கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

சொந்தப்புராணம் அல்லது அலம்பல்

Monday, December 13, 2004

வாழ்விலே பல விடயங்கள் காரணங்கள் என்னவென்று புரியாமலே நிகழ்ந்துவிடுகின்றன. அதற்காய் ஒருகணம் தரித்து நிற்பதுவும், பிறகு நீளநடப்பதுவும் வாழ்வியல் நியதி போல. எத்தனையோ மாற்றங்களை, ஏமாற்றங்களை கடந்துவந்தாலும், ஒரு சின்னதுன்பம் கூட என்னை ஒருகணம் அடித்துப்போட்டுவிட்டுத்தான் நகரும்.

இன்றைக்கு வேலைக்கு போய்விட்டு, பின்னேரம் வெளியே போவதற்காய் காரையெடுப்பம் என்டு போனால் கார் நின்ற space கிடக்கிறது, காரைத்தான் காணோம். ஒரு கணம் தலையைச் சுற்றி, பூமி சுழல்வது தெரிந்தது. பொலிசுக்கு அடித்து (வந்து ரெலிபோனால்தான்), பிறகு காப்புறுதி நிறுவனத்திற்கு அடிக்க அவங்கள் இன்னொரு பெரிய குண்டைப்போட்டாங்கள். நண்பரே நீங்கள் full coverage செய்யவில்லை. One way மட்டுமேதான் செய்துள்ளீர். ஆகவே களவுபோனாலும் எம்மால் ஒரு சல்லிக்காசுக்கூட நஷ்ட ஈடாகத் தரமுடியாது என்று கையை விரித்துவிட்டார்கள்.
........
கார் வாங்கின கதையை சொல்லோனும் பாருங்கோ. இப்பதான் ஒருமாதிரி படித்து பட்டம் என்று ஒன்றைப்பெற்றனான். என்ன படித்தனான், எப்படி படித்தனான் என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். படித்து என்ன கிழித்தேன் என்றும் தெரியாது, ஆனால் படிப்பதற்காய் பெற்ற கடனை எண்ண கைவிரல்களும், கால்விரல்களும் பத்தாது (அல்லது கைவிரல்கள் + கால்விரல்களின் இரண்டு மடங்கைவிட கொஞ்சம் அதிகமான ஆயிரங்களில் கடன் என்றும் சொல்லலாம்). படித்து ஆறுமாதங்களின் கடனை வட்டியுடன் திருப்பக்கட்டவேண்டும் என்பது விதி. வேலை ஒன்றும் ஒழுங்காய் கிடைக்காமல் வாறதும் போறதுமாய் இருக்க அதிலை சேமித்த காசிலைதான் இந்தக் கார் வாங்கினனான். காப்புறுதி full coverage செய்ய ஆசையிருந்தும், கிடந்த காசையெல்லாம் வாரி காரிற்கு கொடுத்ததால், காப்புறுதியிற்கு அவ்வளவு கட்ட பணம் போதாதால் குறைந்த காப்புறுதியைத் தான் எடுத்தேன். அத்தோடு காப்புறுதிக்கு ஒருவருடத்திற்கு கட்டுகிற பணத்தில் இன்னொரு காரையே வாங்கிவிடலாம். கார் வாங்கி ஒரு மாதம் ஆகாதபடியால் பிறகு full coverage காப்புறுதியைப் பற்றி யோசிக்கலாம் என்று விட்டுவிட்டேன்.
......
இப்ப காரும் போய்விட்டது. ம்...காசும்தான் போய்விட்டது. பொலிசிட்டை சொன்னால் அவன் சொல்றான், இந்த model கார் அடிக்கடி களவுபோகிறதுதான் என்று coolயாய் சொல்கிறான். அவனும் என்ன செய்ய எத்தனை களவுகளுக்கு எண்டு கவலைப்படுவது? ஓசியில வந்து ஓசியில போயிருந்தால் இப்படி நானும் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏதோ கொஞ்சம் உடம்பை முறித்து வேலைசெய்து இப்படி கைநழுவிப்போனதுதான் சகிக்க முடியாமல் இருக்கிது. சோர்ந்து போகும்போதெல்லாம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகரும் தோழிகளை தொலைபேசியில் அழைத்தேன். எல்லோரும் பரீட்சை, வேலை என்று அவசரமாய் ஓடிக்கொண்டிருப்பதால் ஒருவரையும் லைனில் பிடிக்கமுடியவில்லை. கொஞ்சம் கவலையாயும், சோர்வாயும் இருந்து கட்டிலில் சரிந்து படுக்க, நேற்று christmas gift என்று அண்ணா அழகான வர்ணப்பேப்பரில் சுற்றிக்கொண்டுவந்த கார் viper என்னை இன்னும் யோசிக்கவைத்தது. எனது கார் viperல் ஏதோ கொஞ்சம் பிழை இருந்து ஸ்நோவை வடிவாய் தள்ளாததால், அவர் காரிற்கென வாங்கிவந்திருந்தார் நேற்றிரவு. படுத்தாலும் தூக்கம் வராது காரில்லாது வெறுமையாயிருந்த இடந்தான் நினைவில் அலைவுற்றுக்கொண்டிருக்க, திடீரென தொலைபேசி அடித்தது. சரி யாராவது தோழிதான் எடுக்கின்றனரோ என்று எடுக்க எதிர்முனையின் அண்ணாவின் ஐந்து வயது மகன். அண்ணிக்கு அம்மா நடந்த விவரம் சொல்லியிருக்க அவன் என்னோடு பேசப்பிரியப்பட அண்ணி திருப்பி தொலைபேசியை எடுத்திருந்தார். அவன் சொன்னான், 'சித்தியா (சித்தப்பா என்பதை அப்படி அவன் ஆக்கிவிட்டான்) கார் களவுபோனாலும் என்னட்டை ஏழு டொலர் காசு இருக்குது. அதை நான் தாறன் நீங்கள் இன்னொரு கார் வாங்குங்கோ. எத்தனை முறை களவுபோனாலும் நான் காசு தருவன்' என்று கூறி தன்ரை pig உண்டியலை உடைக்கப்போனான்.
............
ஒன்று புரிந்தது. மனிதர்கள் மீதும், வாழ்வின் மீதும் நம்பிக்கையிழக்க காலம் இன்னும் வரவில்லை என்பது.

7 comments:

ROSAVASANTH said...

வருத்தம்தான் டீஜே, ஆனால் அந்த ஏழு டாலரின் மதிப்பு இப்போது புலப்பட்டது போல் இதற்கு முன் தெரிந்திருக்காதே! சீக்கிரமே நீங்கள் புதிய கார் வாங்க வாழ்துக்கள்!

12/13/2004 11:02:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

முதன் முதலாய்க் கார் தொலைத்ததற்கு வாழ்த்துக்கள்

12/13/2004 11:41:00 PM
-/பெயரிலி. said...

/மனிதர்கள் மீதும், வாழ்வின் மீதும் நம்பிக்கையிழக்க காலம் இன்னும் வரவில்லை என்பது./

குழந்தைகள்மீதும் என்று சொல்ல வந்தீரோ? ;-)

12/14/2004 01:34:00 AM
Jayaprakash Sampath said...

இந்தக் குழந்தைக்காக இன்னும் எத்தனை காரை வேண்டுமானாலும் தொலைக்கலாம்

12/14/2004 08:10:00 AM
சன்னாசி said...

வருத்தங்கள். களவுகொடுப்பதின் துக்கத்தைவிட எரிச்சலே அதிக இம்சைதருவது. விடுங்கள், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு என்று நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

12/14/2004 11:53:00 AM
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

விலை மதிப்பில்லாத ஏழு டாலர்கள். இந்த இழப்பிலும் இது போன்ற அனுபவங்கள் இனிய வரவு தான் என்று எடுத்துக் கொண்டு தொடருங்கள்.

12/14/2004 01:23:00 PM
இளங்கோ-டிசே said...

நண்பர்களுக்கு,
களவுபோன கார் எங்கையோ அநாதவரவாய் நிற்பதாய் பொலிசால் தகவல் தரப்பட்டு சென்று பார்த்தபோது எடுக்கவேண்டியதையெல்லாம் தோண்டியெடுத்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
நிற்க, ஒருவித சலிப்போடு எனது பதிவையை எழுதியகணத்தில், உங்கள் உள்ளிடுகைகள் மனதிற்கு ஆசுவாசத்தைத் தந்தன என்பதை நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.

அன்புடன்,
டிசே

12/18/2004 08:41:00 PM