கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

Tuesday, January 03, 2006

தனிமையை
ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில்
இலைகளாகவும் கனிகளாகவும்
மலர வைத்தேன்
பகிரமுடியாத என் பிரியங்களை

எமினெமின் குழந்தைப்பாடல்களில்
நெகிழ்ந்து ஈரம் கசிகையில்
ஷகிராவின் இடுப்பசைவில்
கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில்
தன்னியல்பு மறந்து
கண்சிமிட்டத்தொடங்குகின்றது
செடியும்

மவுனக்கவிதையைப் போல
ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும்
இதை காவிச்சென்றாலும்
என் வட்டத்துக்குள்
நுழைய அனுமதித்ததில்லை
எங்களைப் பிரித்து
வார்த்தைகள் எழுதவிரும்பும்
எந்த விரலையும்

வருடங்களாய்
எவரையும் அனுமதித்திராத
என் தோட்டமடையும்
புதர்படர்ந்த
ஒற்றையடிப்பாதையில்
நீ மலர்ந்துவந்து
பிரியம் கூறுகையில்
செவியிரண்டும் சிலிர்க்க
ஒரு சாம்பல்நிற முயலாய்
மாறிவிடுகிறது
எனது செடி

வரிவரியாய்
நீ தவறுதிருத்திய
என் கவிதைகளும்
வனப்புடன்
மிதக்கத் தொடங்குகின்றன
அதன் மேனியெங்கும்

வாழ்வைக் கனவாய்
களிப்பவனுக்கு
இதுவும்
பருவக்காற்றாய் தவழ்ந்து வந்து
மனதை நெகிழவைத்து
சடுதியாய்க் கலைந்துபோகும்
இன்னொரு
நெடுந்துயராகவும் இருக்கலாம்.

விலகிச்செல்லும் கணத்தில்
மிருதுவான முயலை
நீ எடுத்துப்போனாலும்
உலர்ந்துபோன செடியையாவது
மீதியாக விட்டுச்செல்க
எனக்கு.

தை 03, 2006

19 comments:

SnackDragon said...

இது என்ன மாஜிக்கல் முயலிசமா? ..சீ ரியலிசமா?

"முயலாகி " விட்டது என்றதும் அடுத்த பத்தியில் கையிலே கடித்து துருவலான காரட் இருக்கும் என்று பார்த்தால் இப்படி ஏமாத்திட்டீரே ப்ரோ..

1/03/2006 01:06:00 PM
Anonymous said...

பதிந்தது:வலைமேயாமான்

தனிமையை
ஒரு பூச்செடியாய் வளர்க்கத்தொடங்குகையில்
இலைகளாகவும் கனிகளாகவும்
மலர வைத்தேன்
பகிரமுடியாத என் பிரியங்களை

தனிமையில் கஞ்சாச் செடி வளத்தம்பா!

எமினெமின் குழந்தைப்பாடல்களில்
நெகிழ்ந்து ஈரம் கசிகையில்
ஷகிராவின் இடுப்பசைவில்
கிறங்கி கால்களில் சுருதி சேர்கையில்
தன்னியல்பு மறந்து
கண்சிமிட்டத்தொடங்குகின்றது
செடியும்

எமினெமின் பாட்டு கேட்டுகிட்டே ஷகிராவோட
இடுப்பப் பார்த்தா சும்மா இன்னா கிக்கா இருகும் தெரியுமா?

மவுனக்கவிதையைப் போல
ஆயிரம் சனங்கள் ஆரவாரிக்கும் சபையிலும்
இதை காவிச்சென்றாலும்
என் வட்டத்துக்குள்
நுழைய அனுமதித்ததில்லை
எங்களைப் பிரித்து
வார்த்தைகள் எழுதவிரும்பும்
எந்த விரலையும்

இந்த மாதிர் நான் கஞ்சா அடிக்க சொல்லொ
எனக்கு வாயிலேர்ந்து வார்த்தையே வராது.

வருடங்களாய்
எவரையும் அனுமதித்திராத
என் தோட்டமடையும்
புதர்படர்ந்த
ஒற்றையடிப்பாதையில்
நீ மலர்ந்துவந்து
பிரியம் கூறுகையில்
செவியிரண்டும் சிலிர்க்க
ஒரு சாம்பல்நிற முயலாய்
மாறிவிடுகிறது எனது செடி

என் கஞ்சாத் தோடத்துல முயல் பூந்துட்ச்சு!

வரிவரியாய்
நீ தவறுதிருத்திய
என் கவிதைகளும்
வனப்புடன்
மிதக்கத் தொடங்குகின்றன
அதன் மேனியில்

உனுக்கு கவித எல்லாம் படிக்க தெரியுமாமே உண்மியா

வாழ்வைக் கனவாய்
களிப்பவனுக்கு
இதுவும்
பருவக்காற்றில் தவழ்ந்துவந்து
மனதை
நெகிழவைத்து
சடுதியாய்க் கலைந்துபோகும்
இன்னொரு
நெடுந்துயராகவும் இருக்கலாம்.

மப்பு கலைய சொல்லொ இன்னா பேஜாரா இருக்கும் தெரியுமா?

விலகிச்செல்லும் கணத்தில்
மிருதுவான முயலை
நீ எடுத்துப்போனாலும்
உலர்ந்துபோன செடியையாவது
மீதியாக விட்டுச்செல்க
எனக்கு.

முயலதான் அடிச்சுக் கொழம்பு வெக்க நீ எடுத்துன் போய்ட்டே
அந்த செடியாயாவது எனக்கு குடுக்கலாமுல்ல?

3.1.2006

1/03/2006 01:24:00 PM
Anonymous said...

பதிந்தது:எழுதியது மலைமேலேமீன் :-)

undefined

3.1.2006

1/03/2006 01:30:00 PM
Anonymous said...

அன்புள்ள வலைமேயாமான் II
வலைமேயாமான் என்ற பெயரையுமா ஒத்தியெடுத்து ஒத்தின கவிதைக்கு உரை ஒத்தி எழுதுவீர்?! நீவீர் யாராயினும் இது நியாயமா?

மெய்யாகவே முதலாவது வலைமேயாமான்

1/03/2006 02:07:00 PM
Anonymous said...

அய்யோ அய்யோ இப்படி ரசனை மிக்கதாக எழுதினாலும் வயிறு எரியுது என்று சொன்னால் எப்படி
போலி வலைமேயா மான் ப்ரோக்களில் ஒருவர்தான், குழப்பத்து மன்னிக்கவும். வலைமீளாமீன் என்று எழுத வரும்போது அப்ப்...........டியே கை ஸ்லிப் ஆயி வலைமேயாமான் என்று வந்துவிட்டது.

இப்படிக்கி,
வலைமேயா மான் 11 எனப்பட்ட வலைமீளாமீன் எனப்பட்ட மலைமேலேமீன் :-)

1/03/2006 03:12:00 PM
இளங்கோ-டிசே said...

//இது என்ன மாஜிக்கல் முயலிசமா? ..சீ ரியலிசமா?//
கார்த்திக், 'சீ'ரியலிஸத்தைவிட, முயலிஸசம் பரவாயில்லை அல்லவா :-)?
....
முயல் கடிச்சிருக்கா, மான் பிறாண்டியிருக்கா என்று துருவிப் பார்ப்பதைவிட்டுவிட்டு அனுப்பிய மிளாகாய்த் தூளில் கறி வைத்து முதலில் சமைக்கப் பழகவும். எதிர்காலத்தில் கோபத்தை காட்டுவதற்கு நாங்கள் உறைப்புக் கூடப் போட்டு சமைக்கும் கறிதான் எமக்கு உதவுமாம் என்பதுதான் நீதியாம் :-).

1/03/2006 03:37:00 PM
SnackDragon said...

/ மிளாகாய்த் தூளில் + இறுதி ஆயுதமாம் /
இது உண்மையாகவே நல்ல ஆயுதமாத்தான் தெரியுது. இன்னும் தூள் வரலை வந்துவுடன் 'தூள்' பண்ணிடலாம். அப்படியே இந்த மலைமேலே மீனையும் போட்டு குழம்பு வைக்கிறேன்.

இப்படிக்கி,
வலையில்மாட்டியவவ்வாலு.

1/03/2006 03:39:00 PM
SnackDragon said...

/ மிளாகாய்த் தூளில் + இறுதி ஆயுதமாம் /
இது உண்மையாகவே நல்ல ஆயுதமாத்தான் தெரியுது. இன்னும் தூள் வரலை வந்துவுடன் 'தூள்' பண்ணிடலாம். அப்படியே இந்த மலைமேலே மீனையும் போட்டு குழம்பு வைக்கிறேன்.

இப்படிக்கி,
வலையில்மாட்டியவவ்வாலு.

1/03/2006 03:42:00 PM
SnackDragon said...

சொல்ல விட்டுப்போச்சு. கவிதை நல்லா இருக்கு டீசே.
--

வவ்.. வவ்.. வாலு

1/03/2006 03:51:00 PM
Thangamani said...

அருமையான கவிதை டிசே. அருமை.

அட இங்க வந்து இப்படி அடாவடித்தனம் பண்ணுறது யாருப்பா?

:)

1/03/2006 06:00:00 PM
இளங்கோ-டிசே said...

கார்த்திக், தங்கமணி பின்னூட்டங்களுக்கு நன்றி.

1/04/2006 08:36:00 AM
Anonymous said...

பதிந்தது:இரத்தினவேலு

கவிதை நல்லா இருக்கு

4.1.2006

1/04/2006 10:44:00 AM
Anonymous said...

மின்னாடி பூ காட்டினே பின்னாடி மீன்கொயம்பு வெய்க்க சொல்றே

இன்னா ப்ரோதர் பசங்களுக்கு பாயட்ரில flora fauna பாயில் பண்ண கத்துகுட்கிறியா

1/04/2006 02:16:00 PM
இளங்கோ-டிசே said...

இரத்தினவேலு நன்றி.
......
எழுதிற 'கவித' 'களை' எல்லாம் உருப்பெருக்கி போட்டுக்காட்டி, பிறரைக் காயப்படுத்தி பாய்சன் ஆக்கிக்கிட்டு ஒரு கூட்டம் திரியுதாம். அவங்களைவிட, நானும், 'மிளகாய்த்தூள்' புகழ் ப்ரோவும் சமையல்,தோட்டம் (flora & fauna) என்டு எவரையும் பாய்சனாக்காமல் இப்படியே எங்கடைபாட்டில் திரிகிறோம் விடுங்கோ அநானி'மான்'சு :-).

1/04/2006 03:15:00 PM
Anonymous said...

Fiona வும், Cinderella வும் இல்லாமல் Floraவும்,Faunaவும் இருந்து என்ன பிரயோசனம்? நம்ம கரக்டரையே புரிஞ்சுக்கலியே அனானிமானு!

இப்படிக்கி,
-டிராகன்ப்ளை

1/04/2006 03:51:00 PM
Anonymous said...

கவிதை நன்றாக இருக்கிறது..
முயலும்,மிளாகாயும்கூட :-)

1/08/2006 12:57:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நித்தியா.

1/09/2006 12:43:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

முயற்கறி நல்ல சுவையாக இருந்தது.நன்னி அடுத்தமுறை இந்த வலைமேயாமானையோ அல்லது வலைமீளா மானையோ அடிச்சுச் சாப்பிட்டுப் பார்க்கவேண்டும்

1/10/2006 12:29:00 AM
இளங்கோ-டிசே said...

எல்லோரும் மாமிசப்பட்சிணிகளாய் ஆனால், முயல்களின் நிலை பரிதாபமாய் அல்லவாய் போய்விடும் :-)?

1/15/2006 06:15:00 PM