கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

எங்கள் குடும்பச் செல்வங்கள்

Sunday, May 22, 2005

{யாழ் இனிது குழல் இனிதென்பர் மழலைமொழி கேளாதோர்}

P5070010
எழில்

'மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினில் இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்படவேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்'

P5070017
ஈழன் (தமிழுக்கு) மக்ஸீம்(ரஷ்யனுக்கு)

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை'

File0001
மயூரதி

'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்;
அமிழ்ந்து பேரிருள் அறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகும்'

P4260005
கீர்த்திகன்

'சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக்கிளறியும் இன்னும்
எத்தனை வகையிலோ என் வழிக்கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள் பயனொறில்லை'

கவிதைவரிகள்: பாரதியார்

38 comments:

-/பெயரிலி. said...

1. பேர்வழிகள் பேர்களென்ன?
2. டிசேயின் பருவக்கோளாறு எங்களுக்குமட்டும் விளங்கி என்ன பயன்? சாடைமாடையாக எங்களுக்கு உங்கள் சோகத்தைச் சொல்வதைவிட்டுவிட்டு, நேராக "வீட்டிலையே கட்டிவைக்கிறியா? இல்லை, ஆரையும் காதலிச்சுக் கடத்திக்கொண்டோடட்டுமா?" என்று கேட்பது பயனுள்ளதாகும். அதுக்குத் துணிச்சல் இல்லாட்டி, வரும் ரொரொண்டோ வலைப்பதிவர்மாநாட்டிலே, பதிவாளர்கள் இதுகுறித்தும் ஒரு கையொப்பவேட்டை நிகழ்த்தி, டிஜே வீட்டுக்குச் சமர்ப்பிக்கவும். வேண்டுமானால், இணையத்திலே எங்காவது (pettiononline போன்ற இடங்களிலே) விபரம் ஆள் படத்தோடு, "மணமகள் உடனடி தேவை" என்று போடுங்கள்; நானும் கையொப்பமிட வாய்ப்புண்டு. ;-)

5/22/2005 02:34:00 PM
Sri Rangan said...

டி.ஜே,வணக்கம்!
அருமையான மழலைப் பட்டாளம்.தங்கள் மனசு ரொம்பத்தாம் ஏங்கித் தவிக்கிறது,மழலைமொழிகேட்க.முயற்சியுடன் முன்னேறுங்கள்,பலன் கிட்டவே செய்யும்.இலக்கியச் சந்திப்புகளில் பங்குகொண்ட அநுபவத்தில் கூறுகிறேன்,முயலுங்கள்.எனது துணையையும் இ.சந்திப்பிலேதாம் கண்டடைந்தேன்.

5/22/2005 02:40:00 PM
Anonymous said...

பதிந்தது:ravi srinivas

கவலைப்பட வேண்டாம், இணையத்திலும் துணை தேடலாம், என்னைப் போல். வெற்றி கிடைக்கும். மேல்விபரங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பவும் :)

22.5.2005

5/22/2005 02:45:00 PM
Anonymous said...

DJ: கடைசி வாண்டின் பார்வை சுவாரசியம். :)
சரி. அதிருக்கட்டும். டோராண்டோ சந்திப்புல ஏதேனும் அறிவிப்புக்கு தயார் பண்றீங்களோ?. ;)
ஏதாகிலும் வாழ்த்துக்கள். அப்பிடி இல்லை-ன்னா, பெட்டிசன் பெயரிலி உருவாயிடுவார். பார்த்துக்கோங்க...:))

5/22/2005 06:12:00 PM
Anonymous said...

பெயரிலி, சி. ரங்கன்,ரவி, மற்றும் பாலாஜி அகியோர் ரொம்ப D.J. யின் வாழ்க்கையைப்பற்றி யோசிக்கிறீர்கள். அது எப்படி நீங்கள் எல்லாலோரும் ஒரே மாதிரி இருக்கிறீகள். பின்னூட்டங்கள் பண்ணுறது தான் வேலை போல தெரிக்கிறது. Anyways, உங்க comments க்கு comments பண்ண எனக்கு நேரம் கிடைத்தது பெரிய விஷயம் தான்.

D.J. பதிவு நன்றாக உள்ளது. உங்கள் வீட்டுக்குழந்தைச்செல்வங்கள், எல்லா செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

5/22/2005 08:12:00 PM
Anonymous said...

//http://www.flickr.com/photos/58519052@N00/15106525//

இவருக்கு வேற வேலை இல்ல. சும்மா படம் எடுக்கிறதும் படம் காட்டுறதுமாக இருக்கிறேன். ஒரு நாள் இவருக்கு ஆப்பு வைக்கிறன் பார்!

வசன உபயம்: நான்ந்தான் ;)

5/23/2005 12:05:00 AM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//எங்களுக்குமட்டும் விளங்கி என்ன பயன்? சாடைமாடையாக எங்களுக்கு உங்கள் சோகத்தைச் சொல்வதைவிட்டுவிட்டு, நேராக "வீட்டிலையே கட்டிவைக்கிறியா? இல்லை, ஆரையும் காதலிச்சுக் கடத்திக்கொண்டோடட்டுமா?" என்று கேட்பது பயனுள்ளதாகும். அதுக்குத் துணிச்சல் இல்லாட்டி, வரும் ரொரொண்டோ வலைப்பதிவர்மாநாட்டிலே, பதிவாளர்கள் இதுகுறித்தும் ஒரு கையொப்பவேட்டை நிகழ்த்தி, டிஜே வீட்டுக்குச் சமர்ப்பிக்கவும். //

ஆஹா! இதைவிட வேற என்ன வேலை கிடக்கு. உடனடியாக செயல்படுத்தும் ஆயத்தங்களில் இறங்குகிறேன். ;)

5/23/2005 12:06:00 AM
துளசி கோபால் said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:-))))

5/23/2005 12:08:00 AM
இளங்கோ-டிசே said...

//1. பேர்வழிகள் பேர்களென்ன?//
பெயரிலி நீங்கள் கேட்டதற்கிணங்கப் பெயர்களை மேலே பதிந்துவிட்டேன் :-).

5/23/2005 01:46:00 AM
இளங்கோ-டிசே said...

//டிசேயின் பருவக்கோளாறு எங்களுக்குமட்டும் விளங்கி என்ன பயன்? சாடைமாடையாக எங்களுக்கு உங்கள் சோகத்தைச் சொல்வதைவிட்டுவிட்டு, நேராக "வீட்டிலையே கட்டிவைக்கிறியா? இல்லை, ஆரையும் காதலிச்சுக் கடத்திக்கொண்டோடட்டுமா?" என்று கேட்பது பயனுள்ளதாகும்.//
பெயரிலி ஏப்ரல் ஒன்றில் உங்களை 'முட்டாளாக்கியதற்கு' இப்படியொரு பழிவாங்கலா :-( ? அவ்வவ்போது என் 'வீட்டுக்காரர்களும்' இங்கே வந்து எட்டிப்பார்ப்பதால், ஏற்கனவே ஏப்ரல் ஒன்றில் செய்த விளையாட்டுக்காய் அவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாது முழித்துக்கொண்டிருக்கும்போது, பெயரிலி நீங்கள் இப்படிக் கூறுவது நியாந்தானா :-)? வரவர எல்லோரும் எனக்கு இப்போதைக்கு திருமணம் நடக்கவிடுவதில்லையென கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றீர்கள் போல :-(. ஆனால் ஸ்ரீரங்கனும், ரவியும் கூறிய அறிவுரைகளை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொள்கின்றேன் :-)
....
//பெயரிலி, சி. ரங்கன்,ரவி, மற்றும் பாலாஜி அகியோர் ரொம்ப D.J. யின் வாழ்க்கையைப்பற்றி யோசிக்கிறீர்கள். அது எப்படி நீங்கள் எல்லாலோரும் ஒரே மாதிரி இருக்கிறீகள். பின்னூட்டங்கள் பண்ணுறது தான் வேலை போல தெரிக்கிறது.//
கார்த்திக், இதுதான் எனக்கும் புரியமாட்டேன் என்கின்றது. கனக்க free time கிடைப்பதற்காகவேனும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும் போலத்தோன்றுகின்றது :-).
....
//ஆஹா! இதைவிட வேற என்ன வேலை கிடக்கு. உடனடியாக செயல்படுத்தும் ஆயத்தங்களில் இறங்குகிறேன். ;)//
மதி, எனக்கு ஏற்கனவே செவ்வாய் தோஷமும், ஏழரைச் சனியும் உச்சத்தில் இருப்பதால், ஆகக்குறைந்தது ஐந்து வருடங்களுக்கு திருமண ஆசையை மூட்டைக்கட்டி வைக்கச்சொல்லி, ஒன்ராறியோக் காட்டுக்குள்ளேயுள்ளே உள்ள 'கலியாணச்சாமியார்' ஜோசியம் சொல்லியிருக்கின்றார் :-).
....
//அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:-))))//
துளசி, உங்கள் வாழ்த்தை பத்திரப்படுத்திக்கொள்கின்றேன் :-).

5/23/2005 02:04:00 AM
Narain Rajagopalan said...

நல்ல புகைப்படங்கள் (வேறெதை சொல்றது, நான் சொல்றத்துக்கு முன்னாடிதான் ஒரு படையே சொல்லி தீர்த்துருச்சே!!) சரி விடுங்க. நம்ம தனியா, கஜோலையோ, மல்லிகா ஷெராவத்தையோ, தியாவையோ பத்தி யோசிக்கலாம் ;-)

5/23/2005 05:38:00 AM
ஈழநாதன்(Eelanathan) said...

சே அழகான குட்டிகள் என்று சொல்லலாமா என்று பார்த்தால் பிறகு பெயரிலி என்ரை வீட்டுக்கும் பெட்டிஷன் அனுப்புவார்.
என்றாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை.ஈழன்மக்ஸிம் நல்ல பெயராக இருக்கிறதே

5/23/2005 06:21:00 AM
இளங்கோ-டிசே said...

//பெயரிலி என்ரை வீட்டுக்கும் பெட்டிஷன் அனுப்புவார்//
ஈழநாதன், இதற்கெல்லாம் பயந்தால் வேலைக்காகுமா? பெயரிலி பெட்டிஷன் இணையத்தில் அனுப்புவாரென்றால், நாங்கள் தொலைபேசியில், நாளொரு படமும், பொழுதொரு பின்னூட்டமும் இடுபவரின் வீட்டுகாரம்மாவிடம் போட்டுகொடுக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு யோசனை, இவர் கணணியின் முன் உட்கார்ந்திருக்கும்போதெல்லாம், மகனை கொஞ்சம் அழச்சொல்லச் சொல்லி, அப்பாவைக் கூப்பிடச்செய்யுங்கள் என்று செய்யவைப்பது :-). ஏற்கனவே மதியும், நானும் சாட்சிகளாக வருதாய்ச் சொன்னது ஞாபகம். இப்போது கார்த்திக்கும், நரேனும் கூடவே வருவார்கள் என்று நினைக்கின்றேன் :-).
..........
//என்ன D.J. ரொம்பவே அறுக்கிறார்கள்//
சத்தி, என்ன செய்வது? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள் :-)?

5/24/2005 02:19:00 PM
Anonymous said...

ஏற்கனவே மதியும், நானும் சாட்சிகளாக வருதாய்ச் சொன்னது ஞாபகம். இப்போது கார்த்திக்கும், நரேனும் கூடவே வருவார்கள் என்று நினைக்கின்றேன் :-).

add my name also to the list.why not a petitononline petition on peyarali :) ravi srinivas

5/24/2005 02:43:00 PM
சுந்தரவடிவேல் said...

//டோராண்டோ சந்திப்புல ஏதேனும் அறிவிப்புக்கு தயார் பண்றீங்களோ?//
டிசே, இதையே திருப்பி அவரிடம் கேளுங்கள் :))
வலைப்பதிவர் மாநாட்டுக்கு ஊர்வலத்துக்கு ஆள் பத்தாது என்ற குறையில்லை. நானும் ஒரு பட்டாளத்துடனேயே வருகிறேன்!

5/24/2005 02:49:00 PM
கறுப்பி said...

டீசே எனக்கு என்ர அம்மா முந்தியெல்லாம் கலியாணம் கட்டினாத்தான் குழந்தை பிறக்குமெண்டு சொல்லித் தந்தா. ஆனால் அது உண்மையில்லையெண்டு வளந்தாப் பிறகு விளங்கீச்சு. இப்ப நான் நினைச்சது சரியெண்டு உங்கட பிள்ளைகளின்ர படத்தைப் பாத்து உறுதி செய்து கொண்டன். அப்பா மாதிரியே cute பிள்ளைகள்.(*_*)

5/24/2005 02:53:00 PM
கறுப்பி said...

சிறீரங்கன் சிறீனிவாஸ் போன்றோர் வலைப்பதிவாளர் சந்திப்பிற்கு வருகிறார்கள் என்றால் நான் வரவில்லை. அவர்கள் நோக்கம் சந்தேகத்துக்குரியது.
சுந்தரவடிவேல் உண்மையாகவே நீங்கள் சமூகம் அளிக்கின்றீர்களா?

5/24/2005 03:03:00 PM
Anonymous said...

பதிந்தது:karthikramas

டீ ஜே இங்கு கார்த்திக் என்ற பெயரில் இட்டது என் பின்னூட்டமல்ல. இது ஒரு தகவலுக்காகவே.
அப்பறம் வருகிறேன்.

25.5.2005

5/25/2005 09:12:00 AM
இளங்கோ-டிசே said...

கறுப்பி,
சுந்தரவடிவேல் 'பட்டாளத்தோடு' யேலில் இருந்து வாறாக. பாரி 'அறிவிப்போடு' கல்கரியிலிருந்து வாறாக.டிசே, தனது ஜீவனோபாயத்தொழிலான தூக்கத்தை ஒத்திப்போட்டு வாறாக :-).
கறுப்பி, அதுசரி, வலைப்பதிவர் சந்திப்புக்கு என்ன கொண்டுவருவது என்று நீங்கள் முந்தி வினாவியதாய் நினைவு. இயலுமென்றால், கூழ் காய்ச்சிக்கொண்டு அல்லது வாங்கிக்கொண்டு வாருங்களேன். ஊற்றிக்குடிப்பதற்கு, பாலவிலைகளை வசந்தன் அனுப்புவதாய் சம்மதித்துள்ளார். ஏனென்றால், அவர்தான் பலாப்பழம் படம் போட்டு அதுபற்றி ஒரு குறிப்பும் எழுதியிருந்தார்.

5/25/2005 09:36:00 AM
இளங்கோ-டிசே said...

//டீ ஜே இங்கு கார்த்திக் என்ற பெயரில் இட்டது என் பின்னூட்டமல்ல. இது ஒரு தகவலுக்காகவே.//
கார்த்திக், இது பினாமிகள் பின்னூட்டம் காலம் போல இருக்கின்றது. ஏற்கனவே டோண்டுவும் தனது பெயரைப் பாவித்து யாரோ பின்னூட்டம் இடுவதாய் எழுதியிருந்ததை தமிழ்மணத்தின் முகப்பில் பார்த்திருந்தேன்.

5/25/2005 10:01:00 AM
வசந்தன்(Vasanthan) said...

//பாலவிலைகளை வசந்தன் அனுப்புவதாய் சம்மதித்துள்ளார்.//

ஐயோ நான் சொன்னது "பலாவிலைகள்".

சரி. இப்பதான் இதப்பாத்தனான். நான் வரமுதல் மற்றாக்கள் வந்திட்டினம், அதோட நான் சொல்ல வேண்டிதுகள பெயரிலி ஆக்களே துவக்கீட்டினம். ஆகவே நான் ஒதுங்கிறன்.

ஆனா கறுப்பியின்ர ஒரு பின்னூட்டம் கொஞ்சம் அருவருப்பா இருக்கு. பம்பல் இருக்கலாம். ஆனா நல்லா மேல போயிட்டுது.(பிள்ளையளின்ர தாய்மார் பாத்தா என்ன நினைப்பினம்?:-))))

5/25/2005 10:02:00 AM
கறுப்பி said...

வசந்தன் நான் நினைச்சன் டீசே கலியாணம் கட்டி பிள்ளைகளும் இருக்கெண்டு. வலைப்பதிவில யாருக்கு வயசு தெரியும். சும்மா சின்னப் பெடியள், பெட்டைகள் மாதிரி நடிக்கலாம் தானே (என்னை மாதிரி) தன்ர குடும்பம் எண்டு வேற தலைப்பும் போட்டிருக்கிறார். பிறகு ஏன் என்னோட மோதுறியள் வசந்தன். நான் இனசண்ட்.

5/25/2005 10:13:00 AM
கறுப்பி said...

மன்னிக்கவேணும் டீசெ தங்கள் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. சீரியஸாக வலைப்பதிவாளர்கள் சந்திப்பைப் பற்றிக் கதைக்கின்றீர்களா? இல்லாவிட்டாலும் இதுவும் ஒரு முஸ்பாத்திதானா? சீறியஸ் எண்டால் - எனக்குக் கூழ் காச்சத்தெரியாது வாங்கி வரலாம். எத்தனை பேர் எண்டு சொல்லுங்க? மற்றது வேறொரு கேள்வி சிவிக் சென்ரருக்குக் கிட்ட எங்க பூங்கா தெரியாதே. நான் அன்று அந்தப் பக்கம் தான் காங் எறவுண்ட் பண்ணுவேன். வந்து ஒருக்கா எட்டிப் பார்க்கலாம்.

5/25/2005 12:50:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

DJ,

Balaji-paari is coming from New Brunswick.

Is there anyone in Calgary?

Just remembered somebody else. Vasee Vaseeharan.

Can somebody send him an invite. Venkat???

5/25/2005 01:11:00 PM
Venkat said...

டி.சே ரெண்டு நாள் முந்தியே நான் எழுதனும்னு நெனச்சேன். பழிகார மொதலாளி (மேலாளர்-ன்னும் படிக்கலாம்) மேசைக்கு வந்து கூட்டிக்கிட்ட்டுப் போயிட்டார்.

இதப்பாருங்கோ, எல்லாத்தையும் உட்டுப்போட்டு என்ற கையில் உடுங்கோ. நான் வந்து உங்க வீட்ல கதைக்கிறேன். அப்புறம் இந்த செவ்வா தோஷம், புதன் மோசம் இதுக்கெல்லாம்கூட ஏதாவது உருது அல்லது சமஸ்கிருத மந்திரத்தை எடுத்துவுட்டு ஒண்டாரியோ சாமியார் தப்புன்னு நிரூபிக்கலாம். ஒரு வார்த்தை சரின்னு சொல்லுங்க, நான் பேசிக்கிறேன்.

அப்புறம், மதி - நான் திரும்ப வந்தது நல்லதா போச்சு. வசீ-கிட்ட சொல்லிப்பாக்குறேன்.

5/25/2005 02:12:00 PM
கறுப்பி said...

மதி பட்டும் பாடாமல் ஏதோ சொல்வது போலுள்ளது. இருந்தும் எனக்குத் தெளிவாகவில்லை. எத்தனை பேர் வருகின்றார்கள். கறுப்பி உண்பதற்கு ஏதாவது கொண்டுவரவேண்டுமா? (கூழ் மாட்டேன்) குடிப்பதற்கு ஏதாவது?
கமெரா யார் கொண்டுவாறார்கள்.
டீசே எத்தனை தரம் கேட்டுவிட்டேன். காது செவிடா? சிவிக் சென்டர் பக்கத்தில் பூங்கா என்றால்? விளக்கமாக விலாசத்தைத் தாருங்கள்.

5/25/2005 02:49:00 PM
-/பெயரிலி. said...

/ஏற்கனவே மதியும், நானும் சாட்சிகளாக வருதாய்ச் சொன்னது ஞாபகம். இப்போது கார்த்திக்கும், நரேனும் கூடவே வருவார்கள் என்று நினைக்கின்றேன் :-).

add my name also to the list.why not a petitononline petition on peyarali :) ravi srinivas/

ஆ!!!!!!! தடியும் எடுத்துக்குடுத்து, அடியும் வாங்கித்தந்துதான் விடுவாங்கள்போலை இருக்கு. ஒரு குமர்ப்பெடியனை உய்விக்கலாமெண்டு பாத்தால், குடும்பத்துக்குள்ளை கலகம் கொண்டரப்பாக்கிறியளே? நீயா யம்மா?!!

5/25/2005 03:05:00 PM
SnackDragon said...

//கார்த்திக், இதுதான் எனக்கும் புரியமாட்டேன் என்கின்றது. கனக்க fரே டிமெ கிடைப்பதற்காகவேனும் விரைவில் திருமணஞ்செய்யவேண்டும் போலத்தோன்றுகின்றது :-).//
/திருமண ஆசையை மூட்டைக்கட்டி வைக்கச்சொல்லி, ஒன்ராறியோக் காட்டுக்குள்ளேயுள்ளே உள்ள 'கலியாணச்சாமியார்' ஜோசியம் சொல்லியிருக்கின்றார் :-)./
என்ன டீசே,ஒன்னு ஆமான்னு சொல்லனும். இல்ல இல்லைன்னு சொல்லனும். பூம் பூம் மாடு மாதிரி இரண்டு பக்கமும் தலையாட்டுனா எப்படி. இதனால்தான் உங்கள் குடும்பத்தார் குழம்புகிறார்கள் போல. ம்ஹூம் உம்மை காப்பாற்ற ஆராலும் முடியாதப்பா. என்னை வேற உன் பக்கம் இழுக்காதீர். நான் உண்டு என் 'தேடல்' உண்டு என்று இருந்தால் விடமாட்டீர்களே!! :-)

5/25/2005 03:17:00 PM
SnackDragon said...

பெயரிலியை மாட்டிவிடவேண்டுமானால், அவரது 'பழைய வரலாற்றை' கிளறனும். அந்த வேலையை என்னிடம் விடுங்கள். பாருங்களேன் இனிமே வாயைத் திறக்கமாட்டார்.

5/25/2005 03:20:00 PM
இளங்கோ-டிசே said...

கறுப்பி, எனக்குச் சரியான விலாசம் தெரியாது. ஆனால் பூங்கா (பூக்கள் அல்ல, மரங்கள் மட்டுமே உள்ளன என்று நினைக்கின்றேன்) எல்ஸ்மெயர் வீதிக்கு சமாந்தரமாக, எல்ஸ்மெயர் வீதிக்கும், சிவிக் சென்ரறிகும் இடைப்பட்ட பகுதியில் இருக்கின்றது.

5/25/2005 03:25:00 PM
இளங்கோ-டிசே said...

//என்ன டீசே,ஒன்னு ஆமான்னு சொல்லனும். இல்ல இல்லைன்னு சொல்லனும். பூம் பூம் மாடு மாதிரி இரண்டு பக்கமும் தலையாட்டுனா எப்படி//
வரவர 'கட்டுடைப்புக்க்காரன்களின்' தொல்லை தாங்கமுடியாதிருக்கின்றது :-(.
//என்னை வேற உன் பக்கம் இழுக்காதீர். நான் உண்டு என் 'தேடல்' உண்டு என்று இருந்தால் விடமாட்டீர்களே!! :-)//
சரி சரி, நீர் எஙகடை 'கிளப்பிலிருந்து' வெளியே விரைவில் போக ஆசைப்படுகின்றீர் என்டு நேரடியாகச் சொல்லுமன். வாழ்த்து ராசா வாழ்த்து :-)

5/25/2005 03:34:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

டிஜே, வெளியிலதான் உமக்கு எங்களை மாதிரி 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு நினைச்சன். உமக்கு மிசிசிசாகா'விலையும் 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு ஏன் சொல்லேல்ல!

5/25/2005 03:49:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

மக்களே!

பெயரிலியை விடுங்க. அதுக்கு லண்டனிலை இருந்து ஆள் வருகுது. அவர் கவனிச்சுக்கொள்ளுவேர்!

நாம, கையில பிடிபட்டிருக்கிற மீனை என்னெண்டு கேப்பம். ;)

5/25/2005 03:50:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கறுப்பி,

நானொண்டும் சொல்லேல்ல. தெரிஞ்சாத்தானே சொல்லுறதுக்கு! :o

ஒண்டில மட்டும் தெளிவா இருக்கிறன்! அங்க வரேக்க, ரெஸ்டோரண்ட் பில்லிலை இருந்து டிம் ஹோட்டன் கோப்பிக் காசு வரைக்கும் டி.ஜே.ன்ர தலையிலை கட்டுறது எண்டதிலை பயங்கரத் தெளிவா இருக்கிறன். என்னோட கூட்டு சேர விரும்புற ஆக்கள் இங்கே கைநாட்டுப் போடுங்கோ. அப்பிடி 'அண்ணர்' தப்பிக்கப் பாத்தேரெண்டா, உந்தப் பெட்டிசன் விசயத்தை அவரின்ர வீட்டிலை கதைப்பம். சரியே?

--------

சாப்பிட நீங்க என்ன கொண்டு வந்தாலும் சரி. குடிக்கவும். ;) வைன் எண்டால் டபிள் தலையாட்டு. :P மற்றும்படி சரவண பவன் காப்பி எங்கனக்க எண்டு காட்டினாலே (டிஜே எண்டா - வாங்கித் தந்தாலே) மெத்தப் பெரிய உபகாரமா இருக்கும்! கறுப்பி, அதுக்காக கொரியன் bbq ரெஸ்டோரண்ட் போவமே எண்டு கேட்டா மாட்டனெண்டு சொல்ல மாட்டன். ;)

கறுப்பி, விளங்குதே?

:))))))

-மதி

5/25/2005 03:51:00 PM
இளங்கோ-டிசே said...

//டிஜே, வெளியிலதான் உமக்கு எங்களை மாதிரி 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு நினைச்சன். உமக்கு மிசிசிசாகா'விலையும் 'நலம் விரும்பிகள்' இருக்கீனம் எண்டு ஏன் சொல்லேல்ல!//
அய்யய்யோ, மதி அங்கிருந்தும் உங்களுக்கு தகவல் வருகின்றதா? இனி நான் துலைஞ்சன் :-(((.

5/25/2005 03:59:00 PM
Anonymous said...

பின்னூட்டங்களில் ஒருவரைக்காணவில்லையே.....அவர் தான் கமராக்காரன்....வாத்தியாரும் கூட. London Ontario வில் பிரம்புடன் திரிகிறரோ என்னமோ... யாரவது Police (டம்) தகவல் கொடுத்தீர்களா???

5/25/2005 04:22:00 PM
Anonymous said...

DJ: sbalaji at gmail.com -kku oru mail thatti vidukindreergalaa?
:))

5/26/2005 04:49:00 PM