கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மூன்று வித்தியாசமான ஆளுமைகள் (மீள்பதிவு)

Friday, August 19, 2005



சில தினங்களுக்கு முன் இணையத்தில் செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு தமிழ்ப்பெண் Erotica வகை எழுத்தில் மிகத் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருக்கின்றார் என்ற செய்தியைப் பார்த்தபோது ஆச்சரியமூட்டுவதாக இருந்தது. Mary Anne Mohonraj என்ற இந்த தமிழ்ப்பெண்மணி, University of Utah வில் ஆங்கில இலக்கியத்தில் தனது Ph.Dயை முடித்தவர். இவர் யாழ்ப்பாணத்திலும், நீர்கொழும்பிலும் வளர்ந்த தமிழ்ப்பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். இன்று முப்பத்து நான்கு வயதாகும் இவர், தனது இரண்டாவது வயதிலேயே அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர். தான் தனது குழந்தைப்பருவத்தில் நன்கு தமிழ் பேசக்கூடியவர் என்றும், இப்போது முன்பு போல் தன்னால் பேசமுடியாது இருக்கின்றது என்றும் கூறுகின்றார். அண்மைக்காலத்தில் தமிழைப்படிக்க ஆரம்பித்ததாகவும், ஆனால் அந்தமொழியைக் கற்பது அவ்வளவு இலகுவில்லை என்றும், ஆனால் தனது பெற்றோர் தமிழில் பேசினால் தன்னால் விளங்கிக்கொள்ளமுடியும் என்றும் தனது பயோ-டேட்டாவில் எழுதுகின்றார். எனினும் தனது அடையாளமும் கலாச்சார வேரும் தமிழ் என்பதை மறைக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். மேலைத்தேயத்தில் வளரும் ஒரு கீழைத்தேயப் பெண் அனுபவிக்கும் அனைத்துத் தடைகளையும் தானும் தாண்டி வந்ததாகக்கூறுகின்றார். தான் வாழ்ந்த/வளர்ந்த சூழலில் தனக்கு வெள்ளையின நிற ஆண்களுடந்தான் dating செய்யும் சந்தர்ப்பம் அதிகம் வாய்த்ததாகக் குறிப்பிடுகின்றார். இதனால் அநேகமுறைகள் அம்மாவுடன் சமையலறையில் கறிகள் சமைக்கும்பொழுது சண்டைகள் நடைபெற்றதாகவும், இதன் நீட்சியில் தனது பதினாறு வயதில் தனக்கு மாப்பிள்ளை பார்க்க இந்தியாவுக்கு தனது புகைப்படம் அனுப்பப்பட்டதாகவும், தொடர்ந்து 'குழப்படி' செய்தால் இலங்கைக்கு அனுப்பி கொன்வெண்டில் படிப்பிக்கப்போவதாகவும் தனது பெற்றோரால் பயமுறுத்தப்பட்டதாகவும் ஒரு நேர்காணலில் கூறுகின்றார்.



இவர் தான் erotic stories எழுத வந்தது ஒரு வித விபத்து என்கின்றார். ஒருமுறை இணையத்தில் மிக மோசமானமுறையில் எழுதப்பட்ட Erotic storeyஐ வாசித்தபோது, தன்னால் இதைவிட திறமையாக எழுதமுடியும் என்றுதான் தான் erotic stories எழுதத்தொடங்கினேன் என்று குறிப்பிடும் மேரி, செக்ஸ் குறித்த மெளனங்களை தான் உடைக்க உடைக்க, அது குறித்து மேலும் எழுதும் ஆர்வம் அதிகம் குவிந்தது என்கின்றார். 1939 கொழும்பில் இருந்தால் என்ன, 1999ல் கலிபோர்ணியாவில் இருந்தால் என்ன, செக்ஸ் குறித்த இரகசியங்களும், மெளனங்களும் இன்னவும் பெரும்பாலும் உடைக்கப்படாத பனிப்பாளங்களாகவே இருக்கின்றது என்கின்றார். ஆரம்பகாலங்களில் தனது கதை மாந்தர்கள் வெள்ளையின மற்றும் போலீஷ் இன மக்களாக(bec she lived in those neighbourhoods) இருந்ததாகவும், பிறகுதான் தனது அடையாளத்துடன் (Brown People) தொடர்புடைய கதைகளை எழுதத்தொடங்கியதாகக் குறிப்பிடுகின்றார். தமிழ்க்கலாச்சாரத்தில் பெண்களுக்கான பாலியல் வெளிகள் அடைக்கப்பட்டு சிக்கல் நிறைந்ததாகவும், ஆனால் திருமணம் செய்தவுடன் மட்டும் அனைத்துப் பாலியல் உறவு சேர்ந்த கதைகள் aunties, grandmas போன்றவர்களால் வெளிப்படையாக பெண்களுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்படுவதாகக் கூறும் மேரி தனக்கு அந்தச் சந்தர்ப்பம் இன்னும் வாய்க்கவில்லை என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிடுகின்றார். அதேசமயம் தனக்கு கெவின் என்ற பேராசிரியருடன் வெளிப்படையான உறவு (open relationship) இருந்ததைத் தெளிவுபடுத்துகின்றார். மேரி இன்று பல புத்தகங்களை எழுதியும் தொகுத்தும் இருக்கின்றார். சென்ற மாதம் அவரது புத்தகமான, Bodies in Motion வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன் முக்கிய கதை மாந்தர்கள் பலர் தமிழர்களாய்/தமிழ் அடையாளத்துடன் இருக்கின்றார்கள்.அமெரிக்காவின் பல்வேறு பிரதேசங்களில் தனது புதுப்புத்தகத்தின் பக்கங்களை வாசித்துக்காட்டுவதும், தனது புத்தகங்களை வாசிப்பவர்களைச் சந்திப்பதும் என இன்றையபொழுதில் நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றார். பாலியல் சுதந்திரம் ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்திலிருந்து பல்வேறு தடைகள்/தளைகளைத்தாண்டி தனது அடையாளங்களுடன் தன்னை நேரடியாக வெளிப்படுத்திய Mary Anne Mahonraj நிச்சயம் கவனிக்கப்படவேண்டியவர்.



ராப் பாடகரான 50 CENT, தனது சுயசரிதைத் தன்மைகொண்ட நூலான, 'From Pieces to Weight' என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டிருக்கின்றார். ஒன்பது முறை சுடப்பட்டும், தான் தப்பியிருக்கின்றேன், ஆகவே நான் உயிர்வாழ்வதற்கான காரணம் என்று ஏதோ ஒன்று இருக்கவேண்டும் எனத் தனது புத்தகத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடுகின்றார். 2003ல் தனது முதலாவது இசைத்தட்டான, 'Get Rich or Die Tryin' மூலம் உலகிற்கு அறிமுகமான 50 Cent இன்று ராப் பாடகர்களில் தவிர்க்கமுடியாத ஒருவராக ஆகிவிட்டார். இவர் போதைமருந்து விற்று வாழ்ந்த தாயிற்கு மகனாகப்பிறந்தவர். தனது எட்டாவது வயதிலேயே தனது தாயைத் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுத்தவர். அவரது பதினொராவது வயதில் தெருக்களில் போதைமருந்து விற்பவராக ஆகிவிடுகின்றார். பதினாறாவது வயதில் துப்பாக்கி வாங்கி, சில மாதங்களில் தன்னை ஒரு குழுவாகத் தாக்கிய கும்பலில் ஒருவரின் காலுக்கும் சுட்டும் விடுகின்றார். இரண்டு வருடங்களில் போதைமருந்துச் சீர்திருத்தப்பள்ளியில் இருந்தாலும், சிறையில் இருந்து வெளியே வந்த முதல்நாளே தான் போதைமருந்தை மீண்டும் விற்கத்தொடங்கியதாகக் கூறுகின்றார். குடிக்கும், போதை மருந்துக்கும் அடிமையானோர் சூழப்பட்டவர்களின் வாழ்வு முறைக்குள் இருந்த தனக்கு, போதைமருந்து விற்பது, தான் வாழ்வதற்கான பல options களில் ஒன்றாக இருக்கவில்லை. அது மட்டுமே ஒரெயொரு option ஆக இருந்தது என்கின்றார். இன்று G-unit என்ற பிரபல்யம் வாய்ந்த record comapnyற்கு நிறுவன அதிபராகவும், விட்டமின் நீர், G-unit clothing lines, வீடியோ கேம்ஸ் போன்றவற்றை விற்பனை செய்வது என்று பல்வேறு துறைகளில் தனது கால்களை அகலப்பதித்தபடி இருக்கின்றார். தான் யாருக்கும் role-model இல்லையெனவும், வாழ்க்கையின் அடிமட்டத்திலிருப்பவரும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு ஒரு வாழும் உதாரணம் மட்டுந்தான் தான் என்றும் குறிப்பிடுகின்றார். சிலவிடயங்களை அவர்களது காலணிகளில் நுழைந்துபார்க்காமல் நாம் தீர்ப்புக்கள் எதையும் வழங்கிவிடமுடியாது, அவ்வாறான ஒரு நபராகத்தான் 50 CENTம் தெரிகின்றார்.

ஆவணி மாத 'உயிர்மை' இதழில் சிங்கப்பூரில் தீவிரமாய் இயங்கிவரும் நாடக்கலைஞரான இளங்கோவனின் நேர்காணல் வெளிவந்திருக்கின்றது (நேர்கண்டவர்: சி. அண்ணாமலை). இளங்கோவனைப் பற்றியும் அவரது நாடகங்களைப் பற்றியும் அவ்வ்வபோது சிறுசிறு செய்திகளாக வாசித்திருந்தாலும் இந்த நேர்காணலில் இருந்து பல விடயங்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அரசாங்கம்/அதிகாரமையங்கள் போன்றவற்றிற்கு அறைகூவல் விடுகின்றோம் என்று எழுத்தில் மட்டும் அறைகூவல் விடுகின்றவர்கள் இந்தக் 'கலக்ககாரனின்' அரசுகளுக்கும்/மதங்களுக்கும் எதிரான செயற்பாட்டுக்களை கொஞ்சம் கவனித்தார்கள் என்றால் பேசாமல் வாயை மூடி மெளனமாக இருக்கக்கூடும். சிங்கப்பூர் என்பது பற்றி நமக்கு ஊட்டப்பட்ட விம்பங்களை இவரது நேர்காணல் கேள்விக்குள்ளாக்கின்றது 'தென் கிழக்காசியாவில் மிகவும் புனிதமான சமூகமாகவும், கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகமாகவும், மிகச் சிறந்த பொருளாதாரப் பரத்தையாகவும் (?) சிங்கப்பூர் கருதப்படுகின்றது. இதில்தான் என்னுடைய படைப்புக்கள் மிகவும் நுணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, சில சமயம் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாக்கப்படுகின்றன. இந்தச் சமர் சுவாரசியமாக இருக்கின்றது' என்கின்றார் (சிங்கப்பூர் குறித்து ஏற்கனவே அங்கு வசித்த நண்பர் மூலமும் இவ்வாறான விடயங்களை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்). 'நீங்கள் பிரச்சினைக்குரியவரா?' என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, 'மூவாயிரம் சமணர்களை ஆற்றங்கரையில் கழுவிலேற்றிக் கொல்ல உதவிய பார்ப்பான் திருஞானசம்பந்தனுக்கு முலைப்பால் கொடுத்த உமையாள், ஏன் தன்னுடைய மறுமுலையை ஒரு தலித்துக்குக் கொடுக்கவில்லை என்று நான் எழுதினால் அது கலகம். ஆனால் மாட்டிறைச்சி வாடையுள்ள தலித் வாய்க்கு, 'பாருவின் மாரு ஒத்துக்காது மாமு' என்று ஆய்ந்தறிந்த மொண்ணைத்தனத்திற்காக இங்குள்ள பலரைப் போல தமிழில் முனைவர் பட்டம் வாங்கினால் நான் கலகக்காரன் அல்ல, சாந்தசொரூபி' என்று சாட்டையால் அடிக்கிறார். 'இன்று சிங்கப்பூரில் சர்ச்சைக்குரிய எதையும் படைப்பாக்கும் ஒரே நபராக இருக்கும் இளங்கோவன் எதைச் சொன்னாலும் அது விவாதத்துக்குரியதாகிவிடுகிறது (அண்மையில் அவரால் மேடையேற்றப்பட்ட 'தலாக்' நாடகம் பிறகு அரசால் தடைசெய்யப்பட்டது). பலத்த எதிர்ப்பு, கொலை மிரட்டல், நாடகம் நிகழ்த்தத் தடை, வேலையை இழந்தது, இவருக்கு எதிரான பிரச்சாரம்..... என்று இளங்கோவனுக்கு எதிராய் இருக்கும் சக்திகளில் மேட்டுக்குடி தமிழர்களுக்கும் முக்கிய இடமுண்டு' என்று ஒரு குறிப்புக் கூறுகின்றது. நாடகத்துறையில் நீண்டகாலமாய் இருக்கும் நீங்கள் இப்போது எப்படி உணர்கின்றீர்கள் என்று கேட்டபோது, 'கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் நீண்டகாலமாகத் தனிமையில் நடந்துகொண்டிருகின்றேன்' என்கின்றார். இதைவிட வேறெந்தச் சொற்றொடராலும் அவரைப் பிரதிபலித்துக்காட்டமுடியாது போலத்தான் அவரது நேர்காணலை வாசித்தபோது எனக்குத் தோன்றியது.

நன்றி: இவற்றை எழுத துணைபுரிந்த 'உயிர்மை', 'மெட்ரோ நியூஸ்' மற்றும் சில இணையத்தளங்கள்.

7 comments:

இளங்கோ-டிசே said...

முதலில் இடப்பட்ட பின்னூட்டங்கள்.
-----------------------------------
தல, உனக்கு பிரச்சனை ஆரம்பிச்சிருச்சு. இதெல்லாம் நீ எழுதலாமா கூடாதா அப்படிங்கற கலாச்சார போலீஸ் உடனடியாக உங்க பதிவுல வந்துறுவாங்க. மற்றபடி 50 சென்ட்ஸ் பற்றிய என் கருத்துக்கள் வேறானது. இளங்கோவன் படித்தவுடனேயே "இந்தாளு ஒரு மார்க்கமான ஆளு" என்றுதான் தோன்றியது. ஆனாலும், உயிர்மை/காலச்சுவடு விஷயங்களை always take with a pinch of salt.

By Narain, at August 17, 2005 10:03 AM

அண்ணை,
Mary Anne Mahonraj இனை 1997 இலிருந்து இணையத்திலே அங்குமிங்கும் வாசித்து வந்திருக்கின்றேன் (Erotica என்று மட்டுமல்ல, கவிதைகள் உட்பட). தற்சமயம் அவர் நீங்கள் சொல்லும் வலைப்பதிவு வைத்திருக்கின்றார். அவருடைய இணைய ஆரம்பகாலத்திலே, வேறோர் தளத்திலே அவர் எழுதியவை இருந்தன. அவற்றிலே படைப்பென்று பெரிதும் சுட்டுமளவுக்கு ஏதுமிருக்கவில்லை.
அவருடைய bodies in motion குறித்து ஒரு பார்வையை இங்கே காணலாம். ஆனால், அவருடைய அண்மைய எழுத்து ஆரம்பகாலத்தினதோடு ஒப்பிடும்போது, மிகவும் மெருகேறியிருக்கின்றதாகத் தோன்றுகிறது.

50 Cents குறித்து; அவர் போன்ற கஷ்டங்களூடாக மேலே வந்த பாடகர்கள் குறித்து நீங்கள் சொல்வது ஒத்துக்கொள்ளவேண்டியதாகவிருந்தாலுங்கூட, அவர்கள் பாடல்களூடாக முன்வைக்கும் "வாய்ப்புகளும்" "பாதைகளும்" ஆபிரிக்க-அமெரிக்கர்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கப்போவதில்லையென்றே தோன்றுகின்றது. (பில் கொஸ்பி சொல்வது, அந்தளவிலே சரியென்றே நினைக்கிறேன்)

By -/பெயரிலி., at August 17, 2005 11:22 AM

நரேன், பெயரிலி பின்னூட்டங்களுக்கு நன்றி.
...
//தல, உனக்கு பிரச்சனை ஆரம்பிச்சிருச்சு. இதெல்லாம் நீ எழுதலாமா கூடாதா அப்படிங்கற கலாச்சார போலீஸ் உடனடியாக உங்க பதிவுல வந்துறுவாங்க//
:-)))
...
தம்பி பெயரிலியினது விளக்கெண்ணெய் கண்ணில் அகப்படாத விசயமென்று ஏதாவது இருக்கிறதா என்ன ;-)? Mary Anne கவிதைகளும், ஜேர்னல்களும் எழுதியவர்/எழுதிக்கொண்டிருக்கின்றார் என்பதை அவரது இணையத்தளத்தில் வாசித்து அறிந்தேன். தொண்ணூறுகளில் ஏதோ ஒரு newsgroupல்தான் பல கதைகளை எழுதினார் என்று வாசித்திருக்கின்றேன். அந்தத் தளம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றதா என்று தெரியவில்லை. Bodies in Motionற்கு reviews தேடிக்கொண்டிருந்தேன். சுட்டிக்கு நன்றி பெயரிலி.
....
நரேன், பெயரிலி உங்களைப்போலவே எனக்கும் 50 Cent மீது வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.
//அவர்கள் பாடல்களூடாக முன்வைக்கும் "வாய்ப்புகளும்" "பாதைகளும்" ஆபிரிக்க-அமெரிக்கர்களுக்கு முன்மாதிரிகளாக இருக்கப்போவதில்லையென்றே தோன்றுகின்றது. (பில் கொஸ்பி சொல்வது, அந்தளவிலே சரியென்றே நினைக்கிறேன்)//
இது உண்மை போலத்தான் எனக்கும்படுகின்றது. நேற்று வாசித்த, Newsweekயினதோ Timesயினதோ கடைசிப்பக்கத்தில் எழுதிய கறுப்பினத்தவர் ஒருவரும் இதையே பிரதிபலிக்கின்றார். இன்றைய ராப் பாடல்கள் ஆபிரிக்க-அமெரிக்கரினது அடையாளங்களை பிரதிபலிக்கத் தவறிவிட்டன என்றும், அதனால் ஏற்பட்ட சலிப்பு தன்னை வெள்ளையினத்தவரின் பாடல்களை நோக்கித் திசை திருப்பிவிட்டன எனவும் எழுதியிருந்தார். நிச்சயம் இன்றையபொழுதில் டூபாக்கின் Me against the world போன்ற பாடலையோ அல்லது (பெயரிலிக்குப் பிடித்த) பொப் மார்லியின் Get up Stand up, Stand up for your rights போலவோ ஒரு தீவிரமான பாடலை 50 Cent தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. (டூபாக்கினதும், பொப் மார்லியினதும் பாடல்களைத் தொடர்புபடுத்தி ஒரு பதிவு சந்தர்ப்பம் வாய்த்தால் எழுத விருப்பம் இருக்கிறது) 50 Cent நகர்ந்துகொண்டிருப்பது, டூப்பாகினதோ, N.W.A வினதோ திசையை நோக்கியோ அல்ல, அவர் சென்றுகொண்டிருப்பது Jay-Z, Puff Daddy போன்றவர்களின் திசையை நோக்கித்தான் என்பது அவரது பாடல்களைக் கேட்கும்போது தெரிகிறது.

By டிசே தமிழன், at August 17, 2005 3:57 PM

8/19/2005 09:32:00 AM
மு. மயூரன் said...

டீ சே, அபத்தமில்லாத porn, erotica வகை சரக்குகளை ரசிப்பவன் என்ற வகையில் மேரி ஆன் ஏற்கனவே எனக்கு இணையம் மூலம் நல்ல பரிச்சயம்.இதுவரை ஏராளமாக எழுதிக்குவித்திருக்கிறார்.

அண்மையில் சுவாரசியமான நிகழ்வு...
எமது லன்கா லினக்ஸ் பயனர் குழுமத்தை சேர்ந்த என் நண்பர் சுச்சேத்த வுடன் இணையத்தில் கிடைக்கு போர்னோ பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, மேரி ஆன் பற்றி கதை வந்தது. அவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருக்கிறார். வந்து சுச்சேத்த வுடன் ஒரு இரவுப்பார்ட்டி யில் கலந்துகொண்டிருக்கிறார்.

அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் காட்டியபோது ஆச்சரியப்பட்டேன்.

இணையத்தில் உரைவடிவ போர்னோ, பால்கிளர்ச்சி யூட்டும் உரைவடிவங்களை தேடுபவர்களுக்கு மேரி ஆன் ஐ நான் பரிந்துரை செய்வேன்

8/19/2005 01:24:00 PM
Anonymous said...

அபத்தமில்லாத porn, erotica வகை சரக்குகளை

Classification plEEEEEEEEEEEEEEEEEEZ

8/19/2005 02:07:00 PM
மு. மயூரன் said...

pornography என்றாலே முழுக்க முழுக்க அபத்தம்தான் என்கிறீர்களா?

உண்மைதான்

8/19/2005 02:15:00 PM
இளங்கோ-டிசே said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
......
மயூரன், மேரி ஆன் குறித்து நீங்கள் பகிர்ந்த இந்தச் செய்தி எனக்குப் புதிது. அதற்கும் நன்றி.

8/19/2005 08:23:00 PM
Chandravathanaa said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

Mary Anne Mohonraj பற்றிய(தும்) இந்தச் செய்தி(யும்) எனக்கு மிகவும் புதிது. தந்ததற்கு நன்றி.

8/23/2005 02:12:00 AM