கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மூன்று கவிதைகள்

Thursday, May 22, 2008

(காலம், இதழ்-30 -எஸ்.பொ சிற‌ப்பித‌ழில்- வெளிவந்தவை) சேற்றில் சேமிக்கப்படும் நேசத்தின் கதகதப்பு சிக்கலான ஆட்டமொன்றின் புதிர்களாகும் நாம் நிசங்களை சுவரிலேறும் எறும்புகள் இழுத்துச்செல்வதை கனவுகளெனப் பெயரிட்டோம் சரசரவென்று வாழையைப்போல வளர்ந்த நமது அறிதல் எல்லா விரிசல்களும் சிறுவதிர்வில் தொடங்குவதான வரிகளை வாழை பொத்தியாய் வெளித்தள்ளியவோர் பருவமழைநாளில் வடிந்துபோயிற்று அடியோடு வாழையை இல்லாமலொழிக்க கீழே வளரும் புகையிலைக்கன்றுகள் விடுவதில்லை இலைகிழித்து...

போத்ரியாரும், 'தீவிரவாதமும்'

Thursday, May 08, 2008

-ழான் போத்ரியாரின் The Spirit of Terrorism & Other Essays தொகுப்பை முன்வைத்து- நாமின்று நான்காவது உலகப்போர்க் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக ழான் போத்ரியார் கூறுகின்றார். முதலாவது உலகப்போரும், இரண்டாவது உலகப்போரும் நேரடியான செவ்வியல் போர் முறைகளைக் கொண்டதுபோலவன்றி மூன்றாம் நான்காம் உலகப்போர்கள் வேறு முறையில் நிகழ்ந்தன/ நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்கின்றார்....

நினைவுகள், நிகழ்வுகள், விசனங்கள்

Thursday, May 01, 2008

சிறுவர்களுக்கான புத்தகங்கள் இப்போது எந்தளவில் வெளிவந்துகொண்டிருக்கின்றன என்று அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. தமிழில் வந்த அம்புலிமாமா, கோகுலம், இரத்தினபாலா, ராணி கொமிக்ஸ் (காமிக்ஸ்), முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ், மற்றும் வாண்டு மாமா, அழ. வள்ளியப்பா(?) போன்றவர்களின் நூற்களோடு, ராதுகா பதிப்பகத்தால் மிக நேர்த்தியாய் பதிப்பிக்கப்பட்ட சோவியத்து சிறுவர் இலக்கியங்களுக்கும் எனது சிறுவயது வாசிப்பில் முக்கிய இடமுண்டு. அதேபோன்று...