கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

குளிரோடு வந்த ஞானம்

Wednesday, December 07, 2005

நிர்வாண விடுதியில்
சுழன்றாடிய பெண்ணின்
அடக்கிவைத்த துயராய்
பொழிகிறது பெரும்பனி

விண்வெளிக்குச் செல்லும்
பயணியாய்
ஆடைகள் புனைந்து
குளிரில் உறைந்துகொண்டிருப்பவன் முன்
கண்ணாடிச்சில்லுகளாய் தெறிக்கும்
வாழ்வின் குரூர கணங்கள்

பப்பாசிப்பழத்தை
சீவும் இலகுவாய்
கொலை கொலையாய் விழுகிறதாம்
வல்லூறுகளும் இரைகவ்வ விரும்பும்
ஊரில்

மதியம்
சோறும் கத்தரிக்காய்க்குழம்பும் உண்டால்தான்
இரவுத்தூக்கம் வருமென்பதை
மறைத்து
பெருமிதப்படலாம்
ஒரு கனடீயத்தேசியனென்று

உடல்கள் கோரமாய்ச் சிதற
குருதியுறிஞ்சும் பேய்கள் மூர்க்கமாய் விரட்ட
ஊரூராய் அகதியாய்
அலைந்த பதின்மம்
ஒரு அந்நியனாய்
நினைவின் கதவை
எப்போதாவது தட்டுகையில்
சிதைகின்றேன் மூளைவெடித்து

இராணுவம் 'ஆளுமை' காட்டி
சிதைத்துப்போன
பதின்மத்தோழிக்கு
இப்போதும் நினைவிருக்குமா
நான் நாவற்பழம் பொறுக்கிக்கொடுத்தது.

Dec 07/05

15 comments:

SnackDragon said...

இன்னொன்று அருமை!

12/07/2005 12:28:00 PM
Anonymous said...

பதிந்தது:kk

மிக மிக அருமை !!

7.12.2005

12/07/2005 12:44:00 PM
Anonymous said...

பதிந்தது:kk

பதிந்தது:kk

மிக மிக அருமை

7.12.2005

7.12.2005

12/07/2005 12:45:00 PM
Anonymous said...

பதிந்தது:kk

மிக மிக அருமை

7.12.2005

12/07/2005 12:45:00 PM
வானம்பாடி said...

***

12/07/2005 01:24:00 PM
Anonymous said...

பதிந்தது:நண்பன்

undefined

7.12.2005

12/07/2005 01:42:00 PM
நண்பன் said...

துயராய் - எத்தனை தான் வடிவம் ஈர்த்தாலும் அவளின் பின் நிற்கும் சோகத்தைக் கண்டு ஆட்டம் பிடிபடாத துயரமாய் - இறுக்கமான சூழல்

இவற்றிகிடையே சோறு கத்தரிக்காய் மூலம் நினைவில் எழும் பிறப்பிடத்தை அடையாளம் காட்டி

இலகுவாய் விழும் கொலைகளைக் கண்டு அஞ்சி

அஞ்சி அஞ்சி ஓடி

இன்று விண்வெளிப் பயணியின் அளவிற்கு உடையுடுத்தினாலும்

அன்று ஆளுமை காட்டிய ராணுவம் அவிழ்த்துப்போட்ட ஆடைகளுக்கிடயே சித்தமிழந்து நிற்கும் தோழியின் (சொந்த மண்ணின்) மீது

இன்னமும் காதல் மிச்சமிருக்கின்றது பிறந்த மண்ணிலே இன்னும் வீழ்ந்து கிடக்கும் அவள் மீது.

டிசெ,

உங்களைப் போன்ற நண்பர்களின் துயரத்தில் பங்கு மட்டும் தான் கொள்ள முடிகிறது.

இழந்து விட்ட சுவாசத்தை மீட்டுத் தர இயலாமைக்கு வருந்தத் தான் முடிகிறது.

மன்னியுங்கள்.

12/07/2005 01:45:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
....
நண்பன்! இதில் மன்னிப்பு எல்லாம் எதற்கு? உங்களை மாதிரி புரிந்துகொண்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதே மிகவும் இதமானதுதானே. மேலும் ஈழத்தில் அனேகர் உணர்ந்த/அனுபவித்த நூறில் ஒருபகுதியைக் கூட நான் அனுபவித்திருப்பேனா என்பதே சந்தேகம். போரிற்குள் மட்டுமல்ல, போரிலிருந்து தப்பிவருகையில், எல்லை கடந்த வேற்றுநாடுகளில் இறந்தவர்கள், சித்திரவதைக்குள்ளானவர்கள் என்று இன்னும் சோகம் நீளும் .

12/07/2005 10:41:00 PM
Anonymous said...

பதிந்தது:ஈழநாதன்

அண்ணை உண்மையிலேயே ஒரு நல்ல கவிதை அதிலும் பனிக்குச் சொன்ன உவமானம் அந்த மாதிரி


8.12.2005

12/08/2005 12:33:00 AM
Anonymous said...

பதிந்தது:ஈழநாதன்

அண்ணை உண்மையிலேயே ஒரு நல்ல கவிதை அதிலும் பனிக்குச் சொன்ன உவமானம் அந்த மாதிரி


8.12.2005

12/08/2005 12:33:00 AM
அன்பு said...

அருமையான வெளிப்பாடு, பாராட்டுக்கள் டிசே.

பி.கு: உங்களின் எல்லாக் கவிதைகளையும் இதேபோல் வாசித்திருந்தாலும், ஒரு சிலவரிகள் புரியாததாலோ/ஏன் என்ற கேள்வி வந்ததாலோ எதுவும் சொல்லாமல் சென்றிருக்கிறேன். முதல்முறையாக இந்தக்கவிதை நுனிமுதல் அடிவரை புரிந்ததால் (அல்லது அப்படி ஒரு உணர்வு வந்ததால்:) இந்த பாராட்டு. அதனால் அவ்வப்போது எனக்கும் புரியும்படி உங்கள் தரத்தை தாழ்த்தி:) எழுதவும், நன்றி.

12/08/2005 01:14:00 AM
Thangamani said...

நல்ல முயற்சி டிசே.

12/08/2005 03:25:00 AM
கொழுவி said...

//டிசே, இராணுவம் என்பதை ஒரு குறியீடாய் தூக்கிப் போட்டுவிட்டு இன்னொரு கோணத்தில்- ஆளுமை செய்தவனும் எவளுக்காவது நாவற்பழம் பொறுக்கிக் கொடுத்திருக்கமாட்டான்?//

இது டி.சேயை "ஆளுமை" உள்ளவராக (அத்தோடு நாவற்பழம் பொறுக்கிக் கொடுத்த அனைவரையும்) மாற்றும் முயற்சி. கருத்துத் திசைதிரும்புமென்பதால் மேற்கொண்டு எதுவுமில்லை.

12/08/2005 06:42:00 AM
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

டீசே, நன்றாக இருக்கிறது கவிதை.

12/08/2005 01:06:00 PM
இளங்கோ-டிசே said...

ஈழநாதன், அன்பு, ஜெய்ஸிறி,தங்கமணி,கொழுவி மற்றும் செல்வராஜ் பின்னூட்டங்களுக்கு நன்றி.
....
அன்பு, முதலாவது கவிதைப் பின்னூட்டத்துக்கும், அன்புக்கும் நன்றி :-).
.....
கொழுவி, இராணுவம் அதற்கெதிர் என்ற அர்த்தத்தில் இல்லாது, (இராணுவம் என்று மட்டுமில்லாது) நாங்களும் கூட
(சாதாரண ஆண்களும்) 'ஆளுமை' காட்டி பெண்களைச் சிதைத்துப் போகின்றோம் என்ற அர்த்தம் வரும்படிதான்
ஜெய்ஸிறி கூறுகின்றார் என்று நினைக்கின்றேன். தவறாயிருந்தால் யாரும் என் தலையில் குட்டலாம்.

12/08/2005 03:22:00 PM