இதைவிட ஈழத்திலிருந்து அண்மைக்காலமாய் தொடர்ச்சியாகவும் காத்திரமாகவும் எழுதும் அனாரைத் தவிர்த்து நாமின்று சமகால ஈழக் கவிதைகள் குறித்து பேசமுடியாது. 'வரையாத தூரிகை, 'எனக்கு கவிதை முகம்', 'உடல் பச்சை வானம்' என்று குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க 3 தொகுப்புக்களை அனார் தந்திருக்கின்றார். மேலும் தொகுப்பாய் வாசிக்கும் சந்தர்ப்பம் வாய்க்காதபோதும் சிறுகதைகளில் தனித்து மிளிரும் திசேராவும், கவிதைத்தளத்தில் பஹிமா ஜகானையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கின்றது. அதேபோன்று மட்டக்களப்பிலிருந்து எழுதும் மலர்ச்செல்வனின் பெரிய எழுத்திலும் சில நல்ல கதைகள் இருக்கின்றன.
மஜீத்தின் 'புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன', கருணாகரனின் 'பலியாடு' என்பவற்றையும் வாசிக்காதபோதும் -வாசித்த விமர்சனங்களின் அடிப்படையில்- அவையும் சமகால ஈழத்திலக்கியத்தில் முக்கியம் வாய்ந்தவை போன்றே தெரிகின்றன. அதேபோன்று யாழிலிருந்து வெளிவந்தபா.சத்தியமூர்த்தியின் ந.சத்தியபாலனின் 'இப்படியாயிற்று நூற்றியொராவது தடவையும்', புலத்திலிருந்து வெளிவந்த கலாமோகனின் 'ஜெயந்தீசன் கதைகள்' மற்றும் இரவி அருணாசலத்தின் 'காலமாகி வந்த கதை'யும்', வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' குறுநாவலும் வாசிப்பில் உள்ளடக்கவேண்டியவை.
நீண்டகாலமாய் புனைவுத்தளத்தில் இயங்கிவரும் பொ.கருணாகரமூர்ததியின் 'கூடு கலைதலும்', 'பெர்லின் இரவுகளும்' கவனிக்கத்தககவை. பொ.கருணாகரமூர்த்தியிடம் மரபு சார்ந்த கதைசொல்லி அவ்வப்போது வெளிப்பட்டு வாசிப்பவருக்கு இடைஞ்சல் கொடுத்தாலும், அதை வெளிப்படையாக உணரமுடியாதவளவுக்கு அவரின் கதைகளில் அங்கதம் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் படைப்புக்கள் குறித்து அவரின் நூல் வெளியீட்டு விழாவில் விரிவாகப் பேசியிருப்பதால் அவற்றைப் பற்றி இங்கே பேசுவதைத் தவிர்க்கிறேன்.
மேலும் தொகுப்புக்களாய் வெளிவராதபோதும் (என்னை) மிகவும் வசீகரித்த கதைகளை எழுதிய மைக்கல், பார்த்தீபன், சித்தார்த்த சே குவேரா போன்றவர்களையும் கவிதைகளில் பிரதீபா தில்லைநாதன், துர்க்கா போன்றவர்களையும் நாம் இந்த இடத்தில் தவறவிட முடியாது; அவ்வாறு குறிப்பிடத்தக்க நீண்ட பட்டியல் நம்மிடையே இருக்கிறது. றஞ்சினி, தேவ அபிரா,தானா.விஷ்ணு, அலறி, பெண்ணியா, ஆகர்ஷியா, வினோதினி, சலனி, மாதுமை போன்றோரின் தொகுப்புக்களைப் பற்றிப் பேசுவதையும் -நேரங்கருதி- இங்கே தவிர்க்கின்றேன். அத்துடன் சேரன், செழியன், சோலைக்கிளி, வ.ஜ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம் போன்றவர்களின் -2000ம் ஆண்டிற்குப் பின்- வெளிவந்த தொகுப்புக்களையும் அவர்கள் ஏற்கனவே பரவலாக அறிமுகம் உடையவர்கள் என்ற காரணத்தால் தாண்டிப் போகின்றேன்.
பல்வேறு படைப்பாளிகளின் படைப்புக்களைத் தொகுத்து இலண்டனிலிருந்து பத்மநாப ஜயர் (கண்ணில் தெரியுது வானம்), பிரான்சிலிருந்து ஷோபா சக்தி, சுகன் (சனதருமபோதினி, கறுப்பு), கனடாவிலிருந்து தேவகாந்தன் (கூர்), தமிழகத்திலிருந்து அ.மங்கை (பெயல் மணக்கும் பொழுது), சுவிஸிலிருந்து ரஞ்சி (மை) போன்றோர் வெளியிட்ட தொகுப்புக்கள் சமகால ஈழத்து இலக்கியம் குறித்த பலவேறு குறுக்கு வெட்டு முகங்களைத் தருகின்றன.
3.
ஈழத்திலக்கியம் (அதாவது ஈழம் மற்றும் புலம்பெயர்) கடந்த பத்தாண்டுகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்காவிட்டாலும், கவனம் பெறும் படைப்புக்களை இந்தச் சகாப்தத்தில் தந்திருக்கின்றது. அவற்றுக்கு ஆதாரமாய் ஏற்கனவே குறிப்பிட்ட படைப்புக்கள் சில உதாரணங்களாகும். இதை இன்னொருவகையாய் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எவ்விதமான பாய்ச்சல இலக்கியம் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்ற பின்னணியில் வைத்துக் கூட அணுகலாம். இவ்வளவு பெரும் சனத்தொகையும், எங்களைப் போலன்றி போரில்லாச் சூழ்நிலையில் கூட தமிழகத்திலிருந்து விரல்விட்டு எண்ணக்கூடிய முக்கிய படைப்புக்களே வந்திருக்கின்றன. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகளில் அனேகர் ஒருகாலத்தில் உற்சாகமாய் நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இயங்கிக்கொண்டு இருப்பதும் பிறகு சடுதியாக ஒருவிதமான உறைநிலைக்குப் போவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. அந்த இடைவெளியை நிரப்ப அடுத்தவர்கள் வர சற்றுக்கூட காலம் நாம் காத்திருக்கவேண்டியிருக்கின்றது. தமிழகத்தில் ஒப்பீட்டளவில் எங்களைவிட கணிசமானோர் இலக்கியச் சூழலில் இருப்பதால் இவ்வாறு ஒரு உறைநிலை அவர்களுக்கு ஏற்பட்டாலும், அடுத்தவர்கள் அந்த இடத்தின் வெற்றிடத்தை உணரமுடியாது வந்து நிரப்பிவிடுகின்றார்கள்.
மேலும் குறிம்பிடும்படியான போர்க்கால இலக்கியங்களோ, அல்லது புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகளோ மிக விரிவான தளத்தில் பதியப்படவில்லை என்கின்ற முணுமுணுப்புக்களை தமிழகத்து ஜாம்பவான்களின் மூச்சில் அடிக்கடி வந்து விழப்பார்க்கின்றோம். மிக அற்புதமான போர்க்கால இலக்கியங்களைத் தந்த ரஷ்யா (சோவியத்து ஒன்றியம்) உட்பட பல நாடுகள் post war வரை அதாவது போருக்குப் பின்பான நீண்ட காலம்வரை காத்திருக்கவேண்டியிருக்கின்றது. 1ம், 2ம் உலகப்போர் பற்றியும் ஹிடலர் பற்றியும் வெளிவந்த அதிகமான பதிவுகள் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே வந்திருக்கின்றன. ஆகவே போருக்குள் 3 தசாப்த காலத்தை தங்களுக்குள் பறிகொடுத்த ஈழத்தமிழரிடமிருந்து உடனடியாக இவ்வாறான படைப்புக்கள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்பது கூட, இவர்களுக்கு இன்னும் உலக இலக்கியங்கள் பரிட்சயமாகவில்லையோ என்ற எண்ணத்தை வரச்செய்கின்றது. அதேபோன்று முற்றுமுழுதாக வேர் பிடுங்கப்பட்ட புலம்பெயர் வாழ்வின் காலப்பகுதி என்பது கூட வரலாற்றை முன்வைத்துப் பார்க்கும்போது மிகக் குறுகிய காலமே. வேரை ஒழுங்காய்ப் புதிய இடத்தில் பதிக்கமுன்னரே வானை முட்டும் மரங்களை எதிர்ப்பார்ப்பதும் அவ்வளவு நியாயமாகாது.
கடந்த 10 வருட காலத்தில் கவிதை, சிறுகதை போன்றவற்றில் கவனிக்கத்தக்க படைப்புக்களை பதிவு செய்த ஈழத்து இலக்கிய உலகம் நாவலகளிலோ விமர்சனம் உள்ளிட்ட அபுனைவுத்தளத்தில் அதிகளவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நாவல்கள் என்று பார்க்கும்போது ஷோபா சக்தியின் 'கொரில்லா', 'ம்', தேவகாந்தனின் 'யுத்தத்தின் முதலாம் அதிகாரம்', 'நிலாச்சமுத்திரம்', நடேசனின் 'வண்ணாத்திக்க்குளம்', 'உனையே மயல் கொண்டு', விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி', அ.முத்துலிங்கத்த்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்'. ரகுநாதனின் 'ஒரு பனங்காட்டுக்கிராமத்தின் கதை', எஸ்.பொவின் 'மாயினி' போன்றவையே ஒரளவாவது கவனிக்கத்தக்க படைப்புக்களாய் இருக்கின்றன.
இதில் கொரில்லா, ம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம் போன்றவையே முக்கியமுடைய படைப்புக்களாகின்றன. வண்ணாத்திக்குளம் சிங்கள/தமிழ் உறவுகளை அதிக ரொமான்டிசை செய்ததுபோல இருக்க, உனையே மயல் கொண்டு ஒரு ஆணாதிக்கப் பிரதியாகவும் யாழ்ப்பாணியக் கூறுகள் அதிகம் கொண்டதாகவும் தெரிகின்றது. பனங்காட்டுக் கிராமத்தின் கதை ஈழத்துப் பஞ்சமர் வாழ்வைச் சொல்ல முற்படும் ஒரு படைப்பு என்றாலும் அதில் சில விடயங்கள் திருப்பச் திருப்பச் சொல்வது ஒருவித அலுப்பை ஏற்படுத்துகின்றது. சிறந்த கதை சொல்லியாக தன்னை எப்போதும் நிறுவிக்கொள்ளும் எஸ்.பொ மிக மோசமான தமிழ்த்தேசிய பிரச்சாரக் கதையாக மாயினியைத் தந்திருக்கின்றார். அ.முத்துலிங்கத்தின் உண்மை கல்ந்த நாட்குறிப்புக்கள், அவை தனித்தளவில் சிறுகதைகளாய் இருக்கின்றதே தவிர ஒரு நாவலுக்கான வெற்றியை அது அடையவே இல்லை. விமல் குழந்தைவேலுவின் 'வெள்ளாவி' விளிம்புநிலை மனிதர்களைச் சித்தரிக்கும்போது இருக்கவேண்டிய நுண்ணியபார்வையைத் தவற விட்டுவிடுகின்றது.
ஆனால் நமக்கு விதிகப்பட்ட புறவயமான வாழ்வுச்சூழலை மட்டும் காரணங்களாய்க் காட்டி நாம் தப்பித்துவிடவும் முடியாது. ஏன் இன்னும் எமது படைப்புக்கள் தமது தளத்தை உலக அளவிற்கு விசாலிக்கவில்லை என்று யோசிக்கும்போது ஒழுங்கான விமர்சன மரபு தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டவில்லை என்பது முக்கிய காரணமாய்த் தோன்றுகின்றது. நம் படைப்பாளிகள் சக படைப்பாளிகளிடையோ வாசகர்களிடையோ விரிவான உடையாடல்களை நிகழ்த்தாது தங்களின் சாளரங்களை இறுக்க முடிக்கொண்டிருப்பது இருப்பது இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். மற்றும் -இதைச் சொல்வதால் சிலருக்கு கோபம் வரக்கூடும் என்றாலும்- நாம் இன்னும் அரசியல், சினிமா தொடக்கும் இலக்கியம் வரை இந்தியா மீதான் அடிமை மோகத்திலிருந்து வெளியே வரவில்லை என்பதையும் கூறத்தான் வேண்டியிருக்கிறது.
(காலம் இலக்கிய நிகழ்வான 'ஈழமின்னல் சூழ் மின்னுதே' வில் வாசிக்கப்பட்ட கட்டுரை; சில திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கிறது - Apr, 2010)
மஜீத்தின் 'புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன', கருணாகரனின் 'பலியாடு' என்பவற்றையும் வாசிக்காதபோதும் -வாசித்த விமர்சனங்களின் அடிப்படையில்- அவையும் சமகால ஈழத்திலக்கியத்தில் முக்கியம் வாய்ந்தவை போன்றே தெரிகின்றன. அதேபோன்று யாழிலிருந்து வெளிவந்த