விஜிரூபிணியின் முகநூல் பக்கத்திலிருந்து..

நான்
உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்.இலங்கையிலிந்து
பறந்து யேர்மனி வந்துள்ளது. திரு இளங்கோவின் எழுத்துருவில் உருவாகிய
இந்நூல். தலைப்பை பார்த்ததும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது,
அட்டைப்படம் வாஞ்சையை கூட்டியது.அண்மையில் நண்பி ஒருவர் இலங்கை
சென்றிருந்தார்,இப்புத்தகம் கிடைத்தால் வாங்கிவரச் சொன்னேன்.இன்று
கையில்கிடைத்தது.திரு இளங்கோ அவர்களின் எழுத்துகள் தனித்தன்மையானவை.
வாசித்து முடித்ததும் மீண்டும் பகிர்கிறேன்.
(ஆவணி 29,2025)
*
இனிய மாலை வணக்கம்....
தங்களுடைய
"நான் உன்னை முத்தமிடுகையில் புத்தர் சிரித்துக் கொண்டிருந்தார்"
முற்றுமுழுதாக வாசித்து முடித்தேன். ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு
திரைப்படம் பார்த்த மாதிரியான உணர்வைத் தந்தது. கதாபாத்திரங்கள் இன்னும்
உயிர்ப்புடன் மனதில் உருவெடுத்தபடி இருக்கின்றன.

எவ்வித
மிகைப்படுத்தல்களுமின்றிய வர்ணனைகள், யதார்த்தங்களுக்கு புறம்பில்லாத
எழுத்தாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். 'முள்ளிவாய்க்கால்' கதை மனதை
அறுத்துக்கொண்டே இருக்கிறது. இது கதையல்ல நிஜம். எத்தனை எத்தனை நிஜங்கள்
புதைந்து போயுள்ளன.
தாங்கள் எழுத்தாளர். நானோ ஒரு
வாசகி மட்டுமே. ஏதோ படித்ததைப் பகிர்ந்துள்ளேன். ஒரு முறை தாங்கள்
எழுதியிருந்தீர்கள் எழுத்துக்கள் உங்களுக்கு அந்தரங்கமானவை என்று.
அவ்வாறிருந்தாலும்
தங்கள் எழுத்துகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறையட்டும்.
தங்கள் எழுத்துகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நிறையட்டும்.
(புரட்டாதி 11, 2025)
***
நன்றி: விஜிரூபிணியின் முகநூல் பக்கம்

0 comments:
Post a Comment