நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

இன்மையின் இருப்பை இசைத்தல்

Tuesday, January 09, 2007

புத்தக அலுமாரியில்
பெயரறியாப் பூச்சிகள குடிபெயர்கின்றன
புததகமொன்றைத் தொலைப்பதென்பது
காலம் வரைந்த வரைபடத்தின் கோடொன்றை பறிகொடுப்பதாகும்
அன்றொரு பூச்சியை நசுக்கிக்கொல்கையில்
இரத்தம் வராதது ஆச்சரியமாயிருந்தது
பின்னாளில் என் வரைபடத்திலிருந்து
இந்நாட்டுப்பூர்வீகக்குடியொருவன் காணாமற்போயிருந்தான்.
---------------------------

மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரலநீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?
கடவுளர் உக்கிரவிழி உருட்டினாலும்
தூண்களில் விழித்திருக்கும்
முலைதிறந்த சிலைகளுக்கும்
பொங்கிப் பிரவாகரிக்கும் காமமுண்டு
விலக்கப்பட்ட மூன்றுநாட்களையும் சேர்த்து.
---------------------------

சதுரம் சதுரமாய் வரைந்த பெட்டிகளில்
முன்னும் பின்னுமாய் நகர்ந்தபடியிருக்கின்றான் சிறுவன்
அவனது தங்கையொருத்தி சதுரங்களில் வட்டங்களை வரைகின்றாள்
தோற்றுப் போக விரும்பா எத்தனத்துடன்
புதிது புதிதாய் சதுரங்களை ஆக்குகின்றான் சிறுவன்
யாரோவொருவர் இறுதியில் அழப்போவதை பார்க்க விரும்பாது
முகத்தை வேறுதிசையில் திருப்ப
அதிர்கின்றது மனது
சதுரங்களும் வட்டங்களும் முந்நூற்றறுபது பாகையினால் ஆனது.
---------------------------

உன்னுடைய பட்டியலில்
இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றேன் நான்
தவிர்க்கப்படும் சந்திப்புக்களிலிருந்து
உலர்ந்துகொண்டிருப்பது கதகதப்பான வாசம்
புரட்டாதிச் சனிக்கு காகாவென்று அழைக்க
வந்து தரைபரவும் ஊர்க்காகங்களின் அலகுகளுக்குள்
சிதைந்துகொண்டிருப்பது மனிதவுணர்வுகள்
அரளிக்காய் அம்மியில் அரைத்துக்குடித்தவளுக்கு
ச்வர்க்காரத் தண்ணீர் பருக்கியது போல
உனக்கும் எனக்குமான ஸ்நேகிதம்.
---------------------------

(2006)
(முன்னர் பதிவிலிட்டு திருத்தங்களுக்காய் மறைத்தது)

10 comments:

த.அகிலன் said...

மிக நன்றாக இருக்கின்றன கவிதைகள் அற்புதம் அண்ணா

1/09/2007 09:48:00 AM
தமிழ்நதி said...

"உன்னுடைய பட்டியலில் இல்லாமற் போய்க்கொண்டிருக்கிறேன் நான்"
அப்படியா டி.சே.?

கவிதைகள் நன்றாக இருக்கின்றன. கடைசிக் கவிதை மிக நன்றாக இருக்கிறது.

1/09/2007 10:37:00 AM
கானா பிரபா said...

//உன்னுடைய பட்டியலில்
இல்லாமற்போய்க்கொண்டிருக்கின்றேன் நான்//

நிறையப்பேர் பட்டியலில இருக்கினம் போல ;-)

நல்ல கவிதை உங்களின் வழக்கமான பாணியில்

1/09/2007 05:44:00 PM
Chandravathanaa said...

அருமை

1/09/2007 06:42:00 PM
Mookku Sundar said...

//மாவிளக்குப்போட்டு சுவைக்க
திருவிழாக்கள் வரும்
எதிர்பார்க்காத் தருணத்தில்
விரலநீவி கண்ணசைத்து கற்றைகோதி கரைவாய்
என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?//

நாசியில் வாசமடிக்கிறது இளங்கோ..;-)
அருமை.

1/09/2007 07:35:00 PM
-/பெயரிலி. said...

//என் நாசியைப் பின்தொடர்வது மாவிளக்கு நெய்யா
இல்லை நம்முடல்கள் நேற்றிரா பகிர்கையில் கசிந்த வியர்வையா?//

அட அட அட
;-)

1/09/2007 10:22:00 PM
Anonymous said...

//அரளிக்காய் அம்மியில் அரைத்துக்குடித்தவளுக்கு
ச்வர்க்காரத் தண்ணீர் பருக்கியது போல//

//ச்வர்க்காரத//

உவமை :)

1/10/2007 01:51:00 AM
Anonymous said...

இந்த வார நட்சத்திரம்
அன்பான வாழ்த்துகள்.

1/10/2007 07:50:00 AM
சாத்வீகன் said...

நசுக்கப்பட்ட பூச்சியும் காணாமல் போன பூர்வகுடியும்...

மிக நன்று.

1/10/2007 05:05:00 PM
இளங்கோ-டிசே said...

நன்றி நண்பர்களே.

1/12/2007 12:04:00 AM