்லக்கூடாது - அவர்தான்.

ஆனா, பிடிச்சிருக்கே. சொல்லவும் பிடிச்சிருக்கே. - மணிரத்திரம் பாணியில் நாந்தான்.

இந்தக் கேஸை ஒண்ணும் பண்ண முடியாதுன்னு விட்டு அடுத்த வி்ஷயத்துக்கு அய்யா தாவிட்டார்.

அவரோட ஃபிரெண்ட் ஒருத்தன், எல்லாத்துக்கிட்டயும், பள்ளிக்கூடத்து கதிரை, மேசை, தரை, பூச்செடி எல்லாத்துக்கிட்டயும் 'எஸ் ஈ எக்ஸ்' வைச்சுக்கிறேன்னு சொல்வானாம். 'ஐ ஹாவ் எஸ் ஈ எக்ஸ் வித் -----'னு எல்லாத்துக்கிட்டயும் சொல்றானாம்.

பக்கத்துல இருந்து கேட்டுக்கிட்டு இருந்த அவனோட மாமா, அப்ப நான் 'ஐ ஹாவ் எ க்ரஷ் ஒன் யூ'னு சொல்லலாமா?னு கேட்க, இல்ல இல்ல ஒரு boy இன்னொரு boyட்ட சொல்லக்கூடாதுன்னு பதில் வந்தது.

ரொம்ப நோண்ட வேணாம்னு விட்டுட்டோம். அவங்க அப்பா கேட்டிருந்தா ரத்தக்கொதிப்பே வந்திருக்கும்!

இதையெல்லாம் எங்க எப்படி கத்துக்கிறாங்க????

-மதி

5/12/2005 11:51:00 PM
இளங்கோ-டிசே said...

//ராப் பாடல்களில் இருக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் என்னைப் பெரிதும் ஈர்க்கவில்லை. ஆனாலும், வேக வேகமாகப் பாடுவது பிடித்திருக்கிறது.//
மதி, நீங்களாவது ப்ரவாயில்லை, இப்படிச் சொல்கின்றீர்கள். வீட்டில், ராப் பாடல்கள் கேட்கும்போது/பார்க்கும்போது, ஏதோ கதைக்கிற மாதிரியும், சண்டை பிடிகிறமாதிரியும், ஏதோ செய்யிறாங்கள், அதை நீயும், ஆவென்று வாயைப் பிளந்து பெரிய விஷயம் போல பார்க்கின்றாய் என்று அம்மா அடிக்கடி சொல்வார் :-).

5/13/2005 09:37:00 AM
இளங்கோ-டிசே said...

ஏற்கனவே குறிப்பிட்ட மாதிரி, பெண்களை இழிவுபடுத்தும் ராப் பாடல்வரிகளுக்கு எதிராக, ESSENCE சஞ்ச்கைப்பெண்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாகக் காட்டுவதென்று முடிவெடுத்துள்ளார்கள் என்று இறுதியாய் வந்த NEWSWEEK (கனடா பதிப்பு) சஞ்சிகையிலும் செய்தி வந்திருக்கின்றது. 'எனது மகளை BITCH என்று கூற ராப் பாடகர்களால் அழைக்கமுடியுமென்றால், அவர்களது பாடலுக்கு BOYCOTT செய்ய எனக்கு உரிமை இருக்கின்றதென்று' ஒரு பெண்மணி இதுகுறி
த்த கலந்துரையாடலில் கூறியிருந்தார்.
பொப் பாடல்களில், BABY, HONEY என்று எப்படி வரிகளுக்கிடையில் அடிக்கடி பாவிப்பார்களோ, அதுபோலத்தான் ராப் பாடல்களில் BITCH, PIMP என்று உபயோகிக்கின்றார்கள். ராப் பாடும் பெண்ளும், VJ பெண்களும் கூட இவை குறித்த எந்தப்பிரக்ஞையும் இன்றி, நான் இந்த நாட்டுப்பின்னணியில் இருந்து வந்தேன், என்று கூறி தமது உடம்பை மட்டும் அதிகவேளைகளில் முன்னிலைப்படுத்துவதைப் பார்க்கும்போது, கவலையாகத்தானிருக்கிறது :-(.

5/13/2005 10:29:00 AM
-/பெயரிலி. said...

சிறுவர் சிறுமிகளைப் பார்த்து, "eeew girls" என்பதும் சிறுமிகள் சிறுவர்களைப் பார்த்து "eeew boys" என்பதும் இங்கே சாதாரணமாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் குழந்தைகள்பொம்மைகளைச் சந்தைப்படுத்துகின்றவர்களும் ஓரளவுக்குப் பொறுப்பேற்கவேண்டும். மிகுதி, சிறுவரிலிருந்து சிறுவருக்கான ஒத்த வயதார் அழுத்தத்தின் விளைவான தொற்று (பதின்மவயது வர இயல்பாகவே இந்நிலை மாறுகிறது. "Gals & guys hang out well")

கணநேர அறியப்படுதலுக்காக(பதினைந்துநிமிடப்புகழ்கூட வேண்டாம்) எதையும் செய்யலாமென்ற உளநிலை குறிப்பிடத்தக்க வீதம் இளந்தலைமுறையிடமிருக்கிறது என்று நினைக்கிறேன். கூடவே, அதன்விளைவான பணம் பண்ணுதலும். ஆனால், ரப் பாடகர்களோடு குழுநடனமாடும் பெண்கள், கிட்டத்தட்ட தமிழ்ப்படத்துணைநடிகைகள்போலத்தான்.அவர்களின் நிலை அப்படி. கோலிவுட்டுக்கும் பாலிவுட்டுக்கும் பள்ளிக்கூட நாடகத்திலே நாயகன் நாயகியாக நடித்த அனுபவத்திலும் பாராட்டிலும் பொங்கி ஓடிவருகின்றவர்கள்போல, ஹொலிவுட்டுக்கும் ஓடுகின்றவர்கள் நிறைய இருக்கின்றார்கள். அவர்களின் முடிவிடம், இப்படியான துணைக்குறையாடைகளோடு ஆடுகளமே :-(

/'எனது மகளை BITCH என்று கூற ராப் பாடகர்களால் அழைக்கமுடியுமென்றால், அவர்களது பாடலுக்கு BOYCOTT செய்ய எனக்கு உரிமை இருக்கின்றதென்று' ஒரு பெண்மணி இதுகுறி
த்த கலந்துரையாடலில் கூறியிருந்தார்./
GirlHot என்கிறவர்களைத் தனியே அந்தப்பாடல்களைக் கேட்கும் வாய்ப்புக் குறைவான மத்திய வயதுப்பெண்மணி பகிஸ்கரிப்பதிலே எந்த விதத்திலே பாடகர் பாதிக்கப்படப்போகிறார்? கேட்கும் இளந்தலைமுறைப்பெண்கள்தான் வாங்க மறுக்கவேண்டும்.


----
/நான் ஆண்டி தானே...சரி, அப்ப நான் 'I love you'னு சொல்றேன்./

ஆண்டியெல்லாம் இப்படியாகச் சொல்லப்போய்த்தான் காஞ்சி கலகலக்குது. :-)

5/13/2005 11:02:00 AM
இளங்கோ-டிசே said...

//Girl Hot என்கிறவர்களைத் தனியே அந்தப்பாடல்களைக் கேட்கும் வாய்ப்புக் குறைவான மத்திய வயதுப்பெண்மணி பகிஸ்கரிப்பதிலே எந்த விதத்திலே பாடகர் பாதிக்கப்படப்போகிறார்? கேட்கும் இளந்தலைமுறைப்பெண்கள்தான் வாங்க மறுக்கவேண்டும்.//
உண்மைதான் பெயரிலி.
.........
//ஆண்டியெல்லாம் இப்படியாகச் சொல்லப்போய்த்தான் காஞ்சி கலகலக்குது. :-)//
மதியிடம் அடிவாங்குவது என்று தீர்மானித்துவிட்டாயிற்றுப்போல :-). எத்றகும் இன்றைய நாளுக்கான horoscopeஐ பார்த்துவிட்டு தொடர்ந்து இன்றையபொழுதுக்கான பின்னூட்டங்களை இடவும் :-)).

5/13/2005 12:07:00 PM
-/பெயரிலி. said...

/மதியிடம் அடிவாங்குவது என்று தீர்மானித்துவிட்டாயிற்றுப்போல :-)/
மதியிட்டையோ? :-( காஞ்சி சங்கர ஆண்டியின் அடிமையளிட்டையெல்லோ எதிர்பார்க்கிறன்.

5/13/2005 12:18:00 PM
SnackDragon said...

டீசே,
நல்ல பதிவு . இரண்டு முறை வாசித்தேன். குறிப்பாக, பதிவினோடே "ராப் பாடகர்களின் வளர்ச்சி" மறுபடியும் முதலாளித்துவம் என்கிற மாதிரி போகிறது என்று சொல்லப்பட்டதை (நீங்கள் சொல்லவில்லை)நான் ஏற்கவில்லை.இந்த குற்றச்சாட்டை அனைத்து தொழில்முனைவரின் பேரிலும் வைக்க முடியும். வைத்தாலும் அதில் ஓர்ளவு உண்மையும் இருக்கும். இங்கு ஜனநாயகமும் கேள்விக்குள்ளாகும். :-(

ராப் பாடல்களூடாக 'பிட்ச்', போன்ற வார்த்தைகளின் பிரயோகம் , என்னை பொறுத்தவரையில் , வர்க்க எல்லைகளை கடக்கும் போது சர்ச்சையை கிளப்புகிறது. முக்கியமாக அதைபோன்றே பால் வேறுபாடில்லாத சொற்களும் புழங்குவதை கணக்கில் கொண்டால், இது ஒரு இயற்கையான கலப்பு என்றுதான் எனக்குப்படுகிறது. அஃதில்லாமல் வெறும் பெண்ணைகுறிவைத்து எழுதப்படுவதாய் சொல்வது அபத்தமாகப் படுகிறது. மேல் தட்டு ரசனைக்கும் , கீழ் தட்டு இசைக்கும் இணைப்பு ஏற்படுத்துவது எவ்வகையில் சாத்தியப்பெறும் என்று மலைப்பாக உள்ளது. வருங்காலத்தில் ஏதேனும் ஒரு புது வடிவம் இதை சாத்தியப்படுத்தலாம்.

5/13/2005 12:24:00 PM
SnackDragon said...

மற்றபடி, எனக்கு இந்தியவளர்வாசத்தின் போது 'ராப்' பற்றி மிகப்பெரிய ஈடுபாடில்லை.காரணம் அது பற்றி தெரியாதது தான். கல்லூரிகாலத்தில் எல்லா பிற கலைகளைப்போலெவே மிகவும் புகழ் வாய்ந்த சில பாடல்கள் பரிச்சயம்.
அமெரிக்கா வரும் சில வருடங்களுக்கு முன் 'எம்.டி.வி' வழியாகk கொஞ்சம் பரிச்சய்ம் ஏற்பட்டது.(கிரைண்டுக்கு ஓ)
நீங்கள் சொன்ன அதே சில, எமினெம்,ஸ்னுப் டாக்,போன்ற , ஃபிப்டி சென்ட்ஸ் போன்ற சிலரையும் இன்னும் பல பெயர் தெரியாத 'ராப் மேதைகளையும'் ரசிக்கும் அதிகம் ஆயிற்று. ஏனோ அவர்களது பெயரிலோ , வரலாற்றிலோ பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் காதில் ஒட்டிக்கொண்ட பாடல்களை மீண்டுமீண்டும் கேட்கும் பழக்கம் உள்ளது. நாரயணனை பார்க்க கொஞ்சம் பொறாமையாக்த்தான் உள்ளது இந்த விசயத்தில்.இன்று என்னோடு என் காரில் வந்தால் நான் ராப் மற்றும் ஆப்பிரிக்க இசையில் எவ்வளவு விரும்பிகிறேன் என்று உங்களுக்கும் பக்கத்தில் செல்லும் கார்களுக்கும் தெரியும்.
பால்டிமோரா கொக்கா?
அப்படியே கன்ட்ரிக்கு ஒரு பதிவு போட்டால் என்னவாம்?

5/13/2005 01:40:00 PM
இளங்கோ-டிசே said...

//என் காரில் வந்தால் நான் ராப் மற்றும் ஆப்பிரிக்க இசையில் எவ்வளவு விரும்பிகிறேன் என்று உங்களுக்கும் பக்கத்தில் செல்லும் கார்களுக்கும் தெரியும்.//
ஆகா, தாங்களும் என்னைப்போலவா? சிலநாளகளாய், நல்ல Radio System ஒன்று, கூடிய வாட்ஸோடு உள்ள sub-wooferடன் வாங்கவேண்டும் என்று தேடிகொண்டிருக்கின்றேன். புது சிஸ்டம் வாங்கப்போகின்றேன் என்று கேள்விப்பட்டவுடன் நண்பனொருவன் சொன்னான், ஏற்கனவே காது அலறத்தானே பாட்டுப்போடுறனி, புது சிஸ்டம் வாங்கினால், இனி தான் என்ரை காரில் வரமாட்டான் என்று சொன்னான். அலறலும் இடியும் இல்லாமல் ராப் பாடல்கள் கேடபதைவிட போர்த்திக்கொண்டு படுத்துவிடலாம் :-).
//பால்டிமோரா கொக்கா//
ராசா, ரொரண்டோ மட்டும் சளைத்ததா என்ன? தியேட்டருக்குத் தமிழ்ப்படம் பார்க்கப்போகும்போது நம்ம பையன்கள் காரில் போடும் பாடலகளைக் கேட்டால் திருவிழாக்கள் கூட, தோற்றுப்போகும். நானும் புது சிஸ்டம் நல்ல wooferடன் போட்டால், திருவிழாவில் பங்குபற்றுவதாய் முடிவுசெய்துள்ளேன். So, If you're coming to Toronto by any chance, See me at any movie theatres or Colleges or Campus' enterances.

5/13/2005 02:51:00 PM
SnackDragon said...

//ஆண்டியெல்லாம் இப்படியாகச் சொல்லப்போய்த்தான் காஞ்சி கலகலக்குது. :-)
பெயரிலி அவர்கள் ஆண்டியில்லை நோண்டி. கையை வச்சிக்கிட்டு சும்மா இரும். இதே ரேஞ்சிலெ என்னோட இந்த லைனை ஏதாவது பிரித்து மேய்ஞ்சிடுவீர்களோ என்று பகீர் என்றது(ஐ... பகீர் = ஆண்டி). ஒட்டு மொத்த பெண்ணிவாதிகளும் உங்களை பிச்சி மேய்ஞ்சிடுவாங்க.

//அப்படியே கன்ட்ரிக்கு ஒரு பதிவு போட்டால் என்னவாம்?//

டீ ஜே நீர் பதில் சொல்லவே இல்லையே? நாட்டுப்புறம் நமக்கெதுக்கு கட்சியா நீர்?

5/13/2005 03:11:00 PM
-/பெயரிலி. said...

அடப்பாவிகளே, நான் ஒரு திருகுதிருகினா, நீங்கள் மூலத்தையே பிடித்துக்கொண்டிருக்கின்றீர்களே!
நான் சொன்னது, பஞ்சத்துக்கு ஆண்டி, பரம்பரைக்கு ஆண்டி, நந்தவனத்திலே நாலாறு மாதம் குயவனை வேண்டின ஆண்டி வரிசையிலே வந்திருக்கவேண்டிய காஞ்சி மடத்து ஆண்டி; நீங்கள் அதுக்கு அர்த்தம் கொள்வது Aunty. ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ! ஆரிட்டையாவது, எனக்கு அடி வாங்கித்தந்துவிட்டுத்தான் மற்றவேலை பாப்பியள்போலை இருக்கு.

5/13/2005 04:02:00 PM
SnackDragon said...

இந்தாங்க அடுத்தது வெக்கிறேன் பாம்.
இந்த லைனை என்று சொன்னது , இந்த லைனை அண்ணே :-P
/அப்படியே கன்ட்ரிக்கு ஒரு பதிவு /

.... நான் ஓடியே போய்ட்டேன்..

5/13/2005 04:08:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ரமணி, எங்கையோ நல்லா அடி வாங்கப்போறேர் எண்டது மட்டும் விளங்கிற்றுது!

நிறைய நாளைக்குப் பிறகு இண்டைக்கு orkut பக்கம் போனன். அங்க புதுசு புதுசா குழுக்கள் தொடங்கியிருக்கு.
----, பாலக்காட்டு ----, -----, சென்னை ----, இந்திய -----

னு வகைவகையா... அங்கருந்து யாராவது வந்து மிதிக்கப்போறாங்க.

மற்றும்படிக்கு நானேன் அடிக்கோணும்? என்னப்பார்த்தா பாவமா இல்ல??? (செர்ரி, டிஜே - உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு!!!)

-மதி

5/13/2005 04:12:00 PM
SnackDragon said...

// நீங்கள் அதுக்கு அர்த்தம் கொள்வது ஆஉன்ட்ய்.//
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
//பெயரிலி அவர்கள் ஆண்டியில்லை நோண்டி. //
இந்தக்கொடுமையை எங்க போய் சொல்வேன். நான் சத்தியமா "காஞ்சி மட ஆண்டியத்தான்" சொன்னேன். ஆன்ட்டியை அல்ல. ச்சே ச்சே ..கெட்ட்ட்ட்ட்ட ப.....சங்க. மதி நான் எவ்வளோ நல்ல பையன்னு உங்களுக்கு தெரியும் இல்ல :-)

5/13/2005 04:21:00 PM
இளங்கோ-டிசே said...

//டீ ஜே நீர் பதில் சொல்லவே இல்லையே? நாட்டுப்புறம் நமக்கெதுக்கு கட்சியா நீர்?//
கார்த்திக், அப்படியான காரணம் ஒன்றுமில்லை. நானே நாட்டுப்புறத்திலிருந்து தானே புலம்பெயர்ந்தவன் :-). சந்தர்ப்பம் வாய்க்கும்போது, country கேட்பதுண்டெனினும், ராப் படல்களின் மீது ஒருவித போதை இருப்பதால், அதற்கு எதிர்த்துருவத்திலுள்ள, country யில் இன்றைய பொழுதில் அமிழமுடியவில்லை. அதுவே காரணம்.
...
நீங்கள் country என்று சொல்லத்தான் ஒரு விசயம் நினைவுக்கு வருகின்றது. உயர்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை என்று ஒன்றை இப்படிக் கிறுக்கியிருந்தேன்.

'வின்ரர் குளிரில்
விறைத்த எனக்கு
காலையில்
உன் சிரிப்பு
country styleயில் coffee
குடித்த மாதிரி'

இந்தக்கிறுக்கலை வளாகத்திலிருந்த முதலாமாண்டில் படிக்கின்ற மேசையில் எழுதிவிட்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை படிக்கிற மேசை என்று அழைக்காமல், அதை 'படுக்கின்ற மேசை' அல்லது 'கிறுக்குகின்ற மேசை' என்றுதான் அர்த்தபடுத்துவேன்:-). இப்படி நானெழுதிவிட்டுப்போனதைப் பார்த்த இன்னொருத்தன்/த்தி, You're a country fruit. Don't stay here,go back to your place என்று 'அன்போடு' எழுதி விட்டுப்போயிருந்தார் :-).

5/16/2005 11:42:00 AM
SnackDragon said...

//You're a country fruit. Don't stay here,go back to your place //
You're a country fruit. Stay here, Don't go back to your place :-))

5/16/2005 02:57:00 PM
ஒரு பொடிச்சி said...

"காமத்தை அப்படியே மனதில் வழியவிடும், Candy Shop என்ற் ஒரு பாடலிற்காகவே அவரது இறுதி இசைத்தட்டை வாங்கலாம்."
...
"ராப் பாடல்களில் மிக முக்கியமான குறையாக நான் பார்ப்பது அவை பெண்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறையும், பாடல்களைக் காட்சிப்படுத்தும்போது பெண்களைக்காட்டும் முறையையும்தான். இப்படியான் சித்தரிப்புக்கள்தான் பெண் ராப் பாடகர்களின் பாடல்களிலும் இருப்பது கண்டு வியந்துமிருக்கின்றேன். ஏன் பெண் பாடகிகளால் இந்த ஆணாதிக்கத்தன்மையைப் பிரித்துணர முடிவதில்லை என்று யோசித்திருக்கின்றேன்."
=DJ


ஆண் பாடகர்களும் ஆண்களும் Candy Shop போன்ற பாடல்களை 'காமத்தை அப்படியே மனதில் வழியவிடும்' என ரசித்துக்கொண்டிருக்கையில் பெண் பாடகர்களும் பெண்களும் அதிலுள்ள ஆணாதிக்கத்தன்மையைப் பிரித்துணர வேணுமென்பது என்ன நியாயம்?
அப்படியானால் இவற்றுடன் -
நடிகைகள் (பெண்கள்) ஏன் கவர்ச்சியாய் நடிக்கிறார்கள்
பெண்கள் ஏன் விபச்சாரம் செய்கிறார்கள்
இதற்குப் பின்னாலுள்ள ஆணாதிக்கத்தன்மையை (பாலியல் தொழிலாளிகள் இல்லாவிட்டாலும்) நடிகைகள் ஏன் பிரித்துணர்வதில்லை என்றும் யோசிக்க/கேட்க வேண்டுமே!

Candy shop ஐ பார்த்தால் மறைமுகமாக(?) candy shop இற்கு வா (அதுவும் girl சிறு/teenage) பெண்ணே என symbolic(???) ஆய் Oral Sex ஐப் பாடுகிறது. குழந்தைகள்/வளரிளம் பெண்கள் அதற்கு தகவமைத்தும் (adapt) இருக்கிறார்கள்... இத்தகைய பாடலை ரசிப்பதற்கு நீங்கள் இருப்பீர்கள்; பெண்களோ எனில் பிரித்துணரணும். நல்லா இருக்குக் கதை.

ஆண்களும் பெண்களும் எல்லாரும் தான் உங்களைப்போல ஏற்றதாழ்வுகளை பிரித்துணரணும்; teenage girls மட்டும் உணரரோணும் என நினைப்பது நியாயமல்ல.

சந்தடிசாக்கில்
அவர்கள் ஏன் தங்களை இழிவுசெய்யும் பாடல்களை இரசிக்கிறார்கள்
அவர்கள் ஏன் தங்களை இழிவுசெய்யும் ஆடைகளை அணிகிறார்கள்
என கேட்கமுடியாது.

சுற்றிவர உலகம் இப்படி அமைகிறபோது அதை தகவமைக்கிற பிரதிநிதிகளே மனிதர்கள. இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

இது டீ.ஜே இற்குhன பதில் அல்ல. எம்மை அறியாமல் நாம் சொல்லுகிற சில மாறுபாடான விடயங்கள் பற்றியே...

நானும் இவரது பாடல்களை (வானொலியில் மட்டும்!) ரசிப்பேன்; அர்த்தங்கள் புரிந்தபின்னும் இசையும்/காமியம் வழியும் குரலும் ஈர்க்கத்தான் செய்கிறது (நான் 50 cent fan அல்ல, அவரது ரசிகர்களாய் சிறுவர்கள் இருப்பதும் uneasy தருவதே).
ஆனால் நான் போன சிறுவர் தொடர்பான பட்டறையொன்றில் நிறைய பதின்மப்பெண்கள்/மாணவிகள் oral sex ஆல் STD தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இந்த சூழலையும் இந்த பாடல்களையும் சேர்த்து நினைக்க வேண்டியிருக்கிறது.

மற்றப்படி வெகுசன ராப் பாடகர்கள் குறித்து மேலே சிலர் கூறியதுதான் என் கருத்து. அவர்கள் மீதான ஆகர்சத்தைவிட ஒரு வளரிளம்பருவத்து பெட்டையே பெடியனோ Justin ஐ ரசிப்பதால் ஒருவகையில் நன்மையே.

அப்புறம் DJ, Tupac தான் நான் நினைக்கிறன் வெகுசனத்தில் பேசப்பட்ட சமூகப்பிரச்சினைகளை பாடிய பாடகன்; பிறகு வந்த ஒருதரும் தேறேல்ல. Tupac க rebel ஆ ஏற்கிறபோது இந்தப் பாடகர்களை பேச்சுக்கும் எடுக்க முடியாதெனவே நினைககிறேன். nope!
நீங்கள் Tupac பற்றிய/தமிழ் இளைஞர்கள் இற்கு அவன்மீதான ஈர்ப்பு பற்றி எழுதுவதாகச் சொன்னது ஞாபகம், அதை விரைவில் எழுதுங்கள்.
அவனிடத்திலையே
வன்முறையும் உடை அலங்காரங்குளும் கவர்ந்த அளவு கருத்துக்கள் (பெண்களை மதித்தல் இத்தியாதி) கவராதபோது 50 Cent eminem வகையறாக்களிடம் இளைஞர்கள் அதைக் கற்பார்களா என்ன.. Tupac, he is totally different...!

5/18/2005 04:08:00 PM
இளங்கோ-டிசே said...

பொடிச்சி!
உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
இவை குறித்த எனது புரிதலை, இன்னொருபொழுதில், சற்றுவிரிவாக நேரங்கிடைக்கும்போது எழுதுகின்றேன்.

5/19/2005 09:05:00 AM
இளங்கோ-டிசே said...

பொடிச்சி, நீங்கள் கூறிய பல விடயங்களோடு நானும் உடன்படுகின்றேன். முக்கியமாய்
//சுற்றிவர உலகம் இப்படி அமைகிறபோது அதை தகவமைக்கிற பிரதிநிதிகளே மனிதர்கள//
முக்கியமாய் இது உண்மைதான்.
நீங்கள் கூறுவதுபோல ஆண்கள் அப்படியில்லாதபோது பெண்களிடம் அதையேன் எதிர்பார்க்கின்றீர்கள் என்பதில் நியாயம் உண்டு. ஆனால் நான் இவற்றையெல்லாம் பெண்கள் பிரித்துணரவேண்டும் என்று ஏன் கூறவிரும்பினேன் என்றால், இந்தப் பிரித்துணர்வுதான் இந்த அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும். முக்கியமாய் இந்த பிரித்துணர்வு பெண்களிடம் இருந்துதான் ஆரம்பித்தால்தான் நல்ல விளைவுகள் ஏற்படும் என்பது எனது நம்பிக்கை.
உதாரணத்திற்கு, ஒரு ஆண் sexual workerடம் போய்க்கொண்டே prostitute கூடாது, பாலியல் தொழிலாளர்கள் பாவம் என்று பக்கம் பக்கமாய் கட்டுரைகளையோ அல்லது மணிக்கணக்காய் பேசிக்கொண்டோ திரியலாம். அதனால் எந்த மாற்றமும் பெண்களுக்கு ஏற்படப்போவதில்லை. அதைபோலத்தான் ராப் பாடல்களில் பெண்கள் சித்தரிக்கப்படும்போது, அதிலுள்ள அரசியலை, எதிர்ப்பை பெணகளே முன்வைக்கும்போது உண்மையான புரிந்துணர்வாய், அடுத்த கட்டத்திற்கு நகரக்கூடியதாக இருக்கும் என்ற எண்ணத்திலேயே இது பற்றிய புரிதல் பெண்களிடம் இருந்து ஆரம்பிக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து எழுதினேன். பெண்களை இழிவுபடுத்தும் பாடல்களுக்கு எதிராக Essence சஞ்சிகைப் பெணகளிடம் இருந்து இன்றைய பொழுதில் ஆரம்பிம்பது உண்மையில் என்னைப்பொறுத்தவ்ரை மகிழ்ச்சியான விடயமே.
....
Candy shop பற்றிய என் புரிதலை செக்ஸ்டன் சம்பந்தப்படுத்த்தித்தான் பார்க்கின்றேன். செக்ஸ் மறைக்கப்படவேண்டியதோ அல்லது இழிவென்று நினைக்கப்படவேண்டியதோ அல்ல தானே. நீங்கள் கூறியதுமாதிரி அது oral-sex ஜ முன்வைத்துத்தான் பாடுகின்றது. எனக்கு இந்தப்பாடல் பிடித்தற்கு காரணம், ஆண் பெண் இருவரும் சேர்ந்து பாடி தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டுவதாய் இருந்ததும், ஏனைய 50 Cent பாடல்கள் போல், கெட்டவாரத்தைகளோ அலலது பெணகளை bitches, pimps என்று அழைக்காமல் இருந்ததும் முக்கிய காரணம்.

boy/girl என்று அழைப்பது பதின்மவயது பெண்களை குறிப்பது மாதிரி இருக்கின்றது என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சிலவேளைகளில் இருக்கலாம். நான் அதை அவர் ஒரு எதுகை மோனைக்காகவே அப்படிப் பயன்படுத்தினார் என்றுதான் அர்த்தப்படுத்தினேன்.
அத்தோடு bitches/pimps என்று வழமையாக அவர் அழைக்காமல் இப்படி அழைப்பது பராவாயில்லை போல் எனக்குத் தோன்றியது. இந்தப்பாடலைக் கேட்டுவிட்டு, இயலுமாயின் Snoop Dogg, Lil' Jonடன் பாடிய 'Step up yoo game' கேட்டுப்பாருங்கள். அதுவும் காமத்தை தான் சொல்கின்றது. எவ்வளவு தூரம் பெண்களை இழிவுபடுத்துகின்றது என்று பாருங்கள் :-(.
//பதின்மப்பெண்கள்/மாணவிகள் oral sex ஆல் STD தொற்றுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இந்த சூழலையும் இந்த பாடல்களையும் சேர்த்து நினைக்க வேண்டியிருக்கிறது.//
இது உண்மை. நான் Camdy shopஜ பார்த்த விதம் பதினமத்தைக் கடந்த ஒருவனின் பார்வையில். பதின்மவயதுப் பிள்ளை இந்தப்பாடலைக் கேட்கும்போது நீங்கள் கூறும் சிக்கல் உள்ளது.

....
டூபாக் ஒரு ஆளுமை என்பதையோ இன்றைய பொழுதில் அவரோடு சரிசமனாக நிறுத்தி, இன்னொரு ராப் பாடகர் இல்லையென்பதையோ மறுக்கமுடியாது. ஆனால் டூபாக்கும் சராசரி மனிதனுக்குரிய பலவீனங்களுடன் வாழ்ந்திருக்கின்றார் என்பதையும் மறுக்கமுடியாது. அவர் இறக்கும்போது அவர்மீது கிட்டத்தட்ட 20-30 வரையிலான பாலியல் குற்றச்சாடு வழக்குகள் இருந்திருக்கின்றன. சில சம்பவங்களில் சம்மதித்து உடலுறவு கொண்டுவிட்டு வழக்குப்போட்டிருக்கின்றார்கள் என்று டூபாக் கூறியுமிருக்கின்றார் (முத்லாவது வழக்கு உட்பட). இதில் யார் பக்கம் நியாயம்/அநியாயம் உள்ளது என்ற விவாதத்திற்குள் போக விரும்பவில்லை. இதைத்தான், இன்றைய கிளிண்டனிலிருந்து, Basketball player, Kobe Bryantவரை செய்துகொண்டும் நியாயம் கேட்டுக்கொண்டும் இருக்கின்றனர். அத்தோடு டூபாக் அவரிற்கெதிராய் இயங்கிக்கொண்டிருந்த B.I.G யின் மனைவியுடன் (Faith Evans) டன் தனக்கு உறவு இருக்கின்றதென்று கூறித்திரிந்தும் இருக்கின்றார். Faith Evans இதை அண்மையில் கூட VIBE சஞ்சிகையில், That Nigga lied about this என்று மறுத்து இருக்கின்றார் (இவர் அண்மையில் வெளியிட்ட இசைத்தட்டு First Lady). டுபாக்கின் பாடல்களின் தீவிரத்திற்கு இன்னொரு காரணியாக நான் அவரின் வயதை (வாழ்ந்த காலத்தை) பார்க்கின்றேன். இருபத்தைந்து வயது வரை என்பது மிகத் துடிப்பான பருவம். எதையும் சாதிக்க வேண்டும் என்றும், எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து சமரசமன்றி வாழ விரும்பும் பருவம். அதை மிக சரியான முரையில் டுபாக் பயன்படுத்தி இருக்கின்றார். யார் கண்டது கூடக்காலம் வாழ்ந்திருந்தால் அவரும் இன்றைய ராப் பாடகர்கள் போல ஒருவித சமரசத்திற்கு ஆளாகிக்கூடியிருக்கலாம் (வளாகத்தில் படிக்கும்போது மிகத்துடிப்பாக இய்ங்கும் பலர் பிறகு அதற்கு எதிர்த்திசையில் பயணிப்பதைப் பார்த்து திகைத்த அனுபவங்கள் எனக்குண்டு :-( ).
இன்னுமொன்று, ஒரு நேர்காணலில், டூபாக், தனது குடும்பப்பெண்களை, தனக்குத் தெரிந்த அயலவர்களை, அவர்கள் எப்படி இருந்தாலும், bitch, pimp என்று அழைக்கமாட்டேன் என்று கூறுகின்றார். அப்படிக் கூறும் அவரால், ஏன் பிற பெண்களையும் அப்படிப் பார்க்கமுடியவில்லை என்பது முக்கியமான கேள்வியே. மற்றபடி டூபாக் ராப் பாடகர்களில் தவிர்க்கமுடியாத ஆளுமை என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. அதுவும் தனது மரணம் விரைவில் நெருங்கப்போகின்றது
என்பதை அறிந்தவர் மாதிரி, இறுதிக்காலங்களில் எழுதிப் பாடிய பாடல்கள் அவ்வளவு இலகுவில் எவராலும் மறக்கமுடியாதன.

5/27/2005 10:05:00 AM
இளங்கோ-டிசே said...

முதல் பின்னூட்டத்தில் சொல்ல மறந்த விடயம்.
.....
//மற்றப்படி வெகுசன ராப் பாடகர்கள் குறித்து மேலே சிலர் கூறியதுதான் என் கருத்து. அவர்கள் மீதான ஆகர்சத்தைவிட ஒரு வளரிளம்பருவத்து பெட்டையே பெடியனோ Justin ஐ ரசிப்பதால் ஒருவகையில் நன்மையே.//
இதில் கொஞ்சம் எனக்கு முரண்பாடுண்டு. Justin, Britney பாடும் pop பாடல்களும் பிழையான எண்ணங்களையே பல சமயங்களில் விதைக்கின்றன.

நீங்கள் ஏற்கனவே ஒரு பதிவில் கூறியதுமாதிரி, பிரிட்னியின் debut பாடலான,'hit me baby one more time' கூட வேறொரு அர்த்தத்தைக் தான் கொடுக்கின்றது. ஏன அண்மையில் பார்த்த Justinன் விடீயோ அலபம் ஒன்றிலும் (பாடலில் பெயர் ஞாபகத்திலில்லை), அவர் ஒரு பெண்ணை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து செல்கின்றமாதிரியும், இறுதியில் அந்தப்பெண் குளிப்பதை கூலாய் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டைவிட்டு வெளியேறுவது போலவும் எடுக்கப்பட்டிருந்தது. உண்மையில் இப்படி பின்தொடர்ந்து காதல் யாசித்தல் பெண்களுக்கு பல உளவியல் பிரச்சினைகளைக் கொடுக்கின்றது. பதின்ம வயதில், இப்படியான பிரச்சினைகளில் எனது தோழிகள் அவஸ்தைப்பட்டதைக் கண்டிருக்கின்றேன். ஏன் இன்றும் பல பதின்மவயதுக்காரர்களுக்கு இது பெரிய பிரச்சினை என்று கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன். ராப் பாடல்களில் hardcore யாய் இந்த விடயங்கள் தெரிவதால் இலகுவாய் அந்தப் பாடல்களை நிராகரித்துவிடமுடியும், இவற்றில் பகுத்துணர்ந்து பிரித்தறிதல் சற்றுக்கடினம் போலத்தான் தோன்றுகிறது.

5/27/2005 11:21:00 AM
Anonymous said...

மிகவும் அருமையான பதிவு

5/31/2005 08:30:00 AM
Anonymous said...

பதிந்தது:Eealam rapper

மிகவும் அருமையான பதிவு


1.6.2005

5/31/2005 08:30:00 AM
சினேகிதி said...

\\ அந்தப்பெண் குளிப்பதை கூலாய் பார்த்துவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டைவிட்டு வெளியேறுவது போலவும் எடுக்கப்பட்டிருந்தது\\

DJ நீங்க சொன்னது Justin Timberlake ன் “Cry Me A River” பாட்டு.

6/21/2005 05:01:00 PM
சினேகிதி said...

\\Tupac தான் நான் நினைக்கிறன் வெகுசனத்தில் பேசப்பட்ட சமூகப்பிரச்சினைகளை பாடிய பாடகன்\\


Tupac க்கு முதலே Bob Dylan போன்றோர் சமூகப் பிரச்சனைகளைப் பாடியிருக்கிறார்கள் உதாரணமாக Rubin Carter(http://en.wikipedia.org/wiki/Rubin_Carter) என்ற குத்துச் சண்டை வீரரை பல வருடங்கள் சிறையில் வைத்ததைப் பற்றி Hurricane (http://www.bobdylan.com/songs/hurricane.html) என்ற பாடலில் Bob Dylan பாடியதைச் சொல்லலாம்.

6/21/2005 05:28:00 PM
-/பெயரிலி. said...

அய்யோ! பொப் டைலானே உவூடி குத்ரியினை முன் வைத்துத்தானே தொடங்கினார். பிறகு மின்கித்தாரை எடுத்தவுடன், நாடோடிப்பாடல்களுக்குத் துரோகம் செய்துவிட்டார் என்று நாடோடிப்பாட்டுப்பிரியர்கள் அவரைத் திட்டித் தள்ளிவிட்டார்கள். உவூடி குத்ரிக்கு முன்னாலேயே நாடோடிப்பாடகர்கள் வெகுசனச்சமூகப்பிரச்சனைகளைப் பாடியிருக்கின்றார்கள்.
இங்கே தேவை கருதி, தன் விளம்பரமாக ஒரு பதிவினைச் சுட்டுகிறேன்

கறுப்பினப்பாடகர்களை எடுத்தாலுங்கூட, துபக்கும் அவர்போன்ற பெருநகரங்களின் கறுப்பின இளைஞர்களும் பாடிய காலத்துக்கு வெகுகாலம் முன்னரே (old school rap இற்கும் முன்னால்), அமெரிக்கத்தெற்கின் அடிமைகளாகத் துயர்ப்பட்ட கறுப்பினப்பாடகர்களின் soul (gospel, jazz உம் சேர்த்தியாக) சமூகத்துயர்களையே பாடுகின்றது. இன்னும் இதற்கு முன்னரே, தோழர் பொப் மாலி பாடாத வெகுசனப்பிரச்சனை சொல்லாத பாடல்களா? Get up Stand Up! As a buffallo soldier I will shoot you, DJ sheriff! தோழர் உமக்காகவே No woman No Cry பாடிப்போந்ததை மறந்தீரா? பொப் மாலிக்கு முன்னமே, கலிப்ஸோ கலிப்ஸோ பாடகர்கள் சமூகப்பிரச்சனையைத் தொட்டிருக்கின்றார்கள். Lord Invader இன் Rum and Coca-Cola கேட்டிருக்கின்றீரா? கொகாகோலாவுக்கு எதிரான புரட்சியிலே முன்நிற்கும் தோழர் சுந்தரவடிவேல் கேட்கவேணும் ;-)

வெள்ளையினத்தவர்களின் பாடல்களிலும் அப்பலாசியன் மலைகளைச் சார்ந்த ப்ளூக்ராஸ்-->நாடோடிப்பாடல்கள் சமூகப்பிரச்சனைகளைப் பாடும். அதற்கும் முன்னாக சமூகம் குறித்த அமெரிக்கப்பாடல்கள் வேண்டின், போய், Sugar in the Gourd இனைக் கேட்குமாறு ரொரொண்டோ வாவி டிஜே அவர்களைக் கேட்டுக் கொல்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என் தலைவர் பீற் ஸீகரினைப் பொருட்படுத்தவே பொருட்படுத்தாத உம்மைக் கொலை என்ன அதுக்கு மேலே என்ன இருந்தாலுங்கூடச் செய்யலாம்.

6/21/2005 06:02:00 PM
இளங்கோ-டிசே said...

சினேகிதி, Cry Me a River பாடல் என்றுதான் நினைக்கின்றேன். தகவலுக்கு நன்றி.
....
பொல்லையும் கொடுத்து அடிவாங்குவது என்பது இதுதான். என்றாலும் படம் போட்டு தன் 'உயிர்ப்பை'த் தக்கவைத்துக்கொள்கின்றவரை உசுப்பி கொஞ்சம் எழுத வைப்பதற்காகவேனும், தொடர்ந்து அரையும் குறையுமான பல பதிவுகள் போடுவதாய் உத்தேசித்துள்ளேன் :-). அதுசரி மிஸ்ரர் பெயரிலி உஙகளின் சிறுகதைத் தொகுப்புக்கு கதைகளை செதுக்கித் தொகுத்துக் கொடுத்தாகி விட்டாச்சா? இன்னும் 'தூங்கி'யாக இருந்தால், எல்லாப் படைப்பையும் என்னுடைய பெயரில் வெளியிட்டு விடுவன். ஏற்கனவே நான் ஆடியன்ஸை இரசித்ததை வைத்து, கறுப்பி எனக்கு 'நல்ல இலக்கியவாதி' என்ற பட்டத்தை தந்திருக்கின்றா. இலக்கியவாதியாய் இருப்பதற்கு வேண்டிய இன்னொரு சிறப்புத் தகுதி, மற்றா ஆக்களின் படைப்பை களவாடி, தன்ரை சொந்தப்பெயரில் போடுவது. ஆகவே நான் அதை விரைவில் செய்யப்போகின்றேன் என்று உஙகளுக்கு 'எச்சரிக்கை' செய்கின்றேன்.

6/22/2005 09:56:00 AM
ஒரு பொடிச்சி said...

உண்மைதான் பெயரிலி. ரூபாக்கை பொப் மார்லி அளவுக்கெல்லாம் ஒப்பிடவே முடியாது. ரூபாக்கில் சில பிடித்த அம்சங்கள் இருக்கிறதே ஒழிய சமூக இயக்கமாக மாற்றத்துடன் தொடர்புடையதான பாடகர்களுடன் ஒப்பிட முடியா. நான் மேலே குறிப்பிட விரும்பியது, வெகுசன சூழலில் இடைநிலைப் பாடகராய் -மற்றப் பாடகர்கள் எடுக்காத பேசுபொருள்களை குறிப்பிட்டளவு முன்னெடுத்ததில்- ரூபாக்கினது பங்கையே.

யஸ்ரின் - பிரிட்னி இருவரையும் சமதளத்தில் வைக்கவில்லை DJ. ஏனென்றால் பிரிட்னி, பெண் தொடர்பான வழமையான பெண் உடல் பற்றிய 'ஆண்களின் எதிர்பார்ப்பை' பிரதிநித்துவப்படுத்துகிறார், ஆனால் யஸ்ரின் பிரிட்னி போலவே பொப் பாடகராக இருக்கிறபோதும் ஆண்கள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு தோற்றத்தை கொண்டில்லை + முன்வைக்கவில்லை.
இப்படியாக பொதுத்தளத்தில் பிரபலமாக (பொப்புலர் பாடகர்கள்) வருகிற பெண்கள் பாலியல்ரீதியாக ஆண்கள் விரும்புகிற உடலை பிரதிநித்துவப்படுத்தவும் யஸ்ரின் போன்ற ஆண்கள் ஆண்களுக்கென இருக்கிற எதிர்பார்ப்புகளை மீறி, -'ராப்' பாடகர் போன்ற ஆண்கள் பற்றிய முரட்டுத்தனத்துக்கு அப்பால்- ஒரு மாற்றீடாக வருவதையுமே முக்கியமாகக் குறிப்பிட விரும்பியது. யஸ்ரின் மாதிரி ஆணை –அவனைப் பார்த்து- பெண்கள் விரும்பினால் அது ஒரு முரட்டுத்தனமாக ஆண் பிம்பத்திற்கு எதிரானதாக அமைகிறது. ஆனால் பிரிட்னிபோல பெண்ணை ஆண்கள் விரும்பினால் அது ஒரு மாற்றீடாய் இல்லை. அதைத்தான் குறிப்பிட விரும்பினேன்.
இது பிரிட்னியும் யஸ்ரினையும் குறிப்பிடப்படுகையில் குறிப்பிடக்கூடியது.
வழமைக்கு மாறான பெண் மாற்றீடுகள் 'வெகுசன' சூழலில் பிங்க் (Pink), இண்டியா அறீ (India.arie) போன்றவர்களைச் சொல்லலாம். பிங்கின் ஒரு பாடலே, தனது album producer (நினைக்கிறேன்) தன்னை Britneyயாக்கப்போவதாக கூறியது தொடர்பாக வந்தது..

குறிப்பிட்ட யஸ்ரினின் பாடலுடன் 'I’m loving it’ என்றொரு பாடலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அதில் வீதியால் போகிற பெண்ணைப் (அவளது 'மௌன'ச்சம்மதத்துடன்) பின்தொடர்ந்து வருகிற ஆண், பிறகு அவர்கள் இருவரும் இணைவதுபோல வரும். அதற்கு பல எதிர்விமர்சனங்கள் வந்தன (மைக்டோனால்ஸ் விளம்பரத்திற்கு வருகிற வரிகள்). பதின்மக்காரர்களைப்பொருத்தவரையில் அது –அவர்களுக்கு- சுகாதாரரீதியாக –எயிட்ஸ் போன்ற நோய்கள்- ஆபத்தானது. ஓழுக்கரீதியாக இல்லாவிட்டாலும் இதற்காக ஏனும் ஆட்சேபிக்கக்கூடியதே.ஆனால்,
==ராப் பாடல்களில் hardcore யாய் இந்த விடயங்கள் தெரிவதால் இலகுவாய் அந்தப் பாடல்களை நிராகரித்துவிடமுடியும், இவற்றில் பகுத்துணர்ந்து பிரித்தறிதல் சற்றுக்கடினம் போலத்தான் தோன்றுகிறது.==

என்று பொதுவாகச் சொல்ல முடியுமா- தெரியவில்லை!

Cry Me a River Britney யுடனான Justin இன் மோதலை/பிரிவை/அவர் இழைத்த துரோகத்தைப் பற்றியதாம்
:-(
அதும் trespassing தான் என்றாலும் !!!

6/22/2005 01:29:00 PM
இளங்கோ-டிசே said...

//==ராப் பாடல்களில் கர்ட்cஒரெ யாய் இந்த விடயங்கள் தெரிவதால் இலகுவாய் அந்தப் பாடல்களை நிராகரித்துவிடமுடியும், இவற்றில் பகுத்துணர்ந்து பிரித்தறிதல் சற்றுக்கடினம் போலத்தான் தோன்றுகிறது.==

என்று பொதுவாகச் சொல்ல முடியுமா- தெரியவில்லை! //

பொடிச்சி, நீங்கள் என்ன கூற வருகின்றீர்கள் என்பது புரிகின்றது. நன்றி.

6/22/2005 03:53:00 PM