நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

தமிழர் நாள்

Sunday, August 07, 2005

நேற்று, ரொரண்ரோவிலுள்ள வொண்டலாண்டில், இளைஞர்களால் 'தமிழர் நாள்' ஒழுங்குசெய்யப்பட்டு கலை நிகழ்வுகள் திறந்தவெளி அரங்கில் மேடையேற்றப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கீழே. கானங்களும் காட்சிகளும் அழகாய்த்தான் இருந்தன. படங்கள் இப்படி 'அற்புதமாய்' வந்தற்கு, எனது புகைப்படம் எடுக்கும் 'திறமை' மட்டுமே காரணம்.ஆடலுடன் ஒரு பாடல்
M.I.A வின் அதிரவைக்கும் பாடலுக்கு பெண்களின் ஆட்டம்

வொண்டலாண்டின் செயற்கை ஊற்றுக்கள் இரவில்


'கொக்கரக்கோ'(கில்லி) பாடலுக்கு ஆண்களின் கானா கலக்கல்


'பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே' பாடலுக்கு


கடையொன்றில் தூக்கிவிடப்பட்டிருந்த Simpson & Bart பொம்மைகள்


செயற்கையாய் அமைக்கப்பட்ட மலையும், அதிலிருந்து கீழிறங்கும் செயற்கை நீர்வீழ்ச்சியும்

12 comments:

பென்னுமணி said...

டி.ஜே உங்கள் படப்பிடிப்பு நன்றே உள்ளது. Wedding க்கு உங்களைத்தான் பிடிப்பதாக உத்தேசம்

பென்னுமணி

8/07/2005 03:02:00 PM
Thangamani said...

டி.சே, படங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அது என்ன நீங்களும் இப்படி படம் போட்டால் என்ன செய்வது? ரமணி தான் இதற்கெல்லாம் காரணம்.

8/07/2005 03:21:00 PM
-/பெயரிலி. said...

அடப்பாவிகளே!
நானே தொழிலைக் கைவிட்டுவிட்டேனே (ஓசி கமெராவை உடமைக்காரன் தூக்கிக்கொண்டானென்று அர்த்தம் ;-))

8/07/2005 04:26:00 PM
Anonymous said...

(ஓசி கமெராவை உடமைக்காரன் தூக்கிக்கொண்டானென்று அர்த்தம் ;-))

உடமைக்காரன் - D.J

8/07/2005 05:32:00 PM
டிசே தமிழன் said...

//Wedding க்கு உங்களைத்தான் பிடிப்பதாக உத்தேசம்//
பொன்னுமணி, உங்களது திருமணப்படங்கள் வெளியே வரக்கூடாது என்ற விருப்பமிருந்தால் என்னைப் புகைப்படம் எடுக்க அழையுங்கள். Black-outயாய் பல படங்களை சுட்டுத்தள்ளி உங்கள் கரங்களில் தந்துவிடுகின்றேன்.
........
//படங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.//
தங்கமணி, இவ்வளவு பெருந்தன்மை நல்லதுக்கில்லை :-).
//ரமணி தான் இதற்கெல்லாம் காரணம்.//
சரியாகச் சொல்லிருக்கின்றீர்கள். இரமணியைப் பார்த்து பலிக்கடாவானது நான் மட்டுமல்ல. தங்கமணி நீங்களும் கூடத்தானே.
........
//அடப்பாவிகளே! நானே தொழிலைக் கைவிட்டுவிட்டேனே //
உண்மைதான். படமெடுத்தது காணும் என்று இப்போது நடிப்புத் துறைக்குள் ஒரு 'கலகம் & கலக்கம்' ஏற்படுத்துவதற்காய் புயலென புகுந்துள்ளதாய் கேள்வி :-).
............
//ஓசி கமெராவை உடமைக்காரன் தூக்கிக்கொண்டானென்று அர்த்தம் ;-))
உடமைக்காரன் - D.J//
அனானிமஸ்! பொஸ்ரனுக்குப் போய், பெயரிலியின் கமராவைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டேன். கமரா கையிற்குள் வந்துவிட்டது. ஆனால் நுட்பமாய் படமெடுக்கின்ற திறமை கைகூடுவதற்கான எந்தச் சமிக்ஞையையும் அருகில் காணவில்லை.

8/07/2005 07:13:00 PM
Thangamani said...

ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். நடிப்பு எனும் கடலில் இப்போது நீந்துவதாக. சந்திரமுகிக்குப் போட்டியாய் எதாவது முகமிலிமுகி என்ற கிலிப் படத்தில் நடிப்பதாய் உத்தேசமா?

நேற்று எப்படி இருந்தது ரசிகர்களின் ஆரவாரம்?

8/07/2005 07:19:00 PM
-/பெயரிலி. said...

அது பெரிய சோகம்.
ஆடிய ஆட்டமென்ன?
கூடிய கூட்டமென்ன?
மேடைவிட்டு ஆளு போனால், கூடவே வருவதென்ன?
அடி, உதை, கல் ;-)

8/07/2005 10:54:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

பெயரிலி நடிக்கிறாரா என்ன கறுப்பியின் இயக்கத்திலா?

8/08/2005 12:34:00 AM
-/பெயரிலி. said...

ஈழநாதன், நாடகத்திலே எத்தனையோ கஷ்டப்பட்டிருக்கிறேன்; ஆனால், நீங்கள் சொல்லும் மஹாகஷ்டம் இதுவரையும் படாமலிருக்கிறேன். ஆண்டவனுக்குத் தோத்திரம்

8/08/2005 12:55:00 AM
டிசே தமிழன் said...

//நேற்று எப்படி இருந்தது ரசிகர்களின் ஆரவாரம்?//
அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இரசிகப்பெருமக்கள் பெரு வரவேற்பு கொடுத்தனர் என்றும், இந்தப்ப்டைக்கு முன்னணி தாங்கியவர் கதிர்காமஸ் என்றும் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், வீசுவதற்கு தக்காளி, முட்டைகளை இடையறாது விநியோகம் செய்தவர் என்ற பெருமையை சுந்தரவடிவேல் பெற்றுக்கொண்டராம் :-).

8/08/2005 09:40:00 AM
KARTHIKRAMAS said...

/அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இரசிகப்பெருமக்கள் பெரு வரவேற்பு கொடுத்தனர் என்றும், இந்தப்ப்டைக்கு முன்னணி தாங்கியவர் கதிர்காமஸ் என்றும் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. /
டீ ஜே இன்னும்பிந்திக் கிடைத்த செய்திகள் கொஞ்சம் அதிர்ச்சிக்குரியவை. பெயரிலியின் நடிப்பைக் கண்டு, இதுக்கு காசு குடுத்து ரிக்கட் எடுத்தோமே என்று சிலர் வேதனை தாங்காமல் , தன் தலையிலேயே அழுகிய முட்டைகளையும், தன் முகத்திலேயே தக்காளிகளையும் அடித்துக்கொண்டனராம். பின்னர் அருகிலிருந்த க்ரோசரி ஸ்டோர் காரன் வந்து , பாவம் என்று கொஞ்சம் நல்ல முட்டைகளையும் , தக்காளிகளையும் தந்து போனாராம். ;-)

8/08/2005 12:21:00 PM
Thangamani said...

//அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இரசிகப்பெருமக்கள் பெரு வரவேற்பு கொடுத்தனர் என்றும், இந்தப்ப்டைக்கு முன்னணி தாங்கியவர் கதிர்காமஸ் என்றும் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், வீசுவதற்கு தக்காளி, முட்டைகளை இடையறாது விநியோகம் செய்தவர் என்ற பெருமையை சுந்தரவடிவேல் பெற்றுக்கொண்டராம் //

:))

8/08/2005 12:55:00 PM