ஒவ்வொரு விடுமுறை நாளும் ஏறக்குறைய இப்படித்தான் ஆகிறது இந்த நாளை எப்படி வித்தியாசமாக்கலாமெனச் சிந்தித்தபடியே பதினொரு மணிவரைக்கும் கட்டிலிலிருப்பேன் நீந்தப்போகலாமா? தண்ணியடிக்கலாமா? பிள்ளைகளை வெளியேகூட்டிப்போகலாமா? யாராவது பெரியவர்களைப் போய்ப்பார்க்கலாமா? பாதியில்விட்ட கதையைப் பூர்த்தியாக்கலாமா? புத்தக அலமாரியைத் தூசுதட்டலாமா? போஸ்ட்டில் புதிய நூலேதும் வராதபோதும் முடிவுக்குவர முன்னாலே மதியம் திரும்பிவிடும்
மனைவி பெரிய செலவொன்றையும் அறிவிக்காதவரையில் பர்ஸானது மிதக்குமா தாழுமா மனஞ்சுழல விஷ்கியும் சிக்கன் ·ப்றையுமா 'றம்'குப்பியும் சாடின் மீனுமா இல்லை பியரும் கருவாடுந்தானா?
எக்காலத்தும் எல்லோராலும் சபிக்கப்பட்டாலும் இருக்கும் சில்லறையுடன் தன்னை எப்போதும் அட்ஜெஸ்ட் செய்துபோவது இளவெடுத்த இந்தச் சோமபானந்தான்!
3 comments:
பதிந்தது:கமெராவுக்குச் சொந்தக்காரன்
8/21/2005 01:00:00 AMவயிற்றெரிச்சலைக் கொட்டும் அண்ணன் டி.ஜே ஒயிக
21.8.2005
என்மேல் இரக்கப்பட்டு ஒழிக என்றாவது ஒரு பின்னூட்டமிட்ட 'கமராவுக்கு சொந்தக்காரன்' நீவிர் வாழ்க :-).
8/22/2005 09:09:00 AMபதிந்தது:karunah
10/18/2005 09:39:00 AMஒவ்வொரு விடுமுறை நாளும்
ஏறக்குறைய இப்படித்தான் ஆகிறது
இந்த நாளை எப்படி
வித்தியாசமாக்கலாமெனச் சிந்தித்தபடியே
பதினொரு மணிவரைக்கும் கட்டிலிலிருப்பேன்
நீந்தப்போகலாமா? தண்ணியடிக்கலாமா?
பிள்ளைகளை வெளியேகூட்டிப்போகலாமா?
யாராவது பெரியவர்களைப் போய்ப்பார்க்கலாமா?
பாதியில்விட்ட கதையைப் பூர்த்தியாக்கலாமா?
புத்தக அலமாரியைத் தூசுதட்டலாமா?
போஸ்ட்டில் புதிய நூலேதும் வராதபோதும்
முடிவுக்குவர முன்னாலே மதியம் திரும்பிவிடும்
மனைவி பெரிய செலவொன்றையும்
அறிவிக்காதவரையில் பர்ஸானது
மிதக்குமா தாழுமா மனஞ்சுழல
விஷ்கியும் சிக்கன் ·ப்றையுமா
'றம்'குப்பியும் சாடின் மீனுமா
இல்லை பியரும் கருவாடுந்தானா?
எக்காலத்தும் எல்லோராலும்
சபிக்கப்பட்டாலும் இருக்கும்
சில்லறையுடன் தன்னை எப்போதும்
அட்ஜெஸ்ட் செய்துபோவது
இளவெடுத்த
இந்தச் சோமபானந்தான்!
* Garunyan *
18.10.2005
Post a Comment