தம்பி என்று ஆங்கில இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட தம்பிமுத்துவைப் பற்றி (Thurairajah Tambimuttu) கடந்த ஒரு வாரமாக தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். தம்பிமுத்துவைப் பற்றி ஏற்கனவே அறிந்திருக்கின்றேன்/வாசித்திருக்கின்றேன் என்றபோதும் அவரைப் பற்றி பிறரின் அபிப்பிராயங்களை அறிவது என்பது என்னளவில் சுவாரசியமாக இருந்தது.
*
தம்பிமுத்துவுக்கு ரி.எஸ்.எலியட் எழுதிய கடிதங்களில் ஒன்று:
Dear Tambimuttu,
I am writing to hear whether you have yet received the permissions from the remaining authors on your list. Meanwhile I have had a revised version of poems from Miss Chamberlain and some alternative poems which Miss Lynette Roberts wishes to substitute for those selected. I should be glad if you could come in soon and have a talk with me about the final arrangements for the anthology and if you would ring up my secretary and arrange a time to see me some day next week.
With best wishes,
Yours sincerely,
T. S. Eliot
அதேபோல தம்பிமுத்து இறந்தபோது New York Times நீண்டதொரு அஞ்சலிக் குறிப்பொன்றை வெளியிட்டு 1983இல் அவரைக் கெளரவப்படுத்தியது.
*
ஈழத்தமிழர்களாகிய எமக்கு தமிழில் ஓர் நீண்ட இலக்கியப் பராம்பரியம் இருப்பதுபோல, ஆங்கிலத்திலும் தம்பிமுத்து, அழகு சுப்பிரமணியம் என்று தொடங்கி அண்மையில் மான் புக்கர் விருதுக்கு குறும்பட்டியலில் ஐவரில் ஒன்றாக இடம்பெற்ற அனுக் அருட்பிரகாசம் வரை ஒரு செழுமையான மரபு இருக்கின்றது. அத்தோடு ஷ்யாம் செல்வதுரை, சங்கரி சந்திரன், பாலா சாரோன், வி.வி.கணேசானந்தன் என்று உயரிய இலக்கிய விருதுகளைப் பெற்ற எழுத்தாளர் பட்டியலும் நமக்கிருப்பதை மறந்துவிடக்கூடாது.
பிற அடையாளங்களில் அல்ல, இந்த 'Lineage' இல், ஒரு துளி நீட்சியாக நின்று எழுதுவது மட்டுமே எனக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது,.
*


0 comments:
Post a Comment