நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

Tuesday, December 13, 2005

எல்லா விம்பங்களும்
உடைய
இலையுதிர்த்த
மரங்களின் கிளைகளில்
தொங்கும்
உறைந்துபோன பனியாய்
இறுகுகின்றது மனது

ஒரு திசை முழுதும்
கண்ணாடி நிரப்பிய
அறையிலிருந்து
கதகதப்பாய் கம்பளி போர்த்தி
தெருவை இரசிக்கையில்
குளிரிலும்
ஒப்பனை கலைந்துவிடக்கூடாதென்ற அவதியில்
'வாடிக்கையாளர்' தேடும் பெண்களும்
வீடற்ற மனிதர்களும்
நீலநிறமாக்குகின்றனர்
எனது பொழுதை

எதிர்ப்புரத்து
தேவாலயத்தின் உச்சியிலிருந்து
பல்கணியில்
கரையொதுங்கிய புறாவின் சிறகுகள்
நினைவுபடுத்தும்
குளிராய் இருக்கிறதென்று
நெருக்கமாய் அணைத்தபடி நடந்த
காதலியின் வின்ரர்கோட்டினை

எல்லாக்காட்சிகளும் மாறுகின்றன
சடுதியாய்.

வீட்டற்ற ஆண்கள்
வாடிக்கையாளரைத் தேடிய
பெண்களின் கரங்களை
நேசமாய் கோர்த்தபடி செல்ல
மஞ்சள் பூக்களிடையே
வானவில் தோன்றுகின்றது
அவர்களின் குழந்தைகள் சிதறி ஓட.

மனது பேருவுவகை கொள்ள
I am rapping...
புத்தரும் இயேசுவும் தேநீரருந்தி
இரசிக்கின்றனர்
பிள்ளையாரின் hip-hop நடனத்தை

இது எப்படி சாத்தியமெனும்
மூளையின் நீயூரனொன்றில்
அம்மாவின் குரல் கரைகிறது
'நீ என் வயிற்றில் இருக்கிறாய் மகனே!'

வெளியே
உலகம் கூறிக்கொண்டது
நான் இறந்துவிட்டதாய்.

Dec 13/05

7 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

Wow! BEAUTIFUL!

especially,

//இது எப்படி சாத்தியமெனும்
மூளையின் நீயூரனொன்றில்
அம்மாவின் குரல் கரைகிறது
'நீ என் வயிற்றில் இருக்கிறாய் மகனே!'

வெளியே
உலகம் கூறிக்கொண்டது
நான் இறந்துவிட்டதாய்.//

the way you finished this poem.

-Mathy

12/13/2005 11:55:00 AM
Thangamani said...

அருமையாக இருக்கிறது கவிதை!

12/13/2005 12:41:00 PM
KARTHIKRAMAS said...

அருமை

12/13/2005 12:52:00 PM
Anonymous said...

பதிந்தது:தர்சன்

//புத்தரும் இயேசுவும் தேநீரருந்தி
இரசிக்கின்றனர்
பிள்ளையாரின் கிப்ஹொப் நடனத்தை//

நான் ரசித்த படிமம்.


13.12.2005

12/13/2005 01:37:00 PM
டிசே தமிழன் said...

மதி, தங்கமணி, கார்த்திக் மற்றும் தர்சன் பின்னூட்டங்களுக்கு நன்றி.

12/13/2005 05:35:00 PM
சுதர்சன் said...

*****
:)

12/14/2005 04:13:00 AM
டிசே தமிழன் said...

சுதர்சன், இப்படி நட்சத்திரங்களும், கேள்விக்குறிகளும் போட்டு என்னையும் தன்னை மாதிரி சடையன் ஆக்கி தலையைச் சொறியவைத்த ஆசாமிதான் வனவாசத்தில் இருக்கின்றார் என்று பெருமூச்சுவிட்டால், நீங்களுமா :-)?

12/14/2005 11:15:00 AM