கடற்கரையில்
கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவனாய்
பிரியமாய் சேகரிக்கின்றேன்
உனக்கான வார்த்தைகளை
வார்த்தைகள் அனைத்தும்
வன்முறையேறி
இரத்தமாய் வழிகின்றன
அல்லது
போதையேறி
போலியாய் பல்லிளிக்கின்றன
வலிக்கவும் செய்யாமல்
வருடச்செய்யும் மென்மையுமில்லாமல்
உன் திமிர்வுக்கேற்ற சொற்கள்தேடி
பாலைவனத்தில் நடக்கத்தொடங்குகையில்
நீ மணலிலும்
நான் பனியிலும்
எழுதி அழித்த வாக்கியங்கள்
நட்சத்திரங்களாகின்றன
வருடங்கள் கடந்து
வாவிகள் தாண்டி
இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
உதிர்ந்துகொண்டிருக்கும் ஒரு பருவத்தில்
நிகழக்கூடும் நமது சந்திப்பு
அப்போது விளம்புவேன்
உனக்கு;
ஆபிரிக்கன் நடனத்தையும்
ஸ்பானிய இசையையும்
ரஷ்யப் புனைவையும்
கலந்து உருவாக்கிய
ஒரு தமிழ்ச்சொல்லை.
(குட்டி இளவரசிக்கு)
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
அப்போது விளம்புவேன்
12/29/2005 01:08:00 PMஉனக்கு;
ஆபிரிக்கன் நடனத்தையும்
ஸ்பானிய இசையையும்
ரஷ்யப் புனைவையும்
கலந்து உருவாக்கிய
ஒரு தமிழ்ச்சொல்லை.
உம்மை மண்டையிலை போடோணும் ஐஸே
வலைமேயாமான்
வலைமேயாமான்,
12/29/2005 01:58:00 PMமான்கள் எப்போது வன்முறையாளராகியது என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், எப்பவாவது தாங்கள் ரொரண்டோ வந்தால் ஏதாவது அசம்பாவிதம் நிகழும் என்ற பயத்தில்தானே, தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றேன் என்பது தாங்கள் அறியாததா என்ன? வேறு கொஞ்ச சனம், நான் ஒளித்து வைத்திருக்கும் அவர்களின் புத்தகங்களுக்காய் என்னை வலை வீசித்தேடிக்கொண்டிருப்பது இன்னொரு அவலக்கதை :-).
அழகானது.
12/29/2005 02:04:00 PMஅவலக்கதை
12/29/2005 02:51:00 PM.. அவல்_கதை அவள்_கதை எண்டால் சொல்லும் சொல்லும். அவலக்கதை எண்டால் ஆளை விடும்.
சொல்ல வந்ததென்னவெண்டால், புல்லை, முள்ளைத் தட்டி விலக்கி, தலையில அமத்தி எழுதும்.
அமத்தி நடந்த இடம் ஆழமாய்ப் போய்த் தடம் தெரிஞ்சால், கொஞ்சம் நிதானித்து வேற புல்லை, முள்ளை, புதரைத் தேடி நடவும். இல்லையெண்டால், கலந்து உருவாக்கிய சொல்லுகளாயே போயிடும்.
அழகானது என்கிற அ(ந்)துவே உனக்கு கிழமை நாட்களில் வேலையில்லையா?
;-)
வலைமேய் R man
எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கிறது. என்னதான் நடக்கிறது உலகத்திலே :-(. அந்துவாகிப்போன கார்த்திக் ப்ரோவே உமக்காவது ஏதாவது புரிகிறதா :-).
12/29/2005 03:37:00 PM....
(R)மி மான் எழுதியது புரிகிறது. இனிமேலும் வரப்போகும் குட்டுக்களிலிருந்து
தப்பிக்க அவல்/அவள் கதை இதில் இருக்கிறது என்று 'சும்மா' கூறிக்கொள்கின்றேன் :-).
இல்லை ப்ரோ எனக்கும் இதுக்கும் சத்தியமா சம்பந்தமே இல்லை. நானே பதிவு என்ற கணக்கிலே பத்து வார்த்தைகளை எழுதி ஓட்டுகிறேன் வண்டியை. அதைப் பார்த்தும் கண் வைக்கிறது இந்த வலைக்கடியிலொளியுமான். ;-)
12/29/2005 03:51:00 PMபேசாமல் ""மேயா...............த மான்" எண்டு பாகவதர் பாடியில் பாணினால் ...சீ பாகவதர் பாணியில் பாடலாம் போல இருக்கு.
//பேசாமல் ""மேயா...............த மான்" எண்டு பாகவதர் பாடியில் பாணினால் //
12/29/2005 03:54:00 PMஅந்தப் பாடியின் வாய்க்குள் பாணைக்கொடுத்து அமுக்கி வைத்தால்தான், எங்கள் பிழைப்பு நடக்கும்போல :-)
""மேயா...............த மான்" எண்டு பாகவதர் பாடியில் பாணினால்
12/29/2005 03:56:00 PMஅது பாகவதர் இல்லை பையா டி ஆர் மஹாலிங்கோம்
தம்ப்ரீஇஇஇ
வர வர உமது கவிதைகள் ஒரு தடத்துக்குள்ளை சிக்கப்பாக்குது. கிட்டத்தட்ட நட்சத்திரர் செவ்விந்தியருக்கான கதி உமக்கு ஆகக்கூடாது கண்டீரோ?
வல்ல மே ஆயாத மான்
/வர வர உமது கவிதைகள் ஒரு தடத்துக்குள்ளை சிக்கப்பாக்குது./
12/29/2005 04:04:00 PMஉதுக்குத்தான் அப்பப்போ மனுஸ்யபுத்திரனை ஓவரா வாசிக்காமல் கொஞ்சம் ஓரமாய் வைத்துவிட்டு
கொஞ்சம் டி ஆர் மகாலிங்கத்தையும் வாசிக்கோணும்.
ஆமாம் தம் + ரீ , ஆயா மான் சொல்வது போல் கற்பனை மிகுதி ; தத்துவம் குறைவாகிப்போனதற்கு காரணம் அவளோ ?இல்லை அவலோ? இல்லை அல்வாவோ? -P
இப்போதைக்கு அவல் மட்டுமே. விரைவில் செமிக்காத அல்வா பற்றியும் ஒரு கதறல் வரும் என்க :-).
12/29/2005 04:08:00 PMஎன்ன ரெண்டு பேரும் சேர்ந்து இப்படி ஓட்டிகிட்டு இருக்கீங்க! கவனிச்சுக்குறேன் :)
12/29/2005 05:04:00 PMWhen did Peyarili become a 'deer'
12/29/2005 05:25:00 PM(with or without horns) -:)
"பிரியமாய்" வார்த்தைகளை சேகரிக்கும்போது அதில் வன்முறையேறி இரத்தம் தெறிக்குமா என்ன? பிரியம் இருக்கையில் வார்த்தைகளே தேவையில்லைதானே
12/29/2005 06:21:00 PMவணக்கோண்ணா. எப்படியிருக்கீங்க?
12/29/2005 07:53:00 PM-/பெயரிலி. நீங்கள் எழுதியதில் ஆபாசமாக எதுவும் இல்லையெனினும் தனிப்பட்ட சில காரணங்களுக்காக நீக்கியதற்காகப் பாராட்டுகிறேன்.
12/29/2005 09:50:00 PMவலைமேயாமான்
என்ன எல்லாம் இங்கே நடக்கிறது என்பது ஒரே குழப்பமாயிருக்கிறது. இந்த மாதம் எனக்கு ஒரே சாம்பார் குழம்பு மாதம் போல :-).
12/29/2005 10:37:00 PM.....
தெளிவாய்த் தெரிந்த இரண்டே இரண்டே விடயங்களுக்கு மட்டும் பதிலளிக்க முயல்கின்றேன்.
//"பிரியமாய்" வார்த்தைகளை சேகரிக்கும்போது அதில் வன்முறையேறி இரத்தம் தெறிக்குமா என்ன?//
பத்மா, பிரியமான வார்த்தைகள் ஒருவருக்குக் கூறத்தேவை என்று தேடும்போது, வார்த்தைகள் அனைத்தும் இரத்தமாயும் போலியாயும் இருக்கிறது என்ற கவலையை/அசதியைத்தான் அங்கே சொல்ல முயன்றேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி,பிரியத்தைத்தெரிவிக்க வார்த்தைகள் தேவையேயில்லை என்பது நான் மறந்த விடயம் :-). குறிப்பிட்டுச் சொன்னதற்கு நன்றி.
.....
விஜய், வாருங்கள் வாருங்கள். பழைய நண்பரை மீண்டும் சந்திப்பது எவ்வளவு மகிழ்ச்சியானது தெரியுமா? அண்மையில் கூட, நீங்கள் எழுதிய ஈரானியப்படங்கள், பூர்விகக்குடிகள் பற்றிய படம் என்பவற்றைக் குறிப்பிட்டு, ஒரு நண்பருடன் உரையாடியிருக்கின்றேன். இனி நிறைய எழுதுங்கள், விஜய்.
பதிந்தது:இரத்தினவேலு
12/30/2005 03:32:00 AMகவிதை சூப்பர்
30.12.2005
டி.சே!
12/30/2005 09:39:00 AMநீர் உந்த mood இலயே இருப்பீரேண்டா, வெண்பா மாதிரி வடிவங்களை முயற்சிக்கலாம். நல்லா வரும்.
சாரா, நானே குழப்பி நிற்கும்போது உங்களுக்கு எப்படி பதிலளிப்பதாம் :-(? புது வருடம் எல்லோருக்கும் தெளிவைக் கொண்டுவரட்டும் :-).
12/30/2005 10:30:00 PM....
கொழுவி,நீங்கள் கூறியதை யோசித்துப்பார்க்கின்றேன். ஆனால் அதற்கென்று உரித்தான வரைவிலக்கணங்களை முதலில் தெரிந்திருக்கவேண்டும் அல்ல்வா? குற்றியலுகரத்துக்கும், குற்றியலிகரத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளவே, அக்காவிடம் குட்டு வாங்கித்தான் கற்றேன் :-(.
வேறோரிடத்திலே பீரோக்களை வம்புக்கிழுத்தவர்களோடு வலைமேயாமான் தும்புக்கு இழுபட்டிருக்கிறார் போலத் தெரிகிறது
12/31/2005 12:14:00 AMகழுவி
Post a Comment