{யாழ் இனிது குழல் இனிதென்பர் மழலைமொழி கேளாதோர்}எழில்'மனதில் உறுதி வேண்டும்,வாக்கினில் இனிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின் பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்படவேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்' ஈழன் (தமிழுக்கு) மக்ஸீம்(ரஷ்யனுக்கு)பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடைய புதுநூல்கள்தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்மறைவாக...
In
கவிதைகள்
Friday, May 20, 2005
வசந்தகாலத்தில்
வருகின்ற வாரயிறுதிகளுக்கு
தனித்துவமான வனப்புண்டு
இயற்கையின் விசித்திரங்களுடன்
விரிகின்ற மலர்களும்
அதன்,
வர்ணங்களையும் வாசத்தையும்
தம்முடன் காவிச்செல்கின்றதான
பிரமையைத்தரும் பெண்களும்
புத்துணர்ச்சி ஊட்டுவர்
மனதுக்கு
நண்பர்கள் கூட்டம்
நல்ல உணவு விடுதிகள்
திரைப்படங்கள்
அரையிருட்டுக் கிளப்புக்கள்
சிலவேளைகளில்
இத்தனையாம் மணித்துளியில் விழிக்கவேண்டுமென்ற
அவதியில்லா ஆனந்தச்சயனம்
இப்படித்தான்
பொழுதுகள் கழியும் பலருக்கு
கிளப்பிற்கு...
Untitled
In கவிதைகள்Wednesday, May 11, 2005
ஒவ்வொருவரின் வருகைகளும்
கண்காணிக்கப்பட்டு
அவர்களின் முன்/பின் கதைகள்
மூச்சுக்கூட விடமுடியா
பெரும்புகையாய் கிளம்பும்
விழாக்கள்
மனதிற்கு உவப்பில்லாதவை
பிரியமானவர்களின் விருந்துகள்
புறக்கணிக்கமுடியாதன.
பிறரைக் காயப்படுத்தித்தான்
நம்பிக்கைகள்
வாழவேண்டுமென்பதில்லை
மனிதர்கள் முக்கியம்
எனக்கு.
நெளிநெளியான
வர்ணம்பூசிய கூந்தற்கற்றைகளை
அலட்சியமாய் ஒதுக்கிவிடும் பெண்களை
இன்னொருமுறை திரும்பிப் பார்க்காமல்
இருக்க முடிவதில்லை
சூழலின் இறுக்கந்தளர்த்தி
சிறுபுன்னகையுடன்
இவர்களை...
ராப் பாடல்களினூடு ஒரு சிறு பயணம்
In இசைThursday, May 05, 2005
சென்ற வருடத்துப் பிற்பகுதியில்தான் ராப் பாடல்களை ஆர்வத்துடன் கேட்கத்தொடங்கியிருந்தேன். மென்மையான பாடல்களில் ஆரம்பித்து, கானாப் பாடல்களில் வெறிபிடித்து அலைந்த ஒருவன், ராப் பாடல்களை நோக்கிப் பயணிப்பது பெரிய விடயமல்ல. ராப் பாடல்களைக் கேட்கக்கேட்க அந்தக் கலைஞர்களின் பின்புலம் பற்றி அறியும் ஆவல் தொற்றிக்கொள்ள, ராப் பாடல்களுக்கான சஞ்சிகைகளையும், அவர்களைப் பற்றி வெளிவந்த...
Subscribe to:
Posts (Atom)