தனிமையை
ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில்
இலைகளாகவும் கனிகளாகவும்
மலர வைத்தேன்
பகிரமுடியாத என் பிரியங்களை
எமினெமின் குழந்தைப்பாடல்களில்
நெகிழ்ந்து ஈரம் கசிகையில்
ஷகிராவின் இடுப்பசைவில்
கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில்
தன்னியல்பு மறந்து
கண்சிமிட்டத்தொடங்குகின்றது
செடியும்
மவுனக்கவிதையைப் போல
ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும்
இதை காவிச்சென்றாலும்
என் வட்டத்துக்குள்
நுழைய அனுமதித்ததில்லை
எங்களைப் பிரித்து
வார்த்தைகள் எழுதவிரும்பும்
எந்த விரலையும்
வருடங்களாய்
எவரையும் அனுமதித்திராத
என் தோட்டமடையும்
புதர்படர்ந்த
ஒற்றையடிப்பாதையில்
நீ மலர்ந்துவந்து
பிரியம் கூறுகையில்
செவியிரண்டும் சிலிர்க்க
ஒரு சாம்பல்நிற முயலாய்
மாறிவிடுகிறது
எனது செடி
வரிவரியாய்
நீ தவறுதிருத்திய
என் கவிதைகளும்
வனப்புடன்
மிதக்கத் தொடங்குகின்றன
அதன் மேனியெங்கும்
வாழ்வைக் கனவாய்
களிப்பவனுக்கு
இதுவும்
பருவக்காற்றாய் தவழ்ந்து வந்து
மனதை நெகிழவைத்து
சடுதியாய்க் கலைந்துபோகும்
இன்னொரு
நெடுந்துயராகவும் இருக்கலாம்.
விலகிச்செல்லும் கணத்தில்
மிருதுவான முயலை
நீ எடுத்துப்போனாலும்
உலர்ந்துபோன செடியையாவது
மீதியாக விட்டுச்செல்க
எனக்கு.
தை 03, 2006
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
இது என்ன மாஜிக்கல் முயலிசமா? ..சீ ரியலிசமா?
1/03/2006 01:06:00 PM"முயலாகி " விட்டது என்றதும் அடுத்த பத்தியில் கையிலே கடித்து துருவலான காரட் இருக்கும் என்று பார்த்தால் இப்படி ஏமாத்திட்டீரே ப்ரோ..
பதிந்தது:வலைமேயாமான்
1/03/2006 01:24:00 PMதனிமையை
ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில்
இலைகளாகவும் கனிகளாகவும்
மலர வைத்தேன்
பகிரமுடியாத என் பிரியங்களை
தனிமையில் கஞ்சாச் செடி வளத்தம்பா!
எமினெமின் குழந்தைப்பாடல்களில்
நெகிழ்ந்து ஈரம் கசிகையில்
ஷகிராவின் இடுப்பசைவில்
கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில்
தன்னியல்பு மறந்து
கண்சிமிட்டத்தொடங்குகின்றது
செடியும்
எமினெமின் பாட்டு கேட்டுகிட்டே ஷகிராவோட
இடுப்பப் பார்த்தா சும்மா இன்னா கிக்கா இருகும் தெரியுமா?
மவுனக்கவிதையைப் போல
ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும்
இதை காவிச்சென்றாலும்
என் வட்டத்துக்குள்
நுழைய அனுமதித்ததில்லை
எங்களைப் பிரித்து
வார்த்தைகள் எழுதவிரும்பும்
எந்த விரலையும்
இந்த மாதிர் நான் கஞ்சா அடிக்க சொல்லொ
எனக்கு வாயிலேர்ந்து வார்த்தையே வராது.
வருடங்களாய்
எவரையும் அனுமதித்திராத
என் தோட்டமடையும்
புதர்படர்ந்த
ஒற்றையடிப்பாதையில்
நீ மலர்ந்துவந்து
பிரியம் கூறுகையில்
செவியிரண்டும் சிலிர்க்க
ஒரு சாம்பல்நிற முயலாய்
மாறிவிடுகிறது எனது செடி
என் கஞ்சாத் தோடத்துல முயல் பூந்துட்ச்சு!
வரிவரியாய்
நீ தவறுதிருத்திய
என் கவிதைகளும்
வனப்புடன்
மிதக்கத் தொடங்குகின்றன
அதன் மேனியில்
உனுக்கு கவித எல்லாம் படிக்க தெரியுமாமே உண்மியா
வாழ்வைக் கனவாய்
களிப்பவனுக்கு
இதுவும்
பருவக்காற்றில் தவழ்ந்துவந்து
மனதை
நெகிழவைத்து
சடுதியாய்க் கலைந்துபோகும்
இன்னொரு
நெடுந்துயராகவும் இருக்கலாம்.
மப்பு கலைய சொல்லொ இன்னா பேஜாரா இருக்கும் தெரியுமா?
விலகிச்செல்லும் கணத்தில்
மிருதுவான முயலை
நீ எடுத்துப்போனாலும்
உலர்ந்துபோன செடியையாவது
மீதியாக விட்டுச்செல்க
எனக்கு.
முயலதான் அடிச்சுக் கொழம்பு வெக்க நீ எடுத்துன் போய்ட்டே
அந்த செடியாயாவது எனக்கு குடுக்கலாமுல்ல?
3.1.2006
பதிந்தது:எழுதியது மலைமேலேமீன் :-)
1/03/2006 01:30:00 PMundefined
3.1.2006
அன்புள்ள வலைமேயாமான் II
1/03/2006 02:07:00 PMவலைமேயாமான் என்ற பெயரையுமா ஒத்தியெடுத்து ஒத்தின கவிதைக்கு உரை ஒத்தி எழுதுவீர்?! நீவீர் யாராயினும் இது நியாயமா?
மெய்யாகவே முதலாவது வலைமேயாமான்
அய்யோ அய்யோ இப்படி ரசனை மிக்கதாக எழுதினாலும் வயிறு எரியுது என்று சொன்னால் எப்படி
1/03/2006 03:12:00 PMபோலி வலைமேயா மான் ப்ரோக்களில் ஒருவர்தான், குழப்பத்து மன்னிக்கவும். வலைமீளாமீன் என்று எழுத வரும்போது அப்ப்...........டியே கை ஸ்லிப் ஆயி வலைமேயாமான் என்று வந்துவிட்டது.
இப்படிக்கி,
வலைமேயா மான் 11 எனப்பட்ட வலைமீளாமீன் எனப்பட்ட மலைமேலேமீன் :-)
//இது என்ன மாஜிக்கல் முயலிசமா? ..சீ ரியலிசமா?//
1/03/2006 03:37:00 PMகார்த்திக், 'சீ'ரியலிஸத்தைவிட, முயலிஸசம் பரவாயில்லை அல்லவா :-)?
....
முயல் கடிச்சிருக்கா, மான் பிறாண்டியிருக்கா என்று துருவிப் பார்ப்பதைவிட்டுவிட்டு அனுப்பிய மிளாகாய்த் தூளில் கறி வைத்து முதலில் சமைக்கப் பழகவும். எதிர்காலத்தில் கோபத்தை காட்டுவதற்கு நாங்கள் உறைப்புக் கூடப் போட்டு சமைக்கும் கறிதான் எமக்கு உதவுமாம் என்பதுதான் நீதியாம் :-).
/ மிளாகாய்த் தூளில் + இறுதி ஆயுதமாம் /
1/03/2006 03:39:00 PMஇது உண்மையாகவே நல்ல ஆயுதமாத்தான் தெரியுது. இன்னும் தூள் வரலை வந்துவுடன் 'தூள்' பண்ணிடலாம். அப்படியே இந்த மலைமேலே மீனையும் போட்டு குழம்பு வைக்கிறேன்.
இப்படிக்கி,
வலையில்மாட்டியவவ்வாலு.
/ மிளாகாய்த் தூளில் + இறுதி ஆயுதமாம் /
1/03/2006 03:42:00 PMஇது உண்மையாகவே நல்ல ஆயுதமாத்தான் தெரியுது. இன்னும் தூள் வரலை வந்துவுடன் 'தூள்' பண்ணிடலாம். அப்படியே இந்த மலைமேலே மீனையும் போட்டு குழம்பு வைக்கிறேன்.
இப்படிக்கி,
வலையில்மாட்டியவவ்வாலு.
சொல்ல விட்டுப்போச்சு. கவிதை நல்லா இருக்கு டீசே.
1/03/2006 03:51:00 PM--
வவ்.. வவ்.. வாலு
அருமையான கவிதை டிசே. அருமை.
1/03/2006 06:00:00 PMஅட இங்க வந்து இப்படி அடாவடித்தனம் பண்ணுறது யாருப்பா?
:)
கார்த்திக், தங்கமணி பின்னூட்டங்களுக்கு நன்றி.
1/04/2006 08:36:00 AMபதிந்தது:இரத்தினவேலு
1/04/2006 10:44:00 AMகவிதை நல்லா இருக்கு
4.1.2006
மின்னாடி பூ காட்டினே பின்னாடி மீன்கொயம்பு வெய்க்க சொல்றே
1/04/2006 02:16:00 PMஇன்னா ப்ரோதர் பசங்களுக்கு பாயட்ரில flora fauna பாயில் பண்ண கத்துகுட்கிறியா
இரத்தினவேலு நன்றி.
1/04/2006 03:15:00 PM......
எழுதிற 'கவித' 'களை' எல்லாம் உருப்பெருக்கி போட்டுக்காட்டி, பிறரைக் காயப்படுத்தி பாய்சன் ஆக்கிக்கிட்டு ஒரு கூட்டம் திரியுதாம். அவங்களைவிட, நானும், 'மிளகாய்த்தூள்' புகழ் ப்ரோவும் சமையல்,தோட்டம் (flora & fauna) என்டு எவரையும் பாய்சனாக்காமல் இப்படியே எங்கடைபாட்டில் திரிகிறோம் விடுங்கோ அநானி'மான்'சு :-).
Fiona வும், Cinderella வும் இல்லாமல் Floraவும்,Faunaவும் இருந்து என்ன பிரயோசனம்? நம்ம கரக்டரையே புரிஞ்சுக்கலியே அனானிமானு!
1/04/2006 03:51:00 PMஇப்படிக்கி,
-டிராகன்ப்ளை
கவிதை நன்றாக இருக்கிறது..
1/08/2006 12:57:00 PMமுயலும்,மிளாகாயும்கூட :-)
நன்றி நித்தியா.
1/09/2006 12:43:00 PMமுயற்கறி நல்ல சுவையாக இருந்தது.நன்னி அடுத்தமுறை இந்த வலைமேயாமானையோ அல்லது வலைமீளா மானையோ அடிச்சுச் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும்
1/10/2006 12:29:00 AMஎல்லோரும் மாமிசப்பட்சிணிகளாய் ஆனால், முயல்களின் நிலை பரிதாபமாய் அல்லவாய் போய்விடும் :-)?
1/15/2006 06:15:00 PMPost a Comment