சுருக்கமான வரலாறு
இராணுவத்தில் ஓரினப்பாலினர்
By: Kayla Webley
தமிழாக்கம்: டிசே தமிழன்
அமெரிக்க இராணுவத்தில் ஆண்/பெண் ஓரினப்பாலர் மற்றும் இருபாலினர் என கிட்டத்தட்ட 660,000 பேர் தமது பாலியல் சார்பை (sexual orientation) பலவந்தமாக மறைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றார்களென அண்மைக்கால ஆய்வொன்று கூறுகின்றது. பெப்ரவரி 02ல், 17 வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா 'தமது நாட்டை நேசிக்கும் ஓரினப்பாலார், அமெரிக்க இராணுவத்தில் வேலை செய்வதை மறுக்கும் சட்டத்தை' பற்றி விவாதிக்க வேண்டியிருக்கிறது எனப் பேரவையில்(Congress) பேசியிருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.
பழங்கால கிரேக்கத்தில் இது(ஓரினப்பால்) ஒரு முக்கிய விடயமே அல்ல. பிளேட்டோ படையினரிடையே ஓரினப்பாலை ஊக்குவிப்பதால் படைகள் பல தடைகளைத் தாண்டமுடியுமென எழுதினார்; 'காதல் பிரயோசனமற்ற கோழைகளைக் கூட உத்வேகமுள்ள வீரர்களாக மாற்றிவிடுகிறது' என்கிறார். ஆனால் பல நூற்றாண்டுகளாக பெரும்பாலான மற்றைய பகுதிகளில் இது மறுக்கப்பட்டிருக்கின்றது. நெப்போலியனின் போர்க்காலங்களில் இவ்வாறான நடத்தைகளுக்காய் பலர் தூக்கிலிடப்பட்டிருக்கின்றார்கள். 1778ல் ஜெனரல் ஜோர்ஜ் வாசிங்டன், ஒரு இராணுவ வீரனை தற்பால் நடத்தைக்காய் இராணுவத்திலிருந்து நீக்கியிருக்கிறார்.
1916ல் ஜக்கிய அமெரிக்கா, ஓரினப்பாலினர் இராணுவத்தில் பணியாற்றுவதை தடை செய்திருக்கின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, படையில் சேர்பவரின் நடத்தைகளையும், உடல் உறுப்புக்களையும் அவதானித்தே இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். வியட்னாம் போர்க்காலத்தில் சிலர் ஓரினப்பாலினருக்கான நடத்தைகளைக் காட்டியதால் சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது எனினும் எல்லாப்பொழுதும் இதனால் படையில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டதுமில்லை; 1968ல் பெர்ரி வோக்கின்ஸ் என்ற வோஷிங்டன் நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் 'தற்பால்சார்பு நடத்தையுடையவராக' இருந்தபோதும் 16 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். பிறகு இவரின் பாலியல் சார்பால் இவர் இராணுவத்திலிருந்து நீக்கப்படடதற்காய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 1990ல் அவ்வழக்கில் வென்றுமிருக்கின்றார்
ஜனாதிபதி பில் கிளிங்டன் 1993ல் பதவியேற்றபோது, இராணுவத்தில் சேரும்போது 'கேட்காதே, சொல்லாதே' (Don't ask, Don't tell) என்ற சட்டத்தை இராணுவ அலுவலர்களினதும், பொதுமக்களினதும் எதிர்ப்புக்களிடையே கொண்டு வந்தார். இம்முயற்சி ஒரளவு வெற்றி பெற்றது. பேரவை இதற்குப் பதிலாக, அமெரிக்க இராணுவத்தில் தமது பாலியல் சார்பை வெளிப்படையாக ஒருவர் அறிவிக்காதவரை அவர் இராணுவத்தில் பணியாற்றமுடியும்' என்ற இன்னொரு சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் பென்ரகன் ஒருவரை இராணுவத்தில் சேர்க்கும்போது அவரது பாலியல் சார்பைக் கேட்பதை நிறுத்தினாலும், இராணுவத்தில் பணிபுரிபவர்களிடையே தொடர்ந்தும் (இவ்வாறான நடத்தைகளுக்கான) விசாரணைகளை நடத்திக்கொண்டிருக்கின்றது. 1994 ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 12, 000 இராணுவத்தினர் அவர்களின் பாலியல் சார்பினால் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்கள்.
நன்றி: TIME
(Timeல் வந்த இக்கட்டுரையை ஸ்கான் செய்து அனுப்பிய 'வைகறை' ரவிக்கும் நன்றி)
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment