கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

நாய்

Friday, January 12, 2007

நாய் பலவீனங்களிலிருந்து
தனக்கான அபிப்பிராயங்களை உருவாக்குகின்றது
இன்னொரு வீழ்ச்சிபற்றி குரைக்கும்போது
தனக்கான வீழ்ச்சியின் கற்களையும்
முதுகில் தாங்கியபடியே
ஆட்டுகின்றது வாலை

தனக்கான கடவுளும்
தான் பேசும் அரசியலும்
நரிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றதென
நாயும்
நரிகளின் குரல்களில் ஊளையிட்டால்
பிரதிஸ்டை செய்து பீடத்தில் ஏற்றப்பட்டு
குழாத்து சொறிதல்களும் சொகுசாய்க் கிடைக்கலாமெனினும்.....
பரிகள் நரிகளாயினும்
நாய்கள் நரிகளாவதில்லை

நாயை நோக்கி ஊளையிடும் நரிகள்
நேற்று போலிப்புன்னகைகளை
வீசிய முகமூடிப்பசுக்களென
மூடித்திறக்கும் படலைகள் அடையாளம் வைத்துச் சொல்கின்றன

வன்மத்திலிருந்து வன்மத்தையும்
சூழ்ச்சியிலிருந்து சூழ்ச்சியையும்
குரல்வளைகளைக்கிழித்து திருப்பிக்கொடுக்கும்
வன்முறை நாய்களுக்கும் தெரியும்

தன்னில் பரிவுகொள்ளும் மழலைகள்
துயில் கலைந்து
சித்தம் கலங்கிடுமெனும் கவலையில்
மூர்க்கமாய் குதறிக்கடிப்பதை நெடும்நாட்களாய் மறந்திருந்தாலும்
தீட்டிக்கொள்கின்றது வேட்டைப்பற்களை
நாய்.


No apologies. /No suckers im not sorry/ you can all sue me. /Y'all could be the cause of me. /No apologies. /Y'all feeling the force of me no remorse from me../ Like there was no real cause for me /No apologies. /I'm not even acknowledgeing you at all, 'til i get a call that gods coming./ No apologies. /Laugh f***s its all funny, I could spit in your face while you standing across from me /No apologies!
(Eminem: Re-Up)

7 comments:

-/பெயரிலி. said...

தம்ப்ரீஇஇ,
இது அநியாயத்துக்கு அறிக்கையா மட்டும் முடிஞ்சுபோச்சே ராசா :-(

1/12/2007 03:03:00 PM
சன்னாசி said...

Young virgin autodomized by her own chastity என்ற சால்வடார் டாலியின் இந்த ஓவியத்தைப் பார்க்கவும் - இப்பதிவிலுள்ள கூற்றுக்குப் பொருத்தமாக இருக்கும் ;-)

http://artchive.com/artchive/D/dali/chastity.jpg.html

1/12/2007 03:26:00 PM
இளங்கோ-டிசே said...

எல்லோரும் நாயைப்பற்றி எழுதி பேமஸ் ஆகின்றார்கள், நானும் ஆகலாம் என்றால்.... ஆரம்பமே கோணலாகிவிட்டதே :-(.
....
மற்றும்படி, நான் மிகவும் மதிக்கும் இருவர் என் பலவீனத்தை -பின்னூட்டங்களில்- இடித்துரைத்தமைக்காய் நன்றி.

1/12/2007 09:46:00 PM
ஈழநாதன்(Eelanathan) said...

அண்ணே இது நாயைப் பற்றிய கவிதையா நரியைப் பற்றிய கவிதையா?

1/12/2007 09:47:00 PM
-/பெயரிலி. said...

வள்! இஃது 'அரைகூறல்+அறைகூவல்' கடிவகையாக வந்துவிட்டதோ என்று பட்டது. அவ்வளவுதான் தம்ப்ரீ. மிகுதிப்படி, ஏதும் கோணலில்லை. மிகமோசமாக, கோணலாகக் கடித்துக் கடித்துக் குதறிய நாய்க்கவிவினைகளை உதாரணம் காட்டலாமென்றால், வலையடக்'கம்' தடக்குது; தடுக்குது.

பேய் மஸ் ஆக விரும்பாமல், சதையும் தோலும் ஒட்டி உயிரோட்டமாகவே மனுச மாஸ் ஆகவிரும் ;-)

1/12/2007 10:20:00 PM
தமிழ்நதி said...

நாயைப் பற்றியா எழுதியிருக்கிறீர்கள்...? நல்லா இருக்கு நாய் கவிதை... நாய் குரைப்பதற்கெல்லாம் ஏன் அர்த்தம் செய்துகொள்கிறீர்கள்...? அது நாய் என்று தெரியாதா........ நண்பரே!

1/12/2007 10:53:00 PM
இளங்கோ-டிசே said...

அண்ணை ஈழநாதன், உமக்கு என்ரை நிலமை நக்கலாகிப்போயிட்டுது :-(
....
பெயரிலி: 'வலையடக்கத்தோடே இருக்கவும்'. தேவையில்லாத விடயங்களுக்கு தேவையில்லாதவர்களோடு வலையில் மல்லுக்கட்டி நேரத்தையும், சக்தியையும் -முன்னர்போல- விரயமாக்கவேண்டாம் :-).
....
நதி: நன்றி. I will stand for what i said என்ற ஒரு நாயினுடைய பிரகடனம் எனவும் எடுத்துக்கொள்ளலாம் :-).

1/18/2007 11:45:00 AM