சென்ற சனிக்கிழமை அந்தி மாலை மயக்கத்தில் ரொரண்ரோவில் வலைப்பதிவர்கள் சந்திந்துக்கொண்டார்கள். இதுநாள் வரை காய்க்காத ஆப்பிள் மரங்களில் ஆப்பிள்கள் காய்க்கவும், புற்களிடேயே இருந்து அழகான ரோசாப்பூக்கள் முகிழ்ந்ததுமான அதிசயம், நாம் அந்தப் பூங்காவுக்குள் நுழைந்தசமயம் நிகழ்ந்தது. மதி கந்தசாமி, சுந்தரவடிவேல், பாலாஜி-பாரி,வெங்கட், கறுப்பி, நற்கீரன், கிஸோக்கண்ணன், பிரதீபா, தான்யா, சக்தி, மற்றும் எதற்குமே இலாயக்கில்லாத டிசே என்று வலைப்பதிபவர்களும், தமக்கென்று சொந்தக் குடில் இல்லாவிட்டாலும், தொடர்ந்த வலைப்பதிவுகள் வாசிப்புப் பழக்கமுள்ள வசந்தி ராஜா, ரூபன், சத்தியா, ஜானகி மற்றும் மாசிலன் போன்றவர்களும் கலந்துகொண்டு அன்றைய மாலையை பொன்மாலைப் பொழுதாக்கினர்.
மதியை ஒரு பாடல் பாடும்போது நாம் வேண்டிக் கேட்டபோது, அவர் 'கத்தரி தோட்டத்து வெருளியை' (சமர்ப்பணம் செர்ரிப்பூவுக்கென்று கூறி) ஒரு மேசையின் மீது ஏறிநின்று பாடத்தொடங்கியதும், அதைச் சகிக்காது அமைதியாக உருவாக வந்திருந்த சக்தி வீட்டிற்கு போகப்போவதாக கோபத்துடன் கூறிப் புறப்பட்டுவிட்டார். இது போதாதென்று பாலாஜி-பாரியை தன்னைப்பற்றி அறிமுகஞ்செய்யக் கூறிய சமயத்தில், சூரியனைக் கண்டுவிட்டு, ஆக்கிமீடிஸ் யுரேகா யுரேகா என்று அலறித்திரிந்தமாதிரி தன்னை அறிமுகஞ்செய்யாமல் சூரியனின் பின் ஓடித்திரிந்தது பொறுக்காமல் வெங்கட்டும் சிலமணித்துளிகளில் புத்தகவெளியீட்டு விழா உரைக்காக கிளம்பிவிட்டார். எனதும் கிஸோவினதும், 'ஆக்களைத் துரத்தும்' திட்டத்தை, மதியும், பாலாஜியும் களவெடுத்துவிட்டதை வன்மையாக நானும் கிஸோவும் கண்டிக்கையில், தங்கள்பாட்டில் பறந்துகொண்டிருத சில நாரைகள் மயக்கமுற்றுத் தரையில் விழுந்த அசம்பாவிதம் நடந்தது.
வந்திருந்த வலைப்பதிவு வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த/தாங்கள் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். சத்தியாவுக்கு ரோசாவசந்தினது பதிவுகளும், பெயரிலி எடுத்துப்போடும் படங்களும் பிடித்திருந்ததாகவும், ரூபன் தான் கறுப்பி, பொடிச்சி போன்றவர்களின் பதிவுகளை விரும்பிவாசிப்பதாயும் கூறியிருந்தார்கள். வலைப்பதியும் நண்பர்கள் தாம் எப்படி வலைப்பதிவர் உலகத்திற்கு வந்தது என்பது குறித்தும், தமக்குப் பிடித்த வலைப்பதிவுகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர். சுந்தரவடிவேல் அநியாயத்திற்கு மிக 'அமைதியாக' இருந்தது எங்கள் அனைவருக்கும் மிகவும் வியப்பாயிருந்தது. ஒரு வார்த்தை வாய்திறந்து பேசக்கூட மிகவும் யோசித்துத்தான் பேசினார். உதாரணமாய் 'ஆம்' என்று பதில் சொல்வதைக் கூட, தனியே 'ம்' என்றுதான் கூறி முடித்தார். இது ஏன் என்று நான் வினாவியபோது, ஆம் என்று பதில் சொல்லும்போது வாய் பெரிதாகவதாவும், ம் என்னும்போது உதடுகளைத் திறக்கவே தேவையில்லை என்று மிக நுட்பமாக பதிலிறுத்தார். மேலும் 'ம்' மைவிட இன்னொரு சிறு சொல் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபடப்போவதாயும் இதனால் வலைப்பதிவுகளில் 'கடி'க்கும் மற்றும் 'கொறி'க்கும் நேரம் குறையப்போவதாயும் மிகவும் கவலைப்பட்டுக்கூறினார்.
வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் பெயரிலியின் பின்னூட்டம் இடும் வேகந்தான் மிகவும் வியப்பான செய்தியாக இருந்தது. இதற்கு பாலாஜி, பெயரிலியின் டி.என்.ஏயுக்கும், திருமூலரின் டி.என்.ஏயுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கா என்று அண்மையில் போகத்தொடங்கிய பிரெஞ்சு வகுப்பில் ஆராயப்போவதாகவும் கூறியிருந்தார். நானும் எனது பங்குக்கு, கிஸோ செய்யும் காட்டுத்தீயை எப்படி விரைவாக அணைப்பது என்ற ஆராய்ச்சியைப் போல, பெயரிலி பின்னூட்டங்கள் எழுதும்போது அவரது கரங்களா, மூளையா விரைவில் தூண்டல்/துலங்கல் மாற்றங்களுக்கு உள்ளாகின்றது என்றதொரு thesis செய்வதாக முடிவெடுத்துள்ளேன்.
சுந்தரவடிவேல், கறுப்பி, மதி போன்றவர்கள் சந்திப்பு முடிவில் பாரிற்குக் கூட்டிச்செல்லும்படி கேட்டபோது நான் இந்த மாதம் முழுதும், செவ்வாய் தோசத்தைப் போக்குவதன் நிமிர்த்தம் மாமிசம், மது தொடமுடியாது என்பதை ஆழ்ந்த சென்டிமென்டுடன் சொன்னபோது அனைவரின் கண்களிலும் கண்ணீர் அருவியாக்கொட்டியது என்று சொல்லவும் வேண்டுமா? ஒரு மனிதனுக்கு நல்ல 'வாழ்வு' கிடைக்கும் நிமிர்த்தம், அனைவரும் பிறகு தமிழ் உணவகத்துச் சென்று இரண்டு நாற்காலிகளை நமது hotஆவி மற்றும் 'கூழ்'ஆவிக்கு ஒதுக்கி உணவருந்தினோம். hotஆவியின் உணவை மதியும், 'கூழ்'ஆவியின் உணவை நானும் இரசித்துச் சுவைத்தோம்.
இந்தச் சந்திப்பில் நாயகனாகத் திகழ்ந்தவர் 'ஓ வண்டிகார' புகழ் மாசிலன். அவர் அந்தப் பூங்காத்திடலையை கலகலப்பாக்கியபடி, எம் அனைவருடனும் இலகுவில் இணைந்துகொண்டார். அப்பாக்களுக்கு ஆப்பு வைக்க என்று மாசிலன், நித்திலன் போன்றோர் இப்போதிருந்தே துடிப்பாக இருப்பது என்னைப் பொறுத்தவரையில் மிகுந்த சந்தோசமான விடயமே. அடுத்த நாள் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு குற்றாலத்தைப் போல் குளிக்கச்சென்ற சுந்தரவடிவேலும், பாலாஜியும் ஏன் தண்ணீர் இப்படிச் சுடுகின்றது என்று என்னிடம் வினாவியபோது,இது கார்த்திக்கின் சதிவேலை என்றும் அவர்தான் hotஆவியாக நயாகராவில் இரண்டறக்கலந்து உங்களைக் குளிக்கவிடாது தடுக்கின்றார் என்றும் கூறினேன்.
அட இதனால் இவர்கள் இருவரும் வருத்தமுறுவார்கள் என்று பார்த்தால், பத்துவருடங்களாக குளிக்காதிருந்த தம்மை மேலும் பத்து வருடங்கள் குளிக்காமற்செய்த கார்த்திக்கு நன்றி கூறியபடி வழமைபோல ஒரு பெரிய போத்தல் cologneஐ விசிறியடித்தபோது ரொரண்ரோ மக்கள் அனைவரும் மயக்கமடைந்து தூக்கத்திற்குப் போயிருந்தனர்.
ரொரண்ரோவில் நடந்த சந்திப்பில் நடந்த நல்ல விடயங்களைப் பற்றி மட்டுமே என்னால் கூறமுடிந்தது. இதன் எதிர்மறையான விடயங்களையும், நான் விட்டுச்சென்ற இடைவெளிகளையும் மற்ற நண்பர்கள் இனிவரும் நாள்களில் நிரப்பிக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.
Posts Relacionados:
Subscribe to:
Post Comments (Atom)
46 comments:
போட்டோ போட்டிங்க சரி. அதிலிருக்கிறவங்க பெயரை போட்ட நாங்க அடையாளம் கண்டுக்கிடுவோம்ல.
6/07/2005 12:31:00 AMமீதியை படிச்சிட்டு வாரேன்.
அட பேருகளையும் படத்தோட இணையும். ஆனா எனக்கென்னவோ எதிர்பார்த்தபடி சந்திப்பு நடக்கேல போலப்படுகுது.
6/07/2005 12:41:00 AMஎதுக்கும் மற்றாக்களின்ர பதிவுகளையும் படிச்சுப்போட்டுத்தான் சொல்ல வேணும்.
வெள்ளை மேற்சட்டை போட்டிருப்பவர் தானே சுந்தர வடிவேல்?
6/07/2005 01:00:00 AMஅதுசரி, கனபேரின்ர பேர்கள் சொன்னீர். வெறும் அஞ்சாறு பேர் தானே நிக்கினம்?
முகம் காட்ட விருப்பமில்லயோ மற்றாக்களுக்கு?
கறுப்பியைத் தெரிகிறது. மற்றது, மதியாக இருக்க வேணும்.
பதிந்தது:-தங்கமணி
6/07/2005 01:10:00 AMundefined
6.6.2005
நான் வராத குறையைப் போக்கியது பதிவு. நன்றிகள்.
6/07/2005 01:14:00 AMடிசே நீங்கள் இவ்வளவு சின்னபொடியனாக இருப்பீங்களெண்டு நினைக்கேலை.
6/07/2005 01:22:00 AM//சுந்தரவடிவேல், கறுப்பி, மதி போன்றவர்கள் சந்திப்பு முடிவில் பாரிற்குக் கூட்டிச்செல்லும்படி கேட்டபோது நான் இந்த மாதம் முழுதும், செவ்வாய் தோசத்தைப் போக்குவதன் நிமிர்த்தம் மாமிசம், மது தொடமுடியாது என்பதை ஆழ்ந்த சென்டிமென்டுடன் சொன்னபோது அனைவரின் கண்களிலும் கண்ணீர் அருவியாக்கொட்டியது என்று சொல்லவும் வேண்டுமா? //
6/07/2005 04:07:00 AMஓஹோ? அப்பொ சரி
...
பேர் போடும்படி கேட்கும் வேண்டுகோள் நெ. 2 சேர்க்கப்படுகிறது.
//வந்திருந்த வலைப்பதிவு வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.//
6/07/2005 09:01:00 AMஎத்தனை பேரு என்னோட பதிவு பத்தி சொன்னீங்க?! ;))))))))
டீசே மற்றப் படங்களெல்லாம் எங்கையா?
6/07/2005 09:29:00 AMவசந்தன் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுகின்றேன். சந்தித்தது பூங்காவில் அங்கே தண்ணி அடிப்பதற்கு தடை விதித்திருக்கிறது கனேடிய அரசாங்கம். சரி இலங்கைச் சாப்பாடு வேண்டுமென்றார்கள். நான் எனக்குத் தெரிந்த ஒரு உணவகத்தைச் சொன்னேன். அப்பத்துக்கு ரொறொண்டோவில் பேமஸ் அந்த உணவகம். நான் எப்போதுமே அங்கே ரேக்அவுட் தான் எடுப்பதுண்டு உள் விவகாரம் எனக்குத் தெரியவில்லை. உள்ளே போய் இருந்து தண்ணிக்கு ஓடர் பண்ண சில்வர் தூக்கில் ஐந்து ஆறைத் பச்சைத்தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விட்டார்கள். என்ன செய்வது வெறும் சாப்பாட்டை உண்ண வேண்டிய கட்டாயம். அடுத்து வசந்தன் கறுப்பாய் இருப்பதெல்லாம் கறுப்பியல்ல.
கொப்பிக்கும் டோனட்ஸுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருந்தாலும், சாப்பாடு போட்டாவை மறைத்ததுக்கு வன்மையாக கண்டிக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. போனது போகட்டும்.
6/07/2005 10:04:00 AM//சுந்தரவடிவேல் அநியாயத்திற்கு மிக 'அமைதியாக' இருந்தது எங்கள் அனைவருக்கும் மிகவும் வியப்பாயிருந்தது. ஒரு வார்த்தை வாய்திறந்து பேசக்கூட மிகவும் யோசித்துத்தான் பேசினார். உதாரணமாய் 'ஆம்' என்று பதில் சொல்வதைக் கூட, தனியே 'ம்' என்றுதான் கூறி முடித்தார்.//
இதுக்கு பதில் ஜானகியைத்தான் கேட்கனும். என்ன நடந்துச்சோ ஏதோ? பாவம் தெரியாமல் ஏதும் செய்ஞ்சிருந்தார்னா மன்னிச்சுருங்க ஜானகி. பொழச்சி போறார். அதுக்காகா.. வாயிலே எல்லாம்..குத்தி? ;-)
// பாலாஜி-பாரியை தன்னைப்பற்றி அறிமுகஞ்செய்யக் கூறிய சமயத்தில், சூரியனைக் கண்டுவிட்டு,//
கடைசியா பாத்தாச்சா. விடிஞ்சுது போங்க.
//மேலும் 'ம்' மைவிட இன்னொரு சிறு சொல் கண்டுபிடிக்கும் முயற்சிகளில்//
இதுபற்றி சோபா சக்திக்கு ஒரு கடிதம் எழுதலாம்.
//cஒலொக்னெஐ விசிறியடித்தபோது ரொரண்ரோ மக்கள் அனைவரும் மயக்கமடைந்து தூக்கத்திற்குப் போயிருந்தனர். //
கலோனுக்கே இந்தக்கதியா? இன்னும் நீர் சமைத்திருந்தால் என்னவாயிருக்கு?
//அடுத்து வசந்தன் கறுப்பாய் இருப்பதெல்லாம் கறுப்பியல்ல.//
6/07/2005 10:05:00 AMதெரியுமே, கறுப்பன்களும் இருப்பார்கள். கறுத்ததுகளும் இருக்கும்.
பதிந்தது:karthikramas
6/07/2005 10:15:00 AMடீ ஜே,
சம்பந்தமில்லாத ஒன்று. எங்கே உங்கள் சென்னை நகர்வலப் பதிவு? தமிழ்மணத்தில் தேதிவாரியாக பினோக்கி போய் இழுத்து வந்து இடமுடியுமா இன்னொரு தடவை?
karthikramas
7.6.2005
first snapல மாசிலன்? second snapல handbag சகிதம் கறுப்பி. oh her left வசந்திராஜா? fourth snapல with glasses பாரிபாலாஜி? 180 டிகிரி தலைதிருப்பலும் நீல பனியனும் சுந்தரவெடிவேல். fifth snapல Sunglass போட்டுக்கிட்டிருற வில்லன் DJ, benchல உட்காந்திருப்பது கிஸோகண்ணன்.
6/07/2005 10:55:00 AMநான் என்றென்றும்வம்புடன்தன்னைத்தானேநக்கும்மேயாவரத்துதலைநிமிர்த்தாத்தமிழ்மானச்சிங்கமைசூர்ப்பாகுமார்டன்கர்ள்அநாமதேயmaturedமுகமூடித்தூரிகை. IPஇஅ வெச்சுக் கண்டுபுடி கண்டுபுடிடா ராசா என்னை போட்டுத்தாக்கு பொறம்போக்குடா. உற!உற!உற! வேணுன்னா warning குடுக்காமலே வக்கீலு வெச்சு case போடு. போ
டிசே!
6/07/2005 11:41:00 AM//'அமைதியாக'// அதை ஏன் ஒரு ''இதுக்குள்ள போட்டிருக்கீங்க, வன்மையாகக் கண்ணடிக்கிறேன்! ஆப்பக்கடை அருமையான தேர்வு கறுப்பி. ஆனா பாலாஜிதான் சரியாகச் சாப்பிடவில்லை, பாவம்:))
செர்ரி, உம்ம சோடா புட்டியைத் தேடித்தேடி அலுத்துக் கடையில் பொன்னை வைக்கிற இடத்தில் பூவை வைக்கிற மாதிரி நீர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு தகர டப்பாவை வைத்துப் படமெடுத்து ஆடி...நீரே பார்த்துக் கொள்ளும்!
ஆமா, அந்தக் கடைசி பீடாவை யாரப்பா எடுத்தது?!
ஐயையோ என்ன சுந்தரவடிவேல் நான் என்னுடைய பதிவில் பாலாஜி பாரிதான் வெழுத்து வாங்கினார் என்று போட்டிருக்கின்றேன். இட்டலி, தோசை, புட்டு என்று. நீங்கள் இப்படிக் கூறினால்?? எங்கோ உதைக்கிறதே?
6/07/2005 11:46:00 AMஐயய்யோ தண்ணி போடாமலே (அதாவது, போடாததாலே) தள்ளாடியிருக்கிறீர்கள்போல இருக்கிறதே தாயே! அத்துணை நேரமும் சுந்தரவடிவேலைப் பிடித்துக்கொண்டா, பாரி-பாலாஜி என்று "ஜெயமோகமரமாய் நின்றதென்ன என்ன?" பாடிக்கொண்டிருந்தீர்கள்போலத் தெரிகிறதே. ;-))
6/07/2005 11:57:00 AMயாரங்கே, இப்படியான அட்கஹோலிக் நியூமரஸுகளுக்களின் நிதானமான அவதானிப்புக்கெண்டாச்சும் அடுத்த முறை அரையோ முழுசோ வாங்கி ஊத்திப்போட்டுப் பிறகு குழுமுதலை ஆரம்பிக்கப்பிடாதோ நீங்கள்? ;-)
தம்பிமார், தங்கைச்சிமார் ஒரு பொடிச்சி, மார்டேன் கேர்ள் எல்லோரையும் பற்றிப் பேசேக்குள்ளே அது பெயரிலிதான் எண்டும் சொல்லியிருக்கலாமே. பத்து முறை சொன்னால், ஒரு பொய்யும் உண்மையாகிப் போகுமெண்டதிலை, கொஞ்சம் ஐடெண்டி தெவ்டு பண்ணி க்ரெடிக் எடுத்திருப்பனெல்லே
//தம்பிமார், தங்கைச்சிமார் ஒரு பொடிச்சி, மார்டேன் கேர்ள் எல்லோரையும் பற்றிப் பேசேக்குள்ளே அது பெயரிலிதான் எண்டும் சொல்லியிருக்கலாமே.//
6/07/2005 12:04:00 PMஅதெல்லாம் விசிதா என்று கேள்வி:))
///தம்பிமார், தங்கைச்சிமார் ஒரு பொடிச்சி, மார்டேன் கேர்ள் எல்லோரையும் பற்றிப் பேசேக்குள்ளே அது பெயரிலிதான் எண்டும் சொல்லியிருக்கலாமே.//
6/07/2005 12:13:00 PMஅதெல்லாம் விசிதா என்று கேள்வி:))/
இது ரவிக்கும் சுந்தரவடிவேலுக்கும் மூண்டரையாவது எச்சரிக்கை!!!!!
உந்த ஆதாரமில்லாத விசிதாவின் உரிமைகோரலுக்காண்டி, நான் ரவி மேல கேஸ் போடப்போறன். ரெண்டு கேஸ் போட்டால், லோயற்றை பிஈஸ் குறையுண்டால், அதைப் பிரகனப்படுத்தும் சுந்தரவடிவேலுக்கு மேலையும் கேஸ் போடுவன். வெங்கட் சாமிநாதனில கேஸ் போட காலச்சுவடு கண்ணன் பிடிச்ச லோயரைப் பிடிக்கிற யோசினை இருக்கு. அவர்தான் literary abuse expert lawyer எண்டு ஒரு சிநேகிதர் சொன்னவர். அவற்றை, கேஸ் சக்ஸஸ் ரேட் பற்றித் தெரிஞ்சவை எனக்குச் சொல்லுங்கோ.
//அதெல்லாம் விசிதா என்று கேள்வி:))//
6/07/2005 12:18:00 PMகேள்வியாவது வேள்வியாவது? உங்களுக்கு ஒரு வருசம் டைம் தர்றேன்.
ஆதாரப்பூர்வமாய் காட்டமுடியுமா? இல்லைன்னா அடுத்த சந்திப்புக்கு
புல்லைத் திங்கத் தயாரா?
பெயரிலி சேம் டைம் சேம் அயிட்டம் :-)
6/07/2005 12:24:00 PMகதிர்காமஸ்!! ஹி ஹி. இது கூட வலைப்பதிவில் பாலாஜிபாரியால் நகைச்சுவையாக ஞாபகப்படுத்தப்பட்டது.
6/07/2005 12:45:00 PMமக்கா, நடத்துங்க. டிஜே பிசி சீராம் மாதிரியே எடுத்துறீக்கிறய்யா. எல்லா போட்டோக்களிலும், கறுப்பு ஊஞ்சலாடுது. செம ரவுண்டு போயிருக்கு போல இருக்கு. ஆனாலும், பதிவுகள்-ல சத்தம் குறைவா இருக்கே, என்ன காரணம் ?
6/07/2005 12:52:00 PM//இல்லைன்னா அடுத்த சந்திப்புக்கு
6/07/2005 12:54:00 PMபுல்லைத் திங்கத் தயாரா?//
ஆமா, மொத சந்திப்புல கஞ்சி, போன சந்திப்புல தண்ணி, அடுத்த சந்திப்புல புல்லா? :))
/அடுத்த சந்திப்புல புல்லா? :)/
6/07/2005 01:23:00 PMஅதை half ஆ தராம full ஆ தருகிறாரே என்று சந்தோசப்படுவியா அத வுட்டுட்டு, தானம் தர்ர புல்லிலை களை புடுங்குவியா? ;-)
//கதிர்காமஸ்!! ஹி ஹி. இது கூட வலைப்பதிவில் பாலாஜிபாரியால் நகைச்சுவையாக ஞாபகப்படுத்தப்பட்டது.//
6/07/2005 01:29:00 PMஎது எல்லோரும் உங்கள் புத்தக வெளியீட்டு விழாப்ற்றிய பதிவுக்கு வாழ்த்துச்சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் அபசுரமாக , கதிர்காமாஸுக்கு பெயர்விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தேனே அதுவா? :-)
/அடுத்த சந்திப்புல புல்லா? :))/
ஆரியக்கூத்தாடினாலும் தாண்டாவக்கோனே
காரியத்தில கண் வையுடா தாண்டவக்கோனே என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?
நான் புல் என்றால் நீங்கள் "புல்லா?"(full -ஆ) என்று சொன்னால் எப்படி? அப்படியே என்ன பிராண்ட் என்று சொல்லிவிட வேண்டியதுதானே?
ஏற்கனவே , இப்படி புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்று எழுதிவிட்டோமே என்று," புலி ஆதரவாளன்" என்று சொல்லிவிடப்போகிறார்களே என்று யோசித்துக்கொண்டுள்ளேன். :-)
//எல்லோரும் உங்கள் புத்தக வெளியீட்டு விழாப்ற்றிய பதிவுக்கு வாழ்த்துச்சொல்லிக்கொண்டிருக்கும்போது நான் மட்டும் அபசுரமாக , கதிர்காமாஸுக்கு பெயர்விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தேனே அதுவா? :-)\\
6/07/2005 01:37:00 PMநான் உங்களை கதிர்காமஸ் என்று விழிப்பதுவும் தாங்கள் திரும்பத் திரும்ப நான் கதிர்காமஸ் இல்லை, கார்திக்ராமஸ் என்று சொல்வதும் பாலாஜிபாரிக்குத் தாங்கமுடியாத நகைச்சுவையாக இருப்பதாகக் கூறினார்.
//நான் புல் என்றால் நீங்கள் "புல்லா?"(full -ஆ) என்று சொன்னால் எப்படி? அப்படியே என்ன பிராண்ட் என்று சொல்லிவிட வேண்டியதுதானே?\\
அதெல்லாம் சந்திப்பைப் பொறுப்பெடுத்திருக்கும் பாலாஜியிடம் தான் கேட்க வேண்டும். புல்லா? குவாட்டரா? என்று.
படங்களில் உள்ள நண்பர்கள் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்தினால் நன்றாகவிருக்கும் என்பதனால்தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை. அப்படிப்போடாதவிடத்தில், இன்னும் 24 மணித்தியாலத்தில் நானே உங்கள் பெயர்களை அம்பலப்படுத்துவேன் என்று 'முதல் எச்சரிக்கை' விடுகின்றேன் (என்னால் ஒருவாரம் எல்லாம் பொறுக்கமுடியாது :-) )
6/07/2005 02:53:00 PM...
நரேன், என்னை ஒரு பி.சி. சிறிராம் ரேஞ்சிற்கு ஒப்பிட்டதுக்கு நன்றி. படம் எடுத்துப்போட்டதில் கிடைத்த முதல் 'ஆசீர்வாதம்' என்பதால் பத்திரப்படுத்திக்கொள்கின்றேன். இருட்டுக்கு 'மப்பு'த்தான் காரணம். இது கூடப் பரவாயில்லை. படம் பிடித்த பலரைப் புகைப்படத்தில் காணவில்லை. கார்த்திக் மாதிரி ஆவியாகவோ அல்லது invisible man/woman யாய் அவர்கள் இருக்கவேண்டும்.
....
சுந்தரவடிவேல், அமைதியை மேற்கோள் குறிக்குள் போட்டால், அது ஆரவாரம் என்று அர்த்தம் ஆக்கும் :-).
//டீ ஜே,
6/07/2005 03:47:00 PMசம்பந்தமில்லாத ஒன்று. எங்கே உங்கள் சென்னை நகர்வலப் பதிவு? தமிழ்மணத்தில் தேதிவாரியாக பினோக்கி போய் இழுத்து வந்து இடமுடியுமா இன்னொரு தடவை?//
நண்பனுக்கு இது கூடச்செய்யமாட்டேனா ? இன்றிரவுக்குள் திருப்பிப் பதிவிலிடுகின்றேன். ஆனால் என்னைப் பினாமியாய் இருக்கச்செய்துவிட்டு, பெயரிலிதான் டிசே என்ற பெயரிலும் எழுதுகின்றார் என்று ஜபி, அரிவாளைக் கொண்டு நிரூபிக்காவிட்டால் சரி :-).
டி.சே. நல்ல பதிவு. ஆனால் நான் கூட சுந்தர் எப்படி இப்படி அமைதியா இருந்தான், என்ன நடந்திருக்குமென்றென்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். மாசிலனின் படம் அருமை.
6/07/2005 07:09:00 PMநன்றிகள்
கதிர்காமஸ்தான் போகாமலே பங்கெடுத்துக்கொண்ட ஆசாமி போல!
6/07/2005 07:10:00 PMகதிர்காமஸ்- இந்தப்பேர் நல்லாத்தான் இருக்குல்ல
/ஆனால் நான் கூட சுந்தர் எப்படி இப்படி அமைதியா இருந்தான், என்ன நடந்திருக்குமென்றென்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டேன/
6/07/2005 08:27:00 PMகறுப்பியின்ர முறைப்பாட்டிலை நியாயமிருக்குத்தான் போலை ;-)
அடியேனுக்கு ஏன் அடியான்? அடிக்கமுதல் அடியேன் அடியாயிர தூரம் ஓட்டம் ;-)
பெயரிலி, :))
6/07/2005 08:43:00 PMஜானா நல்ல பொண்ணு.
டிசே தமிழன்,
6/07/2005 09:54:00 PM//இருட்டுக்கு 'மப்பு'த்தான் காரணம்//
இப்பத்தெரிஞ்சு போச்சு! மப்புலே இருந்தீரென்று :-)))))))))))))))
//படம் எடுத்துப்போட்டதில் கிடைத்த முதல் 'ஆசீர்வாதம்' என்பதால் பத்திரப்படுத்திக்கொள்கின்றேன். இருட்டுக்கு 'மப்பு'த்தான் காரணம். இது கூடப் பரவாயில்லை. படம் பிடித்த பலரைப் புகைப்படத்தில் காணவில்லை.//
6/07/2005 11:50:00 PMஅது சரி. என்னடா, படங்கள் ஒரு ஆங்கிளில் இருக்கிறதே,உண்மையிலேயே நம்மாளு டிசே புகைப்பட வித்தகன் தான் போல என்று நினைத்திருந்தேன்.
சரக்காய நமஹ!
எங்கே எங்கடை அரிச்சந்திரிக்காவைப் படத்திலே காணவில்லை.
6/08/2005 01:51:00 AMநரைன் தப்பு பண்ணிவிட்டீர்களே டிசேயும் படத்திலே நிற்கிறார்.ஆகா பிசி மாதிரி படம்பிடித்தவர் டிசே ஆக இருக்கமுடியாது(டிசே போன் பண்ணித் திட்டினால் அப்படியே பதிவு செய்து வலைப்பதிவிலை போடுவன்)ஆக பிசியின் சீடராக உங்களின் பாராட்டைப் பெறத் தகுதி உடையவர் இந்தப் படமெங்கினும் நிற்காத ஆனால் சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர்.
ஆளாளுக்கு காலக்கெடு விதிக்கிற கெடுகாலம் இதுவென்பதால் ஊரொடு ஒத்தோடி நானும் விதிக்கிறேன் காலக் கெடு.இப்படத்தில் உள்ளவரெல்லாம் பப்படம் உடைக்கும் நேரத்துக்குள்ளே எம்முகம் எவர்க்குரியது என்று உரிமைகோராவிட்டால்.நானே உண்மயைச் சொல்லவேண்டி வரும்
துளசி & நரேன்! நான் மப்பு என்று கூறியது மப்பும் மந்தாரமானதுமான காலநிலையை. நீங்கள் விளங்கிக்கொண்டது மற்ற 'மப்பை'. கெட்டபெடியன் என்ற character certificate கொடுக்காமல் ஒருத்தரும் ஓயமாட்டீர்கள் போல இருக்கிறது. நரேன் நீங்களுமா :-)?
6/08/2005 01:53:00 AMகார்த்திக், நீங்கள் கேட்ட பதிவு இங்கே.
6/08/2005 02:01:00 AM//நரைன் தப்பு பண்ணிவிட்டீர்களே டிசேயும் படத்திலே நிற்கிறார்.ஆகா பிசி மாதிரி படம்பிடித்தவர் டிசே ஆக இருக்கமுடியாது(டிசே போன் பண்ணித் திட்டினால் அப்படியே பதிவு செய்து வலைப்பதிவிலை போடுவன்)ஆக பிசியின் சீடராக உங்களின் பாராட்டைப் பெறத் தகுதி உடையவர் இந்தப் படமெங்கினும் நிற்காத ஆனால் சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர்.//
6/08/2005 04:03:00 AMithukkuththaan eelanathan vENum enduRathu. ;)
antha photo eduththathu adiyaen.
ennudaiya pathivuhaLai (pinna montreal'la thodanginathilai irunthu ezutha vEnumae...) seekiram idukiraen makkaLae!
'டீஜே' எனும் பெயரை ஏன் தெரிவு செய்தீர்கள் என்ற சபையோரின் ஒருமித்த வினாவிற்கு டீஜே தமது வீட்டுக்காரர்களிடம் தொலைபேசி மூலம் அனுமதி வாங்கிவிட்டுப் பதில் சொன்னார் என்பதனையும் தகவலிற்காகச் சொல்லி வைக்கின்றேன்.
6/08/2005 03:10:00 PM//ennudaiya pathivuhaLai (pinna montreal'la thodanginathilai irunthu ezutha vEnumae...) seekiram idukiraen makkaLae!//
6/18/2005 11:11:00 AMமதி, விரைவில் எழுதிவிடவும். அத்தோடு பி.சி.சிறிராம் ரேஞ்சில் நானெடுத்த படங்களை இணைத்து என் புகைப்படக்கலையின் 'திறமையை' வலைப்பதிவெங்கும் பரப்பிவிடவும் :-).
.......
//'டீஜே' எனும் பெயரை ஏன் தெரிவு செய்தீர்கள் என்ற சபையோரின் ஒருமித்த வினாவிற்கு டீஜே தமது வீட்டுக்காரர்களிடம் தொலைபேசி மூலம் அனுமதி வாங்கிவிட்டுப் பதில் சொன்னார் என்பதனையும் தகவலிற்காகச் சொல்லி வைக்கின்றேன்.//
கிஸோ, உமது வீட்டு நிலவரந்தான் எனக்கும் என்று நினைக்கவேண்டாம். நீர் நாங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும், வீட்டுக்காரம்மாவிடம், செல்போனில் அனுமதி வாங்கிப் பதிலளித்த பரிதாப நிலையை என்னவென்று சொல்வது :-) அதுதான் கண்டகிண்டபாட்டிற்கு புரட்சி செய்கின்றேன், முற்போக்காய் சிந்திக்கின்றேன் என்று கட்டுரைகள் எழுதக்கூடாது என்று சொல்வது :-)
டிசே நீங்க ஏன் டொராண்டோ என்றும் சொல்லாமல் மற்ற எல்லாரையும் போல ரொறொன்ரோ என்றும் சொல்லாமல் ரொரண்ரோ என்று சொல்கிறீர்கள்; அக்காமார்களை கேட்டால் கோபிக்கிறார்களே தவிர பதில் சொல்ல மாட்டேங்கறாங்க; நீங்களாவது சொல்லுங்கோ... அல்லது கிஸோ, வசந்தன் யாராவது சொல்லுங்கள்... எனக்கு மண்டையே வெடித்துவிடும் போல இருக்கிறது...
6/18/2005 02:34:00 PMமுகமூடி, இந்த 'ரொ' 'டொ' குறித்து வசந்தனோ அல்லது யாரோ கறுப்பியின் பதிவில் விஜய் கேட்டபோது விளக்கமளித்திருக்கின்றார்கள் என்று நம்புகின்றேன். ஈழத்தமிழில் To... 'ரொ' என்று ஆரம்பிம்பதும், Do... என்று எழுதும்போது 'டொ' என்று ஆரம்பிம்பதும் பழக்கத்தில் உள்ளது. எது சரி பிழை என்று தெரியவில்லை. ரொரண்ரோ என்று உச்சரித்து உச்சரித்து அப்படி எழுதவும் நான் பழகிவிட்டேன். ரொரண்டோ என்று எழுதுவதுதான் சரியென்று நினைக்கின்றேன். எல்லாச் சொல்லும் ஒரு பொருள் குறித்தனவே என்பதுமாதிரி, எப்படிச் சொன்னாலும் நமக்கு அது Toronto வைத்தான் சொல்கின்றார்கள் என்று புரிந்தால் போதுந்தானே :-).
6/23/2005 12:06:00 AMபதிந்தது:test
7/03/2005 03:14:00 PMனகனகனகனக
3.7.2005
வரமுடியாமையை எண்ணி நான் எனக்குள்ளே அழுகிறேன்
6/04/2007 10:10:00 AMபித்தன், இது இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வு. இம்முறை (2007) வலைப்பதிவர்கள் நாம் சந்திக்கவில்லை. தாங்கள் நிம்மதியாக இருக்கலாம் :-).
6/04/2007 05:52:00 PMPost a Comment