கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

இது ஒரு அழகிய வலைப்பதியும் காலம்

Wednesday, August 31, 2005

ஞாயிற்றுக்கிழமை எடுத்த படங்கள். படங்களும் பாடல்களும் கீழே பெயர் குறிப்பிடப்படும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் :-).

sunflo
'பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா'

(கார்த்திக்கிற்கு)
keerthiafter
'வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்!
இலட்சம் கனவு கண்ணோடு
இலட்சியங்கள் நெஞ்சோடு,
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு!

(கீர்த்திகனுக்கு)

ladies
'ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே'

(சன்னாசி எனப்படும் முன்னை நாள் மாண்ட்ரீஸருக்கு)

subway
'அறிவுக்கு வேலைகொடு
பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும் ? '

(தங்கமணிக்கு)


raining
'தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்க இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை. '

(பெயரிலிக்கு)

flower2
'தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்.
தோழியே, இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்.
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.

வெந்நீரில் நீர் குளிப்பேன்,
விறகாகி தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னை கலப்பேன்.
விழிமூடும்போது முன்னே பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானேயில்லை,
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.

(பாலாஜி-பாரிக்கு)
நன்றி: சந்திரவதனாவின் 'சினிமாப்பாடல்கள்'

22 comments:

SnackDragon said...

நன்றி நண்பா உன் வாழ்த்துக்கு ;-)
/என் கதை எழுதிட மறுக்குது என் பேனா/ + /நீ அழுதால் நான் துடிப்பேன்.
(பாலாஜி-பாரிக்கு)/ அல்டிமேட்டு :-)

8/31/2005 10:28:00 AM
Anonymous said...

பதிந்தது:பத்மா அர்விந்த்

படங்களும் பாடல்களும் அருமை

31.8.2005

8/31/2005 10:39:00 AM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

கலக்கல் அண்ணே! கலக்கல்!!

esp. balalji-paari. ;))

-மதி

8/31/2005 11:52:00 AM
Anonymous said...

பதிந்தது:nalayiny thamaraichselvan

படங்களும் அதற்கேற்ற பாடல் வரிகளும் மனதை இதமாக எங்கொ அசைபோட்டபடி பறக்கச்சொல்கிறது.

31.8.2005

8/31/2005 12:46:00 PM
கொழுவி said...

இது பாட்டு.
இது படம்.
இது பதிவு.

8/31/2005 12:49:00 PM
Anonymous said...

Disappointed DJ இற்கு
கார்த்திக் சொல்வதாவது
கீர்த்திகன் சொல்வதாவது
சன்னாசி சொல்வதாவது
தங்கமணி சொல்வதாவது
பெயரிலி சொல்வதாவது
பாரி-பாலாஜி சொல்வதாவது
பாரி-பாலாஜி சொல்லிக்கொண்டேயிருப்பதாவது
பாரி-பாலாஜி தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருப்பதாவது

8/31/2005 01:14:00 PM
Anonymous said...

கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வரல, இங்க ஒரே கொண்டாட்டமா இருக்கு! பெயரிலிக்கு ஒரு பெயர் தெரியாத படம், பாலாஜி-பாரிக்கு ஒரு பொருத்தமான பாட்டும், எனக்கு ஒரு பையன் கண்ணாடி போட்டு உட்காந்திருக்கிற படமும்.. கார்த்திக்குத்தான் பாவம் ஒரு சூரிய காந்தி படம்!

உங்களுடைய பாடல்களும் (பின்னூட்டத்தில்) அருமை. அதிலும், கார்த்திக் சொல்வதும், சன்னாசி சொல்வதும் நல்லபாடல்கள். பாலாஜி-பாரி இப்படித்தான் இப்ப பாடிக்கொண்டிருக்கிறார்!

நன்றி டிசே!

8/31/2005 02:19:00 PM
இளங்கோ-டிசே said...

கார்த்திக், பத்மா, மதி, நளாயினி தாமரைச்செல்வன், கொழுவி, அனானிமஸ் (பெயரிலி(?)) மற்றும் தங்கமணி உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

8/31/2005 06:46:00 PM
இளங்கோ-டிசே said...

//பெயரிலிக்கு ஒரு பெயர் தெரியாத படம்//
உண்மைதான் தங்கமணி. இந்தப்படம் கார் ஓடிக்கொண்டிருந்தே வெளியே மழை பெய்யும்போது எடுத்தனான். அந்த நேரத்து மழைக்காலத் தெருவைப் போல, பெயரிலியின் பல பின்னூட்டங்கள் 'குழப்பமாய்' இருப்பதால் அவருக்கு அதை காணிக்கை (காசை greyhoundல் எனக்கு பெயரிலி அனுப்பவும்) செய்திருந்தேன் :-).
//எனக்கு ஒரு பையன் கண்ணாடி போட்டு உட்காந்திருக்கிற படமும்.//
அது எனது அண்ணாக்களின் ஒருவரின் மகன் (கீர்த்திகன்). எப்போதும் சன்னதமாடுபவன் அன்று கொஞ்சம் சாதுவாய் இருந்தபோது எடுக்கப்பட்டது.
//பாலாஜி-பாரி இப்படித்தான் இப்ப பாடிக்கொண்டிருக்கிறார்! //
அப்படிப்போலத்தான் கிடக்கிறது. 'மன்மதலீலை'யையா அல்லது 'மண்ணில் இந்தக் காதலன்றி'யையா இப்போது பாடிக்கொண்டிருக்கின்றார் என்று ஒருமுறை 'உறங்குநிலை' கலைத்து வந்து சொன்னால், நம்மைப் போன்றவர்களும் இப்போதே training எடுத்துப்பழகிக்கொள்ளலாம் :-).

8/31/2005 06:57:00 PM
சுந்தரவடிவேல் said...

அப்புடிப் போடுங்க!
நீங்க தங்கமணிக்கு "சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா" பாட்டைப் போட்டிருக்கலாம்! பெயரிலிக்குப் படத்தைத் தீமா வச்சு 'ஒன்னுமே பிரியலே ஒலகத்துலே'ன்னு போட்டுருக்கலாம் (ஆனா அவரு ஏமாளி இல்லாததால கொஞ்சம் உதைக்கும்/ப்பார்).
அங்கிட்டு ஈழநாதன் உங்களுக்கே ஒரு பாட்டு போட்டிருக்காரு பாத்தீங்களா?

9/01/2005 05:59:00 AM
இளங்கோ-டிசே said...

சுந்தரவடிவேல் பின்னூட்டத்துக்கு நன்றி.
....
நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் கூட அருமையாக இவர்கள் இருவருக்கும் பொருந்துகின்றது :-). அது சரி, முந்தி நீங்களா அல்லது தங்கமணியா, 'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா' என்று பாடினீர்கள்? எனென்றால், நீங்கள் இருவரும் மாறி மாறி தம்பி தம்பி என்று அழைக்கின்றீர்கள். யார் அண்ணா யார் தம்பி என்று ஒரே குழப்பமாய் இருக்கிறது :-).
....
//அங்கிட்டு ஈழநாதன் உங்களுக்கே ஒரு பாட்டு போட்டிருக்காரு பாத்தீங்களா?//
இப்போதுதான் பார்த்தேன்; இரசித்தேன். சுடச்சுட ஒன்றல்ல, இரண்டு பின்னூட்டங்கள் இட்டுவிட்டுத்தான் வந்திருக்கின்றேன் :-).

9/01/2005 11:27:00 AM
-/பெயரிலி. said...

/greyhoundல் எனக்கு பெயரிலி அனுப்பவும்/
greyhound இல் என்ன, greyhound இனையே நாலைஞ்சாக அனுப்புகிறேன்; குதறட்டும். eerrrrrrrrrrrrrrrrrrrrr!

9/01/2005 12:04:00 PM
இளங்கோ-டிசே said...

நான் ஒரு Snoop Dogg ஆக்கும். வாற greyhoundsஐ பாடிக் குதறி, அனுப்பின ஊருக்கே திருப்பி அனுப்புவேனாக்கும். பாடலைக் கேட்டுவிட்டு பிறகு மிச்சம் வந்து குதறுகிறன் :-).

9/01/2005 12:37:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பின்னூட்டத்திலே சன்னாசி என்ற தமிழ்ப்பாம்புக்கான பாடலைப்போட்ட ஜீவன் வாழ்க! வாழ்க!!

பாட்டு சூப்பரோ சூப்பர்!

:ROFL:

-மதி

9/01/2005 12:42:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

டிஜே அண்ணே!

உங்கட ப்ளொக்கர் படம் சூப்பரண்ணே.. ஈழநாதன்ர காதிலை போட்டு வைக்கிறன்.

-மதி

9/01/2005 12:43:00 PM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

யாருங்க அது பின்னூட்டத்தில பாட்டாப்போட்டு சிரிசிரின்னு சிரிக்க வைக்கிறது. உங்களை sue பண்ணணும்!

பெயரிலியோட வேலையோ???

-மதி

9/01/2005 12:49:00 PM
இளங்கோ-டிசே said...

//பெயரிலியோட வேலையோ???//
நன்றி மதி. இப்பத்தான் தெரிந்தது பெயரிலி ஒரு musicianயாய் பல்கலைக்கழகத்தில் வேலை செய்கின்றார் என்று :-).

9/02/2005 09:16:00 AM
-/பெயரிலி. said...

அண்ணை ரைட், பெயரிலி இப்போது amusician ஆக வேலை செய்கிறார்

9/02/2005 09:31:00 AM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சும்மா இருக்கேலாம, பாட்டை இங்க சேர்த்திட்டன்.

http://mathy.kandasamy.net/musings/?p=210

நன்றி பெயரிலி. :)

-மதி

9/02/2005 09:52:00 AM
-/பெயரிலி. said...

சேர்த்ததுதான் சேர்த்தீர்கள் தாயே, ஆனால், அதுக்கு இணைப்பிலே ஒரு உடைக்கமுடியாத "/br" தடையும் போட்டுத்தானா சேர்க்கவேண்டும்?

9/02/2005 10:09:00 AM
Anonymous said...

ஆஹா!!

ஒரு மூணு நாள் நெட் பக்கமே வரலை. அதுக்குள்ள இப்படி காலி பண்ணிட்டீங்களே..DJ.. நல்ல பாட்டைய உமது பாடு..
:)) :))

9/03/2005 01:17:00 PM
இளங்கோ-டிசே said...

http://utopiann.blogspot.com/

இது நக்கலுக்கு இல்லை ப்ரோ. எங்களுடன் கூடிக்குலாவிய அருமை நண்பர் எமது குழாத்தைவிட்டுப்போகின்றாரே என்ற கவலையினால் மட்டும் என்பதே உண்மையாம். அந்த உண்மையைத்தவிர வேறொன்றும் இல்லையாம்.

I wanted to post this comment in Piratheeba's blog....but couldn't able to post there( i saw half of my comment only there :-( )bec of some error. so i'm posting here. thank you.

9/12/2005 12:09:00 PM