கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தீவிரவாதி கதை பற்றிய மூன்று சிறுகுறிப்புகள்

Wednesday, January 09, 2019



நெற்கொழுதாசன்

தீவிரவாதி:
 
இளங்கோ எழுதியிருக்கிறார். இளங்கோ எல்லோராலும் அறியப்பட்ட எழுத்தாளர். ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறார். இவரது சிறுகதைகளை முதலும் வாசித்திருக்கிறேன். எப்படி ஒருவர் தீவிரவாதி ஆக்கப்படுகிறார் என்ற கோணத்தில் பார்க்கப்படும் கதை. ஒவ்வொருவருக்கும் நிகழ்ந்த கதை. முன் சொன்ன கதையில் அகதி உருவாகுவதும் இந்தக் கதையில் தீவிரவாதி உருவாகுவதும் ஒரு கம்பின் இரு முனைகள். இதிலும் வரலாற்று சம்பவங்கள் உண்டு. ஆங்காங்கே தமிழ் இயக்கங்களை அவற்றின் பாத்திரமாகவே எழுதுகிறார். அதிலும் சோஷலிச தமிழீழம் அமைப்போம் என்ற கோஷத்துடன் வருபவர்கள் பற்றிய குறிப்புக்கள் என ஒரு அமர்க்களமான கதை. காதலுக்கு தூது செல்வதும் அதன் மூலம் இனிப்புகள் முட்டாசி, ரொபி என வேண்டி சாப்பிடுவதும் ( எங்களுக்கெல்லாம் எள்ளுப்பாகு, ஏக்னா, கண்டோஸ் வேண்டி தாந்தாங்கள் ) அந்த சிறுபராயத்துக்கே அழைத்து செல்கிறது. இறுதியில் இந்திய இராணுவம் நிகழ்த்திய யாழ் போதனாவைத்தியசாலை படுகொலைகளை பதிவு செய்தும் இருக்கிறது. பட்டிக்காட்டானுக்கு முட்டாசிக் கடை காட்டியது போல இப்பவும் சிலர் சொல்கிறார்கள் "தீவிரவாதியென "யென என்றும் சொல்லலாம். என்று முடிகிறது.


தளவாய் சுந்தரம்

இன்றுதான் உங்கள் கதையைப் படித்தேன். முதல் ஒன்றிரண்டு பாராக்கள் சுவாரஸியம் இல்லாததுபோல் நகர்ந்தாலும் விரைவிலேயே ஈர்க்கத் தொடங்கியது. பல இடங்களில் சிரித்தேன். கடைசியில் உங்கள் ஹேமா அக்கா கதை போலவே மனதைக் கனத்தது. 

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சிறுகதை எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். கதையைப் படித்து முடித்தபோது, அடிக்கடி எழுதும்படி உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் தோன்றியது.

வேலைப்பளு காரணமாக நாவலைப் படிப்பதை தள்ளிப் போட்டுவிட்டேன். அதையும் உடனே படித்துவிடுகிறேன்.



மைக்கேல்

அற்புதமான கதை. அசோகமித்ரனின் இனிய ஆவி உங்களில் கவிந்திருப்பது, சிறுகதையின் தலையங்கத்தில் இருந்து உள்ளடக்கம்வரை புரிந்தேன். 
***
நிகழ்ந்து கனிந்த துயர வரலாற்றை இப்படித்தான் சொல்ல வேண்டும்.


................................