"These concerts are the start point for The Long Walk To Justice, the one way we can all make our voices heard in unison. "
-Bob Geldof
இன்று வரலாற்றில் ஒரு முக்கிய காலடியை எடுத்து வைத்துள்ளோம். இந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மாற்றத்தைக் கொண்டுவருமோ தெரியாது. ஆனால் நாம் வாழும் காலத்தில் ஒரு மாற்றம் வேண்டி அனைவரும் எங்களால் இயன்ற எதையோ செய்ய முயன்றிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சிக்குரியது என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் Live8 நிகழ்வுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தேறியுள்ளன. ஒரு இசைக்கலைஞன் கூறியதுமாதிரி, எனது காலத்தில் இல்லாவிட்டாலும் எனது குழந்தைகளின் குழந்தைகள் 'What is poverty?' என்று கேட்கும்போதாவது நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.
உலகமயமாதல்; மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சனநாயக நாடுகளின் 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக போராடுவது என்பது அவ்வளவு கடினமில்லை. இன்றைய காலகட்டத்தில் அதிகாரங்களுக்கெதிரான போராட்ட வடிவம் எது என்பதை அடையாளங்கொள்வதுகூட சரியான கடினம் போலத்தான் தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையீனங்களிடையே தம்மாலும் எதையாவது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் Live8 அமைப்பினர் முன்வந்துள்ளனர். வறிய நாடுகளின், முக்கியமாய் ஆபிரிக்காக் கண்டத்திலுள்ள நாடுகளின் வறுமையை உலகின் செல்வந்த நாடுகளின் மேலும் சுரண்டாமல் இருக்க, மிகப்பிரமாண்டமான இசைநிகழ்வுகள் மூலம் மக்களை ஒன்றுசேர்க்கின்றனர். அதிகார அரசாங்களுக்கெதிராய் நேரடியாக விமர்சனம் செய்து போராடவிட்டாலும், நியாயமான முறையில் வறுமையான நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவேண்டுமென இவர்கள் உலகின் செல்வந்த நாடுகளிடம் கோரிநிற்கின்றனர்.

வறுமையின் காரணமாக தினமும் 30, 000 குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்றனர். வருகின்ற ஜூலை மாதம் ஆறாந்திகதி, இறுதிச் சந்தர்ப்பமாக இந்த அவலநிலையை நிறுத்துவதற்காக ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. உலகின் எட்டு (G8 countries) செல்வந்த நாடுகள் ஸ்கொட்லாண்டில் G8 மாநாட்டுக்காய் கூடவுள்ளனர். அவர்களிடம் வறுமையுள்ள நாடுகளுக்கு வழங்கும் உதவியை இரட்டிப்பாகச் செய்யவும், ஏற்கனவே அந்த நாடுகளுக்குள்ள கடன்களை முற்றுமுழுதாக இல்லாமற்செய்யவும், வறிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளில் நேர்த்தியாக இருக்கவும் Live8 என்ற அமைப்பு உலக மக்களின் குரல்களினூடாக இந்தக்கோரிக்கைகளை முன்வைக்கின்றது.. இதன் நோக்கம், வறிய நாடுகளின் மக்களின் ஏழ்மையை இல்லாமற்செய்ய உதவும்படி செல்வந்த நாடுகளுக்கு அதிக அழுத்தத்தை பிரயோகிப்பதாகும். அதற்காக உலகின் வெவ்வேறு பகுதியுள்ள நாடுகளில் ஒரே சமயத்தில் பல இசைநிகழ்ச்சிகளை ந்டத்தி, இந்த ஒரேயோரு செய்தியை இந்தச் செல்வந்த நாடுகளின் அரச பீடத்தில் அமர்ந்துள்ள கனவான்களுக்கு மில்லியன்கணக்கான மக்களின் குரல்களில் உரத்துக்கூறுவது!

-Bob Geldof
இன்று வரலாற்றில் ஒரு முக்கிய காலடியை எடுத்து வைத்துள்ளோம். இந்த நிகழ்வு எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மாற்றத்தைக் கொண்டுவருமோ தெரியாது. ஆனால் நாம் வாழும் காலத்தில் ஒரு மாற்றம் வேண்டி அனைவரும் எங்களால் இயன்ற எதையோ செய்ய முயன்றிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சிக்குரியது என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் Live8 நிகழ்வுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்தேறியுள்ளன. ஒரு இசைக்கலைஞன் கூறியதுமாதிரி, எனது காலத்தில் இல்லாவிட்டாலும் எனது குழந்தைகளின் குழந்தைகள் 'What is poverty?' என்று கேட்கும்போதாவது நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.உலகமயமாதல்; மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சனநாயக நாடுகளின் 'சர்வாதிகாரத்திற்கு' எதிராக போராடுவது என்பது அவ்வளவு கடினமில்லை. இன்றைய காலகட்டத்தில் அதிகாரங்களுக்கெதிரான போராட்ட வடிவம் எது என்பதை அடையாளங்கொள்வதுகூட சரியான கடினம் போலத்தான் தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையீனங்களிடையே தம்மாலும் எதையாவது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் Live8 அமைப்பினர் முன்வந்துள்ளனர். வறிய நாடுகளின், முக்கியமாய் ஆபிரிக்காக் கண்டத்திலுள்ள நாடுகளின் வறுமையை உலகின் செல்வந்த நாடுகளின் மேலும் சுரண்டாமல் இருக்க, மிகப்பிரமாண்டமான இசைநிகழ்வுகள் மூலம் மக்களை ஒன்றுசேர்க்கின்றனர். அதிகார அரசாங்களுக்கெதிராய் நேரடியாக விமர்சனம் செய்து போராடவிட்டாலும், நியாயமான முறையில் வறுமையான நாடுகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவேண்டுமென இவர்கள் உலகின் செல்வந்த நாடுகளிடம் கோரிநிற்கின்றனர்.

வறுமையின் காரணமாக தினமும் 30, 000 குழந்தைகள் இறந்துகொண்டிருக்கின்றனர். வருகின்ற ஜூலை மாதம் ஆறாந்திகதி, இறுதிச் சந்தர்ப்பமாக இந்த அவலநிலையை நிறுத்துவதற்காக ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. உலகின் எட்டு (G8 countries) செல்வந்த நாடுகள் ஸ்கொட்லாண்டில் G8 மாநாட்டுக்காய் கூடவுள்ளனர். அவர்களிடம் வறுமையுள்ள நாடுகளுக்கு வழங்கும் உதவியை இரட்டிப்பாகச் செய்யவும், ஏற்கனவே அந்த நாடுகளுக்குள்ள கடன்களை முற்றுமுழுதாக இல்லாமற்செய்யவும், வறிய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளில் நேர்த்தியாக இருக்கவும் Live8 என்ற அமைப்பு உலக மக்களின் குரல்களினூடாக இந்தக்கோரிக்கைகளை முன்வைக்கின்றது.. இதன் நோக்கம், வறிய நாடுகளின் மக்களின் ஏழ்மையை இல்லாமற்செய்ய உதவும்படி செல்வந்த நாடுகளுக்கு அதிக அழுத்தத்தை பிரயோகிப்பதாகும். அதற்காக உலகின் வெவ்வேறு பகுதியுள்ள நாடுகளில் ஒரே சமயத்தில் பல இசைநிகழ்ச்சிகளை ந்டத்தி, இந்த ஒரேயோரு செய்தியை இந்தச் செல்வந்த நாடுகளின் அரச பீடத்தில் அமர்ந்துள்ள கனவான்களுக்கு மில்லியன்கணக்கான மக்களின் குரல்களில் உரத்துக்கூறுவது!

Madonna
இன்று உலகின் பல்வேறு நாடுகளில் (அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, தென்னாபிரிகா, ஜப்பான், கிரீஸ்), இக்கோரிக்கைகளுக்காய் உலகமக்களின் ஆதரவு வேண்டி மிகப்பெரும் இசை நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எங்களுக்கு பணம் தேவையில்லை. நீங்கள் தான் வேண்டும் என்ற வாசகத்துடன் தான் இந்த நண்பர்கள் நம்மிடம் உதவிக்கு வருகின்றனர். கனடாவில், ஒன்ராறியோ மாநிலத்தில், பெரியில்(Barrie) 35,000 மக்கள் பங்குபற்றி தமது ஆதரவை அளித்துள்ளனர். அந்த நிகழ்வில் கூறியதுமாதிரி, இங்கே வந்து இசைநிகழ்ச்சியை காசு கொடுத்து போவதால் உங்கள் குரல் கேட்கப்போவதில்லை. நீங்கள் உங்கள் ஆதரவை இணையத்தளத்திலோ அல்லது text message யிலோ கொடுப்பதுதான் முக்கியமானது. ஆகவே வீடு சென்றபின் அதைச் செய்ய மறந்துவிடாதீர்கள் என்று அடிக்கடி நினைவுபடுத்தினார்கள். நிகழ்ச்சியின் இடைநடுவில் 16 மில்லியன் குரல்கள் பதிவுசெய்யப்பட்டதாக கூறியதாய் நினைவு. ஒவ்வொரு மணித்தியாலத்திலும் அவை மில்லியன்களாய் அதிகரித்துக்கொண்டிருந்தது, இந்த நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்குபெற்றாவிட்டாலும் பலர் தமது ஆதரவை வெளியில் இருந்தும் அளித்துக்கொண்டிருந்தது நம்பிக்கை தருவதாக இருந்தது. இதை எழுதுகின்ற இந் நேரம் அது இரட்டிப்பாக மூன்று மடங்காக உயர்ந்திருக்கவேண்டும்; உயர்ந்திருக்கும்.Will Smith
பல்வேறு நாடுகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, அனைத்து முக்கிய இசைக்கலைஞர்ளும் பங்குபெற்றியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. முக்கியமாய், பாடுவதை நிறுத்தி பொதுவாழ்வை விட்டு விலகிச்சென்றவர்கள் எல்லாம் இந்நிகழ்வுகளில் பங்குபெற்றி தமது குரலை வறுமைக்கெதிராய் பதிவுசெய்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, Popல் Madonna, Mariah Carey போன்றவர்களும், Rapல் Kanye West, Jay-z போன்றவர்களும், Rock n Rollல் Robbie Williams, Cold Play போன்றவர்களும் உருக்கமான பாடல்களை பாடி பலரது கவனத்தைக் கவர்ந்திருந்தனர். முக்கியமாய் மடோனாவின் Just a prayer பார்த்துக்கொண்டிருந்தபோது என்னை மிகவும் பாதித்தது.
இந்த இசைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்னாபிரிக்கா ஜோகன்ஸ்பேர்க்கில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை முக்கியமானது. முதுமையின் காரணமாய் சரியாக நடக்கக்கூட முடியாதுவிட்டாலும், பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்று இருந்தாலும், இந்த நிகழ்வில் தானும் பங்குபெறுவது தனக்கு பெருமிதம் தருவதாகக் கூறியுள்ளார். ஆயுதங்களுக்கும், போரிற்கும் செலவிடும் பணத்தை வறுமைக்கும், HIV போன்ற நோய்களுக்கும் உதவிசெய்ய செல்வந்த நாடுகள் முன்வரவேண்டும் என்று கூறினார்.. இன்றைய நிகழ்ச்சி வருகின்ற ஜுலை மாதம் ஆறாந்திகதி கூடுகின்ற G8 நாடுகளின் தலைவர்களின் முன் தவிர்க்கமுடியாத ஒரு கேள்வியாக போய்ச்சேரப்போகின்றது என்றார். அதேவேளை இந்த நிகழ்வுடன் மட்டும் நிற்காமல் தொடர்ச்சியான நிகழ்வுகளாய் பல்வேறு தளங்களினூடாக இது எடுத்துச்செல்லப்படவேண்டும் என்று தனது ஆசையையும் பதிவுசெய்தார்.. நெல்சன் மண்டேலா ஒரு மிகப்பெரும் ஆளுமை என்பதற்கு சந்தேகமே இல்லை. நடமாடக் கடினப்பட்டு மேடையை வந்துவிட்டாலும், பேசத்தொடங்குகின்றபோது உறுதி தெறிக்கின்றது. Dear Comrades என்று ஆரம்பித்த உரையில், கைதட்டப்பட்ட ஒவ்வொரு பொழுதிலும், விழிகளை உயர்த்தி, புருவங்களால் அந்த ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஒரு குழந்தைமாதிரி எனக்குத் தோன்றினார்.
பல்வேறு நாடுகளில் நடந்த இசை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, அனைத்து முக்கிய இசைக்கலைஞர்ளும் பங்குபெற்றியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. முக்கியமாய், பாடுவதை நிறுத்தி பொதுவாழ்வை விட்டு விலகிச்சென்றவர்கள் எல்லாம் இந்நிகழ்வுகளில் பங்குபெற்றி தமது குரலை வறுமைக்கெதிராய் பதிவுசெய்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, Popல் Madonna, Mariah Carey போன்றவர்களும், Rapல் Kanye West, Jay-z போன்றவர்களும், Rock n Rollல் Robbie Williams, Cold Play போன்றவர்களும் உருக்கமான பாடல்களை பாடி பலரது கவனத்தைக் கவர்ந்திருந்தனர். முக்கியமாய் மடோனாவின் Just a prayer பார்த்துக்கொண்டிருந்தபோது என்னை மிகவும் பாதித்தது.
இந்த இசைநிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தென்னாபிரிக்கா ஜோகன்ஸ்பேர்க்கில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை முக்கியமானது. முதுமையின் காரணமாய் சரியாக நடக்கக்கூட முடியாதுவிட்டாலும், பொதுவாழ்விலிருந்து ஓய்வுபெற்று இருந்தாலும், இந்த நிகழ்வில் தானும் பங்குபெறுவது தனக்கு பெருமிதம் தருவதாகக் கூறியுள்ளார். ஆயுதங்களுக்கும், போரிற்கும் செலவிடும் பணத்தை வறுமைக்கும், HIV போன்ற நோய்களுக்கும் உதவிசெய்ய செல்வந்த நாடுகள் முன்வரவேண்டும் என்று கூறினார்.. இன்றைய நிகழ்ச்சி வருகின்ற ஜுலை மாதம் ஆறாந்திகதி கூடுகின்ற G8 நாடுகளின் தலைவர்களின் முன் தவிர்க்கமுடியாத ஒரு கேள்வியாக போய்ச்சேரப்போகின்றது என்றார். அதேவேளை இந்த நிகழ்வுடன் மட்டும் நிற்காமல் தொடர்ச்சியான நிகழ்வுகளாய் பல்வேறு தளங்களினூடாக இது எடுத்துச்செல்லப்படவேண்டும் என்று தனது ஆசையையும் பதிவுசெய்தார்.. நெல்சன் மண்டேலா ஒரு மிகப்பெரும் ஆளுமை என்பதற்கு சந்தேகமே இல்லை. நடமாடக் கடினப்பட்டு மேடையை வந்துவிட்டாலும், பேசத்தொடங்குகின்றபோது உறுதி தெறிக்கின்றது. Dear Comrades என்று ஆரம்பித்த உரையில், கைதட்டப்பட்ட ஒவ்வொரு பொழுதிலும், விழிகளை உயர்த்தி, புருவங்களால் அந்த ஆதரவுகளைப் பெற்றுக்கொள்ளும்போது ஒரு குழந்தைமாதிரி எனக்குத் தோன்றினார்.Mariah Carey
ஏற்கனவே இந்த G8 ற்கெதிராய் பல்வேறு அரச நிறுவனமற்ற அமைப்புக்கள், மாணவர்கள் என்று பலர், இந்த நாடுகளின் தலைவர்கள் கூடுமிடங்களில் எல்லாம் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர். அந்த எதிர்ப்பையும் மீறி, அந்தந்த நாடுகளின் பொலிஸ், இராணுவம் போன்றவை கடுமையாய் இவர்களை தண்டித்துமிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒட்டாவாவில் கூடிய G8 பிரதிநிதிகளுக்கெதிராய் எதிர்ப்புத் தெரிவித்த எங்கள் வளாக மாணவ தலைவன் மீது பொலிஸ் தங்கள் நாய்களை ஏவி தமது சட்டம் ஒழுங்கை சீராகக் கவனித்ததை அறிந்திருக்கின்றேன். இந்த இசை நிகழ்ச்சியினிடையே ஒரு விளம்பரம் செய்திருந்தனர். இந்த G8 நாடுகளின், எந்த நாட்டிலும் ஒரு நாள் 50,000 மக்கள் இறந்துபோகின்றார்கள் இந்த நாட்டு அரசாங்கங்கள் வாளாவிருக்கப்போவதில்லை. அப்படியெனில் அவர்களால் தினமும் மற்ற நாடுகளில் வறுமையால் இறந்துபோகின்ற 50,000 மக்களுக்காய் உருப்படியான விடயங்களை ஏன் செய்யமுடியவில்லை? என்றொரு கேள்வியை பார்ப்பவரிடையே எழுப்புவதாய் அது அமைந்திருந்தது. அதையேதான் உங்களிடமும் நானும் விட்டுச்செல்கின்றேன்.
நண்பர்களே, நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் பெயரையும் இணைத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது. நானும் எனது ஆதரவைத் தெரிவித்து அதனூடாக எனது தொகுதி எம்பிக்கும், கனடா பிரதம மந்திரிக்கும் ஒரு விண்ணப்பம் அவர்களின் தளத்தினூடாக அனுப்பியுள்ளேன். நீங்களும் உங்கள் குரலைப் பதிவுசெய்யலாமே!
பி.கு: இந்த விடயத்தை உடனடியாகக் கவனத்தில் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. தவறுகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கின்றேன். படங்கள் இந்தத் தளத்திலிருந்து
ஏற்கனவே இந்த G8 ற்கெதிராய் பல்வேறு அரச நிறுவனமற்ற அமைப்புக்கள், மாணவர்கள் என்று பலர், இந்த நாடுகளின் தலைவர்கள் கூடுமிடங்களில் எல்லாம் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கின்றனர். அந்த எதிர்ப்பையும் மீறி, அந்தந்த நாடுகளின் பொலிஸ், இராணுவம் போன்றவை கடுமையாய் இவர்களை தண்டித்துமிருக்கின்றன. பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ஒட்டாவாவில் கூடிய G8 பிரதிநிதிகளுக்கெதிராய் எதிர்ப்புத் தெரிவித்த எங்கள் வளாக மாணவ தலைவன் மீது பொலிஸ் தங்கள் நாய்களை ஏவி தமது சட்டம் ஒழுங்கை சீராகக் கவனித்ததை அறிந்திருக்கின்றேன். இந்த இசை நிகழ்ச்சியினிடையே ஒரு விளம்பரம் செய்திருந்தனர். இந்த G8 நாடுகளின், எந்த நாட்டிலும் ஒரு நாள் 50,000 மக்கள் இறந்துபோகின்றார்கள் இந்த நாட்டு அரசாங்கங்கள் வாளாவிருக்கப்போவதில்லை. அப்படியெனில் அவர்களால் தினமும் மற்ற நாடுகளில் வறுமையால் இறந்துபோகின்ற 50,000 மக்களுக்காய் உருப்படியான விடயங்களை ஏன் செய்யமுடியவில்லை? என்றொரு கேள்வியை பார்ப்பவரிடையே எழுப்புவதாய் அது அமைந்திருந்தது. அதையேதான் உங்களிடமும் நானும் விட்டுச்செல்கின்றேன்.
நண்பர்களே, நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் பெயரையும் இணைத்து அவர்களுக்கு ஆதரவளிப்பது. நானும் எனது ஆதரவைத் தெரிவித்து அதனூடாக எனது தொகுதி எம்பிக்கும், கனடா பிரதம மந்திரிக்கும் ஒரு விண்ணப்பம் அவர்களின் தளத்தினூடாக அனுப்பியுள்ளேன். நீங்களும் உங்கள் குரலைப் பதிவுசெய்யலாமே!பி.கு: இந்த விடயத்தை உடனடியாகக் கவனத்தில் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. தவறுகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக்காட்டவும். திருத்திக்கொள்கின்றேன். படங்கள் இந்தத் தளத்திலிருந்து




சீகிரியா ஓவியங்கள்



















