நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

Monday, May 10, 2010

செம்மஞ்சளாய்
இலைகள்
உதிர்ந்துகொண்டிருந்த பருவத்தில்
முன்பொருமுறையும் சென்றிராத
சிறுதீவுக்கு பயணித்திருந்தேன்

ஒரு மதுபானவிடுதியின்
இருட்டுமூலையில்,எனது
கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை

அந்நியமான சூழலில்
தோலின் நிறத்தை
நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது

இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்.

திடீரென
dance floorன் மையத்தில்
இழுத்துச்சென்று
ஆட்டத்தின்
எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம்
இணைந்தாடச்சொல்கின்றாய்

மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளம்பாதிருப்பவர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்திற்குரியவன்;
ஆடுகின்றேன்.

வாரமொன்று களிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த ஒற்றையிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத்துயரை
காவிச்செல்கின்றது

இந்த நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன்கலாச்சாரத்து கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முள்சத்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை.

சித்திரை 05/05

16 comments:

Kannan said...

//அலைந்து திரிந்த ஒற்றையிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத்துயரை
காவிச்செல்கின்றது//

கலக்கறீங்கள்!

//நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை//

ஆ!...ஒன்றும் சொல்ல வரவில்லை...

4/06/2005 01:28:00 AM
Anonymous said...

பதிந்தது:அன்பு

நல்ல கவிதை டிசே. இதுவரை நான் படித்த கவிதைகள் இயற்கையைப் பற்றி சொல்லும் அல்லது செயற்கையப் பற்றி. உங்கள் கவிதை இயற்கையுடன் இயைந்த செயற்கையைச் சொல்லும் ஒரு நவீனமாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

6.4.2005

4/06/2005 01:59:00 AM
Anonymous said...

பதிந்தது:பாலு மணிமாறன்

//நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை.//

ஒரு அழகிய த்ன்றலை ரசித்தபடி நடந்திருந்தேன் - கால் இடறி ரத்தம் காணும்வரை

6.4.2005

4/06/2005 04:11:00 AM
இளங்கோ-டிசே said...

கண்ணன், அன்பு, பாலு மணிமாறன் பின்னூட்டங்களுக்கு நன்றி. உங்களின் கருத்துக்கள் என்னை உற்சாகப்படுத்தி இன்னும் கவிதைகள் என்று எதையாவது கிறுக்கி உங்களைப்போன்றோர்களை கஷ்டப்படுத்தப்போகின்றது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள் :-).

4/06/2005 09:34:00 PM
Vijayakumar said...

ம்ம்ம்..ம்ம்ம்... கவிதை எல்லாம் எழுதுறீங்க. என்ன விசயம் டிசே. அப்புறம் எப்படிய்யா அந்த PDF விளம்பரத்தை அழகான tag-ல போடுறீங்க. நல்ல போஸ்ட் ஸ்டாம்பு மாதிரி. நானும் அதை சுடனும்னு பார்க்கிறேன். எனக்கு வரமேட்டேங்குதப்பா....

4/06/2005 09:51:00 PM
Balaji-Paari said...

கலக்கல் கவிதை...

4/07/2005 05:40:00 PM
வசந்தன்(Vasanthan) said...

P.D.F. இல பாக்கிறபோது கவித மாதிரித் தெரியேல. அதுசரி எது உண்மை வடிவம்? (என்னைக் கோவிச்சுப் பயனில்ல. போய் காசியக் கேளும்.)

4/07/2005 08:14:00 PM
சன்னாசி said...

நல்ல கவிதை டிஜே - சில வரிகள் பிரமிளின் சில வரிகளை நினைவுபடுத்துகின்றன...

4/07/2005 10:09:00 PM
இளங்கோ-டிசே said...

விஜய்,
//அப்புறம் எப்படிய்யா அந்த PDF விளம்பரத்தை அழகான tag-ல போடுறீங்க. நல்ல போஸ்ட் ஸ்டாம்பு மாதிரி. //
கிண்டலுக்குத்தானே கேட்டிருக்கின்றீர்கள். எனது கணணி அறிவு Bill Gatesஜ விட மிக அதிகம் என்பதால் தமிழ்மணத்தில் எனது திறமையைக் காட்டுவதில்லை :-). PDFல் எல்லாமே காசியின் கைவண்ணமே. நான் எழுத்துருவையும், அதன் நிறத்தையும் மட்டுமே சற்று மாற்றினேன் (background-color:#FAA). நீங்களும் மாற்றிவிட்டு, நாவால் ஒட்டாவிட்டால் முத்திரை என்பதற்கே அர்த்தம் இல்லையென்றுவிட்டு, கணணித்திரையை எச்சில்படுத்துவதில்லை சரியா :-)?
வசந்தன், நானும் நீங்கள் கூறமுன்னர் அதை அவதானித்திருந்தேன். காசி தருவதையெல்லாம் எந்தக்கூச்சமில்லாமல் பயன்படுத்திக்கொண்டு போய்க்கேள்வி கேட்க கொஞ்சம் தயக்கமாயிருக்கிறது. அத்தோடு நீங்கள் A.P.O ஆளெல்லோ. உங்களை மாதிரி ஆக்கள் சண்டைக்கு வந்தால், இதைச்சாட்டாக வைத்து நான் கவிதை எழுதவில்லை வேண்டுமென்றால், PDFல் பாருங்கோ என்று சாட்டுச்சொல்லித் தப்பமுடியும் அல்லவா :-)?
பாரி, மாண்ட்ரீஸர் நன்றி.

4/09/2005 08:52:00 AM
மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல கவிதை. படிக்க சுகமாக இருந்தது டி.ஜே.

4/09/2005 10:03:00 AM
வசந்தன்(Vasanthan) said...

யோவ். டி.சே.!
நான் A.P.O. இல இருக்கிறத ஏனப்பா எல்லாருக்கும் பறையடிச்சுக் கொண்டு திரியிறீர். உதுகளெல்லாம் இரகசியமாயெல்லோ இருக்க வேணும். நான் எவ்வளவு கஸ்டப்பட்டு இந்த விசயத்த மறைச்சுக்கொண்டு வாறன்.

4/09/2005 10:48:00 AM
Anonymous said...

பதிந்தது:கிஸோக்கண்ணன்

"விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை" என்ற வார்த்தைகள் சற்றுத் தூங்கிப் போயிருந்த சோகத்தினை மீண்டும் கண்விழிக்கச் செய்கின்றன. கொன்னுட்டீங்க டிசே.

21.4.2005

4/21/2005 12:59:00 PM
இரா. செல்வராசு (R.Selvaraj) said...

இது ஏன் இன்று மேலெழும்பி வந்தது (தமிழ்மணத்தில்) எனத் தெரியவில்லை. ஆனால் இதமான கவிதையைப் படிக்க அமைந்த வாய்ப்பு மிக நன்று. நல்ல கவிதை டிசே.

5/10/2010 08:37:00 PM
DJ said...

செல்வராஜ், நன்றி. எப்போதோ எழுதியது :-).
....
புதிய வார்ப்புருவிற்கு மாறியதன் பிறகு 'லேபிள்' இல்லாத சில பழைய பதிவுகளுக்கு 'லேபிள்' போடும்போது புதிய பதிவுகளாகத் தமிழ்மணத்தில் வருகிறது போலும். இவ்வாறு பழைய பதிவுகள் புதிய பதிவுகள் போல வருவதைத் தடுப்பதற்கு ஏதேனும் வழியுண்டா? நன்றி.

5/10/2010 10:20:00 PM
நேசமித்ரன் said...

//நீயும் எழுதக்கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை//

ம்ம் மிக நன்றாக முடித்திருக்கிறீர்கள்

:)

5/11/2010 06:50:00 AM
DJ said...

நன்றி நேசமித்ரன்.

5/12/2010 12:01:00 AM